privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !

பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !

-

ந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2005-2012 கால கட்டத்தில் விவசாயத் துறைக்கு வெளியில் 5.2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2013-2019 கால கட்டத்தில் 3.8 கோடி புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகும் என்று கிரைசில் மதிப்பிட்டிருக்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் வேலை செய்யும் வயதிலான மக்கள் தொகை 8.5 கோடி அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 5.1 கோடி பேர் தொழில், சேவை துறைகளில் வேலை தேடுவார்கள். ஆனால், 3.8 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். எஞ்சியவர்கள் விவசாயத்துறைக்கு திரும்புவதன் மூலம், விவசாயத் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி அதிகரிக்கும்.

இப்போதே 49% மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மதிப்பு மட்டுமே சேர்கிறது. பன்னாட்டு ஏகபோகம், மானியவெட்டு என்று கொல்லப்பட்டு வரும் விவசாயம் அழிக்கப்படுவதினாலேயே மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களை நாடுகின்றனர். மேலே சொன்னபடி, இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் உழைக்கும் மக்கள் அனைவரையும் உள் வாங்குவதாக தொழில்/சேவைத் துறைகள் இல்லை. வேலையற்றோரை தாங்குமளவு விவசாயமும் வளமாக இல்லை. இறுதியில் வேலையற்றோர் விகிதம் வேகமாக வளர்கிறது.

கிரிசிலின் ஆய்வுப்படி சமீப ஆண்டுகளில் தகவல்/தகவல் தொழில் நுட்பத் துறை, வணிக மற்றும் நிதித் துறை சேவைகள் போன்ற ஆள் தேவை குறைவான துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதால் வேலைவாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சி நிலை உருவாகியுள்ளது. இந்த துறைகளில் ரூ 10 லட்சம் மதிப்பு கூடுதல் ஏற்படுத்துவதற்கு கூடுதலாகஓரிரு ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், இந்தத் துறைகளில் ஏற்படும் அதிக வளர்ச்சி போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. உதாரணமாக, 2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19%-ஐ ஈட்டிய சேவைத் துறையில் மொத்த உழைக்கும் மக்களில் 3% மட்டுமே வேலை செய்தனர்.

இரண்டாவதாக, உற்பத்தித் துறையில் இயந்திர மயமாக்கலின் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்குக் காரணமாக தொழில் நுட்ப முன்னேற்றத்தையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் கிரிசில் சுட்டியுள்ளது.

பொருளாதார அகதிகள்
சொந்த நாட்டிலேயே பொருளாதார அகதிகள்.

அதாவது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், 8 மணி நேர வேலை போன்ற விதி முறைகளின் காரணமாக முதலாளிகள் தொழிலாளர்களை நீக்கி விட்டு இயந்திரங்கள் அதிகமாக ஈடுபடுத்துகின்றனர். இதனால் வேலை வாய்ப்பு குறைகிறது. எனவே, இந்த சட்ட திட்டங்களை அகற்றி விட்டு, சுதந்திரமான தொழிலாளர் சந்தையை உருவாக்கினால், அடிமைகளாக வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தும் சுரண்டலுக்கு இணையாக அனைத்து தொழிலாளர்களையும் சட்டபூர்வமாக நடத்துவதுதான் முதலாளிகளின் கோரிக்கை. கிரிசிலின் ஆய்வும் இந்த நோக்கத்தைத்தான் கொண்டிருக்கிறது.

2005 வரையிலான 7 ஆண்டுகளில் (1998-2005) தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.68% அதிகரித்தது. 2005-2012 இடையிலான ஏழு ஆண்டு காலத்தில் தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.17 மட்டுமே அதிகரித்தது. அதாவது, தொழில் துறையின் விற்பனை மதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் அதில் உருவாகும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சிறிதளவே அதிகரித்தது.

பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் வறுமையை ஒழித்துக் கட்டும் மந்திரக் கோல் என்று மன்மோகன் சிங் தலைமையிலான உலகமயக் கொள்கையின் ஆதரவாளர்கள் சாதிக்கின்றனர். இந்தியாவின் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் சேவைத் துறையிலும், தொழில் துறையிலும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி, நாட்டில் வறுமையை ஒழிக்கப் போவதாகச் சொல்லும் இந்த மோசடி பொருளாதாரக் கொள்கையின் யோக்கியதை இப்படி பல்லிளிக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் நாட்டின் ‘வளர்ச்சி’க்காக முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி விடும் அதே நேரத்தில், மக்களுக்கு விவசாயத்தில் வேலை பார்த்தால் பட்டினி, தொழில் துறையில் வேலை வேண்டுமென்றால் உரிமைகளை அனைத்தும் விட்டுக் கொடுத்து அடிமைகளாக பணி புரியும்படி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத சேவைத் துறை என்பதுதான் இந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உள்ளது.

கோடிக் கணக்கான மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிய விட்டிருப்பதுதான் 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளின் விளைவு. அவற்றை இன்னும் தீவிரப்படுத்தினால்தான், அதாவது மக்களை இன்னும் பராரிகளாக மாற்றினால்தான் நாங்கள் தொழில் முனைவு காட்டி வளர்ச்சிக்கு வழி வகுப்போம் என்று முதலாளிகள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.

மேலும் படிக்க

  1. பிஸினஸ் ஸ்டாண்டர் இதழில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் எழுதபட்ட பதிவில் அந்த கட்டுரையில் உள்ள முக்கிய விசியத்தை பற்றி பேசாமால் இருந்தா எப்படி ?

