Thursday, November 26, 2020
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி - படங்கள்

நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்

-

17-3-2014 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் நெய்வேலி இரண்டாவது சுரங்க நுழைவு வாயிலில் ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமார் (வயது 34) என்பவரை பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து, இறந்தால். மனித உரிமை பாதுகாப்பு மையம் இதை வன்மையாக கண்டிக்கிறது. கொலைகாரன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

அவருக்கு அமலா லுசியா ராணி என்ற மனைவியும், பிராங்லின் என்ற 3 வயது மகனும்,ஒலிவியா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது இந்தக் குடும்பம் அஜுஸ் நகரில் வசித்து வருகின்றனர். கொல்லப்பட்ட ராஜ்குமாரது சகோதரர் பாலக்குமாரும் ஒப்பந்த தொழிலாளியாக நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்கின்றார்.

கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்து போன அவரது சகோதரர் சுரேஷ் குமாரும் இங்கேதான் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்திருக்கிறார். அவரது இழப்புக்கான  பணம் எப்போது வரும் என விசாரிக்கவே ராஜ் குமார் இரண்டாவது சுரங்க அலுவலகத்திற்கு சென்றார். பாதுகாப்பு படை வீரர் உளளே விட மறுத்து வாக்குவாதம் செய்தார். ராஜ்குமார் யாருக்கோ போனில் தகவல் பேச முயன்ற போது இந்த படு கொலை நிகழ்த்தபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கேட்டில் உள்ள சி.சி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்தப் படு கொலையை நிகழ்த்திய படை வீரர் நோமென்னை பாதுகாக்க பாதுகாப்பு படைவீரர்கள், நீதி கேட்டு சென்ற தொழிலாளிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதோடு தாக்கவும் செய்தனர். 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தொ.மு.ச. தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சேகர் ஆகியோரும் காவல் துறையால் தாக்கப்பட்டனர்.

உரிய தீர்வு கிடைக்காமல் பேச்சு வார்த்தைக்கு பிறகே  உடலை எடுக்க அனுமதிப்போம் என திரண்ட தொழிலாளர்கள், ஆம்புலன்சை மறித்தனர். உடனே, கடலூர் மாவட்ட எஸ்பி ராதிகா, போலீசு தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசி தொழிலாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. ராஜ்குமார் உடல் அருகே இருந்த உறவினர்களும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு காயமடைந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குதான் இருந்தனர். தொழிலாளிகளுடன் உறவினர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய தமிழக காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய பாதுகாப்பு படையினர் மற்ற மாநிலங்களில் நடந்து கொள்வது போலவே இங்கும் பொது மக்களிடம் அத்து மீறி நடந்து கொள்வது, அடிப்பது என திமிராக தனி ராஜியத்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் சாலை ஓரமாக பேசிக் கொண்டிருந்த ஆனந்த் னும் தொழிலாளியை இந்த கொலைகார மத்திய போலீசு படை கடுமையாக தாக்கி வெளியே வீசி எறிந்தனர், என பாதிக்க பட்டவர்கள் ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர்.

ராஜ்குமார் ‘எதிர்த்து’ பேசினார் என்பதற்காக தலையில் சுட்டு கொல்லலாம் என்றால் பாதுகாப்பு படையினரின் கேள்விக்கிடமற்ற அதிகாரம், அவர்களுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்புதான் இந்த அத்து மீறலுக்கு காரணம்.

 • ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமாரை சுட்டு கொன்ற நோமேன் என்ற பாதுகாப்பு படை போலீசை உடனே கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். அதை தடுக்க தவறிய பிற அதிகாரிகளின் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
 • சுட்டு கொல்லப்பட்ட ராஜ்குமார் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவர் மனைவிக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
 • நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய பாதுகாப்பு படையை நிரந்தரமாக அப்புறபடுத்த வேண்டும்.

