Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க 'ஆண்மையை நிலைநாட்டிய' பொறுக்கிக்கு என்ன தண்டனை?

‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?

-

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஐ.டி. துறை 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவன் காதலிப்பதாகக் கூறி கைவிட்டிருக்கிறான். இருவரும் சிறு வயது முதலே அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால், அவனை எளிதில் நம்பி மோசம் போயிருக்கிறாள் அந்த பெண்.

தன் காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அவள் கெஞ்சிய போது, ‘இப்போது நீ கெட்டுப் போனவ, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வர வேண்டும்’ என்று எகத்தாளமாக பேசியுள்ளான். அதோடு மட்டுமின்றி தெருவில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் பிற இளைஞர்களிடம் இந்த சம்பவத்தை கிளுகிளுப்பூட்டும் விஷயமாக பேசி பகிர்ந்து கொண்டுள்ளான்.

இது பற்றி அவனது தந்தையிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறாள் அந்த பெண். ஆனால், அவரோ, ‘நீ என்ன பெரிய யோக்கியமா? என் புள்ளைய பத்தி எங்கிட்டயே வந்து பேசுறியா? உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ!” என்று கூறி அவமானப்படுத்தி விரட்டியிருக்கிறார். இவர் திருச்சி அ.தி.மு.க ஏர்போர்ட் பகுதி கழகத்தில் பொறுப்பில் இருக்கும் வெல்ல மண்டி சண்முகம் என்பவரின் கையாள் என்று கூறி அந்த திமிரில் பேசியிருக்கிறான். அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் சென்று அடாவடியாக நடந்து கொண்டு அவர்களை ஆபாசமாக பேசி இழிவுபடுத்தியுள்ளனர். அவமானம், குற்றவுணர்ச்சி, வெறுப்பு என கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர் அந்த பெண்ணை வீட்டை விட்டே விரட்டி விட்டனர்.

செய்வதறியாது திகைத்த அந்த பெண், மனதை தைரியப்படுத்திக் கொண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் முறையிட்டிருக்கிறாள். விஷயத்தை கேட்டு விட்டு, ‘இது எங்க ஸ்டேஷன் லிமிட்ல வராது’ என்று கூறி வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷனை கை காட்ட, அங்கே சென்றால், ‘இது நாங்க டீல் பண்ற மேட்டரு கிடையாது, பெண்கள் காவல் நிலையத்திற்கு போங்க’ என்று நாள் முழுக்க இழுத்தடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பெண்ணைத்தான் குற்றவாளியாகப் பார்த்தார்களே தவிர இவர் தரப்பிலிருக்கும் நியாயத்திற்கு யாரும் காது கொடுக்கவில்லை.

நிர்க்கதியாக நின்ற அவருக்கு அவரது தோழியான சட்டக் கல்லூரி மாணவி உதவி செய்துள்ளார். ‘நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாதே. சட்டக் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு. தோழர்களிடம் இதைப் பற்றி கூறலாம்.’ என்று கூறி அழைத்து வந்தார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் ஆணாதிக்கத் திமிர் குறித்த அரசியல் பார்வையும் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையூட்டின. மடை திறந்த வெள்ளம் போல அவருக்கு நடந்தவை அனைத்தையும் கூறி கதறினார்.

சமூகத்தில் நிலவும் மறுகாலனியாதிக்க சீரழிவு கலாச்சாரம், ஆணாதிக்க பொறுக்கித் தனம் எப்படி பார்க்கப்பட வேண்டியவை என்று விளக்கியதுடன் அவற்றுக்கெதிராக பெண்கள் தாமாக முன் வந்து போராட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர் தோழர்கள். அனைத்தையும் கேட்ட பின்பு, “இது வரை ஏதோ தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டும் நேர்ந்த பாதிப்பாக இதை நினைத்திருந்தேன். இப்போதுதான் இப்பிரச்சினையைப் பற்றிய புதிய பார்வை தனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார் அந்த பெண்.

‘ஆண்மையை நிலைநாட்டி விட்டதாக’ ஆண்டைத் தனத்தில் திரிந்து கொண்டிருந்த பொறுக்கியை சில மணி நேரங்களில் சுற்றி வளைத்து விசாரணைக்கு இழுத்து வந்தனர் பு.மா.இ.மு. தோழர்கள். விசாரணை துவங்கிய சில மணி நேரத்தில் அவனது உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர்.

