Thursday, March 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

-

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

22.09.2013 அன்று திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  ‘கோடானு கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே’ என்ற பாடலை பாடி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் சாருவாகன் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்தோடு கடந்த ஒரு வாரமாக திருச்சியில் பேருந்துகளில், பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த அனுபவத்தை தொகுத்து கூறினார். இளைஞர்களுக்கு மோடியும், பாஜகவும் செய்தது என்ன? கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராட்டம், சமச்சீர் கல்விக்காக போராட்டம், ஈழ இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் என்று இளைஞர்கள் சார்பில் போராடுவது புரட்சிகர அமைப்புகள் மட்டும்தான் எனவும் இத்தகைய பிரச்சினைகளில் பாஜகவினர் எதிராக ஆளும் வர்க்கங்களின் கைக்கூலியாக செயல்பட்டனர் என்பதையும் விளக்கி பேசினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நரேந்திர மோடி குறித்த பிம்பத்தை திட்டமிட்டு உருவாக்குவதை அம்பலப்படுத்தினார். “குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்கள், அது என்ன வளர்ச்சி என்று யாருக்கும் தெரியாது. அப்படி திட்டமிட்டு உருவாக்கப்படும் முகமூடியை கிழிப்பதுதான் பொதுக்கூட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

“ஈழத் தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி லட்சக்கணக்கான பேரை கொன்று குவித்த ராஜபட்சேவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல நரேந்திர மோடி. அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராக சங்க பரிவார் அமைப்புகள் கொலை வெறிக் குற்றங்களில் ஈடுபடும் போது காவல் துறை அதனைக் கட்டுப்படுத்தாமல் விட்டு விடுமாறு சொன்னவர் நரேந்திர மோடி.

கொலைகளை நாங்கள்தான் செய்தோம் என்று பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லியிருக்கிறார்கள், மோடி காவல் துறையை செயல்பட வேண்டாம் என்று தடுத்ததாக மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியே சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குஜராத் நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லை, மோடி நவீன நீரோ மன்னன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இதை எல்லாம் மறைப்பதற்கு மோடியைப் பற்றிய பிரச்சாரத்தை ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்வது போல செய்கிறார்கள். இதை முறியடிக்க தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக நடக்கும் இயக்கம் இந்தியா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். ராஜபட்சேவை இனப்படுகொலைக்காக தண்டிக்க வேண்டும் என்று நாம் போராடுவது போல நரேந்திர மோடி முஸ்லீம் மக்களின் படுகொலைக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார்.

“கேள்வி கேட்காமல் மோடிதான் தலைவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தான் என்று மசூதியை இடித்தார்கள். அது எங்கள் நம்பிக்கை. அதைக் கேள்வி கேட்கக் கூடாது. நாங்கள் மசூதியை இடிப்போம் என்றார்கள். அது போல மோடி திறமையானவர் என்பது அவர்களது நம்பிக்கை, அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அதை ஆராயக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம்.

‘இளம் தாமரை மாநாட்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்குத் தெரியாத உண்மை உங்களுக்குத் தெரிந்து விட்டதா. லட்சக்கணக்கான இளைஞர்கள் மோடி பிரதமர் ஆவார் என்று நம்புகிறார்கள், உங்களுக்கு என்ன பிரச்சனை’ என்று கேட்கிறார்கள். இன்றைக்கு வரலாறு தெரியாத இளைஞர்களுக்காக பொய்யான செய்திகள், மோசடி இணைய பிரச்சாரங்கள் உருவாக்கப்படுகின்றன.”

“1992-ல் மனு தர்மத்தின் காவலன் ராமன் படம் எரிப்பு போராட்டம், 1993-ல் திருவரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் என்று பார்ப்பனிய இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் தமிழ்நாட்டில் இடையறாத விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனால், திராவிட இயக்கத்தின் வாரிசுகள் என்று சொல்லக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு, தங்களுடைய பதவிக்காக, தங்களுடைய பிழைப்புக்காக அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொடுத்தார்கள்.

2002-ல் குஜராத்தில் மோடியால் முசுலீம் இனப்படுகொலை நடத்தப்பட்ட போது திமுக, மதிமுக கட்சிகள் அதே கூட்டணியில் இருந்தார்கள். வை கோபால்சாமி, தான் நாடாளுமன்றத்தில் மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதை பெருமையாக எழுதினார்.”

