Thursday, August 11, 2022

போங்கடா… நீங்களும் உங்க ஜனநாயகமும் !

-

தேர்தல் புறக்கணிப்பு

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

 • காசிருந்தால்தான் கல்வி!
  காசிருந்தால்தான் மருத்துவம்!
  காசுக்குத்தான் தண்ணீர்!
  காசுக்குத்தான்சாலை!
  காசுக்குத்தான் கக்கூசு!
 • எல்லாவற்றையும்
  காசாக்குவது அரசின் உரிமையாம்!
  இதை ஒப்புக்கொண்டு
  ஓட்டுப்போடுவது மக்களின் கடமையாம்!
  போங்கடா… நீங்களும்
  உங்க ஜனநாயகமும்!
 • சைகோ, டூப்டன், சாதிதாசு
  மூணும் பஸ் ஸ்டாண்டு கக்கூசு!
  கொள்கையெல்லாம் தமாசு
  மூணும் மோடிக்கு பெர்முடாசு!
 • ஜெயாவும் கருணாநிதியும் வர்றாங்க
  சொம்பெடுத்து உள்ளே வை!
  காவிவெறியர்களும் சாதிவெறியர்களும் வர்றாங்க
  கம்பெடுத்து வெளியில் வை!
 • பெரியார் மண்ணை மோடிக்குக் கூட்டிக் கொடுக்கும் எட்டப்பனே வைகோ!
 • போயசு தோட்டத்தில் புல் பிடுங்கிய போலி கம்யூனிஸ்டுகளே!
  நீங்கள் தேர்தலில் நிற்பது எதைப் பிடுங்க?
 • உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப். போடும்
  உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன?
  இதற்குத் தேர்தல் ஒரு கேடா?
 • கோக், பெப்சி, பா.ம.க, மிராண்டா…
  காங்கிரசு, பி.ஜே.பி, ம.தி.மு.க, லிம்கா…
  தி.மு.க, அ.தி.மு.க, தெலுங்குதேசம், ஃபாண்டா…
  எல்லாமே ஏகாதிபத்திய பிராண்டுதான்டா!
 • அரசு கொள்கை முடிவின்படி சட்டபூர்வமாகவே
  கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு வழிவகுப்பதுதான்
  தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்!
  இதற்குப் பாதை வகுத்துக் கொடுக்கும்
  அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு வீசப்படும்
  எலும்புத்துண்டே இலஞ்சஊழல்!
  தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும்
  ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!
 • கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான
  தேர்தலைப் புறக்கணிப்போம்!
 • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
 • நிலம், தண்ணீர், வேலை வேண்டும்!
  கல்வி, மருத்துவம், சாலை வேண்டும்!
  போராட்டம் வேண்டும்…புரட்சி வேண்டும்!
  ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!
 • கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய் நாடாளுமன்றம்!
  பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு கங்காணிகளாய்
  கலெக்டர்கள், அதிகாரிகள்!
  நீதிக்கு விலைபேசும் நீதிபதிகள்!
  நாலும் உதிர்த்துவிட்ட ஊடக விலைமாந்தர்கள்!
  வல்லுறவு – கொலை -வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
  அரசும் சமூகமும் அழுகி நாறுது!
  அதுக்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகுது!
  போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
  புதிய ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பு!
 • பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி – டாடா போன்ற
  தரகு அதிகார வர்க்க முதலாளிகளின்
  சொத்துக்களைப் பறிமுதல் செய்து
  அரசுடைமையாக்குவோம்!
 • பகற்கொள்ளையடித்த
  ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப்
  பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்!
 • கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட
  அனைத்து சேவைத்துறைகளிலும்
  தனியார்மயத்தை ஒழித்து பொது உடைமையாக்குவோம்!
 • வளர்ச்சி எனும் பெயரில்
  நீர், நிலம், காற்று உள்ளிட்ட
  சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
  முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவோம்!
 • தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலமுதலைகள்,
  கல்வி,  மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின்
  சொத்துரிமை, வாக்குரிமையைப் பறிப்போம்!
 • உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும்
  மக்கள் அதிகாரத்தைப் படைப்போம்!
 • அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின்
  அதிகாரத்தைப் பறித்தெடுப்போம்!
 • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ்
  அவர்களைக் கொண்டு வருவோம்!
 • சட்டம் இயற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம்
  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே!
  தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும்,
  தண்டிக்கவும்  அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தமிழ்நாடு

தொடர்புக்கு

அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம்,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

