privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அறம் தின்ற ஜெயமோகன் !

-

“கலிகாலம் முத்திடுச்சி. பசங்க எல்லாம் பெரியவங்க சொன்னா கேட்கறதில்ல. அது அது ஜீன்ஸ் பேன்டும், டி-ஷர்ட்டும் போட்டுக்குதுங்க, ராத்திரி எல்லாம் பார்ட்டின்னு கும்மாளம் அடிக்குதுங்க, வெளிநாட்டு பண்டமா தின்னாத்தான் செரிக்கும்னு அலையுதுங்க. பெரியவங்களுக்கு மரியாதையே இல்ல. எப்ப பார்த்தாலும் பேஸ்புக்லையே விழுந்து கிடக்கிறாங்க. சீரியசா வாசிப்பே இல்லாம ஆகிட்டிருக்கு. தமிழ் இலக்கியம் தொடருமா என்ற அச்சமாயிருக்கிறது.”

அறம் - ஜெயமோகன்இப்படி எல்லாம் உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் ஒரு விழுமியம் இருக்கிறது. அதுதான் அறம்.

தொலைக்காட்சியின் விளம்பர விளக்கு வெளிச்சங்களுக்கு அப்பால், பத்திரிகைச் செய்திகளின் பரபரப்பை தொட்டு விடாத மூலைகளில், சிறு கிராமங்களின் கால் படாத பசுமை வெளிகளில், நகர காங்கிரீட் காடுகளின் நிழல் தொடாத விழுதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில அபூர்வ மனிதர்கள் பலர் அறத்தின் இலக்கணமாக வாழ்கிறார்கள். அதுதான் இந்த உலகை பெரிய பிரச்சினைகள் இன்றி சுமூகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. உன்னத இலக்கியங்களை படைக்கவும் வைக்கிறது. சலிப்புறும் மனித குலத்தை தட்டிக் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமாச்சாரத்தை சமஸ்கிருதத்தில் தருமம் என்று சொல்கிறார்கள். சமஸ்கிருத அறிவில் கூட ஷத்திரிய தருமம், பிராமண தருமம், வைஸ்ய தருமம், சூத்திர தருமம் என்று குலத்துக்கு ஏற்ப தருமம் வேறுபடுகிறது. ஆனால், தமிழில் பயன்படுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு ஒரு பொருள்தான் உண்டு என்பதோடு அதன் பொருள் விளக்கமும் மிக மிக ஆழமானது. காலத்தைத் தாண்டி, இடங்களைத் தாண்டி மனித உள்ளங்களில் மின்சாரமில்லாமல் ஒளிரும் உள்ளொளி அது. அந்த உள்ளொளிதான் பில்கேட்சை தூண்டி விட்டு மைக்ரோ சாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வைத்திருக்கிறது. ஜெயமோகனைப் போன்றோரை எழுத வைத்திருக்கிறது.

மனித குலத்தின் இலட்சியமனைத்தையும் அந்த இலட்சியவாதத்திற்காக செய்யப்படும் தியாகத்தையும், அத்தகைய தியாகத்தை பொருள் கூறி புகழ் பாடுவதும் என அறத்தின் விளக்கம் விரிந்து சென்று கொண்டே இருக்கும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், அறம் என்ற பெயர் சூட்டபட்ட வரிசையில் சில சிறுகதைகள் எழுதினார். அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளி வந்தன. அவரது வாசகரிடையே அக்கதைகள் பெருத்த வரவேற்பை பெறுவதற்கு அறம் குறித்த மானுடத்தின் தொன்ம தொடர்ச்சியே காரணம் என்றாலும் அந்தத் தொடர்ச்சியை கதறக் கதற பிடித்து வந்து அடையாளம் காட்டிய ஜெயமோகனது மேதைமை சாதாரணமான ஒன்றல்ல.

அப்போது நாங்களும் கூட அறம் சிறுகதைகளை படித்து மதிப்புரை ஒன்றை எழுதுவது என்று முடிவு செய்து விவாத அமர்வுகளை நடத்தினோம். இரண்டு அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்த அந்த விவாதங்களை தொகுத்து கட்டுரையாக எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அது தொடர்பான குறிப்புகள் சில ஆயிரம் சொற்களுக்கு நீண்டிருந்தன. என்ன இருந்தாலும் அறம் அல்லவா? ஒரு குறுகிய நேரத்தில், குறு வடிவில் அறம் குறித்து ‘விவாதி’க்க முடியாது என்பது எங்களது அனுபவம். பல்வேறு வேலைகளுக்கு நடுவில் அறம் சிறுகதைகள் பற்றி எழுத வேண்டிய கனமான வேலைக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி அந்த குறிப்புகள் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் எங்களது நேரப்பற்றாக்குறையை கண்டு இறங்கிய விஷ்ணுபுரத்து தேவதை ஒன்று, “தம்பி வினவு இனி அறம் கதைகள் குறித்து எழுதும் தேவையிருக்காது, அறம் கொல்லப்பட்டு விட்டது, படித்தாயா அந்த செய்தியை” என்று எழுப்பியது.

எழுத்தாளர் ஜெயமோகனது அறம் சிறுகதை தொகுப்புக்கு பாரி வேந்தர் பச்சமுத்துவின் எஸ்ஆர்எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப்பேராய விருது அளிக்கப்பட்ட தகவல்தான் மேற்கண்ட தேவதையின் செய்தி. இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது என்று ஜெயமோகன் தளத்தில் வெளியான சந்தோஷக் குறிப்பு தெரிவிக்கிறது. அறம் குறித்து அவரது தளத்தில் வெளியான பாராட்டுக்களில் இதுதான் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சம் என்பது முக்கியமானது.

