தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
என்கிற முழக்கத்தின் அடிப்படையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மணலி பகுதிகளில் ஆலை வாயில், இரயில் தடம் , பகுதி, இரயில், பேருந்து முலமாக பிரச்சாரம் கொண்டு சென்றோம். மேலும் தொழிலாளி வீடுகளுக்கு சென்று “ கருத்தரங்க அழைப்பிதழ் “ கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைத்தோம்.
13-07-2013 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் பகுதியில் நடக்கும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை பற்றி பேசினார்.
சிறப்புரையில் இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IFTU)ன் செயலாளர் தோழர் பிரதீப் அவர்கள் தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைக்காக போராடுவதுடன் சமுகத்தில் நிலவும் பிரச்சனைக்களுக்காகவும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில செயலாளர் தோழர் சு.ப.தங்கராசு அவர்கள் தொழிலாளி வர்க்கம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்து வந்த வரலாறு தொடங்கி, தற்போது நிலவும் மறுகாலனியாக்க சுழ்நிலையில் தொழிலாளர்கள் ஆலைக்குள்ளும், வெளியே சமுகத்தில் அனுபவித்து வரும் கொடுமைகளையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் விளக்கி பேசினார்.
பின்னர் திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இறுதியாக மணலி பகுதி செயலாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் 220 பேர் கலந்துக் கொண்டனர். இதில் இணைப்பு சங்க தொழிலாளர்கள், பிற ஆலைத் தொழிலாளர்கள், பொது மக்கள் என கலந்துக் கொண்டனர். இறுதியாக கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!
- தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
- புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணபித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்!
- முதலாளிகள் கையாளுகின்ற “ ஒர்க்கஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!
- எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்!
- பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
- தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு!
- மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.
விவாத்தில் கலந்துக் கொள்ளவே