privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஇந்தியாவை ஆள்வது யார் ?

இந்தியாவை ஆள்வது யார் ?

-

ந்தியாவை ஆள்வது யார்?

ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்
இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’

சென்ற வாரம் ஊடகங்களில் வெளிவந்துள்ள சில செய்திகள் இதற்கு பதில் அளிக்கலாம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருப்பதால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி குறித்த இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ என்ற சர்வதேச தர நிர்ணய நிறுவனம். வரும் 2014 நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் காத்திருக்கப் போவதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றதும் இந்த மந்தமான சூழலை மாற்றாமல் போனால், நடவடிக்கை உறுதி என்கிறது எஸ் அண்ட் பி.

இதே நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் திறனை AA+ என்ற நிலையில் இருந்து AA என்ற நிலைக்கு தகுதிக் குறைப்பு செய்திருக்கிறது. இந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு AAA என்ற நிலையில் இருந்து AA+ என்ற நிலைக்கு பிரான்ஸ் நாட்டை தகுதியிறக்கம் செய்த எஸ்&பி, இப்போது அதை விடவும் ஒரு படி கீழே இறக்கியுள்ளது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கும் இத்தகைய தர நிர்ணய நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்ன? அதுவும் பத்திரிகை செய்தியிலேயே இருக்கிறது. ‘இந்தியாவின் இப்போதைய பொருளாதார வளர்ச்சியே மந்தமாகத்தான் இருக்கிறது. இப்போதே தர நிர்ணயத்தைக் குறைக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், ‘அதன் முடிவுகளின் மூலம் வளர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியத்தை மறுத்து’ முன் முடிவுடன் இப்போதே மதிப்பீடு செய்வது போல் ஆகி விடும். அதனால்தான் நாங்கள் தேர்தல் வரை பொறுத்திருப்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்’ என்கிறது எஸ் அன்ட் பி. ரொம்ப பெருந்தன்மைதான். அந்தப் பெருந்தன்மையின் பின்னே ஒழிந்திருப்பது என்ன என்பது, அதே செய்தியின் பின்னால் வருகிறது.

பிரான்ஸ் தரநிர்ணயம்
பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் திறனை AA+ என்ற நிலையில் இருந்து AA என்ற நிலைக்கு தகுதிக் குறைப்பு செய்திருக்கிறது எஸ்&பி

‘இதை செய்யலேன்னா, நான் ரேட்டிங்கை குறைச்சிருவேன்’ என்று கழுத்தில் கத்தி வைத்து எஸ் அண்ட் பி செய்யச் சொல்லும் ‘அது’ என்ன? நாம் புரிந்து கொள்ள வேண்டியதும் அதைத்தான். ‘‘மானியம் குறித்து மத்திய அரசு வெளியிட்டு வரும் அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. எனினும், டீசல் விலை மீதான அரசின் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஒரு சாதகமான அம்சம். இந்த ஆண்டின் (2013) இறுதியில் டீசலுக்கான மானியத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம், டீசலின் விலையை சர்வதேச விலைக்கு ஏற்றாற் போல அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம். இத்தகைய சீர்திருத்தங்களே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்” என்கிறது எஸ்&பி.