இப்படி அறத்தை விருது கொடுத்து பாராட்டும் அந்த பெருந்தகை குறித்தும் நாம் பேச வேண்டுமல்லவா! எனினும் பாரிவேந்தர் பச்சமுத்துவின் அருமை, பெருமைகளை நாம் பெரிதாக விவரிக்க வேண்டியதில்லை. கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, மருத்துவமனை, போக்குவரத்து என்று பல்வேறு துறைகளிலும் தனது கறை படிந்த வியாபார கரங்களை பரப்பி நிற்கிறது எஸ்ஆர்எம் குழுமம். அதன் ‘பேரும் புகழும்‘ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவையே.

ஜெயமோகன், பச்சமுத்துஅந்தக் குழுமத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேராய விருது என்பது நடைமுறையில் இருப்பதும் சமகால தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை அங்கீகரிப்பது அதன் பணியாக இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லைதான். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் முனைவர் த. இரா. பச்சமுத்து தமிழ்ப்பேராயத்தின் புரவலராகவும், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ தலைவராகவும் உள்ளார் என்று தமிழ்ப் பேராயத்தைப் பற்றிய விக்கிபீடியா குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது அண்ணல் பச்சமுத்து அவர்கள் தமிழ்ப் பேராய நடவடிக்கைகளில் நேரடியாக ஆர்வம் காட்டுகிறார்.

தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வெகுமதியுடன் புதுமைப் பித்தன் பெயரில் படைப்பிலக்கிய விருது, பாரதியார் பெயரில் கவிதை விருது, அழ வள்ளியப்பா பெயரில் குழந்தை இலக்கிய விருது என்ற வரிசையின் உச்சமாக, இறுதியாக 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பச்சமுத்து பைந்தமிழ் விருதும் வழங்கப்படுகிறது. ஆக, ஆண்டுக்கு மொத்தம் ரூ 20.5 லட்சம் முதலீட்டில் இலக்கியப் பணி செய்து வருகிறார் வள்ளல் பச்சமுத்து.

எதற்கு எடிட்டிங்? விருது குறித்த செய்தியை  முழுமையாகவே தருகிறோம்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் “பாரிவேந்தர் பைந்தமிழ்’ விருதுக்கு தமிழறிஞர் தமிழண்ணல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் விழாவில், தமிழ் பேரறிஞரும், வாழ்நாள் சாதனையாளருமான தமிழண்ணலுக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கெüரவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழ்ப் பேராயம் தலைவருமான எம்.பொன்னவைக்கோ கூறினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுகள் பெறுவோர் பட்டியலை எம்.பொன்னவைக்கோ வெளியிட, பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பெற்றுக் கொண்டார்.

பின்னர் பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் கூறியது:

பாரிவேந்தர்
தமிழ்ப் பேராயம் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பட்டியலை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்துவிடம் வழங்குகிறார் தமிழ்ப் பேராயம் தலைவர் எம். பொன்னவைக்கோ. உடன் தமிழ்ப் பேராயம் செயலர் பி.எம். அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி. (படம் : நன்றி தினமணி)

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராயம் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் மற்றும் சாதனையாளர்களைத் தேர்வு செய்து மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசு விருதும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கௌரவித்து வருகிறோம். கடந்த ஆண்டு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தமிழறிஞர் இளங்குமரனாருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது “அறம்’ நூலாசிரியர் ஜெயமோகனுக்கும், பாரதியார் கவிதை விருது “பெருநயப்புரைத்தல்’ நூலாசிரியர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்துக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெ.கருணாகரன், கொ.மா.கோதண்டம், கமலா கந்தசாமி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.

ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது “அசடன்’ நூலாசிரியர் எம்.ஏ.சுசீலாவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது “நேனோ-அடுத்த புரட்சி’ நூலாசிரியர் மோகன் சுந்தரராஜனுக்கும், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது “இராஜராஜேச்சரம்’ நூலாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும், முத்துத் தாண்டவர் தமிழிசை விருது “பண்ணும் இலயமும்’ நூலாசிரியர் இ.அங்கயற்கண்ணிக்கும், வளர்தமிழ் விருது “திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்’ நூலாசிரியர் க.ஜவகருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது “அமெரிக்கக்காரி’ நூலாசிரியர் அ.முத்துலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது.

பரிதிமாற்கலைஞர் விருது கோவை ஞானிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பேசும்போது, சிறந்த தமிழ் அறிஞர்களையும், நூலாசிரியர்களையும் கெüரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. விருதுகளுக்கான நூலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர் என்றார்.

தமிழ்ப் பேராயம் செயலர் பி.அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஜெயமோகனது அறம் சிறுகதைகளில் வழிந்தோடும் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சங்களின் யோக்கியதை என்ன?

