Thursday, September 19, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

-

(1990-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை)

தேசீய முன்னணியின் அடைப்பக்காரர்கள் அதன் சகல திட்டங்களையும் ஆதரித்து ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் – ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிக்கைகள், அறிவுஜீவிகள் – பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு முன் வைக்கப்படும் பேச்சு வார்த்தைகளையும் ‘ஆகா’ என்று கொண்டாடுகிறார்கள். பேச்சு வார்த்தைகளோ, கமிஷன்களோ பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்க்குமென்றே வைத்துக் கொண்டாலும், அதுவே இந்து முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? ஒற்றுமை வந்துவிடுமா?

பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, எல்லா சமூகப் பிரச்சனைகளையுமே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறர்கள். 1857 சுதந்திர எழுச்சியையே மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்புப் பிரச்சனையாக, இந்து – முஸ்லீம் கலகமாகச் சித்தரிக்கிறார்கள். பள்ளிகளில் ‘சிப்பாய்க் கலகம்’ என்று நமக்குக் கற்றுத்தருகிறார்கள். வெண்மணி, பெல்ச்சியிலே தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஏதோ சில அசம்பாவிதச் சாதி மோதல் என்று குறுக்கிச் சித்தரிக்கிறார்கள். 5000 பேர் போபாலில் அமெரிக்கக் கம்பெனி யூனியன் கார்பைடு விஷவாயுவால் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை அதை ‘விபத்து’ என்று தானே சொல்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய உயிர்களை அற்பமாகக் கருதுகிறது; கொலை நடத்திவிட்டு உயிருக்குப் பேரம் பேசி நட்டஈடு நாடகம் நடத்துகிறது என்று இவர்கள் ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினையானாலும் வெட்டிச் சுருக்கிச் சுளுவாக ஒதுக்கிவிடுகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையையும் இப்படித்தான் செய்கிறார்கள்.

மொத்தம் இத்தனை சதுர அடிநிலம் – இதில் எவ்வளவு யாருக்குச் சொந்தம்? – இதுதான் இந்து முஸ்லீம்களின் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையா? அப்படியானால் ‘தகராறு’ இந்தியப்பரப்பு முழுவதும் அலை அலையாக விரிகிறதே, ஏன்? காரணம் இது சதுர அடிப் பாகப்பிரிவினை, பங்கீட்டுப் பிரச்சினை அல்ல. மத நம்பிக்கைகளை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடும் பணமூட்டைகள் விசிறிவிட்டு வளர்க்கின்ற மதவெறிகளே அடிப்படைப் பிரச்சினை. பல இன-மத மக்கள் பல நூறாண்டுகளாக உலகெங்கும் ஒன்று கலக்கிறார்கள் –ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் போன்ற ஆதிக்கசக்திகள், மனிதகுல எதிரிகள் இதற்கு உலகெங்கும் முட்டுக்கட்டைகள் போடுகிறார்கள்.

muslims-praying

கம்யூனிசம் மனிதகுல விடுதலைக்கான விடாப்பிடியான பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தை முன்வைக்கிறது. ஏகாதிபத்தியம் கம்யூனிசத்துக்கு எதிராக கிறித்துவ இறையியலின் மூலம் ஊடுருவி சதி வேலைகளை நடத்துகிறது. இஸ்லாமிய இந்து மதவெறிகள் அடிப்படையிலேயே கம்யூனிச எதிர்ப்பை முன்வைக்கின்றன. பல மத-இன மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதை கம்யூனிசம் மட்டுமே விரும்புகிறது. மற்ற தத்துவங்களும், அரசியல் முறைகளும் அதை எதிர்க்கின்றன. இந்தியாவில் உள்ள இந்து – முஸ்லீம் பிரச்சினையும் அப்படிப்பட்டதுதான்.

சாதாரண நாட்களில் ஒரு வர்க்கத்தின் மீது மற்ற மதத்தவர் ஏறி நின்று மிதிக்கிறார்களா? கழுத்தை நெறித்துக் கொல்வதுண்டா? தெரிந்த முகம், சொந்த ஊர், எவ்வளவோ உதவிகள் செய்தவர்கள் என்று பார்ப்பவர்கள் ஒரு நொடியில் அந்நியர்களாகி விடுகிறார்கள் – எதனால்? மதவெறியால். மதவெறிக்கலகங்கள் போர்களைப் போலத்தான் – ஆனால் அழிவுகள் அதிகம் பேசப்படுவதில்லை. சமூகத்தை எப்போது நினைத்தாலும் உடைத்துவிடுவேன் என்று மதவெறி அமைப்புகள் மார் தட்டுவதற்கு என்ன காரணம்? என்ன அடிப்படை?

ஆர்.எஸ்.எஸ். இந்துமத வெறி பார்த்தீனிய விஷச் செடி போல இந்நாட்டில் குறுக்கிலும் நெடுக்கிலும் ஊடுருவியிருக்கிறது. ஜனநாயகம் இங்கு இல்லை என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. இந்துமதவெறிக்கு எதிர்வினையாகப் பலவேறு கட்டங்களில் முளைவிடத் தொடங்கி, வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் இஸ்லாமிய மதவெறியாகும்.

