privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?

பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?

-

ந்த நாட்டின் மொத்த ஆண்டு வருமானம் $2.68 லட்சம் கோடி (ரூ 53 லட்சம் கோடி). அதாவது நாட்டு மக்கள் தொகையான 5 கோடி பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக $50,000 (ரூ 12 லட்சம்) வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, அந்த நாடு உலகிலேயே 7-வது பணக்கார நாடு.

அந்த ஊரில் டிசம்பர் மாதம் குளிர் -7 டிகிரி வரை சென்று நடுங்க வைத்து விடும். வீடு ஒன்று இருந்தால், அந்த நடுக்கும் குளிரில் வீட்டை சூடுபடுத்தும் கணப்புகள் இருந்தே தீர வேண்டும்.

அந்நாட்டு மக்களுக்கு அது பெரிய கவலையாக இருக்க வேண்டியதில்லைதான். வயிற்றுக்கு உணவிடும் கவலையை விட குளிர் மோசமில்லை. மிகவும் முன்னேறிய நாடு; முதலாளித்துவத்தின் பிறப்பிடம்; 400 ஆண்டுகளாக முதலாளித்துவத்தை பயின்று, வளர்த்து; உலகெங்கும் பரப்பிய நாடு. தன் சொந்த நாட்டில் ஒரு 5 கோடி மக்களுக்கு சோறு போடுவதும், தங்க இடம் கொடுப்பதுமா பிரச்சனை!

16 வயதானதும் சுயசார்புடன், “மேல்படிப்பு படிக்க வேண்டுமா, வேலைக்குப் போக வேண்டுமா” என்று தாமே முடிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் சமூகம். வயிற்றுக்குச் சோறும், குளிர் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வீடும், நண்பர்களுடன் வெளியில் போகும் போது செலவை பகிர்ந்து கொள்ளவும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.

ஜேக் மன்ரோ
ஜேக் மன்ரோ

இத்தகைய சிறப்புடைய இங்கிலாந்து நாட்டில் ஒரு தீயணைப்பு வீரருக்கு மகளாக பிறந்தார் மெலிசா மன்ரோ. சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மெலிசா (தேனீ) என்ற பெயருக்கும் தனது வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போய் விட அந்தப் பெயரை துறந்து ஜேக் மன்ரோ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மெலிசா உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று படிக்கப் போனாலும் படிப்பை முடிக்க முடியாமல் 16 வயதிலேயே வேலைக்குப் போகிறார். உணவு விடுதிகளிலும், கடைகளிலும் பணியாளராக வேலை செய்த பிறகு அவசர உதவித் துறையின் (தீயணைப்பு, விபத்து, மருத்துவம்) ஒருங்கிணைப்பாளராக அவருக்கு வேலை கிடைக்கிறது. ஆண்டுக்கு $44,000 சம்பளத்தில் நடுத்தர வாழ்க்கையின் பாதுகாப்பை அடைந்திருந்தார்.

மேற்கத்திய நடுத்தர வாழ்க்கையின் வசதிகள் அனைத்தும் அவரிடம் இருந்தன. இரண்டு அறை கொண்ட வாடகை வீடு, ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி என்று நவீன வாழ்க்கையை வரையறுக்கும் பொருட்கள் அனைத்தும் குவிந்திருந்தன.

நவம்பர் 2011-ல் குழந்தை பேறுக்கான விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய அவர், சிறு குழந்தையை பராமரிக்க வேண்டியிருப்பதால் இரவு நேர பணியில் இருந்து விலக்கு கோரினார். அது நிராகரிக்கப்பட்டதால், வேறு வழியின்றி அந்த வேலையை விட்டு விலகி வேறு பகல் நேர வேலை தேடத் தொடங்கினார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை 2012-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அவர் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.

========

இன்றைக்கு 14 வேலை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தேன். வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு, தொழிற்சாலை வேலைக்கு என்று எதுவாக இருந்தாலும் ஒரு ஜூராசிக் கால புராதன மொபைல் போனில் விண்ணப்பங்களை டைப் செய்து அனுப்பி வைத்தேன். குறைந்தபட்ச ஊதியம்தான் கிடைக்கிறதா, எந்த வகை வேலை என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் அனுப்பி வைத்தேன். ஏனென்றால், இப்போதைய நிலைமையில் இப்படியே தொடர்வது வேலைக்கு ஆகப் போவதில்லை.

ஜேக் மன்ரோ மகனுடன்
ஜேக் மன்ரோ மகனுடன்

புரியாத ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த மாத வீட்டு வசதி உதவித் தொகை 100 பவுண்டுகள் குறைக்கப்பட்டிருந்தது. இது குறித்து எந்த கடிதமும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், மார்ச்சிலிருந்து மே வரை மூன்று மாதங்களுக்கு நான் தற்காலிகமாக கிடைத்த வேலைக்குப் போனதை ஒட்டி நிவாரண உதவி வழங்கும் பல அலுவலகங்களில் ஏதோ ஒன்றில் நடந்த குளறுபடியாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் 438 பவுண்டு வீட்டு உதவித் தொகையிலிருந்து 670 பவுண்ட் வாடகை கொடுக்க முடியாதுதான். அதனால், ஒரு வாரம் வாடகை பாக்கி. வியாழக்கிழமை வந்தால் அடுத்த வார வாடகை 167.31 பவுண்டு கொடுக்க வேண்டிய கெடுவும் வந்து விடும். ஆனால் பணம் வர வேண்டியது ஒன்றும் இல்லை.

வேலை இல்லாதோர் வருமான உதவித் தொகை சிறிது காலத்துக்கு வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது, குழந்தை வளர்ப்புக்கான உதவித் தொகையும் உதவுகிறது.

இப்போது பிரச்சினை வாடகை பாக்கி மட்டுமில்லை. நேற்று இரவு ஃபிரிட்ஜை திறந்தால் முந்தைய நாள் செய்த கொஞ்சம் தக்காளி பாஸ்தாவும், ஒரு வெங்காயமும், ஒரு துண்டு இஞ்சியும் மட்டும்தான் மீந்திருந்தன. மகனுக்கு பாஸ்தாவைக் கொடுத்து விட்டு, பசி வதையை மறப்பதற்கு இஞ்சி டீ குடித்து விட்டு தூங்கப் போனேன். .

இன்று காலை, குட்டிப் பையனுக்கு சாப்பிட வீட்டாபிக்சின் கடைசித் துண்டை தண்ணீரில் கரைத்து கொடுத்து குடிக்க ஒரு டம்ளரில் வைத்தேன். ‘மம்மிக்கு சாப்பாடு எங்கே?” என்று தன பெரிய நீல நிறக் கண்களை உயர்த்தி இரண்டு வயது குழந்தையின் கரிசனத்தோடு அவன் கேட்கிறான். “பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது. ஆனால், இது போன்ற பொய்களை சொல்லத்தான் நாம் பழகியிருக்கிறோம்.

உணவு மேசையில் உட்கார்ந்து, பேப்பரும் பென்சிலும் வைத்து பட்டியல் போட ஆரம்பிக்கிறேன். இப்போது இருப்பவை எல்லாமே, ஆண்டுக்கு 27,000 பவுண்டுகள் ($42,000) சம்பாதித்த போது, செலவழிப்பதற்கு கையில் காசு இருந்ததாக நினைவில் எஞ்சியிருக்கும் காலத்தில் வாங்கியவை அல்லது அதற்குப் பிறகு கருணை உள்ளமும் தாராள மனமும் படைத்த நண்பர்களால் தரப்பட்டவை. அவற்றில் பெரும்பகுதி ஏற்கனவே மறைந்து விட்டிருக்கின்றன. தீயணைப்புத் துறை வேலையை விட்டு நின்ற பிறகு முதலில் கையை விட்டுப் போனது 21-வது பிறந்த நாள் பரிசான ஒமேகா கைக்கடிகாரம். ‘கையில் ஒமேகா கடிகாரம் கட்டிக் கொண்டு ஏழ்மை பற்றி பேச முடியாது’ என்று அப்போது நினைத்தது இப்போது கைவசம் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் பொருந்துகிறது.

ஜேக் மன்ரோ மகனுடன்
கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன.

ஒருவரை அவரது பணியைச் சொல்லி (இது சூசன், அவர் ஒரு வழக்கறிஞர், இவர் மேக்ஸ், ஒரு கட்டிட வடிவமைப்பாளர்) அல்லது அவரது கார் எண் அல்லது கார் பிராண்ட் அல்லது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியின் திரை அளவு அல்லது அது 3Dயா அல்லது எச்டியா அல்லது ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி உள்ளதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடும் இந்த உலகில் நான் நண்பர்களின் அன்பினாலும், தாராள மனத்தினாலும் மதிப்பிடப்படுகிறேன். யாரோ கொடுத்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு யாரோ கொடுத்த பியானோவை பார்த்துக் கொண்டே, யாரோ கொடுத்த ரேடியோவை கேட்டுக் கொண்டு, யாரோ கொடுத்த அலமாரியில் சார்ந்து கொண்டிருக்கிறேன்.

