முகப்புஉலகம்அமெரிக்காஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !

ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !

-

ல கோடிகளை லாபமாக சம்பாதிக்கும் அமெரிக்க துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ், தன் ஊழியர்களுக்கு கொடுக்கும் குறைந்த ஊதியத்தை உயர்த்த வக்கில்லாமல், அவர்களை இன்னும் அவமானப்படுத்தவே செய்கிறது.

மெக்டொனால்ட்ஸ்உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள மெக்டொனால்ட்ஸ் கடந்த வருடம் ஈட்டிய லாபம் மாத்திரம் சுமார் $2.6 பில்லியன் ( ரூ 13 ஆயிரம் கோடி ). ஆனால் அதன் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 8.25 டாலர்கள்.

நியுயார்க் மாதிரியான நகரங்களில் வெறும் 1 மணி நேரத்திற்கு எட்டு டாலர்களை வாங்கிகொண்டு ஊழியர்கள் பட்டினி கிடந்து, அவதிப்பட்டு வாழ்வதை பற்றியும், இதனால் கோபமடைந்த ஊழியர்கள் தங்களுக்குள் சங்கமாக திரண்டு இந்த துரித உணவு நிறுவனங்களுக்கு எதிராக போராடுவதை பற்றி நாம் ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம்.

ஊழியர்களின் போராட்டம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை கலக்கம் அடைய செய்திருக்க வேண்டும். அதனால், விசா நிறுவனத்துடன் இணைந்து குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் பயன்பெறுவதற்காக அவர்களுக்கு மாதம் நிதி திட்டமிடுதலுக்கு உதவி புரிய முன் வந்துள்ளது.

கேட்டவுடன், “ஆகா எவ்வளவு நல்ல நிறுவனம்” என்று உச்சி முகரத் தோன்றும். நிற்க. மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் நிதி திட்டம் போட ஊழியர்களுக்கு தரும் ஆலோசனைகள் அந்த ஊழியர்களை அவமானப்படுத்துவது போலத்தான் உள்ளது.

மெக் டொனல்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசனைகளில் சில,

ஒன்பது மணி நேரம் மெக் டொனால்ட்சில் மணிக்கு $8.25-காக வேலை செய்பவர், தன் நிதிச் சுமையை குறைக்க இன்னொரு வேலை தேடிக்கொள்ள வேண்டும், அதாவது மணிக்கு 8 டாலர் கொடுக்கும் இன்னொரு துரித உணவு கடையில் சேர்ந்து விட வேண்டும். இப்பொழுது பாருங்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்து சம்பாதித்தால் உங்கள் நிதிச் சுமை தானே குறைந்து விடும். இது தான் ஐடியா மணியான மெக் டொனால்ட்ஸின் ஐடியா நம்பர் 1.

சரி வரும் நிதியை எப்படி திட்டமிட்டு செலவழிப்பது? அது தான் ஐடியா நம்பர் 2, ஒரு எடுத்துக் காட்டு மாத நிதி திட்டம்,

sample-monthly-budget

மேலே உள்ள நிதித் திட்டத்தை எளிமையாக புரிந்துக்கொள்ளலாம், மணிக்கு 8.25 டாலர் வீதம் நீங்கள் முதல் வேலையில் பெரும் வருமானம் 1105 டாலர். இரண்டாவது வேலை கொடுக்கும் வருமானம், 955 டாலர். இதர வருமானங்கள் இல்லை. மொத்த வருமானம் 2060 டாலர்.

அதில் சேமிப்பு 100 டாலர், வீடு வாடகை/கடன் 600 டாலர், போக்குவரத்து 150 டாலர், கார்/ வீட்டு இன்சுரன்ஸ் தொகை 100 டாலர், மருத்துவ செலவுகளுக்கான் இன்சுரன்ஸ் தொகை 20 டாலர், தொலை பேசி/செல் தொகை 100 டாலர், மின்சாரக் கட்டணம் 90 டாலர், இதர செலவுகள் 100 டாலர். போனால் கையில் 800 டாலர் மிஞ்சும். இதில் தினப்படி செலவுகளை கவனித்துக்கொள்ளலாம். இதில் குளிர்காலத்தில் வீட்டை சூடுபடுத்துவதற்கான செலவு 0 டாலர் என்றுள்ளது. அது ஏன் 0 என்று யாருக்கும் புரியவில்லை, அதனால் நமக்கும் புரியவில்லை.

பிரான்ஸில் மக்கள் ஒரு காலத்தில் ரொட்டி கூட இல்லாமல் பஞ்சத்தில் இருந்த போது அதை சொல்ல அரண்மனைக்கு சென்றார்கள்.மக்களை பார்த்து ராணி என்னவென்று கேட்க, மக்களோ “ அம்மா, சாப்பிட ரொட்டி இல்லை” என்றார்களாம். ராணி உடனடியாக “ரொட்டி இல்லை என்றால் என்ன கேக் சாப்பிடுங்கள்” என்று நையாண்டி செய்தாராம். (பின்னர் கோபமடைந்த மக்களிடமிருந்து பிரெஞ்சு புரட்சி வெடித்தது வரலாறு)..