தோழர்கள் முன்னிலையில் அப்பெண்ணே நீதிபதியாய் அமர்ந்து நியாயம் கேட்டார்.

“உனக்கு உடன்பாடில்லாமல்தான் இது நடந்ததா?” என்று முதல் கேள்வியிலேயே அப்பெண்ணை அவமானப்படுத்தி குற்றவாளியாக்க முயற்சித்தனர் அவனது உறவினர்கள்.

‘தனக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருப்பதாகவும், அது சரியாக வேண்டுமானால் தாம்பத்திய உறவு மட்டுமே மருந்து என்று மருத்துவர்கள் கூறியதாகவும்’ சொல்லி, அதற்கு தனது நண்பனான மருத்துவ பிரதிநிதி ஒருவனையும் பேச வைத்து அந்த பெண்ணை நம்ப வைத்த சதி வலையை அப்பெண் விளக்கினார். “இரு வீட்டார் சம்மதம் பெற்றி திருமணம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல மாதங்கள் ஆகும், எனவே உடனடியாக நோய் தீர நீ எனக்கு ‘ஒத்துழைக்க வேண்டும்’ எதிர்காலத்தில் என் மனைவி ஆகப் போகிறவள்தானே நீ, எனக்காக இதைக்கூடச் செய்ய மாட்டாயா?” என்று அவன் அழுது நாடகமாடியதை தோலுரித்து சீறினார் அப்பெண்.

‘லேப்டாப் வாங்கித் தருவதாக ரூ 20,000 பணம் வாங்கிக் கொண்டு இன்று வரை தராமல் ஏமாற்றியதும் இவன்தான்’ என்று அடுக்கடுக்காக அவன் அயோக்கியத் தனங்களைப் பற்றிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் கள்ள மௌனம் சாதித்தனர்.

இதுவே ஆளும் வர்க்கங்களின் நீதிமன்றமாக இருந்தால் அந்த பொறுக்கியின் சார்பில் வாதாடியிருக்கும் வழக்கறிஞர் இந்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்கிறேன் என்கிற பெயரில் நீதிபதியின் முன்பு ஒரு பாலியல் வன்முறையை நிகழ்த்தியிருப்பார். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருந்தது.

‘அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்’ என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டதாக எம் தோழர்கள் மீது வழக்கு பாயலாம், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! இவனைப் போன்ற ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுங்கள்!

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

 1. I like vinavu in this matter very much.. Please dont leave that porukki.. If u leave him without teaching him a lesson, I dont know howmany girls are going to be affected by him in future.. So, please teach him a good lesson.

 2. //சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டதாக எம் தோழர்கள் மீது வழக்கு பாயலாம், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! இவனைப் போன்ற ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுங்கள்!
  //
  வாழ்த்துக்கள் தோழர்களே. பாதிக்கப்பட்ட பெண் இதனை முடிவு செய்யட்டும். உலக மகளீர் தினத்தில் இது நடப்பது ஒரு சிறப்பு.

 3. ‘தனக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருப்பதாகவும், அது சரியாக வேண்டுமானால் தாம்பத்திய உறவு மட்டுமே மருந்து என்று மருத்துவர்கள் கூறியதாகவும்’ சொல்லி, அதற்கு தனது நண்பனான மருத்துவ பிரதிநிதி ஒருவனையும் பேச வைத்து அந்த பெண்ணை நம்ப வைத்த சதி வலையை அப்பெண் விளக்கினார்……. அப்படிப்போடு…. இதுக்குப் பேர் தான்… ஒண்ணும் தெரியாத பாப்பா உள்ள போட்டாளாம் தாப்பான்னு சொல்லுவாங்க… கேழ்விறகுல நெய் வடியுது சொல்லி பு.மா.மு வை நல்லாம் மொட்ட போட்டுட்டா…. இது மாதிரி ஒரு நாளைக்கு நூறு பொண்ணுங்க பசங்கள கழட்டி விடுறாளுங்க… உங்க பு.மா.மு’ கிட்ட சொன்னா இதே மாதிரி போராடுவீங்களோ??? அப்படி சரின்னா.. வினவுல தகவல் சொல்லு… பய புள்ளைங்களுக்கும் பிரயோசனமா இருக்கட்டும்……