கர்நாடகாவில் இரும்புச் சுரங்க ஊழலில் கொள்ளை அடித்த கூட்டத்தைச் சேர்ந்தவர் தன் மகளை எஞ்சினியரிங் படிக்க வைக்க கொடுத்த கல்வி நன்கொடையும், ஆந்திராவில் விவசாயிகளை சுரண்டிய பண்ணையார் தனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க கொடுத்த கல்விக் கட்டணமும், இப்படியாக இந்தியாவின் பெரும் பணக்கார சிகாமணிகளின் நன்கொடை எனும் கொள்ளைப் பணத்தை வைத்து எஸ் ஆர் எம் எனும் கொள்ளைக் கம்பெனியை நடத்தப் பயன்படும் நிதிதான் அறம் சிறுகதை தொகுப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் பயன்படுகிறது என்பதை அறிந்து மெய் மறந்து நிற்கிறோம்.

அறம் கதைகளில் ஊடும் பாவுமாக மனதைத் தொடும் இலட்சியவாதம் எனும் அபூர்வ விழுமியத்தின் மதிப்பை பாரிவேந்தர் படித்து ருசித்து உணர்ந்த படியாலேயே விருது கொடுக்க முடிவாகியிருக்கிறது எனும் போது என்ன தோன்றுகிறது?

விஷ்ணுபுரத்து தேவதை “தம்பி வினவு, இனி நீ அறம் கதை குறித்து எழுதத் தேவையில்லை” என்று சொன்னதன் தாத்பரியம் இப்போது விளங்குகிறதா?

  1. உங்களுக்கு அந்த ஆள் என்ன பாவம்யா செய்தான்….

    ஒரு லட்சம்யா.. ஒரு லட்சம்… உனக்கு குடுத்தா வேணாம்னு சொல்லிருவியோ…..

  2. திரு. ஜெயமோகன் எழுதிய கதை ஒன்றில் சார்வாகன் ஒருவன் தர்மனிடம் யாசகம் பெறும்போது தங்க நாணயங்கள் இரத்த வாடை அடிக்கிறது என்று சொல்லி கீழே வீசுவான். மீண்டும் மீண்டும் வீசுவான். இரத்தவாடை இல்லாத நாணயமே உன் கஜானாவில் இல்லையா என்று ஏளனம் செய்வான். அவனை யாசகம் பெற வந்த மற்ற பிராமணர்கள் சேர்ந்து துவைத்து எடுத்துவிடுவார்கள். இந்த காட்சியை ஜெயமோகன் சாட்சியாக நின்று பார்த்துகொண்டிருப்பார்.
    இரத்தவாடை இல்லாத காசு/வேர்வை வாடை இல்லாத காசு என்று உலகில் ஒன்றும் இல்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும். கதைக்கு உதவும். வாழ்க்கைக்கு உதவாது என்பது அவருக்கு தெரியும். அவர் மிதிபட்டு சாகவேண்டும் என்று நீங்கள் உள்ளூர ஆசைப்படுவது அவருக்கும் தெரியும்.
    நிற்க. நாய் விற்ற காசு குலைக்காது. இதுதான் இன்றைய தர்மம். எல்லோருடைய ஸ்வதர்மமும் அதே.
    உண்டியல் குலுக்கியே இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தியா முழுவதும் சொத்து வைத்திருக்கும் சி.பி.எம். கட்சி பற்றி எல்லோருக்கும் தெரியும். அதனாலே தகவல் உரிமை சட்டம் தம் மீது பாயக்கூடாது என்று சொல்கிறார்கள். நீங்களும் உண்டியல் குலிக்கியோ/ நன்கொடை வாங்கியோ பத்திரிகை/கட்சி இயக்கம் நடத்துகிறீர்கள்.
    பொறாமை வேண்டாம். வேண்டுமானால் உங்களுக்கும் எதாவது விருது/பொற்கிழி கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.

    • பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர். பிழைப்புவாதிகள் தாங்கள் மட்டுமே இங்கே பிழைத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கவே இங்கே ஏராளமான வர்க்கபேதங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது. (நன்றி: ஜோதிஜி)

      • //பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர்//
        நீங்கள் என்ன செத்துப்போக வழிசொல்பவர்களா?
        //ஏராளமான வர்க்கபேதங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது//
        ரெண்டு வர்க்கம் தானே இருக்கிறது. ஏராளமா எங்க இருந்து வந்திச்சு?
        //(நன்றி: ஜோதிஜி)// உங்களுக்கு சொந்தமா கருத்து எதுவும் இல்லையா?

        மாக்கான் என்ற பெயர் இடைவெளியின்றி நன்றாக பொருந்தி உள்ளது.மன்னிக்கவேண்டும் நண்பரே.

        வினவு ரொம்ப உசாரா தனக்கு பிரச்சினையான பின்னூட்டங்களை கத்தரி போடுவது நேர்மையான செயல் அல்ல. வினவு ஒரு காலி பெருங்காய டப்பா என்று வினவே நிரூபித்துகொண்டிருக்கிறது.

        • //இரத்தவாடை இல்லாத காசு/வேர்வை வாடை இல்லாத காசு என்று உலகில் ஒன்றும் இல்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும். கதைக்கு உதவும். வாழ்க்கைக்கு உதவாது என்பது அவருக்கு தெரியும்.///

          பரலோக டப்பா பாண்டியாரே….அப்புறம் என்ன ___க்கு ஊர்க்கு உபதேசம் செய்து இலக்கிய வாந்தி, அற வாந்தி எடுக்க வேண்டும்???

          //உங்களுக்கு சொந்தமா கருத்து எதுவும் இல்லையா?//

          இருக்கு…பொருத்தமான தோன்றியதால் அவருடைய கருத்தை பயன்படுத்தினேன்.

