Wednesday, November 6, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராமதாஸ் கொடும்பாவி - பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

-

1. சென்னையில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

என்ற முழக்கங்களுடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

2. திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மையம் நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம்

  • இளவரசன் மரணம் தற்கொலையல்ல! ஆதிக்க சாதிவெறிப் படுகொலை!
  • திருச்சியில் நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் எழுச்சிமிக்க போராட்டம்!
  • ராமதாஸ் படம், பா.ம.க கொடிகள் எரிப்பு!

ருமபுரியில் திவ்யா-இளவரசன் காதல் தம்பதியரைப் பிரித்த சாதி வெறியர்களின் கொடுஞ்செயலால் தமிழகமே குமுறிக்கொண்டிருந்த நிலையில் 04.07.2013 அன்று வந்து சேர்ந்த இளவரசனின் மரணச்செய்தி நம்மை அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. அதே நேரத்தில் சாதிவெறிக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் பாடை கட்டுவதில் முன்கையெடுத்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த – பெரியார் பிறந்த இந்த மண்ணில் இன்று சாதி வெறி தலை விரித்தாடும் நிலையும் அதை தடுக்க முடியாத இயலாமையும் நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

அனைத்து ஓட்டுச் சீட்டு கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் சாதிவெறி தலைவிரித்தாடும் நிலையில் ஜனநாயக சக்திகள் சோம்பிக்கிடக்க முடியாது; எதிர் வினை செய்தே தீர வேண்டும் என்ற வகையில் தமிழகத்தின் மவுனத்தை உடைக்கும் முயற்சியாக 05.07.2013 அன்று காலை 10 மணியளவில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் இரா.ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், “இளவரசனின் மரணம் தற்கொலையல்ல; ஆதிக்க சாதிவெறிப் படுகொலையே” என்று வலியுறுத்தியதுடன், ஆதிக்க சாதி வெறி கொடூரன் ராமதாஸ் தலைமையிலான சமூக விரோத கும்பலைக் கைது செய்யவும், பா.ம.க, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தடை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் இராமதாசின் உருவப்படம் மற்றும் பாமக கொடிகளும் எரிக்கப் பட்டன.

  • பெரியார் பிறந்த மண்ணில் ஆதிக்க சாதிவெறியாட்டத்தை அனுமதியோம்!
  • ஆதிக்க சாதிவெறியர்கள் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை கைது செய்!
  • பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை தடை செய்!

என்று முழக்கமிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலமாக நாம் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட போது வழக்கறிஞர்கள் பலரும் தங்களை இப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டணர்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து, ”பாமக-வும் ராமதாசும் பதவி சுகம் அனுபவிக்க மக்கள் ரத்தம் சிந்தணுமா?”,என்று முழக்கமிட்டு கேள்வி எழுப்பியது அவர்களின் சிந்தனையைத் தூண்டியது. மேலும் சாதியையும் மனுநீதியையும் மக்களை திரட்டி அழித்தொழிப்போம் என்று உணர்வுபூர்வமாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி பகுதியில் சாதியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னோட்டமாக இருந்தது. காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய நம்மை முன்கூட்டியே வந்து கைது செய்ய காத்துக்கொண்டிருந்த போலீஸ் பட்டாளம் – இப்போராட்டத்திற்கு மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் வெளிப்பட்ட ஆதரவை கண்டு அடக்கிக்கொண்டது.

சாதி வெறிக்கு தனது தந்தையையும் தற்போது கணவனையும் பலி கொடுத்து தவிக்கிறார் திவ்யா. தனது தாயையும் தம்பியையும் இழந்து விடுவேனோ என்று அஞ்சுமளவுக்கு அச்சுறுத்தப்பட்ட அவர் தற்போது தன்னையும் இழந்து நிற்கிறார். சாதி வெறிக்கு மண்டியிட்டு பணிந்து போவதா? தமது ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் இளமை முறுக்கோடு எதிர்த்து நிற்பதா என்பது இன்று ஒவ்வொரு தமிழ் இளையோரின் முன்னும் நிற்கும் முக்கிய கேள்வி! பின்வாங்கி காட்டு மிராண்டி காலத்திற்கு செல்ல முடியாது. காட்டு மிராண்டிகளை காட்சி சாலையிலும் அவர்களின் காலத்திற்கொவ்வாத கலாச்சாரத்தை சவக்குழியிலும் வைக்க வேண்டிய அவசியம் எழுந்து விட்டது.

