privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!

மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!

-

“இந்தியாவில் குஜராத் என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கு மோடி என்ற மாமனிதர் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளார். இப்போதெல்லாம் அந்த மாநிலத்தின் தெருக்களில் பாலாறும் தேனாறும்தான் ஓடுகின்றன.

இதை எல்லாம் சாத்தியமாக்கியது வெளிநாட்டு இந்தியர்களும், அன்னிய நிறுவனங்களும் குஜராத்தில் செய்த முதலீடுகள். மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

குஜராத் வறுமைகுஜராத்துக்கு 10 ஆண்டுகளாக சேவை செய்து தான் பட்ட கடனை அடைத்து முடித்து விட்ட மோடி இப்போது பாரதத்துக்கு தான் பட்ட கடனை அடைக்கத் தயாராகி வருகிறார். 2014 பொதுத் தேர்தலில் அவர் பாரதப் பிரதமராகப் போவதை எதிர்பார்த்து அன்னிய முதலீட்டாளர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்து குவிக்க இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டினால் நாடெங்கிலும் ஓடப் போகும் செல்வச் செழிப்பை பிடித்து வைத்துக் கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்!”

இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும் நரேந்திர மோடி பற்றி இப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது. அதற்கு இரை போடும் விதமான புள்ளி விபரங்கள் குஜராத் அரசால் வெளியிடப்படுகின்றன.

அப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் ஒன்றை பிய்த்து மேய்ந்திருக்கிறது இந்து நாளிதழில் வெளியான கட்டுரை. ‘சுதேசி பொருளாதாரம்’ என்று சங்க பரிவாரங்கள் ஒரு புறம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கும் போது ‘அன்னிய முதலீடுகள்தான் குஜராத் முன்னேறியதற்கான மூடுமந்திரம்’ என்றும் ‘அன்னிய முதலீடுகள் மூலம்தான் இந்தியா முன்னேறும்’ என்றும் மோடியின் துதிபாடிகளின் வாதங்கள் எவ்வளவு மோசடியானவை என்பது ஒரு புறமிருக்க, அந்த அன்னிய முதலீடுகள் குறித்த குஜராத் அரசு புள்ளிவிபரங்களின் நம்பகத் தன்மையை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

அன்னிய முதலீடுகள் அதிகம் வந்தால் அந்த மாநிலம் அல்லது நாடு மிகப்பெரிய கொள்ளைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதை மறுகாலனியாக்க ஆதரவாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் வளர்ச்சி என்றுதான் அவர்கள் திரிக்கிறார்கள். குஜராத்தின் வளர்ச்சி என்பது இத்தகையதுதான். அதிலும் அன்னிய முதலீடு குறித்து மோடியின் அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும்  பொய்கள் தனித்ததொரு விசேசம். அந்த பீலாவை உடைத்து நொறுக்குகிறது இந்தக் கட்டுரை.

குஜராத் அரசின் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், 2003 முதல் 2011 வரை நடைபெற்ற ‘துடிப்பான குஜராத் – உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ களில் வாக்களிக்கப்பட்ட அன்னிய முதலீடுகளின் மதிப்பு $876 பில்லியன் (சுமார் ரூ 48.18 லட்சம் கோடி). அவற்றில் பெரும்பகுதி, 84 சதவீதம் (அதாவது சுமார் ரூ 38.54 லட்சம் கோடி) ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன, அல்லது வந்து கொண்டிருக்கின்றன.

துடிப்பான குஜராத்துண்டுச் சீட்டில் போட்டுப் பார்த்த கணக்குப்படி, வாக்களிக்கப்பட்ட முதலீடுகளில் 60 சதவீதம் வந்திருந்தால் கூட குஜராத் சீனா என்ற டிராகனை பின் தள்ளி முன்னேறியிருக்கிறது என்று பொருள். உலகிலேயே வளரும் நாடுகளில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2003-2011 காலகட்டத்தின் போது சீனா ஈர்த்த மொத்த அன்னிய முதலீட்டின் மதிப்பு $600 பில்லியன் டாலர் (ரூ 33 லட்சம் கோடி).

இந்திய ரிசர்வ் வங்கியின் 2000 முதல் 2011 வரையிலான அன்னிய நேரடி முதலீடு குறித்த புள்ளிவிபரங்கள் ‘குஜராத் $7.2 பில்லியன் (சுமார் ரூ 39,600 கோடி) அளவிலான அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்றது’ என்று தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா $45.8 பில்லியன் (ரூ 2.4 லட்சம் கோடி), டெல்லி $26 பில்லியன் (சுமார் ரூ 1.5 லட்சம் கோடி) அன்னிய முதலீட்டை ஈர்த்திருந்தன. கர்நாடகாவும், தமிழ்நாடும் முறையே $8.3 பில்லியன் (ரூ 45,650 கோடி), $7.3 பில்லியன் (ரூ 40,150 கோடி)) அன்னிய முதலீடுகளுடன் குஜராத்தை விட முன்னிலை வகித்தன.

