privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்

பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்

-

5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. வாக்கு எண்ணப்பட்ட நாளான ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 8, 2013) நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்ததும், ‘இது நாடாளுமன்ற தேர்தல் எனும் இறுதிப் போட்டிக்கான அரை இறுதிப் போட்டி, அதில் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாகை சூடுகிறது’ என்று ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தனர் மோடியின் இணைய பிரச்சாரப் படையினர். இந்துத்துவ தளங்களில், ‘2004-ம் ஆண்டு வரை நடந்த வாஜ்பாயி ஆட்சி என்ற நிழலை புறக்கணித்து அடுத்த 10 ஆண்டுகள் வெயிலில் காய்ந்த மக்களுக்கு புத்தி வந்து மீண்டும் இந்து தர்மத்தின் புத்திரர்களை வரவேற்க தயாராகியிருக்கின்றனர்’ என்று தீர்ப்பு எழுதினர்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியை தனிப் பெரும்பான்மையுடன் பிடித்திருக்கிறது. சட்டீஸ்கரிலும் ஆட்சியை மீண்டும் பிடித்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும், அவரது சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணங்களும்தான் என்று நம்ப வைக்கும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்களின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால், ஊடகங்கள் மோடியின் இந்தத் திருவிழாவில் பெய்த மழையாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு ஆம் ஆத்மி பார்ட்டியின் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்ட நாயகனாக அறிவித்து கொண்டாட ஆரம்பித்து விட்டன. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, 28 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ‘மோடி நடத்திய கூட்டங்களில் கூடிய அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்தாலே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி விடும்’ என்ற அளவுக்கு பில்ட்-அப் கொடுத்தும், காங்கிரஸ் மீதான மக்களின் கடும் அதிருப்தியை தனது ஆதரவாக மாற்றிக் கொள்ள முடியாமல் 70 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 31 இடங்களை மட்டும் பிடித்தது பாஜக (1 இடத்தில் கூட்டணி கட்சியான அகாலி தளம் வெற்றி பெற்றது). இவ்வாறாக, எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சிக்கலில் டெல்லி மாட்டியுள்ளது.

இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமது இமேஜை தக்க வைத்துக் கொள்வதற்காக குதிரை பேரம், சந்தர்ப்ப வாத கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு போன்ற ‘ஜனநாயக’ நடைமுறைகளை பாஜகவும், ஆம் ஆத்மி பார்ட்டியும் ஒத்தி வைத்திருக்கின்றன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் மறு தேர்தல் நடக்கவிருக்கும் சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனையாக வெங்காய விலை முதல் மின் கட்டணம் வரை விண்ணைத் தொடுவதில் ஆரம்பித்து மக்களுக்கு பொருளாதார நெருக்கடியும் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் ஊழல்களும் மக்களை கடும் வெறுப்படைய வைத்துள்ளது. அந்த வெறுப்பை அறுவடை செய்ய வேண்டிய வேலை மட்டும்தான் மோடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்தது. ஆனால், பாரம்பரியமாக வலுவான தளம் உடைய டெல்லி போன்ற சிறு பகுதியில் கூட அவர்களால் அதை முழுமையாக செய்ய முடியாமல் நேற்று முளைத்த காளான் போன்ற அன்னா ஹசாரேவின் முன்னாள் தளபதியான அர்விந்த் கேஜ்ரிவால் குழுவினரிடம் வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறது பாஜக. மொத்த வாக்கு சதவீதத்தில் அதன் பங்கு 2 புள்ளி சரிந்து 34 சதவீதத்துக்கு வந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 30 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது.

மக்களுக்கு வேறு புகலிடம் இல்லாத சத்தீஸ்கரில் கூட பாஜக கடந்த தேர்தலை விட இரண்டு இடங்கள் குறைவாக பெற்று ஆட்சி அமைக்கிறது. மகேந்திர கர்மாவின் மரண அனுதாபத்தை வைத்து காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலை விட 2 இடங்களை அதிகமாகப் பிடித்திருக்கிறது. வேறு நாதியில்லாத வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் மூன்றில் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. மோடி அலையில் மிதந்த பாஜக போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் நூறுகளிலும் பத்துகளிலும் வாக்குகளை குவித்து டெப்பாசிட் இழந்திருக்கிறது.