டீசல் விலைக்கான மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதை ஆராவாரத்துடன் வரவேற்கிறது இந்த தர நிர்ணய நிறுவனம். இப்படி மக்கள் நலத் திட்டங்களுக்கான மானியங்களை வெட்ட வேண்டும் என்பதும், புதிய தாராளமயக் கொள்கையை இன்னும் வேகமாக அமல்படுத்த வேண்டும் என்பதும்தான் இத்தகைய தர நிர்ணய நிறுவனங்களின் கோரிக்கை. அவை கோரிக்கை கூட இல்லை. நிபந்தனை. ‘‘டீசல் மானியம், உணவு மானியம், உர மானியம் என இந்தியாவின் முன்னே பல சவால்கள் காத்திருக்கின்றன’’ என்று இதை வர்ணிக்கிறது எஸ்&பி. அந்த சவால்களை கடந்து வருவதற்கு எஸ்&பி காட்டும் வழித்தடம், புதிய தாராளமய கொள்கைகள். புதிதாக பதவியேற்கப்போகும் அரசு செயல்படுத்த வேண்டிய ‘சீர்திருத்தமும்’ இதுதான். ஏற்கெனவே இங்கு அமலில் இருப்பதும் இதே தாராளமயக் கொள்கைதான். 1991-ல் இதை இந்தியாவிற்கு கொண்டு வந்த மன்மோகன்சிங்தான் இப்போது பிரதமரும் கூட. இப்போது என்ன பிரச்னை என்றால், ‘தாராளமய கொள்கையை மன்மோகன் சிங் செயல்படுத்தும் வேகம் போதாது’ என்கிறார்கள். அவரை விட வேகமாக மோடி செயல்படுத்துவார் என்பதால் அவரைக் கொண்டு வரத் துடிக்கின்றனர்.

மோடியின் செயல்திறன் குறித்து பல ஆதாரங்கள் வந்துவிட்டன. இப்போது மேலும் ஓர் ஆதாரம் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தின் பெட்ரோலியம் கார்பரேஷன், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உள்ள தனது எண்ணெய் வயல்களின் பங்குகளை, பார்படோஸ் (Barbados) நாட்டில் உள்ள ‘ஜியோ குளோபல்’ என்ற ஓர் அநாதமதேய கம்பெனிக்கு விற்றது. இதன்மூலம் அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு 64 டாலரில் இருந்து (சுமார் 4 ஆயிரம் ரூபாய் மட்டும்), 10,000 கோடியாக உயர்ந்தது. இதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த அர்விந்த் கெஜ்ரிவால், ‘ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இது மோசடியானது’ என்கிறார். தொகை அதைவிட சிறியதாக இருக்கலாம். ஆனால் வெறும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போண்டா கம்பெனியை 10 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக உயர்த்தி இருக்கிறார்கள் என்றால், அந்த ஊழலில் அடத்தியை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

இதைப்பற்றி எல்லாம் ஒருபோதும் கவலைப்படாத; கருத்து சொல்லாத எஸ் அண்ட் பி உள்ளிட்ட நிறுவனங்களோ, முதலாளித்துவ ஆதரவாளர்களோ… மானியம் பற்றி மட்டும் மாய்ந்து, மாய்ந்து பேசுகின்றனர். ‘வர்ற பணத்தை எல்லாம் மானியமாவே கொடுத்துவிட்டால் எப்படி நாடு உருப்படும்?’ என்று அங்கலாய்க்கிறார்கள். அவர்களின் கவனத்திற்காக மேலும் ஒரு புள்ளிவிவரத்தை கீழே காணலாம்.

2010-11-ம் ஆண்டில் பெருநிறுவனங்கள் இந்திய அரசுக்கு செலுத்திய மொத்த வரி, 2.75 லட்சம் கோடி ரூபாய். இதே ஆண்டில் இவர்கள் பெற்ற வரிச் சலுகை, 3.65 லட்சம் கோடி ரூபாய். அதாவது 100 ரூபாய் வரி செலுத்தினால், 145 ரூபாய்க்கு வரிச் சலுகை என்று பாதிக்குப் பாதி சலுகை பெற்றுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ 31.11 லட்சம் கோடி வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 லட்சம் ரூபாய் வரிச் சலுகை. மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தண்டச் செலவு பட்டியலில் சேர்ப்பவர்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும். ‘உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதுக்கு வேற மானியம் கொடுக்கனும். வெட்டிச் செலவு’ என்று எஸ் அன்ட் பி அங்கலாய்க்கிறது. என்றால் இந்த கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் மட்டும் தண்டச்செலவு இல்லையா?

எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை முடிவு செய்யும் இந்த நிறுவனம், ‘2014 மே மாதத்திற்குள் இந்திய தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கவும் செய்கிறது. ஏனென்றால், இந்தியாவுக்கு இப்போது கொடுப்பட்டிருப்பது ‘கிரேஸ் டைம்’. அதை விரைவில் முடித்துக் கொண்டு ‘வைல்ட் கார்டு’ ரவுண்டில், புதிய அரசின் கொள்கைகளுடன் வந்து கலந்து கொண்டு வெற்றி பெறலாம். ‘‘ஆனால் இதைப்பற்றி நாம் ரொம்பவும் கவலைப்படத் தேவையில்லை. இரண்டு தர நிர்ணய நிறுவனங்கள் மட்டுமே எதிர்மறையாக மதிப்பிட்டுள்ளன. நான்கு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நாம் நம்பிக்கையுடன் நடை போடலாம்” என்று பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்ற மானங்கெட்டத் தன்மை இந்தியத் தலைவர்களுக்கு கோபம் வருவதில்லை.  இந்தியாவை ஆள்வது யார் என்ற துவக்கக் கேள்விக்கு எனக்குக் கிடைத்த பதில்.. முதலாளிகள்!

மேலும் படிக்க

– வளவன்

  1. //மோடியின் செயல்திறன் குறித்து பல ஆதாரங்கள் வந்துவிட்டன. இப்போது மேலும் ஓர் ஆதாரம் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தின் பெட்ரோலியம் கார்பரேஷன், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உள்ள தனது எண்ணெய் வயல்களின் பங்குகளை, பார்படோஸ் (Bஅர்படொச்) நாட்டில் உள்ள ‘ஜியோ குளோபல்’ என்ற ஓர் அநாதமதேய கம்பெனிக்கு விற்றது. இதன்மூலம் அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு 64 டாலரில் இருந்து (சுமார் 4 ஆயிரம் ரூபாய் மட்டும்), 10,000 கோடியாக உயர்ந்தது//……

    உண்மையில் இது மோடி வித்தைதான்! அண்ட புளுகர்களின் வண்டவாளம் உலகமே சிரிக்கும் அளவிற்ககு தண்டவாளம், தவறு, ஆகாயவிமானம் ஏறுகிறதா? இந்தியன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா! வெட் கம் கெட்டவர்கள்!

  2. //மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தண்டச் செலவு பட்டியலில் சேர்ப்பவர்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும். //

    அண்ணன் அதியமான் அவர்கள் மேடைக்கு வந்து இதனை ‘விளக்குமாறு’ (சிலர் இதனை துடைப்பம் என்ற பொருளில் படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) கேட்டுக்கொள்ளுகிறேன்…

    • லேட்டஸ்ட் விஜயம் ராமன் அவர்கள் வருவார். நல்லா விளக்கிக் கூறுவார். எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டு நல்லா ஆளாப் பாத்து ஓட்டுப் போடுன்னு ஒரே போடா போட்டுட்டுப் போவார்!

  3. //டீசல் விலைக்கான மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதை ஆராவாரத்துடன் வரவேற்கிறது //

    கடன் வாங்கி மானியம் கொடுக்காதீர்கள். ஏற்றுமதி செய்து பொருள் ஈட்டி உங்கள் பணத்தை செலவு செய்தால் யாராவது குறை கூற முடியுமா ? கடன் வாங்கி ,கடன் வாங்கி இலவசம் கொடுத்தால் ,கடன் கொடுத்தவர் சார்பாக உங்களை கண்காணிக்கும் கங்காணி குறை கூறத்தான் செய்வார்

    // இப்போது என்ன பிரச்னை என்றால், ‘தாராளமய கொள்கையை மன்மோகன் சிங் செயல்படுத்தும் வேகம் போதாது’ என்கிறார்கள்//

    சூதாடு பவனிடம், மனைவியயும் அடமானம் வைக்க சொல்வார்கள். சொந்த புத்தி வேண்டும்.