உலக அளவில் குறிப்பாக ஆசியாவில் மூண்டுவரும் இஸ்லாமிய மதவாதம், இந்தியாவில் முஸ்லீம்களின் தற்பாதுகாப்புக்கு ஒரு ஆயுதமாக மாறிவருகின்றது. ஏன்? பின்தங்கிய ஏழைநாடான இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசீய இனங்கள், மதங்கள் அடிப்படையில் மக்கள் வாழ்கிறார்கள். மேலும் மேலும் ஜனநாயகத்தை நம்புவதற்கு மாறாக எதிர்த்திசையில் மக்கள் இழுக்கப்படுகிறார்கள் – இது ஏன்? இவை ஏன் எதனால் என்று பார்ப்பதும் இஸ்லாமிய மதவெறி குறித்து சில எச்சரிக்கைகளைக் கொடுப்பதும் எமது கட்டுரையின் நோக்கமாகும்.

**

பாப்ரி மஸ்ஜித், ராம ஜன்மபூமி விவகாரத்திற்குப் பிறகு அரசின் மெத்தனப் போக்கு முஸ்லீம்களுக்குத் தெளிவாகிவிட்டது. மீரட், மலியானா, ஹசாரிபாக், பாகல்பூர் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டதை எப்படி மறப்பார்கள்? தாறுமாறாகச் சிதைந்து மிச்சம் மீதிக் கனவுகளோடு எரிந்து போன வீடுகள், பூக்கள் நிரம்பிய குளங்களில் நிரம்பிய பிணங்கள், கிணறுகளில் பிணங்கள், நொறுக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில், தரைகளில் ரத்தக்கறைகள், துயரம், கலக்கம், பீதியோடு அகதிகள் – இவற்றை யாரால் மறக்க முடியும்?

தேசிய முன்னணி முஸ்லீம்களை இருகரம் நீட்டி வரவேற்பது போலத் தோற்றம் தருகிறது; ஆனால் அதன் கழுத்தில் பாரதீயஜனதா – இந்துமதவெறிச் சுருக்குக்கயிறு அலங்கரிப்பதைப் பார்த்த பிறகுமா விளங்கிக் கொள்ளாமல் இருப்பார்கள்? முஸ்லீம்கள் ஒதுக்கப்படுகிறார்கள்; வாழ்க்கை பலியாகிப் போவதைப் பார்த்துக் குமுறுகிறார்கள்; படிப்பறிவில்லை – அல்லது அரைகுறைப் படிப்பு – வேலையில்லை – வெம்பித் தவிக்கும் இவர்கள் மற்றவர்களோடு ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடத் தயங்குகிறார்கள்; இநதுக்களின் தவறான எண்ணங்களைப் போலவே மேலும் கூடுதலாகத் தவறான எண்ணங்களோடு சேரிக்குள் கூட்டுக்குள் ஒடுங்கி விடுகிறார்கள்.

இந்த நிலைமை முஸ்லீம் மதவெறியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. காய்ந்து சலசலவெனப் பறக்கும் சருகுகளை தீ பிடிக்காதா?

இஸ்லாமிய மதவெறி அமைப்புக்களில்தான் எத்தனை வகைகள்? ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், சையத் ஷஹாபுதீன் குழு, இவைகள் பயன்படுத்தும் சிம் (எஸ்.ஐ.எம்- இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்) ஓட்டுப்பொறுக்கும் முஸ்லீம் அமைப்புக்கள் சந்தர்ப்பவாதிகளாகவே இருக்கின்றன; அதையும் காரணம்காட்டி ஜமா அத்தே இஸ்லாம், சிம் இரண்டுமே தீவிரம் காட்டுகின்றன. (சமீபத்திய தேர்தலில் ஜமா அத்தேகூட வரம்புக்கு உட்பட்ட ஓட்டுப்போடச் சொல்லியிருக்கின்றது.)

மதரஸா கல்வி
அடிமைச் சமுதாயத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீன காலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்?

ஜமா அத்தே அமைப்பு புத்தகங்கள் வெளியிடுகிறது; மார்க்கக் கல்வி போதிக்கும் ஓராயிரம் பள்ளிகளை நடத்துகிறது; 400 படிப்புக் குழுக்கள் நடத்துகிறது; இவைகள் மூலம் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. குடும்பங்களில் முஸ்லீம் சடங்குகளை பின்பற்ற வலியுறுத்துகிறது; செயல்படுத்துவதை மேற்பார்வையும் இடுகிறது; கூட்டம் கூட்டமாக முஸ்லீம் கடைகளுக்குச் சென்று தொழுகைகளை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்று நேருக்குநேர் சோதிக்கவும் செய்கிறது. கலவரங்களின் போது தேவைப்படும் பொதுக்கருத்தையும், அன்றாட அரசியல் சமூக கருத்து விமர்சனங்களையும் இந்த வழியேதான் முஸ்லீம்கள் மத்தியில் பாய்ச்சுகிறது; இவர்களிடமிருந்தே பண ஆதரவையும் பெறுகிறது.

