முகப்புகட்சிகள்இதர கட்சிகள்7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

-

டந்த 18-ம் தேதி சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் குழும அலுவலகங்கள், கல்லூரிகள், ஊடக, திரைப்பட நிறுவனங்கள் மற்றும் பச்சமுத்து குடும்பத்தினரின் வீடுகளில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பச்சமுத்து
பச்சமுத்து

இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணமும் நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட பதிவுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, ரூ 6.45 கோடி பணம் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. அந்த நிறுவனம் அவரது கட்சிக்காரர்களால் அவர் பெயரில் நடத்தப்படுவது, அவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தன் மகளுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவதற்கு ரூ 30 லட்சம் நன்கொடை கொடுத்ததாக ஒரு தந்தை கொடுத்த புகார் மீது மத்திய புலனாய்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ‘இப்படி கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே’ என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை இவ்வளவு ‘வேகமான’ இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி விசாரணை நடத்தவோ, தேடுதல் நடவடிக்கை எடுக்கவோ வருமான வரித்துறையின் ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோன்றவில்லை.

எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்
எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்

1969-ம் ஆண்டு சென்னை, மாம்பலத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிரைமரி ஸ்கூல் மூலம் கல்விச் சேவையை ஆரம்பித்தார் பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து. இன்றைக்கு காட்டாங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து உருவாகிய 300 ஏக்கர் வளாகம், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கிய 25 ஏக்கர் வளாகம், வடபழனியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளாகம், 2008-ம் ஆண்டு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இருங்களூரில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் மோதி நகர் வளாகம் ஆகியவை எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளன.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே ‘உருவாக்கும்’ தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

‘தர’ வரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு கட்டண பட்டியல் இருந்தாலும் எந்த படிப்புக்கு எவ்வளவு நன்கொடை என்று அதிகாரபூர்வ பட்டியல் இல்லை. மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நன்கொடை வாங்குவது சட்ட விரோதமானது. இருந்தாலும் ஒரு பொறியியல் சீட்டுக்கு ரூ 20 லட்சம் வரை, மெடிக்கல் சீட்டுக்கு ரூ 80 லட்சம் வரை, எம்.பி.ஏ. சீட்டுக்கு ரூ 15 லட்சம் வரை என்று சீட்டுகள் ஏலம் விடப்படுகின்றன. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் ஏஜென்டுகள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.

நாடெங்கிலும் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை விற்று, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்து, பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு தமது குழந்தைகளை படிக்க சேர்க்கிறார்கள். நன்கொடைக்கு மேல் கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும் நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமும் மற்ற செலவுகளும் சேர்த்து ரூ 4 முதல் ரூ 6 லட்சம் முதலீடாக போட வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சிஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் சேர்த்துக் கொள்ளும் எஸ்ஆர்எம் குழுமம் சேர்க்கை காலங்களில் மட்டும் சராசரியாக குறைந்தது ரூ 200 கோடி கருப்பு பணத்தை கையாளுகிறது என்று மதிப்பிடலாம். இந்தப் பணத்தை திரட்டிக் கொண்டு வரும் பெற்றோர்களும் சரி, அதை வாங்கி பத்திரிகை, தொலைக்காட்சி, அரசியல் கட்சி, நில ஆக்கிரமிப்பு என்று திருப்பி விடும் பச்சமுத்துவும் சரி வருமான வரிச் சட்டங்களை கழிப்பறை காகிதம் போல வேண்டுமானால் மதித்திருப்பார்கள். அதனால்தான் வருமான வரித் துறை அதிகாரிகளும், பல டஜன் அரசுத் துறை கண்காணிப்பாளர்களும் இது வரை விழித்துக் கொள்ளவில்லை.

இதைத் தவிர ஆண்டு முழுவதும் 33,000 மாணவர்களின் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்குமிட கட்டணம் என்று ரூ 300 கோடிக்கு மேல் புழங்கும் இந்த நிறுவனத்தை தனி ஆளாக கட்டுப்படுத்துகிறார் பாரி வேந்தர் பச்சமுத்து.

கடந்த ஜனவரி மாதம் பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய பல் மருத்துவக் கழகத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்ட மேல்மருவத்தூர் அம்மா குடும்பம் போன்ற மிடில் லெவல் கிரிமினல்களுக்கும் சரி, இப்போது ரெய்டு நடத்தப்பட்ட பச்சமுத்து குடும்பம் போன்ற பெரிய லெவல் கிரிமினல்களுக்கும் சரி சட்டங்களால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் தெரியும்.