            • உங்க சொந்த சரக்கு மட்டும் உங்களுடைய சொந்த சரக்கா ஐய்யா ?

        • ///நீங்கள் என்ன செத்துப்போக வழிசொல்பவர்களா?///

          தன்மானத்துடன் வாழ்வது வேறு ஜெயமோகனை போல அறங்கொன்று பிழைப்பதற்காக கையேந்துவது வேறு. உண்டியல் குலுக்குவது வேறு கருப்புப்பணத்தில் பொன்னாடை போர்த்திக்கொள்வது வேறு. புரியும் என்று நினைக்கிறேன்.

          ///ரெண்டு வர்க்கம் தானே இருக்கிறது. ஏராளமா எங்க இருந்து வந்திச்சு?///

          எந்த ஊர்ல ரெண்டு வர்க்கம் மட்டும் இருக்கு பரலோகம்.

          ///வினவு ஒரு காலி பெருங்காய டப்பா என்று வினவே நிரூபித்துகொண்டிருக்கிறது///

          வாசம் இல்லாத காலிப்பெருங்காய டப்பாவை எதுக்கு பாண்டி நொடிக்கொருதரம் மோந்து மோந்து பார்க்கிறீங்க. தூக்கி எறிய வேண்டியது தானே.

          • //பொறாமை வேண்டாம். வேண்டுமானால் உங்களுக்கும் எதாவது விருது/பொற்கிழி கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.// முதலில் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். 24 மணி நேரமும் குழம்பு காச்சுறத நிறுத்துங்கள்.

            • ஆஹா உலகமகா நகைச்சுவை எள்ளல். மந்தைகளை களைப்பதையே தனது உரிமையாகவும் இலட்சியமாகவும் கொண்ட ஆடுகளின் நகைச்சுவைக்கு நாங்கள் சிரிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். வெட்டப்படுகிற ஆடாக இருக்கும் நீ கசாப்புக்காரனை நம்பாதே என்று 24 மணி நேரமும் (உங்களை மட்டுமல்ல அனைவரையும் தான்) எச்சரித்து வரும் வினவு மீது வீன் எரிச்சலடையாமல் வினவிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உருப்படுகிற வழியைப் பாருங்கள். அதாவது குட்டி முதலாளியாக உலகை பார்க்காதீர்கள் என்கிறேன்.

    • ஜெமோவின் அறத்தை கேள்விக்குட்படுத்தினால் வினவு ஏதோ ஜெயமோகனுடன் விருதுக்காக போட்டிப்போட்டுக்கொண்டிருப்பதைப் போல வினவுக்கும் ஒரு விருதுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்கிறார் பரலோகபாண்டி. அற்பவாதிகள் மட்டுமே இவ்வாறு சிந்திக்க முடியும் என்பதை பரலோகபாண்டியன் அறிய வாய்ப்பில்லை. எனினும் அந்த புரோக்கர் வேலையை நீங்கள் வினவுக்காக செய்ய வேண்டியதில்லை, ஆனால் வேறு இடத்தில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. விருதுகளுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் ஒரு எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் கூட்டமே தமிழகத்தில் இருக்கிறது நீங்கள் அவர்களை நாடி அவர்களுக்கு எந்த விருது பிடிக்கும் என்பதையரிந்து அதை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நீங்கள் அம்மாதிரியான வேலைகளுக்கு மிகவும் தகுதியுடையவர் என்பதை என்னால் உங்களுடைய எழுத்தைக்கொண்டே கணிக்க முடிகிறது. மற்றபடி வினவுக்கு என்ன விருது கொடுக்க வேண்டும் என்பதை இந்திய உழைக்கும் மக்கள் தீர்மானிப்பார்கள்.

      கள்ளப்பணத்தை குவித்து வைத்திருக்கும் ஒரு முதலாளி அதிலிருந்து சில எலும்புத்துண்டுகளை ஜெமோ போன்ற அற்பவாத எழுத்தாளர்களுக்கு அள்ளி வீசும் போது (அள்ளிவீசா விட்டாலும் கூட) முதலாளிகளுக்கு அவர் எப்போதும் விசுவாசமானவராக இருப்பார். உங்களால் அத்தகைய அற்ப எழுத்தாளனாக வளர முடியாவிட்டாலும் நீங்களும் சிறந்த விசுவாசி என்றே நான் நம்புகிறேன்.

      • அட்ரா சக்கை.
        //வினவு ரொம்ப உசாரா தனக்கு பிரச்சினையான பின்னூட்டங்களை கத்தரி போடுவது நேர்மையான செயல் அல்ல. வினவு ஒரு காலி பெருங்காய டப்பா என்று வினவே நிரூபித்துகொண்டிருக்கிறது.// மொத்தமா வாசிங்க.

        நான் என்ன எழுதினேன் என்று உங்களுக்கு தெரியாது. வினவுக்கு மட்டுமே தெரியும். வினவிடம் கேட்கவேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்களே? ஒரு சில விஷயங்கள் சிக்கலானவை என்பதால் நானே நீக்க சொல்லிவிட்டேன். வினவின் சங்கடம் எனக்கு புரிகிறது. உழுபவனுக்கு நக்கல் காட்டும் வேலை செய்பவன் அல்ல நான்.
        தலையும் வாழும் தெரியாமல் நீங்கள் பேசுவது அறமல்ல. உங்களுக்கே நான் போட்ட பதில்கள் கத்தரி போடப்பட்டுள்ளது. ஒரு வேலை ஆட்டை திருடிவிடுவேன் என்று வினவுக்கு பயமோ என்னவோ?
        அது சரி ஒரு ஒன்னரை அணா பதிவுல கூட உங்க நேர்மை புல்லரிக்க வைக்குது. நீங்க மக்களிடம் போறவங்க! நேரமடா சாமி!!!

