Friday, October 22, 2021
முகப்பு உலகம் ஆசியா இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

-

ஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து  வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை  அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சவுதி மாணவியர்
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)

இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள்,  நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து  “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு  தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில்  நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?

இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.  இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.  இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள்  நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?

முகத்தை மூடிக் கொண்ட பெண்
மெக்காவில் புர்கா அணிந்த பெண் (கோப்புப் படம்)

சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது  சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள்  எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.

“முக்கிய வாசல் வழியாக  தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப்  பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.

அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.  ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில்  இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.

பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.

மேலும் படிக்க

   • தகடு,

    Can you expect such death in any other place?

    Even in the case of Savitha at Ireland, they immediately amended their law in their parlement.

    Can you expect such correction to maharam law of Muhamadism? Muhamadism is the vilest fundamentalism.

    • Univerbuddy,

     Which correction you expect to be done in Islam? If you think free mixing is the correction, we believe that is the evil in today’s society. Your issues and the issues of free mixing is resolved by Islam.

     If you wish to live in a way without any accountability, you have right to live in this world. But, don’t get into judgmental about Islam before you understand about its benefits.

     Amendment should be done in the action done by the College if they had not allowed in case of emergency. As per Shariah law, they should have allowed the Male doctor to treat the female patient since it is the case of emergency.

     I would suggest you to start fighting against the honor killing being done in India in many of the sects if you want to get publicized instead of getting into something which is already in its elite nature.

 1. அது எப்புடிங்க???
  இந்து சம்பந்தமான கட்டுரை எழுதும்போது “இந்துக்களை” மட்டுமே TARGET செய்யவேண்டியது….
  இஸ்லாமியத்தை பத்தி எழுதும்போது மட்டும்….மத்த மதங்களை சீண்டாமல் “வினவால்” எழுதமுடிவதில்லை….

  இஸ்லாமியம் என்றால் அடிப்படைவாதம்(நாசுக்காக சொல்கிறீர்கள் ) ….
  இண்டித்வம் என்றால் மூடநம்பிக்கை/தீவிரவாதம்(பகிரங்கமாக சொல்கிறீர்கள்…)

  என்னே வினவின் நியாயம் !!!!

 2. //அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.//

  கடைசியில பாயின்ட்டுக்கு வந்தாச்சா? 😀

  அம்மை வந்தால் வேப்பிலை கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்க வைப்பது மருத்துவ குணம் கொண்டது என்பது தெரியாதா? அப்படியே இல்லை என்று நீங்கள் சொன்னாலும், அடுத்து மருத்துவரை அனுகுவது என்று இன்னொருத்தர் சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் நம்பிக்கையை வைத்து அடம் பிடிப்பது இல்லை.

  FYI…தட்டம்மைக்கு தடுப்பூசி போடப்படுவதை எதிர்த்தே நிறைய article-கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, ‘சில’ தடுப்பூசிகள் தேவையில்லை என்றே. அம்மை போன்ற நோய்களும் மனிதனின் உடம்புக்கு தேவையே என்கின்றன சமீபத்திய அறிவியல். MMR-க்கு போடப்படும் தடுப்பூசிகள் கூட ஆட்டிஸம் வருவதற்கு காரணம் என்கின்றன சில articles. அப்ப இத்தனை வருடங்கள் போட்டதனால் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் வந்திருக்கும் இல்லையா? அவர்களுக்கு என்ன பதில்? நாங்களாவது காலத்துக்கு தகுந்தார் போல் மாறிக்கொள்கிறோம்…

 3. //மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும்//

  This law (maharam rules) is made by Muhamad, not by Saudi govt.

  Any blame should go to Muhamadism.

  We can blame the govt only for enforcing this vile maharam rules, with cultish police, etc.

  For details on what is maharam rules, please read,

  சித்தி மகன் பார்க்க வரக்கூடாதா?
  http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

 4. இந்துமதத்தை சாடாமல் வினவுவால் இருக்க முடியாது. இந்துமதம் சார்ந்த சடங்குகளில் எந்த “இந்து தலைவர்களும்” வழிநடத்துவது இல்லை. மக்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுகிறார்கள். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. அதனால்தான் அம்மை கண்டவருக்கு வேப்பில்லையை பயன்படுத்தி வருகிறார்கள். இது தமிழ் மருத்துவமான “சித்த மருத்துவமாகும்”. ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தாமல் தங்களின் விருப்பப்படி தமிழ் மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள். இப்போதுகூட அனைத்து மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அரசும் இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இஸ்லாமியத்தில் அப்படி இல்லை. இஸ்லாமிய மத தலைவர்களின் கட்டளைப்படி ஆண் மருத்துவர்களை அனுமதிக்காமல் பெண் மரணம்வரை சென்று விட்டது.—————

 5. இஸ்லாம் இதை கூறவில்லை…நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது…இஸ்லாத்திற்கும் இவர்கள் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை…இதை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கூறுவது தவறு…இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளாதவர்கள் செய்ததற்காக இஸ்லாத்தை குறைகூறுவது எவ்வாறு சரியாகும்??…

  • fuzail,

   Ameen,

   //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

   பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்கள் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

   • porkalil aankal thaan eedupaduvar penkal kulanthaikalai eedupadutthamaattaarkal . ethai sunnaalum athil oru kutram kandu pidikkavendum enkira unkaludaiya vetkai velippadaiyaakave therikirathu. unmaiyil islaatthai patri nanku therinthukkondu unkaludaiya oruppadaatha karutthukalai veli edunkal. neenkal arivaali endraal unkalai padaittha iraivan nitchayamaaka mikapperiya arivaali.

 6. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பிலை மிகசரி.

 7. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் இஸ்லாத்தின் மீது உங்கள் காழ்புணர்ச்சியை குறையுங்கள்.

  மஹ்ரம் இல்லாத அணோடும் பெண்ணோடும் பழகி இன்று சமுதாயத்தில் பரவி இருக்கும் இழி நிலையை போக்கவே இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது.

  மற்றபடி அவசர தேவைக்கு என்றுமே இஸ்லாம் தடை விதிக்கவில்லை. நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

  இஸ்லாத்தை மதிப்பிட வேண்டுமானால் அதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வாதிடுங்கள்.

  மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்.

  உங்கள் வாதம் சரி என்றால், குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் இந்த பதிவை திருத்துங்கள்.

  நன்றி

  • Ameen,

   //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

   பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

   இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)

   //மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்//\

   முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.

   //குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?//

   quran (24:31)
   For details : http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

  • ////நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில்///

   கடவுளாக மதிக்கப்பட்டு கடைசி தூதுவராக மதிக்கப்படும் இந்த நபிகள் நாயகத்தை யார் போருக்கு அழைத்தது? ஏன் போரை நபிகள் விரும்பினார்? கடவுள் இருக்கும் இடத்தில் எப்படி போர் குணம் அந்த மக்களுக்கு வரும்!! இதிலிருந்து இவர் கடவுளின் கடைசி தூதர் என்பது உண்மையல்ல என்பது தெரியவருகிறது. நபிகள் அவர்கள் இயேசு , பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் பிற அரசியல் தலைவர்களைப்போல் ஒரு சராசரி மனிதர்தான். இவருக்குப் பிறகு பிறரால் எழுதப்பட்ட குரான் என்ற புத்தகத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அவ்வளவே!!!

   • நண்பரே, உங்களுடைய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா? முகம்மது நபி இறைவன் அல்ல. அவர் இறுதி தூதர். உங்கள் கருத்தில் தெளிவாக குறிப்பிடவும். தூதர் (pbuh ) உலகத்தை ஆளவோ அல்லது பதவிக்கு ஆசைப்பட்டோ போர் தொடுக்கவில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவே போர் தொடுக்க வேண்டியதாக இருந்தது. நிறைய போர்களை தடுக்க உடன்படிக்கைகளையும் செய்து கொண்டார். அவருடைய காலத்தில் 28 போர்கள் நடந்தது. அதில் மொத்தம் உயிர் இழப்பு இரண்டு பக்கமும் சேர்த்து 1.5% மட்டுமே.

    போரை தடுக்க இயலாத அந்த கால கட்டத்தில், கொடூரமாக போர்களும், தண்டனைகளும் தந்து கொண்டு இருந்த அந்த காலகட்டத்தில், நபிகள் நாயகம் போர்களத்தில் நிறைய கட்டுபாடுகளை முஸ்லிம்களுக்கு விதித்தார். போர்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும், நிழல் தரும் மரங்களையும், வயதானவர்களையும் தீங்கிழைக்க கூடாது என்றார்.

    “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” குரான் 5:32

    அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.

    போரில் காயப்பட்டவர்களை கொல்வதையும், பயந்து ஓடியவர்களை துரத்தி சென்று கொல்வதையும் தடை செய்தார்கள். போருக்கு வருபவர்களை மட்டுமே எதிர்த்து போரிட சொன்னார். அவர்கள் மன்னிப்பு கோரினால், அவர்களை விட மட்டும் அல்ல, அவர்களை பத்திரமாக அழைத்து சென்று ஆபத்தில்லா இடத்தில் விடுவதும் முஸ்லிமின் கடமை என்றார்.

    • குர்ஆனில் எந்த வரிகளில் நீங்கள் கீழே குறிப்பிட்டது உள்ளது. தோற்றவர்களின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வந்து முஸ்லீம்கள் அனுபவிப்பதற்கு குர்ஆனில் அனுமதிக்கப்பட்டுள்ளதா அல்லது அது தடை செய்யப்பட்டுள்ளதா. அடிமைப் பெண்களையும், போரில் பிணையக்கைதிகளாகப் பிடிபட்ட பெண்களையும் கற்பழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்கிறார்களே, அதற்கு உங்களின் விளக்கம் என்ன? இஸ்லாத்தைப் பற்றியும், குரானைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன் அவ்வளவு தான். இந்த சின்னச் சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் பதிலையறிய, எல்லோராலும், மண்ணடிக்குப் போக முடியாது. 🙂

     //அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.//

     • நீங்கள் குற்றம் கூறினால், அதை நிரூபிக்கவேண்டியது உங்களுடைய கடமை. குர்ஆனில் இருப்பதை சுட்டிக்காட்டி கேட்டால், விளக்கமளிக்கலாம். குர்ஆனில் இல்லை என்று நிருபிக்கசொன்னால் நான் எப்படி செய்வது. உங்களுக்கு உண்மையிலயே குரானை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால், குர்ஆனில் அத்தியாயத்தையும், வாக்கியத்தையும் கொடுங்கள். இறைவன் நாடினால், எனக்கு அதை பற்றிய ஞானம் இருந்தால், நான் விளக்கம் அளிக்கிறேன்.

  • 5187. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
   நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் சகஜமாகப் பழகுவதையும் தவிர்த்து வந்தோம். (அவ்வாறு பழம், தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு) விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; சகஜமாகப் பழம்னோம்.
   Volume :5 Book :67

 8. Univerbuddy,

  முதலில் உங்கள் உண்மையான பெயரில் கமெண்ட் செய்ய துணியுங்கள். போலி பெயர்களில் ஒளிந்து கொண்டு மற்றவர்களை கேலி செய்வது ஆறரிவு படைத்த மனிதனுக்கு அழகு இல்லை.

  //பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?//

  இதோ ஆதாரம்: http://www.daruliftaa.com/node/5696?txt_QuestionID

  மருத்துவம் செய்ய கூடாது என்று உங்களால் காட்ட முடியுமா?

  //இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)//

  குரானும் ஹதீசும் மற்ற மத நூல்களை போல மனிதர்களால் காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற முடியாது. அது உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் ஆகாது.

  //முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.//

  மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. குரான் மற்றும் சஹிஹ் ஹதீஸ் இருந்து நீங்கள் கேள்வி கேளுங்கள். நீங்கள் கொடுத்தா லிங்க் போல என்னால் ஆயிரம் லிங்க் மற்ற மதத்திலும் கொடுக்க முடியும். அப்படி செய்ய சொல்லி குரானில் இருக்கிறது என்று காட்டுங்கள்.

  முடியாது என்றால் முதலில் குரானில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களை படைத்தவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

 9. Univerbuddy,

  நீங்கள் கொடுத்தா லிங்கை முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை. உங்கள் எல்லா கேள்விக்கும் சகோதரர் ஒருவர் பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறார். முதலில் அதை படியுங்கள். பிறகு சிந்தயுங்கள். அதற்கு பிறகு கேள்வி கேளுங்கள்.

  விடண்டவாதம் நேரத்தை மட்டுமே வீணாக்கும்.

  • //மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ///

   முஸ்லீமாகப் பிறந்து, முஸ்லீமாக வளர்ந்து இஸ்லாத்தை விட்டு விலகி இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் செல்வி. Ayaan Hirsi Aliயின் நேர்காணலை, விவாதங்களையும் பேச்சுகளையும் ஜனாப். அமீன் அவர்கள் பார்க்கவில்லை போல் தெரிகிறது. உண்மையில் வஹாபியத்தையும், தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கலையும் தமிழ்நாட்டில் ஊக்குவித்து, தமிழர்களுக்கும், ‘இன்று’ தம்மைத் தமிழர்களாக நினைக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்குமிடையே ஒரு நிரந்தர மொழி, கலாச்சார இடைவெளியை ஏற்படுத்தும், தமிழ் முஸ்லீம் வஹாபிகள், செல்வி. Ayaan Hirsi Ali போன்றவர்களுடன் வாதாட வேண்டும், அல்லது அவரைப் போன்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, இஸ்லாம் தான் சமாதானத்தின் மார்க்கம், உலகின் உன்னத மார்க்கம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு கூறுவதில் பயனில்லை. அப்படியான உளறல்களைப் பார்க்க சிரிப்பு தான் வருகிறது. எல்லோருக்கும் தான் அவரவர்களின் மார்க்கம்/மதம் உத்தமமானது, அதனால் தான் அவர்கள் அந்த மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எப்பவோ “உன்னதமான” இஸ்லாத்தை நோக்கி ஓடிப்போயிருப்பார்கள் அல்லவா? 🙂

   Islam is a Religion of Peace? Intelligence Squared Debate

  • Ameen,

   //முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை//

   Did you read the debate upto the end? சகோதரர் ஒடிவிட்டார் பாருங்கள்.