அலைபேசி: 94448 34519

 1. எம் என் சி கம்பனி காரன் நம்ம நாட்டுலயே தொழிற்ச்சாலை ஆரம்பிச்சு கொறஞ்ச கூலிக்கு நம்மட்டயே வேலை வாங்கிட்டு கார் ,செல்போன்,சாப்ட்வேர்னு தயாரிச்சு எடுத்துட்டு வந்து நம்ம கிட்டயே வித்துட்டு கொள்ளை லாபம் அடிச்சிட்டு அரசியல் வாதிகளுக்கு பங்கு குடுத்துட்டு நம்ம வரிப்பணத்துல கொஞ்சம் வரி விலக்கும் வாங்கிட்டு போயிட்டு இருக்கான் என்ன இழிச்சவாய் தேசம் பாருங்க இதுல ஓட்டு போட்டு மேலும் இழிச்சவாயனா ஏமாளியா மாறனுமா ,வினவுட்ட இதுக்கு ஏதானா மாற்று திட்டம் இருக்குதா புரட்சி போராட்டம் தவிர ஏன்னா புரட்சி போராட்டம் ஒட்டு போடாதனா யாரும் கேக்க மாட்ரானுகளே வினவு என்ன பன்னலாம் விரிவா விளக்குங்க

 2. வாக்களிக்காமல் இருந்தால் உங்கள் பேரில் வேறு எவனாவது காசுக்கு வாகளிக்கலாம். இதுவும் நடக்கலாம், இப்போ இருக்கும் சூழலில். 49-ஓ பற்றி யோசித்து பாருங்கள்.

 3. இதைப் பாருங்கள்…அமெரிக்காவைப் பற்றி ஜார்ஜ் கார்லின் கூறியது! இந்தியாவுக்கு இது மிகப் பொருத்தமானது!

 4. // … கருணாநிதியும் வர்றாங்க
  சொம்பெடுத்து உள்ளே வை //

  சரியாச் சொன்னேள் போங்கோ!

 5. இது புரையோடிய தேசம்!
  மனிதர்களும்,தேசமும் பிழைக்க வாய்ப்பு கிடையாது

  • அப்படி ஒரேயடியாக கை கழுவி விட முடியாது சீதாபதி சார்,

   It is diffficult, But not Impossible!

   மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி அரசியல்வாதிகளின் சட்டையை பிடித்து நல்லாட்சி கொடுக்க கட்டளையிடும் நாள் வரும். ஆனால் வெறும் கனவு கண்டால் அது நடக்காது. நாம் அனைவரும் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆக்கபூர்வமாக இந்த பிரச்சினைக்கு முடிவு என்ன என்று ஆலோசிப்போம். நமது காலத்தில் முடியவில்லை என்றாலும், நமது சந்ததியினர் காலத்திலாவது நல்லது நடந்தால் சரி. ஆனால் அதற்கு இப்போதிருந்தே நாம் அனைவரும் அடித்தளம் இட வேண்டும்.

   ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். நமது நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் ஒரு காகிதத்தில் எழுதி, அந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று பல வழிகளில் யோசிப்போம், கண்டிப்பாக ஏதாவது நல்ல தீர்வு கிடைக்கும். ஒரு தனி மனிதரால் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், அனைத்து மக்களும் ஒன்று கூடி யோசிக்கும்போது பல புதிய தீர்வுகள் தோன்றலாம். அதில் சிறந்த தீர்வை பின்பற்றி நாட்டை முன்னுக்கு கொண்டு வரும் வேலையை காண்போம்.

 6. எண்பதுகளில் நக்சல் இயக்கத்தை ஒடுக்கியதே எண்கள் ஆருயிர் தலைவன் செய்த சாதனைதான்.அதை ஜீரணிக்க முடியாமல் எங்கள் தலைவனை விமர்சிக்கிறாய்..பரிதாபம ஐயோ!

  • உண்மைதான்.நம்மிடையே நிறைய எம்.ஆர்.ராதாக்கள் இல்லாதது
   தமிழர்களின் துரதிர்ஸ்டம்

 7. ஏப்பா! இவ்வளவு விவரமா சொல்றியே…நம்ம நாட்டுல இதான்யா பிரச்சனை. இதப்பத்தி தெரியாதவன் ஓட்டு போடுறான். தெரிந்தவன்… ஓட்டும் போடுறதில்லை! வேட்பாளராவும்நிக்க முடியாத கோழைகளாக இருக்கான்! சுயேட்சையாகநிக்கலாமுல்ல இவிங்கல்லாம் பக்கம்பக்கமாக பதிப்பிடவோ எழுதவோ தான் முடியுது(வினவையும் சேர்த்துதான்).

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க