அதனால்தானோ என்னவோ, உண்மைகளை உடனக்குடன் தரும், முக்கிய நிகழ்வுகளை ஹெலிகாப்டர் அனுப்பி கவர் செய்யும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி அலுவலகம் உட்பட குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும், நன்கொடை என்ற பெயரில் பெற்ற கருப்பு பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பற்றிய விபரங்களை தனது கேமராக்களில் பதிவு செய்யவில்லை.

இனி இந்தத் தொழில்முறைத் திருடர்கள் ஆளும் கட்சிக்கான மாமூல்களையும், ஜால்ரா செய்திகளையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள்!

 1. நேற்று கம்யுனிசத்திற்கு எதிராக எழுதிய எனது கருத்தையே அமுக்கி விட்டீர்களே .அற்ப இணையதளத்திலே உங்களது ஆளுமையை காட்டுகையில் அவர்களது டிவியில் அவர்களை பற்றி எப்படி காட்டுவார்கள் ?
  எனக்கு தெரிந்தவரை தங்களை பற்றிய விமர்சனம் எத்தனை கடுமையாக இருந்தாலும் அதை வெளியிடுவதில் பழைய குமுதம் போல எந்த ஊடகமும் இருந்ததை பார்க்கவில்லை

  • இப்ராஹிம், கட்டுரைக்கு கொஞ்சம் கூடத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை பொதுவாக அதிகம் வெளியிடுவதில்லை. மற்றபடி கம்யூனிசம் குறித்த பதிவுகள் வினவில் நிறைய இருக்கின்றன. உங்கள் வீரத்தை அங்கே காட்டுவதற்கு எந்த தடையுமில்லை. சவுதி இளவரசனைக் காப்பாற்றுவதறத்கு சோசலிசத்தை வம்பிழுப்பதெல்லாம் நியாயமாகவோ இல்லை நாகரிகமாகவோ இல்லை.

   • கட்டுரைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களைத் தான் வெளியிட மாட்டோம். ஆனால், கட்டுரையில் சம்பந்தமற்றவற்றை இழுத்து விட தடை ஏதும் இல்லை:

    // ஒரு வேளை தான் யோசிப்பதற்கு கூட ஏதாவது இந்திய அம்பிகளை வாடகைக்கு அமர்த்தி வைலைக்கு வைத்திருக்கிறாரோ சவுதி இளவரசர்? //

    https://www.vinavu.com/2013/06/19/saudi-prince-sues-forbes-magazine/

    • வெங்கடேசன், கட்டுரையில் சம்பந்தமில்லாத ஒன்றை கட்டுரையாளர் எழுதியதாக நீங்கள் கருதினால் தாராளமாக விவாதிக்கலாம். இங்கே நீங்கள் போட்டிருக்கும் வரி கூட பொதுவில் இந்திய என் ஆர் ஐகள் நாசாவிலும், சிலிக்கான் வேலியிலும் அமெரிக்காவின் முதுகெலும்பாக உள்ளனர், இவர்களெல்லாம் மாபெரும் அறிவாளிகள், இந்தியாவில் இவர்களுக்கு மதிப்பில்லை, இன்ன பிற பொதுக்கருத்தை கிண்டல் செய்யும் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.

     • // இந்திய என் ஆர் ஐகள்

      கட்டுரை இப்படி சொல்லவில்லை. ‘அம்பிகள்” என்று சொல்லியுள்ளது.

      மேலும் இந்த வரியை படிக்கும் போது நீங்கள் மேலே சொன்ன விஷயம் நினைவில் வரவில்லை. பார்ப்பனர்கள் பணத்திற்காக எதையும் செய்வர் என்ற கருத்தை சொன்னதாகவே எனக்கு தோன்றியது. எனக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை. ‘பெரியாரின் போர்வாள்’ என்ற பெயர் கொண்ட நண்பருக்கும் அப்படியே புரிந்துள்ளது.

      https://www.vinavu.com/2013/06/19/saudi-prince-sues-forbes-magazine/#comment-87546