   • நான் ஒவ்வொன்றாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன். நீங்கள் நான் ஓடிவிட்டேன் என்று கூறுகிறீர்கள். அனைத்து விளக்கத்தையும் படியுங்க. நான் சத்தியத்தில் இருக்கும் போது எதற்காக ஓடவேண்டும்.

 10. mohamedians!!! why can’t you answer straightly.. you religion is extremely fundamental not suitable for every application in real life..it is a failed one. Human are more valuable then you religion and sharia law. Answer straight a life is lost because of stupid law tell me if saudi law is based on islam or not, if not then is Saudi an atheist nation or muslim nation? The holiest place for islam acts on islamic law or not? answer straight… Sometimes your islam orthodoxy looks absurd but it possess grave effects on innocent people.

 11. the real problem with Muslims is they do not use their brain to analyze what given in their book is right or wrong, they strictly believe someone has done entire thinking for all of. them 1000 years before itself. so they just exist, human society progress by thinking. Ask, seek, analyze… In your case it is degeneration of thinking ability for over 1000 years. What separates human from other mammals is this ability to think,, your man mohammed nabi is a great finest thinker..!!! he create a religion to discipline people around him, he did well,, but what resulted is all his teachings are now expired not applicable to this day…

 12. தவறாக சித்தரிப்பது சரியாகுமா?
  ?..
  …………………………………………….
  அடிப்படைவாதம் என்பதைத் தவறான கருத்தியல்போல் சித்தரிக்கும் ஃபாசிச சதியைப் பகுத்தறிவுத்தோழர்களும் ஆதரிப்பது ஆச்சர்யமாக உள்ளது…

  மார்க்ஸிய அடிப்படைகளை ஒருவர் உறுதியாக நம்பி அதன் படி செயல்பட்டால் அவர் மார்க்ஸிய அடிப்படைவாதி, அவ்வாறே பெரியாரியல், உள்ளிட்ட அனைத்து இயல்களுக்கும் இது பொருந்தும்.

  இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகளை உறுதியாக நம்பி அதன் படி செயல்படும் யாவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே…
  அதைத் தவறாக சித்தரிப்பது சரியாகுமா?

  மூடத்தனம், பெண்ணடிமைத்தனம், இன இழிவு, மொழிவெறி, குலவெறி, அறிவியலை எதிர்த்தல், புரோகிதம் வளர்த்தல், மதத்தை நிறுவனமாக்கி உழைக்காமல் உண்டுகொழுக்க வழி தேடுதல்,
  உள்ளிட்ட சமூகச்சீரழிவுகளை அடியோடு எதிர்த்தழித்த மார்க்கம் இஸ்லாம்..

  முல்லாக்கள் தங்கள் மூடச்செயல்களுக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டால் உடனே அதை இஸ்லாமிய கோட்பாடாக நம்பி,
  அடிப்படைவாத ’வஹாபி’களுக்கு எதிராகப் போராடுவோம் என்பது எப்படி சரியாகும்.

  மூடசடங்குகளை முற்றாக எதிர்க்கிற நம்மையும் தான், புரோகித முல்லாக்களின் போர்வைக்குள் நின்று போர்செய்யும் நண்பர்கள் வஹாபி என்கின்றனர்..

  வஹாபி என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர்கள்
  மூர்க்க முல்லாக்களோடு,
  இஸ்லாமை அதன் தூய முற்போக்கான வடிவில் எடுத்துரைப்போரையும் இணைத்துச் சாடுவதன் மூலம் யாருக்கு ஆதரவான அரசியலை நடத்துகிறார்கள் என்பதை நண்பர்கள் உணர வேண்டும்….

  இஸ்லாமின் முதன்மை அடிப்படையான குர் ஆனில் பிற்போக்குக் கருத்துகள் இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுமானால் அறிவார்ந்த முறையில் விவாதிக்கலாம்…

  முல்லாக்களின் மூடத்தனங்களும், மூர்க்கத்தனங்களும் இஸ்லாமியக் கோட்பாடாகி விட முடியாது…

 13. அமீன்,

  உஸ்மானின் ஏழு குரான்களைப் பற்றி படித்ததில்லையா ? 70 ஆயிரம் ஆதீசிலிருந்து 7 ஆயிரத்துக்கு குறைத்ததும் உங்களுக்கு தெரியாதா ?

  • குரானின் மொழிபெயர்ப்பும் ,குரானின் ஆதார முதுகெலும்பான அடைப்புக்குறிகளும் காலத்துக்கு காலம் மாறுபடும்.மருத்துவத்தில் ஒரு புது கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளதா?அதையும் குரான் அப்போதே சொன்னது என்கிற ரீதியில் அந்த வசனங்களின் அர்த்தம் மாற்றப்படும்.அதே போல புவியியல் மற்றும் பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு தக்கவாறு வசனங்கள் மாற்றப்பட்டு நாங்க அப்பவ சொன்னோமே என்று மார்தட்டுதல் குபீர் காமெடிதான் !!!எல்லா இசுலாமியனும் ஏற்றுகொள்ளும் ஒரு குரான் பதிப்பை இவர்களால் காட்டவே முடியாது என்பதுதான் உண்மை!

 14. இது அனைத்துக்கும் நான் என்னுடைய முதல் பதிவிலியே பதில் சொல்லி விட்டேன். இன்டர்நெட்டில் இஸ்லாத்திற்கு எதிராக தேடினால் இதுபோல் ஆயிரம் லினக்ஸ் கிடைக்கும். பணத்திற்கும் புகழிற்கும் தங்கள் மார்க்கத்தை விற்பவர்களை பற்றி பேச வேண்டுமானால், பேசிக்கொண்டே போகலாம்.

  7 குரான் பற்றி சொல்லும் nandan அவர்களே, அந்த 7 குரானில் எங்கு நீங்கள் வித்தியாசம் பார்த்தீர்கள்? உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்று கூறுங்கள். எதாவது ஒரு சைட் படித்துவிட்டு இங்கே கமெண்ட் செய்யாதீர்கள்.

  david bill
  //you religion is extremely fundamental not suitable for every application in real life// குரானில் இருக்கும் எந்த கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லை என்று சொல்லுங்க. பிறகு அதை பற்றி பேசலாம்.

  //a life is lost because of stupid law // எத்தனை தடவை சொன்னாலும் ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன்கிறது அல்லது புரிய வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த சட்டம் குரானில் இருக்கிறது என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

  பழுத்த மரம் கல்லடி படும் என்பதற்கு ஏற்ப இஸ்லாத்தை பற்றி குறை கூற வேண்டுமானால் அனைவருக்கும் ஹல்வா சாப்பிடுவது போல் இருக்கும் போல இருக்கு. இதிலாவது ஒற்றுமையை இருக்கிறீர்களே.. சந்தோசம்.

  இஸ்லாத்தில் குறை கண்டு பிடிக்க செலவழிக்கும் உங்கள் நேரத்தை, இஸ்லாம் மற்றும் நபி அவர்கள் பற்றி உண்மை தெரிந்து கொள்ள செலவிடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர் வழி காட்டட்டும்.

  நீங்கள் ஒரு site ஆதரமாக காட்டினால், இஸ்லாத்திற்கு வந்த 1000 பேர்களை என்னால் அதே இன்டர்நெட்டில் காட்ட முடியும். நீங்கள் இஸ்லாத்தை பற்றி உண்மை தெரிந்து கொள்ள திறந்த மனதுடன் படியுங்கள். இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.

  • இசுலாமில் ஒருவன் சேர்ந்தால் “ஆகா இசுலாத்தால் அந்த நபருக்கு பெருமை” என்று மார்தட்டுகிறீர்கள்.அதே நேரம் இசுலாமியன் ஒருவன் ஜல்சா வேலைகள் செய்து மாட்டிக்கொண்டால் அது தனி நபர் சம்மதபட்டது இசுலாதுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லைன்னு ஜகா வாங்குறீங்க…இது என்னவகையான புரிதல்?
   ..
   .
   இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.////..
   அப்படி காட்டி இருந்தால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இசுலாமிய நாடுகளில் போலீசு ராணுவம் என்று எந்த தேவையும் ஏற்பட்டிருக்க கூடாதே!!உடனே மற்ற மத சிறுபான்மையினர் செய்யும் தவறுகளுக்காக அவை உள்ளன என்று எல் கே ஜி ஜோக் எல்லாம் அடிக்கபடாது!!!

   • islaatthil oruvar servathaal islaatthitkku evvitha uyarvum illai thaalvum illai , vendum endraal islaamiya sattathittankalai pinpatruvathaal avar menmai peralaam. aal sertthu palam kaamikka ithu katchi alla anbare!!!

 15. ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது, இந்த காலத்திற்கு ஏற்பு இல்லை என்கிறார். இது என்ன காமெடி பாஸ்.

  முதலில் உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். பிறகு, உங்கள் கேள்விகளை கேளுங்கள். வெறும் போகிற போக்கில் கேள்விகள் கேட்காமல், உங்கள் கேள்விகளை குரானிலிருந்து ஆதரமாக கேளுங்கள். பிறகு பதில் சொல்கிறேன்.

  if you are atheist then view this: http://www.youtube.com/watch?v=oTGeuVzuBw0

  if you are hindus then view this: http://www.youtube.com/watch?v=ROhEs09ifE0

  if you are christians/jews then view this: http://www.youtube.com/watch?v=7OEU9B3V-Fg

  நான் இது எல்லாம் பார்க்க மாட்டேன். யாரு சொன்னாலும் கேட்ட மாட்டேன். தான்தோன்றி தனமாகத்தான் இருப்பேன் என்று சொன்னால், உங்களுடைய விடண்டவாத கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை.

  இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும். குற்றம் கண்டு பிடிக்க கேள்வி கேட்டால், நம் இவருடைய நேரம் தான் வீணாகும்.

  • அதற்கு முன் சவுதி அரேபியாவில் சரியத் முறைப்படி ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் சொல்லுங்கள்.

  • ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது////
   .
   .
   சரி சொல்லுங்கள் எந்த ஒரு குரானின் மொழிபெயர்ப்பை அனைத்து இந்திய இசுலாமியர்களும் ஒருமனதாக ஏற்றுகொள்கிரீர்கள்??

   • குரானை பற்றி தெரிந்து கொள்ள அதன் உண்மையான கிரந்தத்தை படிக்கவேண்டும். மொழி பெயர்த்தவர்கள் மனிதர்கள். அவர்களுடைய அறிவு, மொழி ஞானம் அனைத்தும் மாறுபடும். ஒருவருடைய மொழி பெயர்ப்பு இன்னொருவருடைய மொழி பெயர்போடு சரியாக இருக்காது.

    இது அந்த மக்களின் ஞானத்தை பொருட்டு அமையும். இதனால், குரான் மாறிவிட்டது என்பது அறிவான சொல் இல்லை.

    இதனாலேயே, குரான் அதன் தாய் மொழியில் மனனம் செய்யப்படுகிறது. மொழி பெயர்பில் இல்லை.

    மறுபடியும் அரபி சிறந்ததா அல்லது தமிழ் சிறந்ததா என்று ஆரம்பிக்க வேண்டாம். மொழிகள் அனைத்தும் சமமே.

 16. உங்கள் பிரச்னை சவுதி ஷரியா சட்டம் நடைமுறையில் இருப்பதிலா அல்லது ஷரியத் சட்டத்தில் பெண்களுக்கு அவசர நேரத்தில் மருத்துவம் பார்க்க ஆண்களுக்கு அனுமதி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதிலா?

  என்னுடைய பதில், சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது. சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு மாற்றமாக செல்கிறார்கள். இது மனிதர்களின் தீய செயலே அன்றி ஷரிய சட்டம் அனைவருக்கும் சமமே..

  இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள் அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால், அவசர நேரத்திலோ அல்லது நிர்பந்தத்தினாலோ ஒருவர் அந்த சட்டத்தை மீறினால் அது அவர்கள் மீது குற்றமாகாது.

  இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை.

  அது என்ன அடிப்படைவாதி? இதற்கு வினவு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். இங்கே தமிழ் அடிப்படைவாதிகள் இருக்கலாம், நாத்திக அடிப்படைவாதிகள் இருக்கலாம் ஆனால் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றினால், உடனே அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவதிகளா?

  அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.

  நான் திருட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பொய் சொல்ல மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பெண்களின் தரம் குறைய விட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, அனைவரையும் சகோதரர்களாக எண்ணுவேன் என்பதில் அடிப்படைவாதி, அதே போல இஸ்லாம் என்னுடைய மார்க்கம் என்பதிலும் அடிப்படைவாதி. இதில் தவறு என்ன இருக்கிறது?

  • இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை. //
   .
   .
   நான் ஏற்கேனவே சொன்ன கருத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தமைக்கு நன்றி இதற்கு மேல் விவாதிக்க ஒன்றுமில்லை!
   .

  • சவுதி அரேபியா
   இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
   இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

   இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்

   மேலும் சில விசயங்கள்

   ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம் செய்யும் ஷேக்குகளுக்கு என்ன தண்டனை ?
   க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்/

   ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால்
   ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்

   பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி
   விளக்கவும்.