பதவிக்காகவும் பவிசுக்காகவும் கற்காலத்தை மீட்க துணிந்து விட்டது ஒரு கூட்டம்! சவாலை எதிர்கொள்ள இளைய சமுதாயமே எழுந்து நில்!

எதிர்காலக் கனவுகளை நெஞ்சில் தேக்கி புது வாழ்வு துவங்கிய அந்தத் தம்பதிகளை துவக்கம் முதலே துன்புறுத்தி மகிழ்ச்சியைக் குலைத்து அடுத்தடுத்து கொடுமைக்குள்ளாக்கி அதில் பட்டாசு வெடித்து இன்புறும் கயவர்களை எதிர்த்த சாதிவெறிக்கெதிரான இப்போராட்டத் தீ நாடு முழுவதும் பரவ வேண்டும். அந்த அப்பாவி சகோதரிக்கு நாம் காட்டும் ஆதரவுதான் எதிர் காலத்தில் மேலும் பல நிராதரவான திவ்யாக்கள் உருவாகாமல் தடுக்கும். இளம் உள்ளங்களின் இரத்தம் குடிக்கும் சாதி வெறிக் காட்டேரிகளை தமிழகத்தின் மண்ணிலிருந்தே துடைத்தொழிக்க வழி வகுக்கும். அந்த திசையில் தொடர்ந்து போராடுவோம்!

கவுரவக் கொலைகள், கட்டைப்பஞ்சாயத்து வகையறாக்களை தமிழக மண்ணிலிருந்தும் இந்திய மண்ணிலிருந்தும் விரட்டியடிப்போம் வாரீர் என அறைகூவியழைக்கிறோம். ஜனநாயக உள்ளங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஓரணி திரள வேண்டிய தருணமிது.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு, திருச்சிக் கிளை

3. கோவை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – பேரணி, ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புகள் 05.07.2013-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவை நீதி  மன்ற வளாகத்திலிருந்து தோழர் விளைவை ராமசாமி (பு.ஜ.தொ.மு செயலாளர்) தலைமையில் தோழர் ராஜன் ( பு.ஜ.தொ.மு தலைவர்), தோழர்  மணிவண்ணன் (ம.க.இ.க  செயலாளர்) தோழர்கள் உடன் 70 பேர் அணிதிரண்டு

  • ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, முதலான வன்னிய சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலை குற்றத்தின்கீழ் கைது செய் !
  • வன்னிய சாதி சங்கத்தை தடை செய் !

என்று  முழக்கம்  இட்டபடி கோவை செஞ்சிலுவை  சங்கத்தை நோக்கி  பேரணியாக   சென்றனர் .

சாதி  சங்கங்கள் மட்டுமே போராடக்கூடிய நிலையில் வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது கோவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SRI,CRI,CPC, NTC தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை சீருடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல் துறை அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்தார்கள். அங்கு சாதி வெறியர்களை குறித்து ஒரு அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது.

செய்தி : கோபிநாத், கோவை.

4. உசிலம்பட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே !
பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!

