Saturday, October 31, 2020
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்

-

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் இந்து முன்னணியினர் அராஜகத்திற்கு எதிரான பிரச்சார இயக்கம்

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் அமைப்புகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குத்துச் சண்டை பயிற்சி, நாடகப் பயிற்சி என பிஞ்சு மனதில் மதவெறியை பரப்பும் வகையில் நடத்தி ஷாகா வந்தனர். இதை தட்டிக்கேட்ட 4 இளைஞர்கள் மீது 40 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரச்சாரம்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்ற வகையில் இயக்கம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் உக்கடை (தெற்கு) பகுதியில் சுமார் 1,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து-முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரிடையேயும் எந்த பாகுபாடுமின்றி, மத வேற்றுமையில்லாமல் பழகி வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம், இந்து மக்கள் பண்டிகையென்றால் முஸ்லீம் மக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள், முஸ்லீம் பண்டிகையின் போது இந்துக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள் என்ற வகையில் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள புங்களாயி அம்மன் கோவில் ஊர் பொதுக்கள் வழிபடும் பொதுவான ஆலயமாகும். இங்கு கடந்த சில வாரங்களாக, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஷாகா பயிற்சி நடத்தி வந்தனர். இவர்களைப் பற்றி முழுமையாக அறியாததால் ஊர் பொதுமக்கள் இவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை.

ஆனால், ஷாகாவில்,”இந்துக்குள் ஒன்று சேர்ந்து முஸ்லீம்களை அடிக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட வேண்டும். அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள், ஆனால் இங்கு வாழ்ந்து கொண்டு நம் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வீடு இல்லை, வேலை இல்லை” என்ற சிறுவர்களின் மனதில் கலவரத்தைத் தூண்டும் வகையில் நஞ்சூட்டி வந்துள்ளனர். இதை இன்னும் ஆழமாக பதிய வைக்கும் வகையில் நாடகம் நடத்தியும் ஆயுதங்களைக் கொண்டு சண்டை பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இதே வேலையைத்தான் பாசிசத்தின் பிறப்பிடமான ஜெர்மனியில் ஹிட்லரின் கட்சியும், அரசும் செய்தனர். பொது மக்களை யூத மக்களுக்கு எதிராக திருப்பி விட்டு சொல்ல முடியாத படுகொலை துயரங்களை அரங்கேற்றினர.

இத்தகைய ஆர்.எஸ்.எஸ் மூலத்தைக் கொ்ண்ட குஜராத் மோடி தலைமையில் அங்குள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவருடைய பாதந்தாங்கிகள்தான் இன்று திருச்சியில் ஷாகா நடத்துகிறார்கள். விளையும் நச்சுப் பயிரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்று போராட்டத்தில் இறங்கினர் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள்.

இந்து முன்னணி அளிக்கும் இந்த பயிற்சிக்கு அந்தப் பகுதி இளைஞர்கள் யாரும் செல்வதில்லை. சிறுவர்கள் மட்டுமே ஒரு 10 பேர் செல்கின்றனர்.  “அந்தப் பகுதியில் ஷாகா நடத்தக் கூடாது, கோவில் என்பது பொதுச் சொத்து” என்று பா.ஜ.க-வினரிடம் அந்த பகுதி இளைஞர்கள் பேசியிருக்கின்றனர். இதற்கு மழுப்பலாக பதிலளித்த அவர்கள் அப்பொழுது எதுவும் செய்யாமல் பிறகு இந்து முன்னணியினர் 40 பேரைக் கொண்டு அந்தப் பகுதி இளைஞர்கள் 4 பேரை இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் திரண்டவுடன் தப்பி ஓடி விட்டனர்.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் நடந்த இந்த அராஜகத்தை அம்பலப்படுத்தியும், ஷாகா பயிற்சியை நிரந்தரமாக தடை செய்யக்கோரியும் அந்த பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம்,தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்றும் அப்பகுதி மக்களை இணைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கையெழுத்து இயக்கத்தில் அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டனர். சுமார் 50 பேர் சென்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அனைவரின் கருத்துமே இந்து முன்னணியினரை விரட்ட வேண்டும் என்பதே. ஏனென்றால் இதுவரைஅமைதியாக இருந்த பகுயில் கலவரத்தை நடத்தி மதவெறியை தூண்டும் வேலையை செய்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்தனர்.

