Thursday, April 9, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் 16-வது முறை ஏமாறப் போகிறீர்களா ? - கார்ட்டூன்கள்

16-வது முறை ஏமாறப் போகிறீர்களா ? – கார்ட்டூன்கள்

-

ஒட்டச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள்

அடிமைகளின் தேர்தல்

சொந்த செலவில் சூனியம்

ஏறி சவாரி செய்யும் எருமை

தேர்தல் - கார்ப்பரேட் கொள்ளைக்கு லைசன்ஸ்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. வினவின் கட்டுரைகளிலும், வினவில் பின்னூட்டமிடும் தோழர்களின் பதிவுகளிலும் பெரும்பாலும் தற்போதைய தேர்தல் முறை அமைப்பை சாடுவது முன்னிலை படுத்தப்படுகிரதே ஒழிய அதற்கான மாற்று வழிமுறை பற்றி தெளிவான பதில்கள் தரப்படுவதில்லை.

  ஜனநாயகம், புரட்சி முறை ஆட்சி, மன்னராட்சி, எந்த ஆட்சி முறை ஆனாலும்,

  ஆள்பவர்கள் நேர்மையாகவும் திறமையாகவும் இருந்தால் ஆட்சி நன்றாக அமையும்.
  ஆள்பவர்கள் பலமில்லாதவராகவோ, ஊழல் நபராகவோ, இருக்கும் பட்சத்தில் ஆட்சி சீரழியும்.
  ஆள்பவர்கள் சர்வாதிகாரியாக இருந்தால் மக்களின் குரல்வளை நசுக்கப்படும்.

  இது உலக நியதி.

  ஆகவே, மீண்டும் மீண்டும் தேர்தல் முறையை விமர்சிக்கும் வேலையை தாண்டி அடுத்து ஆக்கபூர்வமாக என்ன செய்வீர்கள் என்று விளக்கினால் என்னை போன்ற சாமானியர்களுக்கு பயனாக இருக்கும்.

  நீங்கள் ஆதரிக்கும் புரட்சி முறை ஆட்சியில் ஆட்சிக்கு வரும் வரை நல்லவராக ஒருவர் நடித்து, பதவியேற்ற பின்னர் முழு சர்வாதிகாரியாக ஆனால் என்ன செய்வது.
  தற்போதைய தேர்தல் முறையில் குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது மக்களை இந்த அரசியல் வாதிகள் தேடி வர வேண்டிய நிலை உள்ளது.

  உலகில் எந்த நாட்டில் நடந்த புரட்சியை எடுத்து கொண்டாலும், பெரும்பாலும் பதவி கிடைத்தவுடன் சர்வாதிகாரம் தலை தூக்குகிறதே, இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்.

  ஒரேயடியாக தேர்தல் முறையை ஒழிப்பதை விட, தற்போதைய தேர்தல் முறையில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதாவது வழிமுறை இருக்கிறதா, மக்கள் ஆட்சியின் முக்கிய முடிவுகளில் நேரடி பங்கு வகிக்கும் வழிமுறை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கலாம்.

  ம.க.இ.க. ஆரம்பித்து ஒரு இருபது, முப்பது வருடங்களாக மக்களிடையே தேர்தலில் பங்குபெறுவதை தடுப்பதில் பெருமளவு முயற்சி எடுத்ததில் இத்தனை வருடங்களில் எத்தனை சதவீத வெற்றி ஏற்பட்டுள்ளது? எத்தனை மாநிலங்களில், எத்தனை தொகுதிகளில் மக்கள் தேர்தலை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்?

  இதிலிருந்து என்ன தெரிகிறது, தேர்தலை புறக்கணிக்க நீங்கள் சொல்லும் வழியை மக்கள் ஏற்கவில்லை. இல்லை நீங்கள் உங்கள் கருத்துக்களை மக்களுக்கு புரியும் வழியில் புரியும் மொழியில் சொல்லவில்லை.

  நேற்று பெய்த மழையில் முளைத்த அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறதென்றால் முப்பது ஆண்டு கால வரலாறு இருந்தும் ம.க.இ.க வினால் ஏன் மக்களிடையே ஒரு சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?