05.07.2013 மாலை 5.45 மணிக்கு இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே ! பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!! எனும் மைய முழக்கத்தின்கீழ் விவசாயிகள் விடுதலை முன்னணியின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து வி.வி.மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் இடத்தின் அருகே ஆங்காங்கே நின்று சரியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் நேரத்தில் திடீரென கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் விண்ணதிர துவங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டதின் கூட்டத்தில் ஒருபுறம் காவல்துறை தடையை எதிர்கொண்டு தோழர் குருசாமி உசிலை வி.வி.மு செயலர் ஆற்றிய போர்க்குணமான உரையும் மறுபுறம் தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமையில் தோழர்களின் விண்ணதிரும் முழக்கமும் பார்வையாளர்களை உணர்ச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் மாற்றியது. பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாவதைக் கண்டு காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கியது. வி.வி.மு தோழர்கள் தங்களுக்குள் கைகள் கோர்த்துக்கொண்டு காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுத்த காட்சி உசிலைப்பகுதிக்கு புதிதாகவும் வி.வி.மு வின் போர்க்குணத்தை பறைசாற்றுவது போலவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

காவல்துறையின் தள்ளுமுள்ளுகளை சமாளித்தும் காவல்துறையின் அராஜகக நடவடிக்கையையும் அம்பலப்படுத்தியும் சுமார் 20 நிமிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறுதியாக வி.வி.மு சார்பாக 11 பேர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக 7 பேர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட முழக்கங்கள் முழங்கப்பட்டன

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதி வெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

தகவல்
பு.ஜ.செய்தியாளர்கள், உசிலம்பட்டி

5. கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

ருமபுரி இளவரசனின் மரணம் – கருவறுத்த பா.ம.க சாதி வெறிக்கு முடிவு கட்டுவோம்

சாதி மாற்றி காதல் செய்து மணம் புரிந்த தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, அதற்கு பா.ம.க சாதி வெறியர்களே காரணம் என்றும், பா.ம.க, வன்னியர் சங்கத்தை தடைசெய்யக் கோரியும், கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனுமதி பெறவில்லை. உளவுப் பிரிவும், பத்திரிகைகளும் வந்து படம் எடுத்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகவும் இருந்ததால் கிட்டத்தட்ட 1.45 மணிநேரம் வரை சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுக்கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகளின் பிரமுகர்களும் நமது நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தலித் இயக்கங்களும் இந்த செய்தியை குறித்து குழம்பிப் போன நிலையில் புரட்சிகர அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளவரசன் எப்படி சாகடிக்கப்பட்டார். அவர் சாவின் மர்மம் என்ன? இந்த பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்க சாதி வெறிக்கு நக்சல்பாரி வழியில் வர்க்க ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், சாதி மாறி காதலித்தால் நாய் நரியும் பிறந்திடுமா? சுற்றும் பூமி நின்றிடுமா? என்று கேள்வி எழுப்பியும், மானங்கெட்ட ராமதாசே, பா.ம.க சாதி வெறியர்களே சாதி பெருமை பேசும் நீங்கள் உங்கள் சாதிப்பெண்ணை வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ளத்தயாரா? என்ற கேள்விகளுடன் தோழர்களின் கண்டன உரை கணீர் என இருந்தது. பொது மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.

வன்னியர் சாதி வெறியர்களின் முகத்தில் காரி உமிழும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடனடியாக திட்டமிட்டு தமிழக அளவில் நாம் மட்டுமே செய்துள்ளோம். கல்லூரி மாணவர்கள் ஈழத்துக்காக போராடியது போல சாதி வெறிக்கெதிராக போராட வேண்டும் என்று கூறினார். உளவுத்துறை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார், மற்றபடி காவல் துறையினர் இந்த சரியான விஷயத்திற்கு எங்களது ஆதரவு என்கிற வகையில் அனுமதி வாங்காத நிலையிலும் கிட்ட திட்ட 1.45 மணி நேரம் வரை நடத்த அனுமதித்தனர். காவல் துறை வரவேயில்லை.

தலைமை : தோழர் கருணாமூர்த்தி, செயலாளர், பு.மா.இ.மு, கடலூர்.
கண்டன உரை :
தோழர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம், கடலூர்.
தோழர் கதிர்வேல், பு.மா.இ.மு., விருதை.
தோழர் நந்தா, இணைச் செயலாளர், கடலூர்

தகவல்
புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

  1. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தாலும் எமக்கு வந்த 5 ஊர் செய்தி மட்டும் இப்பதிவில் இடம்பெற்றிருக்கின்றன. இனி வரும் ஊர்கள் அடுத்த முறை போடப்படும் பதிவில் இடம்பெறும்.