ஒரு சில நூறு பணக்காரரிடம் இருந்து தனியே இவர்களுக்கு பணம் கிடைக்கிறது; நகரத்தை நோக்கி வந்து ஆயிரக்கணக்கில் பொறுக்கி வர்க்கமாக, குண்டர்களாக மாற்றப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன; இருந்தாலும் பல்லாயிரக்கணக்கில் ஆதரவாளரைத் திரட்டுவதை இலக்காக வைத்தே ஜமா அத்தே வேலை செய்கிறது. அடிப்படையில் இதுதான் அபாயகரமான விஷயம்.

இஸ்லாமிய மதவெறி தூண்டப்படுவதற்கான முதல் அடிப்படை ஆர்.எஸ்.எஸ்- போன்ற இந்துமதவெறி அமைப்புகளின் வெறியாட்டங்கள்; முஸ்லீம்கள் இதை தங்கள் மதவெறி கொண்டு எதிர்க்கிறார்கள். இன்னொரு மாற்று இருக்கிறது – ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்களோடு இணைந்து போராடி எதிர்க்க முடியும். ஆனால் இந்திய நிலவரம் விபரீதமாகவே உள்ளது. புரட்சியாளர்கள் மற்றும் ஒரு சில உதிரியான நபர்கள் தவிர ஜனநாயகத்துக்கான போராட்டமே மிக மிகக் குறைவு. இதன் விளைவுகளைத்தான் ஷாபானு ஜீவனாம்ச விவகாரத்தில் பார்த்தோம். திருவனந்தபுரத்தில் ஜமீலா பீவியை ஜமாத் விசாரித்து வீதியில் எறிந்ததைப் பார்த்தோம்; சல்மான் ருஷ்டி இஸ்லாமை விமரிசிக்கும் கதைப் பாத்திரங்களை எழுதினார் என்பதற்காக, உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி பம்பாயில் சூறையாடப்பட்டதையும், ‘எனக்கு ஆணையிடுங்கள். ரஷ்டியைக் கொன்று வருகிறேன்’ என்று முஸ்லீம் இளைஞர்கள் சூளுரை எடுத்ததையும் பார்த்தோம். இவை ஓரிரவில், ஒரு நாளில் விளைந்தவையல்ல; நிதானமான சிந்தனையில் தன்மானப் பிரச்சினையில் விளைந்ததும் அல்ல. மெல்ல மெல்ல ஜமா அத்தே இஸ்லாமி போன்ற மதவெறி அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட களங்களில்தான் கலவரங்கள் விளைகின்றன.

இந்திய நிலைமையில் களம், காலம் கனிய வைப்பது இந்த வெறியர்களின் வேலை. பெட்ரோல், குண்டு தயாரானதும் ஒரு சிறு பொறி பற்ற வைப்பதுதான் குறிப்பிட்ட தருணம். அதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லீம்களின் வாழ்க்கை படுகுழியில் சரிந்து கொண்டிருக்கிறது; வேறு சிறப்பான நிறுவனங்களும் இங்கே இருக்கின்றன. இன்று இதற்கு மிகப் பொருத்தமாக உலக நிலைமை மாறியுள்ளது. ஆசிய நாடுகள் அனைத்திலும் மதவாதம் – குறிப்பாக இஸ்லாமிய மதவெறி எரிகின்ற பிரச்சனை ஆகிவருகிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி) ஏகாதிபத்தியச் சீரழிவுகள் பின் தங்கிய ஆசிய நாடுகளின் வேர்களை அறுப்பதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். மனம் வெதும்பும் செயலற்ற பழமைவாதிகள் நிலப்பிரபுத்துவ சித்தாந்தங்களை வெறியோடு திணிக்கக் கோருகிறார்கள். இஸ்லாமிய மதவெறியர்கள் இப்படிப்பட்டவர்கள்தாம். இவர்களுக்கு உலக மையம் ஈரானிய மதவாத அரசுதான். இஸ்லாமியப் புரட்சியின் கரு உருவாகி விட்டதால் அதைப் பரப்ப வேண்டும், தேசங்கடந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் கிளர்ந்துள்ள மீட்க முடியுமென்ற நம்பிக்கையை முன்னே நிறுத்தி இந்திய முஸ்லீம்களைப் பணயமாக வைக்கிறார்கள் மதவாதிகள்.