        • அதை வினவிடம் நீங்களே தனியாக பேசிக்கொள்ளுங்கள். எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்கிற அச்சு இயந்திரங்கள் அச்சடிப்படு போதாதென்று பிச்சை எடுப்பது, கையேந்துவது, நத்திப்பிழைப்பது பற்றி மட்டும் சொல்லுங்கள்.

  3. கவி காளமேகம் விருது என்று ஒரு ’அறம் பாடுவதற்கான விருது’ மேற்படி தமிழ்பேராயத்தால் வினவுக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டு அறம் பாடிவிட்டு வருவீர்களா அல்லது அத்தைகைய ஏற்க மறுத்து அறம் பாடுவீர்களா..?!!! ஏன்..?!!!

      • Russell பெயரை சொல்லாதீர்கள்.. அவர் ஒரு பிரித்தானிய ஜெயமோகன் என்று தோழர்கள் அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்..

    • அக்கிரகாரம் விருது நிச்சயம் அம்பிக்குதான்!
      எவனாவது குறுக்கே நின்றால் கொலை செய்வேன்..
      .ஒன்றே ஒன்று இடிக்கிறது அம்பி:
      கொலயை பூணூல் செய்தால் மயிறை வெட்டினால் போதுமாம்..

      …….செய்தால் தலயை வெட்டுவாரகளாம்

      • நாயுடுகாரு,

        ஒரு நாயக்கர்காரு இன்னோரு நாயுடுகாரிடம் சொல்லாததை நான் உங்களுக்கு சொல்கிறேன்.. சாதிவெறியும், கொலைவெறியும் தீயது..

        • 4.8.13 டெச்சான் ச்ரோனிகல் பாருங்கள்…உடுமலைபெட்டையில் எமது முன்னோர் ப்ரிட்டிஷ் அதிகாரிக்கு புளியமரத்தில் தூக்கு!
          ஹட்டபொம்மனை தூக்கிலிட்டதற்க்கு பழிக்குப் பழி : ஆனால் தமிழர்களாகிய நீங்கள் ? கொறட்டை விட்டு தூஙுவதில் தமிழனுக்குநிகர் எவரும் உண்டோ?

          • ஊமைத்துரைக்காக வெள்ளையனை எதிர்த்து வீரமரணம் அடைந்த மருதுபாண்டியர்களும்;

            பரங்கிப் படைகளை பல போர்களில் விரட்டியடித்த பூலித்தேவரும், ஒண்டிவீரனும், வெண்ணிக்காலாடியும் ;

            கட்டபொம்மனுக்கு துணை நின்று போராடிய வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும்;

            வீரமங்கை வேலு நாச்சியாரும், தீரன் சின்னமலையும் குறட்டைவிட்டுத் தூங்கிய தமிழர்களா..?!

            • அம்பி,நான் சொன்னது, மஞ்சல் துண்டுவின் போர்ப்படயின் “வாள்(ல்)களுக்கும்,பச்சை புடவயின் பாதந்தாஙுகளை மட்டுமே!

  4. Vinavu in its preface to this essay described what is Aram and according to that definition,Jayamohan should not have accepted the prize or if he has accepted,then there is no meaning in those Aram stories.

  5. //ஒரு லட்சம்யா.. ஒரு லட்சம்… உனக்கு குடுத்தா வேணாம்னு சொல்லிருவியோ
    நீங்களும் உண்டியல் குலிக்கியோ/ நன்கொடை வாங்கியோ பத்திரிகை/கட்சி இயக்கம் நடத்துகிறீர்கள்.//

    //பொறாமை வேண்டாம். வேண்டுமானால் உங்களுக்கும் எதாவது விருது/பொற்கிழி கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.//

    //கவி காளமேகம் விருது என்று ஒரு ’அறம் பாடுவதற்கான விருது’ மேற்படி தமிழ்பேராயத்தால் வினவுக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டு அறம் பாடிவிட்டு வருவீர்களா அல்லது அத்தைகைய ஏற்க மறுத்து அறம் பாடுவீர்களா..?!!! ஏன்..?!!!//

    வினவு தோழர்கள் உண்டியலேந்தி நிதி வசூல் செய்யும் போது அவர்கள் கூறும் முதல் வார்த்தை “நாங்கள் வட்டிக்கு பணம் விடுபவர்கள்,ரியல் எஸ்டேட் மாபியாக்கள், டாஸ்மார்க் பார்நடத்துபவர்கள் போன்றோரிடம் பணம் வசூலிப்பதில்லை” என்பதுதான்.

    எனவே வினவுக்கு விருது கொடுக்கும் அளவுக்கு எஸ் ஆர் எம்,பச்சமுத்து முதலாளிக்கு அருகதையில்லை என்பதுதான் உண்மை.

    • பிறகு வினவுக்கு அத்தகைய விருது கொடுக்கும் தகுதி யாருக்கு இருப்பதாக கருதுகிறீர்கள்..?!