  2. அடுத்து ஒரு கலவரத்தி உருவாக்கி அதில் கட்டுரை எழுதி லைக் வாங்காமல் நிருதமாடிங்க போல ஒரு ஜாதிய எதிர்த்து இன்னு பண்ணின இன்னும் ஜாதி கலவரம் அதிகம்தான் உருவாக்கும் பிரிந்து கிடைக்கும் ஜாதிய ஓன்று சேர்க்காம விடமட்டிங்கபோல புரட்சியாளர்கள்

  3. ஆதரவு தருகிறோம் உதவி செய்கிறோம் என்று சொல்லி கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மன நிலையை மற்ற வகுப்பு மக்களிடையே ஏற்படுத்துவதுபோல் உள்ளது உங்களது பதிவுகள். எதிர்மறையான விளைவுகள் பற்றி சிந்தித்து எழுதுங்கள். நானும் ஒரு தாழ்த்தப்பட்டவன்தன் . இணைய வழியில் படிப்போரின் மன நிலை குறித்து சிந்தித்து எழுதவும்.

    • கவலைப்படாதீர்கள் நண்பரே, பாமக சாதி வெறியர்களை முறியடிக்கும் போராட்டம் ஏதோ தலித் மக்களால் மட்டும் நடத்தப்படும் ஒன்று அல்ல. அப்படி முடியுவும் முடியாது. இந்தபோராட்டத்தில் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதில் வன்னிய சாதி உழைக்கும் மக்களும் உண்டு. இங்கே நாம் பாமக சாதி வெறியர்களை மட்டும்தான் தனிமைப்படுத்தி முறியடிக்கிறோம்.

  4. நீங்கள் எழுதுகின்ற பா.ம.க பற்றிய அனைத்து கட்டுரைகளும் வன்னிய மக்களை தமிழ்நாட்டில் தனித்து காட்டும் பிரிவினைவாத கட்டுரைகளாகவே தோன்றுகிறது. தொடர்ச்சியாக நீங்கள் தலித்களை ஆதரித்தும் வன்னியர்களை மிக கொடூரமாகவும் சித்தரித்து உள்ளது திட்டமிட்டு செய்யும் ஒரு செயலன்றி வேறேதும் அன்று. தவறை சுட்டிக்காட்டுவது தவறல்ல. ஆனால் பா.ம.க அல்லது வன்னியர்கள் செய்யும் நன்மைகளை கூட அதை தீமைகளாக்குவதால் உங்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. நீங்கள் கூறுகின்ற கற்பனைகளையெல்லாம் உண்மை என்று நம்பும் அப்பாவிகளின் மனதில் தீமைகளை விதைக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்….

    • //நீங்கள் எழுதுகின்ற பா.ம.க பற்றிய அனைத்து கட்டுரைகளும் வன்னிய மக்களை தமிழ்நாட்டில் தனித்து காட்டும் பிரிவினைவாத கட்டுரைகளாகவே தோன்றுகிறது. /// ஒரு பொழுதும் இல்லை வன்னிய மக்கள் வேறு வன்னிய சாதி வெறியர்கள் மக்கள் வேறு வெறியர்கள் வேறு இது எல்லா சாதி,மத, வெறியர்களுக்கும் பொருந்தும்… வினவில் வெளியாகிய இந்து வெறி, இஸ்லாமிய வெறி இன்ன பிற சாதி வெறி கட்டுரைகள் அனைத்தையும் கொஞ்சம் நிதானமாக வாசித்தால் உங்களுக்கே உண்மை புரியும்

  5. பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்…

    மகாபலிபுரம் பாமக கூட்டத்தில் ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர் சர்ச்சைக்குரிய பேச்சு…

    LINK;

    http://youtu.be/kbdhHQCISIw http://youtu.be/kbdhHQCISIw?t=12s

    ( Kaduvetti Guru’s Controversial speech at Mahabalipuram PMK meeting)

  6. அட லோசு வினவே எலவரசனின் மரனம் உனக்கு அரசியலா? தமிழகமே சாதி உனர்வில் உல்லபொது ராமதாசை வசைபாடி யாது பயன்.உங்கலால்தன் சாதி வீரியம் பெருகிரது இதை உனர்ந்தல்தன் முதல் படியில் கால் வைக்கமுடியும்.