‘நகர்ப்புற  நடுத்தர வர்க்கத்தின் நம்பர் ஒன் நாயகன் மோடி’ என்று இணையத்தில் பல லட்சம் முறை ஸ்டேட்டஸ் போட்டும் டெல்லி நடுத்தர வர்க்கம் கேஜ்ரிவால் பின்னால் போய் விட்டதை மோடியின் இணைய மார்க்கெட்டிங் ஊழியர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மோடியை தூக்கி நிறுத்த எத்தனை கோடிகள் செலவு, எத்தனை முறை லட்சங்களில் ஆள் திரட்டல், இந்த உழைப்பெல்லாம் கடைசியில் இந்த கேஜ்ரிவால் என்ற சிறு மனிதரின் கட்சியின் தாக்கத்துக்கு முன் எடுபடாமல் போய் விட்டதே என்ற விரக்தி காவிக் கும்பலுக்கு.

காங்கிரசை தூக்கி எறிய நினைக்கும் மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்கும் போது அதன் கடந்த கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஊழல்கள் முதல், குஜராத்தில் மோடியின் ‘நல்லாட்சி’,  கர்நாடகா சுரங்க ஊழல்கள் வரை லீலைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனாலும் வேறு என்ன தீர்வு என்பதற்கு பதில் இல்லாத போது இராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் கழுதைக்குப் பதில் நாயை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. டெல்லியில் இன்னும் என்ன விலங்கு என்று அடையாளம் தெரியாத புதிய கட்சியின் பின் மக்கள் போயிருக்கின்றனர்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ்

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக யோகேந்திர யாதவ் போன்ற திறமை வாய்ந்த தேர்தல் ஆய்வாளரும் இருப்பது அதன் திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. டெல்லி போன்ற பல ஆயிரம் வாக்குகளை மட்டும் கொண்ட தொகுதிகளில் தெருத் தெருவாக திட்டமிட்டு ஊழியர்களை அமர்த்தி, பிரச்சாரம் நடத்தியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ‘வீடுகளின் மின்சார செலவு பாதியாக குறைக்கப்படும்’, ‘ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்’ என்று மோடியின் மேட்டுக் குடி படைகளால் வெறுக்கப்படும் இலவசங்களையும், மானியங்களையும் வாக்குறுதியாகக் கொடுத்திருந்தது ஆம் ஆத்மி கட்சி.

இப்படி வாக்குறுதி கொடுக்க முடியும் எந்தக் கட்சியும் உழைக்கும் மக்களிடம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திடமும் வாக்குகளை குவித்து விட முடியும் என்பதற்கு இந்த டெல்லி தேர்தல் ஒரு உதாரணம். மேலும் நடுத்தர வர்க்கத்தின் தேவதையாக இருந்த காங்கிரசின் ஷீலா தீட்சித்தை அகற்றிவிட்டு நாங்கள்தான் அடுத்த தேவன் என்று நிரூபிக்கும் வேலையை ஆம் ஆத்மி கச்சிதமாக செய்திருக்கிறது.

வாக்குறுதிகளும், திட்டமிடலும் மட்டும் போதாதுதான், கணிசமான பண பலமும் தேவை. நன்கொடைகள் மூலமாக உலகெங்கிலும் ரூ 20 கோடி தேர்தல் நிதி திரட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அண்ணா ஹசாரே இயக்கத்தின் மூலம் இணையத்தில் பிரபலமாயிருந்தது இதற்கு பெரிய அளவு பலனளித்திருக்கும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே ஆம் ஆத்மி கட்சியின் சவாலை குறைத்து மதிப்பிட்டதும் ஓரளவுக்கு உதவியது. நம் ஊரில் கேப்டன் விஜயகாந்த் முதல் தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியிலும், இரண்டாவது தேர்தலில் ஜெயலலிதாவையே ஏமாற்றி கூட்டணி அமைத்து எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆகி விடவில்லையா என்ன?

கேப்டன் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும், வெளியிலும் சீக்கிரமே அம்பலப்பட்டு விட்டார். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும். மக்கள் விரோத  பொருளாதாரக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இந்த அமைப்பிற்குள் எதையும் மாற்றி விட முடியாத காகிதப் போராளிகள்தான் அவர்களும் என்று நிரூபிக்கப்படும்.