 4. இவனைப் போன்ற ஆணாதிக்க பொறுக்கிகளையும், அதை நியாயப்படுத்தும் அல்லது மூடி மறைக்க உதவும் பெற்றோர், உறவினர் என அனைவரையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும், பொதுவாக அனைத்து பிரச்சனைகளிலும் நமக்கு என்றால் ஒரு தீர்வு, பிறருக்கு என்றால் வேறு தீர்வு எனும் மனப்போக்கு உள்ளது. அதையும் களைய வேண்டும். ரெட்

 5. அவனுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும் என்பதை அந்த பெண் தோழர்களின் துணையோடு முடிவெடுப்பதுதான் சிறந்தது. தோழர்களின் செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்

 6. அந்த ஆண்கள் மேல் 420 கேஸ் புக் செய்யுங்கள் ஏமாற்றுதல் நயவஞ்சகம் போன்ற பிரிவுகளிலும் வழக்கு பதியுங்கள் ……Indianஇந்த இந்தியன்களே இதுபோலத்தானா? ஆம்பிள்ள யோக்கியமாக இருந்தா எந்தப்பொண்ணும் கிட்டவராது உனக்கு உரிமையில்லாததை அநுபவிக்க அது எந்தப்பொருளானாலும் நமது சுயமரியாதைக்குக் கேடு என்று ஆண்கள் நினைத்து விட்டால் எந்தக்குற்றம் நிகழும் இது ஆணாதிக்கமூகமாக இருப்பதால் ஆண்கள் மீதுதான் குற்றம் அவர்கள் தான் பொறுப்பு….. பெண்கள் தவறிழைப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம் அதற்காக விதைவிலக்குகளையே விதியாகக் கொண்டுவரமுயலவேண்டாம்

 7. அ.தி.மு.க ரவுடிகள்,காக்கி ரவுடிகள் வரக்கூடும்!துணீந்து முடிவெடுங்கள்

 8. ஏதோ எரிவாயு கொழா பதிக்கிறேன் என்று விவசாய நிலங்களை பிடுங்கும் அரசு சோனியா வீட்டு வழியாகவோ ஜெயா அல்லது மன்மோகன் வீட்டு வழியாகவோ இப்படி குழாய் படிக்க அனுமதிக்குமா?

 9. பு.ஜ.மு தோழர்களே காவல் துறையையும், அதிமுக ரவுடியிசத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இது போன்று சமூகப் பிரச்சனைகளில் தலையிடும் போது உங்களின் பலமும் கூடும்.

  இந்த வலைத்தளம் போல, இடது சாரிகளுக்கான எப்.எம். ரேடியோ, தொலைக்காட்சி போன்ற சாதனங்களையும் உருவாக்குங்கள். இதுபோல் நிறைய பேருக்கு அதன் மூலம் நீங்கள் உதவிக்கரம் நீட்ட முடியும்.

 10. //சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டதாக எம் தோழர்கள் மீது வழக்கு பாயலாம்//

  சட்டத்தை கையில் எடுத்து அரசியல்காரன் போல அநியாயம் தான் பண்ணக் கூடாது .சட்டம் தராத நீதியை மக்களுக்கு வழங்க இதுபோன்ற நடவடிகைகளால் தான் முடியும் .தோழர்கள் மீது வழக்கு பாய்ந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்

 11. ஊராரின் பேச்சுக்கு அஞ்சி நடந்ததை மறைக்காமல் பொது அரங்கிற்கு வந்த அந்த தோழியின் தைரியம் பாராட்டுக்குரியது.

 12. இந்நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்கள் காவல்த்துறையின் மீதும் நீதித்துறையின் மீதும் ஏன் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். தோழர்கள் முடிந்தவரை இப்பெண்ணுக்கு நீதிமன்றங்களின் மூலமாக நீதிக் கிடைக்க முழுமையாக போராடினால் நிலையான தீர்வு கிடைக்கும் அல்லது அப்பெண் விருப்பப்பட்டால் பொறுப்பான பேச்சுவார்த்தையின் மூலம் இரு பக்கத்திலும் சுமுகமானதொரு சூழல்நிலை ஏற்ப்படுத்தி அவர்களை சேர்த்து வைப்பது தான் அப்பெண்ணின் எதிர்க்கால வாழ்விற்கு சிறந்தது.