அதற்கு அடுத்த நாள் அதே பகுதியில் பு.மா.இ.முசார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் சுமார் 100 இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தெருமுனைப் பிரச்சாரத்தில் பேசிய தோழர்கள் இந்து முன்னணியினரின் கொள்கை பற்றியும், இதுவரை அவர்கள் செய்த மதக்கலவரங்களை பற்றியும், ஷாகாவின் நோக்கம் பற்றியும் விளக்கி பேசினர். இது போன்ற பாசிஸ்டுகளை விரட்ட வேண்டும் என்றால் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும் என்று அறிவுறுத்தினர். பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பிரச்சாரத்தின் இறுதி வரை நம்முடனே இருந்தனர்.

முதல் நாளில் ஒருபகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கவில்லை. எனவே தெருமுனைப்பிரச்சாரத்தின் போது அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

பிறகு பிரச்சனை நடந்த இடத்திற்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் செய்த போது, திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து குலை நடுங்கிப் போய் காவல் துறைக்கு தகவல்கொடுத்து விட்டனர். உடனே காவல் துறையினரும் வந்து, “ஒலிபெருக்கி வச்சி செய்றீங்களே, அனுமதி வாங்கினீங்களா? முதல்ல ஏன் எல்லா இவ்ளோ கூட்டம் போட்றீங்க, கூட்டத்தை கலைங்க”  என்றதும் ஒரு பெண்மணி, “40 பேர் சேர்ந்து 4 பேர அடிச்சப்ப நீங்க கேக்க வரல. இப்போது அதுக்கு நியாயம் கேக்க வந்தா எங்கள போகச் சொல்றீங்க, நீங்க போங்க சார்” என்றார்.

“நீங்க சட்ட விரோதமா கூடியிருக்கீங்க” என்றதும், நம் தோழர் ஒருவர்,”இங்க என்ன 144 தடை உத்தரவா போட்டு இருக்கீங்க, எங்க ஏரியால நாங்க நிக்கிறோம். நீங்க ஏன் கேட்குறீங்க” என்று தைரியமாக பதிலளித்தார். பு.மா.இ.மு தோழர்களை தனியாகக் கூட்டிச் சென்று காவல்துறை பேசும் போது கூட அந்தப் பகுதி இளைஞர்கள் காவல் துறை தோழர்களை ஏதாவது செய்து விடுவர் என்று அந்த இடத்தை விட்டு கலையவே இல்லை. “போங்கப்பா, ஏன் நிக்கிறீங்க” என்ற போலீஸ் ஒருவர் கூறவும், “நீங்க போங்க சார், நாங்க போறோம். எங்க பசங்க மேல கேஸ் போட்ட மாதிரி எங்க தோழர்கள் மீதும் போட்டுட்டீங்கன்னனா? உங்கள நம்பறதா இல்லை” எனக் கூறினர். கையெழுத்து வாங்கி முடித்த பின்னரே இளைஞர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மறுநாள் முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்யக் கோரியும், பொதுக் கோவிலில் நடைபெறும் ஷாகா பயிற்சியை தடை செய்யக் கோரியும் மனு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஒட்டி நகரம் முழுக்க 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும், “இப்படியொரு பிரச்சனை நடந்ததா?” என ஆச்சரியத்துடன் கேட்டார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன். கூடுதலாக, “நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?” என்று கேட்டார். உடனே மனு கொடுக்க சென்ற அனைவருமே, “நாங்க எந்த மதமும் இல்ல,எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்” என்று பதில் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தி பார்த்தார். பிறகு ஆணையரிடம் பேசுவதாகக் கூறியுள்ளார்.

