Monday, October 14, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் - வீடியோ

புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ

-

புதுச்சேரி பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவுடி ஓம்சக்தி சேகரின் பாசிச வெறியாட்டம்!

தில்லை நடராசர் கோயிலில் உள்ள தமிழ் மக்களின் உரிமையை பறித்து தீட்சிதர்களுக்கு சொந்தமாக்கும் ஜெயா- சுசாமி கூட்டு சதியை அம்பலப்படுத்தி கடந்த 04.12.2013 அன்று புதுச்சேரி பு.ஜ.தொ.மு தோழர்கள் மக்கள் மத்தியில்  துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவுடி ஓம்சக்தி சேகர் தனது குண்டர் படையோடு வந்து தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினான். தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு அக்கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் பதவியை பெற முயற்சிக்கும் அந்த ரவுடி பத்திரிக்கையாளர்களை கையோடு அழைத்து வந்து போலிஸ் முன்பும், மக்கள் முன்பும் இந்தத் தாக்குதலை நடத்தினான.

இச்சம்பவம் பத்திரிகைகளிலும், மற்ற ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டது. ஏற்கனவே 44 கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ  ரவுடி ஓம்சக்தி சேகர், உழைக்கும் மக்களுக்காகவே தொடர்ந்து பனியாற்றி வரும் எமது அமைப்புத் தோழர்களை குற்றவாளிகளை தாக்குவதைப் போல கொடூரமாக தாக்கினான். அது மட்டுமல்ல “ஏன் அவர்களை இப்படி அடிக்கிற நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கேட்ட பொது மக்களில் ஒருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளான்.

தோழர்கள் தாக்கப்பட்டு ஒருவாரம் காலமாகியும் போலிஸ் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பணத்தைக் கொடுத்து தம் பக்கம் வைத்துக் கொண்டான்.

எமது அமைப்பின் சார்பாகவும் எமக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ள ஜனநாயக சக்திகள், அமைப்புகள் கூட்டமைப்பின் சார்பாகவும் போலிஸ் மேல் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்த பிறகு 143, 149, 294(B), 323, 506(2) ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. ஆனால் போலிஸ் தாங்கள் ஓம்சக்தி சேகரின் கைகூலிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஓம்சக்தி சேகர் மீது போடப்பட்ட அனைத்து பிரிவுகளையும், கூடுதலாக 141 பிரிவையும் சேர்த்து பாதிக்கப்பட்ட எமது தோழர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை  போடப்பட்டது.

இவற்றை அம்பலப்படுத்தி கண்டிக்கும் விதமாக 11-12-2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு இருந்தோம். அதில் பேசுவதற்காக பெரியார் அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் (சி.பி.எம், சி.பி.ஐ யை தவிர) ஜனநாயக சக்திகள் அனைவரையும் அழைத்திருந்தோம். பு.ஜ.தொ.மு அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் தலைமை தாங்கினார். பெண்கள் குழந்தைகள் உட்பட  350 பேருக்கு மேல்  அமர்ந்திருந்தனர்.

கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது ரவுடி ஓம்சக்தி சேகர் தனது குண்டர் படையோடு (அனைவரும் போதையில்) வந்து சேர்ந்தான். ஓம்சக்தி சேகர் கல்லை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்து இருப்பவர்கள் மீது அடிக்கிறான். பிறகு கூட்டத்தை நோக்கி கொலைவெறியோடு தாக்குவதற்கு பாய்ந்து வந்தனர்.

அ.தி.மு.க என்ற அரசியல் ரவுடிகளின் கூட்டம், மக்களின் ஜனநாயக உரிமைகளையோ, MLA வின் அரசியல் கடமைகளையோ, பொறுப்பையோ சிறிதும் உணராமல் பாசிச குண்டர்களைப்போல நடந்து கொண்டது. அனுமதி பெற்று நடக்கும் கூட்டத்தில் அனுமதி இல்லாமல் அராஜாகமாக தாக்க வருகிற குண்டர்களை கைது செய்யாமல்  சமாதானப்படுத்தும் அயோக்கியத் தனத்தையே போலிஸ் செய்தது. மேலும், “கூட்டத்தை நிறுத்துங்கள்” என தோழர்களை மிரட்டியது. அரசியல் பலம், அதிகார பலம் கொண்டவர்களுக்குத்தான் போலிசும் சட்டமும். உழைத்து ஓடாய் தேயும் மக்களுக்கு இல்லை என்பதை போலிஸ் நன்றாக நிரூபித்தது.

இன்னொரு பக்கம் நமது செஞ்சட்டை தோழர்கள், தலைமை கட்டளையிட்டால் தாக்குவதற்கு தயாராக சீறி நின்றார்கள். கூட்டத்தை சுற்றி சங்கிலி பாதுகாப்பு போடப்பட்டது. எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஐ அன்பழகன் உட்பட 3 எம்.எல்.ஏக்கள், 30 கைத்தடிகள் நின்று கூச்சல் போட்டுக் கொண்டு முன்னோக்கி முன்னோக்கி பாய்ந்தனர். ஆனால் கிட்ட வரவில்லை. செஞ்சட்டை தோழர்கள் அவர்களை எதிர் கொள்ளத் தயாராக இருந்தார்கள். மிரண்டுபோன ரவுடி கூட்டம் ஓரமாக ஒதுங்கியது.