“பாரதிய ஜனதா கட்சி மதக் கலவரத்தை தூண்டும் போதுதான் தலையெடுக்க முடிந்தது. 1985-ல் இந்தியாவில் தனியார்மயம், தாராள மயம் அமலாக்கப்பட்ட பிறகுதான் மதவெறி அரசியல் தலையெடுத்தது. ராஜீவ் காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டு, நரசிம்மராவ் ஆட்சியில் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியில் இந்த மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இன்றைக்கு தனியார்மயத்தின் விளைவாக நடந்துள்ள காங்கிரசின் ஊழல்களை பற்றி குற்றம் சாட்டும் அருகதை பாரதிய ஜனதா கட்சிக்கு கிடையாது.

2004-ல் இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரம் கொடுத்தார்கள், அதை எதிர்த்து சாதாரண மனிதனின் இந்தியா (ஆம் ஆத்மி) என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது. அப்போது மகத்தானவராக நிறுத்தப்பட்ட மன்மோகன் சிங் இப்போது இந்திய தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் தேவைகளை நிறவேற்றிக் கொடுப்பதில் திறமையாக செயல்படவில்லையாம். அதனால் இப்போது இந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஒரு பாசிஸ்ட் தேவைப்படுகிறான். அதுதான் மோடி. 2002 மதப் படுகொலை நடத்தியது போன்று இரக்கம் இன்றி மக்களை ஒடுக்கும் நபர்தான் அவர்களுக்கு தேவை. அதுதான் மோடி.”

“மேற்கு வங்காளத்தில் மக்கள் போராடி விரட்டியடித்த டாடா  நானோ கார் தொழிற்சாலையை மோடி வரவேற்று குஜராத்தில் இடம் கொடுத்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் நிலத்தைப்  பிடுங்கி டாடாவுக்கு கொடுத்ததுதான் அவரது சாதனை. மாருதி தொழிலாளர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதை எதிர்த்து போராடிய போது, நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் சுசுகியை எதிர்த்த போது, சுசுகி நிறுவனத்தை குஜராத்துக்கு வரவேற்க ஜப்பானுக்கு போன கருங்காலி மோடி.”

“குஜராத் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்று சொல்கிறார்கள். இது உலக மகா பித்தலாட்டம், பொய். எந்த ஆதாரமும் இல்லாத மிகப்பெரிய மோசடி. புள்ளிவிபரங்களின் படி குஜராத்தில் மக்களுக்கு ஊட்டச் சத்து இல்லை, நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள்.  வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கு மட்டும்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என்பதை விளக்கும் புள்ளிவிபரங்களையும், தகவல்களையும் குறிப்பிட்டு விளக்கிப் பேசினார்.

(இந்த முக்கியமான உரை ஆடியோ பதிவாக இன்று மாலை வினவில் வெளியிடப்படும்.)

அதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்துமதவெறியை அம்பலப்படுத்தும் பாடல்கள், மதவேறுபாடுகளைக் கடந்து நாம் பாட்டாளியாக ஒன்றிணைவதை வலியுறுத்தும் பாடல்கள் எனப் பல்வேறு பாடல்களை தோழர் கோவன் தலைமையிலான மையக் கலைக்குழுத் தோழர்கள் ஆடலுடன் பாடினர். இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் மேடைக்கு முன் நாற்காலிகளில் அமர்ந்தும், சாலையின் மறுபுறம் கூடி நின்றும் உரைகளையும், கலை நிகழ்ச்சியையும் கேட்டனர். குறிப்பாக இசுலாமிய மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தோரும் வந்திருந்தனர். கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000 ஆகும். இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

மிகக்குறுகிய காலத்தில் இந்த பிரச்சார இயக்கத்தை திருச்சி மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தோழர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த மூன்று தோழர்களை முப்பது பாஜக குண்டர்கள் சேர்ந்து தாக்க முயன்றனர். ஆனால் தமது அரசியல் மேலாண்மையால் அதை தடுத்து நிறுத்திய தோழர்களை பின்பு போலீசு கூட்டிச் சென்று அனுப்பியது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் பாஜகவின் நிர்ப்பந்தத்தால் போலீசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி இந்து மதவெறியருடன் தெரு மோதல்களும் இந்த பிரச்சாரத்தில் நடந்தன. திருச்சி நகரமெங்கும் மோடி எனும் இந்துமதவெறி பாசிஸ்ட் மற்றும் கார்ப்பரேட் கைக்கூலியின் மோசடிகளை தோழர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர்.

1. பிரச்சாரம், போஸ்டர்கள்

2. பொதுக்கூட்ட ஏற்பாடுகள்

3. மேடைக் காட்சிகள்

4. மக்கள் கூட்டம்

5. கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தோழர் ராஜு, தோழர் மருதையன் ஆகியோரின் உரைகளை விரைவில் தனியாக வெளியிடுகிறோம்.