உலக மயம், தனியார் மயம் தாராள மயத்தை ஒழித்துக் கட்டாமல் மின் கட்டணம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டு போவதையும், தண்ணீர் மேலும் மேலும் பணம் படைத்தவர்களின் உரிமையாக குறுக்கப்படுவதையும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. முதலாளிகளின் லாபம் சம்பாதிக்கும் உரிமையை உறுதி செய்ய அரசு அதிராக அமைப்பும், நீதி மன்றங்களும் பக்கபலமாக இருக்கையில், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை ஊழல் படுத்தும் அளவுக்கு பெருகிப் பாயும் பண வெள்ளமும் இருக்கும் போது அக்கட்சி விஜயகாந்த் வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் கொண்டு கொடுப்பதைப் போன்ற திட்டங்களை காட்டி சில காலம் காட்சி நடத்துவதோடு அந்தக் கனவு கலைந்து போகும். மேலும் அண்ணா ஹசாரே பீக்கில் இருந்து போதும் இவர்களது ஊழல் எதிர்ப்பில் கார்ப்பரேட்டுகள் இல்லை என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்
வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்

டெல்லியை ஒட்டிய கேஜ்ரிவாலின் மாநிலமான அரியானாவையும் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களையும் அடுத்த இலக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தரப்பினர் கருதுகின்றனர். இந்தியாவின் இதயம் வாழும் கிராமப் புறங்களிலும், தமிழ் நாடு போன்று அழகிரி ஃபார்மூலா ஊக்கமாக செயல்படும் இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் நடுத்தவர்க்க ஆதரவுப் பிரச்சாரம் எடுபடாது.

கேஜ்ரிவாலின் முன்னாள் குரு அன்னா ஹசாரே, தான் மட்டும் தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தால் கேஜ்ரிவாலை முதலமைச்சர் ஆக்கிக்  காட்டியிருப்பேன் என்று மார் தட்டி விட்டு, ஊழலுக்கு எதிரான தனது அடுத்த உண்ணா விரதத்தை ராலேகான் சித்தியில் ஆரம்பித்திருக்கிறார்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள், இந்தத் தேர்தலை பக்கவாட்டில் இருந்து வேடிக்கை பார்த்தனர். ராஜஸ்தானில் கைவசம் இருந்த 3 தொகுதிகளும் பறிபோனது வருந்தத்தக்கது என்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். காங்கிரசை தூக்கி எறியும் ஆர்வத்தில் மக்கள் பாஜகவின் அலையை உருவாக்கி விட்டார்கள், அதில் சிபிஎம்மும் அடி பட்டு விட்டது என்று வருத்தப்பட்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் தேர்தலில் நின்று காம்ரேடுகள் சாதித்தது இவ்வளவு பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் கூட கரையேற முடியாத அவலத்தைத்தான்.

அதே நேரம், ஏற்காடு தேர்தலில் அதிமுகவின் அபார வெற்றி, ஜெயலலிதா மீது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்றும் உருகியிருக்கின்றனர். அதன் மூலம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா தயவில் போட்டியிடுவதை உறுதி செய்து கொள்ள முயன்றிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல்கள் அனைத்துமே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை,  தம்மையும், தம் நாட்டு வளங்களையும் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு சேவை செய்து கமிஷன் வாங்கும் குழுவை மக்கள் தேர்ந்தெடுக்கும் கூத்துக்கள்தான். பழைய செட்டு ஆடினாலும் சரி, புதிதாக பக்கத்து ஊரு செட்டை கூட்டி வந்தாலும் சரி, திருவிழாவில் ஆதாயம் பார்க்கப் போவது ஊர் பெரிய மனிதர்களான முதலாளிகள்தான். உழைக்கும் மக்களுக்கு நவீன சவுக்கடியும் சாணிப்பாலும் கிடைப்பது மட்டும்தான் இந்த அமைப்பு தரும் உத்தரவாதம்.

செழியன்

  1. தோழர் வணக்கம்!
    டெல்லி வெற்றியிலும் இலவச வாக்குறுதி!!!
    அறிவிப்பூர்வ அரசியல் வாதிகளை தேட வேண்டியுள்ளது !
    காங்கிரசின் ஊழல், மக்கள் தலையில் ஏற்றப்பட்ட விலைவாசிகள் ,
    இவற்றிற்கு எதிரான மக்கள் பதிவே டெல்லி வாக்குபதிவு !
    பெருமுதலைகளிடம் நிதி பெறாமல் இந்த வெற்றிக்கனியை ஆம் ஆத்மி கட்சி
    பறித்திருக்க முடியாது ! ஒன்று மட்டும் தெளிவு! இலவசங்களே எதிர்கால அரசியல் என்பது உறுதி!
    இலவசங்களை எதிர்க்கும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா?

    • // வீடுகளின் மின்சார செலவு பாதியாக குறைக்கப்படும்’, ‘ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்’ //

      So you are comparing it with free TV and Grinder and saying both are same.

      Clean Drinking water is supposed to be a right of every citizen. It is shame it is called free.

      And for electricity , AAP gave the calculation how it can achieve the cost reduction.
      It is not like TN parties, issue manifesto without any ground work.

