Monday, August 15, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?

உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?

-

“உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? இல்லை மாஃபியா கேங்கா?” என்ற  தலைப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஸ்டேட் பேங்க் அதிகாரிகளைக் கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உசிலை ஸ்டேட் பேங்கின் பிளக்ஸ் பேனரில்கடன் வாங்கி அடைக்க முடியாத தவணை தவறிய கடனாளிகளான 17 சுயஉதவிக் குழுக்களின் குரூப் போட்டோக்களை ஒட்டியுள்ளனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, “எங்கும் போய் சொல்லிக்கோ, நாங்கள் சட்டப்படிதான் செய்திருக்கிறோம்.” என்று திமிராக வங்கி அதிகாரிகள் சொல்லி அனுப்பியுள்ளார்கள். மனம் ஒடிந்து போன ஒரு சுய உதவிக் குழுவின் தலைவர் 18.2.2014 அன்று உசிலை. வி.வி.மு. அமைப்பாளர் தோழர் குருசாமிக்கு போன் செய்து, “எங்களை ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் அவமானப்படுத்தியுள்ளார்கள். எங்கள் பிளக்ஸ் போட்டோ விளம்பரத்தை எடுப்பதற்கு உதவி செய்யுங்கள், எங்களால் வெளியில் நடமாட முடியவில்லை. அவமானமாக உள்ளது” என்று மனம் நொந்து கூறினார்.

உடனே வி.வி.மு. அமைப்பு ஸ்டேட் பேங்க் சென்று அந்த பிளெக்ஸ் பேனரை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம். உடனடியாக சுவரொட்டி போட்டு அம்பலப்படுத்தியுள்ளோம்.

 • “ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யுற, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரம், 20 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா?”
 • “போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி”

என்ற வாசகங்களை தாங்கி சுவரொட்டி  ஒட்டப்பட்டது.

sbi-usilai-poster-22

20.2.2014 அன்று காலை 10.30-க்கு ஸ்டேட் வங்கி முன்பு வி.வி.மு தோழர்களும் சுய உதவிக் குழு பெண்களும் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசுக்கு தகவல் சொல்லி, “நீங்களா போட்டோவை எடுக்குறீங்களா? நாங்க எடுக்கட்டுமா, நாங்க எடுத்தா விபரீதமா இருக்கும்” என எச்சரிக்கப்பட்டது.

உடனே காவல்துறை தலையிட்டு அரை மணி நேரத்தில் போட்டோவை அகற்றி விட்டு நம்மையும் அழைத்துச் சென்று அகற்றப்பட்டதை காட்டினார்கள்.

“வங்கியில் கடன் வாங்கி கடன் அடைக்க முடியாதவர்கள் குற்றவாளிகள் அல்ல. நாம் இவர்கள் கொடுத்த பணத்தில் நான்கு கார் வாங்கி ரோட்டுல விடல. ஆடு, மாடு வாங்கினோம், விவசாயம் செய்தோம், மழையில்லாத்தால் நமது பகுதியே வறட்சி பகுதியாக ஆகிவிட்டதால் கடன் அடைக்க முடியவில்லை. நாம் ஒன்றும் பஸ்ஸ்டாண்டு திருடர்களோ அல்லது தேடப்படும் குற்றவாளிகளோ இல்லை. அவர்களைத்தான் காவல்துறை பேருந்து நிலையத்தில் போட்டோ ஒட்டி வைப்பார்கள்.

நாம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நம்மை அவமானப்படுத்துவதன் மூலம் நம்மை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என வழக்கு தொடுக்க முடியும். நம்மை அவமானப்படுத்தய அதிகாரிகளை நாமும் அவமானப்படுத்த தயங்கக் கூடாது” என்ற விளக்கி பேசியது கூடியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கைதட்டி வரவேற்றார்கள்

ஒரு வழக்கறிஞர், “தோழரே சட்டப்படி இவர்களை நாங்க தண்டிக்க முடியாது. நீங்க செய்ததுதான் சரி” என்ற  பாராட்டி நிதி கொடுத்து ஆதரித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சுயஉதவிக் குழு பெண்கள் கண்ணீர் மல்க நம்மை பார்த்து நன்றி கூறி விடைபெற்றார்கள். சட்டம் பேசி மிரட்டும் அதிகாரிகளை விவிமு-வின் போர்க்குணமிக்க போராட்டம் பணிய வைத்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