இஸ்லாமிய புரட்சியின் நடைமுறை - மவுதூதி
இஸ்லாமிய புரட்சியின் நடைமுறை – மவுதூதி

இவை கற்பனையான செய்திகள் அல்ல. 1960-ஆம் ஆண்டுகளிலேயே பாகிஸ்தானின் ஜமா அத்தே இஸ்லாமியை உருவாக்கிய மவுதூதி அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இதற்குத்தான் அறைகூவல் விட்டார். இஸ்லாமியப் புரட்சியை எப்படிச் செய்வது என்பதுதான் அவரது உரையின் சாராம்சம். “தேசீய இனங்களைக் கடந்த, தேசங்களைக் கடந்த குர்ஆன் வழிப்பட்ட அரசை அமைக்க வேண்டும்; மேலை நாட்டுப் படிப்பால், பயிற்சியால் அவர்கள் சொல்லுகின்ற வரலாற்றை, வாழ்க்கையை, உலகக் கண்ணோட்டத்தைத்தான் இளைஞர்கள் பெறுகிறார்கள்; முஸ்லீம் மார்க்கக் கல்வி வேண்டும்; முஸ்லீம் விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், வரலாற்று ஆசிரியர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் வேண்டும். எல்லாவற்றிலும் இஸ்லாமியச் சித்தாந்தம் தோய்ந்திருக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நடத்த வேண்டிய தனிநபர்கள் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும்.”

எப்படி இஸ்லாமியப் புரட்சி செய்வது என்பதற்கு இன்றுள்ள நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதைப் பற்றி விளக்கவில்லை மவுதூதி. பதிலாக, மதீனாவில் இஸ்லாமிய அரசை அமைக்க முகம்மது 13 ஆண்டுகள் கடுமையாகப் போராடியதை உணர்ச்சியோடு விளக்கினார். குரைஷிட்டுகள் ஹெட்ஜாசின் அரசராக முகமதுவை முடிசூட்டுவதாக மயக்கு வார்த்தைகள் பேசினார்கள்; அரேபியாவின் இணையற்ற அழகிகளைக் கொண்டு வந்து மணமுடித்து தருவதாகச் சொன்னார்கள். பதிலுக்கு, முகம்மது ‘லட்சியத்’தைக் கைவிட வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிபணியாத லட்சியவான் முகமது, அவரது மனைவி கதீஜா பற்றியெல்லாம் விளக்கி குர்ஆனில் சொல்லப்பட்டதே சரியான அரசு என்று அடித்துப் பேசுகிறார்.

ஓரிடத்தில் இஸ்லாமியப் புரட்சியைத் தொடங்கி நடத்தினால் உலகம் முழுவதும் பேதமற்ற ஒரே கடவுளின் ஒரே சமுதாயம் உருவாகும் என்று மவுதூதி அன்று சொன்னார். உலகின் பல நாடுகளில், பல மதத்தவரோடு வாழும் முஸ்லீம்கள் எப்படி இதைச் சாதிப்பது என்பதற்கு அவரிடம் விடை இல்லை.

இருக்கமுடியாது; அடிமை உடமை காலத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீனகாலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்? கிடைக்கும் என்று மதவெறியர்கள் சொல்லுவார்கள். இவர்களின் ‘புரட்சிக்கு’ கோட்பாடு எங்கிருந்து கிடைக்கிறது? குர்ஆனிலேயேதான். குர்ஆன் சொல்கிறது: “(பல்வேறு) கடவுள்கள் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் யாம் உங்களை மத்திய நாட்டு மனிதர்களாக படைத்தோம். உலக மக்களுக்கு நீங்களே சாட்சிகள்; தீர்க்கதரிசியார் உங்களுக்கு ஒரு சாட்சி.” (வேதம் 2:143).

உலகில் கடவுள்கள் இல்லை, ஒன்றே கடவுள் என்று குர்ஆன் சொல்கிறது. பல கடவுள்கள், பல தேசங்கள் என்ற முரண்பாட்டுக்கு அன்று முகம்மது கண்ட ஒரு முடிவுதான் ஒரு கடவுள், ஒன்றே உலகம் என்ற தத்துவம். தேசங்கள், தேசிய இனங்கள் என்பதை நவீன உலகம் முன் நிறுத்துகிறது. இதற்கான தீர்வை பழைய மதங்களில் காணமுடியாது. அஞ்ஞானத்திற்கு பதில் விஞ்ஞானரீதியான மார்க்சிய தத்துவத்தில் தான் முடிவை தேட வேண்டும்.

இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. “இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு” என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்து ராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் ‘புரட்சி அரசு’ எப்படி வேறானது? அதில் ‘இந்து’ என்ற சொல்லுக்கு பதில் ‘இஸ்லாம்’ என்றிருக்கும், அவ்வளவுதானே.

