Monday, July 26, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் சேரிக்குள் நுழையாத தேர் : அரசு - ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

-

மிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரத்திற்கு அருகே அமைந்துள்ள அகரம் சேஷசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் புத்த மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமைகளுள் முக்கியமானது அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும். “பொதுக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடுவதற்கு உரிமை கிடையாது. அக்கோவிலின் தேர் சேரிக்குள் நுழையாது” என அக்கிராமத்தில் இன்று வரையிலும் தீண்டாமை பச்சையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மதம் மாறும் முடிவு
மதம் மாறும் முடிவை பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கும் சேஷசமுத்திரம் தாழ்த்தப்பட்டோர்

இத்தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட சாதியினர், காலனியில் தமக்கென ஒரு கோயிலைப் பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொண்டனர்; அக்கோயிலுக்கென ஒரு தேரையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். இந்தத் தேர் கோயிலிலிருந்து புறப்பட்டு தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பைச் சுற்றிவிட்டு மீண்டும் நிலைக்கு வர வேண்டுமென்றால், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிக்கும் காலனிக்கும் பொதுவாக உள்ள தார்ச்சாலை வழியாகச் சென்றுவர வேண்டும். இந்த நிலையில் ஆதிக்க சாதிவெறியர்கள், “தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்” எனக் கட்டுப்பாடு விதித்து, தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமியையும் தீண்டத்தகாததாக ஆக்கினர்.

2012-இல் இத்தேரோட்டம் குறித்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆதிக்க சாதிவெறி பிடித்த கும்பலின் எதிர்ப்பை ஒடுக்காத தமிழக அரசு, கிராமத்தில் நிலைமை பதற்றமாக இருப்பதைக் காட்டி, தேரோட்டத்திற்குத் தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தாழ்த்தப்பட்டோர் வெற்றி பெற்றபோதும், ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகவே அரசு நடந்துகொண்டதால் தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

அம்மன் கோவில் தேர் தீண்டாமை
தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட அம்மன் கோவில் தேர்.

இந்த நிலையில் தமது வழிபாட்டு உரிமையை அங்கீகரிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட மறுக்கும் தமிழக அரசோ, உண்ணாவிரதமிருந்த 25 பெண்கள் உள்ளிட்டு 42 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ தமது உரிமைக்காக அமைதியான முறையில் போராடிய அவர்களுக்கு உடனடியாகப் பிணை வழங்க மறுத்தது. இப்படிப் போராடிப் போராடி தோற்கடிக்கப்பட்ட நிலையில்தான், அத்தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி புத்த மதத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். “எங்கள் காலத்தில் தீண்டாமையை ஒழிக்க முடியாது; மதம் மாறினால் எங்கள் சந்ததியினராவது நிம்மதியாக இருப்பார்கள்” என விரக்தியோடு கூறுகிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன்.

சேஷசமுத்திரம் தமிழகத்தின் விதிவிலக்கல்ல. தமிழகமெங்கும் இன்றும் பல்வேறு வடிங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதை; தீண்டாமை பிரச்சினையில் அரசு தாழ்த்தப்பட்டோரின் முதுகில் குத்துவதை; தமிழகத்தில் சமூக நீதி கோலோச்சுவதாகக் கூறப்படும் மோசடித்தனத்தைப் பளிச்சென அம்பலப்படுத்திக் காட்டும் இன்னுமொரு உதாரணம். ஆனால், இந்த உண்மை மூடிமறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் நாடகக் காதல் நடத்துவதாகவும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆதிக்க சாதியினர் கூப்பாடு போட்டு வருவது எத்தகையதொரு மோசடி!
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

 1. யுவன் சங்கர் ராஜாவைப் போல் இஸ்லாத்திற்குள் நுழைந்து விடுங்கள். பிறகு உங்களை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்ல சங்கராச்சாரிக்கே துணிவு வராது. கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.

  • மரைகாருக்கு லப்பைய திருமணம் செய்ங்க பார்ப்போம் ?,ராஉதர்க்கு லப்பைய திருமணம் செய்ங்க பார்ப்போம் ? எல்லாம் நாடகம் மத வெறி அதற்க்கு உழைக்கும் மக்கள் பலிகடா செய்ய படுகிறது ,தலித் மக்களுக்கு எந்த ஒரு மதமும் வேண்டாம்,எங்களளால் முன்னுக்கு vara முடியும் , எங்களை திசை திருப்பாமல் ,கேவல படுத்தாமல் இருந்தால் போதுமானது .

 2. தமிழகமெங்கும் இன்றும் பல்வேறு வடிங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது உண்மைதான்.

 3. அங்க மட்டும் என்ன யோக்கியமா ? இப்பவே இஸ்லாம்தில் 105 ஜாதி உள்ளது ,இன்னும் எத்தனை வர போகிறது என்று யாருக்கும் தெரியாது ! எங்களுக்கு எந்த மதமும் வேண்டாம் – மார்க்ஸ் -மாவோ -அம்பட்கர் -பெரியார் வகுத்து கொடுத்த பாதையல் பயணிப்போம், சாதி வெறியர்களை வேரறுப்போம் . நிச்சயம் வெல்வோம் !