தோழர்களை தாக்க வந்த காசுக்கு பீ தின்னும் பன்றிக் கூட்டம் மக்களுக்காக தங்களது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் செஞ்சட்டை தோழர்களின் வலிமையை கண்டு பின் வாங்கிச் சென்றது.

பொது மக்களின் கருத்துகள் :

  • இந்த பொறுக்கியை விடக் கூடாது,
  • இவனுங்கள ஒதைக்கணும், எப்பப் பார்த்தாலும் ரவுடித் தனந்தான் செய்றானுங்க,
  • இப்படி ரவுடித் தனம் செய்துதான் இவன் பெரிய ஆளா ஆனான்.
  • இப்படி பிரச்சனை செய்து தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டான்.
  • அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டான். எல்லாரும் இவனை காறி துப்புறாங்க, இவன் தடிமாடு மாதிரி இருந்துக்கிட்டு ஒரு வயதான தோழரை தாக்கினானே, இவன் ஒரு ஆம்பளையா?
  • இதோ துள்ளுற பயலுங்க காசுக்காக வந்தவனுங்க, ஒருத்தன்  நிக்க மாட்டான்.
  • இவன் பொறுக்கி இப்படித்தான் செய்வான், எம்.எல்.ஏ பதவிக்கும் இவனுக்கும் பொருத்தமே கிடையாது. இவன ஓடவுட்டு அடிங்க. அப்பதான் மக்களுக்கு நிம்மதி.

பொதுமக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகளின் மத்தியிலும் இந்த ஆர்ப்பாட்டம் நல்ல வரவேற்பை பெற்றதோடு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :
பு.ஜ.தொ.மு புதுச்சேரி.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

  1. அறிவுகெட்டவண்டா இந்த சேகர். ஒரு உதாரணத்துக்கு, அவனோட இடத்துலேயே தோழர்களை கூட்டி பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினால் இந்த நாயால் என்ன செய்ய முடியும்? அவன் கட்சி வருமா அவனுக்கு துணையா? தனியா அடிபட்டு இந்த நாய் அழியப் போவது உறுதி

  2. ## இப்படி ரவுடித் தனம் செய்துதான் இவன் பெரிய ஆளா ஆனான் ##
    ரவுடித்தனம் பண்ணினால் பெரிய ஆளாக முடியும் என்றால் ரவுடித்தனம் தானே பண்ண வேண்டும்.
    ரவுடித்தனம் பண்ணினால் பிரபலமாக, மக்கள் பிரதிநிதயாக அகலாம் என்னும் நிலைமை மக்களின் குறைபாடுதானே. மக்கள் இவர்களை ஆதரிப்பதன் பின்னணி என்ன?

  3. தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் பாய்ந்து பிடுங்கும் இந்தப் போலீசுப் பொறுக்கி நாய்கள் தங்கள் கண்முன்னே ரவுடித்தனம் செய்யும் ஓம் சக்தி சேகர் போன்றோரை ஏதும் செய்யவில்லை. அனுமதி பெற்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிரச்சனை செய்பவர்களை அடித்துத் துவைத்து இழுத்துச் செல்லாமல் மிகவும் மென்மையாகக் கையாள்கிறது போலீசு.

    ஓட்டுப் பொறுக்கிகள் வீசும் எலும்புத் துண்டுக்கு அலையும் நாய்கள்தான் காவல் துறையினர் என்பதை அவர்கள் பலமுறை நிரூபித்தாலும் தற்போது மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள். மக்களே இதைப்புரிந்து கொண்டு புரட்சிகர அமைப்புகளுக்கு ஆதரவாக அணி திரளுங்கள்.

  4. ரவுடிபயல் சேகரை கைது செய்! கைது செய் !! பன்னி பயல் சேகரை கைதுசெய் !கைதுசெய் !! பொறுக்கிபயல் சேகரை கைது செய் ! கைது செய்!!திருட்டுநாய் சேகரை கைது செய் !கைது செய்!! முடிச்சவிக்கி சேகரை கைது செய்!கைது செய்!! முள்ளமாறி பயல் சேகரை கைது செய்!கைதுசெய்!!

  5. அவனோட இடத்துலேயே தோழர்களை கூட்டி பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினால் இந்த நாயால் என்ன செய்ய முடியும்? அவன் கட்சி வருமா அவனுக்கு துணையா? தனியா அடிபட்டு இந்த நாய் அழியப் போவது உறுதி

  6. ஓம் சக்தி சேகர் மட்டுமல்ல, அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனும் ஒரு தெருப்பொருக்கி, ரவுடிதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க