முகப்புஉலகம்ஈழம்ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனது “வாக்குமூலம்” பொய் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த மையப் புலனாய்வுத் துறையின்(சி.பி.ஐ.) ஓய்வு பெற்ற எஸ்.பி. தியாகராசன், “உயிர்வலி” என்ற ஆவணப் படத்திலும் பின்னர் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

பேரறிவாளன்
போலீசு மற்றும் நீதிமன்ற மோசடிகளால் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள பேரறிவாளன்.

“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.

கிரிமினல்களுக்கும் ஊரைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கும் வயதான காலத்தில் சொல்லி வைத்தாற்போல மனச்சான்று விழித்துக் கொள்வதும், அவர்கள் வள்ளல்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் புதுப்பிறவி எடுத்து, சமூக கௌரவத்தையும் மன ஆறுதலையும் தேடிக்கொள்வதும் புதிய விடயங்கள் அல்ல. கொடூரமாகச் சித்திரவதை செய்வதும், பொய்வழக்கிற்குத் தேவைப்படும் வாக்குமூலங்களை வரவழைப்பதும் போலீசார் வழக்கமாகச் செய்கின்ற வேலைதான் என்பதை தியாகராசனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனது நடவடிக்கை காரணமாக நீதிப்பிழை ஏற்பட்டு, ஒரு உயிர் அநியாயமாகப் போகப்போகிறது என்பதால் உண்மையை வெளியிடுவதாகவும் கூறியிருக்கிறார்.

தியாகராசன் வெளியிட்டிருக்கும் இந்த உண்மை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயனை இம்மியளவும் அசைக்கவில்லை. “கென்னடி கொலை வழக்கு பற்றிக்கூட புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதற்காக அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க முடியுமா?” என்று அவர் சீறுகிறார். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமனும் “நாங்கள் அவ்வாறுதான் செய்தோம்; தற்போது அதற்கென்ன?” என்கிற தோரணையில் திமிராகப் பேசியிருக்கிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் “ஞானஸ்நானம் பெற்று” மரணதண்டனை எதிர்ப்பாளர்களாக மாறியவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பொய் வழக்குப் போடுவதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து வாக்குமுலம் வாங்குவதும், பொய் சாட்சிகளைத் தயார் செவதும், அதன் அடிப்படையில் அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்புவதும் போலீசாரின் அன்றாட நடவடிக்கைகள் என்பது ஊரறிந்த உண்மை. போலீசாரிடம் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களை “கட்டாயப்படுத்திப் பெறப்பட்டவை” என்று கூறி நிராகரிக்கும் உரிமை குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்டு.

இந்த உரிமையையே ரத்து செய்த “தடா” சட்டத்தின் கீழ்தான் ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. அதனால்தான் தியாகராசன் எழுதிக் கொண்டதெல்லாம் பேரறிவாளனின் வாக்குமூலமாகச் சட்டரீதியாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னாளில் “தடா” சட்டமே அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இருப்பினும், செல்லத்தகாத அந்த சட்டத்தின் கீழ்தான் வழக்கு விசாரணை நடந்து, அதில் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, “ராஜீவ் கொலை என்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிய பின்னரும், பயங்கரவாதத் தடைச் சட்டமான “தடா”வின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், வழங்கப்பட்டிருக்கும் தண்டனைகள் சட்டரீதியில் செல்லத்தக்கதாகவே கருதப்படுகின்றன. தற்போதைய தியாகராசனின் “பரபரப்பு” பேட்டியைக் காட்டிலும் இவையெல்லாம் முக்கியத்துவம் வாந்தவை.

சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்
பேரறிவாளனின் வாக்குமூலத்தை உள்நோக்கத்தோடு வெட்டிச் சுருக்கியதை ஒப்புக் கொண்டுள்ள ஓய்வு பெற்ற சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்.