இந்தியா : தெருக்களில் மதவெறியர்களின் போர்
இந்தியா : தெருக்களில் மதவெறியர்களின் போர்

பல்வேறு இந்திய இஸ்லாமிய சிந்தனையாளர்கள், ஆலிம்கள் விருப்பப்பட்ட விளக்கம் கொடுத்து குட்டை குழப்புகிறார்கள். டெல்லி இமாம் ஒரு பேட்டியில் கூறினார்: “முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும்; சிறுபான்மையாக உள்ள இடத்தில் மதச்சார்பற்ற அரசு இருக்க வேண்டும்”. மிகச் சுலபமாக ஆர்.எஸ்.எஸ். இந்த வாதத்தை எதிராக திருப்புகிறது. “பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இடத்தில் இந்து அரசுதானே இருக்க வேண்டும்.” என்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மதவெறி என்பதற்கும், இரண்டுமே மக்களுக்கு எதிரானது என்பதற்கும் வேறென்ன சான்று வேண்டும்? இதனால் தான் இந்திய முஸ்லீம்கள் பெரும்பான்மை இந்துக்களின் தயவில் வாழ்வது போல இருவருமே சித்தரிக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக இது அல்ல.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து மதவெறியை இனங்கண்டு ஒதுக்குவது போலவே இந்திய மக்கள் இஸ்லாமிய மதவெறியையும் எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதவெறியர்கள் தெளிவாக வேறு மதங்களையும் எதிர்க்கிறார்கள்; ஜனநாயகபூர்வமான கம்யூனிஸத்தையும் எதிர்க்கிறார்கள். இவர்கள் அடிப்படையிலேயே ஜனநாயக எதிரிகள்.

பிவாண்டி மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட முஸ்லீம் உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து வறுமையால் வெளியேறியவர்கள் – இந்தப் பொருளாதார நிலமை பற்றியோ, காரணம் யார் என்றோ, எதிர்த்த போராட்டம் பற்றியோ மத வெறியர்கள் வாயே திறப்பதில்லை; தவிர, முஸ்லீம் உழைப்பாளிகள் முஸ்லீம் பண முதலைகளால், பண்ணையார்களால் சுரண்டப்படுவதை இவர்கள் எதிர்ப்பதும் கிடையாது. இவற்றுக்கு தமிழகத்தில் சான்று ஏதாவது உண்டா?

இன்றைய உற்பத்தி முறையின் முன்னே பழமையான இந்துமத மரபுகள் போலவே இஸ்லாமிய மரபுகளும் சரிந்து விழுகின்றன. இன்றைய சமுதாயத்தில் உள்ள, முதலாளி தொழிலாளி வர்க்கங்களுக்கான ஒழுக்க விதிகளை இந்த வர்க்கங்களே இல்லாத பழைய காலத்தின் தர்மமான குர்ஆனில் தேட முடியுமா? தேட முடியாதென்பதை மதவாதிகள் ஒப்புக் கொள்வார்களா?

நாம் பொறுமையாக சிந்திக்க கடமைப் பட்டவர்கள். நாம் தேச விடுதலை பற்றிச் சொல்லும்போது “பல தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து கூட்டாக புரட்சி நடத்தப்பட வேண்டும்; பல மதங்கள் இருக்கலாம், அவை ஜனநாயக பூர்வமாக, தனிநபர் உரிமையாக்கப்பட வேண்டும், அரசிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறோம். சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரின் உரிமைகள் நசுக்கப்படும் போது அதற்கு எதிராக நிச்சயம் நிபந்தனையின்றி ஆதரவு அளித்து போராடுவோம்; ஆனால் மத அரசை, மத அடிப்படை வாதத்தை – அது இந்து, முஸ்லீம் எதுவாயினும் – எதிர்ப்போம்.

இன்று இந்தியா முழுவதும் பெரும்பான்மை இந்து மதவெறி பற்றி எரிகிறது. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைக் கேட்க முன் வரும் முஸ்லீம்களைப் பார்த்து “இவர்கள் மறுபடி இந்தியாவைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். தியோரஸ் அலறுகிறார். இவருக்கு பனத்துவாலா, சகாபுதீன், இமாம், ஜமா அத்தே இஸ்லாமி ஆகியோர் பதில் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் இஸ்லாமிய வெறியர்கள். ஆனால் ஏழை எளிய முஸ்லீம் உழைக்கும் மக்கள் பதில் கொடுக்க முடியும் – “எங்கள் பூமி இதுதான், எங்கள் நாடு இந்தியா தான். உழைக்கும் மக்களுக்கே இந்த நாடு சொந்தம்.” என்று முஸ்லீம் மதவெறியர்கள், சுரண்டும் இந்திய அரசு, இந்திய பாசிச கும்பலின் கூட்டாளிகள் இவர்களிடமிருந்து நாட்டை மீட்க உழைக்கும் முஸ்லீம் மக்கள் மற்ற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போதுதான் ஒளிமயமான இந்தியாவை அடைய முடியும்.