  1. ஸ் யப்பா என்னால முடியல எத்தன தடவதான் சொல்றதுன்னே தெரியல மோடிக்கு விளம்பரம் தேவை இல்லை …

    எதிர்ப்பு என்னும் பெயரில் நீங்கள் செய்வது மோடிக்கு சாதகமாகவே அமையும்

    மோடியை மறந்தவர்களுக்கு கூட உங்கள் பிரசாரத்தின் மூலமாக அவர் ஞாபகம் வந்து அவருக்கே ஓட்டு போடுவார்கள்

    ஜாக்கிரதை

    • ஸ்.. யப்பா மணி, உன் சத்தம் தாங்கமுடியலை. என்ன இதற்கு முன் கோயிலில் மணி ஆட்டிக்கிட்டிருந்தாயா? திரும்பத் திரும்ப ஒரே மாதிரி ஆட்டிக்கிட்டிருகிறாயே?
      நடுவீட்டில் பன்றியை கொண்டு வந்து கட்டாதே என்று சொன்னால் அது பன்றிக்கு விளம்பரம் என்று சொல்வாயா?

    • என்ன Mr. Money, மோடியோட பி.ஆர் ஏஜென்சில மீட்டருக்கு மேல போட்டு குடுக்கறாய்ங்க மாதிரி இருக்கே… தீயா வேல பார்க்கறீங்களே?

      Keep your cheap marketing techniques away and if you got guts, get on a debate here.

      என்னோட இணைய அனுபவத்தில் நீங்கள் செய்வதை விட சீப்பான ஆன் லைன் மார்க்கெட்டிங்கை பார்த்தாச்சு பாசு.. வேற மாதிரி ட்ரை பண்ணுங்க.

  2. ஸ் யப்பா மணி, ஓட்டு போட்டாலும்,போடலைன்னாலும் ஆட்சி அதுபாட்டுக்கு நடந்துகினே இருக்கும்ப்பா!!

    • Dear Brother AAR,
      Modiyai Prime Minister Aakkinaal Brahmins Thavira Vera Yaarum Indiavil Nimmathiya Irukka Mudiyaathu.Appuram Konja Naal Kalitthu Modikkum Umabharathi,Bangaru Lakshmanan, Kalyansingh Ivanga Nilaithaan.Neenga Solra ‘Ramaraajyam’ Amainthuvittaal, Neenga Kavalaiye Paddaatheenga Automaticaa Konja Varudangalileye India Islamic Contryaa Maaridum.Raamaraajayatthil Udankattai Yerum Valakkam(Sati),Manutharmam(Uyarnthor Thaalnthor Verubadu),Devadaasi murai Etc..ithaiyellam Indiavil Sattamaakkiruvaanga(Ithellam BJP,RSS ajendala Irukku)Appadi Kondu vanthitta Indiavil Brahmins Thavira Matraiya Hindu Sahothara Sahotharihal Yaarum Nimmathiya Vaala Mudiyaathu.Indiavil Islam Paraviyatharkku Kaarnamey Intha Kodumaiyaana Palakkangalai Aariyarhal Makkalmeethu Thinitthathaalthaan. Athanaala Dear Brother Neenga Modi Govt.kondu vanthaalum Vodapporathu Muslimgal Illai.Vantherihalthaan!!!..

      • Reason I am supporting Modi/BJP is Congress rule has taken corruption to new record level we should get rid of it. Can you give any other alternative to Modi/BJP? Third front only split the votes and bring corrupt people mayawati, jj, kk, mamta, naidu to power.

        muslims are waging a war with population. Keep the muslim women as uneducated slave, make here give birth to as many muslims as possible, increase the population in an area and when reached majority kick out others. This is what happening in muzzafarnagar. It happened in melapalayam, melvisharam, in jammu kashmir, in west bengal.

        I am not worried because as long as Jews control this world through Israel and America, they will not allow muslims to dominate. Slowly they are destroying each and every muslim country – afghanistan, iraq, syria, iran, pakistan. saudi arabia, uae are just stooges for USA. Whatever population build up in muslim country, jews will destroy in one single bomb.

  3. 2500 கலவர கொலைகளில் மோடியின் பங்கு அதிகம்! முதல்வராய் இருக்கும் பொழுதே இவ்வளவு என்றால், பிரதமரானால் கலவரங்களில் பொழுது விடியும்!