எந்த நேரத்திலும், காரணம் எதுவும் சொல்லாமல் கூட வீட்டை காலி செய்யச் சொல்லலாம் என்பதுதான் ஒப்பந்தம் என்று வாடகைக்கு வீடு கொடுத்த ஏஜென்ட் கவனமாக நினைவூட்டியிருக்கிறார். ஐ-போனை வாங்கிய விலையில் நான்கில் ஒரு பங்கு தொகைக்கு விற்று விட்டு, மேசை டிராயரிலிருந்து ஒதுக்கிப் போட்டிருந்த இந்த ஜூராசிக் காலத்து நோக்கியாவில் சிம் அட்டையை போட்டுக் கொண்டேன்.

நாளை முதல் எனது குட்டிப் பையன் அடகுக் கடை உலகத்தைப் பார்க்கப் போகிறான். அவனது அம்மா அற்பமான விலைக்கு தொலைக்காட்சிப் பெட்டியையும், கிதாரையும்   தூக்கிக் கொடுப்பதை பார்க்கப் போகிறான். வீட்டை இழந்து தெருவில் நிற்கும் நிலையை தள்ளிப் போடுவதற்கு, ஓரிரு வாரம் தாக்குப் பிடிப்பதற்கு அதுதான் வழி. கடன் பாக்கிகளை ஒன்று திரட்டுவது, கடன் வசூலிக்கும் ஓலைகளாக சிவப்பு முனை கடிதங்கள், கடன் வசூலிக்க நேரில் வரும் ஈட்டிக்காரர்கள் போன்றவை தினசரி நிகழ்வுகளாகியிருக்கின்றன.

ஜேக் மன்ரோ மகனுடன்
“பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது.

எனக்குச் சொந்தமானது என்று சொல்லக் கூடியவை ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மைக்ரோவேவ் உண்மையிலேயே தேவைதானா? தொலைக்காட்சி பெட்டி உண்மையிலேயே தேவைதானா? ஃபிரிட்ஜை ஆன் செய்து வைப்பது உண்மையிலேயே தேவைதானா? குடியிருக்க ஒரு வீடு தேவை என்பதற்கு மேலாக இவை எதுவுமே தேவையில்லை. முக்கியமாக என்னுடைய 2 வயது குட்டிப் பையனுக்கு தலைக்கு மேல் ஒரு கூரை வேண்டும் என்பதற்கு முன்பு இவை எதுவுமே தேவையில்லை.

என்னால் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்க முடிகிறது என்று பலர் கேட்கிறார்கள். என்னுடைய மன உறுதியை பாராட்டுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல் எனது மகனின் சிறு படுக்கையில் உறைந்து போய் உட்கார்ந்திருக்கும் போது எனக்கு எந்த மன உறுதியும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

முதலில் வீட்டை சூடுபடுத்தலை நிறுத்திக் கொண்டேன். அது டிசம்பரில். சூடுபடுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அவற்றை ஓட்டும் சபலம் வந்து விடாமல் தவிர்க்க அவற்றுக்கு முன்பு நாற்காலிகளையும், அலமாரிகளையும் போட்டு மறைத்திருக்கிறேன். எல்லாக் கருவிகளையும் இணைத்திருக்கும் புள்ளியிலேயே அணைத்து வைக்கப் பழகுகிறேன். மின்சார அடுப்பின் எல்சிடி மின்னுவதற்குக் கூட சிறிதளவு மின்சாரத்தையும் வீணாக்கி விடக் கூடாது.

அதன் பிறகு முடி வெட்டுவதை நிறுத்தினேன். மாதாந்திர அடிப்படைத் தேவையாக இருந்த அது இப்போது ஒரு ஆடம்பர நடவடிக்கையாக மாறி விட்டிருக்கிறது. ஒரு ரப்பர் பேண்டில் முடியை முடிந்து கொண்டு, “முடி வெட்டக் காசில்லை” என்று சொல்லாமல் “முடியை நீளமாக வளர்க்கப் போகிறேன்” என்று நண்பர்களிடம் சொல்கிறேன். தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் சூப்பர்மார்க்கெட்டின் மலிவான பிராண்ட் வெள்ளையும், ஆரஞ்சும் கலந்த நிறத்திலானவையாக மாற்றிக் கொள்கிறேன். எதையும் சுத்தம் செய்வதற்கு 24 பென்ஸ் விலையிலான பிளீச்சை பழைய பாட்டில்களில் ஊற்றி வைத்து பயன்படுத்துகிறேன்.

கன்டெய்னர் வீடுகள்
இங்கிலாந்தில் தொண்டு நிறுவனங்கள் ஏழைகள் வசிக்க ஏற்பாடு செய்யும் கன்டெய்னர் வீடுகள்.

பலவற்றை தியாகம் செய்யக் கற்றுக் கொண்டேன். நண்பர்கள் யாராவது வெளியில் அழைத்தால், எனது பங்கு செலவை கொடுக்க முடியாத நிலையில் சுயகௌரவத்தை எல்லாம் ஒதுக்கி வைக்கக் கற்றுக் கொண்டேன். எனக்கு ஒரு வேலை கிடைத்ததும் எல்லோருக்கும் ஒரு சுற்று டிரீட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிரந்தர ஜோக் நண்பர்கள் வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற நண்பர்கள் இருப்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு லைட் பல்புகளை கழற்றி வைத்தேன். மாட்டி இருந்தால்தானே அவற்றைப் போட முடியும், மின்சாரம் செலவாகும்! வராந்தா, தூங்கும் அறை, குட்டிப் பையனின் அறை, அங்கெல்லாம் வெளிச்சம் தேவையில்லை என்று முடிவு செய்தேன். இவ்வளவு சிக்கனம் பிடிக்கும் திட்டத்துக்கு மத்தியில் குரூரமான நகைச்சுவையாக மின்சார நிறுவன ஆள் அழைப்பு மணியை அழுத்தி (மின்சாரத்தை செலவழித்து), 390 பவுண்டுகள் கட்டண பாக்கி இருப்பதால், கீ மீட்டரை (பிரீ பெய்ட் மின்சார சேவை) பொருத்துவதாக சொல்கிறார். இனிமேல் மின்சாரக் கட்டணம் அதிகமாகப்  போகிறது. சுடு தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டேன். முன்பு இருந்த வீட்டில் குளிர்ந்த நீர் குளியல்தான், அதே நடைமுறைக்குத் திரும்பிப் போனேன்.

சொற்ப அளவு டிவிடி தொகுப்பை அதை விட சொற்ப தொகைக்கு விற்றேன். அடுத்து நெட்புக், கேமரா விலை போகின்றன. சருமத்தை அரிக்கும் மலிவான சோப்பில் துணிகளை துவைக்க ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குறைத்து குறைத்து கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன. மற்ற எல்லாமே ஆடம்பரங்கள் போல தோன்றுகின்றன. வாடகை பாக்கிக்கு முன்பு ஆடம்பரங்கள் எல்லாம் போக வேண்டியதுதான்.

ஏழ்மை என்பது வீட்டுக்குள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பது மட்டுமில்லை, சாப்பிட போதுமான உணவு இல்லாதது மட்டுமில்லை, ஃபிரிட்ஜை அணைத்து வைப்பதோ அல்லது சுடுநீர் இல்லாமல் இருப்பதோ மட்டும் இல்லை. அது ஒரு சுற்றுலா பயணம் இல்லை, அது பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை, ஆண்டுக்கு 65,000 பவுண்டுகள் சம்பளமும் கூடுதலாக படிகளும் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரியக் கூடியது இல்லை அது. “நாம் எல்லோரும் இதில் ஒரு சேர சிக்கியிருக்கிறோம்” என்று சொல்லும் நம் நாட்டு பிரதமர் டேவிட் காமரூனுக்கு அது நிச்சயமாக புரியப் போவதில்லை.

எனது 2 வயது மகன் ஒரு வீட்டாபிக்சை சாப்பிட்டு முடித்த பிறகு, “இன்னும் வேணும் மம்மி, பிரெட்டும் ஜாமும் தா மம்மி” என்று கேட்கும் போது நான் வயிற்றில் உணரும் கலக்கம்தான் ஏழ்மை. அடகுக் கடைக்கு அடுத்ததாக தொலைக்காட்சியை  எடுத்துச் செல்வதா அல்லது கித்தாரை  எடுத்துச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில் பிரெட்-ஜாம் இல்லை என்று அவனிடம் சொல்ல முடியாமல் தவிப்பதுதான் ஏழ்மை.

செல்வி ஜேக் மன்ரோ, சௌத்என்ட் ஆன் சீ.

=====================

2008-09ல் ஏற்பட்ட முதலாளித்துவ நிதிச் சந்தை நெருக்கடியை சமாளிக்க முதலாளிகளுக்கு $850 பில்லியன் நிதி உதவி கொடுத்து கை தூக்கி விட்டது அப்போது இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்த லேபர் கட்சி.

உணவு வங்கிகள் (கஞ்சித் தொட்டிகள்)
உணவு வங்கிகள் (கஞ்சித் தொட்டிகள்)

2010-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டேவிட் காமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி கூட்டணி அரசாங்கம், மக்களுக்கான உதவித் தொகைகளை வெட்டும் பணியை  ஆரம்பித்து வைத்தது. இதுவரை $100 பில்லியன் மதிப்பிலான உதவித் திட்டங்களை வெட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்களை நிர்க்கதியாய் விட்ட பிறகும் தாகம் அடங்கமல் நிதி நிறுவனங்களுக்கு இரை போட இன்னும் கூடுதல் வெட்டுகளை திட்டமிட்டிருக்கிறார் டேவிட் காமரூன்.