உடனே தகவல் தெரிந்து ஆண்டிப்பட்டியிலிருந்து ஒரு மகளிர் சுய உதவிக் குழு பெண் நமது போராட்டத்திற்கு நன்றி கூறி விட்டு, “எங்கள் பகுதி மேனேஜர் என்னை எந்த நேரமும் மிரட்டுகிறார். எனது குழுவில் சிலர் பணம் கட்டாததற்கு நீதான் பொறுப்பு எனக் கூறி, உடனே கட்டு இல்லைனா நோட்டீஸ் அனுப்புவேன், போலீசை வீட்டுக்கு அனுப்புவேன் என மிரட்டுகிறார். என்ன செய்வது என தெரியவில்லை. இதனால எங்க வீட்டுல ஏன் குழுவிற்கு பொறுப்புக்கு போன என எந்நேரமும் சண்டை வருகிறது. என்ன செய்யலாம்” என ஆலோசனை கேட்டார்.

“நீங்க ஏன் கவலைப்படுறீங்க. வங்கி நம்மளோடது. அதில் உள்ள பணமும் நம்முடையது. இந்த அதிகாரி இன்றைக்கு இருப்பான். நாளைக்கு வேற ஊர் போயிடுவான். நம்மள மிரட்ட இவன் யாரு, போலீசை அனுப்ப முடியாது. அவன் ஒரு முறை திட்டினா நீங்க நாலு முறை அவன் மானம் போற மாதிரி திட்டுங்க. அனாவசியமா பேசினா வாயை கிழிச்சுப்பிடுவேன் என பேசுங்க. எதற்கும் பயப்படாதீங்க. நீங்க பேச பயப்படுகிறனாலதான் அதிகாரிகள் திமிரா பேசினா பணம் கட்டிடுவீங்க என நினைக்கிறாங்க. நீங்கள பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லா சுய உதவிக் குழுக்களையும் கூட்டி ஒரு கூட்டத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்க. நாங்கள் வந்து பேசுகிறோம்” என்றவுன் நம்பிக்கையாக நன்றி கூறி, “இனி அதிகாரி மரியாதையில்லாம பேசினா நானும் பேசுறேன், மேலும் உங்க உதவி தேவையென்றால் நாடுகிறேன்” என்று கூறி முடித்தார்.

ஆளும் வர்க்கம் புரட்சியை நசுக்கவும், புதிய சுரண்டல் முறைக்கும் ஏற்பாடு செய்த சுய உதவிக் குழுக்கள் அவர்களுக்கே எதிராக திரும்புவது உண்மை. கிராமத்து மக்களை குறிப்பாக பெண்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவத்ற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் கொண்டு வந்த மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் கணிசமான பெண்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். நாமும் முதலாளிகளாகலாம் எனும் அப்துல் கலாம் டைப் ஏமாற்று மூலம் இவர்கள் தமது உழைப்பையும், செல்வத்தையும் கொடுப்பதோடு இப்படி மரியாதையும் பறி கொடுக்க வேண்டியிருக்கிறது. எனினும் இந்த ஏகாதிபத்திய சதி இனியும் தொடர முடியாது என்பதையே உசிலை போராட்டம் சுட்டிக் காட்டுகிறது.

செய்தி
பு.ஜ. செய்தியாளர்,
உசிலம்பட்டி

 1. வங்கி மற்றும் அரசு ஊழியர் செய்பவற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்ட்டல் பதிலளிக்க போவதும் இல்லை. 2 ஆண்டு சம்பளம் உயர்த்தவில்லை என்று அரசு ஊழியர் 2 நாள், வங்கி ஊழியர் 2 நாள் போராடியு போது சிதம்பரம் ஒழிக என்று ஒரு வங்கி ஊழியர் பதிவிட்டார்.

  அவர் மல்லையா பல கோடி கடன் வாங்கி கட்டவில்லை, பல லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்கிண்றனர். எங்கள் ஊதிய உயர்வு 3 ஆயிரம் கோடி தான் வரும் அதை மறுக்கும் அரசிடம் போராடுன்றோம் என்றார்,

  சரி வங்கி ஊழியர் ஒத்துழைப்பு இல்லாமல் மல்லையா எப்படி பல கோடி கடன் வாங்க முடிந்தது என்று கேட்டேன் ? அவசர செலவுக்கு 5000 வேண்டும் என்றால் நீ உயிருடன் இருப்பதற்காக தாசில்தாரிடம் சான்று வாங்கு என்று கூறும் வங்கி தொடங்கிய நாள் முதல் நட்டம் காட்டும் மல்லயா கம்பன்னிக்கு, அதுவும் 7500 கோடி கடனை பட்டை நாமம் போட்ட கம்பனின்க்கு மேலும் 1500 கோடி கொடுத்த மர்ம்மம் என்ன என்று கேட்டென்