மேலும், பேட்டியளித்திருக்கும் தியாகராசன் தனது கூற்றைப் பிரமாண வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதாவது, தான் இழைத்த அநீதிக்குக் கழுவாயாக பேரறிவாளனைச் சட்டரீதியாகக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; அதேபோல, பொய் வாக்குமூலம் தயாரித்த தனது குற்றத்துக்குரிய தண்டனையை அனுபவிக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அவரது இந்தக் கூற்று, ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணை நாடகத்தை அம்பலப்படுத்துவது என்ற அளவில் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

தியாகராசன் போன்றோருக்கு காலம் கடந்தாவது உண்மையை வெளியிடும் தைரியத்தை வழங்கியிருப்பது அவரது குற்றவுணர்ச்சி மட்டுமல்ல; மூவர் தூக்கிற்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டமும், தமிழகத்தில் பரவலாக உருவாகியிருக்கும் பொதுக்கருத்தும்தான் உண்மையைப் பேசுவதற்கான புறத்தூண்டுதலை அவருக்குத் தந்திருக்கின்றன. அத்தகையதொரு புறச்சூழல் உருவாக்கப்படாமல், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசின் பாக். எதிர்ப்பு தேசியவெறி அரசியல் அரங்கில் கோலோச்சியதன் காரணமாகத்தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் உண்மைகள் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டது ஒருவேளை மரண தண்டனையாக இல்லாமலிருந்தால், தியாகராசனின் மனச்சான்று விழித்திருக்காது. இதனை அவரது கூற்றிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அது ஆயுள் தண்டனையாக இருந்தாலும் அநீதி அநீதிதான்.

நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள், அவ்வாறு தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுடன் இப்பிரச்சினை முடிந்து விடுவதில்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, பொய் வழக்குகள், பொய் சாட்சிகள், போலி மோதல் கொலைகள் – என்று எல்லா கிரிமினல் வேலைகளையும் அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் ஓட்டுப் பொறுக்கிகளையும் தண்டிப்பதை நோக்கி நமது போராட்டங்கள் முன்னேற வேண்டும்.

– கதிர்
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________

 1. எல்லாம் சரி… இந்த கல்யாண சமையல் சாதம் படம் பற்றி ஒரு விமர்சனம் எழுதுங்களேன்..

  • திரு வினோத் அவர்களே,

   எல்லாம் சரி… இழவு (இழப்பு)விழுந்து விடுமோ என பதற்றத்தில் இருக்கும் பொழுது,

   ”கல்யாண சமையல் சாதம்”பற்றி விமர்சனம் கேட்கிறீர்களே?? உங்கள் மனச்சாட்சி

   செத்துவிட்டதா என்ன???

   • புது நிலா அவர்களே..
    மனசாட்சி மட்டும் இருந்து ஒன்றும் வேலைக்காகாது…

    பதிவர் கதிர் சொல்வது முன்னாள் அதிகாரிகள் போகிற போக்கில் சொல்லும் வாக்கு மூலம்.
    இதை விட அதிக தகவல் இருக்கு இருந்து என்ன செய்ய?

    http://kannimaralibrary.co.in/?p=1199

    http://kannimaralibrary.co.in/elamebook/

    இந்த பதிவை பார்க்கவும்.

    பார்த்துவிட்டு மனசாட்சியை வைத்து கொண்டு என்ன செய்யலாம் என்று கூறவும்…

 2. ஆமா ஆமா! பேறரிவாளன், அப்சல் குரு இவங்கெல்லாம் குற்றவாளின்னு கோர்ட் சொன்னாலும் நிரபராதி. அதே ஜெயேந்திரர், மோடி இவிங்க நிரபராதின்னு கோர்ட் சொன்னாலும் குற்றவாளி. என்ன லாஜிக் அண்ணே இது!

  கோர்ட்-ல மாசக்கணக்குல விசாரிச்சு, ரெண்டு தரப்பு வாதத்தையும் கேட்டு, அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் சொல்ற தீர்ப்பு செல்லாதாம். நீங்க நக்கீரன் மாதிரி சென்சேஷனலா எழுதுற மஞ்சள் பத்திரிகை படிச்சுட்டு, பொது புத்தியில படிஞ்சுருக்குர ‘ஆமாம்பா. இவன் முழியே சரியில்ல. செஞ்சாலும் செஞ்சுருப்பன்னு’ ஈசியா சொல்ற விமர்சனத்த வெச்சு சொல்ற தீர்ப்பு கரக்டாம்.

  உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? காமெடி பாஸ் நீங்க 😀

  • ரகு….உங்காத்து சு.சாமியை ” லாடம்” கட்டினாலே
   உண்மையில் இந்த சதிக்குப் பின் நிற்பது யார் என்பது
   தெரிந்துவிடும்…..
   ஆனால்,சுப்ரீம் கோர்ட்டே சு.சாமியின் பூணூல்களுக்கு
   பின்னால் இருக்கும்போது…..நீதியாவது…விசாரனையாவது….
   இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதெல்லாம் பழைய பெருங்காய டப்பா…..
   இந்தியா போத்தி இருக்கும் சனநாயக ஜமுக்காளம் கிழிந்து, நார் நாராக நாற்றமடிப்பது
   “அம்பிக”ளுக்கு தெரிய வாய்ப்பில்லை

  • ரகு அவர்கள் தீர்ப்பு என்னனா…

   தூக்கில போடுவது சரி…

   ரகு அவர்களே….
   http://kannimaralibrary.co.in/elamebook/
   http://kannimaralibrary.co.in/?p=1199

   இந்த லிங்கில் இருக்கும் அனைத்தையும் சரிபார்த்துவிட்டு…
   பின்னர் உங்கள் தீர்ப்பை எழுதவும்…

   உங்களுடைய பிளாகில் தனிப்பதிவாக எழுதினால் ஆவணமாக இருக்கும்.

  • Raghu! Don’t you know the charges told by writer Anuratha Ramanan on sangaraachchari. The bloody sangarachchari is one who called a brahmin widow herself to his bed. Sankarachchari should have hung himself when Anuratha Ramanan alleged him. He is still living on the earth and you people are worshipping this bloody idiotic sankarachchari. Shame.

   • anyone can allege anything.her charges suit your beliefs but not someone else’s.

    i think an easy way to make u commit suicide is to get someone to allege something against you.

 3. வினவு அவர்களே,

  கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்யவும்.

  “சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச்

  ”சொன்னார்” என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும்,

  அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக

  வாங்கி வரச் ”சொன்னார்” என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித்

  தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற”

  செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால்

  தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.

 4. இந்த பாட்டரி கதை முழு பொய் என்பதே சரி. ஏனென்றால் எந்த பெட்டி கடையிலும் பாட்டரிக்கு இன்றைய தேதி வரை ரசீது தரப்படுவதில்லை.தமது ஜோடனைக்கு இசைவாக ஒரு பயந்தாங்கொள்ளி பெட்டிக்கடை காரரை மிரட்டி முன் தேதியிட்டு ஒரு ரசீது வாங்கினோம் என்று தியாகராசன் சொல்லியிருந்தால் மட்டுமே மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாக கருத இயலும்.மற்றபடி துறை ரீதியான விசாரணை என்கிற எந்த ‘தொல்லை’யுமற்ற ஒரு பிச்சைக் காரனுக்கு 50 காசு’தர்மம்’போடுகின்ற பாதுகாப்பான மனசாட்சிக்கு ஒப்பானது

  உங்களது கட்டுரையின் ஒரு பகுதி இப்படி இருந்திருக்க வேண்டும் :

  பேட்டியளித்திருக்கும் தியாகராசன் தனது கூற்றைப் பிரமாண வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதாவது, தான் இழைத்த அநீதிக்குக் கழுவாயாக பேரறிவாளனைச் சட்டரீதியாகக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால்,பொய் வாக்குமூலம் தயாரித்த தனது குற்றத்துக்குரிய தண்டனையை அனுபவிக்கிற அளவிற்கு அவர் ‘மனசாட்சி’ தயாராக இல்லை.

 5. வாக்குமூலத்தை வைத்து ‘மட்டும்’ பேரரிவாளனுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை. அதைத் தவிற ஆதாரங்களை கொண்டே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறதுனு சொன்னதும் ரகோத்தமன் தான்.

  சரி! இந்த ஒரு ஸ்டேட்மென்ட்டை வைத்து தலைப்பு ஏன் ‘ராஜீவ் கொலை வழக்கு “””கைதிகளை””” விடுதலை செய்’?

 6. அவர் கூறும் அந்த தண்டனைவழங்க வைத்த ஆதாரங்கள் எவை என அந்த மகா ரதோத்தமன் வெளியிட்டுத் தம்மை ஒரு உத்தமன் எனக் காண்பிக்கலாமே!