2013-ன் கடைசி 8 மாதங்களில் இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் உணவுக்காக தரும நிறுவனங்களைச் சார்ந்திருந்தார்கள் என்று டிரசஸ் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இது 2012-ஐ விட மூன்று மடங்கு அதிகம். அந்தப் பட்டியலில் தானும் குழந்தையும் சேர்ந்து விடுவதை தவிர்க்கும் போராட்டம்தான் மேலே சொன்ன ஜேக் மன்ரோவின் கடந்த 2 ஆண்டுகள் வாழ்க்கை.

வேலையின்மைக்கும்,  ஏழ்மைக்கும் எதிரான தனது போராட்டத்தைப் பற்றி அவரது வலைப்பதிவில் எழுதிய பிறகு ஜேக் மன்ரோவின் வறுமையை விளம்பரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடத் தொடங்கியது எதிர்க்கட்சியான லேபர் கட்சி. ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் அவரை தான்சானியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தான் செய்யும் பணியை பார்வையிட வைத்தது. ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை விட தனது நிலைமை பரவாயில்லை என்று ஜேக் சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

கிருஸ்துமசில் மீந்து போன உணவுகளை பயன்படுத்தி சமைப்பது எப்படி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு அவரை சேன்ஸ்பரி என்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது. எதையும் வணிகமாக்குவது, வறுமையையும் வேடிக்கையாக்கினால்தான் சோறு என்பதுதான் முதலாளித்துவத்தின் அறம். இத்தகைய சந்தை ‘செயல்திறனால்’, தனது பரிதாப நிலையிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறார் ஜேக். தனது குழந்தைக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடும் அளவுக்கு வசதி அடைந்திருக்கிறார் அவர்.

ஆனால், மூன்று வயதாகும் ஜேக்கின் மகன் இப்போது உணவை பதுக்க ஆரம்பித்திருக்கிறான். சென்ற வாரம் மதிய உணவுக்கு அவன் அம்மா செய்து கொடுத்த மீன் கேக்கை பாதி சாப்பிட்டு விட்டு, மீதியை இரவு உணவுக்கு வைத்திருக்கச் சொல்லியிருக்கிறான். “இப்போதே முழுசையும் சாப்பிடலாம்” என்று அம்மா சொன்னாலும், அவன் ஏற்றுக்  கொள்ளவில்லை. அம்மாவுக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இருக்கிறது என்று அவனை நம்ப வைக்க, அவனோடு சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கியிருக்கிறார் ஜேக்.

தமிழாக்கம்: அப்துல்

மேலும் படிக்க

  1. எனக்கு சில விஷயஙள் புரியவில்லை:
    1. இதற்கு காரணம் என்ன? தாராண்மை கொள்கைகளா?( உங்கள் பாஷையில் முதலாளித்துவம் )
    2. இதற்கு நீங்க சொல்ற தீர்வு என்ன? மொக்கையா “பழைய பதிவுகளை போய் படீன்னு” சொல்லாம நறுக்குன்னு நாலு வரீல பதில் சொல்லுங்க.
    3. மக்கள் வறுமையே இல்லாம சந்தோஷமா இருக்கர நாலு கம்யூனிஸ்ட் நாட்டோட பெயர் சொல்லுங்க? (Data proof preferred)
    4. In what manner private charity is inferior to charity (subsidy) by Govt?

    • நாறாயணன் அவர்களே,

      உங்களின் கேள்விகளுக்கு கீழ்க்கண்ட பதில் போதுமென்று கருதுகிறேன்.

      1.முதலாளிகளுக்கு மட்டும் தாராளம்.

      2.மற்றவர்களுக்கு வேலை இல்லை அல்லது வேலை இழப்பு,அதனால் வருவாய் இழப்பு.

      3.சாதாரண மக்களுக்கு வறுமை, முதலாளிகளுக்கோ கொள்ளை இலாபம்.எந்த முதலாளித்துவ

      நாட்டில் வறுமையே இல்லாமல் அனைவரும் செல்வத்தில் திளைக்கிறார்கள்.

      4.தனியார் தர்மம் என்பது,அடித்த கொள்ளை இலாபத்தில் ஒரு சிறு பங்கினை

      தானமாகத் தருவது.அரசாங்கத்தின் தானம் (மானியம்) என்பது மக்களுக்கு செய்ய வேண்டிய

      கடமை ,மக்களின் உரிமை எனவே தனியாரின் தானத்தைவிட உயர்ந்தது.

      ”கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” இதுவே அனைத்துக்கும் ஆதாரம்.

      • கேட்கப்பட்ட கேள்விகளிற்குப் பதில் எங்கே?

        மக்கள் வறுமையே இல்லாம சந்தோஷமா இருக்கர நாலு கம்யூனிஸ்ட் நாட்டோட பெயர் சொல்லுங்க?

        • உமது அறிவை மெச்சுகிறோம்.

          அந்தக் ’கடினமான’ கேள்விக்கான விடையைக் ‘கண்டுபிடிக்க’ இப்போது க்வாண்டம் தியரியை அப்ளை செய்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மொத்தமுள்ள ஐம்பது ஸ்டெப்புகளில் இருபத்தேழாவதில் நின்று கொண்டிருக்கிறேன். ‘விடையை’ கண்டுபிடிக்கும் அந்த இடைவெளியில்….

          இங்கிலாந்திலும், பிற முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள சாமானிய மக்கள் பிச்சைக்கார பிழைப்பையே பிழைக்கிறார்கள் என்பதையும், கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்கு அந்நாடுகள் ஓட்டாண்டிகளாகிவிட்டார்கள் என்பதையும், முதலாளித்துவம் தனது சொந்த மக்களுக்கே சோறு போட வக்கின்றி மண்ணைக் கவ்வி விட்டதையும் ஒப்புக் கொள்கிறீர்களா சயண்டிஸ்ட் அவர்களே? இல்லை நீங்களும் ஏதாவது சூப்பர் கம்ப்யூட்டரின் முழு கம்ப்யூட்டேஷன் திறனையும் பயன்படுத்தி கணக்குப் போட்டு தான் இந்த ’அரிய’ உண்மையை கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறதா?

          • கேட்ட கேள்விக்கு இன்னமும் பதிலில்லை.

            முதலாளித்துவம் மட்டும்தான் பொருத்தமான தீர்வென்று நான் கூறவில்லையே? முதலாளிகளுக்கு அதிக அளவில் சலுகைகாட்டும் இங்கிலாந்து போன்ற அரசாங்கங்களின் முடிவுகள் தவறானவை. மறுபுறத்தில் அரசாங்கத்தின் நிவாரண/உதவித் தொகைகளை மட்டுமே பெற்றுக்கொண்டு எந்தத் தொழில்களுக்கும் முயற்சிக்காது வாழ்ந்தவர்கள் கூட அரசாங்க நிவாரணங்கள் குறைக்கப்பட்டதற்கு ஒருவகையில் காரணமாயிருக்கிறார்கள்.

            அதேநேரம் “இங்கிலாந்திலும், பிற முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள சாமானிய மக்கள் பிச்சைக்கார பிழைப்பையே பிழைக்கிறார்கள்” போன்ற உங்கள் கருத்துக்கள் சிறிய அளவிலேயே உண்மைத்தன்மை கொண்டவை. இங்கே “சாமானிய மக்கள்” எனும் பதம் சனத்தொகையில் எத்தனை சதவீதத்தினைக் குறிக்கின்றது? அல்லது “பிச்சைக்கார பிழைப்பு” என்பது எதனைக் குறிக்கின்றது?

            கஞ்சித்தொட்டிகளின் தேவை அல்லது பயன்பாடு கம்யூனிஸ்ட் நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றது என்பதை இலகுவாக மறந்து அல்லது மறைத்துவிடும் உங்கள் வாதம் உலகம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் எடுபடும்.

            • உங்கள் கேள்வி மிகவும் சிக்கலாக இருப்பதால் பதிலை ‘வலைவீசித்’ தேடி வருகிறேன். அஞ்சேல், 48வது ஸ்டெப்பில் இருக்கிறேன் Just 2 more to go

              In the meanwhile,

              // முதலாளிகளுக்கு அதிக அளவில் சலுகைகாட்டும் இங்கிலாந்து போன்ற அரசாங்கங்களின் முடிவுகள் தவறானவை. //

              இந்த வாசனையை வேறு எங்கோ சந்தித்திருக்கிறேன் என்று எனது நாசி அவசரமாக அலாரம் அடிக்கிறது 😉

              //அரசாங்கத்தின் நிவாரண/உதவித் தொகைகளை மட்டுமே பெற்றுக்கொண்டு எந்தத் தொழில்களுக்கும் முயற்சிக்காது வாழ்ந்தவர்கள் கூட அரசாங்க நிவாரணங்கள் குறைக்கப்பட்டதற்கு ஒருவகையில் காரணமாயிருக்கிறார்கள்.// –> ஐயன்மீர், முதலாளித்துவத்தில் தான் தனிநபர் முன்முயற்சிகள் அதிகம் என்றும், அதனால் உந்தப்படும் போட்டி தான் அந்த அமைப்பு முறையின் சிறப்பு என்றும் சொல்வார்களே, நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

              போகட்டும். நீங்கள் தான் முதலாளித்துவத்தையும் ஆதரிக்காதவராயிற்றே.