– பஷீர்
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஏப்ரல் 1990
_________________________________________________

  1. //இந்துமதவெறிக்கு எதிர்வினையாகப் பலவேறு கட்டங்களில் முளைவிடத் தொடங்கி, வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் இஸ்லாமிய மதவெறியாகும்.//

    “In the first place, the birth of Hindutva movement was a natural reaction to Muslims’ unreasonable, bigoted campaign to include India into a pan-Islamic Caliphate as intended by the Khilafat Movement (aided by Gandhi and Nehru et al.), to their separatist demand for creating
    an independent state dividing India, and to their indulgence in mindless violence against the Hindus (e.g.,Mopla Rebellion) to achieve their goal.” – MA Khan (Islamic jihad, p 169, downloadable from http://www.islam-watch.org/books/islamic-jihad-legacy-of-forced-conversion-imperialism-slavery.pdf)

    //‘எனக்கு ஆணையிடுங்கள். ரஷ்டியைக் கொன்று வருகிறேன்’ என்று முஸ்லீம் இளைஞர்கள் சூளுரை எடுத்ததையும் பார்த்தோம்//

    Is this also due to RSS fanatics?

    //டெல்லி இமாம் ஒரு பேட்டியில் கூறினார்: “முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும்; சிறுபான்மையாக உள்ள இடத்தில் மதச்சார்பற்ற அரசு இருக்க வேண்டும்”. மிகச் சுலபமாக ஆர்.எஸ்.எஸ். இந்த வாதத்தை எதிராக திருப்புகிறது. “பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இடத்தில் இந்து அரசுதானே இருக்க வேண்டும்.” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.//

    Muslims have 56 countries to have their majority rule. RSS fanatics have only one. While judging against Muslims, RSS fanatics have more reason to have their say.

    • I did found few distortion of facts in your argument dear friend.
      on the first place it was hindu radicals who communalised national movement (read about the role of Tilak and Arubindo in swadeshi movement)
      It was The Hindu Mahasabha who pushed for a Hindu Rastra during 1920’s.on the contrary Jinnah was asking for reservation of seats for muslims in central assembly and limited autonomy to the provinces(such that the residual powers to be vested with the provinces). The demand for separate pakistan came only in late 30’s that too due to the right extremists like malaviya.
      It was the Arya samaj which started the Shuddhi movement to reconvert people to hinduism and the muslim’s started tabligh in retaliation.
      Muslims were neglected and watch down with suspicion by the british government from 1857 revolt. It was the hindu affluent class who supported the british government (except a few).This alienation helped muslim radicalism too….
      (I would suggest you to read Modern India published by Spectrum or Bipin chandra or NCERT book). It’s our duty to understand the true history and bring that to the light of the common people. Fundamentalism in any form should be rooted out.

      • Dear Karthik,

        The MA Khan himself has given you a right response to your query

        “Why should the Sikhs and Hindus participate in the mutiny anyway? Although the British held the executive power, Muhammad Shah Jaffar was still the official head of India at the time. Shah Jaffar is much eulogized by today’s Indians—both Muslim and non-Muslim—as a great revolutionary patriot for instigating the Sepoy Mutiny. But he was essentially fighting to drive the British mercenaries out of India for reestablishing the lost Muslim sovereignty of the yesteryear, not for restoring political power to the people of India. Upon Shah Jaffar’s appeal, Muslims across India considered the Sepoy Mutiny to be a Jihad against the British for reinstating the lost Islamic domination. In the course of the Sepoy Mutiny, Shah Jaffar declared himself the Emperor of India and issued coins in his name, the standard way of asserting Islamic imperial status. His name was added to the khutbah (sermon) in Muslim prayers, which symbolized the acceptance by Muslims that he was the Amir (leader) of India.”
        – MA Khan (Islamic Jihad. P.166, linked in my previous post)
        Let me add my bit too:

        As against Muslims who already have 56 Muslim Rastras and who still want to impose islamic rule when they become majority, of even a small district (South Thailand), or even a small suburb (some muslim majority suburban areas of London, Paris, Brussels, etc) and declare their area to be Dar ul Islam, Hindu radicals are well within their right to aspire for a Hindu Rastra (Thank goodness it did not happen, for I am not any fan of any madness) and it was mean on the part of Muslims not to recognize this right.

  2. சமீப காலங்களில், இசுலாமிய மதவாதத்தை எதிர்த்து இப்படி ஒரு கட்டுரை ஆய்வு கண்ணோட்டத்துடன் எழுதப்படவில்லை என்று கருதுகிறேன். இந்து மதவெறியும், இசுலாமிய மதவாதமும் ஒன்றிலிருந்து மற்றொன்று அவை வாழ்வதற்கான சக்தியை உறிஞ்சுகின்றன. ஆனால் இரண்டும் வேறுவேறு தன்மையில் இயங்குகின்றன. இந்து மதவெறி இசுலாமிய மக்களின் உயிரை உறிஞ்ச துடிப்பது போல, இந்தியாவில் இஸ்லாமிய மதவாதம் இயங்கவில்லை. இதனையே இஸ்லாமிய அமைப்புகளின் தயவை எதிர்பார்த்துக் கிடக்கும் அறிவாளிகள் கேட்கிறார்கள். தா.மு.மு. க வும், இதர இசுலாமிய அமைப்புகளும் இந்துக்களை கொல்லவா, இசுலாமியர்களை வழிநடத்துகிறார்கள் என்று? முந்தைய பதிவொன்றின் விவாதத்தில் நிஹ்மத்துலாஹ் என்னும் இசுலாமிய நண்பர் பழனிபாபாவை ஆதரிக்கவும் இந்த காரணத்தையே சொன்னார்.