இனி ஒரு தொழிலாளி அரச வன்முறைக்கு பலியாகமல் இருக்க தேவையான போராட்டத்தை அனைத்து தொழிலாளர்கள் ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர அமைப்புகளும்,மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றினைந்து பலமாக முன்னெடுக்க வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம – தமிழ்நாடு

நாள் 17-3-2014

 1. என்ன திமிர் இந்த போலீஸ் நாய்களுக்கு? மக்கள் பயந்து ஒதுங்குவதால் தான் இந்த நாய்கள் இவ்வளவு ஆட்டம் போடுகின்றன. மக்களைத் திரட்டி இந்த நாய்களை நேருக்கு நேர் எதிர் கொள்ள வேண்டும். துப்பாக்கி தான் இவர்களுக்குத் தீர்வு.

 2. துணை ராணுவ ஏவல் நாய்கள் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களில் கொல்லப்படும் போதெல்லாம் தேசப்பாதுகாப்பு – இடது தீவிரவாதம் கூப்பாடு போடும், ஊடக பன்றிகள் இது போல் மக்கள் கொல்லப்படும் போது அரச தீவிரவாதம் என்றோ வலது தீவிரவாதம் என்றோ சொல்வதில்லை.

  எல்லாவற்றுக்கும் மொத்தமாக ‘ஒரு நாள்’ மக்கள் தீர்ப்பை எழுதுவார்கள்.. அந்த நாளை விரைவில் கொண்டு வர போராடுவோம்.

 3. சுமார் ஒரு வருடம் முன்னாடி சத்தீஸ்கரில் ஒரு கலெக்டரை மாவோயிஸ்டுகள் கடத்தும் போது ஒரு ஆயுதம் ஏந்தாத வாகன ஓட்டுனரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லும் போது, இது போன்ற கோரிக்கையை வினவு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…… மாவோயிஸ்டுக்கு ஒரு நியாயம், சிஆர்பிஎப்’க்கு ஒரு நியாயமா???? துப்பாக்கி யார் சுட்டாலும் வெடிக்கும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளனும்… சும்மா துப்பாக்கியோட நிக்கறவன் கிட்ட போயி லொல்ளு பேசுனா, சுடத்தான் செய்வான்… இறந்தவர் மனைவிக்கு நிரந்தர வேலையும், அவரின் பிள்ளைகள் பேரில் தலா மூன்று லட்சம் ரூபாயும் டெபாஸிட் செய்ய கோரலாம்….. ஜம்பது லட்சம்மெல்லாம் ஒவர்… அவிங்க தரமாட்டாங்க பாஸூ………

  • வினவு ,

   குண்டு இந்தியன் மீது பாயட்டும் ! அப்போது அவர் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் தர மட்டும் கோரலாம்

   • என் மண்ணில் என் சக தொழிலாளி சுட்டுக் கொலை செய்யபட்டது உனக்கு கேலியா இருக்கா?

   • //இந்தியன்,நீ யென்ன கவெர்மென்ட்டுக்கு ப்ரந்தவனா,…………..//

    ஆதங்கம் அவர்களே நீங்கள் இப்படி அசிங்கமாக விமர்சிக்க வேண்டாம் அவரின் தாயும் நம் சகோதரிதான்.

    அவருடைய பெயரை பார்த்தாலே புரியுமே அவர் எந்த வகை என்பது…

  • நக்சலைட்டும் சாதாரண மக்களும் ஒன்றா …. தைரியம் இருந்தால் சத்தீஸ்கர் போய் நக்க்சலைட்ட போயி சுட வேண்டியதுதானே ………. ஓவரா பேசுனா சுடுவாங்கலாம்….. அந்த பகுதி மக்களின் வளங்களில் வாழக்கை நடத்தும் கும்பல் அவர்களை படுகொலை செய்வது என்பது கொடிய துரோகம் ………. 50 லட்சம் ஓவரு… உன்ன போட்டு தள்ளிட்டு 5 லட்சம் உங்க குடும்பத்துக்கு கொடுத்தா ஏத்துப்பியா?

 4. இந்த செய்தியை வெளியிட்டுள்ள முதலாளித்துவ ஊடகங்களில் ‘CRPF தனது கடமைத்தானே செய்துள்ளது’ என்றும் ‘அனுமதியில்லாமல் அங்கு சென்றது தொழிலாளியின் தவறு’ என்றும் ‘ஒரு வேளை அவர் தீவிரவாதியாக இருந்திருந்தால்’ என்றும் ஊடக பன்றிகளின் விட்டையை மூளையாக பெற்றுள்ள பிராணிகள் பின்னூட்டமிடுகின்றன.