  தங்களின் வழி தவறா, அல்லது மக்களிடையே தங்களின் கருத்துக்களை கொண்டு செல்லும் வழி தவறா?

  தங்களின் சித்தாந்தத்தின் தோல்வியா இது, அல்லது சித்தாந்தத்தை மக்களிடையே பரப்ப முயன்ற முறையின் தோல்வியா?

  தெளிவான நேர்மையான விவாதங்களை வரவேற்கிறேன். காத்திருக்கிறேன்.

  • இந்த தேர்தல் முறை மக்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

   டம்மி துப்பாக்கியால் யாரையாவது சுட முடியுமா? முடியாது.
   அவ்வாறு தான் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையின் கீழ் நமது சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் டம்மிகளாக்கப்பட்டுள்ளன.
   எனவே அங்கே யார் போனாலும் எதையும் செய்ய முடியாது.
   எனவே தான் இந்த போலி ஜனநாயகத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கிறோம். வெறுமனே புறக்கணித்தால் மட்டும் போதுமா? இல்லை மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக சமூகத்தை உருவாக்க அமைப்பாக திரள வேண்டும் என்கிறோம்.

   • // டம்மி துப்பாக்கியால் யாரையாவது சுட முடியுமா? //

    முடியாது தான். ஆனால் புரட்சி என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய குழுவின் கையில் ஆட்சியை கொடுத்த பின் அது கொடுங்கோல், சர்வாதிக்கார ஆட்சியாக மாறினால் என்ன செய்வது என்ற பயம் தான் எங்களை போன்ற பொதுமக்களுக்கு உள்ளது. எங்கள் பயத்தை போக்குவதற்கு நீங்கள் என்ன முயற்சி எடுக்க போகிறீர்கள்? டம்மி துப்பாக்கியினால் யாரையும் சுட முடியாது. ஆனால் நிஜ துப்பாக்கியை கொண்டு குற்றவாளியையும் சுட முடியும், அப்பாவியையும் சுட முடியும். உங்களது நிஜ துப்பாக்கி அப்பாவிகளை சுடாது என்று என்ன நிச்சயம்?

    பதவி கிடைக்காதவரை எல்லோரும் ஒழுக்கமானவர்களாக, நேர்மையானவர்களாக, ஜனநாயகவாதிகளாக தான் முகமூடி அணிந்து வருகிறார்கள். பதவி கிடைத்த பின், பவர் கிடைத்த பின், அவர்கள் கொண்டோன்மையானவர்களாக ஆகாமல் இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்.
    உங்கள் மீது எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு நம்பிக்கை வரும் வண்ணம் நீங்கள் இது வரை என்ன செய்தீர்கள். எதிர்ப்பு அரசியலை தாண்டி மக்களுக்கு உங்களால் நேரடியாக ஏதேனும் பயன் அமைந்துள்ளதா?

    ஜனநாயகம் இப்போது போலி ஜனநாயகம் ஆனது என்று சொல்கிறீர்கள்.
    கம்யூனிஸ்ட்கள் இப்போது போலி கம்யூனிஸ்ட்டுகளாக மாறி விட்டனர் என்று சொல்கிறீர்கள்.
    சரி, ஆட்சி அமைக்கும் வரை புரட்சி புரட்சி என்று சொல்லுபவர்கள் ஆட்சி அமைத்த பின் போலி புரட்சியாளர்களாக, பசுந்தோல் போர்த்திய புலிகளாக மாறினால் என்ன செய்வது?

    ஆயுதம் ஏந்தி போராடுபவர்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வராது.
    முதலில் மக்களுக்கு உங்களின் மேல், உங்களின் சித்தாந்தத்தின் மேல் நம்பிக்கை வர செய்ய ஏதாவது முயற்சி செய்யுங்கள்.