      //பெருமுதலைகளிடம் நிதி பெறாமல் இந்த வெற்றிக்கனியை ஆம் ஆத்மி கட்சி
      பறித்திருக்க முடியாது//
      If your favorite party had won, it was because of people support otherwise corporate support, good analysis.

      I know couple of donors myself. Dont be jealous and spread false information.

      //இலவசங்களே எதிர்கால அரசியல் என்பது உறுதி!//
      What is to be subsidized by tax payers? ( What is free )
      Who is getting?
      How long will they continue to get?

      All of them are important.

      Kamarajar gave free education and free lunch. But it is an investment to society.
      MK and JJ gave TV and mixer, benefiting foreign manufacturers and with no real benefit to society.

      Many people are aware of this difference and you cant fool them with your apple and orange comparison.

      • “If your favorite party had won, it was because of people support otherwise corporate support, good analysis.

        I know couple of donors myself. Dont be jealous and spread false information.”

        I hope Raman is not understanding Vinavu’s point. The second line is a big comedy

  2. ///ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்//

    இந்த வார்த்தைகள் அனைவருக்கும் பொருந்தும். “புரட்சியாளர்களை” கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வினவு போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கும் பொருந்தும். பெட்ரோ டாலரை நேசிக்கும் இவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத ஆட்சியை நிறுவ நினைக்கிறார்கள். மக்களை ஓட்டுப்போடாதே என்று கூப்பாடுபோடும் இவர்கள் ஜனநாயகத்தை வேரறுக்க நினைக்கிறார்கள். இந்தியாவில் இதெல்லாம் நடக்காது. அதற்கு பாக்கிஸ்தான் ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் போகவேண்டும்.

  3. ஊழல் எதிர்ப்பை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி செழியனுக்கு செரிக்கவில்லை… பு.ஜ.கா தோழருக்கு ஒரு மாற்றம் வரும் முன்னே ஒரு நொடியில் எல்லாம் நடக்காது என்பது தெரியவில்லை…. ஆம் ஆத்மி கட்சி பெற்ற மக்கள் நம்பிக்கையை ஏன் பு.ஜா.கா தோழர்களும், மாமோயிஸ்டுகளும் பெறமுடியவில்லை???? இவர்கள் ஒளிந்து இருந்து போராடத்தான் லாயக்கு… சும்மா பஸ் ஸடான்டிலும், கோர்ட்டு வாசலிலும் கொடி பிடித்து ஆட்டினால் ஏதுவும் நடக்காது…வேனும்னா போட்டோ எடுத்து வினவில் பதிக்கலாம்….

    • Indian Said://இது போன்ற சில்லரைத்தனமான கிறுக்கல்கள் தலித் சமூகத்தை வேண்டுமாணால் திருப்திபடுத்தும்….//

      How it will satisfy ?

  4. நீங்கள் விஜயகாந்துடன் கேஜிரிவாலை ஒப்பிடும் போதே உங்கள் அரசியல் அறிவின் பாமரத்தனம் தெரிகிறது.

    கேஜிரிவாளின் அரசியல் உண்மையாக உழலை ஒழிக்க மக்களையும் நாட்டியும் உண்மையாக நேசிக்கும் ஒரு அறிவாளி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது.

    விஜயகாந்த் போல் சந்தர்ப்பவாத அரசியல் என்றால் இந்நேரம் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து டெல்ஹியில் ஆடச் அமைத்து இருக்கும்….

    மேலும் ஆம் ஆத்மி கட்சி உங்கள் போல் பஸ் ஸ்டான்ட் கட்சி இல்லை…கொடியை ஆட்டி, உண்டி குலுக்கி ஆட்சி கனவு காண வில்லை…அவர்கள் மக்கள் பிரச்சனை தொகுதிக்கு தொகுதி வேறு என்பதாலயே 76 விதமான வாக்குறுதி மலர்களை பரப்பினார்கள்…

    அவர்கள் இலவசமாய் தருவேன் என்று சொன்னது டிவி-யோ அல்லது மிxஇ -யோ இல்லை…மனிதனின் உயிர் தேவையான தண்ணீரை…அவர்கள் தேர்தல் நேரத்தில் உழைத்த உழைப்பு, அமைத்த வியுகம், பிரச்சாரம் அனைத்திலும் மக்கள் நலனும் மக்கள் மேம்பாட்டில் மீது நம்பிக்கையும் மிகுந்து இருந்தது…