    10 ஆண்டுகளில் வகுப்பு கலவரங்களில் 2,500 பேர் சாவு – செய்தி

    நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள வகுப்புக் கலவரங்களில் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும், இந்த ஆண்டு மட்டும் 107 பேர் இறந்துள்ளதாக உள்துறை அமைச்சகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள 8,473 வகுப்புக் கலவரங்களில் 2,502 பேர் இறந்துள்ளதோடு, 28,668 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆண்டில் மட்டும், அண்மையில் நடந்த முசாஃபர் நகர் வகுப்புக் கலவரம் உள்ளிட்ட 479 சம்பவங்களில் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் மொத்தம் 1,697 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் நிகழ்ந்த 668 வகுப்புக் கலவரங்களில் 94 பேர் இறந்துள்ளனர். 3,117 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 245 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டில் நிகழ்ந்த 580 வகுப்புக் கலவரங்களில் 91 பேர் இறந்துள்ளனர். 1,899 பேர் காயமடைந்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்களில் 419 பேர் இறந்துள்ளனர். 2010-ல் நிகழ்ந்த 701 கலவரங்களில் 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,138 பேர் காயமடைந்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 537 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த 2002-ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 1,130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த ஆண்டில் நிகழ்ந்த 722 வகுப்புக் கலவரங்களில் 4,375 பேர் காயமடைந்தனர்.

    • The numbers dont indicate anything too different.

      UP riots are much worse,Gujarat has a clear divide between Hindus and Muslims,states like UP/Bihar are different,Riots there are unexpected as the 2 communities are much closer with more converts from all castes.

  4. தமிழகத்தில் தான் பார்ப்பனியத்திற்கு கல்லறை என்பதை பெரியாரின் கோட்டையாக திகழ்ந்த திருச்சிராப்பள்ளியில் உறுதிப்படுத்திய பெரியாரின் வாரிசுக‌ள்.

    ஒருங்கிணைத்த ம.க.இ.க.(மக்கள் கலை இலக்கிய கழகம்) தோழர்களுக்கு வாழ்த்துகள்.

    • ///தமிழகத்தில் தான் பார்ப்பனியத்திற்கு கல்லறை///
      எத சொல்லிறிய குருநாதா.. ஜெ திருச்சி-ஸ்ரீரங்கத்தில அமோக வெற்றி வாகை பெற்றத வச்சா சொல்றிய…

  5. மோடியின் ஆட்சியில் இவ்வளவு கொலைகள் என்று பிதற்றுவூர் இதனை படியுங்கள் .

    நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான், மோடிக்கு ஆதரவாக அளித்த பேட்டி,
    “மோடியை எதிர்க்கும், “மேதாவிகள்’ நிச்சயம் இதை படிக்க வேண்டும்’ என்ற தலைப்பில், அவரது பேட்டி பகிரப்பட்டுள்ளது.

    அவரது பேட்டி வருமாறு:
    1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என, யாருக்காவது நினைவிருக்கிறதா?
    2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதல்வராக இருந்தார் என, நினைவிருக்கிறதா?
    3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது, இப்போது சொல்லப்படுகிறதா?
    4. டில்லியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், படுகொலைகளின் போது, டில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பது தெரியுமா?
    5. நரேந்திர மோடியை, பேய், பிசாசைப் போல் வர்ணிப்பவர்கள், ஏன் மேற்சொன்ன, காங்கிரஸ் ஆட்சி கால நிகழ்வுகளை பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை?

    ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் திட்டம், குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி, 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கிறது. “குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை’ என, உலக வங்கி சொல்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், ஆமதாபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.”குஜராத்தில் தான், வேலையில்லா திண்டாட்டம் குறைவு’ என்று, மத்திய அரசின் தொழில் துறை சொல்கிறது. கடந்த, 10 ஆண்டுகளில், எந்த சிறு கலவரமும் நிகழவில்லை. இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலக்கட்டத்தில், குஜராத்திலும், பிற மாநிலங்களிலும் நடந்த மதக் கலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்…

    கடந்த, 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில், 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர்; 1987ல் ராஞ்சியில், 200 பேர்; 1969ல் ஆமதாபாத்தில், 512 பேர் பலியாகினர். 1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர்; 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர்; 1983ல் அசாம் கலவரத்தில், 5,000 பேர்; 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.கடந்த, 1985ல் குஜராத் கலவரத்தில், 300 பேர்; 1986ல் ஆமதாபாத் கலவரத்தில், 59 பேர்; 1982ல் மீரட் கலவரத்தில், 81 பேர்; 1992ல் சூரத் கலவரத்தில், 175 பேர் இறந்தனர்.கம்யூனிஸ்ட் ஆட்சியில், 1979ல் ஜாம்ஷெட்பூரில், 125 பேர் இறந்தனர்.காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக, குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே, மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. காரணம், வேறு எதையும் குறிப்பிட்டு, அவர்களால் கூற முடியவில்லை.