    புரட்சி ஆட்சி அமைப்பவர்கள் சர்வாதிகாரிகளாக கண்டிப்பாக மாறுவார்கள் என்று நான் கூறவில்லை. அதே சமயம் அது போல மாறினால் என்ன ஆவது என்று தான் கேட்கிறேன்.
    என்னை போன்ற சாமானிய, பொதுமக்களுக்கு உங்கள் புரட்சி ஆட்சி அமைப்பின் மேல் எப்படி நம்பிக்கை வரும். முதலில் நீங்கள் நல்லவர்கள், திறமையான ஆட்சியை கொடுப்பீர்கள் என்று எங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். தற்போதைய அரசியல்வாதிகளை சாடுவதால் மட்டும் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று எப்படி நீங்கள் நம்பலாம்?

    முதலில் கூரையை ஏறி கோழியை பிடியுங்கள். பிறகு வானத்தில் ஏறி நிலவை பிடிக்கலாம்.

    • முதல் விசயம், புரட்சியை நடத்தப்போவது சில தனிநபர்களோ கம்யூனிஸ்டுகளோ அல்ல. கோடிக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளிகளுமான உழைக்கும் மக்கள் தான் புரட்சியை நடத்தப்போகின்றனர், இதற்கு முன்பு அவ்வாறு நடத்தியும் உள்ளனர்.

     இரண்டாவது, புரட்சிக்கு பின்னர் அரசை நடத்தப்போவதும் சில தனிநபர்களோ கம்யூனிஸ்டுகளோ அல்ல கோடிக்கணக்கான உழைக்கும் மக்களே தமது சொந்த அரசை ஏற்று நடத்துவர், இதற்கு முன்பு அவ்வாறு நடத்தியும் உள்ளனர்.

     எனவே, நீங்கள் நீங்கள் என்று எங்களை ஏதோ வீரசாகசம் செய்யப்போகின்ற கதாநாயகர்களை போல சித்தரிக்காதீர்கள். விசயத்தில் நீங்களும் உண்டு, உங்களுக்கும் பங்குண்டு. எனவே புரட்சிகர அரசை நிர்வகிக்கப்போவதும், அதை முன்னெடுத்துச்செல்லப்போவதும் கோடிக்கணக்கான மக்கள் தான்.

     ஆட்சியிலும், நிர்வாகத்திலும் என்று சகல துறைகளிலும் பொறுப்பு வகிக்கும் அனைவர் மீதான அதிகாரமும், தொழிற்துறை, விவசாயம், கல்வி, மருத்துவம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து சமூக நிறுவனங்கள் மீதான அதிகாரமும் மக்களிடம் தான் இருக்கும். இவ்வாறு அனைத்து அதிகாரங்களும் மக்களிடம் இருக்கும் போது உங்களுடைய கற்பனை சர்வாதிகாரிகள் தோன்றி மக்களை ஒடுக்க முடியாது. மக்களுக்கு எதிரான சிறு தவறுகளை இழைக்கும் எவரையும் பதிவிலிருந்து இறக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்கும்.

     அனைவருக்கும் நீதியை வழங்கும் நீதிமன்றம் ஒரு வழக்கில் தவறான தீர்ப்பை வழங்கினால், அதை மறுவிசாரணை செய்து தீர்ப்பு தவறாகவும் அநீதியாகவும் இருந்துவிட்டால் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவியிலிருந்து இறக்கவும், அவர் அவ்வாறு நடந்துகொண்டதற்கு என்ன தண்டனையோ அதை வழங்குவதற்குமான அதிகாரமே மக்களிடம் இருக்கும் போது பிற விசயங்களின் மக்களின் அதிகாரத்தைப் பற்றி அதிகம் விளக்கத்தேவை இல்லை. எனவே சர்வாதிகாரிகள் என்பதெல்லாம் அதிகப்பட்ச கற்பனையே அன்றி வேறல்ல.

     சோவியத் சோசலிச அரசின் அடிப்படை அரசியல் சட்டம் இணையத்தில் கிடைக்கிறது தேடி வாசித்துப்பாருங்கள்.

     • கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை பெற இது வரை 30 ஆண்டு காலம் செய்தது பலனளித்ததா?
      ஒரே ஒரு தொகுதியிலாவது உங்களது பிரச்சாரம் வெற்றி பெற்று மக்கள் தேர்தலை முழுவதுமாக புறக்கணித்தார்களா?