    //இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்ற மானங்கெட்டத் தன்மை //

    கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று அந்த காலத்திலேயே எழுதி இருக்கிறாரக்ள் . கடன் வாங்காமல் என்ன வேண்டுமானாலும் இலவசம் கொடுக்கலாம்

    • ////2010-11-ம் ஆண்டில் பெருநிறுவனங்கள் இந்திய அரசுக்கு செலுத்திய மொத்த வரி, 2.75 லட்சம் கோடி ரூபாய். இதே ஆண்டில் இவர்கள் பெற்ற வரிச் சலுகை, 3.65 லட்சம் கோடி ரூபாய். அதாவது 100 ரூபாய் வரி செலுத்தினால், 145 ரூபாய்க்கு வரிச் சலுகை என்று பாதிக்குப் பாதி சலுகை பெற்றுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ 31.11 லட்சம் கோடி வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 லட்சம் ரூபாய் வரிச் சலுகை. மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தண்டச் செலவு பட்டியலில் சேர்ப்பவர்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும்.///

      • இப்பொழுது நீங்கள் கடன் வாங்கி குடும்பம் நடத்துகிறீர்கள் . கடன் வாங்கி வாங்கி உணவுஇக்காக மட்டும் செலவு செய்வீர்களா அல்லது வேலை தேட , தொழில் தொடங்கவும் முயற்சிப்பீர்களா ?

        தொழில் தொடங்க செய்யப்படும் செலேவு “முதலீடு” எனப்படும். எந்த விட இலக்கும் கொடுக்கப்படாமல் நிபந்தனையின்றி வழங்கப்படும் உணவிற்கு “செலவு” என்று பெயர். முன்னது பலமடங்கு திரும்ப வர வாய்ப்புண்டு

    • ராமன் சார்!
      அது என்ன டீசல் மானியம்?
      நமது தேவையில் 60% டீசல் உள்நாட்டிலேயே கிடைக்கிறது:ஓசியில் கிடைக்கும்
      பொருளுக்கு உற்பத்தி வரி எவ்வளவு?
      ஒவ்வொரு மாநிலமும் டீசல் விற்பனையில் எவ்வளவு கொள்ளை அடிக்கிறது:
      கொங்சம் புட்டு புட்டு வைத்தால்,பொருளாதாரம் தெரியாத எங்களைப் போன்ற “கைநாட்டு” ஆசமிகளுக்கு வெவரம் புரியும்!
      கடன் வாங்காமல் மானியம் கொடுக்கலாமா?
      இன்னொரு புறம் இலங்கைகு 6000 கோடி, நமது சூ..ல் குண்டு வைக்கும் ஆப்கானிச்தான் மக்களுக்கு(ரொம்ப முக்கியம் பாருங்க) 7000 லட்சம் கோடி…இதெல்லாம் கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது ச்வாமி? ஒருவேளை ரிசர்வு வங்கி,ஓசியில் பேப்பர் வாங்கி பணம் அடிக்கிறதோ?

      • // அது என்ன டீசல் மானியம்?//
        நமது தேவையில் 60% டீசல் உள்நாட்டிலேயே கிடைக்கிறது:ஓசியில் கிடைக்கும்
        பொருளுக்கு உற்பத்தி வரி எவ்வளவு?//

        Nothing is free.People have to put effort and time to explore,extract,distill,transport.
        You see water is 20 rupees per ltr.

        //நமது தேவையில் 60% டீசல் உள்நாட்டிலேயே கிடைக்கிறது://
        Are you sure? I think it must be below 30%.

        //பொருளுக்கு உற்பத்தி வரி எவ்வளவு?
        ஒவ்வொரு மாநிலமும் டீசல் விற்பனையில் எவ்வளவு கொள்ளை அடிக்கிறது://

        Only 3% of population pay income tax.So Govt taxes people with these tactics

        // கடன் வாங்காமல் மானியம் கொடுக்கலாமா?//
        Sure. Then we dont need to heed S&P

        //ஒருவேளை ரிசர்வு வங்கி,ஓசியில் பேப்பர் வாங்கி பணம் அடிக்கிறதோ?//

        They print by manipulating numbers in computers. No need for paper

        • ராமன் சார்:

          நல்லது 30% சதவிகிதம் டீசல்”ஓசியில்” கிடைக்கிறது:
          அப்புற்ம் எதற்கு 16% உற்பத்தி வரி?