    பல்வேறு, வரலாற்று காரணங்களால் இசுலாமிய மதவாதத்தால் இந்துமதவெறி போன்று வெளிப்படையாக இயங்க முடியாது. இசுலாமிய மதவாதம் தன்வயப்பட்ட ஒன்றாக இயங்குகிறது. தனக்குள்ளே தான் முடங்கி அது செயல்படுகிறது. சிறுபான்மையராக இந்தியாவில் இருக்கும் விசேசமான தட்ப வெட்ப சூழலுக்க்கேற்ப தன்னை தகவமைத்து செயல்படுகிறது. சில இசுலாமிய இயக்கத்தை சேர்ந்தோர் ராமன் பாலம் என்ற இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கிறார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கிறார்கள். இசுலாமியர்களிடம், இந்து மதவெறியர்களுக்கு இசுலாமியர்கள் மீது துவேசம் இருப்பது போல இந்துக்கள் மீது துவேசம் இருப்பதில்லை. இது வரவேற்கத்தகுந்த ஒன்றே. ஆனால், அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில், என்னை தொந்தரவு செய்யாதே; நான் உனக்கு எதிரியல்ல என்ற அளவிலானது.

  3. \\சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரின் உரிமைகள் நசுக்கப்படும் போது அதற்கு எதிராக நிச்சயம் நிபந்தனையின்றி ஆதரவு அளித்து போராடுவோம்; ஆனால் மத அரசை, மத அடிப்படை வாதத்தை – அது இந்து, முஸ்லீம் எதுவாயினும் – எதிர்ப்போம்.\\

    ஹாஹா ஹிஹிஹிஹி ஹுஹுஹுஹு

    \\இசுலாமியர்களிடம், இந்து மதவெறியர்களுக்கு இசுலாமியர்கள் மீது துவேசம் இருப்பது போல இந்துக்கள் மீது துவேசம் இருப்பதில்லை. இது வரவேற்கத்தகுந்த ஒன்றே. \\

    சின்ன புள்ள தனமா இருக்கு…

    எலே சுக்குதேவ் அவ்வள அப்பாவியாலே நீ

  4. இந்துத்துவ பயங்கரவாதமும், இசுலாமிய மதவாதமும் அவற்றின் பலம் மற்றும் பலகீனத்தை உணர்ந்து செயல்படுகின்றன. இசுலாமிய மதவாதம் மாற்று மதங்கள் மீது கவனமாக காழ்ப்புணர்வை கக்கும். இசுலாமிய மதவாதம் இந்துத்துவ அரசியல் நடவடிக்கையின் தவிர்க்கவியலாத விளைவு அல்லது எதார்த்தம் என்று கூற முடியாது. இசுலாமிய மதஅரசியல் உணர்வு உள்ளவர்கள் இந்துமதத்தை விடவும், கிறிஸ்தவத்தையே பகை சக்தியாக உணர்கிறார்கள். இதற்கான தருக்கத்தை சர்வதேச நிலைமைகளிலிருந்து கட்டமைக்கிறார்கள். பல மூட பாதிரிகளை போன்று இந்து மதத்தின் சடங்கு, சம்பிராயதங்களை கேலி செய்வதில்லை இவர்கள். ஜாகிர் நாயக் என்னும் மார்க்க சிந்தனையாளர் முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் ஒருமுறை பேசும் போது இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இருக்கின்ற பல்வேறு ஒற்றுமைகளை பேசியது வியப்பாக இருந்தது. இந்து மதத்தில் பல கடவுளர்கள் இருப்பதாக தோன்றினாலும், அது உள்ளார்ந்து ஓரிறை நம்பிக்கையை கொண்டதே என்றார். முஸ்லிம்கள் பல பெண்களை மணப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, கிருஷ்ணனின் மனைவியரின் கணக்கை சொல்லி கிறங்கடித்தார்.

  5. //இந்துமதத்தை விடவும், கிறிஸ்தவத்தையே பகை சக்தியாக உணர்கிறார்கள்//

    சிறு திருத்தம். முஸ்லீம்கள் கிறித்துவத்தை நேரடியான பகை சக்தியாக கருதவில்லை. அவர்களுடைய பகைசக்தி யூதர்கள்தான். யூதர்களின் சூழ்ச்சியினால்தான் கிறித்தவர்கள் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள் என்பது இசுலாமியர்களின் எண்ணம். ஓரிறை கருத்துக்கொண்ட கிறித்துவர்களை முலீம்கள் மணம் புரிந்துகொள்ள குரானில் அனுமதியிருக்கிறது. கிறித்தவர்களுடன் நட்பு பாராட்டிக் கொள்ளல் வேண்டும் எனவும் வலியுறுத்தட்டிருக்கிறது. முஸ்லீம்களின் மெயின் எனிமி யூதர்கள்தான்.
    உதாரணமாக, எனது நண்பன் ஒருவன் (மத கடுங்கோட்பாட்டாளன்) யூடியூபில் ஒரு மென்பொருளின் விளக்கம் பற்றி பார்த்தார். அது முடிந்த உடன் ஆபாச பெண்ணுடல் கொண்ட படம் ஒன்று தோன்றியது. அதைப் பார்த்த அவர், நாம் பார்த்த வீடியோவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். எல்லாம் யூதர்களின் சூழ்ச்சிதான் என்றாரே பார்க்கலாம். (அவர் தனியாக ப்ளூ பிலிம் பார்ப்பது வேறு விஷயம் 🙂

