privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்போலி ரேசன் அட்டையால் ஆதாயம் அடைவது யார் ?

போலி ரேசன் அட்டையால் ஆதாயம் அடைவது யார் ?

-

டந்த மூன்று வாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி – திடீர் சோதனைகளில் 3,000 போலி குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒன்பது கடை நிலை ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்களின் அளவு 64,000 டன் குறைந்துள்ளது. ஒரு கடையில் மட்டும் மொத்த 982 கார்டுகளில் 400-க்கும் மேற்பட்டவை போலிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள்ஈரோடு மாவட்டத்தில் 19 நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளில், மொத்தம் 7.15 லட்சம் அட்டைகளில் 1.85 லட்சம் அட்டைகள் சோதிக்கப்பட்டன. அவற்றில் 3,236 அட்டைகள் (அதாவது 1.7%) போலியானவை என கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1,056 போலி அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையின் படி 2009-10 ஆண்டுகளில் மட்டும் 2.48 கோடி போலி குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய திட்டக் கமிசன் பொது விநியோகமுறை செயல்திறன் பற்றிய அறிக்கையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் தானியத்தில் 16.67% போலி குடும்ப அட்டைகள் வழியாகவும், 19.71% ஊழல்களாலும், கள்ளச்சந்தைக்கு விற்கப்படுவதாக கூறியுள்ளது.

2003-04 ஆண்டில் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1.4 கோடி டன் உணவுப் பொருட்களில் இருந்து 59.3 லட்சம் டன் (அதாவது பாதிக்கும் குறைவு) மட்டுமே பயனாளர்களுக்கு சென்றடைந்தன. மொத்த மானியத் தொகையான ரூ 7,258 கோடியில் ரூ 2,640 கோடி கள்ளச் சந்தைக்கு கசிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 51.2 லட்சம் டன் உணவுப் பொருட்களை, கிலோவுக்கு 10 ரூபாய் லாபம் வைத்து விற்றிருந்தாலும் கூட 5,120 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாதிரி கணக்கீடு அமைப்பின் அறிக்கையின்படி நகர்ப்புறங்களில் 81% குடும்பங்களும், கிராமப்புறங்களில் 67% குடும்பங்கள் மட்டுமே குடும்ப அட்டைகள் வைத்துள்ளன. எனில் மொத்த மக்கள் தொகையை விட அதிக கணக்கு வரும்படியான போலி ரேஷன் அட்டைகள் எப்படி உருவாகின்றன, அவற்றால் யார் ஆதாயமடைகிறார்கள்?

பொது வினியோகத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை வெளிச் சந்தையில் விற்று லாபம் சம்பாதிப்பதை ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், அதிகார வர்க்கம் மற்றும் பெரு வணிகர்கள் அடங்கிய வலைப்பின்னல் நடத்தி வருகின்றது. இதற்காகவே இவர்கள் போலி ரேஷன் கார்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவ்வட்டைகளுக்கு விற்கப்பட்டதாய் கணக்கு காட்டித்தான் ரேசன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. ஆகவே அரசு போலி கார்டுகளை பிடிப்பதாய் கூறுவது தன்னைத்தானே பிடிப்பதாகத்தான் பொருள்.

இந்த நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்த வக்கில்லாத அரசு, பொது வினியோகத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதன் மூலம் அதில் இருக்கும் குறைபாடுகளை தீர்ப்பதாக கூறுகிறது. ‘உணவு கூப்பன்’, ஆதார் அடையாள அட்டை, ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ போன்ற திட்டங்களின் மூலம் பொது விநியோக முறையை முழுவதுமாக கைவிட்டு உணவுப் பொருள் கொள்முதல், வினியோகம், விற்பனை துறையை முழுக்க முழுக்க தனியார் மயப்படுத்தும் சதியை நிறைவேற்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க