 13. அந்தபொருக்கிகு சட்டம் தண்டனை கொடுபது என்பது எமற்றூ தோழர்கள் மக்கள் முன் அந்த பொரிக்கியை தண்டிக்க வேண்டும் ,,,,,,,,,

 14. பாராட்டுகள்!!! தொடர்ந்து போராடுங்கள்! வெற்றிகிட்டும்!!!!

 15. பரவாயில்ல. வழக்கமா பத்திரிகை, சினிமா, டிவி எல்லாத்தையும் மட்டும் குறை சொல்வீங்க. இந்த தடவ குத்தம் செஞ்சவனுக்கும் பங்கு உண்டுன்னு சொல்லி தண்டனை என்னான்னு கேக்கறீங்க. உலகம் பொழசிக்கும்.

  அது சரி. உங்க கோர்ட்டுல வழக்கு எப்படி நடக்கும்? சட்ட திட்டம் எல்லாம் உண்டா? குற்றவாளிக்கு நல்ல வக்கீலாப் பாத்து ஏற்பாடு பண்ணுவீங்களா? சாட்சி விசாரணை எல்லாம் உண்டா? இல்ல பிராசிக்யுஷன் தரப்பு சொல்றது மட்டும்தானா? இதெல்லாம் விளக்கி ஒரு கட்டுரை போட்டீங்கன்னா அதப் பாத்து நீங்க எலிப் புழுக்கையா நினைக்கிற சுப்ரீம் கோர்ட்டு ஒரு நாலு விஷயம் கத்துக்கும்.

  • Venkatesan,

   Haven’t you heard of People’s Court where the outcome of the judgement is decided by the people and not a separate class of Judges who live in the ivory towers.

 16. அருமையான நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் வைத்து மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

 17. தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும். மைனர் குஞ்சை சுட்டுவிடலாம். இந்தியாவில் மனிதநேயம் என்பது செத்துவிட்டது. இறைவன் படைப்பில் அனைவரும் சமம். முதலாளித்துவத்தின் ஆதிக்க வர்கத்தின் துணையோடு தவறு செய்பவர்களை திருத்த அவனை ஆடை இல்லாமல் ரோட்டில் அடித்து இழுத்துச் சென்றால் வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் குறைய வாய்ப்பு உள்ளது.

 18. சூப்பர் அப்பு! இந்த மாதிரி ஏமாத்திட்டு போற நாய்ங்க எல்லாரையும் நடுரோட்டுல நிக்க வெச்சி இதுமாதிரி பண்ணாதான் புத்தி வரும். இதுல ஆண் பெண்ணுன்னு பேதம் பாக்கவே கூடாது. இல்ல பொம்பளைங்களை மட்டும் மன்னிச்சிடலாம்னு சொன்னா அவன் பக்கா ஃப்ராடா இருப்பான்

 19. அவனுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும் என்பதை அந்த பெண் தோழர்களின் துணையோடு முடிவெடுப்பதுதான் சிறந்தது. தோழர்களின் செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்.மிக்க நன்றி பரவட்டும் உங்கள் உயர்ந்த பணி.

 20. நல்ல நடவடிக்கை நண்பர்களே… இத்தோடு இதை விடாமல், இதைப்பற்றிய தகவல்கலை தொடர்ந்து பகிரவும்.

 21. தங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இணைத்து வைக்க முயற்சிக்கவும்.

 22. Not able to believe that the girl believed the stomach ache story. Also sex for laptop?

  Most of these cases, girls believe the boy loves her and voluntarily has sex with the boy. But the boy doesn’t love the girl, he is just playing around. When the boy says goodbye, girl cries rape but its too late.

 23. சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள். அயோக்கியனை அடித்தே கொல்ல வேண்டும் என்று உணர்வுகள் துடித்தாலும், சட்ட ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதே சிறந்தது.

  அதே நேரம், இத்தகைய கயவர்களின் வலையில் எளிதாக விழுந்து விடும் பெண்களுக்கும் தகுந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

 24. அவனதும் பெற்றோரதும் பாடங்களை எடுத்து அவனசெய்த செய்லோடு யூ ட்யூபில் போடககூடியதாக ஒரு ஏற்பாடு செய்தால் அவனை மேலும் பாதகங்களை தொடராமால தடுக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க