 17. //அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.//
  முஸ்லீமாகிய உங்களுக்கு, வஹாபியிசம், வஹாபிகள், வஹாபி யார் என்பது எதுவுமே தெரியாதா? உண்மையில் வஹாபிகள் யார், அந்த வஹாபிகளுக்கும், உங்களைப் போன்ற முஸ்லீம்களுக்கும் வேறுபாடு உண்டா அல்லது எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானா என்பதை எல்லாம், உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் விளக்க வேண்டும்.

 18. nagaraj அவர்களே,

  //இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
  இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

  இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்//

  அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா? இஸ்லாத்தில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விளக்கலாம். தனி மனிதனுடைய செயல்களுக்கு (அதிகாரிகள் உட்பட) இஸ்லாத்தை பொருப்பாக்காதீர்கள்.

  //க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்//
  இந்த திருமணங்களும் இஸ்லாத்தின் படி விபச்சாரமாகவே கருதப்படும். இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
  கட்டாய திருமணத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கட்டாய திருமணம் இஸ்லாத்தில் செல்லாது.
  நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள குரான் மற்றும் சஹீஹ் ஹதீஸ் பாருங்கள். முஸ்லிம்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள்.

  //ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால் ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்//
  இந்த செய்தி எனக்கு தெரியாது. நீங்கள் படித்த லிங்க் அனுப்புங்கள். பிறகு இஸ்லாத்தின் பார்வை சொல்கிறேன்.
  இன்னொரு விஷயம், பத்திரிகைகளில் வரும் அனைத்தும் உண்மை அல்ல. TRP ரேட்டிங் ஏற்ற இவர்கள் பல பொய்கள் சொல்வது புதிதல்ல.

  //பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி விளக்கவும்.//
  இப்போது தான் நீங்கள் சரியான கேள்வி கேட்டு உள்ளீர்கள்.
  இஸ்லாத்தின்படி ஆணும் பெண்ணும் சமம் ஆனால் ஒன்று இல்லை (equal but not same).
  அல்லாஹ் ஆணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும், பெண்ணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும் கொடுத்துள்ளான். இதில் எற்ற தாழ்வுகள் இல்லை. படைத்தவனுக்கு அவனுடைய படைப்புகளின் பண்புகள் தெரியாதா?
  அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை?

  இஸ்லாம் பெண்களுக்கான எல்லா செலவுகளையும் ஆண்களே செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இதை நீங்கள் ஆண் அடிமைத்தனம் என்று சொல்வீர்களா?

  • சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது

   ஆனால்

   அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா?

   இது எப்படி சாத்தியம்

    • //95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது//

     ஆனால்

     //அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லை///

     இது எப்படி சாத்தியம்

     • அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய நலனுக்காக சட்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால்,

      நம் நாட்டில் நீங்கள் சிவப்பு விளக்கில் நிக்காமல் சென்றால் அபராதம் கட்ட வேண்டும். அதே ஒரு காவலர் நிக்காமல் சென்றால், எந்த அபராதமும் இல்லை. இது நம்முடைய ஜனநாயக சட்டம் சரி இல்லை என்று பொருளா? அல்லது அந்த காவலருடைய தவறா?

      இப்போது புரிகிறதா?

      • அப்புறம் ஏன் 95% சரியத் சட்டம் சவுதியில் அமலில் உள்ளது என்கிறீரகள்

       • சவுதி அரேபியாவில் 100% ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் 5% அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்த மறுக்கிறார்கள். நான் இந்த பொருளிலேயே சொன்னேன்.

       • நீங்க ரொம்ப நல்லா குற்றம் கண்டுபிடிக்கிறீங்க. கீப் இட் அப்.

  • // அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை? //

   ஏன் பெண்களுக்கு மட்டும் மறந்துவிடும் என்று இஸ்லாம் கூறுகின்றது? ஆண்களுக்கு மறதி கிடையாதா? ஆண்களுக்கு நினைவூட்டுவதற்கு யாரும் தேவையில்லையா?

   • The Quran in Sura 2:282 says:

    And let two men from among you bear witness to all such documents [contracts of loans without interest]. But if two men be not available, there should be one man and two women to bear witness so that if one of the women forgets (anything), the other may remind her.

    It is 2 men on first hand. Hope this answers your question.

 19. .டேவிட் பில் ///, but what resulted is all his teachings are now expired not applicable to this day…////

  முஹம்மது நபிசல் அவர்கள் கற்றுத்தந்தவை இப்போது பொருந்தாது எது என்று ஒன்றை சொல்லுங்கள் .

  வியாசன் ஹிர்ஷி அலியின் விமர்சனங்கள் ,அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .
  உங்களுக்கு அவரது எந்த விமர்சனத்துக்கு பதில் வேண்டும் சொல்லுங்கள்

  • அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .

   எப்போது??????????????????????????????????????????????????????????? அவர் இன்றும் வாதத்துக்கு தயாராக இர்ருகிறார் . ஆண்மையுள்ள முஸ்லிம் கருது பதிவோடு விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் . எப்போது நீங்கள் அவரை விவாதத்தில் தோற்கடிதீர், புளுகுவதர்ட்ட்கும் ஒரு அளவு வேண்டும் இப்பு 😛

    • //Dr. Zakir Naik believes in having public debates and letting the audience be the judge. Alhamdulillah Ali Sina has declined for a face to face debate in front of a camera on public place even though Dr. Zakir Naik does not consider him worth debating.//

     ali sina quote as below

     I am sure people can see that Dr. Naik uses haughtiness and pomposity as a shield to protect his image. He is more aware than his fans of his limitations. Every day Muslims are writing to declare they have left Islam because of the information they got in this site. If Dr. Naik truly cared about Islam and the truth he would have come to the defense of his faith even if he thinks I am not worthy of his super inflated, ego loaded stature.

     அது என்ன பொது விவாதம் நேருக்கு நேராக மட்டுமே என்ற கொள்கை?? அலி சிணவோடு இணையத்தில் வதிட்டிருக்கலாமே? உங்களுக்கு நேருக்கு நேராக மட்டும் என்ற கொள்கை இருக்கும் பொது ஆதாரப்படுதளுக்காக இன்னையத்தில் மட்டுமே விவாதம் என்ற கொள்கையை அலி சினா கொண்டிருக்கிறார் என்பதை கூட அறியமாடீர்களா?

 20. //இஸ்லாத்தின்படி ஆணும் பெண்ணும் சமம்//
  இஸ்லாத்தின் படி ஆணும் பெண்ணும் சமம் என்று குர்ஆனில் எந்த வரிகளில் கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன். நன்றி.

  • Bro, Below are some of the quranic verses which tells the equality between Men and Women and in some cases how Women are honored. You have to remember Quran teaches these when Bible says “Women doesn’t have soul” and in India “Women are burned alive if widow in the name of SATI”

   “And the believers, men and women, are protecting friends one of another; they enjoin the right and forbid the wrong, and they establish worship and they pay the poor-due, and they obey Allah and His messenger. As for these, Allah will have mercy on them. Lo! Allah is Mighty, Wise.” [Al-Qur’an 9:71]

   “And they (women) have rights similar to those of men over them in a just manner.” [Al-Qur’an 2:228]

   “Whoso does an ill deed, he will be repaid the like thereof, while whoso does right, whether male or female, and is a believer, (all) such will enter the garden, where they will be nourished without stint.” [Al-Qur’an 40:40]

   “And of His signs is this: he created for you spouses from yourselves that you might find tranquillity in them, and he ordained between you love and mercy. Lo, herein indeed are signs for folk who reflect.” [Al-Qur’an 30:21]

   ” … But consort with them in kindness, for if you hate them it may happen that you hate a thing wherein Allah has placed much good.” [Al-Qur’an 4:19]

   ” … and covet not the thing in which Allah has made some of you excel others. Unto men a fortune from that which they have earned, and unto women a fortune from that which they have earned. (Envy not one another) but ask Allah of his bounty. Verily! Allah is knower of all things.” [Al-Qur’an 4:32]

   “And those who launch a charge against chaste women, and produce not four witnesses (to support their allegations) – flog them with eighty stripes; and reject their evidence ever after: for such men are wicked transgressors.” [Al-Qur’an 24:4]

   “And their Lord has heard them (and he says): Verily! I suffer not the work of any worker, male or female, to be lost. You proceed one from another.” [Al-Qur’an 3:195]

   “And whoso does good works, whether of male or female, and he (or she) is a believer, such will enter paradise and they will not be wronged the dint in a date stone.” [Al-Qur’an 4:124]

   “Whosoever does right, whether male or female, and is a believer, him verily we shall quicken with good life, and We shall pay them a recompense in proportion to the best of what they used to do.” [Al-Qur’an 16:97]

 21. இந்தக் காணொளியைப் பார்க்கும் போது முஸ்லீம் பெண்கள், அதுவும் தமிழ் முஸ்லீம் பெண்கள், இந்தியாவில் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது வரலாற்றின் அடிப்படையிலும், எமது தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படையிலும் தமது உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய தமிழ்நாட்டுப் பெண்கள், அவர்களது முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக, தமது வாழ்க்கை சம்பந்தமான அடிப்படை உரிமைகளில் கூட, வீட்டை விட்டு வெளியே வந்து தமது விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்க முடியாமல், ஒரு சில அன்னிய ஆண்கள் ஜமாஅத்தில் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், என்ற எண்ணம் முஸ்லீமல்லாத தமிழர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

  http://www.youtube.com/watch?v=v9z7lRB4gQ8

  சூடானிலும் சவூதி அரேபியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், ஏனைய முஸ்லீம் நாடுகளிலும் முஸ்லீம் பெண்களின் நிலை என்ன என்பதை பின்பு பார்ப்போம். உண்மையிலேயே இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். பெண்களுக்கு சமவுரிமை என்ற விடயத்தில் முஸ்லீம் பெண்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, அவர்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றால், எதற்காக எமது தமிழ் முஸ்லீம் சகோதரிகள் உரிமை கேட்டுத் தமிழ்நாட்டில் போராடினார்கள்.

  http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_12.html

  • //அவர்களது முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக//

   இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இங்கே தமிழ் நாட்டில் பெண்கள் மேலாடை அணிவதும் குற்றம் என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இஸ்லாத்தில் பெண்கள் கண்ணியபடுதப்படுகிறார்கள் என்பதற்காக இஸ்லாம் நோக்கி மக்கள் வந்தனர் என்பதே உண்மை.

   இங்கே கணவனை இழந்த கைம்பெண்கள் உடன் கட்டை ஏற்றி எரித்தது உங்களுக்கு தெரியாதா அல்லது மறந்து விட்டதா?

   நீங்களில் குரானிலிருந்து ஒரு இடத்தை சுட்டிகாட்டி இது பெண்களுக்கு எதிரானது என்று கூறுங்கள் பார்போம்?

   • //இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இங்கே தமிழ் நாட்டில் பெண்கள் மேலாடை அணிவதும் குற்றம் என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இஸ்லாத்தில் பெண்கள் கண்ணியபடுதப்படுகிறார்கள் என்பதற்காக இஸ்லாம் நோக்கி மக்கள் வந்தனர் என்பதே உண்மை.///

    இது உண்மையானால், தமிழர்கள் எல்லோரும் இப்பொழுது முஸ்லீம்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட மாநிலமாக இருந்திருக்கும். மேலாடை அணிவதற்காக மதம் மாறியவர்கள், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு வஹாபிகள் அவர்களின் பரம்பரையினரை கண்ணைத் தவிர எல்லாவறையும் வரிந்து கட்டி, அரேபியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்துவார்கள் என்று தெரிந்திருந்தால், மதம் மாறியிருப்பார்களா என்பது சந்தேகமே. இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்கள் அனைவரும் ஒரேமாதிரி சீருடை அணிய வேண்டுமென்றோ அல்லது அரபுக்கள் மாதிரி ஆடை அணிய வேண்டும், அல்லது அரபுக் கலாச்சாரத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றோ, திருக்குரானில் எந்த வரியிலும் கூறவில்லையாம்.

    அவை ஒருபுறமிருக்க, மேலாடை அணிவதற்காக தான் தமிழர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தார்கள் என்றால், அதாவது அந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து தான் தமிழர்கள் மதம் மாறினார்கள் என்றால், இன்றைக்கு அந்த துணிச்சல் மிக்க தமிழ்ப்பெண்களின் பரம்பரையில் வந்தவர்கள், தமது குடும்ப, உணர்வு சம்பந்தமான பிரச்சனைகளைக் கூட வெளியில் போய் பேசி, தமது பக்க நியாயத்தை, தமது உள்ளக் கிடக்கையை எடுத்துக் கூற முடியாமல், அவர்களின் குடும்ப பிரச்சனையில் சில வெளியாட்கள்(ஆண்கள் மட்டும் கொண்ட ஜமாஅத்), அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது மட்டுமன்றி, அவர்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பது போன்ற கொடுமை வேறெதுவுமிருக்க முடியாதல்லவா?

    //இங்கே கணவனை இழந்த கைம்பெண்கள் உடன் கட்டை ஏற்றி எரித்தது உங்களுக்கு தெரியாதா அல்லது மறந்து விட்டதா?///

    வட இந்தியாவில் தான் அது பரவலாக வழக்கத்தில் இருந்தது. அந்தக் கைம்பெண்கள் உடன்கட்டையேறித் தமது உயிரை மாய்த்துக் கொண்டதே, எங்கிருந்தோ படையெடுத்து வந்து, தமது நாட்டைப் பிடித்த முகலாயர்களின் கைகளில் பட்டு சீரழியாமலிருக்கத் தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அது மட்டுமல்ல, பால்ய விவாகங்கள் கூட முகலாய காமுகர்ளிடமிருந்து தமது பெண்குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ள, அதாவது முகலாயர் காலத்தில் தான் பெரியளவில் நடைமுறையில் வந்தது என்றும் கூறுகின்றனர். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.

