Tuesday, May 17, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!

ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!

-

மிகயில் கலாஷ்னிகோவ்
ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிகயில் கலாஷ்னிகோவ்

93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை.

அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ்.

இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் ரசியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தில், கலாஷ்னிகோவ் என்ற பெயரின் வணிக மதிப்பு $1000 கோடி (சுமார் ரூ. 60,000 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இஜ்மாஷ் என்ற ரசிய நிறுவனம் அவரது பெயரை பயன்படுத்திக் கொள்வதற்காக பல கோடி ரூபாய் உரிமத் தொகையாக அளிக்க முன்வந்த போது அவர் அதை மறுத்து விடுகிறார். தன் வாழ்நாள் முழுவதுமான உழைப்பும், அதன் விளைவுகளும் தன்னை உருவாக்கி, வளர்த்து, பராமரிக்கும் சமூகத்திற்குத்தான் சொந்தம், தனிப்பட்ட முறையில் தனக்கு அதன் மீது எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி விட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் 65 வயதான ஒரு நிறுவனம். அந்நிறுவனம் 1998-ம் ஆண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்ற பாடலுக்கான காப்புரிமையை (சொத்துரிமையை) கைப்பற்றியது. ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கட்டணமாக $1500 (ரூ. 90,000) ஐ அந்த நிறுவனம் வசூலிக்கிறது. கட்டணம் செலுத்தாமல் பாடலைப் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $1,50,000 (ரூ. 90 லட்சம்) வரை அபராதமாக வசூலிக்கிறது.

இத்தனைக்கும் அந்தப் பாடல் வரிகளையோ, இசையையோ உருவாக்கியது அந்த நிறுவனம் இல்லை. அந்த மெட்டு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. வரிகள் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டன. இதை ஆங்கிலம் தெரிந்த மக்கள் உலகமெங்கும் பாடி வருகிறார்கள். இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு காப்புரிமை பெற்றிருக்கும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயர் வார்னர் மியூசிக்.

வார்னர் மியூசிக் 2012-ம் ஆண்டு திரட்டிய மொத்த விற்பனையின் மதிப்பு $270 கோடி (சுமார் ரூ. 14,000 கோடி). இதன் பெரும்பகுதி பல்வேறு இசைக் கலைஞர்களின் படைப்புகளை தனக்கு ‘சொந்தமாக்கி’, அந்த சொத்துடைமையை அங்கீகரிக்கும் முதலாளித்துவ சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு குவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் உருவாக்கிய படைப்பை தனது சொத்து என்று ஒரு நிறுவனம் உரிமை கொண்டாடும் வண்ணம் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நேரடியாகவும், வளைத்தும் பயன்படுத்தி வார்னர் போன்ற நிறுவனங்கள் உலக மக்களைச் சுரண்டி வருகின்றன. ‘இது எங்கள் சொத்து. இதற்கு எங்களிடம் உரிமை இருக்கிறது’ என்ற முதலாளித்துவ அறத்தின் மூலம் அதை நியாயப்படுத்துகின்றன.

ஹேப்பி பர்த்டே பாடல் வரிகளுக்கும், இசைக்கும் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகச் சொல்லி வார்னர் நிறுவனம் இது வரை $15 கோடி (சுமார் ரூ. 900 கோடி) சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் சோசலிசம் உருவாக்கிய சமூக மனிதர் மிகயில் கலாஷ்னிகோவ். அமெரிக்க முதலாளித்துவம் உருவாக்கிய சமூக சுரண்டல் நிறுவனம் வார்னர் மியூசிக். போர்களில் மனிதர்களை கொல்லப் பயன்படும் துப்பாக்கியின் அதி நவீன வகையைக் கண்டுபிடித்தவரின் இதயத்தில் சமூக உணர்வு நிறைந்திருக்கிறது. பிறந்த நாள் வாழ்த்து எனும் மெல்லிய உணர்ச்சியை விற்பனை செய்யும் வார்னர் மியூசிக்கின் இதயத்தில் சமூக விரோதம் நிறைந்திருக்கிறது.

கம்யூனிசம் என்றால் என்ன, முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ?

– அப்துல்
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013

_________________________________________________

 1. வார்னர் பிரதர்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது :

  http://www.thehindu.com/news/international/world/happy-birthday-to-you-copyright-challenged/article4815205.ece

  விசாரனை முடிந்த பின் தெரியும். இதுவும் முதலாளித்துவம் தான்.

