Friday, May 14, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை

மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை

-

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில்

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

இந்துத்துவத்தின் கொலைகாரத் தளபதி என்ற முறையில் மோடியை பலருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய பாசிஸ்ட்டை தரகு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஏன் முன்னிறுத்துகிறார்கள், அன்று காங்கிரசையும் மன்மோகனையும் தூக்கிப்பிடித்தவர்கள் இன்று மோடியை ஏகமனதாக ஆதரிக்க என்ன காரணம், மோடியின் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கு சொந்தமானது, மற்றொரு புறம் அது உழைக்கும் மக்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும் விரிவான சான்றுகள், ஆதாரங்கள், வாதங்களுடன் தோழர் மருதையன் முன்வைக்கிறார்.

மதவெறியும், மறுகாலனியாக்கமும் ஒன்றிணைந்து மக்கள் தாக்கவருவதற்கான முன்னோட்டம்தான் மோடி குறித்த மாயைகளை கார்ப்பரேட் ஊடகங்கள் பொய்களோடும், பித்தலாட்டங்களோடும் பிரச்சாரம் செய்து வருவது என்பதையும் அவர் விளக்குகிறார். திராவிட மற்றும் தமிழினவாதக் கட்சிகள் மோடியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் அயோக்கியத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகிறார். மோடி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் எதிரி என்பையும் அவரையும் சங்க வானரங்களையும் வீழ்த்துவதற்கு இசுலாமிய மக்கள் சிறுபான்மை அமைப்புகளில் அணிதிரள்வது தீர்வல்ல, மதச்சார்பற்ற புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டியது அவசியம் என்பதையும் ஏற்கச் செய்கிறார்.

மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.

 1. ஒலி வடிவில் கொண்டு வந்தற்கு நன்றி! அப்படியே….வேலையோடு வேலையாக எழுத்து வடிவில் கொண்டு வந்தால் எமக்கும் பயன்படும்.பின்னாளில் பயன்படும். ஆவண செய்யவும்

 2. மிகுந்த விழிப்புணர்வூட்டும் அரிய உரைவீச்சு. தோழர் மருதையன் அவர்கள் இந்த பேச்சை உருவாக்க சிறந்த கவனம் எடுத்து நிறைய உழைத்து தேவையான புள்ளி விவரங்களை அசைக்க முடியாமல் கோர்த்திருக்கிறார். இந்த உரையின் நாதம் அழமான வேர்கள் எதிர் வரும் 6 மாதங்களில் நாடெங்கும் பரவி மோடியை பதவி ஏறுவதிலிருந்து தடுக்குமா? காங்கிரஸ் கட்சியும் மோடியும் வேண்டாம் எவருக்கும் வாக்களிக்கக்கூடாது என்பதே எமது கொள்கை என்ற மார்க்ஸிய லெனினிஸ்ட் இயக்கத்தின் 4 பிரிவுகளும் இயங்கி நாட்டை ஆட்சியை ஆளுகையை கையில் எடுத்து விட முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களென்ன என்பதில்தான் எம் போன்றோர் கவனமெல்லாம் இருக்கிறது. இந்த கூட்டத்தின் நோக்கம் நன்றாக நிறைவேறி இருப்பதை இவரது தெளிவான பேச்சு நிரூபித்துள்ளது. அதில் எனக்கு சந்தேகம் இல்லை.

  அரசின் புள்ளி விவரம் எல்லாம் கூட போலித்தனமானவையாகக் கூட இருக்கலாம் என்பதைக் கூட நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  வளர்க வெல்க. எமது வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும்

 3. அருமையான உரை. முழுவதும் கேட்டேன். ஆடியோவாக இருந்தாலும் நேரில் இருந்து பார்த்ததுபோல் இருந்தது.

 4. புரட்சி தலைவியின் பொற்கால ஆட்சியை விட கீழேதான் இருக்கிறது குஜராத் – இந்த ஆடியோவில் தலைவர் மருதையன் பேச்சு.

  என்ன சார்? பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணியா?

  • அட ஈர வெங்காயமே…கடைசி வரை இப்படி லூசுத்தனமாவே இருக்க முடிவே செஞ்சாச்சா……..

 5. ஆண்ணே.. உரையை உரை நடையில் போடுங்க…
  டெக்ஸ்ட் வெர்சனா பதிவு போடுங்க…

  எப்பவேண்டுமாலும் மொபைலில் இருந்தும் படிக்க வசதியா இருக்கும்.

  • அந்த உரைல சொல்லிருக்கிற விசயங்களுக்கு எதிரா நேர்மையா விவாதம் பண்ண துணிச்சல் இருக்கா?