    //நீங்களில் குரானிலிருந்து ஒரு இடத்தை சுட்டிகாட்டி இது பெண்களுக்கு எதிரானது என்று கூறுங்கள் பார்போம்?///

    ஒன்றல்ல, பல இடங்களை என்னால் காண்பிக்க முடியும். இந்த விவாதத்தை நான் தொடர்ந்தால், இங்குள்ளவர்கள் எனக்கு இந்துத்துவா பட்டம் சூட்டி, பூணூலும் போட்டு, போதாதற்கு பாட்வாவும் அறிவித்து விடுவார்கள். எனக்கு இஸ்லாத்திலோ அல்லது எந்த மதத்திலும் வெறுப்பில்லை. இஸ்லாத்தில் பல நல்ல விடயங்களும் உண்டு என்பது எனக்கும் தெரியும், ஆனால் இந்து மதத்தைப் போல் எந்த மதத்திலும் சுதந்திரம் கிடையாது.

    இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றால் எதற்காக, பெற்றோரின்சொத்தில் பெண்களை (மகள்களை) விட ஆண்களுக்கு (மகன்களுக்கு) இரண்டு மடங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தான் இஸ்லாத்தில் பெண்களாய் சமமாக நடத்தும் லட்சணமா?

    (4:11. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்………

    4:11. Allah instructs you concerning your children: for the male, what is equal to the share of two females……..)

    இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்கப்படி, அதாவது யாழ்ப்பாண மக்களின் தேசவழமைச் சட்டத்தின் படி, பெண்களுக்கு ஆண்களை விட சொத்தில் கூடிய பங்குண்டு. அதாவது குடும்ப வீடும் (family home) காணியும் மூத்த மகளுக்குத் தான் சீதனமாகக் கொடுக்கப்படுமே தவிர மகனுக்கல்ல. அதை விட ஏனைய சொத்துக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்குண்டு. மகளுக்கு வீட்டைக் கொடுத்து, எமது முன்னோர்கள், பெண்களின் பாதுகாப்பை, அதாவது தமது பெண் குழந்தைகள் ,தலைக்கு மேல் கூரையில்லாமல், நடுத்தெருவுக்குப் போக வேண்டிய நிலைமை வராமலிருக்க உறுதிப்படுத்தினார்கள்.

    • //இந்து மதத்தைப் போல் எந்த மதத்திலும் சுதந்திரம் கிடையாது. // ஆமாமாம் , யாரு வேணும்னாலும் கோவிலுக்கு போகலாம், யாரு வேணும்னாலும் கோவில் அர்ச்கனாக ஆகலாம், எல்லாரும் குளத்தில் நீர் எடுக்கலாம், யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆகா என்ன ஒரு சுதந்திரமான மதம்.

     • இந்து மதத்திலும் நிறையத் தவறுகள் உள்ளன. அவை களையப்பட வேண்டும்.

     • யார் வேண்டுமானாலும் இந்து மதத்தை விமர்சனம் செய்யலாம், விவாதிக்கலாம், கோயில் சிலைகளை அவமதிக்கலாம். யாரும் பாட்வா அறிவிக்க மாட்டார்கள். அந்த பொறுமையையும், தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் இந்துக்களின் சகிப்புத் தன்மையையும் எந்த மதத்திலும் காணமுடியாது.

      இஸ்லாத்திலும் எல்லோரும் பள்ளிவாசலுக்குள், தொழுகை நடைபெறும் இடத்துக்குள் நுழைந்து விட முடியாது. காபிர்கள் ‘ஒளு’ செய்யும் தொட்டியில் கழுவி, அதைத் தீட்டுப்படுத்த விடமாட்டார்கள். முஸ்லீமல்லாத, அஸ்வின் போன்ற காபிர்கள் எந்த முஸ்லீம் பெண்ணையும், முஸ்லீமாக மதம் மாறி, சுன்னத்துப் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. பார்க்கப் போனால், இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் பெரீய வேறுபாடுகள் எதுவும் கிடையாது போல் தெரிகிறது. 🙂

      • //அஸ்வின் போன்ற காபிர்கள் எந்த முஸ்லீம் பெண்ணையும், முஸ்லீமாக மதம் மாறி, சுன்னத்துப் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. // ஆமாம், முஸ்லிமாக மாறினால் செய்து கொள்ள முடியும் ஒரு தடையும் இல்லை. பொந்து மதத்தில் செய்து கொள்ள முடியுமா. ? பொந்து மதத்தில் சேர்ந்தால் எந்த சாதியில சேத்துப்பீங்க ?

      • //இஸ்லாத்திலும் எல்லோரும் பள்ளிவாசலுக்குள், தொழுகை நடைபெறும் இடத்துக்குள் நுழைந்து விட முடியாது. காபிர்கள் ‘ஒளு’ செய்யும் தொட்டியில் கழுவி, அதைத் தீட்டுப்படுத்த விடமாட்டார்கள்\\ தீட்டு என்பதெல்லம் இஸ்லாத்தி கிடையவெ கிடையாது சொம்ம கதை அலக்காடேர்கல். மனிதனில் உயர்ந்தவன் தால்ந்தவன் இல்ல எஙிர அடிப்படை தட்துவட்தை கொன்டது தான் இஸ்லாத்தி.

   • உதாரணத்திட்கு போரில் வெற்றிபெற்ற இடங்களில் தோல்வியடைந்தசாராரின் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்கள் இறைதூதர் “அற்புதமாகச்” சொல்லியுள்ளார். அவர்களெல்லாம் உணர்வுகளற்ற சடப்பொருட்கள் தானே.

    சொர்க்கத்தில் ஆண்களுக்குப் பல கன்னிப்பெண்கள் கொடுப்பது/கிடைப்பது போல் பெண்களுக்குக் கட்டிளம் காளையர்களைக் கொடுப்பதாக/கிடைப்பதாக மட்டும் சொன்னதாகத் தெரியவில்லை.

    நரகத்தில் அதிகமாகப் பெண்களைக் கண்டது இறைதூதரின் பார்வைக் கோளாறோ அல்லது சொர்க்கத்தில் ஆண்கள் செய்யும் அட்டூழியத்திலிருந்து தப்புவதற்காக பெண்கள் தாங்களாகவே கேட்டுப் பெற்றுக் கொண்டதோ அல்லது தற்செயலாக நடந்த நிகழ்வோ (random event) தெரியவில்லை.

    • 1400வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினருக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது தான் குர்ஆன். அப்போது பெண்களுக்கு ஆண் சமூகத்தில் என்ன மரியாதை இருந்ததோ அதை தான் குர்ஆன் பிரதிபலிக்கிறது.குர்ஆனில் எவ்வளவோ நல்ல விடயங்களும் உள்ளது. அதிலுள்ள சில கருத்துக்கள் இன்றளவும் தேவைப்பட்டாலும், சில கருத்துக்கள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளது. ஒவ்வொரு மதத்திலும், அம்மதம் தோன்றிய காலத்தில் இருந்த மரபுகளின் படி சரியானதாக இருந்தாலும், காலத்தின் மாற்றத்தில் சில கருத்துக்கள் தவறாகின்றன. கிருத்துவத்தில் ஆதாம் ஏவாள் கதை, உலகம் தோன்றிய வரலாறு, இந்து மதத்தில் சதி, குழந்தை திருமணங்கள், சாதி பாகுபாடு, இசுலாமில் பெண் அடிமைத்தனம், சகிப்புத்தன்மையின்மை, இதெல்லாம் காலத்திற்கேற்ப மாறுவதால் மானுடம் பயனடைகிறது. இன்னும் பழைய பாணியில், தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் இருக்கும் விதிகளை அந்தந்த மத குருமார்கள் மாற்றம் செய்ய வேண்டும். எனக்கு இந்து, முசுலிம், கிருத்துவ, பகுத்தறிவு வாதிகள் என்று நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எந்த மதத்தையும் தனிப்பட்ட வகையில் தாக்குவதில் விருப்பம் இல்லை. எனக்கு இந்து, முசுலிம், கிருத்துவ, பகுத்தறிவாளர்கள் என்று எல்லா வகையிலும் நண்பர்கள் உள்ளார்கள். எல்லா மதங்களிலும் உள்ள குறைகளை நீக்க முயற்சிக்கலாம் என்றே வினவுகிறேன்.

     • உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். சகல மதங்களிலும் குறைபாடுகளும் இக்காலத்திற்கு பொருந்தாத விடயங்களும் உள்ளன. அதனை ஏற்றுக்கொள்ளாது எங்கள் மதம் மட்டுமே குறைகளே அற்றது, எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் பீற்றிக்கொள்வது கேலிக்குரியது.

      உதாரணத்திற்கு பின்னூட்டம் 10 இல்:
      //
      குரானும் ஹதீசும் மற்ற மத நூல்களை போல மனிதர்களால் காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற முடியாது. அது உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் ஆகாது.

      மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
      //

      • இதில் நீங்கள் கேலி செய்ய என்ன இருக்கிறது. இது எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டம். மனிதனின் மூளை தன்னுடைய சூழல், மொழி, கலாசாரம், இயற்கை சூழ்நிலை, தான் பார்க்கும் உலகம் இதில் மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது.

       ஆனால், இறைவன் உலகம் அழியும் வரை அதற்கு பிறகும் நடக்கும் அனைத்தையும் அறிபவன்.

       நீங்கள் சொல்வது போல் மாற்ற வேண்டுமானால், உங்களுடைய அறிவு அந்த இறைவனுடைய அறிவைவிட சிறந்ததாகிவிட்டது என்று பொருளா?

       மறுபடியும் குரான் இறைவனுடைய வார்த்தையா என்று வாதாட கிளம்பி விடுவீர்கள் என்று தெரியும். ஏதாவது இணையத்தில் தேடி இங்கே பதிவிடுவதை தவிர்த்து, நீங்கள் உங்கள் சொந்த கேள்விகள் இருந்தால் ஒவ்வொன்றாக கேட்கவும். நான் அனைத்தும் படித்தவன் இல்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். மற்றதை படித்துவிட்டு சொல்கிறேன்.

       உங்களுக்கு நேர்வழி கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவன் நாடினால் நிச்சயம் நேர்வழி பெறுவீர்கள்.

       • உங்கள் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நேர்வழி காட்டுவது இருக்கட்டும். முதலில் அவரையே பின்பற்றிக் கொண்டு பாகிஸ்தானில் தினமும் பல ஷியா முஸ்லிம்களையும் அஹமதியர்களையும் கொன்று குவிப்பவர்களை நேர்வழி காட்டினால் நன்றாயிருக்குமே?

        தன்னைப் பின்பற்றுபவர்களுக்கே நேர்வழி காட்டமுடியாத இறைவனை, அல்லது அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அறியமுடியாத இறைவனை, எல்லாம் வல்லவன் அனைத்தையும் அறிபவன் என்று கூறுவது சுத்த அபத்தமாக இல்லையா?

        • உங்களுக்கு மறுமை வாழ்வில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

         இஸ்லாம் இந்த உலக வாழ்க்கை ஒரு தேர்வு என்கிறது. மறுமை வாழ்வே நிலையான வாழ்க்கை என்கிறது. இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக, ஒருவன் ஏழையாக, ஒருவன் ஆரோக்கியவனாக, ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு.

         குரான் (103:3)
         எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்கள் நஷ்டத்திலில்லை.

         அல்லாஹ் நன்மை, தீமை அனைத்தையும் தெளிவாக மக்களுக்கு காட்டிவிட்டான். இப்போது மக்கள் தங்களுடைய உலக ஆசைகளினால் தங்கள் மதிகெட்டு குழப்பம் விளைவிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் திருந்துவதற்கு சந்தர்ப்பம் இந்த உலகில் கொடுப்பான். அவர்கள் யாராக இருந்தாலும் சரியே.

         அவர்கள் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அவர்களின் பாவம் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். அவர்கள் திருந்தாவிட்டால், மரணத்திற்கு பிறகு இறைவனிடத்தில் சென்றடையும் பொழுது அவர்களது நீதி விசாரணை நடைபெறும்.

         நீங்கள் சொன்ன கருத்தை, இதனோடு ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு இறைவன் நாடினால் உண்மை விளங்கும்.

         //தன்னைப் பின்பற்றுபவர்களுக்கே நேர்வழி காட்டமுடியாத இறைவனை//
         இந்த சொற்களே ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. அவர்கள் உலகில் அநிதி இழைப்பவர்களானால் அவர்கள் எப்படி அல்லாஹ்வை பின்பற்றுபவர்கள் ஆவார்கள்?

         பெயரளவில் முஸ்லிமாக ஒருவன் இருந்தால் அவன் அல்லாஹ்வை பின்பற்றுபவன் என்று எப்படி சொல்ல முடியும். இது மற்ற எல்லா மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொருந்தும்.

         இந்த உலகில் அநிதி செய்பவன் உண்மையில் மறுமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனே. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அவன் இறைவன் நம்பிக்கை இல்லாதவனாகவே கருதப்படுவான்.

         //உங்கள் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நேர்வழி காட்டுவது இருக்கட்டும். //
         இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். அவனே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்தையும் பரிபாலிக்கின்றான். அவனே அனைத்திற்கும் அதிபதி. இதில் உங்கள் இறைவன் என்னோட இறைவன் என்று என்ன இருக்கிறது?

         Allah knows the best.

         • Question no 1

          If a kid of less then age 7 dies , without taking God’s test, how will god judge?
          You cant tell me , he will send the soul to take one more test that means rebirth

          Question no 2

          God who created everything who is supposed to know everything doesnt know what I will do when he created me , doesn’t know what I will do next and he has no control on me in earth. Because it is upto me to take the test and pass or fail.
          And that means , God doesnt know what will happen on earth next. If God doesnt know what will happen next, is he/she/it a god?

          Question no 3
          God doesnot know how to create only good souls. It knows only to create souls and it is upto the souls to become good or bad.
          That means he has no control on creation process.If he cannot control creation process , is he/she/it a god?