    குஜராத்தில், மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும், காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன. இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது, அரசியல்வாதிகளை மீறி, “மக்கள்’ வெற்றி பெறுவதாகும்.இவ்வாறு அவர் பேட்டியில் கூறி உள்ளார்.

    இதற்கு பதில் சொல்லுங்கள் பொய் பெயர்களுடன் வருபவர்களே ………..

    • Dear Brother Mani,
      Neenga sonna Kalavarangal Ellam Advani,Modiyoda Koottaalihal Aatchiyil Illaathapothu Rss koottaalihalaal seiyaaptta kalavarangal. Niroobikkappatta 16 kunduvedippuhal(Samjouda mudhal Pune Blast Varai) Advani koottaalihalal(Desabaktharhal?) Nadtthappattathu end kandupikkappattullathu.Insha Allah Innum Konja Naatkalil Unmai Velippadum(Parliment,Mumbai Attack Ivaiyellam Intha RSS-in Sathihal Endru)
      Modiyai Prime Minister Aakkinaal Brahmins Thavira Vera Yaarum Indiavil Nimmathiya Irukka Mudiyaathu.Appuram Konja Naal Kalitthu Modikkum Umabharathi,Bangaru Lakshmanan, Kalyansingh Ivanga Nilaithaan.Neenga Solra ‘Ramaraajyam’ Amainthuvittaal, Neenga Kavalaiye Paddaatheenga Automaticaa Konja Varudangalileye India Islamic Contryaa Maaridum.Raamaraajayatthil Udankattai Yerum Valakkam(Sati),Manutharmam(Uyarnthor Thaalnthor Verubadu),Devadaasi murai Etc..ithaiyellam Indiavil Sattamaakkiruvaanga(Ithellam BJP,RSS ajendala Irukku)Appadi Kondu vanthitta Indiavil Brahmins Thavira Matraiya Hindu Sahothara Sahotharihal Yaarum Nimmathiya Vaala Mudiyaathu.Indiavil Islam Paraviyatharkku Kaarnamey Intha Kodumaiyaana Palakkangalai Aariyarhal Makkalmeethu Thinitthathaalthaan. Athanaala Dear Brother Neenga Modi Govt.kondu vanthaalum Vodapporathu Muslimgal Illai.Vantherihalthaan!!!..

    • மோடியின் மணி அவர்களே! காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கொலைகள் பற்றி இவ்வளவு புள்ளி விபரம் தந்ததுக்கு மிகவும் நன்றி.மோடியானாலும் சரி, கேடியானாலும் சரி, மன்மோகனானாலும் சரி,மண்மோகன் ஆனாலும் சரி, இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் கொள்ளப்படுவது இந்த முதலாளித்துவ கைக்கூலிகளால் என்பது நிருப்பிக்கப்பட்டுவிட்டது.இனி இந்த படுகொலைகள் நிருத்தப்படவேண்டும் என்றால் புரட்சி தான் தீர்வு.இதை ஓங்கி உரக்க சொல்லுங்கள்.

    • முனி.அப்ப யார் ஆட்சி ன்னு கேக்குரீரே அந்த கலவரங்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிரை குடித்த அயோக்கிய சிகாமணிகள் யாருன்னு கேட்டு பாரும்.

    • குஜராத்தில் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பது உண்மை. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும் உண்மை. சில கலவரங்களில் குஜராத்தை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

      ஆனால் குஜராத் வன்முறைக்கும் இன்னபிற மாநிலங்களில் நடந்த வன்முறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சங்பரிவாரமும் அதன் சார்பு ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன.

      மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும்.

      மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள்.

      பெரும்பான்மை பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்தைத்தான் அவர்கள் செய்தனர்.

      ஆனால் குஜராத்தில் மோடிதான் கலவரத்தை நடத்தியவர். அவரது அமைச்சர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். காவல் நிலையத்தில்தான் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

      பிற ஆட்சியில் பிற மாநிலங்களில் நடந்த கலவரத்தின்போது 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அந்த மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

      குஜராத் கலவரத்தின்போது மோடி அல்லாத வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் அப்போது கொல்லப்பட்டவர்களில் கால்வாசி மக்கள் கூட கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

      மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரத்தை நடத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காக 28 ஆண்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

      உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

      காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

      மற்ற கலவரங்களுக்கும் மோடி நிகழ்த்திய கலவரத்திற்கும் இதுதான் பெரிய வேறுபாடு. இதைத் திட்டமிட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

      மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற மாநில அரசுகள் இழப்பீடு அளித்தன. இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரசுத் செலவில் புணர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதி மோடியோ இதைக்கூட செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

      மற்ற கலவரங்கள் ஆள்வோரின் திறமையின்மையால் நடந்தன.