  காப்பிரைட்டே கூடாது என்றால், புதுசா யாரும் எதையும் கண்டுபிடிக்க முயலமாட்டாங்க. விதிவிலக்கா சிலர் இருப்பாங்க. ஆனால் மருந்து கம்பெனிகள் போன்றவை R and D க்கான செலவுகளை முற்றாக கைவிட்டுவிட்டு இருக்கிற மருந்துகளை கொண்டே ஓட்டுவாக. புதிய கண்டுபிடிப்புகள் வராது.

  பென்சிலின் உள்பட பல அரிய மருந்துகள் தனியார் முயற்சிகளால் தான் உருவாச்சு. சரி, ஒரு எழுத்தாளர் கடினமாக உழைத்து ஒரு புத்தகதை எழுதி பணம் சம்பாதிக்கிறார். ஆனால் அது நல்லா விக்கிது என்று தெரிந்து, காப்பிரைட் சட்டம் இல்லாத பட்சத்தில் பலரும் இஸ்டத்துக்கு அதை அச்சடித்து சம்பாதிதார்கள் என்றால் எப்படி இருக்கும் ? எழுத்தாளுருக்கு கிடைக்க வேண்டிய லாபத்தை அவருக்கு அளிக்காமல் மற்றவர்கள் ஏமாற்றுவதற்க்கு வழி வகுக்கும்.

  • நாம கற்றது பெற்றது எல்லாமே இந்த சமூகத்தில் இருந்துதானே , இதிலே எனக்கு மட்டும் சொந்தமென சொல்ல என்ன உரிமை இருக்கிறது . சமூகத்துக்காக எழுதும் எழுத்தாளன் தன்னுடைய படைப்பு அதிக மக்களை சென்றடைய நினைப்பானா லாபம் சம்பாதிக்க நினைப்பானா ? முதலாளிகள் பக்கம் நின்றுகொண்டு சிந்தித்தால் காப்புரிமை அட்சய பாத்திரமாக தெரியும் , ஏழை எளிய மக்கள் பக்கம் நின்று பார்த்தால்தான் காப்புரிமையின் வலி புரியும் . எனக்கு ஒரு மருந்து தேவையாக இருக்கிறது , அந்த மருந்தும் உலகத்தில் கிடைக்கிறது காப்புரிமை காரணமாக விலை அதிகமாக இருக்கிறது என்னால் வாங்கும் அளவு சக்தி இல்லை நான் என்ன செய்யிறது சொல்லுங்க .

  • இது தவறான வாதம். சமூக அக்கறை உள்ள மனிதர்கள், தன்னையே சோதனையில் ஈடுபடுத்தி புதிய கண்டுபிடிப்புகளை இந்த சமூகத்திற்கு அளித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

   பிறந்த நாள் வாழ்த்து பாடலில் என்ன கண்டுபிடிப்பு இருக்கிறது.

   இங்கு எழுத்தாளனின் நலம் வேண்டும்தான். ஆனால் அது பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமெனில் அந்த எழுத்தாளன் மக்களால் காக்கப்படுவான்

 2. //இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் ரசியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.//

  அதென்ன போலி சோசலிச குடியரசுகள்…புரிந்து கொள்ள விளைகிறேன்

  • எனக்கும் இதே சந்தேகம் தான். இந்த உலகில் உண்மையான சோஷலிச அல்லது கம்யுனிச நாடுகளே இல்லையா? இதற்கு என்ன காரணம்? இது சாத்தியம் அற்றதா?

   • மகிழ்நன், ஆதித்தன்

    சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தில்(USSR-Union of Soviet Socialist Republics) கீழ்க்காணும் நாடுகள் சோசலிசக் குடியரசுகளாக இருந்தன.

    உக்ரைன்,கஜகஸ்தான், பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான், லித்துவேனியா, துர்க்மெனிஸ்தான், லாட்வியா, எஸ்டோனியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா ஆகியவை.

    1953 ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு குருசேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் ஸ்டாலின் மீது அவதூறுகளைப் பரப்பி மெல்ல மெல்ல சோவியத் யூனியனை முதலாளித்துவ நாடாக்கியது. எனினும் ஸ்டாலின் மறைவிலிருந்து 1991 வரை அவை கம்யூனிச/சோசலிசப் போர்வையில் தான் இருந்தது. சோவியத் குடியரசுகளில் ஸ்டாலின் கால சோசலிச ரஸ்யாவில் என்னென்ன மக்கள் நலத் திட்டங்கள் இருந்ததோ அவற்றில் பெரும்பாலானவை அப்படியே தொடர்ந்தன.

