Saturday, July 31, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

-

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்!

நாள்:01.04.2013 ,
நேரம்: காலை 11.00 மணி

மெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க  நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று!
ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!

என்ற அடிப்படையில்  80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின்  தலைமையில்  அப்பகுதி  மக்களையும் இணைத்துக் கொண்டு மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

தகவல் :
கணேசன், ஒருங்கிணைப்பாளர்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
9566149374

 1. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை.
  ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.

  1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.

  • ‘வீட்டுக்குள்ள மழை பெய்யுதுன்னு சொன்னா எவன் கேக்குறான்?! சொன்னா நம்மள பைத்தியக்காரன்னு சொல்றானுங்க’ – இந்தக் கருத்தைச் சொல்வதற்கு அவ்வளவு சொற்கள் தேவையில்லை.

 2. ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.
  http://inioru.com/?p=34417

 3. மாணவ போராட்டங்களுக்கு இப்போ என்ன ஆச்சு? அவ்லோதானா?
  போரட்டத்துல ஈடுபட்டவங்க நிலை விழ்லுக்கு இறைச்ச நீர்தானா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க