    • இளவரசன் கொலை எங்களுக்கு அரசியல் அல்ல….
      உங்கள் அரசியலால் இனியும் இளவரசர்கள் படுகொலையாகமல் இருக்கவே எங்கள் அரசியல்

  7. இந்தப் பின்நவீனத்துவ வியாதிகள் குறித்து இந்தச் சூழலில் ஒரு பதிவு எழுதுவது, மக்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவும், ஒரு கருத்தினை உருவாக்கிக் கொள்ளவும் உதவும்.

    https://www.vinavu.com/2013/05/08/post-modernists-endorsed-ramadoss/

  8. The loss can never be compensated by any means. Loss of life cannot be revoked. The problem is not only for the daliths but also for the entire society who are opressed socially and economically. The differences of classes is mainly due to the economical difference. But people don”t realise because of the caste division. People who come under the same class are not given respect if they are not economically sound. They are not treated equally. Instead they are utilised as labourers and targeted for caste based mischieves. They also never leave the caste identity because it gives them false superiority. There is only one alternative that is people of all castes ( socially and economically suppressed ) should unite. Then only a new society will rise. People should realise that all man made things against the society is for the convenience of some small sector of people. It is not for the welfare 0f the whole society regardless of caste. My deep condolence to ilavarsan”s family.

  9. நானும் வன்னியர் தான் இதுவரை நான் பா.ம.க’விலொ வன்னியர் சங்கத்திலொ உரிப்பனர் கூட இல்லை…ஆனால் இது போன்ற வன்னியர் ஒழிப்பு பதிவுகளை பார்க்கும் பொது,….எனக்கும் பா.ம.க பக்கம் சாய தொனுது….உங்கள் பதிவுகளில் சாதி ஒழிப்பை விட வன்னியர் ஒழிப்பே மேலோங்கி நிர்க்கிரது…இது கன்டிப்பாக நடுனிலை அல்ல…

    • பிரேம், திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து, இளவரசனது மரணத்திற்கு காரணமான பாமக சாதிவெறியர்களை கண்டிப்பதற்கு மனம் வரவில்லை என்றால் அதை கண்டிப்பவரை ஆதரிக்க முடியாது என்றால், அப்படி கண்டிப்பதை பார்த்து பாமகவிடம் சேரத் தோன்றுமென்றால், மன்னிக்கவும், உங்களிடமும் உங்களது ஆழ்மனதிலும் வன்னிய சாதி உணர்வு தலித் மக்களை ஒடுக்கவேண்டும் என்ற வெறியாக மறைந்துள்ளது. அதை நீங்கள் வெட்டி எறிய வேண்டும், அதற்கு தொடரந்து போராடுவோம். இளவரசன் மரணத்தில் நடுநிலை என்று எதுவுமில்லை. அப்படி இருப்பதாக கற்பித்து கொள்வது ஆதிக்க சாதி உணர்வின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமல்ல.

      • // இளவரசன் மரணத்தில் நடுநிலை என்று எதுவுமில்லை // இளவரசன் மரணத்தில் மட்டுமல்ல எந்த விடயத்திலும் நடுநிலை என்ற ஒன்றே கிடையாது . ஆனால் இதே உணர்வு எந்த சாதிக்காரன் பாதிக்கப்பட்டாலும் வரவேண்டும் , இல்லாவிட்டால் இது ஒரு பக்க சார்பான நிலையாகவே கருத வேண்டி வரும்.

    • Prem: This is what Vinavu wants and that is their hidden agenda…Make two communities fight against each other…Please resist your temptation to join any caste association…!!

  10. பா,மா க.கொள்ளை கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவெண்டும்!