    இதனால் மட்டுமே அது வெற்றி பெற்றது…எனவே அதன் வெற்றியை விமர்சனம் செய்யாமல் அதன் உழைப்பையும் அந்த கட்சியின் உண்மையான மக்கள் நல மேம்பாட்டு கொள்கைகளையும் போல் கொள்கைகளை வகுத்து மக்கள் ஆட்சியை அளிக்கும் அரசியல் கட்சியாக மாற முயற்சிக்கவும்…

    பஸ் ஸ்டான்ட்ல் கொடியை ஆட்டி துண்டு சீட்டு கொடுத்து கூரைகடியில் வெட்டிக்கதை பேசி ஆட்சி கனவு காண்பது …கண்மூடி திரையில் ஆடும் வேசியை நினைத்து “கையடித்து” சுய இன்பம் காண்பதற்கு சமம்…தயவு செய்து நீங்கள் எல்லாம் கம்முநிசம் பேசாதீர்கள்

    • ரமணா முகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கரியை அல்ல, மலத்தை பூசியிருக்கிறார்.யாருடன் அரவிந்த் கெக்ரிவால் கூட்டணி அமைத்திருக்கிறார் என்று கண் திறந்து பார்க்கிறாரா?தரம் அறிந்து விமர்சனம் செய்ய வேண்டுவது அவசியம்.

  5. ஆம் ஆத்மி ஒரு வருடத்தில் சாதித்ததை வினவால் 100 வருடம் ஆனாலும் சாதிக்க முடியாது! அதுவரை இப்படி தின்னையில் உட்கார்ந்து எல்லாரயும் திட்டுங்க.

  6. //இந்தத் தேர்தல்கள் அனைத்துமே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தம்மையும், தம் நாட்டு வளங்களையும் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு சேவை செய்து கமிஷன் வாங்கும் குழுவை மக்கள் தேர்ந்தெடுக்கும் கூத்துக்கள்தான்.//

    Yes, people elect them but when the democracy matures they will learn and make wise choices.

    But people always have the power in hand not the party.

    • மக்கள் சக்தி ஏமாற்றப்பட்டுக்கொண்டிறுக்கிறதே? முடிவான தர்மம் நிலை பெறுவதற்கு ஏதாவது நாம் பங்களித்தால் என்ன?போகும் பாதை தவறென்றால் இடித்துரைக்கலாம்…இப்போதுள்ள அரசியல்வாதிகளால் நன்மை ஒரு போதும் நடக்காதென்பெதை 100% உறுதலாகக் கூறலாம்.ஆம் ஆத்மி யின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வணங்கப்படக்கூடியதே.நம்பிக்கை பொய்த்துப் போகாமலிருந்தால் நாமும் வாழ்த்துவோம்.

  7. \\கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.\\

    வினவு, வெறும் இதுபோன்ற எதிர்மறை விமரிசனங்களை கேஜ்ரிவாலுக்கு மட்டுமல்ல, யாருக்கு எதிராக வேண்டுமானாலும் வைக்கமுடியுமே. உங்களின் எண்ணம்தான் என்ன? எல்லாரையுமே எல்லாவற்றுக்காகவும் விமர்சித்துக்கொண்டே இருப்பது மட்டும்தானா?

    அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்று நினைத்த மக்களை நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

    ஒருவேளை, கேஜ்ரிவால் நல்ல ஆட்சியைக்கூட கொடுக்கமுடிகிறவராக இருக்கும் பட்சத்தில் எதற்காக இப்படி ஒரு முன்முடிவு?

    அல்லது இன்னாரைத்தான், இவரைத்தான் ஆட்சிக்குக் கொண்டுவரவேண்டும் என்று சுட்டிக்காட்டும் சூழலும் தெம்பும் திராணியும் வினவிடம் இருக்கிறதா?

    உங்கள் கொள்கைதான் என்ன? துக்ளக் ஆரம்பித்தபோது சோ சொன்னாரே, ‘எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு நான் எதிர்க்கட்சி’ என்று.(இப்போது ஜெயலலிதாவுக்கும் சோ எதிர்க்கட்சிதானா என்பது தெரியாது. துக்ளக் படிப்பதைவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டன)அதுபோல யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சியா நீங்கள்? உங்கள் ஆசான் சோ தானா? புரியவில்லை.