              இருந்தாலும், எனது கடைசி இரண்டு ஸ்டெப்புகளை முடித்து உங்களுக்கான அந்த கடினமான பதிலை வார்த்தெடுக்க நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் முதலாளித்துவத்தையும் ஆதரிக்கவில்லை கம்யூனிசத்தையும் ஆதரிக்கவில்லை என்றால், எந்த வகையான அரசமைப்பு சரி என்பது உங்கள் கருத்து?

              ஏனெனில், பத்தாம்பு படித்தவர்களுக்கும் ரெண்டாம்பு படித்தவர்களுக்கும் உங்களைப் போல் அறிஞர்களுக்கும் புரியும் விதமாக எளிமையாகவோ ’லிபர்ட்டேரிய’ நேர்த்தியுடனோ விளக்கிச் சொல்ல எனக்கு அது உதவும். பரியென்று நினைத்து நரியின் முதுகில் ஏறலாகாது அல்லவா?

              மேலும், இப்போதெல்லாம் முதலாளித்துவத்தையும் நாங்கள் எதிர்க்கிறோமாக்கும் என்று சொல்ல்லிக் கொண்டே அதன் கிழிந்த கோவணத்துக்கு ஒட்டுப் போடுவது ஒரு ஃபாஷனாகி வருகிறது. பத்தாயிரம் வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதி விட்டு அதன் ஓரத்தில் ‘முதலாளித்துவத்திலும் சில சிக்கல்கள் உள்ளது’ என்கிற நான்கு வார்த்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள் மீதமுள்ள 9996 வார்த்தைகளில் கம்யூனிசத்தை அவதூறு செய்கிறார்கள். கேட்டால் அது தான் நடுநிலையான விமர்சனமாம்.

              நீங்கள் அப்படியெல்லாம் செய்யாத யோக்கியர் என்று எனக்குத் தெரியும். எனவே,

              1) முதலாளித்துவத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால் ஏன் என்று எனக்குப் புரியும் படி சொல்லுங்கள்.
              2) முதலாளித்துவமும் வேண்டாம் கம்யூனிசமும் வேண்டாம் என்றால் நீங்கள் வேண்டுவது யாது?

              • பதில் இல்லாதுவிட்டால் அல்லது தெரியாதுவிட்டால் அதனை நேரடியாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

                அத்துடன் தமிழில் எழுதப்பட்டவற்றைக்கூட சரியாகப் புரிந்துகொள்ள முடியாத மற்றும் பிறநாடுகளைப் பற்றி எதுவும் தெரியாத உங்களைப் போன்றவர்கள் மற்றைய நாடுகளினைப்பற்றி கற்பனையில் இல்லாதவற்றையெல்லாம் இருப்பதாகப் பிதற்றுவதை (உதாரணத்திற்கு – இங்கிலாந்திலும், பிற முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள சாமானிய மக்கள் பிச்சைக்கார பிழைப்பையே பிழைக்கிறார்கள்) தவிர்ப்பது நலம்.

          • மன்னாரு/புதுநிலா,

            1. கம்யூனிச ஆட்சி வந்தால் வறுமை ஒழியுமா? முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஏழைகள் கம்யூனிச நாடுகளில் உள்ள பணக்காரர்களை விட வசதியாக இருக்கிரார்கள். பார்க்க http://ccs.in/sites/default/files/publications/lss_series_1_why-is-india-poor.pdf (பக்கம் 30)

            2. முதலாளித்துவ நாடுகளில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் கூட திறமை, உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம் ஆகியன இருந்தால் எளிதில் முன்னேரலாம். ஏன்! மிகப்பெரிய பணக்காரன் ஆகலாம் (உதாரணம்: பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்). இது போல் எந்த கம்யூனிசநாட்டிலும் சாத்தியமில்லை.

            3.நான் ‘கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ’ படித்திருக்கிறேன் (‘தாஸ் காபிடல்’ படிக்க முயன்று புரியாமல் பாதியில் கைவிட்டிருக்கிறேன்). ஆனால் அது உதவாத ஒன்று. உலகில் எங்கும் வெற்றி அடையா சித்தாந்தம். மனித குலத்திற்கு எதிரான சித்தாந்தம்.

            4. அரசாங்கம் என்றால் என்ன? அதன் கடமை என்ன? மக்களுக்கு சோறு போடுவதா? இல்லை அவர்களுக்கு வேலை கொடுப்பதா? ஆம் என்றால் நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க முடியுமா? எல்லருக்கும் சோறு போட முடியுமா? எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்/எவ்வளவு சோறு போடுவார்கள்?

            5. இன்னும் சொல்லப் போனால் அரசாங்களைவிட கார்பரேட்/தனியார் நிறுவனங்களால் தான் இதுவரை அதிக நன்மை நடந்துள்ளது.

            6. To read more about Liberalism: http://ccsindia.org/publication/display (All books are free download) 🙂

            P.S: Admin, I posted a harmless Joke about Communism and you censured it. 🙂

            • அப்புறம் மன்னாரு அவர்களே,

              பதில் இல்லை என்றால் இல்லை என சொல்லவும். இந்த பகடி எல்லாம் வேணாம்.

            • நாறாயனன்,

              ”கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ” வரை பெரிய படிப்பெல்லாம் படித்துக் குவித்த உங்கள் பிலாக்கனத்தின் முதல் பாயிண்டும் நான்காவது பாயிண்டும் முரண்படுவதை கவனிக்கவில்லையா?

              அதற்கு முன், நீங்கள் கொடுத்த இணைப்பில் இருக்கும் தத்துவங்களை வாசித்தேன். http://ccs.in/our-board-members – இது போன்ற நல்லவர்கள் புழங்கும் இடத்திலிருந்து வேறு வகையான ’புள்ளிவிபரங்கள்’ வந்தால் தான் ஆச்சர்யம். இவற்றுக்கு எதிர் லாவணி சுட்டிகளை கூகிளில் தேடி எடுத்துக் கொடுக்க அலுப்பாக இருக்கிறது. “கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ” வரை பெரிய படிப்பு படித்த உங்களால் லெனின் ஸ்டாலின் கால ரஷியா மற்றும் மாவோ காலத்திய சீனாவின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளையும் தேடிப் படிக்க முடியும் என்று நினைக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். ஜார்ஜ் ஆர்வெல் வகையறா தொகையறாக்களை மட்டும் படிக்காமல், மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று படித்துப் பாருங்கள். நீங்கள் தமிழர் என்று நினைக்கிறேன், எனவே அகிலனில் இருந்து கூட தொடங்கலாம்.

              அடுத்து, நீங்களும் உங்களுக்கு முன் என்னோடு பேசிக் கொண்டு இருந்த இன்னொரு அறிவாளியும் ‘கம்யூனிச நாடுகள்’ என்று நிகழ்காலத்தைச் சுட்டி எடுத்துக் காட்டும் நாடுகள் எவை என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன். கம்யூனிச ஆதரவாளனாக இருந்து கொண்டு இன்று உலகில் இருக்கும் கம்யூனிஸ்ட் நாடு எது என்று கூட தெரியாமல் வாழும் இந்த அப்பாவியை மன்னித்தருளுவீர்கள் என்று நினைக்கிறேன்.

              உங்களது முதல் பாயிண்டில் நீங்கள் சொல்லும் ’பணக்காரர்களில்’ ஓரிருவரின் பெயரைச் சொல்ல முடியுமா? அதையும் தெரிந்து கொள்ள விருப்பம். அமெரிக்காவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய, ஹிட்லரை வீழ்த்திய அம்மாம் பெரிய வல்லரசு ரஷியாவில் (அந்தக்கால) ஒரு பணக்காரன் பெயர் கூட எனக்குத் தெரியாமல் போனது ஒரு தனிப்பட்ட சோகம் தான்.

              நானறிந்த வரை, மார்க்சியம் தனிப்பட்டவர்களிடம் செல்வம் குவிவதை ஆதரிப்பதில்லை என்பதையும் சமூகச் செல்வம் அதிகரிப்பதையே முன்வைக்கிறது என்பதையும், சமூகத்தின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டிருக்கிறது என்பது தான். நீங்கள் படித்த “கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ”வின் படி நீங்கள் முற்றிலுமாக அறிந்துணர்ந்த கம்யூனிசத்தில் வேறு மாதிரியாக சொல்லியிருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

              பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னபிறரின் ’தனிநபர்’ சாதனைகள் சாதித்ததை விட ஒட்டுமொத்த சமூகமே ஓருடலாக, ஓரான்மாவாக எழுந்து நின்று பராரியாய் சீரழிந்த தேசத்தை வல்லரசாக உயர்த்திய வரலாறைப் படித்திருக்கிறேன். இன்றைக்கு தனிநபர் சாதனையின் எடுத்துக்காட்டான தேசத்தில் 99 சதவீதம் 1 சதவீதத்தை எதிர்த்து தெருவில் இறங்கியிருக்கிறார்கள் என்கிற செய்தியையும் தினசரிகளில் தான் வாசித்தேன். அந்த 99 சதவீதமும் நாங்கள் பிச்சைக்காரர்கள் என்று தங்களையே அறிவித்துக் கொண்டதையும் பார்த்திருக்கிறேன். ஒருவேளை யாரோ அயோக்கியர்கள் புஷ்பா தங்கதுரை எழுதிய ’எலக்கியத்தின்’ மேல் “கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ” என்று உறையிட்டு உங்களிடம் கொடுத்து விட்டார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது 🙁

              அரசாங்கம் மக்களுக்கு உணவளிக்காது, வீடு தராது, வேலை தராது. வேறு என்ன தான் செய்யும்? புரியவில்லை. நீங்களே முன்வந்து எனது அறியாமையை போக்குங்களேன்.