  எது கடமை? நிராயுதபாணியை சுட்டு கொல்வது தான் கடமையா? அதிகார வர்க்கத்தை பார்த்து “கடமையை” மறந்து வாலை சுருட்டிக்கொள்ளும் இந்த ஏவல் நாய்கள் தான் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடும் போது “கடமையை” செய்கின்றன.

  அனுமதியின்றி “எவரையுமே” உள்ளே அனுமதிக்காமல் இருந்திருந்தால் எவருமே வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டார்கள். மேலும், பிளாண்ட் 1 -ல் வேலை செய்ய அனுமதியிருக்கும் போது அவர் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்? இவை போன்ற எளிய லாஜிக் கூட அவர்களுடைய சிந்தனையில் வருவதில்லை. மாறாக, இப்படுகொலையை நியாப்படுத்த இண்டு இடுக்களிலிருந்து எல்லாம் லாஜிக்கை கொண்டு வருகிறார்கள்.

  அனுமதியின்றி உள்ளே வந்தால் கொல்வது சரியென்றால், கூடங்குளத்தில் அம்மக்களின் அனுமதி பெற்றா அணு உலை அமைக்கப்படுகிறது? மத்திய இந்திய காடுகளில் பழங்குடி மக்களின் அனுமதி பெற்றா அவர்களுடைய வாழ்வாதாரங்கள் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன?
  விவசாயிகளின் அனுமதி பெற்றா விளைநிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன?

 5. அது என்னய்யா தலா 3 லட்சம்?? இறந்தவன் உயிருக்கு விலை வைக்க நீர் யார் ?? ஐம்பது லட்சம் கேவலம் ஒரு தொழிலாளியின் உயிருக்கு ரொம்ப அதிகம் என்பது தானே உன் வாதம்?? என்ன ஜென்மம் அய்யா நீ ?

 6. இந்தியன் என்று எழுதுகிறவன் அரசு பயங்கரவாதத்தின் பிரதிநிதி.அவனுடைய குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் இதைத்தான் அவன் சொல்வானேயானால் அவனும் ராஜ்குமாரைக் கொன்றவனும் ஒரே ஆள்தான்.மக்களால் அழிக்கப்படவேடியவர்கள்.

  • //இந்தியன் என்று எழுதுகிறவன் அரசு பயங்கரவாதத்தின் பிரதிநிதி.அவனுடைய குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் இதைத்தான் அவன் சொல்வானேயானால் அவனும் ராஜ்குமாரைக் கொன்றவனும் ஒரே ஆள்தான்.மக்களால் அழிக்கப்படவேடியவர்கள்.//

   ராஜ்குமாரைக் கொன்றவன் மட்டுமில்லை காஸ்மீரியை கொல்பவனும் குஜராதில் முஸ்லீம்களைக் கொன்றவனும் அதற்குநியாயம் கற்பிப்பவனும் மக்களால் அழிக்கப்படவேடியவர்களே…

 7. ஈரோட்டில் சத்தி பன்னாரி அம்மன் அருள் பெற கிளம்பிய நாங்கள் முதலாளித்துவத்தின் மகிமையின்
  அருளால் நிகழ்த்தப்பட்ட ஆலைச்சாவுகளின் கொடூரத்தை கண்டு சொல்லொனா துயருற்றோம்!