 7. ராஜீவ் கொலை விசாரணை வெளிப்படையாக, செல்லுபடி ஆக கூடிய சட்டத்தின் கீழ்நடைபெற்ற ஒருநேர்மையான விசாரணை அல்ல.பூந்தமல்லி இருட்டுகொட்டடியில் பூட்டிய கதவுகளுக்குப் பின் தடா எனும் கருப்பு சட்டத்தின் கீழ்நடைபெற்ற விசாரணை.மல்லிகை என்ற பெயரிலான வதை கூடத்தில் தியாகராஜன் போன்ற எண்ணற்ற நேர்மைக்கு பெயர் போன அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் தயார் செய்யப்பட்டது.இதை தவிர இக்கொலையின் பிற அம்சங்கள் குறித்த விசாரணை எதுவும் முறையாக நடைபெறவில்லை.தரகன் சு .சாமியை முறைப்படி லாடம் கட்டி விசாரிக்கவில்லை.மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விசாரித்து தீர்ப்பு சொல்லப்பட்ட விதத்தையும் ,சங்கராச்சாரி,மோடி,ஜெயலலிதா போன்ற உயர்சாதி அதிகாரம் மிக்கவர்களை விசாரித்து தீர்ப்பு சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனமானது.ராஜீவ் கொலையளிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து மலத்தை வெளிவர வைத்தனர்.சங்கராசாரியின் உண்டு செறித்து வெளியேறிய மலத்திற்க்கு வாழை இலை விரித்தனர்.சங்கராச்சாரி உச்சநீதிமன்ற பதிவாளரின் வாகனத்தில் சென்று விடுமுறைநாளில் மனு அளிப்பதை ஏற்று வீட்டிலேயே விசாரணை நடந்த வரலாறு உண்டு. நீதிபதியிடம் ரேட்டு பேசிய தொலைபேசி உரையாடல் கண்டுகொள்ளப்படவில்லை.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 100க்கும் மேற்ப்பட்ட வாய்தாக்கள் வழங்கப்பட்டன.நீதிபதி பாலகிருஸ்ணா தான் வேண்டும் என்றால் அதையும் பரிசீலிக்க உத்தரவிட்டநீதிமன்றம்.மோடியின் என் கவுண்டர் கொலைகளுக்கு துணைநின்ற ஐபிஎஸ் அதிகாரி எழுதிய கடிதமே அவரை கைது செய்து விசாரிக்க போதுமான ஆவணமாகும்.ஆனால்நீதி முடமாகி தொங்கிக்கொண்டு இருக்கிறது.தேசத்தின் மனசாட்சியை திருப்தி படுத்த அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார்.இங்கே இரட்டை குவளை முறை உள்ளது போல இரட்டைநீதி பரிபாலணம் தொடர்கிறது.இது வெட்க கேடானது.

 8. 9 வால்ட் மின்கலம் இரண்டை வாங்கினார் என்பதை வைத்து ஒருவருக்கு சாவுத்தண்டனை வழங்க முடியும் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகிறதா.ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீதானகுற்றச்சாட்டு 9 வால்ட் மின்கலம் இரண்டை வாங்கி ராசீவ் கொலையாளிகளுக்கு கொடுத்தார் என்பதுதான்.இதுவும் பொய்யான குற்றச்சாட்டு.

  ராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவர் மீதும் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.இந்த வழக்கு கொடும் ஆள்தூக்கி சட்டமான ”தடா”வின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.இந்திய தண்டனை சட்டத்தின்படி காவல் துறையினரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லாது. ஒரு நீதிபதியிடம் அளிக்கும் வாக்குமூலம் மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.ஆனால் தடா சட்டப்படி காவல் துறையினரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஆதாரமாக ஏற்கவேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து மிதித்து துன்புறுத்தி பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் தவிர இவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.இவ்வழக்கின் மேல்முறையீட்டில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம் இவ்வழக்கிற்கு ”தடா”சட்டம் பொருந்தாது என கூறியுள்ளது. இருப்பினும் தடாவின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நீதியா,அநீதியா.

  இந்த வழக்கை புலனாய்வு செய்த தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் ”ராசீவை கொன்ற இடுப்புவார் வெடிகுண்டை [Belt bomb] செய்தது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை”என்கிறார். அப்படி யாரென்றே தெரியாத நபரிடம் பேரறிவாளன் மின்கலனை கொடுத்தார் என்பதை மட்டும் ”கண்டு பிடிக்கிறார்கள்”. யாருடன் சேர்ந்து கொலைசதியில் ஈடுபட்டார் என்றே சொல்ல முடியவில்லை.ஆனால் கொலைசதிக்காக சாவுத்தண்டனை வழங்குவேன் என்றால் அது நீதியா,அநீதியா.