      ஆனால் குஜராத் கலவரம் மோடியின் மதவெறித் திமிரால் திறமையாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

      நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரசின் திறமையின்மையும், அரசே கலவரத்தை முன்னின்று நடத்துவதும் சமமாகுமா?

      கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள்.

      ஆனால் கலவரக்கார்களை தப்பிக்க வைக்க எல்லா அயோக்கியத்தன்ங்களையும் செய்தவர் பயங்கரவாதி மோடி. நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கா விட்டால் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள். இந்த வித்தியாசம் தினமணிக்கும் தினமலருக்கும் தினத் தந்திக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவர்களின் மதவெறி இந்த உண்மையை மறைக்கச் சொல்கிறது.

      ஒரு ஊரில் காவல் நிலையம் இருந்தும் திருட்டுக்கள் நடக்கின்றன. 100 கோடி ரூபாய் அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

      இன்னொரு ஊரில் 10 கோடி அளவுக்குத்தான் திருட்டு நடந்துள்ளது. ஆனால் இந்த பத்து கோடி திருட்டையும் காவல்துறையினரே செய்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

      இரண்டும் சமமானதா? பத்து கோடியைவிட நூறு கோடி பெரிது என்று மனசாட்சியுள்ளவர்கள் பேசுவார்களா?

      ஒன்று சமூக விரோதிகளின் திருட்டு. இன்னொன்று காவல்துறையே நடத்திய திருட்டு என்று வேறுபடுத்தி பேச மாட்டார்களா? இவர்களைப் போலீஸ் வேலைக்கே வைக்கக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா?

      மோடி செய்த்து இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

      தினத்தந்தியும், தினமலரும் தினமணியும் என்னதான் திசை திருப்பினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். நடுநிலையான இந்துக்கள் மோடி என்ற பயங்கரவாதியைப் பிரதமராக ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.

      • குஜராத் கலவரங்களுக்கும், மற்ற கலவரங்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி நீங்கள் சொல்வது சரியானது தான். ஆனால், சில விஷயங்களை குறிப்பிட வேண்டும்.

        // மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும். //

        // மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள். //

        1984 தில்லி சீக்கியர்கள் கலவரம். காங்கிரஸ் கட்சி நேரடியாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உண்டு. இதில் முக்கிய குற்றவாளியான சஜ்ஜன் குமார் 2004 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் மீதான வழக்கை இழுத்தடித்து முடிவில் விடுவித்து விட்டனர். இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் கமல் நாத்துக்கும் கலவரத்தில் தொடர்பு உண்டு என சிலர் சொல்கிறார்கள். ராஜீவ் காந்திக்கு கூட இதில் தொடர்பு உண்டு என சொல்வாரும் உண்டு. போலீசும் இந்த கலவரத்தில் உடந்தை என சிபிஐ நீதிமன்றத்தில் சொல்லியது.

        // உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான். //

        முசாபார்நகர் கலவரத்தில் ஒரு பிஎஸ்பி எம்எல்ஏ கூட கைது செய்யப் பட்டுள்ளார்.

        // கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள். //

        நாட்டில் பல கலவரங்கள் நடந்துள்ளன என்பதே எனக்கு சமீபத்தில்தான் தெரியும். அந்த வகையில் மோடி ஆதரவாளர்கள் கூறும் அஸ்ஸாம் நெல்லி கலவரம் பற்றி படிக்க நேர்ந்தது. இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப் பட்ட திவாரி கமிஷன் அறிக்கையை அரசு வெளியிடவே இல்லை. யாரும் தண்டிக்கப் பட்டதாகவும் தெரியவில்லை.

        இவை எல்லாம் மோடி குற்றவாளியா என்ற கேள்விக்கு சம்பந்தமற்ற விஷயங்கள். அவருக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை. உங்கள் மறுமொழியோடு இவையும் பதிவு செய்யப் பட வேண்டும் என்பதாலேயே.

    • So, if I ask “Modi killed xxx number of muslims, why should I support him?”, then your reply will be “May be, but others killed many more than him and do you remember their names”. Is this a valid argument? It does not matter whether you killed one or millions, the truth is you failed to protect the innocents (regardless of their religion) in a state then what’s the guarantee that you will protect the country?