  பெருந்துறை அரசு மருத்துவமனையின்
  வாயிலில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் கூடியிருந்ததை கண்டு கூட்டத்தில்
  விசாரித்ததில் “சிப்காட் கேபிஆர் மில்லில் நேர்ந்த விபத்தில் 7 பேர்
  இறந்தவிட்டதாகவும்,மேலும் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்”
  என்ற அதிர்ச்சிகரமான பதில் கிடைத்தது.
  மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள
  சிப்காட் சென்ற எங்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை
  வாகனங்கள் வரவேற்றன.அவற்றை கடந்து கேபிஆர் மில்லை அடைந்த போது 100-120
  அளவில் மக்கள் அங்கு கூடியிருந்தனர்.கம்பெனியின் வாயிலில் காவல்துறை
  வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.அருகாமையில் இருந்த கடையில்
  விசாரித்ததில் அந்த கம்பெனியில் சுமார் 400-450 தொழிலாளர்கள் வேலை
  செய்கிறார்கள் என்றும்,காலை 9 மணியிலிருந்தே அம்புலன்ஸ் வருவதும்,
  போவதுமாக இருந்ததாக கூறினர்.மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரிடம்
  பேச்சு கொடுத்ததில் அவர் அருகாமையில் உள்ள கம்பெனியில் வேலை செய்வதாக
  கூறினார்.அவரிடம் விபத்து குறித்து கேட்டதில் அது கம்பெனியின் கழிவு
  சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஸ்லட்ஜ் டேங்க்கில் நடந்ததாகவும்,அந்த
  டேங்கில் உள்ள பம்பை பழுது நீக்க 3 அடி உயர சாயக்கழிவில் இறங்கிய
  தொழிலாளர்கள் மயக்கமடைந்து விழுந்தனர் என்றும் அவர்களை காப்பாற்ற
  இறங்கியவர்களில் சிலரும் மயங்கி கழிவில் மூழ்கி இறந்ததாகவும் அந்த
  ஆலையில் வேலை செய்யும் தன் நண்பர் சொன்னார் எனக்கூறினார்.மேலும்
  இறந்தவர்களில் 5பேர் உள்ளுர், இருவர் வடமாநிலம் என்றும் கூறினார்.அவரிடம்
  பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
  தந்தி தொலைக்காட்சி
  நிருபர்களிடம் அங்கு கூடியிருந்த மக்களும், தொழிலாளர் சிலரும் “நீங்கள் எடுக்கும் எந்த பேட்டியும் முழுசா ஒளிபரப்பரதில்ல. நாங்க வேலமெனக்கிட்டு தகவல் சொன்னா நீங்க கம்பெனி பேரைகூட தனியார் நிருவனம்னுதான் போடறீங்க. அதுக்கு எதுக்கு எங்ககிட்ட பேட்டி? போய் கம்பெனி மொதலாளிகிட்டாயே போய் எடுத்துக்கங்க” என்று வாக்குவாதத்தில்
  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த மீடியாவையும் அவற்றின்
  கயமைத்தனத்தையும் தங்கள் அனுபவத்திலிருந்து எடுத்துக்காட்டுகளுடன்
  திட்டித் தீர்த்தனர்.ஏதேதோ பேசியும் சமாளிக்க முயற்சித்து முடியாததனால்
  அங்கிருந்து பேக் பண்ணிய நிருபர் குழுவினர், மருத்துவமனையில் மக்களிடம்
  பேட்டி எடுக்கப்போவதாக சொல்லி கிளம்பினர்.
  அங்கிருந்த சிலர் நிர்வாகம் ஏன்
  கம்பெனியின் உள்ளே இருக்கும் தங்களின் உறவினர்களையும் மற்ற
  தொழிலாளர்களையும் வெளியில்விட மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.அந்த
  சமயத்தில் கம்பெனியிலிருந்து சிறுசிறு அளவில் தொழிலாளர்கள் வெளியே
  வந்தனர்.அவர்களில் ஒரு இளைஞனிடம் உள்ளே என்ன நடக்கிறது என்று கேட்டதற்கு
  பயங்கலந்த கவனுத்துடன் ஐந்து தொழிலாளர்கள் இறந்துவிட்டதால் தங்களுக்கு
  விடுப்பு அளித்து அனுப்பிவிட்டனர் என்று கூறி மேலும் பேச மறுத்து
  கிளம்பிவிட்டார்.அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் நெய்வேலியில் ஒரு
  தொழிலாளியின் மரணத்தை கண்டித்து கூடிய கூட்டம் கூட இங்கு கூடவில்லையென
  வருந்தினர்.
  இந்த மரணங்கள் தொழிலாளர்களின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும்
  நடந்துவிட்ட துயரசம்பவம் என்று சில கண்ணீர் துளிகளுடன் அரசும், முதலாளிகளும், அவர்களின் கைக்கூலி ஊடகங்களும் முடித்துகொள்வர்
  ஆனால் இவையும் இதைப்போன்ற மற்ற ஆலைச்சாவுகளும்,லாபவெறி பிடித்த
  நிறுவனங்களின் பாதுகாப்பு குறைபாடுகளாலும்,தொழிலாளர்கள் மேல் திணிக்கப்படும் அதிக
  வேலைப்பளுவாலும் ஏற்படுபவை.மேலும் இவற்றை தவிர்க்க தொழிலாளர்கள் நலனில்
  சமரசமின்றி போராடக்கூடிய தொழிற்சங்கத்தின் கீழ் தொழிலாளர்கள் அணி
  திரளவேண்டும்.