              கார்ப்பரேட்டுகளின் சாதனை உண்மையிலேயே மிகப் பெரியது தான். அப்புறம் ஏன் தங்களுக்கு நிதி நெருக்கடி என்று வந்ததும் அமெரிக்க கஜானாவை திறக்கச் சொன்னார்கள்? உங்கள் கார்ப்பரேட்டுகளின் மேல் அவற்றின் புன்னிய ஸ்லத்திலேயே மக்கள் காறி உமிழ்கிறார்களே படிக்கவில்லையா?

              ஹிப்போக்ரசி என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை யாரும் கேட்காமலேயே விளக்கிச் சென்றுள்ள உங்களுக்கு கோடி நன்றிகள் 🙂

              • 1. என் முதல் பாயின்டும் நாலாவது பாயின்டும் எவ்வாறு முரண்படுகின்றன? முதல் பாயின்டில் கம்யூனிச அரசாங்கத்தின் தோல்வி பற்றியும்நாலாவதில் அரசாங்கத்தின் கடமை வேலை கொடுப்பதோ சோறு போடுவதோ இல்லை என கூற விழைந்தேன்.

                I have some difficulty in typing in Tamil and it impedes my train of thoughts.

                2. The role of government is to ensure property rights, security to people, maintain rule of Law. Government should not involve in business. Libertarians oppose both Government bailing out large Corporates much as they oppose subsidies to middle class.

                3. You don’t know about the Great famines in Mao’s period or the pathetic economic situation in Stalin’s period? Don’t evade my questions citing your lack of time or laziness.

                4. Reg Private property and Community property holdings.. has Marx said that Govt should intervene and ensure that? He said that Capitalism would gradually evolve into Socialism which in turn will lead to Communism. Communists misinterpret his philosophy leading to all this havoc.

                5. North Korea is an example. Other Nations like China, Russia have brought in reforms long back. (Deng Xiaoping!)

                6. Please take some effort in understanding liberalism: https://www.youtube.com/user/LearnLiberty/videos

                P.S: My name is written in Tamil as நாராயணன்.

                • நாராயணன்,

                  //The role of government is to ensure property rights, security to people, maintain rule of Law.//

                  சொத்தே இல்லாதவர்களுக்கு “சொத்துரிமை, மக்களுக்கு பாதுகாப்பு, சட்ட ஆட்சி” இதெல்லாம் என்ன பலன் தரும்னு சொல்லுங்க.

                  நீங்க சொல்ற மூன்று ரோல்களும் தேவைப்படறவங்களோட கவர்ன்மென்ட்தான் அமெரிக்காவிலையும், இங்கிலாந்திலையும், இந்தியாவிலையும் இருக்கும் கவர்ன்மென்ட். மத்தவங்க? முந்தையவங்க 1% (5%-ம்னு வேணும்னாலு வச்சுக்கோங்க), பிந்தையவங்க 99%.

                  சோசலிச நாட்டில சொத்துரிமை இல்லைன்னுதான் லபோலபோன்னு அடிச்சுக்கிறீங்க. அந்த பீதியிலேர்ந்து வந்ததுதான், ‘பஞ்சம், பசி, பட்டினி, படுகொலை’ங்கற அவதூறுகள் எல்லாம். அப்படி 99% (95%) மக்களுக்கான கவர்ன்மென்ட் வந்துடக் கூடாதேன்னுதான் இவ்வளவு பதட்டம்.

                  இப்போ கேள்வி, இங்கிலாந்தும், அமெரிக்காவும் பெரும்பான்மை மக்களுக்கு புளுத்து நாறிக்கிட்டு இருக்கு, வீடு பறிக்கப்பட்டு நடுத்தெருவுல விடப்படறாங்க மக்கள். இந்தியாவில கேட்கவே வேண்டாம். இதுக்கு என்ன தீர்வுன்னு சொல்லிட்டு உங்க சரித்திர ஆராய்ச்சிக்குள்ள இறங்கினா நல்லா இருக்கும்.

                  “நாங்க சாஃப்ட்வேரு, நாங்க பேங்கு வேலை எங்க திறமையால உழைச்சு முன்னேறியிருக்கோம், மத்தவன் எல்லாம் வாழ்ந்தா என்ன செத்தா என்னா, அவங்களோட உயிர் வாழும் உரிமைய விட எங்க சொத்துரிமைதான் முக்கியம்”னு சொல்ல வர்றீங்களா?

                  • There is a saying “The inherent vice of capitalism is the unequal sharing of blessings. The inherent virtue of Socialism is the equal sharing of miseries”.

                    Only if government starts intervening in the market disturbing the natural order, the system gets less efficient. And the poor and downtrodden are the worst affected parties of this intervention.

                    Capitalism is about wealth creation rather than distribution. My ONLY point is “The poor in Capitalist countries are better than the middle class in communist countries. And it is only temporary. Chances that their next generation will dwell in poverty is very less.

                    If you are going to argue about any idea, please do support your claims with relevant empirical data than to appeal with emotional anecdotes.

  2. இதுபரவாயில்லை,கம்யூனிச கியூபா, வட கொரியா சென்ரு பார்தால் வாழ்கை பரம்பரை,பரம்பரையாக இதே சூலலில். அதை விட சூடான்,லெபனான்,ஈராக்,ஆப்கானிஸ்தான் யாருடய தவரு? ஏன் இந்த போராட்டமான சூழ்னிலை? அதிகார வர்கங்களின் அலட்ச்சியம், அரியாமை மட்டுமே காரணம்?

  3. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள வறுமையை சாடும் வினவு. உண்மையான பொதுவுடமை கொள்கையை வைத்த்திருப்பதாக பீற்றிக்கொள்ளும் அடாவடி வடகொரியாவை பற்றி வாயே திறப்பதில்லை. அங்குள்ள மக்கள் தாங்கள் வாழும் வாழ்க்கை தான் உலகத்தரம் வாய்ந்தது என நம்ப வைக்க பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களை பற்றி துதிபாடுவது அங்கு கிட்ட தட்ட மார்க்க கடமை போன்றது. எதிர்த்து பேசினால் நாய்களை பட்டினி போட்டு அந்த கூண்டுக்குள் முழு முண்டமாக தூக்கி எறிந்து விடுவார்கள். இது தான் உண்மையான சோஷலிசமாம்…..

  4. முதலாளித்துவம் மட்டுமோ, அல்லது கம்யூனிசம் மட்டுமோ இப்படியான பிரச்சனைகளுக்குக் காரணமுமல்ல, தீர்வுமல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதும், ஊழல்புரிபவர்களுக்குத் துணை போவதுமே எல்லாவற்றிற்கும் காரணம்.

  5. மக்கள் வறுமையே இல்லாம சந்தோஷமா இருக்கர ஒர் முதலாளித்துவ நாட்டோட பெயர் சொல்லுங்க??

  6. பணக்கார நாடுகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கம்யூனிச நாடுகளில் ஏழைகள் படும் பாட்டை விட அவர்கள் மேல் தான். குழந்தைகள் கூட பட்டினி கிடந்து சாவதை வேடிக்கை பார்க்கும் வக்கற்ற கம்யூனிச அரசுக்கு அணு ஆயுதங்கள் ஒரு கேடு (வடகொரியா). தன்னுடைய வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு தாழ்ந்து இருக்கிறது என்பதை உணர முடியாமல் மக்களை துதிபாடிகளாக வைத்த்திருக்கும் இது தான் உண்மையான சோஷலிச சித்தாந்தாமா?

  7. முழுமையான கம்யூனிசமும் முழுமையான கேப்பிடலிசமும் நடைமுறை படுத்தவே முடியாதது..
    ஆகவே இருப்பதில் எது சிறந்தது என்பதை மட்டுமே எடுத்துகொள்ளமுடியும்..

    அப்படிபார்த்தால் அரைகுரை கேப்பிடலிசத்தில் பிர்ச்சனை ஒரு 30-வருடங்களுக்கு ஒரு முறை வரும், கம்யூனிசத்தில் இருக்கும் நாடுகளில் எப்ப்ழொதுமே பிரச்சனை..
    இதில் எது சிறந்தது?