கொஞ்சம் சம்பளத்தை உயர்த்துங்கள் என்று ஊழியர்கள் கோரினால், தன் லாபத்தில் இருந்து அதை உயர்த்தாமல், அவர்களை நையாண்டி செய்வது போல் ஒரு பட்ஜெட்டை அவர்களுக்கு சொன்னால் எப்படி இருக்கும்?

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் இரண்டு வேலைகள் செய்துவிட்டு, பயணம் செய்து வீட்டுக்கு போனபின் இருக்கும் 5 மணி நேர உறக்கம், பின் இரட்டை வேலை. அவர்கள் என்ன மனிதர்களா அல்லது மாடுகளா? (மன்னிக்கவும் மாடு கூட 18 மணி நேரம் உழைப்பதில்லை).

இதைச் சொல்லவே வெட்கப்பட வேண்டும், ஆனால் மெக் டொனால்ட்ஸ் நிறுவனமோ இதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பித்து ஊழியர்களிடமும், மக்களிடமும் பிரபலப்படுத்தி வருகிறது.

நியுயார்க் நகரில் சராசரி மாத வாடகை 300 டாலர்களை தொட்டுவிட்டது.வெறும் 20 டாலர் கட்டி ஒருவர் மருத்துவ இன்சுரன்ஸ் வைத்திருந்தால், அமெரிக்காவின் பகாசுர தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலுக்கு கூட பார்க்க அந்த பணம் பத்தாது. இந்த நிலையில் கொஞ்சம் பெரிய நோய் வந்தால் ஊழியர் சாக வேண்டியது தான். தானாக மருத்துவக் காப்பீடு வாங்குவதற்கு மாதம் $215 கொட்டிக் கொடுத்தால்தான் சாத்தியமாகும்.

இதில் ஒரு நல்ல விடயம் மெக்டொனால்ட்ஸின் நிதி திட்டம் ஒரு உண்மையை அம்பலப்படுத்துகிறது. துரித உணவகங்களில் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், இரட்டிப்பானால் கூட ஊழியர்களின் நிதிச்சுமையை அது குறைக்க உதவாது என்பது தான்.

இந்த பட்ஜெட்டில் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமல்ல ஸ்பானிஷ் மொழியிலும் கிடைக்கும் என்பது தான்.

இந்த மாதிரியான ஒரு பட்ஜெட்டை சொல்லி தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அவமானப்படுத்தும் மெக் டொனால்ட்ஸை எப்படி வழிக்கு கொண்டு வருவது? மெக்டொனால்ட்ஸின் முதலாளிகளும் இதே மாதிரியான பட்ஜெட்டை பின்பற்றினால் ஊழியர்களுக்கு இலாபத்தை பங்கிட்டு கொடுக்கலாம். எனவே இந்த பட்ஜெட்டை பூமாரங் மாதிரி முதலாளிகளுக்கு பயன்படுத்துமாறு மெக்டொனால்ட்ஸ் ஊழியர்கள் போராட வேண்டும்.

மேலும் படிக்க

 1. சில அதியமான்கள் மெக்டொனால்ட்சுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் பார்ப்போம்

 2. முதலில் இது குடும்ப வருமானம் இல்லை.. தனி நபர் வருமானம்…. நான்கு அடல்ட்ஸ் உள்ள ஒரு குடும்பத்தில் நால்வருமே இவ்வாறு சம்பாதிக்கின்றனர்… இது குடும்பத்தில் உள்ள அனைவரும் லேபர்களாக உள்ள பட்சத்தில்…

  மெக்டொனால்ட் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஏறக்குறைய இதுதான் கூலி. இந்த கூலிக்கு உழைக்க பல மெக்ஸிக்கன், கனடிய, ஆப்ரிக்க, ஆசிய தொழிளாலர்கள் போட்டி போடுகின்றனர்…

  வால்மார்டின் விற்பனையாளர் கூலி – சரவணா ஸ்டோர்ஸின் கூலி
  மெக்டொனால்ட் சர்வர் கூலி – சரவணபவன் சர்வர் கூலி

  எல்லா நாடுகளிலும் கூலி தொழிலாளர்களின் நிலை ஒன்றுதான். அட்லீஸ்ட் அமெரிக்கா மினிமம் வேஜ் என்று ஒரு சட்டம் போட்டு அதை அமல்படுத்துகிறது…

  ஆசிய நாடுகளில் சிறுவர்களை சோறு மட்டும் போட்டு வேலை வாங்கி கொத்தடிமையாக வைத்திருப்பது போன்ற கொடுமைகளில் இருந்து பார்க்கும்போது அமெரிக்க லேபர்களின் நிலை ஆசியர்களுக்கு சொகுசாக தான் தோன்றுகிறது !

 3. மணிக்கு $8.25 என்றால் ஒரு நாளைய உழைப்பான 9 மணி நேரம் என்ற கணக்கின் படி ஒரு மாதத்திற்கு (30 தினங்கள்) $ 2227.5 அல்லவா வருகிறது.
  ஆகவே இது பகுதி நேர வேலையை குறிக்கிறது.
  $8.25 * 4.5 hours * 30 days = $1113 வருகிறது.

 4. McDonald’s budget influences our Indian bureaucrats to fix the poverty line. For McDonald ‘labours’ 27 dollars are enough to run the family and for India 27 rupees are enough to run the family. May be Japan announce 27 yens are enough run the family (May Buddha saves Japanese). So the magic number 27 is the number of the year. BTW 2+7=9!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க