Sunday, June 20, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !

முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !

-

சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம் பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும் வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறைவாசம் விதிக்கமுடியும்.

குற்றமும் தண்டனையும்
குற்றமும் தண்டனையும்

திருவான்மியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.) வெங்கடேசன். அவரது மனைவி ராணிவெங்கடேசன் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். மகள் பியூலா ஒரு போலீசு அதிகாரி. மருமகனோ சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ். செல்வமும் சக்தியும், மழையால் சரிந்து கிடந்த வெங்கடேசன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் முருங்கை இலையையும் சில காகளையும் பறித்ததும், அக்குடும்பத்தினர் போலீசிடம் புகார் தந்தனர். இந்த மாபெரும் குற்றத்திற்காகத் தரப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமே! உடனே இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.கள், 10 போலீசார் உள்ளிட்ட ஒரு படையே சென்று கைது நடவடிக்கையில் இறங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிவெங்கடேசன், “நூறு கோடி திருடினா என்ன, முருங்கையைத் திருடினா என்ன,எல்லாமே திருட்டுதானே” என்று ‘நியாயம்’ பேசுகிறார்.

அதே சென்னையில், அடகுக்கடை நடத்தி வந்த நிக்ஷாசந்த் என்பவர் திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறி, அவரிடமிருந்து 203 கிராம் தங்கத்தை நான்காண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றார், மயிலாப்பூர் போலீசு நிலைய தலைமைக் காவலர் சம்பத். இச்செயல் சட்டவிரோதமானதென்றும் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செயவேண்டுமென்றும் நிக்ஷாசந்த் புகார் கொடுத்தார். ஆனால், போலீசாரோ வழக்குப் பதிவு செயாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார், அடகுக் கடைக்காரர். 2012-இல் தலைமைக் காவலர் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டாகியும் இதனை போலீசு நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நிக்ஷாசந்த் தொடுத்தார். தங்கத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நியாயப்படி தலைமைக் காவலரை கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதை காரணம் காட்டி அவரை மன்னித்துள்ளது, நீதிமன்றம். போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

 1. மிகச் சரியான கேள்வி. இரண்டு கேசிலும் போலீசின் நடவடிக்கைகள் மாற்றி இருந்திருக்க வேண்டும்.

  இந்தப் பதிவிற்கு சம்பந்தமில்லாத மறு மொழி.

  நான் இனிமேல் மறு மொழிகள் பதிவு செய்வதாக இல்லை. ஆபாசமான, தரக்குறைவான மறுமொழிகளை publish செய்யும் வினவு, என்னுடைய சில முந்தைய மறுமொழிகளை publish செய்யாததற்கான எதிர்ப்பு நடவடிக்கை.

  • இதில் கோபம் வரணுமா? சிவா..
   பதிவுகளை ஏற்கவும்/நிராகரிக்கவும்
   இனையத்துக்கு சுதந்திரம்/உரிமை உண்டு…
   நாம் முரண்டு பிடிப்பது அழகல்ல:
   தொடர்ந்து எழுதுங்கள்…
   என்னையே எவ்வளவு தூரம் ஏறி மித்திவர்கள் நீங்கள்: நான் கோபம் கொண்டு
   எவரையும் உதாசீனம் செய்வதிலை:
   பாசிச பச்சை புடைவையை நீங்கள் ரசிப்பீர்கள்:எனக்கு எரிச்சல்

   • திரு.சீதாபதி அவர்களே,எனது மறுமொழிகளில் தங்களை கடுமையாக வசைபாடி விட்டேன்.அதற்கு அப்பொழுதே மன்னிப்பு கொர இருந்தேன்,சந்தர்ப்பம் அமையவில்லை.இப்பொழுது கேட்டு விடுகிறேன்.மன்னியுங்கள்.ஆனால் தங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

    • எனக்கு வருத்தம்? உஙகளைப் போன்றோரிடம் நிச்சயமாக
     நான் கோபிப்பதில்லை: உங்களது கருத்து உங்களது சுதந்திரம்:

     எனது வருத்தமெல்லாம் 1,50,000 தமிழர்கள் மாட்டுத் தொட்டியில்
     இறைச்சிக்காக மாடு அடிப்பதுபோல் கொல்லப்பட்டபொது,வேடிக்கைப் பார்த்த
     ஈனப் பிறவிகளை நான் என்ன சொல்வேன்!
     என்னைத் தெலுங்கன் என்று அழைத்தபோதிலும்.நான் வருந்துவதில்லை:
     எனது காலம் முழுவதும் என்னால் முடிந்த அளவில் போராடுவேன்:
     உங்களது சிதம்பரத்தில் தான் எனது கல்லூரி வாழ்க்கை: வலி மிகுந்தது

     • உங்களது மறுமொழி நீங்கள் என்னை ஈழ தமிழர் என்று நினைக்கிறீர்களோ என எண்ண வைப்பதால் ஒரு விளக்கம் மட்டும். நான் தமிழ்நாட்டு தமிழந்தான்.நன்றி

    • எனக்கு தேவாரநாயனாரை ரொம்ப பிடிக்கும்…
     மூர்க்க நாயனார்?
     யாராவது விபரமாக எழுதுங்கள்
     64 நாயனாரில்,இது ஒரு திருமங்கை மன்னன் கேசு

     • //எனக்கு தேவாரநாயனாரை ரொம்ப பிடிக்கும்//—ரொம்ப நன்றிண்ணே[ஹி,ஹி]

 2. கேஜ்ரி”வாள்” மாமாவின் கோமாளித்தனங்களை அம்பலபடுத்தும் பதிவு ஏதேனும் உண்டா?

 3. நீதி மன்றம் திருட்டு காக்கியை மன்னித்து அருளாசி வழங்கியதோடு விட்டது.பாசிச ஜெயாவாக இருந்திருந்தால் திருட்டு காக்கிக்கு 3 லட்சம் ரொக்கப்பரிசும் ஒரடுக்கு பதவி உயர்வும் வழங்கி பூரித்துபோயிருப்பார்.லாக் அப் கொலைகளுக்கே தண்டனை எதுமின்றி தெனாவெட்டக திரியும் காக்கிகள் கேவலம் திருட்டுக்காகவா தண்டிக்கப்பட போகிறது? வாய்ப்பே இல்லை.

 4. மொத்த குடும்பமும் போலீஸு குடும்பம்…ஆகா
  அம்புட்டு சொத்தும் ஆட்டையைப் போட்டு அள்ளியததுதான்

 5. இருவேறு வர்க்திற்கு இருவேறு சட்டம் என்பது ஏற்றுகொள்ள முடியாத விடயம். ஆனால் இங்கு அந்த போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவது நியாயம். அதற்காக போராட வேண்டும் என்று அறை கூவல் விடுவதும் நியாயம். ஆனால் இவர்கள் தண்டிக்கப்படவில்லையே என்பதால் மற்றவர்களும் தண்டிக்கப்பட கூடாது என்று கோருவது அநியாயம். இங்கு அந்த போலீஸ்க்கு தண்டனை வாங்கி தரும் விடையங்களை ஆராய்வது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் இது ஒரு பிழையான முன் உதாரணாமாகிவிடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க