    புதுநிலா போன்றவர்கள் வரட்டுக்காக கூடிவாழ்ந்தால் கோடி நன்மை அது இது என சொல்லிகொண்டு திரியலாம், நடைமுறையில் சாத்தியமில்லை… அது தான் மனித இயல்பு…

  8. ///பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?///

    இந்தக் கட்டுரை கொஞ்சம் ஓவர். அதுவும் அநேகமான இந்தியர்கள் எல்லாம் சாதாரணமாக பல மேலைநாடுகளுக்குப் போய் நேரில் பார்த்து வரும் இந்தக் காலத்தில், சோவியத் யூனியன் காலத்துப் பாணியில் முதலாளித்துவ நாடுகளில் வறுமை தாண்டவமாடுகிறது. இங்கே பார், இந்த அழகான, பால்மணம் மாறாத குழந்தைக்கு பிரட்டும், ஜாமும் கூட கிடைக்காத நிலை அவன் பாதி மீன் கேக்கைக் கூட இரவுணவுக்குச் சேமித்து வைக்கிறான் என்ற பம்மாத்தைப் பார்க்க அடக்க முடியாமல் சிரிப்புத் தான் வருகிறது. 🙂

    உள்ளதுக்குள் மலிவான உணவே பிரட்டும், ஜாமும் தான். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற எந்த மேற்கு ஐரோப்ப்பிய நாடுகளிலும் இந்தக் கட்டுரையில் உள்ளது போன்ற வறுமை கிடையாது. அதிலும் இந்தளவு மோசமாக Child poverty கிடையாது. பிரிட்டனில் அரசாங்கத்தால் இந்தச் சிறுவனுக்கு ஒவ்வொரு மாதமும், அந்தக் குழந்தை பதினெட்டு வயதாகும் வரை அளிக்கப்படும் Child care பணத்தை எடுத்து இந்த Single mother நைட்கிளப்புகளிலும், போதைப் பொருள்களிலும் செலவழித்தாலே தவிர, ஒரு குழந்தை பிரட்டும், ஜாமும் கிடைக்காமல் தவிக்குமளவுக்கோ அல்லது மீன் கேக்கில் பாதியை இரவுக்கு சேமித்து வைக்கும் நிலையிலோ எந்த மேற்கு ஐரோப்பியக் குழந்தையும் இல்லை. இந்த பெண்ணின் முழு வருமானமும் வீட்டு வாடகையில் போனால் கூட, இவருக்கு எந்த வருமானமும் இல்லாது விட்டால், அரசாங்கம் வாடகைக்கு உதவிப்பணம் அளிக்கும். அல்லது இந்தப் பெண்ணின் துறையில் வேலைவாய்ப்புக் குறைவாக இருந்தால், அவர் இன்னொரு தொழிற் பயிற்சியைப் பெறும் வரை, இவர் பகலில் பயிற்சிக்குப் போகும் போது, இந்தக் குழந்தையை கவனித்து உதவக் கூட அரச, தனியார் நலன்புரி நிறுவனங்கள் உண்டு. அப்படியெல்லாம் பல திட்டங்கள் இருக்கும் போது, இப்படி ஒரு கட்டுரையை வெறும் விளம்பரத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காகத் தான் எழுதியிருக்கிறார் போல் தெரிகிறது. இப்படியான கட்டுரைகள் எதிர்க்கட்சிகளினதும், வறுமை ஒழிப்பு, மனிதவுரிமை அமைப்புகள் எல்லாவற்றினதும் பார்வையை தன்பக்கம் திருப்பும் என்பது இந்தப் பெண்ணுக்குத் தெரியும்.

    இந்தக் கட்டுரையில் கூறப்படும் நிலை யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது, அதாவது எல்லோருக்கும் வாழ்க்கையில், எப்பொழுதாவது Social safety net தேவைப்படும் என்பதற்காகத் தான் உதாரணமாக மேற்கு ஐரோப்பாவிலும், கனடாவிலும் வாழும் அனைவரும், அவர்கள் வேலை செய்யும் போது, விரும்பாது விட்டாலும் கூட, எமது உழைப்பின் பெரும்பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றோம்.

    • கிணற்றுத் தவளைகள் கட்டுரைகள் எழுதினால் இப்படித்தான் இருக்கும் :).

    • Those who are condemning this essay, first should read the likes given below.This translated essay “பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?” is based on these web pages.

      http://www.independent.co.uk/news/uk/politics/food-poverty-in-uk-has-reached-level-of-public-health-emergency-warn-experts-8981051.html

      http://agirlcalledjack.com/2012/07/30/hunger-hurts/

      http://www.nytimes.com/2014/01/15/world/europe/jack-monroe-has-become-britains-austerity-celebrity.html?_r=1

      http://www.thehindu.com/opinion/op-ed/britains-face-of-modern-poverty/article5594305.ece

      viyasan://இப்படி ஒரு கட்டுரையை வெறும் விளம்பரத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காகத் தான் எழுதியிருக்கிறார் போல் தெரிகிறது.//

    • வியாசன்,

      கட்டுரையை ஒரு தடவை படிச்சிட்டு பின்னூட்டம் போட்டீங்களா, இல்ல, தலைப்பையும், கட் லைனையும், கடைசி வரிங்களையும் மட்டும் படிச்சீங்களா?

      //பிரிட்டனில் அரசாங்கத்தால் இந்தச் சிறுவனுக்கு ஒவ்வொரு மாதமும், அந்தக் குழந்தை பதினெட்டு வயதாகும் வரை அளிக்கப்படும் Child care பணத்தை எடுத்து இந்த Single mother நைட்கிளப்புகளிலும், போதைப் பொருள்களிலும் செலவழித்தாலே தவிர, ஒரு குழந்தை பிரட்டும், ஜாமும் கிடைக்காமல் தவிக்குமளவுக்கோ அல்லது மீன் கேக்கில் பாதியை இரவுக்கு சேமித்து வைக்கும் நிலையிலோ எந்த மேற்கு ஐரோப்பியக் குழந்தையும் இல்லை. இந்த பெண்ணின் முழு வருமானமும் வீட்டு வாடகையில் போனால் கூட, இவருக்கு எந்த வருமானமும் இல்லாது விட்டால், அரசாங்கம் வாடகைக்கு உதவிப்பணம் அளிக்கும்.//

      இந்த விவரம் எல்லாமே ஜேக் மன்ரோவோட பதிவிலேயே இருக்கு.

      “வேலை இல்லாதோர் வருமான உதவித் தொகை சிறிது காலத்துக்கு வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது, குழந்தை வளர்ப்புக்கான உதவித் தொகையும் உதவுகிறது.” “என்னவாக இருந்தாலும் 438 பவுண்டு வீட்டு உதவித் தொகையிலிருந்து 670 பவுண்ட் வாடகை கொடுக்க முடியாதுதான். அதனால், ஒரு வாரம் வாடகை பாக்கி.”

      இதில நிலமை தெளிவாத்தான் புரியுது.

      //மேற்கு ஐரோப்பாவிலும், கனடாவிலும் வாழும் அனைவரும், அவர்கள் வேலை செய்யும் போது, விரும்பாது விட்டாலும் கூட, எமது உழைப்பின் பெரும்பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றோம்.//

      இதை ஒழிச்சுக் கட்டணும்னுதான் நியோலிபரல், லிபரடேரியன், நியோகான் னு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கட்சிகளா அமெரிகாகவிலையும், இங்கிலாந்திலையும் செய்துக்கிட்டு வர்றாங்க. எல்லாரும் கைய கட்டிகிட்டு இருந்தா இது மாதிரி கதைகள் இன்னும் சில வருடங்கள்ள சாதாரண விஷயமாகிடும்.

      • ஒரு வலைப்பதிவை அப்படியே ஏற்றுக்கொள்ளுவதுதான் சரியென்றால் உங்கள் வாதம் எல்லாம் சரிதான். உலக நிலவரங்கள் தெரியாதவர்களுக்கு இவையெல்லாம் சரியாகத்தான் படும்.

        இங்கிலாந்தில் வருமான இல்லாத ஒருவர் 670 பவுண்ட் வாடகை வீட்டில்தான்/நகர்ப்புறத்தில்தான் வாழவேண்டும் என்று நினைப்பது அவரது தவறேயன்றி வேறெதுவுமில்லை. இங்கிலாந்தில் எவ்வளவு வாடகைக்கெல்லாம் ஒரு சிறுவீட்டினை எடுக்கலாம் என்ற தேடல் வினவினைப் பொறுத்தவரை தேவையற்றது.

        வருமானம் இல்லாதபோது கூட ஐபோன் தான் வேண்டும் நோக்கியா போன்றவையெல்லாம் ஜூராசிக் காலத்து செல்பேசிகள் என்ற வீம்பு மனநிலையில் இருப்பவர்களையெல்லாம் எந்த அரசாங்கங்களாலும்/நிவாரணங்களாலும் திருப்திப்படுத்த முடியாது.

      • //எல்லாரும் கைய கட்டிகிட்டு இருந்தா இது மாதிரி கதைகள் இன்னும் சில வருடங்கள்ள சாதாரண விஷயமாகிடும்.//

        இப்படி எத்தனையோ வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அப்படி ஏதும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் குடியேறிய கனடா, அவுஸ்திரேலிய நாடுகளிலும் உள்ள ஐரோப்பியர்கள், இந்த சமூக நலத்திட்டங்களை எல்லாம் திடீரென்று அவர்களிடம் பணம் வந்ததும் அமுல் படுத்தவில்லை. கோடிக்கணக்கான ஐரோப்பிய தொழிலாளர்களும், ஏழைகளும் பல்லாண்டு காலம், அரசர்களாலும், பிரபுக்களாலும் சுரண்டப்பட்டு, இரத்தம் சிந்தி, அதற்காகப் போராடித் தான் பல தொழிலாளர் நலச் சட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். அதனால், அந்தச் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் பின்னால் அவர்களின் முன்னோர்களின் உழைப்பு, தியாகம் என்பன மட்டுமல்ல, அப்படியான சமூக நலத்திட்டங்கள் இல்லாத சமூகம் எப்படியானதாக இருக்கும் என்பதை அவர்களின் வரலாற்றின் மூலம் அறிந்துள்ளனர். அதனால் ஒரு சில பழமைவாதிகள் தொழிலாளர், சமுகநலத்திட்டங்களை எதிர்த்தாலும், இனவாதம் பேசினாலும், பெரும்பான்மை மேலைநாட்டவர்கள் அவர்களை ஆதரிப்பவர்கள் அல்ல. அதனால், இந்தமாதிரிக் கதைகள் கொஞ்சம் மிகைப்படுத்தல் தான். முதலில் வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கும் ஆனால், சிந்தித்துப்பார்த்தால், இந்தப் பெண்ணுக்குத் தேவை எப்படி அவரது பணத்தைச் செலவளிப்பது என்பதில் (Money management) பயிற்சியும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சமூகநலத்திட்டங்களைப் பயன்படுத்தி அவர் வேறொரு துறையில் தொழிற் பயிற்சியைப் பெற்று மீண்டும் Work force இல் நுழைவதற்கு முயற்சிப்பதும் தானே தவிர, இப்படி பத்திரிகைகளுக்கு முறைப்பாட்டுக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதல்ல என்பது புரியும். அல்லது அரசாங்கத்திடம் கடனைப் பெற்று அவருக்கு பிடித்த எழுத்து(Journalism) துறையிலேயே, ஒரு கல்லூரியில் சேர்ந்து அவர் அரைகுறையில் விட்ட கல்லூரிப்படிப்பைத் தொடர வேண்டியது தான்.