          Question no 4
          God will make one soul as Saudi King and another one as Mumbai slum dweller and test. Is that the right way to test?
          If you accept the test, Will you accept your place in soceity and not queation Sudi King? Who are you to queation,it is god, who has made him king

          Question no 5
          If God can create King and slum dweller and test, why your community is not accpeting that God can create a Hindu/Christian and test.
          Why do you think , Gods test will fail. How do you know only muslims are taking test properly?

          Question no 6
          What is the job of God? Judging and punishing the people? Is he running two hotels one for good people and another one for bad people?
          Indeed a good job.

         • //இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக, ஒருவன் ஏழையாக, ஒருவன் ஆரோக்கியவனாக, ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு.// இந்த ஏழைகளை ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்க ,அவர்கள் பணக்கார சுரண்டல்காரர்களை எதிர்த்து கேள்வி எழுப்பாமல் இருக்க சொல்லப்பட்ட கட்டு கதைதான் இது.

         • இஸ்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஆதரிக்காது என்றால், பாகிஸ்தானில் உள்ள சுன்னி முஸ்லிம் மதபோதகர்கள் ஷியா முஸ்லிம்கள் மற்றும் அஹமதியர்களைக் கொல்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று வெளிப்படையாகக் கூறலாமே?

          மேலை நாட்டில் யாருக்கும் சொந்தமில்லாத தற்காலிக இடத்தில் தொழுகைக்கு போகும்போது கூட அஹமதியர்களை தொழுகை செய்யவிடாது விரட்டும் இஸ்லாமியர்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

          அல்லா அனைத்தையும் அறிபவன் என்று கூறிக்கொண்டே இருங்கள். மறுபுறத்தில் அல்லாஹூ அக்பர் என்று ஊளையிட்டுக் கொண்டே அப்பாவிகளைக் கொன்று குவிப்பதுவும் தொடரும். மத அவமதிப்பு (blasphemy) போன்ற பெயர்களில் கேள்விகளுக்கு இடமின்றிக் கொலைகளும் தொடரும்.

       • ///இது எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டம்////

        இந்த இறைவன் எத்தனை ஆண்டுகள் இந்த பூஉலகில் வாழ்ந்தார் என்று கூறுங்கள்!!!
        மனிதர்கள் நுறு ஆண்டுகள் வாழ்கிறார்கள். ஆண்டவனால் அனுப்பப்பட்ட கடைசி இறை தூதர் மிக குறுகிய காலத்தில்தான் வாழ்ந்தார்!!!!! இயேசு கூட நாற்பது ஆண்டுகள்தான் வாழ்ந்துள்ளார்.
        கருணாநிதிகூட தொண்ணூறு அகவையை தாண்டி உள்ளார். அந்த சிறப்புகூட நபிகளிடம் கிடையாது.கடவுளை யாரும் பார்த்திராத போது “குரானை” கடவுள் இயற்றினார் என்பது அப்பட்டமான பொய்!!!! குரானைக் காட்டிலும் இந்தியாவில் ஏராளமான தத்துவ நூற்கள் உள்ளன. தமிழில் “திருக்குறள்” ஒன்றே போதும்.

   • முகம்மதுநபியின் மூடப்பழக்கவழ்கம்

    5704. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.
    என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :76
    507. நாஃபிவு அறிவித்தார்.
    ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ‘ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்…?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.
    Volume :1 Book :8
    508. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    (பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.
    Volume :1 Book :8
    168. ‘நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :4
    144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
    (குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)
    Volume :1 Book :4

 22. வினவு ஆசிரியர்கள் மீது எனக்கு அபிப்ராயம் உள்ளது. ஆனால் இந்தக் கட்டுரையில் மற்ற இந்து அடிப்படைவாதிகள் அவதூறு பரப்புவது போல் இங்கே அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறறேன். இஸ்லாம் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது. ஒரு கல்லூரி நிர்வாகத்தின் தவறான அனுகுமுறை என்று எழுதியிருக்க வெண்டுமே தவிர. இதில் இஸ்லாத்திற்கான தொடர்பை எதில் இருந்து எடுத்தீர்கள்.? உங்களின் ஆக்கம் நடுநிலையுடள் இருக்கவேண்டும் என்பதில் காட்டும் முக்கியத்துவத்தை மற்றவர்கள் மீது தப்பான எண்ணங்களை உருவாக்கும் இதுபோன்ற ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது சரியான தகவலை வெளியிடுங்கள்.

  கண்டிப்பாக அந்த கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. இஸ்லாமிய அளவுகோளில் நிர்பந்தம் என்று வந்துவிட்டால் எந்தக் கட்டுப்பாடும் இல்லை… இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன்.

  • //கண்டிப்பாக அந்த கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. இஸ்லாமிய அளவுகோளில் நிர்பந்தம் என்று வந்துவிட்டால் எந்தக் கட்டுப்பாடும் இல்லை… இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன்.// hope the true muslim Abdul Haleem is the first one to fight with the college for its ‘non islmic ways’ which brings bad name to true islam. May be he can ask the ‘எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை’ people to go directly to that college and protest. Why are they not doing till now? The reason is true Islam/non islamic ways are arguments sake for them.

 23. சில இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகள் தங்களை எந்த மதமும் சாராதவர்கள் என்று காட்டிக்கொள்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் குறித்து உங்களின் கருத்துக்களை பொதுமேடையில் விவாதிக்க

  எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை என்று முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் விவாதிக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். வினவு தளத்தில் வந்து விவாதிக்க தயாரா? ஆண்மை இருக்கா என்றெல்லாம் கூக்குரல் விடுவது அநாகரிகம். உங்களை இணையத்தில் யார் என்று தெறியாமல் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை நேரடி விவாதத்திற்கு மேற்கொன்ன முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களில் ஆண்மை இருந்தால்.

  • Abdul Haleem

   // உங்கள் கருத்துக்களில் ஆண்மை இருந்தால்.// வினவு தளத்திலேயே விவாதிக்கலாமே.
   We are not interested to know who you are, how you look, etc.

  • //அப்படியானால் இஸ்லாம் குறித்து உங்களின் கருத்துக்களை பொதுமேடையில் விவாதிக்க எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை என்று முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் விவாதிக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.// ஆரம்பிச்சுதானுங்கடா பாய்ங்க …ஏம்பா பாயி அது என்ன “நாம் நாம்”ங்குற . இங்க எல்லாரும் தனி ஆளா தான விவாதிக்குறாங்க . உனக்கு என்ன பிரச்னை விவாதிக்க முடியலையா…வடிவேலு கணக்கா ” எங்க அண்ணன் கிட்ட வந்து பேசிப்பாருங்கடா “ன்னு கூப்பிடுற. ஒன் குரூப்ப இங்க வர சொல்லு.

  • Abdul Haleem

   கருத்துக்களில் பெண்மை இருந்தாலும் வினவு தளத்திலேயே விவாதிக்கலாமே.

   பெண்மையோ ஆண்மையோ, நேர்மைதான் வேண்டும். இருக்கிறதா உங்களிடம்?

  • இவர்கள் நேரிலும் வர மாட்டார்கள், உண்மையான பெயரிலும் வர மாட்டார்கள். திரைக்கும் பின் நின்று சண்டை போடும் தைரியசாலிகள்.

   போலி கணக்கில் இருந்து கொண்டு வாதிடுவதை தவிர்த்து, உண்மை அறிய ஒருபோதும் துணியமாட்டார்கள்.

   இவர்களுக்கு நேர்வழி தர அந்த இறைவனை பிராத்திப்போம் சகோ.

   • சகோ. அமீன்,

    இணையத்தளத்தில் வாதிப்பதற்கும், கருத்தைத் தெரிவிப்பதற்கும் எதற்காக நேரில் வர வேண்டும். இதிலிருந்து உங்களால் மற்றவர்களுடன் வாதாட முடியாது அல்லது மற்றவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லையென்பது தெளிவாகிறது. இணையத்தளங்களில் கருத்தைப் பரிமாறுவதற்கு நேரில் வா, அல்லது அடையாள அட்டையைக் காட்டு, உண்மையான பெயர் என்ன என்று கேட்பது, இணைய வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும். எத்தனையோ இஸ்லாமிய முல்லாக்களும், பன்னாட்டு முஸ்லீம்களும்,பல இணையத்தளங்களில், எல்லோரது கேள்விகளுக்கும், பதிலளித்து, மற்றவர்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள சந்தேகங்களைத் தீர்க்கிறார்கள். யாருமே நேரில் வந்தால் தான் பதிலளிப்பேன் என்று கூறியதில்லை. ஒவ்வொரு நாளும் பல இணையத்தளங்களில், உலகில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இத்தகைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள் மட்டும் மண்ணடியில், அரண்மனைக்காரன் தெருவில் முப்பதாம் நம்பருக்கு வந்தால் தான் பதிலளிப்பேன் என்பதைப் பார்க்க சிரிப்பு வருவது மட்டுமல்ல, தமிழன் என்ற முறையில் வெட்கமாக இருக்கிறது. 🙂

    • நீங்கள் அனைவரது கருத்துகளையும் படித்தீர்களா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. முகம் காமிக்க மறுக்கும் பல பேரோட வேலை, போலி முகவரியில் வந்து இணையத்தில் மூலம், எதையாவது பதிவிறக்கம் செய்து இங்கே போட வேண்டியது. அதற்கு பதில் சொன்னால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் அல்லது பதிலை படிக்காமலே இன்னொரு கேள்வி கேட்க வேண்டியது.

     உண்மையான பெயரில் வருபவர்களோ அல்லது நேரில் வருபவர்கள், உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கதுடன் வருபவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

     வெறும் நேரம் விரயம் செய்யும் இந்த போலி முகவர்களினால் யாருக்கு என்ன பயன்? இவர்களின் நோக்கம் எதிராளிகளை கோமாளியாக்குவது மட்டுமே..

     கீழே பின்னோட்டம் இட்டவர்களை போய் பாருங்க. கருத்து என்ற பெயரில், அல்லாஹ்வையும் நபியையும் (saws) நகைக்கிறார்கள். இவர்கள்தான் சந்தேகம் கேட்க வந்தவர்களா? அல்லது டைம் பாஸ் செய்ய வருபவர்களா?

     • //உண்மையான பெயரில் வருபவர்களோ அல்லது நேரில் வருபவர்கள், உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கதுடன் வருபவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.// இது தான் உங்க(தமிழக முஸ்லிம்கள்) பிரச்சன .இங்க என்னமோ எல்லோருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இருப்பது போலவும், அதை போக்கி கொள்ள இங்கு விவாதித்து கொண்டிருப்பது போலவும் நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். முஸ்லிம்களை தவிர யாருக்கும் இஸ்லாம் பத்தி தெரியாது என்பது உங்கள் கற்பனை. இப்படி தமிழக முஸ்லிம்களை முட்டாள் ஆக்கிய பெருமை ஜையினுலாபுதீனையே சாரும்.

      • //இது தான் உங்க(தமிழக முஸ்லிம்கள்) பிரச்சன .இங்க என்னமோ எல்லோருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இருப்பது போலவும், அதை போக்கி கொள்ள இங்கு விவாதித்து கொண்டிருப்பது போலவும் நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். //

       உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், எதற்காக இங்கே வந்து அனைவருது நேரத்தையும் வீணாக்க வேண்டும். உங்கள் வேலையை போய் பார்க்கலாமே?

       • //உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், எதற்காக இங்கே வந்து அனைவருது நேரத்தையும் வீணாக்க வேண்டும். உங்கள் வேலையை போய் பார்க்கலாமே?//

        பாயி ..இங்க என்ன நடக்குதுன்னே தெரியாமையா பேசிட்டு இருக்கீங்க .இங்க யாருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இல்ல. உங்க இஸ்லாமிய மதவெறியர்களையும், இஸ்லாமின் முட்டாள் தனமான பிற்போக்கு தனத்தையும் அம்பலப்படுத்துகிறோம். அதுக்கு நீங்கதான் இங்க சப்பை கட்டு கட்டிகிட்டு இருக்கீங்க..

        • எந்த கமெண்டும் படிக்காமே முதல்லே இருந்து ஆரம்பிக்கிறீங்க.. நீங்க சொல்லுற புளுகாண்டிக்குதான் முதல்ல இருந்து அதாரத்தோடு மறுத்துட்டு இருக்கிறேன். மறுபடியும் மதவெறி முட்டாள்தனம்ன்னு பேசிட்டு இருக்கீங்க.

         கமெண்ட்சை படிக்கிறவங்களுக்கு யாருக்கு மதவெறி, யாரோட பேச்சு முட்டாள்தனம்னு தெரியும்.

         உங்களோட மதம் என்னனு சொல்லவே உங்களாலே முடியல.. நீங்க இஸ்லாமை அம்பலபடுத்துரீன்களா? உங்களுக்கே காமெடியா இல்ல?

         உங்களுக்கு என்ன விளக்கம் சொன்னாலும் அதற்கு நீங்க எதாவது குதுர்க்கமா சொல்ல போறீங்க.. அப்புறம் நான் என்ன செய்ய முடியும்?

         முதலில் இந்த உலகத்தில் எதற்கு பிறந்தொம்ன்னு புரிஞ்சிக்குங்க. உங்களோட பகுத்தறிவை வைத்து ஆராய்ந்து பாருங்க. உண்மை என்னான்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

         இது மிக சிறிய வாழ்க்கை. இதை துளைத்து விட்டால் அப்புறம் கிடைக்காது. உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

         • //உங்களோட மதம் என்னனு சொல்லவே உங்களாலே முடியல.//
          எனக்கு மதம் இல்லை பாய். கடவுள் என்பது கட்டுக்கதை என்பதே என் நிலைபாடு.
          //

          முதலில் இந்த உலகத்தில் எதற்கு பிறந்தொம்ன்னு புரிஞ்சிக்குங்க. உங்களோட பகுத்தறிவை வைத்து ஆராய்ந்து பாருங்க. உண்மை என்னான்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

          இது மிக சிறிய வாழ்க்கை. இதை துளைத்து விட்டால் அப்புறம் கிடைக்காது. உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.//

          உஙகளுக்கு எப்படி பாய் இதெல்லாம் தெரிஞ்சது.? உங்க பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து தெரிஞ்சுகிட்டீங்களா?