      தங்களது புரட்சி ஆட்சி, தற்போதைய காலத்தில், நடைமுறையில் சாத்தியமா என்பது சந்தேகமே.
      முதலில் சோவியத், சீனாவில் இருக்கும் புரட்சியின் பின்னடைவை சரி செய்ய முடிகிறதா என்று பாருங்கள்.

 2. உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக யோசிப்போம்.
  குறைகளில்லாத அப்பழுக்கற்ற மனிதரும் இல்லை.
  குறைகளில்லாத சித்தாந்தமும் இல்லை.

  நடைமுறையில் இருக்கும் குறைகளை பெருமளவு எப்படி குறைப்பது என்று ஆக்கபூர்வமாக யோசிப்போம்.

  எல்லோரையும் குறை கூற ஆரம்பித்தால் ஆரம்பத்தில் மக்கள் ஆதரவு கொடுத்தாலும் பின்னர் குறை கூறுவதை தவர்த்து வேறு சரக்கு இல்லை என்று மக்களுக்கு புரிந்தால் அவர்கள் புறக்கணிப்பார்கள்.

  1970 களில் துக்ளக் சோ வுக்கு சென்னை சீரணி அரங்கில் குவிந்த கூட்டம் அவருக்கு ஏன் ஒட்டு போடவில்லை?
  பெருமளவு கைதட்டல் வாங்கினாலும், தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டிய நிலை சோ வுக்கு ஏன் நேர்ந்தது?

  சோ வினால் குற்றம் குறை சொல்ல முடிந்ததே ஒழிய, மாற்று வழி ஒன்றும் கூறி மக்களை கவரவில்லை.

  தேர்தலை புறக்கணியுங்கள் என்று நீங்கள் சொன்னவுடன் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் தேர்தலை புறக்கணித்து உங்களது புரட்சி ஆட்சிமுறையை ஆதரிப்பார்கள் என்று நீங்கள் எப்படி நம்பலாம்?
  உங்கள் ஆட்சிமுறையில் இருக்கும் நல்ல விடயங்களை மக்கள் எப்படி ருசித்து பார்ப்பது?

  சீனாவில் புரட்சி முறை ஆட்சி வெற்றி பெற்றால் அதனால் தமிழகத்தில் அதே முறை வெற்றி காணும் என்று என்ன நிச்சயம்? மாஸ்கோவில் மழை பெயந்தால் மைலாப்பூரில் குடை பிடிப்பான் கம்யூனிஸ்ட் காரன் என்று சொல்வார்கள். தமிழக அளவில் மக்களிடையே உங்களது புரட்சி முறை ஆட்சியின் மாதிரி வடிவத்தை ஏன் நீங்கள் செயல்படுத்தவில்லை? மக்களுக்கு ஒரு மாடல் ஆட்சி முறை தேவை. அது சீனாவில் இருக்கிறதென்று சொன்னால் யாருக்கும் அதில் கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் சொல்லும் புரட்சி முறை ஆட்சி அமைந்த சீனாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் உண்மையில் மகிழ்ச்சியாக வேலை செய்கிறார்களா? சர்வாதிகாரம் இல்லாமல் ஜனநாயகம் அங்கு இருக்கிறதா?

  சீனாவின் வெற்றி, பொருளாதார வெற்றி மட்டுமே. Mass Production செய்து அமெரிக்கா முதல் அராபிய நாடுகள் முதல் இந்தியா முதல் உலகெங்கும் உள்ள பொருட்களின் உற்பத்தி சந்தையை, உலக மார்க்கெட்டை பிடித்ததில் தான் அதன் வெற்றி தெரிகிறது.
  ஆனால் ஜனநாயக அளவில் சீனா எந்த அளவுகோலில் உள்ளது? தியானன்மென் சதுக்க படுகொலைகள் தங்களுக்கு என்ன உணர்த்துகிறது?

  கண்ணை மூடிக்கொண்டு எந்த ஒரு சித்தந்ததையும் ஆதரிக்க முடியாது.
  தெளிவாக உங்கள் வழிமுறையை எங்களை போன்ற பொதுமக்களுக்கு விளக்கம் அளியுங்கள்.
  உங்கள் விளக்கம் எங்களுடைய குழப்பத்திற்கு தீர்வு தரும் என்றால் உங்கள் சித்தாந்தத்தை நாங்கள் ஆதரிப்போம்.