நம்முடைய இந்தச் செய்தி அன்றைய நாளிதழில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காலிகளை அடித்து விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்று ஆயத்தமாகியுள்ளனர் பு.மா.இ.மு தலைமையிலான உக்கடை பகுதி இளைஞர்கள். இது போன்ற மதவெறி கும்பல்கள் மக்கள்  மத்தியில் வேரூன்றாமல் இருக்க பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய தேவை உள்ளது என்பது இந்த சம்பவத்தில் இருந்து நிரூபணமாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. தற்போது காவல் துறை உத்தரவின் பேரில் ஷாகா பயிற்சி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

   • தமிழில் தவறாக யாராவது எழுதினால்
    கிண்டல் செய்யவேண்டாம்…
    மாற்று மொழி பேசும் எங்களைப் போன்றோர்
    சில சமயம் தவறுடன் எழுதுகிறோம்…

 1. ///////////“நீங்க போங்க சார், நாங்க போறோம். எங்க பசங்க மேல கேஸ் போட்ட மாதிரி எங்க தோழர்கள் மீதும் போட்டுட்டீங்கன்னனா? /////
  இதுக்கு என்ன அர்த்தம் சாரே…….. யாரு மேல கேசு போட்டாங்க……?……. எதுக்கு போட்டாங்க……..?

 2. முஸ்லீம்கள் தொழுகை என்று சொல்லிக்கொண்டு மசூதியில் கூடி உள்ளவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டுகிறார்கள். தினசரி ஐந்து முறை கூடி மற்றவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். யார்மீது குண்டு போடுவது என்றுதான் விவாதிக்கிறார்கள்!

  கிருத்துவர்கள் சர்ச்சுகளில் அரசியல்தான் பேசுகிறார்கள். ஆன்மிகம் அல்ல. நிங்கள் அங்கு சென்று பார்த்தால் தெரியும்.
  “புதிய ஜனநாயகம்” (இஸ்லாமியம்) என்ற பெயரில் மக்களை தூண்டிவிட்டு நாட்டில் கலவரத்திற்கு வித்திடுகிரீர்கள்!!

  இந்துக்கள் கோவிலுக்கு சென்று எந்த அரசியலும் பேசுவதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று. வெளிநாட்டு மதங்களால் நமது மக்கள் எப்படியெல்லாம் சொல்லேன்னா துயரங்கள் அனுபவிக்க நேரிடுகிறது!!!! தினசரி நடக்கும் குண்டு வெடிப்புக்களே இதற்கு சாட்சி.

  • மனதை நன்னெறிப் படுத்திவிட்டால் மதம் நம்மை என்ன செய்யும் சகோதரா?மதங்கள் நல்லவற்றையே போதிக்கிறது ஆனால் நாமோ பிரிவினையை மட்டும் சிந்திக்கிறோம். பாபுபகத்

  • Boss dont give random comment that in church or Mosque are teaching terrorism. They are doing their religious activities like Christians giving message about Jesus and Muslim giving message about Mohamed.

   You also accepted that இந்துக்கள் கோவிலுக்கு சென்று எந்த அரசியலும் பேசுவதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று

   So now our question is, then why RSS doing such training program. Did you understood now, who is teaching terrorism.

   • Maybe you are ignorant about Deobandi cult/Pentecostal movement.

    Every religion has an extremist movement,RSS is the hindu version of it.

    You remove the extremist movements of other religions,then RSS ll also vanish.

 3. விழாக்களின் போது நடைபெறும் சம்பவம் கேட்கவே மனதை மகிழ்வடையச்செய்கிறது.அழிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை, ஆக்கவேன்டும் என்றுநினைப்பவர்களும் இருந்து கொண்டுதான் இருப்போம். பாபுபகத்.