  8. ஊழலை ஒழிக்கிரோம் என்பது மத்திய தர வர்க்கத்தை, குறிப்பாக அரசு சம்பளம் வாங்குவோரை கவர்ந்திருக்கிறது! சொன்னபடி ஊழலை ஓரளவுக்காவது கட்டுபடுத்துவது முக்கியம்! அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், சாயம் வெளுத்துவிட்ட காங்கிரஸ், மதவாத சாயம் வெளுக்காத பி ஜெ பி இரண்டுக்கும் மாற்றாக, படித்தவர்கள் நாடும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும்! இவர்களது சாயமும் வெளுக்குமுன் ஏதாவது நல்லது நடந்தால் சரி! மதவாதம் பேசாத, மாற்றுகட்சி என்றவகையில் வரவேற்கிறேன்! கம்யூனிஸ்டுகள் ஏனோ மூன்றாவது,நாலாவது இடமே போதும் என்றிருக்கிரார்கள் ! முன்னுக்கு வர எந்த முயற்சியும் இல்லை!

  9. இந்த சண்டையிலும் ஒருத்தர் சுயேச்சையாக ஜெயித்திருக்கிறாரே அவரை பற்றி எதாவது தெரியுமா?

    • பிஜேபி சீட் குடுக்காத காரணத்தால் சுயேச்சையாக நின்று ஜெயிதுர்கிரன் ……அதுவும் ஒரு காவிதான்

  10. அப்பாடா! வழக்கம் போல் பாஜகவையும் திட்டியாச்சு. AAP-யையும் திட்டியாச்சு.

    ஆனா பாருங்க. நேத்து வந்த கெஜ்ரிவால் திரட்டிய மக்கள் கூட்டத்தை, இத்தனை வருடங்கள் போராடியும்(!) டோலர்களால் முடியவில்லையே!!! ஐயகோ…

    • பசியால் வாடும் நாய்களுக்கு சில எலும்புத் துண்டுகளைப் போட்டால் அவை நல்லா கடிச்சுத் தின்னும். அவ்வளவு ஏன்! அதைக் கடிக்கும்போது தங்கள் நாக்கையும் கடிச்சிக்கிட்டு அந்த ரத்தம் வந்தாலும் பசியில ஒன்னும் தெரியாது. அதே நாய்க்கிட்ட நீங்களே உணவு த்யாரிக்கிறது எப்படின்னு சொல்லிப்ப் பாருங்க. ஒரு நாயி சீண்டாது உங்களை. யாரு எந்தப் பாதைய தேர்ந்தெடுக்கிறது அவரவர் விருப்பம்! ஒன்னும் சொல்றதுக்கில்ல.

      • சபாஷ்…சரவெடி என்று வேட்டே வைத்துவிட்டீர்கள் 🙂

        சற்று சத்தத்தை குறைத்து சீனுவுக்குக்க்கூறுகிறேன்…

        நண்பர் சீனு அவர்களே…

        give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime

        தோழர்கள் மீன் பிடிக்கச்சொல்லித்தருகிறார்கள்…

  11. ஆகா! புல்லரிக்கிறது. கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்குமாம். நல்லா கேட்டுக்கோங்க மக்களே! பு.ஜ.தொ.மு மட்டும்தான் சந்தி சிரிக்காத யோக்கியதையும் திறமையும் உள்ள ஒரேயொரு ‘கட்சி’.

  12. நடந்து முடிந்த டிசம்பர் 2013 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனாதா மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பெரும்பான்மையான வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தை தொடர்ந்து அதன் பலம் இவ்விரு மாநிலங்களிலும் காலூன்றியுள்ளது. இது வெறும் பொருளாதாரப் பிரச்சனைக் கொண்டு மன்மோகன் அரசுக்கு எதிரான வாக்குகளின் வெற்றி என்று கருதுவது தவறு. அது போல ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகள் மன்மோகனைவிட நரேந்திரமோடி மிகவும் தமது கொள்ளைகளுக்கு ஏற்றவர் என்பதால் பாரதிய ஜனதாவை வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் சில முற்போக்காளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கருதுவது தான் வெற்றிபெற்றால் மக்களை அறிவாளிகள் என்றும் தோல்வியுற்றால் மக்களை முட்டாள்கள் என்றும் சில தலைவர்கள் கூறுவதற்கு ஒப்பாகும்.
    பாரதியஜனதாவின் இவ்வெற்றியில் மதமும் பெரும் பங்கு பெற்றுள்ளதை புறக்கணிப்பது சமூக நிலைமையை தவறாக கணிப்பதாகும். இஸ்லாமியர்கள் தங்களின் மத த்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பிடிக்குள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி அனைத்து இஸ்லாமியர்களையுமே தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். புற்கணிப்பவர்கள் மிரட்டலுக்கு ஆளாகுவதால் ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பில் இருக்கவேண்டும் என்ற நிர்பந்த த்தில் ஏதாவது ஒரு அமைப்பில் இன்று அணிதிரண்டுள்ளனர். பல அமைப்புகாளாக பிரிந்து இஸ்லாமிய அமைப்புகள் அடித்துகொண்டாலும் பொதுப்பிரச்சனைகளில் ஒன்று சேர்ந்து வர்களின் மதவாதத்தை திணிக்க முயற்சிக்கின்றனர். இவர்கள், பாரதிய ஜனதாவின் மதவெறியைப்பற்றி, இந்துக்களிடம் உட்பட எங்கு பேசினாலும் தங்களின் மதத்தின் புனிதத்தைப் பற்றியும் மதவெறியுடன் பேசத் தவறுவதில்லை. இந்தச் செயலும், இஸ்லாமிய அமைப்புகளாக தனித்து அணிதிரண்டிருப்பதும் இந்துக்களை, தமக்கான ஒரு அமைப்பும், அணிதிரள்வதும் ஏன் கூடாது என்று சிந்திக்கவைத்துள்ளது. அதுவும் புதிய தலைமுறையினரிடம் இந்தச் சிந்தனை வெகுவாகப் பரவியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் பாரதிய ஜனதாவின் இவ்விரு மாநில வெற்றிகள். சாதியத்தை ஒழிக்க சாதிய அமைப்புகளாக திரள்வது எப்படி சாதிய உணர்வுகளைக் கூர்மை படுத்துமோ அதுபோல மத அமைப்புகளாக திரள்வதும் மதவெறியைத்தான் கூர்மை படுத்தும்.