          அதன் மீது ஒவ்வொரு மாநிலமும் 12 லிருந்து 20 சதவிகிதம் வரை மாநில வரி:
          நீங்கள் சொல்வது: பூமியிலிருந்து கச்சா எண்ணெயை வெளியே கொண்டு வருதல்,சுத்தப் படுத்துதல்,போக்குவரத்து,இன்ன பிற செலவுகள்…பூமிமாதவுக்கு லிட்டருக்கு இவ்வளவு என்று காசு கொடுத்தா கச்சா எண்ணையை வெளியே எடுக்கிறார்கள்:
          கச்சா எண்ணை சுத்தம் செய்யும்போது அதிலிருந்து 108 (அ) அதற்கும் மேல் அதிலிருந்து கிடைக்கிறது…நாப்தா,முதல்,ரோட்டுக்கு போடும் தார் வரை….ஒரு மில்லி கிராம் கச்சா எண்ணை கூட பாழ் ஆவதில்லை:அப்புறம் எண்ணை நிறுவனங்களுக்கு நழ்டம் என்று ஒப்பாரி?
          நன்றாக உற்றுப் பாருங்கள்…இதே எண்ணைக் கிணறுகள்,அரபு நாடுகளில் மிகப் பெரிய வளத்தை(இப்போதைக்கு) அளிக்கிறது..அவ்வளவு ஏன்,உமது கார்ப்பரேடெ மந்திரவாதி ரிலையன்சு 2 எண்ணை கிணறுகளைக் கொண்டு உலகின் கோடிசுவரர் பட்டியலில் முந்துவது இதன்மூலம் தானே?

      • ஐயா,
        டீசலை மட்டும் இறக்குமதியோ / தனியே உற்பத்தியோ செய்ய முடியாது…
        கச்சா எண்ணெயிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது…

        கச்சா எண்ணெய் இறக்குமதி ஏற்றுமதியை விட மிக அதிகம்…அப்பொழுது எப்படி ஓசியில் டீசல் கிடைக்கிறது என்கிறீர்கள்?

        http://indiabudget.nic.in/tab2012/tab129.xls

        • திரு.வீரன் அவர்களுக்கு,நரிமனம்,மற்றும் திருவாருர்(அடியக்கமஙலம்) போன்ற பகுதிகளில்
          கிடைப்பது கச்சா எண்ணையா (அ)இதயம் நல்லேண்ணையா?
          இத்ற்கு தமிழ்நாட்டுக்கு கைடைக்க வேண்டிய ராயல்டி பணம் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு முதல்வரகள் மூக்கால் அழுதுதான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கிடைக்கிறது
          …எனது கேள்வி/ஆதங்கம்….

          30% சதவிகிதம் கச்சா எண்ணை உள்ளூரில் கிடைக்கும்போது, ஏன் இந்த அளவுக்கு விலை?

          • //30% சதவிகிதம் கச்சா எண்ணை உள்ளூரில் கிடைக்கும்போது, ஏன் இந்த அளவுக்கு விலை?

            🙂 இதற்கு பதில் உங்கள் பின்னூட்டம் 4.
            //உற்பத்தி வரி டெல்லி பாதுசாக்கள் சாப்பிட..//
            //இலங்கைக்கும்,ஆப்கானிச்தானுக்கும் கோடி கோடியாய் வாரி வீசினால்…//

            டெல்லிக்குச்சென்ற போது புரிந்து கொண்டேன்…

            • ரிலையன்சு எண்ணய் கிணறுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணை+அரசாங்க கிணறு=மொத்தம் எவ்வளவு?