 4. இஸ்லாமியர்கள் மசூதிகளில் 5 வேலை சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்பது அறியாமையிலும் அறியாமை…நீங்கள் தாராளமாக மசூதிகளுக்கோ அல்லது சர்ச்களுக்கோ சென்று நடப்பதை பார்த்து வாருங்கள்…ஆர்.ஸ்.ஸ். அமைப்பினர் இந்துக்குக்கு சொந்தமாணவர்கள் அல்ல,விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் அவர்கள் தான் ..

  • இந்த கருத்து அறியாமையால் சொன்ன கருத்து அல்ல.. அவர்களது மூளையில் விதைக்கப்பட்டு இருக்கும் விசத்தால் வெளிப்பட்டிருக்கும் நச்சு பிரச்சாரம்.. அவர்கள் அறிந்து கொண்டேதான் உண்மைக்குப் புறம்பான இந்த நச்சு பிரசாரத்தை தொடர்ந்து செய்கிறார்கள்.. மற்றவர்களையும் செய்ய தூண்டுகிறார்கள்..

   “அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற அவரது மத நம்பிக்கையில் அவர் உறுதியாக இருப்பாரானால் நிச்சயமாக அவரும் அவரது கூட்டத்தினரும் அழிந்தே தீருவர்..

   நச்சு பிரச்சாரகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
   உங்களது இந்த பிரசாரங்களால் நீங்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.. இதனால் தீமையை தவிர வேறு ஒன்றையும் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கவில்லை என்பதையும் உணருங்கள்…

 5. மு.நாட்ராயன் என்பவரது இந்த கருத்து அறியாமையால் சொன்ன கருத்து அல்ல.. அவரது மூளையில் விதைக்கப்பட்டு இருக்கும் விசத்தால் வெளிப்பட்டிருக்கும் நச்சு பிரச்சாரம்.. அவர்கள் அறிந்து கொண்டேதான் உண்மைக்குப் புறம்பான இந்த நச்சு பிரசாரத்தை தொடர்ந்து செய்கிறார்கள்.. மற்றவர்களையும் செய்ய தூண்டுகிறார்கள்..

  “அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற அவரது மத நம்பிக்கையில் அவர் உறுதியாக இருப்பாரானால் நிச்சயமாக அவரும் அவரது கூட்டத்தினரும் அழிந்தே தீருவர்..

  நச்சு பிரச்சாரகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
  உங்களது இந்த பிரசாரங்களால் நீங்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.. இதனால் தீமையை தவிர வேறு ஒன்றையும் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கவில்லை என்பதையும் உணருங்கள்…