    • நாட்டுவேங்கை இப்போதுதான் காட்டுக்குள்ளிருந்து வருகிறார் போலும். இவ்விரு மாநிலங்களிலும் எந்த முஸ்லீம் கட்சி தேர்தலில் நின்று முஸ்லீம் வாக்குகளை அள்ளியுள்ளது.

  13. Ha..Ha..Come on Guys… உங்களுடைய புகழ் பெற்ற பொறாமையும், ——எரிப்பும் இந்த கட்டுரையில் முழுமையா கைகூடல.. இன்னும் நல்லா ட்ரை பன்னுங்க..

  14. வினவு மக்களை ஓட்டுப்போடாதீர்கள் என்று தனது ‘புரட்சியாளர்கள்” மூலம் ஊர் ஊருக்கு விளம்பரம் செய்து வருகிறது. ஒரு நாட்டுக்கு ஒரு தலைமை கண்டிப்பாக தேவை. மக்களை (தங்களை) ஆள ஒரு தலைமை தேவை. அதனால்தான் மக்கள் ஓட்டுப்போட்டு தலைமையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஓட்டுப்போடாதீர்கள் என்றால் எப்படி தலைமையை தேர்ந்தெடுப்பது? இந்த நாட்டை யார் வழி நடத்தி செல்வது. ஒரு சர்வீஸ் கமிசன் மூலமோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோ நாட்டின், மாநிலத்தின் தலைமையை தேர்ந்தெடுக்க முடியாது!!! அப்படி தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். ஓட்டுப்போட ஆளில்லாதால் வினவு தன்னைத்தானே ஒருதலைப்பட்சமாக தலைமையை ஏற்க இருக்கிறதோ என்னவோ? இதுவரை எப்படி நமது நாட்டிற்கு தலைமையை தேர்ந்தெடுப்பது என்று இந்த வினவு ஒரு சிறு குறிப்பு கூட சொல்லவில்லை. கேட்டால் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பார்கள். யார் நல்லவர் என்று யார் தீர்மானிப்பது? மக்கள்தானே? உலக நாடுகள் அனைத்திலும் ஜனநாயகமுறையில் ஒட்டுப்போட்டுதான் மக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். சில இஸ்லாமிய நாடுகளில் இருப்பதுபோல் இராணுவம் மற்றும் சர்வாதிகார அமைப்பால் மக்கள் சொல்லென்ன துன்புறுவதை உலகம் அறியும். மக்களாட்சி ஏற்ப்பட்டால் சரியில்லாவிட்டால் அடுத்த தேர்தலில் தூக்கி எரிந்துவிடலாம்! மாற்று ஆட்சி அமைக்க உதவலாம். சர்வாதிகார மற்றும் ராணுவ ஆட்சியில் இதனை செய்ய முடியாது என்பதை உணரவேண்டும்.

    • //வினவு மக்களை ஓட்டுப்போடாதீர்கள் என்று தனது ‘புரட்சியாளர்கள்” மூலம் ஊர் ஊருக்கு விளம்பரம் செய்து வருகிறது//

      correction:

      புரட்சியாளர்கள் மக்களை ஓட்டுப்போடாதீர்கள் என்று வினவு இ-தளம் மூலம் மூலமும் ஊருக்கு ஊர்[உலகம் எங்கும்] விளம்பரம் செய்து வருகின்றனர்.