  • போஸ்டரை கிழிக்கிறது, சாணி அடிக்கிறது – இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையெல்லாம் உங்களால் தான் செய்யமுடியும். இப்படி பப்ளிக்காக பேசும் இவர்கள் தந்த புள்ளி விபரங்களுக்கு பதில் தாருமய்யா என் புள்ளிராஜாவே!!

 6. பையா…

  ஆமாமா நீங்க குஜராத்ல செஞ்சா மாதிரி தாய்மார்களின் கருப்பையை கிழிக்க எங்களால முடியாதுதான்…..

  • இதெல்லாம் மோடியின் வளர்ச்சியை தடுக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகள்…

   • இல்லாத ஒன்றை தடுக்க எதற்கு திட்டமிட வேண்டும். வதந்தியை உண்மையாக்கும் நீங்கள், உண்மையை வதந்தி என்று தானே சொல்வீர்கள். நீர் என்னென்னமோ சொல்லிப் பார்க்கிறீர். ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரமாட்டேன்கிறது.

 7. மோடியின் போலியான நல்லாட்சி முகதிரையை கிழித்தெரியும் மிக தெளிவான பேச்சு.

 8. Excellent Speech, hats off to the true comrades. None have guts in India to orate like Maruthaiyan . This intellectual fire will spread all over the country, please make into the english textand also in every regional languages

 9. I will pray for u Mr.Maruthaiyan and your group , for long live , well explain about modi, please continue this work,
  we will behind you.dear Hindu Brothers and sisters please listen this speech, we have our own religions, we will follow that, we will think about our india and our families.pls ignore this BJP group.

 10. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சமூக வலைதலைங்கள் பற்றி இன்றைய (24.09.2013) நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க – சங்பரிவாரங்களின் இரு பிரதிநிதிகள் இரண்டு நாட்களாக சமூக வலைதலைங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தோழர் மருதையனின் உரையால் கதிகலங்கிப் போயுள்ளனர் என்பதை பார்க்க முடிந்தது.

  இப்பொழுதுதான் முகநூலைப் பார்த்தவிட்டு வருகிறேன் என ஒருவரும், நான் வீடியோவோடுதான் வந்துள்ளேன் என மற்றொருவரும் பேசியதிலிருந்து மருதையனின் உரையைக் குறிப்பிடாமல் அவர்கள் பேசினாலும் மருதையனின் உரை சமூக வலைதலைங்களில் இரண்டு நாட்களிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்ல பா.ஜ.க-பரிவாரங்களை கதிகலங்க வைத்துள்ளது என்பதையும் உணர முடிகிறது.

  வாசகர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல இந்த உரை இந்தியாவெங்கும் அனைத்து மொழிகளிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். உரையை நேரில் கேட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், வேறு யாராலும் இப்படிப்பட்டதொரு உரையை வழங்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

 11. I listened only first 5 minutes.

  He says Rama’s birth in Ayothi has no proof
  He says Ram is a caste racist and proof can be found in Valmeeki’s book.
  Why not valmeekis’book can be taken as evidence for his birth place? But serves as an evidence in later case?

  He says Rama was following manu’s book.
  How come Rama following a book written in 200BC ?

  I felt totally illogical and stopped listening.

  There is no point is bashing an individual instead of fixing the system.

 12. தோழர் மருதையனின் இந்த அருமையான பேச்சை குஜராதியில் மொழியில் மொழி பெயர்ப்பு செய்து முதலில் குஜாரித்தியர்களுக்கு பரவ செய்ய வேண்டும். அவர்கள்தான் முதல் மூடர்களாக இருக்கிறார்கள். இந்த பேச்சை கேட்டால் குஜராத் மக்களுக்கு கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நடக்குமா ?

 13. வினவு தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

  தோழர் மருதையனின் உரை பல அரிய தகவல்களுடன், தர்க்க நியாயங்களோடு மிக அருமையாக உள்ளது. இந்தியாவில் யாரும் இவ்வளவு தகவல்களுடன், கூர்மையான அரசியல் விமர்சனத்தோடு மோடியையும், சங்க பரிவாரங்களையும் அம்பலத்தமுடியுமா என்பது சந்தேகமே. எனவே தோழர்கள் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் தெரியாத மக்களிடம் எடுத்து செல்லமுடியுமா என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி!

 14. அப்படியே கலை நிகழ்ச்சியையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். நன்றி!

 15. கரி னு ஒருத்தரு புள்ளி விபரங்கள் கேட்டாரு.. அவரும் புள்ளி விபரங்களில் கூடுனவர்தான்… அநேகமா அவரு இப்போ உங்களுக்கு பதில் அளிக்க குஜராத் போயிருப்பார்னு நினைக்கிறேன்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க