2012-13 நிதியாண்டில் ஜனவரி வரையிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கான புள்ளிவிபரங்களின்படி குஜராத், ரூ 2,470 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்று நாட்டின் மொத்த முதலீட்டில் 2.38 சதவீதத்துடன் மாநிலங்களிடையே ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ரூ 40,999 (2012-13) கோடி அன்னிய முதலீட்டுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் வருகின்றன. ரூ 1,934 அன்னிய முதலீட்டை பெற்ற மேற்கு வங்கத்தை விட குஜராத் சிறிதளவே முன்னணியில் இருக்கிறது.

குஜராத்துக்கு வரும் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு சென்ற மூன்று நிதியாண்டுகளில் சரிந்து கொண்டிருக்கிறது. 2010-11-ல் ரூ 3,294 கோடி (நாட்டு மொத்தத்தில் 3.38 சதவீதம்), 2011-12-ல் ரூ 4,730 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.85 சதவீதம்), இப்போது ரூ 2,470 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.38 சதவீதம்). ‘உலகளாவிய பொருளாதார பின்னடைவை மீறி தொடர்ந்து முன்னேறுவதன் மூலம் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கான எஞ்சினாக விளங்குகிறது’ என்ற மாநில அரசின் பிராச்சாரததை இது பொய்ப்பிக்கிறது.

2012-13-ல் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் குறைந்தாலும், குஜராத்தின் அன்னிய முதலீட்டு மதிப்பு சுமார் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

2013-ன் ‘துடிப்பான குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு’க்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை கொடுக்க வேண்டாம் என்று குஜராத் அரசாங்கம் முடிவு செய்தது. “குஜராத் இந்தியாவின் நுழைவாயில் ஆகி விட்டது” என்று மட்டும் முதலமைச்சர் மோடி அறிவித்தார்.

– தர்ஷன் தேசாய்

Gujarat, the gateway to India: fact or farce

  1. சும்மா பிச்சி..பிச்சி வெச்சிட்டீங்க வினவு!!!என்னா பில்டப் பண்ணுறான்..எல்லா சாதனைகளையும் விட இவன் செய்த கொலைகளின் எண்ணிக்கையை யாராவது மணித நேயமுள்ளவர்கள் மறக்க ,மறுக்க முடியுமா(அரை டவுஷர்களைத் தவிர)????
    நாகைத் தென்றல்

  2. //இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும்//

    இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும் மட்டும் தான் அவர் 3 முறை முதலமைச்சர் ஆனாரா??

    • //இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும்//
      இது இந்தியா முழுமையிலும் மோடிக்கு சொம்படிப்பவர்கள் பற்றி சொல்லப்பட்டது. குஜராத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல.
      தவிரவும் குஜராத் பெரும்பான்மை இந்துக்கள் வசிக்கும் மாநிலம்தான். வேற்று மதத்தவர்கள் பத்து சதவிகிதம் மட்டுமே.

  3. என்னையா முதலமைச்சர் ஆவது எப்படி என்று தெரியாதா! ஜெயில் லலிதா கூட 3 முறை முதலவர் ஆகவில்லையா?

  4. 24 மணி நேர மின்சாரம் தருபவன்.
    விவசாயத்திற்காக தனி மின்சார கட்டமைப்பை உருவாகியவன்
    இலவசம் கொடுத்து சோம்பேறிகளை உருவாக்காதவன்.
    IIT போன்ற கல்வி பயிலும் மாணவர்களின் வீணான அறிவுரையை கேட்டு நதியின் மீது சூரிய மின்சக்தி உற்பத்தி செய்பவன்.

    சீ! சீ! இவன எல்லாம் முதல்வனா ! வாங்க ஒரு ரூபாய் கடையில் இட்லி சாப்பிட்டி கொண்டே வினவலாம்

  5. மோடிநல்லவகதான் அவுகல ஆட்டி படைக்கிரது வர்னாசிரம கும்பல் ??????? அவ்வலவு பெரிய இன்டியாவின் தந்தை என்ரு எல்லொராலும் ஏர்ருக்கொலப்பட்ட மகாத்மா என்ர பொக்கை வாய் கிலவனை மனசட்ஷி இல்லாமல் சுட்டு கொன்ர உயர் சாதி பார்ப்பன வர்னாசிர கும்பல் மோடிக்கும் ஒரு நாள் குரித்திருக்கும் ???? ஏனென்ராள் வர்னசிரம கொல்கைக்கு மாட்ரமான முரையில் என்ராவது ஒரு நால் தன் சொந்த புத்தியை கொன்டு எது சரி ?? எது தவரு ?? சிந்திக்க தொடஙினால் அன்ரய்க்கு அவருக்கு ஒரு கொட்செ மூலம நால் குரிக்கப்படும் ??? அது அமெரிக்கா ஒர்வாக்கிய பின்லாடன் ..சதாம் உசென் எப்ப்டி அமெரிககவ திர்ப்பு வலஙப்பட்டதொ அதைப்பொல வர்னசிரம கும்பலும் ஒரு திர்ப்பு வலஙுகும் நால் விரைவில் வரல்லாம்

  6. Yes,Modi generated electricity for the benefit of big industries but left 11 lakhs households without any source of electricity.He sold “surplus” electrical power to neighbour states and earned a profit of 18 crores.Death of women and children due to malnutrition is highest in Gujarat.When asked about death of malnourished women,Modi stated that these women do not eat properly to maintain their figures.He made poor women to walk 5 miles to get a pot of water.IIT ambis still admire Modi.

Leave a Reply to Sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க