இளவரசனின் உடல் வைக்கப்பட்டிருந்த தருமபுரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் அவசர அவசரமாக பரிசோதனை செய்து விட்டு அடக்கம் செய்து விட போலீசும் அரசும் திட்டமிட்டிருந்தனர். 144 தடை உத்தரவு இருப்பதால் இறுதி ஊர்வலத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்று காவல் துறை கண்காணிப்பாளர் கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இன்று காலை மருத்துவமனை முன்பு பெரும் எண்ணிக்கையில் கூடினர். இளவரசன் தரப்பில் 2 மருத்துவர்களும் பிரேத பரிசோதனையின் போது உடனிருக்க வேண்டும், உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இளவரசனின் வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து முழக்கம் எழுப்பினர். மருத்துவமனை முன்பு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர்.
இதற்கிடையில் வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், அரசுத் தரப்பில் இளவரசனின் உடலை பதப்படுத்தி பத்திரமாக மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையையும், அதன் வீடியோ பதிவையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திவ்யாவை பாட்டாளி மக்கள் கட்சியின் பிடியிலிருந்து விடுவித்து அரசு பாதுகாப்பில் அல்லது நீதி மன்ற பாதுகாப்பில் பராமரிக்க வேண்டும் என்ற மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்த மக்கள் கூட்டம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களின் பிரச்சாரம், முழக்கம்.
[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]
செய்தி, படங்கள் : விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
1) சாதி சான்றிதழ்களில் சாதி குறப்பிடாமல் சான்றிதழை இட ஒதுக்கீட்டு சான்றிழதழ் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.2) அணைத்து சாதி சங்கங்களும் கலைக்கப்பட வேண்டும் 3) சாதிகளுக்கு வக்காளத்து வாங்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் 4)இட ஒதுக்கீட்டில் காதல் திருமணம் செய்தவர்களின் பிள்ளகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்
If any caste is not treating fellow humans equal, Reservation rights should be cancelled PERIOD
https://www.facebook.com/pages/Dharmapuri-ilavarasan-issue/395526487225250?fref=ts