  • இந்துக்களுக்கு கோவில் முஸ்லீம்களுக்கு மசூதி கிருத்துவர்களுக்கு சர்ச். கோவில்களில் எந்த பிரச்சாரமும் நடப்பதில்லை. எனது வீட்டிற்கு முன்னால் உள்ள சர்ச்சுகளில் வார விடுமுறை தினத்தில் இந்துக்களையும் இந்து மதத்தைப்ப்ற்றியும் மோசமான விமர்ச்சனங்க்களை கேட்டுள்ளேன். ஆனால் கோவில்களில் இது போன்ற விமர்ச்சனங்களை கேட்கமுடியாது.
   வினவு “இந்து வெறியர்கள்” என்று எப்படியெல்லாம் வசைபாடுகிறதோ அதேபோல்தான் சர்ச்சுகளில் செய்கிறார்கள். இந்த மூன்றும் இடங்கள் தான் மதம் சார்ந்தவைகள்! இஸ்லாமிலும் கிருத்துவத்திலும் பல இயக்கங்கள் இருக்கின்றன. அதன் நோக்கம் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்று இந்தியாவில் மதமாற்றம் செய்துவது தீவரவாதத்தைப் பரப்புவதுதான்.
   அதே போல்தான் இஸ்லாமிலும் பயங்கர வாதத்தை ஊக்குவிப்பது. இந்துக்களை அச்சப்படுத்துகிரார்கள். இதனால் மதசார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது. மதசார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் ஒதுக்கீடு வேறு கேட்கிறார்கள். வசதியற்ற மக்களுக்கும் ஜாதியினருக்கும் ஒதுக்கீடு தேவைதான். மதத்தின் பெயரால் எதற்கு ஒதுக்கீடு? இந்துக்களை பகடைக்காய்களாக எண்ணி சிறுபான்மையினர் சார்ந்த அரசியல் நடத்தி வந்தவர்களுக்கு இப்போதுதான் கிலி பிடித்துவிட்டது. இஸ்லாமிய நாடுகளும் கிருத்துவ நாடுகளும் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன. ஆனால் இந்தியா மதம் சார்பற்ற நாடாக இருக்கிறது. இது சந்தோசப்பட வேண்டிய செய்திதான். ஆனால் இந்துக்களை மதம் மாற்றம் செய்வதும், இந்தியாவில் இந்து தலைவர்களை கொல்லுவதும், பயங்கரவதத்தை ஏவிவிடுவதும் இந்துக்களை ஒற்றுமை ஆக்க துண்டுகிறது. இது நல்லதுதான்.
   கிருத்துவ மத போதகன் இந்துக்கள் குடி இருப்புக்களுக்குள் வந்து மதபிரச்சாரம் செய்கிறான். இந்துக்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியரின் பகுதிக்குச்சென்று பிரச்சரம் சென்றால் திரும்பி வரமுடியாது!!! மதசார்பான இயக்கங்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்!! கோவில்களில் மதபிரச்சாரம் செய்வதில்லை.

   • உங்களது மதப்பற்றுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. மதம் உரைப்பது எல்லாம் நல்ல விசயங்களே ஆனால் அதனைப் பின்பற்றுவர்களின் மனங்களில் எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கிறது என்பதே இப்போது நம் முன் உள்ள பிரச்சனை. மதத்தினால் ஜாதியும், பிரிவினையும் உரைக்கப்படும் எனில் முதலில் அது மதமா? பாபுபகத்.

 6. // வெளிநாட்டு மதங்களால் நமது மக்கள் எப்படியெல்லாம் சொல்லேன்னா துயரங்கள் அனுபவிக்க நேரிடுகிறது!!!// ஆரிய அசிங்கம் மட்டும் உள்நாட்டு உற்பத்தியா? // முஸ்லீம்கள் தொழுகை என்று சொல்லிக்கொண்டு மசூதியில் கூடி உள்ளவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டுகிறார்கள். தினசரி ஐந்து முறை கூடி மற்றவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். யார்மீது குண்டு போடுவது என்றுதான் விவாதிக்கிறார்கள்!// யோவ்! மசூதில அவங்க ஒருவருக்கொருவர் பேசக்கூட மாட்டாங்க தெரியுமா?

 7. துணிவான செயல் தோழர்களே என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

 8. இந்த கருத்து அறியாமையால் சொன்ன கருத்து அல்ல.. அவர்களது மூளையில் விதைக்கப்பட்டு இருக்கும் விசத்தால் வெளிப்பட்டிருக்கும் நச்சு பிரச்சாரம்.. அவர்கள் அறிந்து கொண்டேதான் உண்மைக்குப் புறம்பான இந்த நச்சு பிரசாரத்தை தொடர்ந்து செய்கிறார்கள்.. மற்றவர்களையும் செய்ய தூண்டுகிறார்கள்..

 9. இந்த (5%) முள்ள பார்பன (கைபர் கணவாய் வளியாக வந்த வந்தெரிகல்) வர்கத்தினர் (95%) உள்ள ஒட்டுமொத்த இந்திய மக்களை அளித்து இங்கு ராமரை மட்டும் வனைங்கக்கூடிய இந்து மக்கள் மட்டும் வழவேண்டும் என்று சொல்வது சரியா…? நீங்களும் பூறியும் காலம் கூடிய வீறைவீல் வரும்…? அபோது என்கள் கூட கை கோற்கும் காலம் வரும்…?