          • உங்களுக்கு ஜாகிர் நாயிக் மீது என்ன அவ்வளவு வெறுப்புன்னு எனக்கு புரியலை.

           இந்து மதம் பற்றி சொல்லும் முன், உங்களுக்கு தெரிந்த ஹிந்து மதத்தின் படி ஒரு வரியில், கடவுளின் தன்மை மற்றும் இந்த மனித வாழ்க்கையின் நோக்கம் (purpose) பற்றி சொல்லுங்க.

           உங்கள் சொந்த கருத்து தேவையில்லை. உங்கள் வேதங்களின் அடிப்படையில் பதில் வேண்டும்.

 24. Ameen,

  //கேலி செய்வது ஆறரிவு படைத்த மனிதனுக்கு அழகு இல்லை//

  எனக்கு 5 அறிவு என்றே வைத்துக்கொள்ளலாம். 5 அறிவு படைத்த மனிதனே கேலி செய்யுமளவுக்கு உள்ள மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எத்தனை அறிவு வேண்டும்.

  //இதோ ஆதாரம்: http://www.daruliftaa.com/node/5696?txt_QuestionID//

  இதெல்லாம் ஒரு ஆதாரமா? கேவலமாக இல்லை? ஹதீதை ஆதாரமாகக் கொண்டு, 100 வரிகளில், பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம் செய்தல் கூடாது தவறு என்று கூறி விட்டு கடைசியில் ஒரு பாதி வரியில் தேவைப்பட்டால் செய்யலாம் என்று ஒரு ஒன்பதாம் தர முல்லா பத்வா விட்டுருக்கிறார். அதையும் ஆதாரமாகக் காட்ட நீங்கள் வெட்கப்படவில்லை. ஹதீத் குரான் ஆதாரம் இருக்கா? இல்லையா? என்பது தானே கேள்வி.

  //அப்படி செய்ய சொல்லி குரானில் இருக்கிறது என்று காட்டுங்கள். //

  5 முறை அதான் ஒலி எழப்பச்சொல்லி குரானில் இருக்கிறதா? 5 முறை ஒளு செய்யச்சொல்லி குரானில் இருக்கிறதா? குரானில் ஒன்றும் உருப்படியாக இல்லையென்று எனக்குத் தெரியும். ஹதீதை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு கன்றாவிகளும்.

  This comment may be a duplicate.

  • //ஒன்பதாம் தர முல்லா //

   //குரானில் ஒன்றும் உருப்படியாக இல்லையென்று//

   //கன்றாவிகளும்//

   உங்கள் பதிவில் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை விட கேலியும் கிண்டலும் தான் அதிகம் இருக்கிறது. இதற்கு மேல் விவாதிக்க உங்களிடம் ஆக்க பூர்வ கருத்துக்கள் இல்லை என்று புரிகிறது.

   உங்கள் காதுகளும், கண்களும், உண்மையை அறிந்து கொள்ளும் சக்தியற்றுவிட்டால், நான் என்ன செய்ய முடியும்.

   நீங்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • //எனக்கு 5 அறிவு என்றே வைத்துக்கொள்ளலாம். //

   நீங்கள் ஐந்தறிவு படைத்தவர் என்று என்றுமே நான் சொல்லவில்லை. உங்களுக்கு கேள்வி கேட்கும் அறிவும், இந்த உலகின் செல்வமும், நல்ல உடல் ஆரோக்கியமும் இறைவன் கொடுத்திருக்கும் பொழுது, உங்களை ஐந்தறிவு படைத்தவர் என்று கூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது சகோ?

   நான் பொதுவான கருத்தைதான் சொன்னேனே தவிர யாரையும் புண்படுத்த அல்ல.

   // 5 அறிவு படைத்த மனிதனே கேலி செய்யுமளவுக்கு உள்ள மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எத்தனை அறிவு வேண்டும்.//

   கேலி செய்ய அறிவு தேவை இல்லை. அதில் உள்ள உண்மையை பகுத்தரியவே ஆறாம் அறிவு தேவைபடுகிறது. இஸ்லாத்தின் மகத்துவமும் நேர்மையும் நான் புதிதாக சொல்ல தேவை இல்லை. உங்களுடைய கேள்விகளை உண்மை அறியும் தன்மை கொண்டு கேளுங்கள். அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் சொன்னால் சான்று கேட்கிறீர்கள், சான்று காட்டினால், 9ஆம் தர முல்லா என்று கேலி செய்கிறீர்கள். நான் என்ன செய்ய முடியும்?

 25. இங்கு என்னோடு விவாதிட்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும், உங்களோடு விவாதம் செய்து ஜெயிப்பது என்னோட நோக்கம் இல்லை. நீங்கள் உண்மை உணர்ந்து சத்திய மார்கத்தில் வர வேண்டும். அது தான் என்னோட நாட்டம்.

  இதில் என்னுடைய கருத்து உங்களையோ நீங்கள் சார்ந்து இருக்கும் துறையையோ அல்லது மதத்தையோ புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

  நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் இஸ்லாம் பற்றி தெரிந்து கொண்டு, இது போல இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் நடந்தால் அதை தட்டி கேட்ட வேண்டும்.

  இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் இஸ்லாத்தோடு சம்பந்தபடுத்தி சொல்வது மிக பெரிய புரளி தவிர வேறொன்றும் இல்லை.

 26. “உங்கள் காதுகளும், கண்களும், உண்மையை அறிந்து கொள்ளும் சக்தியற்றுவிட்டால், நான் என்ன செய்ய முடியும்.”

  சீல் வெச்சது அல்லாதானே ? அப்போ மத்தவங்க கேட்காவிட்டால் யார் பொறுப்பு ? எதற்காக இவ்வளோ மெனக்கெடுகிறீர்கள் ? நீங்க பேசி சீல் எடுக்கப்படும்னு நம்புறீங்களோ ? சீல் வெக்கறதும் எடுக்கறதும் அல்லாவோட வேலையாச்சே ? நீங்க ஏன் எடைல பூர்ரிங்க.

  அதுசரி, உண்மையெ அல்லா சொல்லுவாரு, அது கேட்காதபடிக்கு காத அடைச்சிருவாரு, பாக்காதபடிக்கு கண்ண கட்டிருவாரு. எல்லாம் சென்ஜிட்டு நீ ஏன்டா கேக்கல பாக்கலனு எரிச்சி தோல் குடுத்து மறுபடியும் எரிப்பாரு.

  இதுல யாரு லூசு ? அல்லாவா இல்ல அவரோட ஏஜென்டா ?

  • முதலில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய பதில் கருத்தில் மட்டும் இருக்கட்டும். அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

   அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டார். மக்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பம் நிறைய கொடுப்பார். இந்த விவாதங்களே பலருடைய மனங்களை உண்மை அறிந்து கொள்ள தூண்டி இருக்கலாம்.

   //நீங்க ஏன் எடைல பூர்ரிங்க.//

   என்னுடைய பணி உண்மையை சொல்வதே. மக்களின் அறியாமையை என்னால் ஆன மட்டும் போக்க முயற்சிக்கிறேன். அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியின் பக்கம் திருப்புகிறான். தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு விடுகிறான்.

   மக்கள் தங்கள் பகுத்தறிவு கொண்டு இறைவனை புரிந்து கொள்கிறார்களா அல்லது தங்களுடைய மனம் செல்கின்ற போக்கில் செல்கிறார்கள என்று பார்க்கிறான்.

   இந்த பதில்களை நீங்கள் மட்டுமே பார்க்கவில்லை. அனைவரும் படிக்கின்றனர். யார் இதில் நேர்வழி பெறுகிறார்கள் என்பது அந்த இறைவன் ஒருவனுக்கே தெரியும்.

 27. ///இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக,ஒருவன் ஏழையாக,ஒருவன் ஆரோக்கியவானாக ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு///

  ஒருவர் இஸ்லாமியராக,ஒருவர் காபிராக பிறந்தது அவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தேர்வா? இல்லையா?

  • நீங்கள் முதலில் முஸ்லிமுக்கும் காபிருக்கும் பொருள் அறிய வேண்டும்.

   முஸ்லிம்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்து அவனுக்கு கட்டுபடுடல்.
   காபிர்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் ஒரு இறைவனுக்கு அடிபணிய மறுப்பது.

   யாரையும், இவர் காபிர் இவர் நரகத்திற்குத்தான் போவார் என்று சொல்ல எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை. அவர் அவர் செய்த செயல்கள், அவர்களை படைத்த இறைவன் அறிவான். அவன் அவர்களுக்கு மறுமை நாளில் கூலி கொடுப்பான்.

   இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்:
   //ஒருவர் இஸ்லாமியராக,ஒருவர் காபிராக பிறந்தது அவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தேர்வா? இல்லையா?//
   நான் மேலே சொன்ன விளக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணில் பிறக்கையில், ஒரே இறைவனை ஏற்கின்றது. ஆனால், அவர்களுடைய குடும்ப சூழல் காரணமாக, ஒரே இறைவனை வழிபடும் அல்லது பல இறை கொள்கையோடு வளரும்.

   ஒவ்வொருவருக்கும் இறைவன் பகுத்தறிய அறிவு தந்துள்ளான். அக்குழந்தை பகுத்தறியும் வயதை அடையும் முன்பு இறந்துவிட்டால், அக்குழந்தை ஒரு இறைவனை வணங்கியதாகவே கருதப்படும்.

   ஒருவர் பகுத்தறியும் வயதை அடைந்த பின்னரும், ஒரு இறைவனை வணங்க வேண்டும் என்ற உண்மை தனக்கு தெரிந்த பின்னரும், தன்னுடைய சுய லாபத்திற்காக, உலக ஆசைக்காக, கட்டுபாடின்றி வாழ்வதற்காக, கேள்வி கணக்கு பற்றி பயமில்லாமல் யாதொரும் தவறும் செய்வதற்காக ஒரு இறைவனை மறுத்து வந்து அதே நிலையில் இறந்து விட்டால், அவரே காபிராக கருதப்படுவார்.

   ஆனால், இறைவன், தான் நாடியவருக்கு நேரான வழியை எப்பொழுது வேண்டுமானாலும் தர வல்லவன். மேலே கூறிய ஒருவன், இறக்கும் முன், இறைவன் அவனுக்கு நேர்வழி தந்து, அவன் இறக்கும் முன், ஓர் இறை கொள்கையில் வந்து, தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால், எல்லாம் வல்ல இறைவன் தான் நாடினால், அவனுக்கு மன்னிப்பு தர வல்லவன்.

   அந்த மனிதன் நேரான வழியில் வருகிறானா அல்லது தவறான வழியிலியே இருக்கிறானா என்பதே அவனுடைய தேர்வு.

   இதனாலேயே, யாவரையும் காபிர் என்று சொல்ல இஸ்லாத்தில் மனிதனுக்கு உரிமை இல்லை.

   Hope this answers your question.

   • //காபிர்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் ஒரு இறைவனுக்கு அடிபணிய மறுப்பது.//

    பாய் நீங்க இப்படி புழுகலாமா? ஒரே இறைவனை ஏத்துகிட்டு இப்னு அப்துல்லாவ ஏததுக்களனா காஃபிர் இல்லையா?

    • இறைவனுக்கு கட்டுபடுதல் என்றால் என்ன? அவன் சொன்னதை செய்வது. இறைவன் மனிதனுக்கு ஒரு rules book தந்து, இதை கடைபிடிக்க சொல்கிறான். அதுவே குரான்.

     குரான் கடவுளின் வார்த்தையான்னு அடுத்தது கேட்பீங்க. அதை நீங்களே சோதித்து அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்திலும் பார்க்கலாம். உடனே குரானில் உள்ள தவறுகள்னு எதாவது தளத்தை கட்டுவீங்க. அதற்கு ஆதாரத்துடன் விளக்கத்தையும் அந்த இணையத்திலேயே இருக்கு. தேடினால் கிடைக்கும்.

     சரி, விஷயதுக்கு வருவோம். இறைவன் தன்னுடைய குர்ஆனில் தந்துள்ளதை நடைமுறைபடுத்துவதெ இறை நம்பிக்கையாளனின் கடமை. குரான்படி நபியை (saws) பின்பற்ற சொன்னால் செய்ய வேண்டும்.

     அதற்கு நீங்க முதல்லே குர்ஆனில் என்ன இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க திறந்த மனதுடன் முற்படுங்க. உங்களை படைத்தவனை முதல்ல அறிஞ்சிகுங்க. அப்புறம் எல்லா உண்மையும் தானாகவே தெரியும்.

     • //குரான் கடவுளின் வார்த்தையான்னு அடுத்தது கேட்பீங்க.// ஆமாம் பாய், குருட்டு பூனையா சொன்ன எடத்துல பாய …நான் முழுசா படிச்சி பாத்தேன் பாய், ஒரு சைக்கோ உளறி வச்ச மாதிரி இருக்கு.

      அது சரி, ஜிப்ரீல் அல்லா சொன்னதா சொன்னதுதான குர்ரான், ஜிப்ரீல் வானத்தில இருந்து ரெக்கை கட்டிகிட்டு குதிச்சாருனே வச்சிப்போம், ஜிப்ரீல் உண்மையதான் சொன்னாரு என்ன பாய் ஆதாரம்?