  4. உற்பத்தி வரி டெல்லி பாதுசாக்கள் சாப்பிட..
    மாநில வரி,உள்ளுர் பாதுசாக்கள் உண்டு கொழுக்க…
    இந்தியா போன்ற நாடுகளில் எண்ணை வியாபரம் மட்டுமெ(உள்ளுர் சந்தைக்கு) அளவிடற்கரிய வருவாயை கொடுக்கும்:வருவாயை,பாதியை வாயில் போட்டுக்கொண்டு,மீதியை இலங்கைக்கும்,ஆப்கானிச்தானுக்கும் கோடி கோடியாய் வாரி வீசினால்..போண்டிதான்..
    உட் கார்ந்து சாப்பிட்டால்,வைக்கோல் போரும் கரையும்…
    உலகிலேயெ,சிறு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை நமது பாரத மாத நாட்டில் அதிகம்-அதுவும் லாபகரமாக நடத்துவதில் தேர்ச்சி பெற்றவர்கள்(அரசாங்க தடைகளையும் மீறி)
    சிறந்த திறமையான(உங்களைப் போன்றோர்கள்) அதிகம் இருந்தும்,உலக வங்கி காலையில் கடை திறந்ததும்,முதல் ஆளாக கடன் வாங்குவது எதற்கு?
    ஒன்று செய்யலாம்…அதே உலக வங்கியில்(அ) முத்தூட் நிறுவனத்தில் சிறு தொகை கடன் வாங்கி,அதில் சுண்ணாம்பு காளவாய் செய்து..நட்வர் சிஙு,சுரேசு கருமாதி,அப்புறம் இன்ன பிற ஆசாமிகளை தூக்கிப்போட்டால்,லாபமோ லாபம்

  5. நரசிம்மராவ் புண்ணியவான் பிரதமராகவும், மன்மொகன்சிங் நிதியமைச்சராகவும் ஆன பின்னரே, பொதுதுறைக்கு சொந்தமாக இருந்த,இந்திய எல்லைக்கு அப்பால் இருந்த, சோவிஎட் ரஷ்யா கண்டுபிடித்த எண்ணை கிணறுகள், தனியாருக்கு தாரை வார்க்கபட்டன! இவற்றில் சில அப்போதே அமெரிக்க கம்பெனிகள் வசமானதாக செய்தி! மற்றவை உற்பத்தி செய்யும் பெட்ரொலிய பொருதளையும் சர்வதெச சந்தை விலைக்கே இந்தியா வாஙகியாகவேண்டும்! எப்படி பார்த்தாலும் பெட்ரொலியம் இறக்குமதி பொருளாகத்தான் பார்க்கவேண்டும்! ஆனால், தஙகம் போலல்லாது, பெட்ரொலியம் அத்தியாவசிய எரிபொருள் ஆனதால் சிக்கனமும் சேமிப்பும் அவசியம்! இவற்றிற்கு மானியம் அளிப்பது தவறாகாது!

  6. என்ன மணி ! Allise Manikandan.., பிரதமர் மோடியின் அலுவலகம் இப்பதான் தூக்கத்தில் இருந்து முழித்துக்கொண்டதா? ரிலையன்ஸ் ஜீயோ விளம்பரத்தில் மோடி மாடலாக நடிக்கவில்லை என்று இன்றைக்கு தானே அந்த அலுவலகம் கூறுகின்றது. இதுவரையில் செய்தி தாள்களில் வந்த ஜீயோ விளம்பரங்களில் மோடி கண் சிமிட்டிக்கொண்டு இருந்தாரே அப்போது அவர் உண்மையில் தூங்கிக் கொண்டு இருந்தாரா? ரிளையஸ் ஜீயோ பிரதமரை அவர் அனுமதி இன்றி விளம்பரத்தில் பயன் படுத்தியமைக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் மோடி என்று கேட்டுச் சொல்லுங்கள் அல்லது நோட்டோவை பயன்படுத்தி வினவில் என் கேள்விக்கு மொவுனம் சாதியுங்கள்…!
    (விளம்பரத்தில் நடிப்பது எல்லாம் பிரதமருக்கு இதுவெல்லாம் ஒரு பொழப்பா மணி? வேற வேலையே இல்லையா அவருக்கு?)

    The news about this today is………… :
    ———————————————————–

    ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தைப் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க