      The other question is does he believe in indian constitution which treats every indian citizen as equal and allow them to follow their own religion openly without fear. I doubt so, as he is fundamentally a hindu following the Hindu ideaology as his party’s propaganda says so.

      So, don’t just scratch the surface but look deep down and some of the muslims names you have mentioned are not ‘practicising’ muslims, they are considered muslims for their name, and nothing else and they are not common man.

  6. சமூக நல்லிணக்கத்தின்பால் அக்கறை உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார்களேயானால் அவர்கள் வரலாற்றில் அரியதொரு வாய்ப்பை நழுவ விட்டவர்களேயாவார்கள். சிறப்பு வாய்ந்ததொரு கூட்டம். வாழ்த்துகள்!

  7. வாழ்த்துக்கள் கட்டுரையாளருக்கு, கருத்து தெரிவித்து இருக்கும் அனைவருக்கும், காந்தியை கொனறவன் தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தாகவும் உள்ளது. உஙகள் இருவரிடமும் கேட்கிறேன் ஏன் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தபின் அடுத்த மதத்தவரின் பெயரை ஏன் பயன்படுதவேண்டும், இதிலிருந்து விளங்கவிள்ளையா உங்களுக்கு அவர்களின் பூரண சதிதிட்டம். அல்லது வரலாறு அல்லது அந்த வழக்குகின் உண்மை தெரியாத? தெரியாமலேயே பேசுவது அல்லது உண்மை மறைக்கவேண்டியது. முஸ்லீம்கள் பச்சை குத்தி கொள்ளும் உருவம் வரைந்து கொள்ளும் பழக்கம் இல்லதவர்கள் இதனாலேயே இந்த உண்மை வெளிகொணர முடிந்தது. இல்லையெனில் பெரிய ரத்த ஆறே அன்று முஸ்லீம்களுக்கு எதிராக ஓடி இருந்து இருக்கும். மேலும் உங்களிருவரிடமும் கேட்கிறேன், நீங்கள் அறிந்து கொள்ளவேண்டி இன்று நீங்கள் பயன்படுத்திகொண்டு இருக்கும் இந்த இணையதளம் அறிந்து கொள்ளவேண்டிய அறிவினை நீங்கள் அடைந்து இருக்க இதே கடந்த கால அமைப்பு கொண்டிருந்தால் இன்னேறம் உங்கள் தாத்தா அல்லது உங்கள் அப்பா என்ன தொழில் செய்து கொண்டு இருந்தாரோ அதேதான் நீங்கள் தொடர்ந்து இருக்க முடியும், ( குலத்தொழில் அதரித்த மிகப்பெரிய தேசிய அரசியல் தலைவர் உயரிய பதவியினை வகித்த அவர் ஒரு பார்பனியன் எங்கே கண்டறியுங்கள் அவனை உங்களால் முடிந்தால் எனக்கு பதில் கொடுங்கள் முடியாவிட்டல் தோல்வியினை ஒத்துகொண்டு கூறுங்கள் ஆதாரத்தொடு சந்திக்கிறேன் பதிலோடு ) உங்களை அதை விடுத்து வெளியேர விட்டு இருக்காது அந்த பார்பனிய ஆதிக்கம். இன்று வேண்டுமானல் நீங்கள் எகத்தாளத்தோடும் நக்கலோடும் வேண்டுமானல் உரையாடலாம் ஆனால் உயிரை கொடுத்து இன்று நீங்கள் அனுபவிக்கும் இந்த அரசாங்க உத்தியோகம் உயர் பதவி இவைகளை இன்று கூட அடையாவிடாமல் எதிர்க்கும் இந்த ஆதிக்க வெறி சக்திகளுக்கு எதிராக உயிரை கொடுத்தார்களே அவர்களை அசிங்கபடுத்தி விட்டிர்கள் நீங்கள் அதனால் தான் இத்தனை ஆண்டு ஆகியும் நாம் நமக்கு என்று சிறந்த தலைவன் இல்லாமல் இருந்து வருகிறோம். இன்றும் சிறுஅறிவோடே சிந்தித்து வருகிறோம். இன்னும் கூற அதிகம் உள்ளது இங்கு நீங்கள் கூறிய பார்பனிய எதிர்ப்பு என்று கூறியதற்க்கு பதில். இப்பவும் இல்லை எப்போதும் கூறுவேன் தான் வாழ அடுத்தவனில் முதுகில் ஏறி ஏற்றிசெல்லும் நபரின் சமூகத்தினையே அழிக்க நினைக்கும் கேடு கெட்ட இன புத்திதான் இந்த பார்பனிய நயவஞ்க புத்தி. இதற்க்குதான் பாம்பையும் பார்பனனையும் கண்டால் முதலில் அவனை கொல் என்று பெரியார் கூறியதாக கூறுவார்கள். அந்த அளவுக்கு கொடுர நயவஞ்கர்கள். நான் பார்பனியன் என்று கூறுவது நம் ஊரில் மந்திரம் ஓதி காசு பார்க்கும் அந்த அய்யர் அல்ல, அரசு இயந்திரத்தின் அதிகார மையத்தில் அமர்ந்தும், தொழில் வளத்தினை சுரண்டி வளர்ந்து போன அனைத்து பார்பனிய ஆதிக்க சக்தியே. நயவஞ்கத்தனமாக் இன்று வர்க்கம் கொண்டு நம்மிடையே சாதி கொண்டு பிரித்து வைத்துள்ள அந்த கூட்டம் அது. உங்களை என்னை போன்று சாமனியன் அறிந்து கொள்ள முடியாத சூழ்ச்சி கூட்டம் அது அறிய முயற்சித்து பாருங்கள் அழிக்கபடுவீர்கள். தன்னை உயர்த்தி அந்த குலத்தோடு உறவு வைத்து தன்னை பெருமை அடித்து கொள்ள ஆசைகொண்ட எத்தனையோ தலைவர்களை உறிஞ்சி எடுத்தபின் அழித்த கூட்டமிது.