    சோவியத் குடியரசுகளில் சோசலிசக் கூறுகள் இருந்தன; அதே வேளையில் அவை வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. ஆகவே தான் அவை “போலி சோசலிசக் குடியரசுகள்” என்று அழைக்கப்படுகின்றன.

    1991க்குப் பிறகு சோவியத் ஒன்றியம் முழுமையான முதலாளித்துவ நாடாக மாறி துண்டு துண்டாகிப் போனது.

    அதே போல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வீழ்த்திய ஸ்டாலின் தலைமையிலான செம்படை நாஜிக்களின் பிடியிலிருந்த கிழக்கு ஐரோபிய நாடுகளை விடுவித்தது. அந்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் ஆட்சி அதிகரத்தைக் கைப்ப்ற்றினர். இதை ” ” என்பர்.

    போலந்து, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, அல்பேனியா, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தான் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிச நாடுகள் ஆகும்.

    ஆனால் 1991க்குப் பிறகு மேற்கண்ட நாடுகள் முதலாளித்துவ நாடுகளாகின.

    தொடர்புடைய பதிவு:
    மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
    https://www.vinavu.com/2012/10/26/welfare-state/

 3. அப்படினா…

  எதோ ஓரு கதை எழுதுபவரின் பதிப்புரிமையை மீறி காப்பியடித்தை பற்றி பழையக் கட்டுரையை வினவு படித்தால் போதும் காப்புரிமை தேவையா வேண்டாமா என தெரிந்துவிடும்..

 4. Adhiyaman,

  Ur comment is funny and very much illogical. So u r trying to say that all the human inventions were sponsored by corporate? Who sponsored the number systems?Fire?wheel? After these corporate, the world of science and invention lost their innovative touch. Refer the interview from shiva ayyadurai who invented email. Its just an example. So pity that u cant think to this much level, even though u claim to have high knowledge on social and economical science.

  • Veltamil,

   There are differences between discoveries or inventions of general science and specific technology. There are of course selfless inventors who do not want to patent their inventions. good for them. but the great majority of the inventors do want to make profit for their inventions. Look at this facebook and MS windows and many other s/ws. suppose if there were no copyright acts at all, there would not have been these many innovations.

   Pencillin was developed in a corporate MNC company. so do many many other vital drugs whose patent has now expired. or try to abolish these laws and see the results.

  • Veltamil,

   there is nothing funny or illogical in patent rights regime. without that there would have been no major innovations in many fields. Of course there are people who do not care for money and who dedicate their inventions for the people. they should be lauded, yet. but they are a tiny minority while the great majority will be demotivated if they do not get the proper rewards for their innovations. Try to look at the R & D expenses in developing new molecules in any phrama co.

 5. சிவ அய்யா துரை கம்புட்டர் துறையில் அப்படி ஓன்னும் பெரியதாக கிழிக்கவில்லை. அவரை விட சாதித்தவர்கள் பல பேர்..
  காப்புரிமை என்பது idea வாக இருந்தால் போதுமானது. அதற்கு hardware தேவையில்லை…

  Except… that “clarification” seems to confuse copyright with patents. Copyright is only over the specific copyrightable work created — which would be the specific code he used. It does not, in any way, establish him as “the creator” of “the” electronic mail system — merely an electronic mail system — and hardly the first one. I could write some sort of email management software tomorrow and copyright that… and it would no more make me an “inventor” of email than Ayyadurai.

  http://www.techdirt.com/articles/20120222/11132917842/how-guy-who-didnt-invent-email-got-memorialized-press-smithsonian-as-inventor-email.shtml

  அதைபோல் VLC for windows 8 என்று ஓர் தமிழ்நாட்டு பக்கி போலியாக வெளியிட்டு உள்ளார்… அதை vlc நிர்வாகம் தன்னுடையது அல்ல என மறுத்துள்ளது,,,,

 6. Shiva ayyadurai said once that the world of science and innovation been hijacked by corporate. Whether his contributions are really worthy is out of topic here. Here i tried to highlight whether the human knowledge is for the people which we got from the people or just for profit and corporate business strategy?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க