  அவரிடம் கேட்ட பல கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. மேலும் இனி என் பதிவில் கமேண்ட் இட வேண்டாம் ஏன்றூ கூறூகின்றார். இது தான் அரச வங்கி ஊழியர் மன நிலை.. அவரிடம் நடந்த முழு விவாதத்தை பார்க்க http://kannimaralibrary.co.in/?p=1243

 2. கடனாளிகளை போராட தூண்டுவதற்க்கு பதிலாக… அவர்கள் வங்கி கடனை அடைக்க வினவு தோழர்கள் ஏதாவது வழி செய்யலாம்… வங்கிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், யாரும் எதுவும் செய்ய முடியாது……

  • அப்போ பல கோடி ஏப்பம் விட்ட மல்லையா ப்ளெக்ஸ் வைக்க வேண்டியது தானே?
   வைத்தார்களா?

  • “வங்கியில் கடன் வாங்கி கடன் அடைக்க முடியாதவர்கள் குற்றவாளிகள் அல்ல. நாம் இவர்கள் கொடுத்த பணத்தில் நான்கு கார் வாங்கி ரோட்டுல விடல. ஆடு, மாடு வாங்கினோம், விவசாயம் செய்தோம், மழையில்லாத்தால் நமது பகுதியே வறட்சி பகுதியாக ஆகிவிட்டதால் கடன் அடைக்க முடியவில்லை. நாம் ஒன்றும் பஸ்ஸ்டாண்டு திருடர்களோ அல்லது தேடப்படும் குற்றவாளிகளோ இல்லை. அவர்களைத்தான் காவல்துறை பேருந்து நிலையத்தில் போட்டோ ஒட்டி வைப்பார்கள்.

 3. கேரளாவில் ஒரு ஏழை விவசாயியை கல்விக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதற்காக கைது செய்துள்ளனர்.
  http://www.thehindu.com/news/national/kerala/farmer-arrested-for-failure-to-repay-education-loan/article5730687.ece

  ஆனால் 20,000 கோடி மோசடி வழக்கில் உச்சநீதிமன்றமே ஆணை பிறபித்த பிறகும் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறான் சகாராவின் சுப்ரதா ராய்.
  http://profit.ndtv.com/news/corporates/article-sahara-chief-subrata-roy-moves-supreme-court-for-cancellation-of-arrest-warrant-381743

  இது தான் இந்திய அரசு அமைப்பின் போலி ஜனநாயகத்தின் லட்சனம்.

 4. போஸ்டீன் வாசகம் நன்று!
  திடீர் போராட்டம் நடத்தய உசிலை வி.வி.மு தோழர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

 5. நல்ல முன்னுதாரணமிக்க போராட்டம், போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்…

 6. when you get loan from bank, try to pay. Do not form group and shout against bankers who are doing their duty. if they are abusive, report that but do not forget you are obliged to pay the loan, just because someone get crores of money from bank and never repays you are not free to runaway with loan money..

 7. வங்கி ஊழியர்கள் கடனை வசூல் செய்யாமல் வங்கியில் வேலை செய்வது எப்படி/எவ்வாறு என ஒரு பதிவு எழுதுங்கள் வினவு? வங்கிகளை எப்படி நடத்துவது என தெரிவியுங்கள்? வெற்று கூச்சல் போடாதீர்கள். எந்த வங்கி ஊழியரும் பெரு முதலாளிக்கு கடன் கொடுப்பதற்கு ஆதரவாக இல்லை. தனியார்மய கொள்கையை அமுல்படுத்துவது அரசுதான், வங்கி ஊழியர் அல்ல.

 8. “நீங்களா போட்டோவை எடுக்குறீங்களா? நாங்க எடுக்கட்டுமா, நாங்க எடுத்தா விபரீதமா இருக்கும்” என எச்சரிக்கப்பட்டது.”//// avlo periya apa takker a neenga… parra!!!

 9. Mallaya sotha parimuthal paniyachunu vinavukku theriyuma… illa vinavu ethavathu karpanai vulagil irukkanu theiyalla. SBI Mallayya voda shares and bunglows parimudhal panniyachu…… Ponga boss ungalluku ozhunga puluga kuda theriyala…aiyo aiyo

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க