      • நீங்களோ, போர்வாளோ புரிந்து கொண்டது இந்த உவமை குறித்த உங்களது ‘சுதந்திரப்’ புரிதல். ஆனால் இந்தப்பதிவில் சிந்தனைக்கு ஆள் வைக்கிறார் ஷேக் என்பது ஏற்கனவே கொடுக்கப்பட்ட விளக்கத்தின் படியே எழுதப்பட்டுள்ளது. அம்பிகள் என்பது நேரடியாக பார்ப்பனர்களை சுட்டும் பெயர் என்றாலும் அதை ஒரு குறியீடாகவே பயன்படுத்துகிறோம். அதனால் அது பார்ப்பனர்களை மட்டும் குறிக்க வேண்டியதில்லை. பார்ப்பனர்களைப் போல வாழும் மற்றவர்களையும் சேர்த்தே குறிக்கிறது. அதே நேரம் என்.ஆர்.ஐ ‘அறிவாளி’ நபர்களில் உண்மையாகவே ‘அம்பிகள்’ அதிகம் என்பதும் ஒரு யதார்த்தம்தானே?

       ஷேக்குகள் என்று நாம் இங்கே குறிப்பது சவுதி அரச குடும்பத்தை மட்டும்தான் என்றாலும் அங்கே அதன் பொருள் அரச பரம்பரையை மட்டும் குறிக்கவில்லை. ஆனால் ஷேக் என்பதை ஒரு குறியீடாக்கி பயன்படுத்துகிறோம்.ஷேக்குக்கு பொருந்துவது அம்பிக்கு பொருந்தக் கூடாதா?

       • விளக்கத்துக்கு நன்றி.

        NRI மக்களை அம்பிகள் என்று அழைப்பது நான் இதற்கு முன் கண்டிராத புதிய வழக்கம். NRI மக்களில் பார்ப்பனர்களை தவிர மற்றவரும் கணிசமாக உள்ளனர். உதாரணமாக புரட்சி புயல் வைகோவின் மகள் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவ்வப்போது அவர் அங்கு சென்று சில காலம் வசித்து வருவதாகவும் அரசியல் கிசுகிசு படித்தாக நினைவு. உண்மையாயின், அவரை “அடிக்கடி அம்பி” என்றோ, “அம்பியப்பன்” என்றோ அழைக்கலாம் போலும்!

        // அதே நேரம் என்.ஆர்.ஐ ‘அறிவாளி’ நபர்களில் உண்மையாகவே ‘அம்பிகள்’ அதிகம் என்பதும் ஒரு யதார்த்தம்தானே? //

        NRI ‘அறிவாளி’களில் அதிகம் இருப்பது தெலுங்கர்கள் என்பது என் எண்ணம். நீங்கள் சொல்லும்படியும் இருக்கலாம். ஆனால், இந்திய/தமிழக அளவிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் முழுமை பெறாத போது NRI மக்களின் சாதிக்கணக்கு பற்றி பேசுவது சரியாகப் படவில்லை. அவர்களை தொல்லைப் படுத்தாமல் விட்டுவிடுவோம். அவர்களாவது சாதியற்று “NRI” என்ற ஒற்றை சொல்லுக்குள் அடங்க முயலட்டும். அதற்கு எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருள் புரியட்டும்!

   • s.ibrahim உங்களின் கருத்தை பதியவில்லை எனும் இந்த கருத்தையே இங்கே பதிவாக அனுமதித்துள்ளனரே.. மேலும் // மற்றபடி கம்யூனிசம் குறித்த பதிவுகள் வினவில் நிறைய இருக்கின்றன. உங்கள் வீரத்தை அங்கே காட்டுவதற்கு எந்த தடையுமில்லை. // இப்படியும் போட்டு இருக்காங்களே
    அதுமட்டுமல்லாமல் மறுமொழி குறித்த வினவின் சில அடிப்படை விஷயங்களை நீங்கள் படிக்கவில்லையோ

   • வினவு வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனம்
    வேந்தர் விசுவாசி இகு சொந்தமானது.

 2. we expected very early as per ilongavan it is too late, one more since more than one month on dish tv puthiya thalimurai not coming. Yo can remember while students agitation for elam issue Congress person ilogavan said you people will realize very soon. what he said it happened.

  • நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எத்தனை முறை தமிழக தேர்தலில் காயடித்தாலும் இந்த கதர் வேட்டிகளுக்கு புத்தியில் உறைப்பதில்லை. இவர்களது எதேச்சதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் எவருக்கும் இதே நிலைதான் அது பச்சை முத்தாக இருந்தாலும் சரி…………. ஆனால் படித்த இளைய சமுதாயத்திடமிருந்து காங்கிரஸ் அந்நியப்பட்டே நிற்கிறது. இவர்களது வீரம் ஏன் அம்பானிகளிடம் எடுபடவில்லை? சிஏஜி அறிக்கைகள் அனைத்தும் தவறாகவே இருக்கிறது என்றால் அந்த வீணாப்போன அமைப்பையெ கலைத்துவிடலாமே?

 3. மேல்மருவத்தூர் பல்மருத்துவ கல்லூரியிடமிருந்து லஞசம் பெற்ற முருகேசன், இந்த பச்சைமுத்து கல்லூரியில் பல் மருத்துவதுறை தலைவர்! காஞ்சி மீனாட்சி மருத்துவக்கல்லூரிக்கு அன்றைய துணைப்பிரதமர் அத்வானி வந்து சிறப்பித்ததைபோல, பச்சைமுத்து கல்லூரிக்கு பிரதமர் மன்மொகன் வருகை புரிந்து சிறப்பித்தார்! அரசியல் சக்திகளின் பினாமியான இவர்கள்தான் ஊழலற்ற புதிய தலைமுறையை கொணர்வார்களாம்! பச்சைமுத்து பச்சை பார்ப்பன பினாமியே!

 4. வருடத்துக்கு 350 கோடி. 200 அல்ல. தனி கட்சி வைத்துகொண்டு காங்கிரசுக்கு காசு கொடுக்காததால் சிபிஐ வருமானவரி இன்னபிற வேட்டை நாய்கள் ஏவிவிடப்படும். பொட்டலம் கொடுத்து பிரச்சனையை முடிப்பார்கள். சட்டம் இந்த மாதிரி ஓநாய்களின் மயிரை கூட புடுங்காது. இந்தியாவின் மிகப்பெரிய கறுப்புப் பண உற்பத்தி கல்வி வள்ளல்களிடம் இருந்துதான். ஓட்டு பொறுக்கி அரசியல் இந்த பணத்தை நம்பித்தான் உள்ளது. நன்கொடை தடுப்பு சட்டம் கொண்டு வருவதாக மக்களிடம் பூச்சாண்டி காட்டியே ஐந்து வருடம் காங்கிரஸ் ஒட்டிவிட்டது. கம்பெனி, கட்சி , டிவி, பத்திரிக்கை மூலமாக இவர்கள் காட்டும் ஆபாசகூத்தை மக்கள் ரசித்து/நம்பி இவர்களை வாழ்வாங்கு வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையே இவர்களின் மூலதனம். பணம் அல்ல!!!

 5. ‘Emperor is not wearing any clothes’ கதை தான் இங்கு பொருந்தும். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் லாப நோக்கில் தான் நடத்தப்படுகிறது. ஆனால் under law, everyone pretends that they are ‘not-for-profit’ organisations. hence all these unwanted activities and black money.

  எளிமையான தீர்வு : கார்ப்பரேட் மருத்துவமனைகளை போல் இக்கல்வி நிறுவனங்களையும் ‘லாப நோக்கில்’ நடத்தப்படும் நிறுவனங்கள் என்று சட்டப்படி அங்கிகரித்து, ஒரு குறைந்த அளவு வருமான வரி விதிக்கலாம். அனைத்து கட்டணங்களும் பிறகு வெள்ளையில் மாறி, இந்த ‘சட்ட மீறல்கள்’ ஒழியும். இதுதான் ஒரே வழி. ஆனால் அதற்க்கு சட்ட திருத்தம் வேண்டும்.

  மேலை நாடுகளில் தனியார் பல்கலை கழகங்கள் இப்படி தான் வெளிப்படையாக, வெள்ளையில் கட்டிணாங்களை வசூல் செய்கின்றனர். ஃபீஸ் அதிகம் தான். ஆனால் சட்ட விரோதம் இல்லை.

  • அப்படியே சட்டவிரோத பதுக்களை கூட சட்ட ரீதியாக மாற்றிவிட்டாள் .உணவு பொருளின் விலை அதிகமாக தான் இருக்கும் ஆனால் சட்ட விரோதமாக இருக்காது

   • மேலை நாடுகளில் தனியார் பலகலைகழகங்கள் மிக அதிக கட்டிணங்களை சட்டப்படி வாங்கி, மிக அருமையாக செயல்படுகின்றன. யேல், ஹார்வார்ட் போன்றவை. அதே நேரத்தில் அரசு கல்லூரிகள் மிக குறைந்த கட்டிணத்தில் செயல்படுகின்றன. ஊழல், கருப்பு பணம் அங்கு இல்லை.