    • இந்தியாவில் இசுலாமிய மதவாதம் இயங்கும் விதத்தை குறிபிட்டேன். நீங்கள் குறிப்பிடும் யூத வெறுப்பு கிறித்தவத்திற்கு ஆதரவானது இல்லை. யூத மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்குமான சிற்சில வேறுபாடுகள் இயேசுவால் வந்தது மட்டுமே. பல இஸ்லாமிய கலாச்சார நடவடிக்கைகள் கிறித்தவத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது.

  6. அரைவேக்காட்டுத்தனமான அலசல். தவறான முன்முடிவுகளின் அடிப்படையில் ஜமாஅத்துக்கு எதிராக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசியிருக்கிறார்.

  7. இசுலாமியர்களிடம், இந்து மதவெறியர்களுக்கு இசுலாமியர்கள் மீது துவேசம் இருப்பது போல இசுலமியர்களுக்கு இந்துக்கள் மீது துவேசம் இருப்பதில்லை.

    இது அப்பட்டமான பொய். இசுலாமியர்கள் வெளிக்காட்டுவதில்லையே தவிர தங்களுக்குள் அவ்வுணர்வை வெளிப்படுத்தவே செய்கிறார்கள்.

    பிவாண்டி மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட முஸ்லீம் உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து வறுமையால் வெளியேறியவர்கள் – இந்தப் பொருளாதார நிலமை பற்றியோ, காரணம் யார் என்றோ, எதிர்த்த போராட்டம் பற்றியோ மத வெறியர்கள் வாயே திறப்பதில்லை; தவிர, முஸ்லீம் உழைப்பாளிகள் முஸ்லீம் பண முதலைகளால், பண்ணையார்களால் சுரண்டப்படுவதை இவர்கள் எதிர்ப்பதும் கிடையாது. இவற்றுக்கு தமிழகத்தில் சான்று ஏதாவது உண்டா?
    இதற்கு இசுலாமியர்கள் பதில் சொல்வார்காளா?

    • \\இசுலாமியர்கள் வெளிக்காட்டுவதில்லையே தவிர தங்களுக்குள் அவ்வுணர்வை வெளிப்படுத்தவே செய்கிறார்கள்\\

      நண்பரே! அனைத்து மதவாத காலிகளுக்கும் பொதுவானது இது. இஸ்ல்மியர்களிடம் மட்டும் இருப்பதாக குறிப்பிடுவது கயமைத்தனம். அனைத்து மதங்களுமே பொதுவாக அன்பு, சமாதானம் என்று சொன்னாலும் கிட்ட நெருங்கையில் ஆழமான துவேசத்தை அந்த அந்த மத கடவுளரை ஏற்றுக் கொள்ளாதவர் மீது உமிழ்கிறது. இதற்கு சான்றுகள் வேண்டுமா?

  8. ஓரிடத்தில் இஸ்லாமியப் புரட்சியைத் தொடங்கி நடத்தினால் உலகம் முழுவதும் பேதமற்ற ஒரே கடவுளின் ஒரே சமுதாயம் உருவாகும் என்று மவுதூதி அன்று சொன்னார். உலகின் பல நாடுகளில், பல மதத்தவரோடு வாழும் முஸ்லீம்கள் எப்படி இதைச் சாதிப்பது என்பதற்கு அவரிடம் விடை இல்லை.

    குர்ஆனில் இதற்கு விடை உண்டு. கடைசியாக உள்ள ஒருவனும் இசுலாமியனாக மாறும் வரை ஜிகாத் செய்ய வேண்டும்.

  9. சுகுதேவ் அவர்களே, பிற மத காலிகளிடம் இந்த பண்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.

    அனைத்து மதங்களுமே பொதுவாக அன்பு, சமாதானம் என்று சொன்னாலும் கிட்ட நெருங்கையில் ஆழமான துவேசத்தை அந்த அந்த மத கடவுளரை ஏற்றுக் கொள்ளாதவர் மீது உமிழ்கிறது.

    இதுதான் உண்மைநிலை. ஆனல் இசுலாமியர்களிடம் இல்லை என்ற வாதத்தைதான் நான் மறுத்துள்ளேன்

  10. வினவில் வெளிவந்த கட்டுரைகளிலேயே மிக அபத்தமான அரைகுறை அறிவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது..

  11. பகிரங்க அழைப்பு
    சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க