  9. எல்லா நாட்டிலும் உழைப்பவன் கஷ்ட படுறான், முதலாளி சொகுசா இருக்கான்.

  10. உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர் ஜோசப் ஸ்டாலின்…!

    https://www.vinavu.com/2009/12/21/stalin-130/ –தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
    https://www.vinavu.com/2009/11/07/stalin-dvd-intro/ – நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
    https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/ – “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_3.html
    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_4.html
    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_6.html
    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_17.html
    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_23.html
    http://kalaiy.blogspot.in/2014/01/blog-post_24.html

    https://www.vinavu.com/2010/11/08/spy-2/ – கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

    முதலாளித்துவத்தின் ஓட்டாண்டித்தனமும் தோல்வியும் அம்பலமாகும் போதெல்லாம் சில சொம்புகள் கக்கத்தில் பாயைச் சுருட்டி வைத்துக் கொண்டு கிளம்பி வரும்.. “அதாகப்பட்டது கீர்த்தனாரம்பத்திலே… இவாள்லாம் ரொம்ப மோஷம் தெரியுமோல்லியோ” என்று நாம் சொல்வதற்கு சம்பந்தமேயில்லாமல் மலநாற்றமெடுக்கும் ஊத்தைவாயில் சப்புக்கொட்டிக் கொண்டே ஆரம்பிப்பார்கள். அந்த நொண்ணாட்டியமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.

    என்ன எழுதியிருக்கோ அதுக்கு முதல்லே பதில் சொல்லுங்க. பதிவில் சொல்லப்பட்டிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அதைப் பற்றி முதலில் பேசி முடிக்கலாம். மேலே உள்ள சுட்டிகள் பொதுவான வாசகர்களுக்கு மட்டும் தான் – மற்றபடி ஜமுக்காளப் பார்ட்டிகளுக்கு இல்லை.

  11. விவாதத்திற்கு நேரடியாக தொடர்ப்பில்லாத கட்டுரை ஒன்று. தலைவர் ஸ்டாலின் பற்றி வினவில் தேடிய போது படிக்கக் கிடைத்தது. பலமுறை வாசித்தது தான், இனியன் / நாறா – போன்றோரின் உளவியலைப் புரிந்து கொள்ள போதுவான வாசகர்களுக்கு இது பயன்படும்.

    ஆறாண்டுகளுக்கு முன் வினவில் வந்த ஒரு க்ளாசிக் – https://www.vinavu.com/2008/07/26/jemo/

  12. ஒருவர் மனம் திறந்து வார்த்தைகளை பதிவு செய்வாராக இருந்தால் அவருக்கு எந்த அலங்காரமும் தேவையில்லை. இப்படித்தான் பார்க்க முடிகிறது ஜேக் மன்ரோ வின் பதிவை.

    ஜேக் மன்ரோ ஏங்குவது இதற்காகத்தான்… நேற்றிருந்த வாழ்க்கை இன்றில்லை இன்றிருந்ருந்த வாழ்க்கைவசதிகள் நாளை நிச்சியம் இன்னும் குறைபட்டோ தீஞ்சே! போகும் என்பதில் அடக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள் அதுகூடப் பராவாயில்லை இந்த விதியை தனது குழந்தையும் சந்தித்து விடுமோ என்ற “திகில்” என்னசெய்ய முடியும்? என்கிற தொனியில் அவரின் பதிவு இருக்கிறது.

    அவர் முறையிடுவது சிலுவையிடமும் அல்ல சிவலிங்கத்திடமும் அல்ல. மனிதசமூகத்திடம். ஒரு சமூக மாற்றத்திற்காக.இவரின் இந்த சிறு பதிவு -எழுத்துக்கள் பலமாகவே புரட்சியின் கதவுகளை தட்டுகிறது.

    “புரட்சி என்பது உத்வேகமடைந்த ஒருவரலாற்றின் கோபம்”

    இலகுவான பாஷையில் சொன்னால் உலகச்சொத்துகளும் அரசியல் அதிகாரம் ஐந்து வீதமான மக்களுக்கு சொந்தமானதை மீட்டெடுத்து 100 வீத மக்களுக்கு சொந்தமாக்குவதே!.

  13. முதலாளித்துவ நாடுகளில் இப்படிப்பட்ட நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது.பிரட் ஜாம் கிடைக்காத நிலை இன்றைக்குப் பரவலாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அது வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிற உண்மை அவர்கள் மூலமாகவே வந்துகொண்டிருக்கிறது.முதலாளித்துவத்தின் முகத் திரை கிழிந்துகொண்டிருக்கிறது.அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மெய்கண்டனைப் போன்றவர்கள்.பாவம்.
    ,பரிதாபம்.கம்யூனிச நாடு,வறுமை என்பதல்ல பேச்சு.அந்த சித்தாந்தத்தைக் கண்டுதான் இன்று முதலாளிகள் கழிகிறார்கள்.இந்த உண்மை ஏழைகளாகவும்,தன்மானம் உள்ளவர்களாகவும்,கம்யூனிஸ்டுகளாகவும் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.முதலாளித்துவத்தின் கோர முகத்துக்குள் ஒளிந்திருக்கும் திருடர்களுக்குத் தெரியவே தெரியாது.

  14. // லெனின் ஸ்டாலின் கால ரஷியா மற்றும் மாவோ காலத்திய சீனாவின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளையும் தேடிப் படிக்க முடியும் என்று நினைக்கிறேன் //

    அந்தக் கால ரஷ்யா,சீனாவில் வாழ்க்கை எப்படி இருந்தது? இன்றைய உலக நாடுகளின் வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு சொல்லும் சர்வேக்கள் போன்றவற்றில், நார்வே, பின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் முதலிடங்களில் வருவதை பார்க்கலாம். இந்த நாடுகள், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகள் இவற்றோடு மேலே சொன்ன ரஷ்ய-சீன வாழ்நிலைகளை ஒப்பிட்டு வினவு கட்டுரை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், “முதலாளித்துவ கோவணம் உருவப்பட்டது”, “கந்தலாக கிழிந்து தொங்குகிறது” என்ற வாராவதி மொழிநடையில் இல்லாமல், தேர்ந்த ஆய்வுக் கட்டுரைக்கான நடையில் இப்படிப்பட்ட கட்டுரைகள் வர வேண்டும் என்பது என் விருப்பம்.

    நான் வினவு படிக்க தொடங்கிய ஒரு வருட காலத்திற்கும் மேலாக இப்படிப்பட்ட நேரடி கட்டுரைகள் எதுவும் படித்ததில்லை. நித்தி தந்தி டீவியில் வரும் நிகழ்வை காளிதாசன் ரேஞ்சுக்கு வர்ணித்து வரும் கட்டுரைகள் போன்றவற்றை விட மேலே சொன்ன வகை கட்டுரைகள் உபயோகமானவை என்பது என் எண்ணம்.

    • வெங்கடேசன், ‘வாராவதி மொழிநடை’ வெளிப்பட்டமைக்காக வருந்துகிறேன். எனினும், அது போன்ற மொழிநடை சில நேரங்களில் நம் கருத்தை காண்டாமிருகத் தோல்களை ஊடுருவித் தைக்கச் செய்ய உதவுகிறது என்பது அதன் இன்னொரு பக்கம்.

      மேலே எனது மறுமொழியில் சில கட்டுரைகளுக்கான இணைப்புகளைக் கொடுத்திருக்கிறேன். அது உங்கள் கேள்வியின் சில அம்சங்களுக்கு பதிலளிக்கும் என்று கருதுகிறேன். வாசித்துப் பாருங்கள்.

      நீங்கள் யாகூ ஐ.டி வைத்திருந்தால், க்ரோவர் ஃபர் என்பவர் நடத்தி வரும் ஸ்டாலினிஸ்ட் என்கிற குழுமத்தில் இணையுங்கள். பல்வேறு தரவுகளுடன் ஏராளமாக எழுதியிருக்கிறார். லெனின் / ஸ்டாலின் காலத்து ரஷியாவின் அரசியல் பொருளாதார நிலை மட்டுமின்றி இன்று அநீதியான முறையில் தலைவர் ஸ்டாலின் குறித்து செய்யப்படும் துர்பிரச்சாரங்களை தர்க்கரீதியிலும் தரவு ரீதியிலும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். புதியவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் கூட பொறுமையான பதில்களைக் கொடுத்து வருகிறார்.