    இங்கும் அதே முறை தான் சரியான தீர்வு அளிக்கும். இந்தியாவெங்கும் ஆண்டுக்கு கல்வி துறை அதிகாரிகள், தனியார் கல்லூரிகளை மிரட்டி வாங்கும் லஞ்ச பணத்தில் அளவு பல ஆயிரம் கோடிகள் தாண்டும். இதை தடுக்க ஒரே வழி, அவர்களின் அதிகாரத்தை ஒழிப்பதில் தான்.

    பதுக்கல், கடத்தலும் இதுவும் ஒன்றல்லவே. ஒருவர் 30 லச்சம் பீஸ் (அதுதான் சரியான பெயர், நன்கொடை என்பது தவறான சொல்) அளிக்க தயாராக இருக்கிறார். வாங்கி கொண்டு கல்வி அளிக்க ஒரு நிறுவனம் தயாராக உள்ளது. இருவருக்கும் நடுவில் அரசு (அதிகாரிகள்) புகுந்து கொண்டு, அதை கருப்பில் வாங்கும் படி சட்டத்தை உருவாக்கியிருப்பதால் தான் இத்தனை சிக்கல். the fees will depend only on two factors : cost of the service, the demand supply dynamics. no amount of moralising is going to change this basic fact.

    சரி, சட்ட திருத்தம் கொண்டு வர கூடாது என்றால், இந்த கருப்பு பண ‘கொடைகள்’, ரெய்டுகள், லஞ்ச போரங்கள் தொடர்ந்து நடக்கும் தான். யாரும் ஒன்னும் செய்ய முடியாது. கட்டுரை மட்டும் எழுதி குவிக்கலாம். அதை தான் நீங்க விரும்புகிறீர்களோ ? அல்லது நடைமுறைக்கு உகந்த தீர்வு சொல்லுங்களென்.

    லிபரல் ஜனனாயகம் தலைதோங்க பல நாடுகளில் விபச்சாரம் சட்ட விரோதம் அல்ல. ஆனால் இந்தியாவில் அப்படி அனுமதிக்கபடவில்லை. விளைவுகள் தெரியும் தான்.

    • //லிபரல் ஜனனாயகம் தலைதோங்க பல நாடுகளில் விபச்சாரம் சட்ட விரோதம் அல்ல. ஆனால் இந்தியாவில் அப்படி அனுமதிக்கபடவில்லை. விளைவுகள் தெரியும் தான்.//

     that should be read as : (typing error)

     //லிபரல் ஜனனாயகம் தலைதோங்கும் பல நாடுகளில் விபச்சாரம் சட்ட விரோதம் அல்ல. ஆனால் இந்தியாவில் அப்படி அனுமதிக்கபடவில்லை. விளைவுகள் தெரியும் தான்.//

    • என்னோட கேள்வி சட்ட விரோதமாக இருப்பதால் தான் லன்சம் இருக்கிறது சரி
     அதை சட்ட படி ஆக்கி விட்டால் பல கல்வித்துறையில் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று சொல்கிறீர்களா ?

     தாங்கள் சொன்ன முறையை சில துறைகளுக்கும் விரிவு படுத்தினால் என்ன ஆகும் என்பதை ஒரு எடுத்துகாட்டை சொன்னேன்

     பொருளின் விலையை தீர்மானிக்க விக்கிறவன் வாங்குறவன் இடையே புகுந்து அரசு தரகர் வேலை பார்க்ககூடாது.

     விலை தீர்மானிப்பது எப்படி சந்தை தான் விலையை தீர்மனிக்கும் .எதாவது பிரச்சனை வந்த்தால் சந்தை தன்னை தானே சரி செய்து கொள்ளும்

     காசு இருக்கிறவன் தான் படிக்கனும் ,சாப்பிடனும் ,மருத்துவம் பார்த்துக்கனும்

     எல்லாத்தையும் சந்தை தான் தீர்மானிக்கனும் அதாவது ஒரு மனிதன் உயிரோட இருக்கனுமா கூடாதா என்பதை கூட சந்தை தான் தீர்மனிக்கனும் அப்படிதானே.