    ///the labour dependency of the manufacturing sector – which once used to be the most labour-intensive sector barring agriculture – has diminished considerably as complicated restrictive labour laws and technological progress have encouraged automation.///

    தொழிலாளர் சட்டங்களின் விளைவாகவே புதிய வேலைவாய்ப்புகள் பெரும் அளவில் உருவாகாமல், தானியங்கி முறைகளை ஊக்கப்படுத்துகிறது. சீனா போல் அல்லாமல் இங்கு ஒரு 10,000 தொழிலாளர்கள் ஒரே நிறுவன வளாகத்தில் labour intensive வேலைகள் செய்ய வாய்ப்புகள் குறைவு. எனவே அத்தகைய பெரும் நிறுவனங்கள் இங்கு உருவாவதில்லை. சம்மளம் குறைவாக இருந்தாலாம், இந்த வேலை வாய்ப்புகளும் உருவாககாமால் மாற்று வழி இல்லை.

    தாராளமயமாக்கலை தொடர்ந்து ’திட்டுபவர்கள்’ அதற்க்கு முன்பு நிலவிய பொருளாதார கொள்கைகளை மீண்டும் கொண்டு வர சொல்கிறார்களா ? அதாவது மூடிய பொருளாதார கொள்கைகள், அன்னிய முதலீடுகளை தடை செய்தல், லைனெஸிங்க் கட்டுபாடுகள், மிக அதிக வரி விகிதங்கள் (75 சதம் அளவு கார்பரேட் வருமான வரிகள்) ; அல்லது தாராளமயமாக்கலை செய்யாமல் பழைய கொள்கைளையே தொடர்ந்திருந்தால் இன்று தொழிலாளர் நிலை மேம்பட்டிருக்குமா ?

    Do Labor Intensive Industries Generate Employment? Evidence from firm level survey in India
    http://www.eaber.org/node/22912

    • நண்பரே,

      புதிய பொருளாதார கொள்கைகள் வருவதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடவில்லைதான்.ஆனால் பிலாய்,ரூர்கேலா,பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை,BHEL NLC ,என நாடெங்கும் பெரும் பெரும் தொழிற்சாலைகள்,மின்நிலையங்கள்,பக்ரா நங்கல்,கிராகுட் என பெரும் பெரும் அணைக்கட்டுகள் ,நாடெங்கும் அரசு கல்வி நிறுவனங்கள்,என நாடு முன்னேற்றப்பாதையில்தான் சென்று கொண்டிருந்தது. முன்னேற்றத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்று மக்களுக்கு பயனளிக்கும் வேளையில் புதிய பொருளாதார கொள்கை வந்தது.அதன் மூலமாக உள்நாட்டு,பன்னாட்டு தனியார் முதலாளிகளின் வேட்டைக்காடாக ஆகிப்போனது நாடு.

      விளைவு, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள்..தமிழக தெருக்களிலும் மராட்டிய தெருக்களிலும் வட மாநில தொழிலாளர்கள் பஞ்சை பராரிகளாக அலைகிறார்கள்.தமிழக தொழிலாளர்களோ வளைகுடா நாடுகளின் பாலைவனங்களில் அலைகிறார்கள்.நாடெங்கும் அரசு கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தனியார் கொள்ளை.உள்நாட்டு தொழில்களுக்கான அரசின் பாதுகாப்பு சட்ட திட்டங்கள் அத்தனையும் விலக்கப்பட்டு பன்னாட்டு முதலாளிகளின் மூலதன வலுவுடன் போட்டியிட முடியாமல் உள்நாட்டு தொழில்கள் குறிப்பாக சிறு முதலாளிகள் திவாலாகி போன நிலை.

      இந்த நிலையைத்தான் முன்னேற்றம் என சாதிக்கிறீர்கள்.

      ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

      சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன.இப்போது நமக்கு தேவையான பொருட்கள் வாங்க போதிய கடைகள் இல்லையா என்ன.விலைவாசி குறையும்,வேலைவாய்ப்பு பெருகும்,நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறும் என்பீர்களேயானால் உற்பத்தி செலவுகள் எதுவுமே குறையாமல் அந்நிய முதலீட்டாளர்கள் விலையை எப்படி குறைப்பார்கள் என்று சொல்லுங்கள்..விலையை குறைக்க அவர்களுக்கு உள்ள ஒரே வழி,
      தொழிலாளர்களின் கூலியையும்,சிறு உற்பத்தியாளர்களின் ஆதாயத்தையும் குறைக்க அழுத்தம் கொடுப்பார்கள்.இது வறுமையை கூடுதலாக்குமே அன்றி குறைக்காது.சிறு வணிகர்களை வணிகத்தை விட்டு துரத்தி வேலையில்லா திண்டாட்டத்தையும் கூடுதலாக்குமே அன்றி குறைக்காது.

      • //சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன.//

        தவறான கொள்கைகளால் இந்தியாவின் கடன் அதிகரித்து விட்டது . ஏற்றுமதி மூலம் ஈட்ட வேண்டிய பொருளை , நாட்டை அந்நிய நாடுகளுக்கு விற்று வரும் பணத்தின் மூலம் சரி கட்ட பார்க்கிறது அரசாங்கம் . இல்லையென்றால் இந்தியாவின் பண மதிப்பு வீழ்ச்சி அடையும் அது பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

        ஆனால் இப்படி நாட்டி விற்று விற்று எத்துனை நாளைக்கு பண வீழ்ச்சியை தள்ளி போடா முடியும் ?

  2. please anyone clear my doubt. if USSR could’nt tackle the pressure of liberal economy during Gorbechev’s regime and future years, how could India can oppose LPG????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க