 10. இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கத்தான் வேண்டும்.! அதே சமயம், விரோதிகளை எதிர்ப்பதில் ‘முனைப்பு’ காட்டும் இந்திய முஸ்லிம்கள், நம்பிக்கைத் துரோகியை கண்டுகொள்ளாமல் நண்பனாக எண்ணி ஏமாந்திருப்பது ஏன் என்பதை இனியாகிலும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.!

  நம்பிக்கைத் துரோகியை அடையாளம் கண்டு அகற்றி விட்டால், விரோதிகள் ‘தானே அழிந்து போவார்கள்’.!
  உரமிடுவன் இல்லாதிருந்தால் கெட்ட “களை” தானே ஒழிந்து போய் விடுமே.!!!
  எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்பதுக் குறித்து காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்!

 11. நல்ல வேளை இன்னமும் விவரமானவர்கள், உண்மையை அறிந்தவர்கள், மத நல்லிணக்கவாதிகள் இருக்கும் வரை சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது.
  >>>>இந்து-முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரிடையேயும் எந்த பாகுபாடுமின்றி, மத வேற்றுமையில்லாமல் பழகி வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம், இந்து மக்கள் பண்டிகையென்றால் முஸ்லீம் மக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள், முஸ்லீம் பண்டிகையின் போது இந்துக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள் என்ற வகையில் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.<<<<
  இப்படி ஒரு நிலை தமிழ் நாட்டில் இருக்கும் வரை மதக்கலவர அரக்கனின் சூழ்ச்சி எடுபடாது. மேலும் இப்பகுதி மக்கள் எந்த ஒரு சூழ்ச்சிக்கும் அடிமையாகாமல் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாய் விளங்க வேண்டும்.

 12. ///உண்மையை அறிந்தவர்கள், மத நல்லிணக்கவாதிகள் இருக்கும் வரை சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பார்கள்.///
  இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரை இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்கும். அது மட்டுமல்லாது அனைத்து சிறுபான்மையினரும் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக இருக்கலாம். உங்கள் ஓட்டுக்களை அரசியல் வாதிக்கு விற்று விட்டீர்களானால் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவீர்கள். அந்த நிலை உருவாகிவருகிறது. உங்களிடம் உள்ள பயங்கரவாதிகளை களைஎடுங்கள். மதத்தின் பெயரால் ஒதுக்கீடு கேட்பதை விடுங்கள். இது உங்களின் நல்லதிற்குத்தான்.

  • ஓட்டை விலை கொடுத்து வாங்கும் அரசியல்வாதி இந்துவா? கிரிஸ்துவா? முஸ்லீமா?….. என்றும் உரைத்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பாபுபகத்.

  • ஆமா! இவிங்க சிறுபான்மையினரா இருக்கும் போது நடந்து கொள்வதும், பெரும்பான்மையாக இருக்கும் போது நடந்து கொள்வதும் தான் உலகமே அறியுமே. உதா, பாகிஸ்தான்.

   சிறுபான்மையா இருந்தா மட்டும் உரிமைகள் வேணுமாம், மத நல்லினக்கம் வேணுமாம். பெரும்பான்மையா ஆயிட்டா, பாகிஸ்தான்ல இருக்குற சிறுபான்மையினர் கதி தான் தரப்படும்.

   இதுதானே அவிங்க உலக வழக்கம்…

 13. kindly fight against the congress ,dravidar kazhagam and helmet criminals like cpm,cpi,and all parties of India.pls don’t fight against political parties,corporates,and judiciary separately.fight against upper caste because they are political parties ,corporates,and judiciary

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க