     லிபரலிசம் என்பதே பண்க்காரர்களின் அனார்கிசம் தான்

     • //காசு இருக்கிறவன் தான் படிக்கனும் ,சாப்பிடனும் ,மருத்துவம் பார்த்துக்கனும்///

      இல்லை. அப்படி சொல்லவில்லை. அரசு செய்ய வேண்டிய சேவைகள் அவை. எத்தனை ஆயிரம் கோடி வரி பணம் செலவழித்தும் அது உருப்படியாக செயலாகவில்லை. அதை ‘திருத்த’ வேண்டும். ராணுவம் செலவு, புதிய மாவட்டங்களை உருவாக்கும் செலவுகள் போன்ற பல வெட்டி செலவுகளை அரசு குறைத்து கொண்டு, மிச்சமாகம் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்வி, மருத்துவ சேவைகளுக்கு திருப்ப வேண்டும். இதை செய்யாமல் சும்மா தனியார் கல்லூரிகளை திட்டி பயனில்லை.

      ///எல்லாத்தையும் சந்தை தான் தீர்மானிக்கனும் அதாவது ஒரு மனிதன் உயிரோட இருக்கனுமா கூடாதா என்பதை கூட சந்தை தான் தீர்மனிக்கனும் அப்படிதானே.//

      இல்லை. எல்லாத்தையும் சந்தை தீர்மானிக்க முடியாது / கூடாது. ஆனால் சந்தையால் தான்
      செம்மையாக தீர்மானிக்க கூடிய விசியங்களை சந்தையிடம் விடாமல், அரசு (அதிகாரிகள்) கட்டுபாட்டில் வைத்திருந்த நாடுகளில் வறுமை இன்னும் அதிகமாக உள்ளது என்பதே பாடம்.

      ///லிபரலிசம் என்பதே பண்க்காரர்களின் அனார்கிசம் தான்///

      இல்லை. மிக தவறான புரிதல்.

      • //ஆனால் சந்தையால் தான் செம்மையாக தீர்மானிக்க கூடிய விசியங்களை//

       என்னேன்ன செம்மையான விசயங்கள் என்றும் எப்படி செம்மையாக தீர்மானிக்கும் என்பதை விளக்கவும்

       • 1945இல் இரண்டாம் உலகப்போரில் பேரழிவு அடைந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, தைவான், மலேயா போன்ற நாடுகள், பிறகு சந்தை பொருளாதார கொள்கைகளை பல முறைகளில் அமல்படுதி, இன்று வளர்ந்த நாடுகளாக உருமாறின. அந்நாடுகளில் எந்த எந்த விசியங்கள் சந்தை தீர்மனிக்க அனுமதிக்கப்பட்டனவே, அவைகளை தான் சொன்னேன். மாறாக இந்தியாவில் சமீப காலங்கள் வரை அரசு எகோகபொகம் மற்று கடும் கட்டுபாடுகள் பல துறைகளில் இருந்தால் ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் பார்க்கவும்.

        பொது போக்குவரத்து துறை ஒரு நல்ல உதாரணம் : லாரி மற்றும் டெம்போ வாகன துறையில் அரசின் தலையிடு மிக மிக குறைவு. அரசு பொருள் போக்குவரத்து கழகம் எதையும் நடத்தவில்லை. தேசியமயமாக்கவில்லை. எனவே இன்று பொருள் போக்குவரத்து துறையில் பெரிய அளவில் சிக்கல்கள், பற்றாக்குறைகள் இல்லை. ஆனால் பஸ் மற்றும் சிற்றுந்துகளில் நேர் எதிரான நிலை. கடும் பற்றாக்குறை, என்வே இரு சக்கர மற்றும் இதர சொந்த வாகனங்கள் பெருத்து, கடும் நெருசல் மற்றும் போதிய பஸ்கள் இல்லா நிலை. இதிலும் சந்தை பொருளாதார கொள்கைகளை அனுமதித்திருக்க வேண்டும். லாரி துறை போல் உருப்பட்டிருக்கும்.

        கல்வி, மருத்துவம், சாலைகள் அமைத்தல், அடிப்படை கட்டுமானம் போன்றவைகள் தவிற பிற துறைகள் அனைத்திலும் அரசு நுழையாமல், சந்தை பொருளாதார பாணியை அனுமதிருக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க