  செய்யாத கொலைக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த இந்த அப்பாவி தமிழர்களை,வாழ்வின் வசந்த காலமான இளமை பருவத்தை சிறை கொட்டடியின் இருண்ட மூலையில் தொலைத்து விட்டு நிற்கும் இந்த பரிதாபத்திற்கு உரிய அப்பாவி தமிழர்களை, மீண்டும் ஒரு தண்டனையாக தூக்கில் ஏற்றுவது நீதியா,அநீதியா.

  • அப்பாவி அப்சல் குருவை துக்கில் போட்டவர்களுக்கு, பாண்டிச்சேரி ஜட்ஜுக்கு லஞ்ஜம் கொடுத்தது பதிவான பிறகும் ஜெயேந்திரரை காப்பாற்றியவர்களுக்கு பேறரிவாளன் எம்மாத்திரம்…
   ப்ரியன்கா நலினியை பார்த்தது எங்கள் குடும்பத்துக்கும் இந்த வழக்குக்கும் சம்மந்தம் இல்லை, சட்டத்தை எங்களால் தடுக்க இயலாது என்று காட்டுவதர்காகவே…
   இந்திய படை இலங்கை செல்வதை எதிர்த்தவர், ராஜிவ் காந்தி பக்குவடையும் காலம்வரை மன்மோகன்சிங் போல தான் சில காலம் பிரதமராக இருக்கிறேன் என்று கூரியவர் பிரனாப் முகர்ஜி. பின்னர் பல காலங்கள் வன வாசம் அனுபவித்து, உலக பொருளாதாரம் சரிந்து அம்போ என்று விழுந்த காலத்தில் தாங்கி பிடித்த முகர்ஜியையும், மனிசங்கர் ஐயரையும், அமெரிக்காவுக்காக காவு கொடுத்த சோனியா, இப்போழுது முகர்ஜியை ஜனாதிபதியாக அமர்த்தி இருக்கிறார். முகர்ஜி ஒரு காங்கிரஸ் விசுவாசி, காங்கிரஸுக்கு எது நல்லதோ அதை செய்வார்.
   வோட்டு போட்டபின் கூடங்குளம் மக்களுக்கு வேட்டு வைத்தார் போல் அறிவாளனை போட்டு தள்ளுவார்கள். வைக்கோ பிரபாக்கரனை ஏமாற்றிய மாதிரி தீவிர சிந்தனையுடன் கனவு உலகில் அப்துல் கலாமை போல போஸ் கொடுத்து அறிவாளனையும் ஏமாற்றுவார். அடுத்த பிரபாக்கரனையும், அறிவாளனையும் வைக்கோ அடையாளம் காண்டு கொண்டு தம் பயனத்தை தொடங்குவார்…

 9. The problem here is the family background of Perarivalan,he comes from a DK background.

  In 1989-1991 until Rajiv’s death,DK tried earnestly to turn the Eazham struggle against India since they themselves dont have the balls to pick up a gun ever.

  Veeramani etc tried to use Prabhakaran to achieve their own agenda which resulted in Rajiv’s death.

  I dont think Perarivalan is innocent.

  • LTTE is a Saiva Vellalar gang, they never like DK. They only like MGR, who helped break DMK and got Bharat Rathna for that from Indira Gandhi. LTTE was funded by India (both Indira and Rajiv). Vaiko was removed from DMK for being close to Prabhakaran. DMK’s TELO movement was eliminated by LTTE. Indian govt also tried to murder Prabhakaran many times. DMK is political movement that has been accommodated into Indian politics by V.P.Singh using his social justice policies made famous by Mandal commission. It is a ideological threat to Brahmin-led ruling class in India. Turning it into a terrorist organization depends on the success or failure of the social justice movement through electoral policies. Ramadas’s politics will indicate to you how the movements can turn into a terrorist organization if electoral success is denied…

   • MGR did prove to be much better at handling prabhakaran than Mu.Ka.

    MGR proved that Mu.Ka is such a disruptive force when he is not in power and Mu.Ka proved that by doing what he did in 1989-1991.

    mu ka is just a manguni mudhalaimachar who allows local gangsters or paruppus run their own show and manages an effective party with a kolkai that nobody respects.

    Mu.Ka made himself a representative of the mandal commision but OBC and land owning castes in TN are strongly with the ADMK more so than the DMK.

    MGR never did social engineering,what he gave,he gave everyone and he actually gave things to the people who needed it the most,Scheduled castes & women.

    so,he ll always be what Mu.Ka always wanted to be and never be.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க