    • அய்யா விவேக் –
      இது மோடியை விமர்சிக்கும் பதிவு – தேவையில்லாமல் ஏன் பார்ப்பனர் / பார்ப்பனீயம் என்று கலர் கலராக விடுகிறீர் ?
      பாம்பையும் பார்பனனையும் கண்டால் முதலில் அவனை கொல் என்று பெரியார் கூறியதாக கூறுவார்கள் என்பவரே- உஙகள் தந்தை பெரியார் திருமணங்கள் ஒத்துகொள்ளபட்ட விபசாரம் என்றும் கூறியதாக கூறுவார்கள். இதை எப்படி பார்க்கீறீர்கள் ?

  8. வினவு அண்ணே..
    மக்கள் நிறைய கூடியிருக்கு போல..!! பாத்துணே..கூட்டத்த பாத்து அல்லாரும் நமக்குதான் கூடுதுன்னு நெணைச்சி எமாந்தவங்க நெரைய பேரு ஊருல இருக்காங்க… !!

  9. அன்பு வினவுக்கு என் வாழ்த்துக்கள்………….

    மோடி என்னும் பாசிஸ்ட் மிருகத்தின் முக திரையை கிழித்து எறிந்த ம.க.இ.க அமைப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…. இந்துத்துவம் ஒழிய வேண்டும் புரட்சிகர ஜனநாயக சோசியலிசம் மலர வேண்டும்… இப்போது தமிழ்நாட்டிற்கு தேவை ஒரு ஜனநாயக சோசியலிச அரசு முறை தான்.. இந்த காவி கிறுக்கன்களின் கேடு கெட்ட ஆட்சி அல்ல… தொடரட்டும் இந்துத்துவத்திற்கு எதிரான உங்களின் வெற்றி பயணம்…

  10. மோடியின் முக மூடி விளம்பரங்களை சுக்குநூறாக ஆக்கிவிட்டது இந்த பொதுகூட்டத்தின் தோழர்களின் உரை வீச்சு.தமிழகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும்.
    மீண்டும் தமிழகம் விழித்து எழட்டும்! காவி பாசிசத்தை கிழித்தெறிய!
    இது பெரியார் பிறந்த மண்.

  11. மத சர்பின்மை என்ரால் இந்துக்கலுக்கு எதிராகவும் பிர மதங்கலுக்கு அதரவாகவும் இருப்பதா????

    • மோடிதான் இந்துக்களுக்கு அத்தாரிட்டியான ஆளா. யோவ் உங்களுக்கெல்லாம் எத்தன தடவதான்யா சொல்லுறது. இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராகவும் எழுதப்பட்ட பதிவுகள் வினவிலேயே இருக்கு. படிங்க பாஸ். முக்கியமா மனுஷ்யபுத்திரனுக்கு எதிரா தவ்ஹீது ஜமாத்தின் மன்னடி கூட்டத்திற்கு எதிராக வினவு எழுதிய பதிவையும் கொஞ்சம் படிங்க பாஸ்

    • இல்லை ஆர்.எஸ்.எஸ் க்கும் இந்து முண்ணனிக்கும் எதிராக செயல்படுவது

      • //இல்லை ஆர்.எஸ்.எஸ் க்கும் இந்து முண்ணனிக்கும் எதிராக செயல்படுவது//

        Why did u left BJP?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க