        • நல்லா கொடுப்பாங்க.
          ஆனா இங்க இணையத்தில செய்வதுபோல்-கடிக்கிறது, ஓரமா நின்னு துப்பறது, மொட்ட மாடியில் நின்று கல்லெறிவது, முதுகை பிராண்டுவது, அல்லக்கைகளை விட்டு மிரட்டுவது, கெட்ட வார்த்தையில் திட்டுவது, மாற்று கருத்துகளை கத்திரி போடுவது மற்றும் இன்ன பிற தொழில் நுட்பங்களை மக்களை நேரில் சந்திக்கும் போது பிரயோகித்து விடாதீர்கள்.
          முதுகு வீங்க கொடுத்துவிடுவார்கள்.

          • பண முதலைகள் சாதாரண மக்களிடம் கொள்ளையடித்த பணத்துக்கு கூச்சநாச்சமில்லாமல் கையேந்துவது, நேரடியாக காலில் விழாமல் வாய் வழியாக காலில் விழுவது, உண்மையை பேசும் அருந்ததிராய் போன்றவர்களை குருவி மண்டை என்று இழிவுபடுத்துவது, அன்னா ஹசாரே போன்ற காமெடியன்களை ஹீரோ என்பது, காந்தி என்கிற துரோகியை தியாகி என்பது, மோடி போன்ற பயங்கரவாதிகளை மெச்சுவது,மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குவது போன்ற அறம் சார்ந்த செயல்களை செய்யும் பன்னாடைகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எச்சில் துப்புவது, மொட்டை மாடியில் நின்றல்ல நேருக்கு நேராகவே நின்றே கல்லை எரிவது, காறித்துப்புவது அனைத்தையும் உரிமையோடு செய்வோம் ஏனெனில் உழைக்கும் மக்களையும் அவர்களுக்காக போராடுபவர்களையும் இழிவுபடுத்தும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளை இப்படி கவனிப்பது எங்களுடய உரிமை அவர்களை காப்பாற்றுவது உங்களுடைய உரிமை. ஆனால் எச்சிலும், கல்லும் யாருடைய முகத்தில் பட வேண்டுமோ அவர்களை மாறித்துக்கொண்டு நீங்கள் நின்றால் உங்கள் மூஞ்சி முகரை எல்லாம் வீங்கிவிடும் என்றும் எச்சரிக்கிறோம்.

            • ஏனிந்த கொலைவெறி..?!!!

              ரூ 1.5 லட்சம் ஜெயமோகனுக்கோ, SRM குழுமத்துக்கோ ஒரு பெரிய தொகையே அல்ல.. SRM குழுமத்தின் தமிழ்பேராயத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழுவால் புதுமைப் பித்தன் விருதுக்காக அறம் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதை SRM பின்னணியை வைத்து ஜெயமோகன் ஏற்க மறுக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்..?! ஜெயமோகனின் அறம் கதைகள் முதலாளித்துவத்தை எதிர்க்கும் மார்சிய இலக்கியமா..?!

              ஜெயமோகனைக் கேட்டால், SRM கல்லூரிகளுக்கு விரும்பிப் போய் லட்சங்களைக் கொட்டி படிப்பது உங்கள் தவறு அவர்கள் தவறு அல்ல, நித்திய சைதன்ய யதி குருகுலத்துக்கு வந்து இலக்கியம், தத்துவ தரிசனங்கள் படியுங்கள் என்பார்.. SRM முதலாளித்துவத்துடன் அவரோ, அவருடைய அறமோ, அறம் கதைகளோ எங்கே முரண்படுகிறது..?! ஒன்று வேண்டுமானால் நீங்கள் அவரிடம் எதிர்பார்க்கலாம் – இவ்வளவு லாபம் பார்க்கும் SRM குழுமம் இலக்கியத்துக்காக ரூ 1.5 கோடி கொடுக்காமல் பிச்சைக் காசு போல் 1.5 லட்சம் கொடுப்பது அவமானம் என்று அவர் புறக்கணிக்க வேண்டும் என்பதை.. ஆனால் அதைக் கூட கொடுக்காத வள்ளல்கள் உள்ள நாட்டில் இப்படிக் கூறுவது திமிரென்றும் பலரால் கருதப்படும்.. எனவே, முதலாளித்துவம் கொடுத்தும் கெடுக்கும், கொடுக்காமலும் கெடுக்கும் என்று அறம் பாடி விசயத்தை முடியுங்கள்..!!!

              • Sorry for typing in English.
                I am away from home and office and typing on borrowed computer.

                Kambar was patronized by Sadayyappar.
                SRM is patronizing Jeyamohan.
                Engels was patronized by Marx.

                Many people were patronized by many.
                Anybody can be patronized by anybody.

                The Marxists retain the right to slander all patrons and their clients except Marx and Engels. No body can criticize it because it is divine. Divinity is beyond criticism. Do not try lest they will unleash all sorts of creatures on earth on to you for a slandering match and the leaders will hide behind their chairs safely.
                People with low self esteem usually use this type of tactics to survive.