  11. வினவு, எல்லாருடய ஆழ் மனதிலும் சாதி இருக்கும், இருக்கு இதை யாரும் மறுக்க முடியாது…
    உங்களடைய இது போண்ற பதிவு தான் அதை வெளி கொன்டுவந்து, பலருக்கு ஜாதி வெரியாக மாற்றுகிரது..
    தமிழ்நாட்டில் பா.ம.க என்ற கட்சியை ஒழித்து விட்டால் சாதி ஒழிந்து விடுமா…எல்லாரும் கலப்பு திருமனம் செய்து கொள்வார்காளா, பா.ம.க கட்சி தொடங்குவதர்க்கு முன் தமிழ்நாட்டில் சாதியெ இல்லயா ?

    நான் இதுவரை எங்கும் சாதிக்காக வாதிட்டதில்லை இது தான் முதல் முறை இதுக்கு முழு பொருப்பு வினவு தான்

  12. வினவு, உங்கள் நடுனிலைநன்றாக புரிகிரது விடை பெருகிரேன் நன்றி வனக்கம்

    • வினவின் நடுநிலை புரிவது இருக்கட்டும் , நீங்கள் சாதி வெறிக்கு எதிரானவரா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் . நீங்கள் செய்யும் தவறுக்கு வினவு எப்படி பொறுப்பாகும் , உங்களுக்கு சாதி வெறி வந்தால் அது உங்கள் பிழையே 🙂

    • நீங்க பறையன் ..த்தையே பாருங்க இந்தியாவுல இருக்குற எல்லாத்தையும் எவனோ வெட்டிக்கிட்டு போய்ட்டே இருக்கான்.

  13. வன்னியரான நான் இதுநாள் வரை தே.மு.தி.க வில் செயல்பட்டு வந்தேன். இப்போது வன்னிய சாதி வெறி என எழுதி என்னை பொன்றவர்களை பா.ம.க வில் இணைக்க எண்ணத்தை விதைத்துவிட்டீர்.
    வி.சி,கொங்கு.ம.க,பு.த பொன்ற கட்சிகளும் தத்தம் சாதிக்காக உள்ள கட்சிகளே. அதே பொல பா.ம.க வன்னியர்களுக்கு ஆதரவு.
    ஆனால் நீங்கள் பா.ம.க வை மட்டும் அழிக்க,ஒழிக்க பக்கம் பக்கமாக எழுதுவது மனவேதனையாக உள்ளது.

  14. திரு கார்த்திகேயன்,ஏன் சார் பறையனை வெட்டுறீங்க?வெட்டி என்ன ஆகப்போகுது ?அதுவா சார் வீரம்? நம்ம இந்திய / தமிழக அரசியல் அரங்கில் வெட்டப்பட வேண்டியவைகள் நிறைய இருக்கு. அதை வெட்டத் துணிந்தாலே போதும் மக்கள் உங்களை காலகாலத்துக்கும் நினைப்பாங்கப்பா.எங்க வலது காலை எடுத்து வைங்க என் ராசா.

  15. மரக்காணம் கலவரம் பற்றி இவர்கள் கூறி இருந்தால் நான் இப்படி பேசியிருக்க மாட்டேன் இளையோன்

    • முற்றிலும் உண்மை. மரக்காணத்தில் உயிரிழந்தவர்களையும் மனிதர்களாக கருதி அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வினவு {ஊடகங்கள்} எழுதியிருந்தால்.வன்னயராய் இருந்தும் பா.ம.க வில் ஈடுபாடு இல்லாமல் இருந்த என்னை போன்ற பல வன்னியர் பா.ம.க மீது பற்று இல்லாமல் இருந்திருப்பர்.

      ஆனால் இப்போது பா.ம.க வை விட்டால் வன்னயனுக்கு வேறு ஒரு அரசியல் கட்சி இல்லை என்ற மனநிலைக்கு மாற்றப்பட்டுள்ளேன்.

    • திரு கார்த்திகேயன்,மரக்காணம் கலவரம் பற்றி ம.உ.பா.மைய உண்மை அறியும் குழுவின் அறிக்கை வினவில் உள்ளது.படித்துப் பார்க்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க