    • வினவு மக்களை ஓட்டுப்போடாதீர்கள் என்று தனது ‘புரட்சியாளர்கள்” மூலம் ஊர் ஊருக்கு விளம்பரம் செய்து வருகிறது.
      இதைக் கொஞ்சம் விபரங்களுடன் தர வேண்டுகிறேன்.என் போன்ற அப்பாவிகள் ஏமாறாமல் இருக்க உதவும்.

    • நட்ராயன் சார்,

      வினவு எப்போது சர்வாதிகார ஆட்சி வேண்டும் எனக் கூறியது? இத்தனை வருடம் வினவு படிக்கும் நீங்களே இப்படிக் கூறினால் எப்படி? இரட்டை ஆட்சி முறை பற்றி விரிவாக ஒரு கட்டுரை உள்ளது. முடிந்தால் தேடித் படியுங்கள்.

  15. வழிகாட்டுவதற்க்கான,மாற்றம் ஏற்படுத்துவதற்கான பாதையில் எங்காவது தொய்வு ஏற்பட்டுவிட்டால் மீட்டுவது கடினம்,ஏதோ இக் கட்டுரையில் தொய்வு உள்ளது என்று தெரிகிறது.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்கலாம்.பா.ஜ.க.மதவாதம்,சரி, ஆம் ஆத்மி அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது இல்லையே?அவர்களது முயற்சி வெற்றி பெற்றால்….. வாக்களிக்கவிரும்பாதவர்களின் எண்ணங்களையும் சிறப்பாக எழுதியிருக்கலாம்.

  16. ஆம் ஆத்மி கட்சியாவது “ஊழலுக்கு” எதிராக தன்னைக் காட்டிக்கொண்டு மக்களை திரட்டி வெற்றியும் பெற்று உள்ளது. ஆனால் வினவு எப்போதும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தது கிடையாது!! ஊழல் செய்யும் அரசு ஊழியர்களின் தயவு இவர்களுக்கு தேவை போலும். இன்றைய சூழ்நிலையில் மக்களில் என்பது சதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊழல் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா என்று தினமும் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள்!!! இந்த சூழலில் ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரித்து உள்ளனர். தமிழகத்தில் இந்த சூழலை உருவாக்க எந்த இயக்கமும் இல்லை. இதனை வினவு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். தினசரி ஊழல் நடக்கும் அரசு அலுவலகத்தை முற்றுகை இட்டு தனது செயல் மூலம் மக்களுக்கு நல்லது செய்யலாம். தனது “புரட்சியாளர்களை” இதற்கு பயன்படுத்தாலாம். செய்வார்களா? மாட்டார்கள்!

  17. அர்விந்த் கேஜ்ரிவால் நல்லவரா கெட்டவரானு தெரியல . எதோ ஒரு மாற்றம் நடந்து இருக்கு . அது வரைக்கும் நல்லது. அவரது நடவடிக்கைகளை பொறுத்து நல்லவரா இல்லையானு தெரிஞ்சுக்கணும்.

    அடிக்கடி தமிழ் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் நீயா நானா நிகழ்ச்சியில் கூறியதும் நினைவுக்கு வருகிறது

  18. A political party’s attitude towards its own mistakes is one of the most important and surest ways of judging how earnest the party is and how it fulfils in practice its obligations towards its class and the working people. Frankly acknowledging a mistake, ascertaining the reasons for it, analysing the conditions that have led up to it, and thrashing out the means of its rectification — that is the hallmark of a serious party; that is how it should perform its duties, and how it should educate and train its class, and then the masses. By failing to fulfil this duty and give the utmost attention and consideration to the study of their patent error, the “Lefts” in Germany (and in Holland) have proved that they are not a party of a class, but a circle, not a party of the masses, but a group of intellectualists and of a few workers who ape the worst features of intellectualism.- LENIN

  19. கெஜ்ரிவால் மீடியாவின் இன்றைய மோடி ! மோடி இந்தியாவின் உளறுவாய் விஜயகாந்த் ! விஜயகாந்த் நேற்றைய கெஜ்ரிவால் !

  20. புல்லபுச்சிக்கெல்லாம் ரெக்கை முலைக்குமுனு யார் கண்டா……..ஏர்கனவே இருக்கிர கழிசடைங்க பத்தாதுனு இது வேர புதுசா ஒரு கழிசடை……..இந்திய மக்கள் ரொம்ப பாவம்…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க