              • அம்பி
                \\ஜெயமோகனைக் கேட்டால், SRM கல்லூரிகளுக்கு விரும்பிப் போய் லட்சங்களைக் கொட்டி படிப்பது உங்கள் தவறு அவர்கள் தவறு அல்ல, நித்திய சைதன்ய யதி குருகுலத்துக்கு வந்து இலக்கியம், தத்துவ தரிசனங்கள் படியுங்கள் என்பார்.. //

                இப்படி ஜெயமோகன சொன்னால் அதை நீங்கள் ஏற்று ஆதரிப்பீர்களா.இப்படி சொல்வது கொள்ளையர்களை ஆதரிக்கும் கேடு கெட்ட அயோக்கியத்தனமில்லையா.இந்த அயோக்கியத்தனத்தை செய்யும் ஜெயமோகனுக்கு பரிந்து பேச,தனியார் கல்வி கொள்ளையர்களை எதிர்த்து வினவின் பல கட்டுரைகளில் பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு வெட்கமாக இல்லையா.

                • சிக்கலான கேள்விதான்.. இதற்கான பதில் ஆம், இல்லை என்ற இரண்டுக்குள்ளும் வராத கலப்படமான ஒன்றாயிருக்கும்..

                  • ஏற்கனவே வெண்டைக்காயை விளக்கெண்ணையில் போட்டு வதக்கினாற்போலத்தான் உங்கள் வாதங்கள் பெரும்பாலானவை இருக்கும்.இதில் ஆம்,இல்லை என்று இரண்டும் கலப்படமாக பதில் சொன்னால் விளங்கிரும்.

                    இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.அதில் பாதி இதில் பாதி என அரை கிணறு தாண்டுவது மிகவும் ஆபத்து.பார்த்து சூதானமாக இருந்து கொள்ளுங்கள்.

                    • நன்றி.. நீங்களும் சூதானமாக கணினி முன் அமர்ந்து கொண்டு பெட்ரோலில் மிளகாய் பஜ்ஜி பொரித்துக் கொண்டிருங்கள்.. கல்விக் கொள்ளையர்களை தடுப்பதற்கு, புறக்கணிப்பு போன்ற மாற்றுவழிகள் சரியில்லை, எதிர்ப்பதுதான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்து அறச்சீற்றம் அதிகமாகி விட்டால் கிணற்றை ஒரே தாண்டாகத் தாண்டி களத்தில் குதித்து தோழர்களுடன் சேர்ந்து போராடுங்கள்..

                      ஜெயமோகன் தரப்பு நியாயங்களை, வினவுடன் சில பல வகைகளில் முரண்படும் அவருடைய கொள்கைகள்-கோட்பாடுகள்-முன்னுரிமைகள் அடிப்படையில், அவர்தான் விளக்கமாகச் சொல்லமுடியும்.. அதுவரை தீர்ப்பை ஒத்தி வைத்து நீங்களும் நானும் இது போன்ற hypothetical கேள்வி-பதில்களுடன் விவாதித்து நமது சொந்தக் கணக்குவழக்குகளை தணிக்கை செய்து கொண்டிருக்கலாம்..

            • #பன்னாடைகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எச்சில் துப்புவது, மொட்டை மாடியில் நின்றல்ல நேருக்கு நேராகவே நின்றே கல்லை எரிவது, காறித்துப்புவது அனைத்தையும் உரிமையோடு செய்வோம்#

  6. கற்றுக்கொள்வதும் இழப்பதும் வெவ்வேறானவையல்ல
    —————————————————–
    (அறிவைப்பெறும்பொழுது அறியாமையை இழந்துவிடுகிறீர்கள்.)

    அறத்தை கற்றுக்கொள்ள வர்க்கம் நிரம்பியுள்ள சிந்தனைப்பரப்பில் கொஞ்சமேனும் காலிப்பகுதி தேவைபடலாம்.(வினவுதோழர்களுக்கு மாத்திரம்)

  7. *** வினவு தோழர்கள் உண்டியலேந்தி நிதி வசூல் செய்யும் போது
    அவர்கள் கூறும் முதல் வார்த்தை “நாங்கள் வட்டிக்கு பணம் விடுபவர்கள்,
    ரியல் எஸ்டேட் மாபியாக்கள், டாஸ்மார்க் பார்நடத்துபவர்கள்
    போன்றோரிடம் பணம் வசூலிப்பதில்லை” என்பதுதான்.***

    இதெல்லாம் அம்பிக்கும் தெரியும்.
    அரித்தால் சொறிந்து கொள்வது இல்லையா
    இதுபோல் டைப் செய்வது அம்பி
    விரல்களின் அனிச்சை செயல்.

  8. ஜெயமோகன் விருது பெற்றாலும், பெறாவிட்டலும் கெத்தல் சாகிப், யானை டாக்டர், இன்ன பிற “அறம்” கதை மாந்தர்கள் பொய்யாகி விடுவார்களா?

  9. பச்சமுத்துவுக்கு உலக இலக்கியம் என்றால் என்ன என்று தெரியுமா அல்லது படித்தால் புரியுமா என்று கொஞசம் கேட்டு சொல்லுங்கள். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது.பாவம் தமிழ். என்ன செய்ய.

  10. அறம் கதை தொகுப்பை வெளியிட்டவர்கள் திரு.பவா செல்வதுரை நடத்தும் வம்சி பதிப்பகம். அவர்களின் தரம் மற்றும் நேர்மை, உயர்ந்த இலட்சியவாதம் பற்றி விசியம் அறிந்தவர்களுக்கு தெரியும். ஜெயமோகனுடன் சித்தாந்த ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த தொகுப்பின் அருமை புரிந்து அதை வெளியிடுகிறோம் என்றும் எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரையாளரை விட அவர்களின் மதிப்பீடு தான் சரியனது, நேர்மையானது.

