முகப்புஉலகம்ஈழம்பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் - படங்கள்!

பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் – படங்கள்!

-

ழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்ணனி சார்பில் இன்றைக்கு (21/03/2013) பச்சையப்பன் கல்லூரிக்கு வெளியே சாலைமறியல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசு மாணவர்களை கலைக்க முயற்சி செய்தது, மாணவர்களின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றால் கூட்டத்தைக் கலைக்க இயலவில்லையின் , தடியடி நடத்தி கலைத்தது. தடியடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்காயம் அடைந்தனர். குறிப்பாக  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இன் பச்சையப்பன் கல்லூரி கிளைச்செயலாளர் தோழர் ஏழுமலையை, ஏழெட்டு போலீசு கும்பல் அடித்து துவைத்து ஒட்டு மொத்த மாணவர்கள் மீது இருந்த கோபத்தையும் தீர்த்துக்கொண்டது, தோழர் ஏழுமலை மயங்கி கீழே விழுந்துவிட்டார் அவரை ஜீப்பில் அள்ளிப்போட்டுகொண்டு G3 காவல் நிலையத்திற்கு ஜீப் பறந்தது!

இந்த தடியடியை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புதிய ஜனநாயகம் செய்தியாளரையும் போலீஸ் அடித்ததோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்த காமரா செல்பேசியை பிடுங்கி அதில் உள்ள தடியடி படங்களை அழித்து விட்டே திருப்பிக் கொடுத்தது.

எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்!

மாணவர் வர்க்கமாய் ஒன்று திரண்டு போராடுவோம்! இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல பல மடங்காக எங்களது போராட்டத் தீ பற்றி பரவும்!

படங்களை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்ணனி,
தமிழ்நாடு

 1. வினவு நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் மகேஷ். தொடர்ச்சியாக உங்கள் வெப்சைட்டை படித்து வருகிறேன். இன்று நேரில் பார்த்த சம்பவத்தை பகிர்ந்து கொள்ளவே பதிவை எழுதுகிறேன். நான் ஹார்டுவேர் சர்வீஸிங் வேலை செய்து வருகிறேன். ஆகவே சென்னை ரோடுகளில் எப்போதும் பயணித்து கொண்டிருப்பேன். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை தடியடி நடத்தி கலைத்ததை நேரில் பார்த்தேன். ஒரு மாணவரை மட்டும் பிடித்துக் கொண்ட காவல்துறை அவரை கடுமையாக அடித்துக் கொண்டிருந்தார்கள். பேண்ட்டில் இரத்தக் கறையோடு அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மற்றவர்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா அரசாங்கத்தின் மேல் இதுவரை ஈழ மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்பு இந்த அரசாங்கம் சும்மா நடிக்கிறது, இந்திய அரசை நம்புவது வேஸ்ட். முட்டாள்தனமாக இருக்கிறது. இந்த அரசாங்கமும் ஈழ மக்களுக்கு எதிரானதுதான் என்பதை புரிந்து கொண்டேன். மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்..

  மின்னஞ்சலில் வாசகர் ஒருவர் அனுப்பிய கடிதம்

 2. கொடூரத்தின் எல்லையை அனுபவித்திருக்கும்
  இலங்கை வாழ் தமிழின மாந்தர்க்காக
  நீதி கோரிடும் இந்த அறப்போரட்டத்திற்கு
  துணை நிற்காவிட்டாலும் குற்றமில்லை.

  சற்று தூரநின்றாவது
  தானும் ஒரு தமிழனே என
  தன்னை நிரூபித்திருக்கலாம்.
  நிம்மதியான மன அமைதி நிலவியிருக்கும்.

  மிகக்குறிப்பாக, இப்படித் தடியடிச் செய்திருக்கும்
  (பெயரரியா) இந்தக்காவலரெல்லாம்…
  இலங்கை அரசின் கூலிப்படைபோல்
  இத்தனைக் கொந்தளிப்பைக்காட்டுவது அவசியந்தானா?

  – கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

 3. மிக மிக அவமானகரமன செயல் இது, பெரும்பாலான அரசியல்வதிகள் இங்கு இருந்து தான் வந்தார்கள்,

 4. காவல் துரை அரசியல் வாதிகலின் கைக்கோலிகல், இரக்கமட்ட்ர விலகுகல் ,காவல் துரை ஒலிக

 5. எஜமானுக்கு விசுவாசமாக கடித்து குதறுவது தானே நாய்களின் இயல்பு
  நாய்கள் நம்மை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நேரமிது….
  நாய் வாலை நிமுத்த முடியுமா?

 6. All the best to our students.
  and I am thinking to take part of this. but could not able to get location and type of things before that events. so please post any details regarding these kind of porattam before that events. so that we can also participate in that. because i am coming to office in morning and going to home at evening. after that only i came to know about that events. If i come to know before that events i can plan to participate in that events.

 7. போலீஸ் செய்தது சரி தான்… தனி ஈழம் இனி கிடைக்காது… இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் கிடைக்காது… ராஜபக்சேவை தண்டிக்கவும் முடியாது….. அங்கே போர் முடிந்து ஜந்து வருடம் ஆச்சு… அப்போது இறந்த பிரபாகரன் மகன் படத்தை வைத்து இப்போழுது போராடுவது நகைப்புக்குரியது… ஏதோ தமிழகமே மாணவர்களின் போராட்த்தால் கொதிதெழுவது போலவும், எகிப்து, லிபியா போல இங்கே ஒரு புரட்சி வெடிக்கப்போவது மாதிரியும், தனி தமிழகமும், தனி ஈழமும் உடனே கிடைத்துவிடக்கூடியது மாதிரி சப்பை போராட்டத்துக்கு எல்லாம் வக்காலத்து வாங்குவது தேவையில்லாது…

 8. TN People have realised that they left the bus when the genocide actually happened.

  Now the student community have come together to make ammends for their indifference earlier. Though this may not give any immediate relief, it is heartening to note that the Students are now joining hands for a common cause.

  Bravo. A royal salute to the Student leaders.

  What the Police or any arrogant power don’t like is, people raising voices against any atrocities. Police are worried that the same people may protest against TN Govt anti-people policies in future. Thats why the lathi charge. Not in support of Lanka Govt.

 9. ‘மொழி’அறிந்ததால் மட்டும் இங்கு வந்து
  ‘தமிழில்’ எழுதியிவிட்டீரோ… ‘இந்தியன்’ அவர்களே!

  தாமதமானாலும்… தமது சத்யாகிரகத்தால்
  இந்தியர்க்கு சுதந்திரம் கிடைத்தே தீருமென்ற
  நம்பிக்கையில்தானே சாதித்தார் அன்று அண்ணல் காந்தி!

  அவர் மடிந்தபின்னரும் தேசத் தந்தையின்
  பெருமையை உலா விடுகின்றோம் நாடெங்கும் நாம்!

  என்றோ பிறந்த நிகழ்வுக்கு
  ‘காந்தி ஜெயந்தி’ என்று போற்றி
  இன்றும் கொண்டாடுகின்றோமே நாம்!

  நிலை ஒன்றுதான் காட்சிதான் வேறு இன்று.

  அன்று இலங்கையில் மாண்டவர் சார்பில்
  மரண தண்டனை கோரப்படுகிறது இன்று.

  நீதி கிடைப்பதற்கு, கொடுப்பதற்கு
  இத்தனைத் தாமதங்களாகிப்போனதற்கு
  காரணம் எதுவென யாரென
  தங்கள் மனதுக்குள்
  ஆய்வொன்று நடத்துங்கள்…ப்ளீஸ்!

  போராடுபவர்களிடமே குறை காணுவது
  இரக்கமில்லா கொடுஞ்செயலென
  தாங்களும் உணர்வீர்கள்.

  உலர்ந்திருக்கும் இதயத்திலும்… குருதி
  ஊற்றெடுத்துவிடும் இயல்பாய்… இது உறுதி

  – கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க