 8. டெல்லியை ஒட்டி குர்கானில், மாருதி தொழிர்சாலையில் ஒரு ஜெனரல் மனேஜரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் தாக்கி கொலை செய்த போது எவ்வளவு நிவாரணம் கிடைத்ததோ, அவ்வளவு தான் இப்போழுதும் கிடைக்கும்…..நிவாரண தோகையை அராசாங்கள் சொல்லும் பொழுது எல்லோருடைய எழுத்துக்க்கும், அழுகாச்சிக்கும் சூப்பரான விடை கிடைக்கும்….வாயை தொறந்துகிட்டு பாத்துகிட்டே இருங்க……..

 9. பார்ப்போம் அராசாங்கம் எவ்வளவு நஷ்ட ஈடு தரபோகுதுன்னு…. தொகை கம்மியாயிருந்தா இங்கே மறுமொழியிட்ட எத்தனை வீரனுங்க அதை எதிர்த்து போராட போராங்கன்னு பார்ப்போம்…. இங்கே எல்லாம் வாய் சவடால் தான்… ஒரு மண்ணும் யாராலும் கிழிக்க முடியாது… சும்மா வினவு மாதிரி ஆளுங்க ஏதையாவது சொல்லிகிட்டும் செய்துகிட்டும் தான் இருப்பாங்க…ஆனா அதனோட பல “பூஜ்யம்” தான்…. இன்னும் ஒரு வாரம் கழித்து இந்த மேட்டரை பத்தி அலசலாம்…

  • உனது தைரியம் பாராட்டப் படக்கூடியது.ஆனால் ஒன்று புரிந்து கொள் உன் போன்ற கோடிக்கணக்கான முட்டாள்களை மாற்றுவதற்கு சற்று காலதாமதம் ஆகுமே ஒழிய நடக்காத விசயமல்ல அது.அத்தகைய காலம் வரும் போது உன் மீதும் நேசம் வைப்பர் தோழர்கள்.
   போபர்ஸ்,பங்காரப்பா,ஸ்பெக்ட்ரம்…போன்ற ஊழல்களால் ஏற்பட்ட நஸ்டத்தின் போது கண்களை மூடிக்கொண்ட உன் போன்றவர்கள் இப்போது குலைப்பது கண்டு மிகவும் பெருமையாக உள்ளது.சீ…
   இருக்கும் உயிர் படைப்புகளிலேயே மிகவும் கேவலமான படைப்புகள் உன் போன்ற மானிடர்களே.

 10. தொடர்ந்து தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் இந்த அரசுக்கும் அதன் கூலிப்படையான போலீஸ் நாய்கலுக்கும் பாடம் புகட்ட உழைக்கும் வர்க்கமாய் ஒன்றுனைவோம்

  தொழிலாளி ராஜ்குமாரின் மரணத்திர்க்கு கண்ணீர் சிந்துவது என்பது எந்த பலனையும் தரது. உழைக்கும் மக்களை அணிதிரட்டி தொழிலாளளிகளின் உரிமையை மிட்டெடுக்க நாடு தழுவிய போராட்டத்தை முன்னேடுத்து போராடுவோம் என்று உறுதியேற்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க