    எஸ்.ஆர்.எம் நிறுவனம் சிறந்த சேவைகளையும் செய்து வருகிறது. ஆனால் சட்டபடி கட்டணங்களை உண்மையான அளவில் வாங்க முடியாததால், கருப்பில் வாங்கி, சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை பத்தி ஒரு வினவு பதிவில் விரிவாக பேசியிருக்கிறேன்.

    சரி, இன்னும் 200 ஆண்டுகள் கழித்தும் அறம் சிறுகதை தொகுப்பு உயிருடன் இருக்கும். ஆனால் மிகவும் கீழ்தரமான தொனியில் ‘விமர்சனம்’ என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் இந்த கட்டுரை இருக்குமா ? கண்டிப்பாக இருக்காது. Time is the greatest judge and only really worthy creations will withstand the test of time..

    • //Time is the greatest judge and only really worthy creations will withstand the test of time..//

      So, standing now on 6th Aug 2013, you have decided that his writing will be remembered and Vinavu forgotten. Are you endowed with such special superhuman powers to say what will happen after one thousand years K Adhiyamaan?

      • Seramaan,

        I did not talk about 1000 years but a mere 200 years from now. And yes, i have some vision about future and reality. When people like you and Vinavu group blindly opposed entry of Indian corporates into organised retail in 2006, I ‘prophesied’ that these opposition will loose all meaning and stream in a few years. Same with entry of MNCs into manufacturing in the early 90s. In all these instances you people were wrong and we got it right. so why not about Jeyamohan’s books ? அந்த கதை தொகுப்பை பெரும் செலவு செய்து வெளியிட்ட வம்சி பதிப்பகம் மற்று பவா செல்லதுரை பற்றியும், அவர்களின் அவதானிப்பு பற்றியும் சொல்யிருந்தேன். அவர்களின் கணிப்பு, உங்கள் எல்லாரையும் விட சரியானது, நேர்மையானது தான். உங்களுக்கு (அதாவது வினவுக்கு) மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ’மேட்டிமை திமிர்’ நிறைய உள்ளது. அதை அப்படியே எத்துக்கரத்து எல்லாரும் மடையர்கள் அல்ல. சொந்த புத்தி நிறைய பேர்களுக்கு உண்டு..

        • இருக்கப்படாது. அப்படி இருந்தா கலட்டி வச்சுருங்க. நாங்க ஆட்டு மூளை தர்றோம். அதை வாங்கி உள்ள வச்சுக்குங்க. சீக்கிரம். புரட்சிக்கு நேரம் ஆவுது.

          • ஆட்டு மூளையை பற்றி ஒரு ஆடே பேசுவது கேட்க நன்றாக இருக்கிறது பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. எனினும் ஆடுகள் மோட்சம் பெறவும் வழி உண்டு நீங்கள் பின்னூட்டமிடும் இடம் தான் அந்த வழி, சரியான வழியில் பயணித்து பரலோகத்தை அடையுங்கள் பாண்டியன்.

        • //When people like you and Vinavu group..//

          My opinion is my own.

          I didn’t blindly oppose either Vinavu or Jemo. I just ask you how you got the superhuman powers to see what will happen ‘ a mere 200 years from now ‘. Only prophets prophesy. How you became a Prophet?

          Don’t talk about MNCs etc. That you take up with Vinavu.

          Tell me how you say correctly what will happen to his books after ‘a mere 200 years from now ‘

          Come on…Aadhiyamaan

    • காலத்தின் தீர்ப்பை முன்பே கூறுவது முடியாததொன்று. நாம் விரும்புவது போல் காலத்தின் தீர்ப்பு இருக்குமென உறுதிப்படுத்துவது ஒருவகை அதிகாரம். இப்போதுள்ள நிலையில் ஜெயமோகனின் “அறம்” அறமிழந்துவிட்டது என்பது வாதம். அறம் என்பது ஒவ்வொரு மனிதனும் தனக்கென வரையறுத்துக் கொள்ளும் ஒழுக்கமுறைகள். ஆகவே மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. அதுமட்டுமல்லாது மனிதனுக்குள்ளும் வேறுபட்டுவிடுகிறது. இந்த உள் வெளி வேறுபாட்டின் விளைவே இங்கு வாதிக்கப்படுகிறது. கணணி வெளியில் பதியப்படும் எதுவும் அழிக்கமுடியாதவை. ஆகவே காலம் உள்ளவரை, ஜெயமோகனின் “அறம்” உள்ளவரை அது சார்ந்து எழுதப்பட்டவை அனைத்தும் இருக்கவே போகின்றன.

  11. ///ஆனால் சட்டபடி கட்டணங்களை உண்மையான அளவில் வாங்க முடியாததால், கருப்பில் வாங்கி, சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.///

    சார்…எப்டி?? இப்டி??!! கருப்பு பணத்துக்கு அருமையான விளக்கம்…நன்றி…

  12. ஜெயமோகன் வாங்கப் போகும் விருது வை விட அவரோட இந்த ‘நேர்ம’ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு (நாடோடி திரைப்படத்தில் ச்சிகுமாரின் மாமனார் அடிக்கடி பேசும் வசனம்)

  13. Arumugasaamy of Coimbatore was benevolent ,benign to pass on some bucks he earned to the poor children who score higher marks.Literary and scholarly people like Jayamohan getting some consideration on recognition of his works is not too bad

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க