      நீங்கள் சொல்வது போன்ற கட்டுரைகள் வினவில் (தமிழில்) வெளிவருவதும் கூட அவசியமானதே என்பது தான் எனது கருத்தும். வினவு நண்பர்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

      நன்றி.

  15. நிக்கோலை சாவுசெஸ்க்கு என்ற ருமேனியா கொடுங்கோலனாகட்டும் போல் போட் என்ற கொடுங்கோலனகட்டும் அல்லது அந்நாளைய கிழக்கு ஜெர்மனியாகட்டும் அங்குள்ள மக்கள் சந்தோசமாகவா இருந்தார்கள். எந்தவிதமான முன்னேற்றத்தின் குறியீடுகளும் இன்றி மக்களை ஒரு எதிர்பார்ப்பு நிலையிலேயே வைத்த்திருந்தது தான் அன்றைய கம்யூனிசம் சாதித்த்தது. இதை புரிந்து கொண்டதாலோ என்னவோ கம்யூனிச சீனா ஒரு வகையான முதலாளித்த்துவ கம்யூனிசத்த்தை கலந்து கட்டி அடிக்கிறது. மக்களை எதிர்பார்க்கும் நிலையிலயே வைத்த்திருந்தால் கம்யூனிசம் நிச்சயம் தேறாது.

  16. ஐயா வினவு,

    [1]இதுப் போன்ற எளிய நடையிலான, உயிர்புடன் கூடிய கட்டுரைகள் வினவில் தொடர்வதே சிறப்பு,நன்று.

    [2]திரு அப்துல் அவர்களின் கட்டுரை மொழிப் பெயர்ப்பு நடை மிக்க சிறப்பு.

    [3]வெங்கடேசன்,மன்னாரு ஆகியோரின் “கட்டுரை வடிவத்தின்” மீதான விமர்சனங்கள் ,வினவின் உண்மை நோக்கத்தை மழுங்க செய்துவிடும்.

    [4]பாமாவின் “கருக்கு” நாவலை ஆபாசம்,கொச்சை என கூறும் நம் “அறிவு ஜீவி தமிழர்களுக்கு”, சக-மக்களின் வலியோ , வேதனையோ எப்படி புரியும். ?

    venkatasan//“முதலாளித்துவ கோவணம் உருவப்பட்டது”, “கந்தலாக கிழிந்து தொங்குகிறது” என்ற வாராவதி மொழிநடையில் இல்லாமல், தேர்ந்த ஆய்வுக் கட்டுரைக்கான நடையில் இப்படிப்பட்ட கட்டுரைகள் வர வேண்டும் என்பது என் விருப்பம்.

    //வெங்கடேசன், ‘வாராவதி மொழிநடை’ வெளிப்பட்டமைக்காக வருந்துகிறேன். எனினும், அது போன்ற மொழிநடை சில நேரங்களில் நம் கருத்தை காண்டாமிருகத் தோல்களை ஊடுருவித் தைக்கச் செய்ய உதவுகிறது என்பது அதன் இன்னொரு பக்கம்.

  17. ருமேனியா, கிழக்கு ஜெர்மனி, வடகொரியா, சீனா, கீயூபா எல்லாம் கம்பியூனிஸ்ட் ஆட்சிகள் இல்லை !!! சிபிஐ, சிபிஎம் போன்றவைகள் கம்பியூனிஸ்ட் கட்சிகள் என்று கூறிக் கொள்பவை போன்றும, இந்த நாடுகள் தங்களை கம்பியூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்கின்றன. வினவில் நிறைய தடவை கட்டுரைகள் வெளிவந்தாலும், இனியன் போன்ற லிபர்டேரியன்கள், நாறாயணன்கள் போடும் கூச்சல் தாளவில்லை.

    • Mr. Athavan,

      That is exactly my point. Communism is an impossible ideology which won’t work. Even in places where it is tried, it will end in havoc, much different from the original goal targeted. It can never be achieved. 🙂

  18. எப்படி பார்த்தாலும் முதாலித்துவத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உள்ள பலம்-பலவீனம் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

    இதில்: முதாலித்துவ கோவணம் உருவப்பட்டிருக்கிறது!..கந்தலாக தொங்கிறது!! என்பது ஒரு புதினமான செய்தியே அல்ல.

    1945-ஆண்டிற்கு பிறகு அதாவது உலகத்தின் உற்பத்திபொருட்களையும் உற்பத்திசக்திகளையும் பெருமளவு அழிவுக்கு உட்படுத்திய பின்னர் மீண்டும் உலகப்பரப்பளவுக்கு வந்த முதாலித்துவம் தட்டையா சுட்டிக்காட்டுவதாக இருந்தால் ஏகாதிபத்தியம் என இலக்கணப் படுத்தலாம்.

    இந்த ஏகாதிபத்தியம் என்ன விளைவுகளை சந்தித்திருக்கிறது?

    தனது சொந்தநாட்டு மக்களுக்களுக்காகவாயாகுதல் எதையாவது சாதித்திருக்கிறதா? அது சாதித்ததெல்லாம் சொந்த நாட்டு மக்களை கடன்காரர்கள் ஆக்கவிட்டதே!. அவர்களின் தேசியக்கடன் 17 திரிலியன்.இந்த உயர்ந்த புள்ளிவிபரக்கடன் தொகை உலகத்தில் எந்தநாட்டிற்கும் கிடையாது.

    ஏன் தனியொருநாட்டு சோலிசக்கொள்கையை கடைப்பிடித்த கம்யூனிசக் கொள்கையை கடைப்பிடிவர்களும் கிடையவே கிடையாது.

    அடுத்து வாதம்: நாம் தினம்தினம் சத்தியம் பிரமாணம் எடுக்கிறோம். நேர்மையாக வாழவேண்டும். சத்தியத்தை கடைப்பிடிக்கவேண்டும…உண்மையை பேச வேண்டும்.இந்த
    முதாலித்துவம் எந்த உண்மையை பேசிக் கிழித்துவிட்டது?.

    அப்பாச்சி கெலிக்கப்டரில் இருந்து 12 நிராயிதபாணிகளையும் 2 பிரபலியமான ஊகவியலாளரையும் சர்வசதாரணமாக சுட்டுக் கொண்ற உண்மையை வெளிகொண்டு வந்த ” மானிங்” க்கு முதாலித்தவநீதியின் படி முப்பது வருட சிறைவாசம்.

    தூதுவர்கள் பேசிக் கொண்ட ரகசியபேச்சுவார்த்தைகளை அம்பல படுத்திய யூலியான் அசஞ்சே-க்கு வீட்டு காவல். இதில் தான் முதலித்துவம் கிழிந்து தொங்கிறது என அர்த்தப் படுத்தலாம்.

    அதன்பிறகு: சோவியத்யூனியன் உருவான நிகழ்வு. அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள்..உருமாறிய விதம். எல்லாம் விமர்சனதிற்க்கும் ஆய்வுகள்-விவாதங்களுக்கம் உரியவை. இதை எக்காலத்திலும் நிராகரிக்க முடியாதவை.

    ஏகாதிபத்தியத்திற்கும் முதாலித்துவத்திற்கும் யாருகும் நியாயம் கற்ற முற்பட்டால் அது எமக்கு மன்னிக்க முடியாத குற்றமாகவே படுகிறது.

  19. //That is exactly my point. Communism is an impossible ideology which won’t work. Even in places where it is tried, it will end in havoc, much different from the original goal targeted. It can never be achieved. :)// அப்படியா நாறாயண், பிறந்த இடத்திலேயே முதலாளித்துவம் தோற்றுக் கொண்டிருகின்றதே ? அது உங்கள் பாயிண்டில் இல்லையா ? ஸ்டாலினால் ஏழைகளுக்கான பொற்கால ஆட்சி நடந்தேறியது.ஸ்டாலின்கால பொற்கால ஆட்சி, திட்டமிடப்பட்ட ஊடுருவல்காளும், முதலாளிகளால் சோவியத்தின் மீது திணிக்கப்பட்ட 2ஆம் உலக யுத்த அவலங்களால் ஸ்டாலின் செய்த தவறுகளாலும் சோசலிசம் சிதைக்கப்பட்டது போல, முதலாளித்துவத்தை அதன் பிறப்பிடத்திலேயே சிதைத்து யார்? சதி என்ன சொல்ல முடியுமா ?.

    • Dear Athavan,

      //ஸ்டாலின்கால பொற்கால ஆட்சி

      I think you have been reading all the wrong books.
      1. The Collectivisation model of agriculture promoted by Stalin lead to famine killing millions.
      2. Innumerous political killings, genocide and human rights violation marked the tenure of Stalin.

      Speaking in terms of development, Hitler’s Germany was better when compared with Stalin’s Russia or Mao’s China.

      //முதலாளித்துவம் தோற்றுக் கொண்டிருகின்றதே

      What do you call as the failure of the capitalist model (it is apt to call it Liberalism or Market economy)? As I mentioned earlier, inequality is an inherent character of Liberalism (you know, all humans are not same). It is about choices and freedom. My repeated point is: Even the poor in Liberal countries are better than their Communist countries counterparts. Private charity in Liberal countries even attempts to reduce the poverty. Subsidies arriving from the very top of the system (govt) is very inefficient, whereas Private charities are found to be very efficient.

      If you feel that it is the intrinsic nature of humans is to care of fellow beings, why do you expect some govt to do it? Why can’t you just directly do it? The former is Communism and the latter is Liberalism.

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க