 4. ஜெயாவின் அரசு ஆதிக்க சாதி வெறியர்களின் எடுபிடியாகவே செயல்பட்டு வருகிறது என்பதற்க்கு ஜெயா அரசு நடத்திய பரமக்குடி துப்பாக்கிசுடும்,தேவர் சிலைக்கு தங்க கவசம் ஜெயா அணிவித்ததும் சான்று.

 5. @Babu.Bruslee/Qatar
  இஸ்லாதை தெரின்துகொன்டு பெசவும், இஸ்லாதில் ஜாதி இல்லை. கறுட்து வெறுபாடு காரனமக சில பிறிவுகள் உள்ளது. எந்த பிரிவிலும் தீண்டாமை இல்லை. கருட்து வெருபாடு உள்ளவர்கலுடன் நான்கல் ஒன்ட்ராக தொழுவொம் , சாபிடுவொம் , கருட்து வெருபாடு உல்ல குடும்பங்கலுடன் திருமனம் செய்து கொள்வொம்.

  இதில் எந்கு இருந்து ஜாதி வன்தது. இஸ்லாதில் தீண்டாமை இல்லவெ இல்லை.

  எதனயொ தலித்கள் இஸ்லாதை ஏட்ரு உள்ளார்கல், அவர்கள் யாரும் ஒதுக்க படுஉவதொ அல்லது இலிவு படுத படுவதொ இல்லை, மாறாக பலரை எங்கலை வழி நடத்தும் இமாமகவும் , ஹாஃபிலகவும் , ஆலிமகவும் ஆக்கி கவ்ரவித்து உள்ளொம்.

  SORRY, FOR MY BAD TAMIL WRITING

  • மதம் மாற்றி …….மதம் மாற்றி வளர்ந்த மக்கள் தொகை, இன்று அல்ல வந்தார் ,மாற்று உலகத்தில் நல்லது செயதொர்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டு என்று சொல்லும் இஸ்லாம் , தற்பொழுது தலித் மக்களின் வாழ்க்கை பெரசனைகலிஎல் தலை இட்டு தீர்க்க வேண்டியதுதானே ? ஏன் மதம் மாறினால் மட்டும் உங்க கரிசனை ?

   • /தற்பொழுது தலித் மக்களின் வாழ்க்கை பெரசனைகலிஎல் தலை இட்டு தீர்க்க வேண்டியதுதானே ? ஏன் மதம் மாறினால் மட்டும் உங்க கரிசனை ?/
    இஸ்லாமியர்களுக்கு அன்னிய மதத்தின் மீது கரிசனை காட்ட வேண்டிய அவசியம் இல்லை மாறக தங்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட இட்ட்தில் தலித்கள் ஏன் இருக்க வேண்டும் மாறாக மரியாதை உள்ள இடத்திற்கு செல்வதே சிற்ந்த்தது

 6. மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி . இப்படிப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு எதற்காக இத ஒதுக்கீடு தர வேண்டும் ?
  அப்ப்டியே தருவது என்றால் , அவர்கள் போது கோவிலில் ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபாட்டு உரிமை இருக்கிறதா , இரட்டை குவளை இல்லையா என்று பஞ்சாயத்தும் , ஒடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரும் சான்றலித்த பிறகே தர வேண்டும்

  @suvanappiriyan
  அவர்கள் புத்த மதம் சென்றது நல்லதே. கிருத்துவ ஜைன மதங்களுக்குக்க்ம் செல்லலாம் . இசுலாம் சென்றால் ஆண்களுக்கு மட்டும் கோவில் செல்லும் உரிமை கிடைக்கும் . பெண்களுக்கு கிடைக்காது . அது 50 சத முன்னேற்றம் மட்டுமே

  • // அவர்கள் புத்த மதம் சென்றது நல்லதே. கிருத்துவ ஜைன மதங்களுக்குக்க்ம் செல்லலாம் . இசுலாம் சென்றால் ஆண்களுக்கு மட்டும் கோவில் செல்லும் உரிமை கிடைக்கும் . பெண்களுக்கு கிடைக்காது . அது 50 சத முன்னேற்றம் மட்டுமே //

   சாமியையே தேரிலிருந்து இறங்கி மாட்டுவண்டியில் போகச் சொல்லும் அளவுக்கு சாதி வெறி இந்துக்களிடம் இருந்தால் அதை மாற்ற வேண்டிய பொறுப்பு இந்து மத தலைவர்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இல்லையா..?!

 7. ஆதிக்க சாதி ஆதிக்க சாதி என்கிறீர்களே, வன்னியர் என்று உண்மையை ஓங்கி உரைக்கத் தயக்கம் ஏன்?
  1969 இல் கீழவெண்மணியில் 42 தலித்துகளை உயிருடன் கொளுத்தியது நாய்டுக்கள் எந்ற உண்மையை ஈ.வெ.ராவுக்காக ஒளித்த இரண்டு அமைச்சர் குழுவின் வழியில் வினவும் பயணிப்பதேன்?

  அந்தக் குழுவில் இருன்தவர்கள் கருணானிதியும் மாதவனும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க