      • அப்பன் பாட்டனை பார்த்து அப்படியே கேள்வி கேட்காமல் மக்கள் சென்று கொண்டிருந்த காலத்தில், இஸ்லாம் மக்களை கேள்வி கேட்டு தெளிவுபெற்று நேர்வழிக்கு வரவைத்தது.
       மனிதர்களின் அறிவுக்கு பொருந்துகிற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

       //ஆமாம் பாய், குருட்டு பூனையா சொன்ன எடத்துல பாய//

       அதைதான் நானும் சொல்கிறேன். குருட்டு பூனை போல இறைவன் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கறீங்க. கொஞ்சம் சிந்திச்சி செயல்படுங்க. இஸ்லாம் ஒருவரையும் குருடர்களை போல பின்தொடர சொல்லவில்லை. உண்மையும் பொய்யும் உங்கள் முன்னாள் தெளிவாக எடுத்துரைத்து பட்டுவிட்டது.

       குரான் அல்லாஹ்வினால் கொடுக்கப்படவில்லை என்றால் அதில் எப்படி அத்தனை அறிவியல் உண்மைகளும் இருக்க முடியும். மலைகளை பற்றி, கருவை பற்றி, பெருவெடிப்பு பற்றி, ஆறுகள் மற்றும் கடலை பற்றி, மேகத்தை பற்றி, இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இந்த குரானை இறைவன் அல்லாத மற்றொரு மனிதன் தந்து இருந்தால் இதில் ஏராளமான முரண்களை பார்த்து இருப்பீர்கள். ஆனால் இது எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாக்கப்பட்டுள்ளது.

       உங்களுக்கு இதுலே என்ன சந்தேகம்?

       • //மலைகளை பற்றி, கருவை பற்றி, பெருவெடிப்பு பற்றி, ஆறுகள் மற்றும் கடலை பற்றி, மேகத்தை பற்றி, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.// ஆமாம், அறிவியல் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க,நாமளும் அடுக்கி கொண்டே போகலாம்,இதெல்லாம் குர்ரானு அன்னைக்கே சொல்லிட்டுனு ….

        //இதில் ஏராளமான முரண்களை பார்த்து இருப்பீர்கள்.// பல முரண்களை காமிச்சாலும் ,இதையே இன்னும் எத்தனை காலத்திற்க்கு சொல்லி ஊரை ஏமாற்ற போறீங்க.?

        இப்போதான் செங்கொடி தளத்தில் படித்தேன்,

        “சூரியன் சுருட்டப்படும் போது ,நட்சத்திரங்களை உதிரவைக்கப்படும் போது ”

        – முகமதுவுக்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பது, நட்சத்திரங்கள் சூரியனை போலவே பெரியது என்பதும் தெரியாததால், நட்சத்திரங்கள் உதிருதாம் .

   • திரு.அமீன்

    உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி!

    ///ஒவ்வருவருக்கும் இறைவன் பகுத்தறிய அறிவு தந்துள்ளான்///

    இந்த பின்னுட்டத்தில் அதிக இடங்களில் பகுத்தறிவு என்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள்.பகுத்தறிவால் இறைவனை அறிய வேண்டும் என்கிறீர்கள்.சாதாரண பகுத்தறிவைவிட மேம்பட்ட பகுத்தறிவுவாதிகளாகிய விஞ்ஞானிகள்தான் பிரபஞ்சம்,உயிர்கள்,எல்லாம் தற்செயல் நிகழ்வால் உண்டானது என்கிறார்கள்.ஒரே இறைவன் அவர்களின் பகுத்தறிவுக்கே புலப்படவில்லையே? மற்றவர்களின் பகுத்தறிவுக்கு எப்படி புலப்படும்?

    • ///இறைவன் தான் நாடியவருக்கு நேரான வழியை எப்பொழுது வேண்டுமானாலும் தரவல்லவன்///

     ///அந்த மனிதன் நேரான வழியில் வருகிறானா அல்லது தவறான வழியிலியே இருக்கிறானா என்பதே அவனுடைய தேர்வு///

     நேர்வழி இறைவனால் வழங்க படுவதா? அல்லது மனிதனாக வருவதா என்று குழப்பம் இல்லாமல் கூறுங்களேன்.

     • இறைவன் மனிதனுக்கு சுயமாக சிந்தித்து செயல்படும் அறிவை தந்ததே அவன் உலகினில் பார்க்கும் சான்றுகளை வைத்து இறைவனை அறிந்து இறைவனுக்கு அடிபணியவே.

      எவன் ஒருவன் தான் பார்க்கும் சான்றுகளை வைத்து இறைவனை அறிய முற்படுகிறானோ அவனுக்கு அல்லாஹ் உண்மையை அறிந்து கொண்டு நேரான வழியில் செல்ல அவனுடைய அறிவை விசாலமாக்குகிறான். எவன் ஒருவன், தன்னுடைய கர்வத்தால், பிடிவாதத்தால், அகம்பாவதால் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் விண்வெளியில் பறக்கும் மனிதனுக்கு இதயத்தை சுருக்குவதை போல சுருக்கி விடுகிறான்.

    • எந்த ஒரு விஞ்ஞானியும் இறைவன் இல்லை என்று மறுக்கவில்லை. இவர்களால் இறைவனை கண்டுபிடிக்க முடியவில்லையே தவிர இறைவனே இல்லை என்று மறுக்க முடியவில்லை.

     உதாரணத்திற்கு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது “Science without religion is lame, religion without science is blind.”
     டார்வினின் கொள்கையும் தியரி மட்டுமே அன்றி ப்ராக்டிகல் இல்லை.

     உங்களிடம் ஒரு கேள்வி.
     ஒன்றும் இல்லாத பாலைவனத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் அனைத்து மேஜை நாற்காலி வகைகள் அடுக்கி, மாடி மேலே ஒரு குட்டி விமானமும் வைத்து, மாளிகைக்குள் ஒரு அதி நவீன கணினியும் வைத்து, வாசலில் ஒரு bmw car வைத்து விட்டு, இது எல்லாம் தானாகவே தற்செயலாக இங்கே வந்துவிட்டது என்று சொன்னால் எந்த ஒரு ஆறறிவு படைத்த மனிதனும் ஏற்றுக்கொள்வானா?
     நீங்கள் சொல்லும் அந்த தற்செயல் நிகழ்வும் இது போலதான் உள்ளது.

     இறைவன் என்றொருவன் இல்லையென்றால் இங்கே எதுவும் அதன் நிலையில் இருக்காது. அனைத்திற்கும் அதிபதி அவனே. இறைவன் இந்த பிரபஞ்சத்தையும், அதில் உள்ளவற்றையும் எவ்வாறு துல்லியமாக படைத்துள்ளான் என்று எண்ணினால், இவை தற்செயல் அல்ல என்பது புலப்படும்.

     எடுத்துக்காட்டாக மனித கண். அதன் மகத்துவம் அறிய
     http://harunyahya.com/en/Books/2870/miracle-in-the-eye

     நான் முதலில் சொன்னது போல் அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை மக்களுக்கு நிறைய கொடுத்துள்ளான். மனிதன் அந்த சான்றுகளை வைத்து கடவுளை அறிவதே பகுத்தறிவு. கண்ணால் கண்டு, காதால் கேட்டு அறிவது எப்படி பகுத்தறிவு ஆகும்.

     உதாரணத்திற்கு மூடிய கதவை தொடும்போது வெப்பத்தை உணர்ந்தால், கதவிற்கு அந்த பக்கம் நெருப்பு இருக்கிறது என்று அறிவதே பகுத்தறிவு. நான் நெருப்பை பார்க்கவில்லை அதனால் அங்கே நெருப்பே இல்லை, கதவு தானாக சூடாக இருக்குன்னு சொன்னா இதுக்கு பேரு பகுத்தறிவா?

     • இல்லாத ஒன்றை மறுக்க வேண்டிய அவசியம் இல்லையே பாய். அறிவியாலாருக்கு நிறைய வேலை இருக்கு…அல்லாவாம் ,அவரு படச்சாராம், மொம்மதுனு ஒரு அரபியரு அவருக்கு தூதுவராம், அந்த அரபியருக்கு தூது சொல்ல வானத்துல இருந்து ஒருத்தரு இறங்கி வந்தாராம் , இதெல்லாம் ஒததுக்கணுமாம் இல்லன்னா அந்த அல்லா எண்னை கோப்பறையில் போட்டு வருத்தெடுபாராம் . இத அறிவியலார் இல்லன்னு நிரூபிக்கணுமாம்.

      • சகோ,
       உங்களிடம் ஒரு கேள்வி. ஒரு மிக பெரிய கொள்ளைக்காரன் உலகத்தில் பல அட்டுழியங்கள் செய்து கொண்டு, பல மக்களை கொன்று கொண்டு இருந்தான். அவனுக்கு நீங்கள் எப்படி தண்டனை கொடுப்பீர்கள். அவன் நன்றாக வாழ்ந்துவிட்டு செத்துவிடுவான். உங்கள் கூற்றுப்படி மறுமை இல்லை என்றால், அவன் எவ்வாறு தண்டனை பெறுவான், அவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

       அல்லாஹ் 1,24,000க்கு மேல் நபிமார்களை உலகத்தில் அனுப்பி உள்ளான். முகம்மது (ஸல்) இறுதி தூதர். அனைவரும் ஓர் இறை கொள்கையையே வலியுறுத்தி உள்ளனர்.

       இந்த உலகில் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று கேட்டால், உங்கள் தாய் மற்றும் தந்தையை காட்டுவீர்கள். ஒரு குழந்தை தன்னுடைய தாய் மற்றும் தந்தையை குழந்தை பருவத்திலேயே இழந்துவிட்டு, நீ எப்படி வந்தாய் என்று கேட்டால், தற்செயலாக வந்து விட்டேன். தாய் தந்தை யாரும் இல்லாமல் நானே தற்செயலாக உருவானேன் என்று கூறினால், உங்களால் ஏற்க முடியுமா? நீங்களும் அதே நிலையில்தான் உள்ளீர்கள்.

       நீங்கள் குரானை இறைவனுடைய வார்த்தையாக ஏற்கிறீர்கள? இறைவனே இல்லை என்று சொல்கிறேன் அப்புறம் இறைவனுடைய வார்த்தை எங்கே வந்தது என்று கேட்பீர்கள். உங்களிடம் அடுத்த கேள்வி. இது இறைவனுடைய வார்த்தை இல்லை என்றால், 1400 வருடங்கள் கழித்தும் இதில் ஒரு தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லையே எப்படி?

       ஒரு காலத்தில் மந்திர தந்திரம் பரவலாக இருந்தது. அப்போது குரான் எல்லாத்தையும் விட மிக சிறந்த மந்திரங்கள் இருந்ததாக கருதப்பட்டது. பிறகு, கவிதைகளின் காலம், அப்போதும் குரான் மிக சிறந்த கவிதையாக கருதப்பட்டது. இப்போது அறிவியலின் காலம். இன்றும் குரான் தலை சிறந்த அறிவியல் புத்தகமாக கருதப்படுகிறது. நாளை என்ன இருக்குமோ, கண்டிப்பாக குரான் அதிலும் மிஞ்சும் விதமாகவே இருக்கும். ஆனால், அப்போது நாம் இருக்க மாட்டோம்.

       நீங்கள் கடவுள் நம்பிக்கை இருக்கும் வீட்டில் பிறந்து இருக்கலாம், இப்போது உங்களுடைய அறிவாள் சிந்தித்து கடவுள் இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளீர். நீங்கள் இன்னமும் நிறைய சிந்திக்க வேண்டும். குரானை படியுங்கள். அதில் உள்ள ஞானத்தை அறிந்து கொள்ள முற்படுங்கள்.

       நீங்கள் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் கடவுள் மறுப்பாளராக இறந்து விடாதீர்கள்.

    • //இந்த பின்னுட்டத்தில் அதிக இடங்களில் பகுத்தறிவு என்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள்.பகுத்தறிவால் இறைவனை அறிய வேண்டும் என்கிறீர்கள்.சாதாரண பகுத்தறிவைவிட மேம்பட்ட பகுத்தறிவுவாதிகளாகிய விஞ்ஞானிகள்தான் பிரபஞ்சம்,உயிர்கள்,எல்லாம் தற்செயல் நிகழ்வால் உண்டானது என்கிறார்கள்.ஒரே இறைவன் அவர்களின் பகுத்தறிவுக்கே புலப்படவில்லையே? மற்றவர்களின் பகுத்தறிவுக்கு எப்படி புலப்படும்?//

     தவளை தவ்வி (தாவி) தவ்வி தான் செல்லும் ஆனால் அதனால் முகட்டுக்கு தாவ முடியாமல் போவதால் முகடு இல்லை என்று ஆகிவிடுமா?

     அணுவை பிளக்க முடியாது என்றார்கள் பின்பு ஒருவர் வந்து அணுவை பிள்ந்தார்

     • ஜவகர்,

      நான் என்ன கேக்கிறேன்னு புரியுதா இல்லையா? விஞ்ஞானிகள் சொன்னதால கடவுள் இல்லேன்னு சொல்லல.விஞ்ஞானிகள் பகுத்தறிவுக்கு ஏன் அல்லா தெரியலன்னு கேக்கிறேன்?

      அவங்க காபிர் தானேன்னு கேட்கிறேன்.மறுமையில் அவங்களுக்கு என்ன தண்டனைனு கேட்கிறேன்?

     • //அணுவை பிளக்க முடியாது என்றார்கள் பின்பு ஒருவர் வந்து அணுவை பிள்ந்தார்// அது தான் அறிவியல். முன் முடிவுகள் அற்றது.ஆராய்ந்து கொண்டே இருக்கும்.அறிவியல் என்பதை விட அதுதான் மனித அறிவின் இயல்பு. மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சியே அதன் அடிப்படையில் தான். இதையே “அணுவை பிளக்க முடியாது” என்று முகமது சொன்னாருணு வச்சிப்போம் . இன்னமும் நீங்க எல்லாம் அணுவை பிளக்க முடியாதுன்னு நம்பிகிட்டு இருப்பீங்க.

      • அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அறிவியல் மனிதனின் கண்டுபிடிப்பு. அது மனித மூளைக்கு ஏற்ப மட்டுமே வளரும். அதில் இருக்கும் தவறுகள் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.

       ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். அதனாலேயே அவனுடைய புத்தகத்தில் எந்த தவறுகளும் எந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது.

       உங்கள் உதாரணதிருக்கெ வருவோம்.

       குர்ஆனில் அணுவை பிளக்க முடியும் என்று எழுதி இருக்கென்று வைத்து கொள்வோம். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நீங்கள் என்ன சொல்லி கொண்டிருந்தீர்கள். அணுவை பிளக்க முடியாதுன்னு. அப்போ குர்ஆனில் தவறு இருக்குன்னு சொல்லி இருப்பீங்க. இப்போ அறிவியல் வளர்ந்த அப்புறம் குரான் உண்மைன்னு நிருபணமாகி இருக்கும்.

       அதே போல, குர்ஆனில் இருக்கும் எல்லாமும் மெய்பிக்க நம்முடைய கால அறிவியல் வளரவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு, இன்னும் நிறைய குரானுடைய செய்திகள் அறிவியல் உண்மைபடுத்தும்.

       ஆனால், அப்போது குரானையும் அதை தந்த அந்த இறைவனையும் வழிபட நானும் நீங்களும் உயிருடன் இருக்கமாட்டோம்.

       அதனாலேயே, நாம் இந்த உலகில் இருக்கும் பொழுதே இறைவனின் சான்றுகளை வைத்து நம்முடைய பகுத்தறிவு கொண்டு, இறைவனை அறிந்து, அவனை மட்டுமே வழிபட வேண்டும்.

       சரிதானே?

       • பாய் கொஞ்சமாவது லாஜிக்க பேசுங்க…

        //அதில் இருக்கும் தவறுகள் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்… // முடிவுகள் மாறும். இது விரிவாக பேச வேண்டியது.

        //ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். //

        இதுக்கு என்ன பாய் ஆதாரம்.

        //அதனாலேயே அவனுடைய புத்தகத்தில் எந்த தவறுகளும் எந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது.// ஏற்க்கனவே கண்டுபிடிச்சி பல பேரு குர்ரனுடைய டவுசர அவுத்துதாங்க பாய்.

        //இப்போ அறிவியல் வளர்ந்த அப்புறம் குரான் உண்மைன்னு நிருபணமாகி இருக்கும்.// குரான் பொய் ஆன நிகழ்வுகள் நிறைய இருக்கு பாய். அதுல ஒண்ணுதான் , “சூரியன பாயா சுருட்துறதும், நட்சத்திரங்களை உதிர வைப்பதும்.”

        //இன்னும் நிறைய குரானுடைய செய்திகள் அறிவியல் உண்மைபடுத்தும்.// ஏன் , நீங்க இப்போவே அறிவிக்கலாமே …அறிவியல் அறிவிச்சா உடனே பிராக்கெட்டு போட்டு , இத நாங்க அன்னைக்கே சொன்னோம் என்று கத விடுறது.

        • //பாய் கொஞ்சமாவது லாஜிக்க பேசுங்க…//
         உங்கள் பகுத்தறிவு தலைவர்களுக்கு சிலை வைத்து, வருடாவருடம் அந்த சிலைக்கு மாலையும் அணிவித்து, சிலைக்கும் முன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் பகுத்தறிவுவாதிகள் லாஜிக்கை பற்றி பேச கூடாது..

         //ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். இதுக்கு என்ன பாய் ஆதாரம். //
         குரான் இறைவனின் வேதம் என்பதற்கு அந்த குரானே ஆதாரம். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதன் எழுதவேண்டுமானால், அது என்றோ பொய்த்திருக்கும். குரானை இறைவன் தந்ததாலேயே இந்த நாள் வரைக்கும், இனி வரும் காலமும் குரானை பொய்பிக்க முடியாது.

         //ஏற்கனவே கண்டுபிடிச்சி பல பேரு குர்ரனுடைய…….//
         நீங்கள் ஒரு சமூகத்தவருடைய உயிரினும் மேலான மத நூலை பற்றி விவாதிக்கின்ற பொழுது, உங்கள் கருத்துக்கள் கண்ணியமாக அமைய வேண்டும். இது போல் கீழ்த்தரமாக வார்த்தைகளை பதிவிடுவது உங்கள் சிந்தனை கேவலமாக இருப்பதைப்போல காட்டுகிறது. கருத்துகளில் பலமில்லாத பொழுது, கீழ்தர வார்த்தைகளை உபயோகிப்பது சாதாரண மனிதர்கள் செய்வது. உங்களை போல் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்பவர் செய்யலாமா?

         குரானை பொய் என்று ஆதாரடுடன் நிரூபிக்க முடியாம நிறைய பேரு சும்மா வாய் சவடால் செய்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரே முன்னே சொல்லப்பட்ட அலி சினா.. இவருடைய கேள்விகளும் கருத்துகளும் முன்னமே உடைத்தெறிந்து பட்டுவிட்டது. ஆதாரம், நான் முன்னே பதிவிட்ட லிங்க் பார்க்கவும்.

         ஏற்கனவே சொல்லிடாங்க, ஏற்கனவே சொல்லிடாங்கன்னு சும்மா சொல்வதைவிட, ஏதாவது உருப்படியா சொன்ன நல்லா இருக்கும்.

         உங்ககிட்ட நேரிடைய நான் சில கேள்விகள் கேட்டேன். இன்று வரைக்கும் பதில் காணோம்.

         //“சூரியன பாயா சுருட்துறதும், நட்சத்திரங்களை உதிர வைப்பதும்.”//
         இது உலகம் அழிஞ்ச பிறகு நடக்கும் நிகழ்வு. உலகம் அழியும் என்பதையே நம்பாத பகுத்தறிவுவாதிகள், உலகம் அழிந்த பிறகு நடக்கும் செயல்களைப்பற்றி நம்பவா போகிறீர்கள்?

         //நீங்க இப்போவே அறிவிக்கலாமே …அறிவியல் அறிவிச்சா உடனே பிராக்கெட்டு போட்டு , இத நாங்க அன்னைக்கே சொன்னோம் என்று கத விடுறது.//

         குர்ஆனில் முன்பு இல்லாத விஷயம், பிறகு சேர்கப்பத்தடுன்னு உங்களாலே ஆதார பூர்வமாக சொல்ல முடியுமா?

         அறிவியல் கருவை பற்றி இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         அறிவியல் தேனீ பற்றி இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         அறிவியல் நிலவு பிளந்திருபதை இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         அறிவியல் இரண்டு கடல்களுக்கு இடையே திரை இருப்பது என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         அறிவியல் மலைகள் இந்த பூமி ஆடாமல் இருக்க வைக்கப்பட்டது என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         அறிவியல் விண்வெளியில் செல்லும் மனிதனின் இதயம் சுருங்கும் என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

         மேலும் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இருக்கும் எந்த விஷயம் முன்பு குர்ஆனில் இல்லாமல் பிறகு சொருகப்பட்டது என்று ஆதாரமாக சொல்ல வேண்டும். இவன் சொன்னான், அவன் சொன்னான் என்று சப்ப கட்டு கட்டாமல், உருப்படியாக ஆதாரத்தை காட்டுங்கள் சகோ.

         http://www.miraclesofthequran.com/scientific_index.html

         உலகம் அழியும் முன்பு சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் என்று குர்ஆனில் இருக்கிறது. அதுவும் நடந்த பிறகு, குர்ஆனில் பிறகு சேர்த்தீர்கள் என்று சொல்வீர்களா?

         நபி இசா இப்ன் மரியம் (pbuh) உலகிற்கு வருவார்கள் என்று இருக்கிறது. அதுவும் நடந்த பிறகு, குர்ஆனில் பிறகு சேர்த்தீர்கள் என்று சொல்வீர்களா?

         இது போல் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

         இவர்கள் சொன்னார்கள், அவர்கள் சொன்னார்கள் என்று நீங்கள் வழிகெடுவதைவிட, உங்களுக்கு உங்களை படைத்த இறைவன் கொடுத்த பகுத்தறிவை கொண்டு ஆராய முற்படுங்க. மறுமையில் உங்களுடைய செயல்களுக்கு நீங்களே பொறுப்பு, இன்று உங்களை வழி கெடுக்கும் யாரும் உங்களை அங்கே காப்பாற்ற போவதில்லை.

         உங்களின் வறட்டு கவுரவம் பாதிக்கப்படும் என்று எண்ணாதீர்கள். வறட்டு கவுரவம் உங்கள் பகுத்தறிவை பாதித்தால், அந்த வறட்டு கவுரவத்தை விடுவதே மேல்.

         • tell me how many pages in quran and how many pages is given to science in that science how many pages for astronomy,chemistry,physics,biotechnology,and how many pages is about technology.if every thing there in quran read about the medicine for AIDS and CANCER .

          • To Nagaraj,

           Did I ever claimed that all science is available in Quran. I was saying all this time that whatever in Quran is scientifically true. Understand?

           Quran is not the book of Science. It is the book of Signs. Quran has more than 6,000 sentences and in them more than 1,000 deals with science.

           I am claiming that all these verses said in Quran cannot be denied even in today’s modern Science. I am also claiming that a man before 1,400 years couldn’t have written all these by himself. It proves that Quran is from the Creator of this Universe and who maintains everything in it.

           Can you show from my comments that I had claimed all scientific facts are available in Quran??

         • ஆன்மீக நன்னெறி நூலில் அறிவியல் கேள்விகளுக்கு விடை தேடாதீங்க அமீன் பாய். நீங்களாகவே வலைக்குள்ளே மாட்டிக்காதீங்க. குர்ஆன் உங்களை நல்ல மனிதனாக உருவாக பயன்பட்டதா, சந்தோஷம், அடுத்தவரை மதிக்க கற்று கொடுத்ததா, நம்மால் ஆனா உதவியை மற்றவர்களுக்கு செய்யத்தூண்டியதா, மாற்று கருத்து உடையோரையும் மதித்து நடக்க கற்றுக்கொடுத்ததா, நல்லது, அது போதும் அமீன் பாய். அதை விடுத்து அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் உள்ளதுன்னு சொல்லி நீங்களே சொந்த செலவிலே சூனியம் வைச்சிக்காதீங்க 🙂 அப்புறம் நீங்க காலத்துக்கும் இந்த வலையில் விளக்கம் கொடுத்தே தளர்ந்துடுவீங்க. தனி ஆளாய் இத்தனை பேருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் உங்களது பொறுமையை பாராட்டுகிறேன். அதே சமயம் உங்களது ஆர்வ மிகுதியில் எல்லோரும் உங்களை கிண்டல் செய்யும் வகையில் சில சமயம் பதிலளித்து விடுகிறீர்கள். உங்கள் கடவுளை நம்பாதவர்களுக்கும், உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொல்லாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் உள்ளது. உங்கள் கடவுள் உங்களுக்கு mukkiyam, உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு சரி. எல்லோரும் நீங்கள் வணங்கும் கடவுளை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்கள் கருத்துகளுக்கு ஆமாம் சாமி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. May Peace be upon you. ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்.

          • கற்றது கையளவு பாய்,

           நாகராஜ் அவர்களுக்கு கூறிய பதிலிலேயே உங்களுடைய கேள்விக்கும் பதில் இருக்கிறது.

           //அதை விடுத்து அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் உள்ளதுன்னு சொல்லி//
           அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் இருக்கிறதுன்னு நான் சொன்னேனா? நான் சொல்லாத வாக்கியத்தை நான் சொன்னதாக சொல்வது உங்களுக்கே நல்லதா? உங்களால் நீங்க சொன்ன அவதுறை நிரூபிக்க முடியுமா?

           //அதே சமயம் உங்களது ஆர்வ மிகுதியில் எல்லோரும் உங்களை கிண்டல் செய்யும் வகையில் சில சமயம் பதிலளித்து விடுகிறீர்கள்.//
           நான் சொல்லும் பதில்களில் தவறுகள் இருந்தால், எது என்பதை தெளிவாக குறிப்பிடலாம். அதை இங்கே ஒருவரும் செய்யவில்லை.. ஆனால் அதை பரிகசிக்கும் பகுத்தறிவுவாதிகள் யாரும் என்னுடைய கேள்விகள் ஒன்றுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதை பார்க்கும் போது, இவர்களுடைய பகுத்தறிவின் எல்லையை கண்டு சிரிப்பு வருகிறது.

           //உங்கள் கடவுளை நம்பாதவர்களுக்கும், உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொல்லாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் உள்ளது.//
           மறுபடியும் உங்களுடைய சித்தாந்தத்தை நான் சொல்வதாக சொல்கிறீர்கள். என்னுடைய இறைவனை நம்பாதவர்களுக்கும், என்னுடைய கருத்துகளை நம்பாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் இல்லை என்று நான் சொன்னேனா?

           //உங்கள் கடவுள் உங்களுக்கு mukkiyam, உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு சரி. எல்லோரும் நீங்கள் வணங்கும் கடவுளை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,//
           நீங்கள் அனைவருது கருத்துகளையும் படிதீர்களான்னு எனக்கு தெரியலை. இந்த கட்டுரையும், இங்கே மேலே பலர் தந்த கருத்துகளுக்கும் இஸ்லாமை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டு இருந்தது. இந்த கட்டுரையில் தனி மனிதன் செய்த தவறை, என்னவோ இஸ்லாம் செய்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது மக்களிடம் தவறான கருத்தை கொண்டு செல்கிறது.

           இஸ்லாம் பற்றி நமக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை. இன்றைய மீடியாவும், செய்திகளும், திரைப்படங்களும் இஸ்லாமிற்கு எதிராக புனையபடுகிறது. செய்திதாள்களில் வரும் அனைத்து செய்திகளும் உண்ம