  • கண்ணை மூடிக்கொண்டு எதையும் ஆதரிக்கக்கூடாது தான். ஆனால் ரெண்டும் ரெண்டும் நான்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் ஏற்பீர்கள் தானே. ஆம் ஏற்போம். ஏனென்றால் கணிதம் தவறாக இருக்க முடியாது என்று நாம் படித்திருப்பதால் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் விடையை ஏற்றுக்கொள்வோம். கனிதம் எவ்வளவு சரியானதோ அப்படித்தான் மார்க்சியமும் ஏனென்றால் மார்க்சியம் என்பது அறிவியல். அதன் சரியான தன்மையை நீங்கள் காண வேண்டுமானால் அதை கற்க வேண்டும். வாருங்கள் கற்போம்.

   • கற்றுக்கொண்டு தான் வருகிறேன் நண்பா, நீங்கள் ஏற்கனவே கொடுத்த லிங்க் களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து வருகிறேன்.

    தியரி எல்லாம் சரி. ஆனால் நடைமுறையில் இந்த புரட்சி சித்தாந்தம் சாத்தியப்படுமா என்பது தான் எனது சந்தேகம். ஒரு சராசரி சாமானியனாக என்னால் உங்களது புரட்சி அமைப்பின் மேல் நம்பிக்கை வரவில்லை.

    ஜனநாயகம் போலி ஜனநாயகம் ஆனதை போல, கம்யூனிஸ்ட்கள் இப்போது போலி கம்யூனிஸ்ட்கள் ஆனதை போல புரட்சி, போலி புரட்சியாக மாறிவிட்டால், நாட்டின் கதி என்ன என்பது தான் எங்கள் பயம்.

    ஆயுதம் ஏந்திய புரட்சி செய்து நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டும் என்று இங்கே சில நண்பர்கள் பதிவிடுகிறார்கள். ஆயுதம் ஏந்தி வரும் மாற்றத்திற்கு தலைமை தாங்குபவரிடம் ஆட்சி போதையேறி மமதையில் சர்வாதிகாரியாக ஆகாமல் இருப்பார் என்று என்ன நிச்சயம்.
    பதவிக்கு வரும் வரை பதவிசாக மக்களை ஏமாற்றி, பதவிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா போல ஒரு சர்வாதிகார பாசிச கொடுங்கோன்மையான ஆட்சியை நீங்கள் கொடுத்தீர்களென்றால் எங்களது கதி என்ன?

 3. பாஜக அதன் இந்துத்துவா ஆட்சி முறைக்கு ஒரு மாதிரியாக (Model Governance of RSS)குஜராத் மோடியை காட்டுகிறது. RSS ஆட்சிமுறை தவறு தான். ஆனால் மக்களுக்கு பாஜக ஒரு மாதிரி வடிவத்தையாவது காட்ட முடிகிறது? வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வணிகம் என்று பல்வேறு வழிகளில் அவர்களின் பொய்யான வெற்றிகளை மக்களுக்கு பறைசாற்றுகின்றனர்.

  கம்யூனிஸ்ட்கள் மேற்கு வங்கம், கேரளா என்று இரு பெரும் மாநிலங்களில் நெடுங்காலமாக ஆட்சி புரிந்தும் ஏன் மக்களிடையே கம்யூனிஸ்ட் ஆட்சிமுறைக்கு பெருமளவு வரவேற்பு இல்லை?
  கம்யூனிஸ்ட்கள் நினைத்திருந்தால் இவ்விரு மாநிலங்களிலும் ஒரு மாதிரி வடிவமாக முழுமையான நல்லாட்சி வழங்கி இருக்க முடியும் அல்லவா? ஏன் அது நடக்கவில்லை?

  “எங்களுக்கு ஒட்டு போடுங்கள், வானத்தை வில்லாய் வளைத்து காட்டுவேன், தமிழகத்தை அப்படியே பெயர்த்தெடுத்து டெல்லிக்கு அருகில் வைத்து தமிழ்நாட்டை முன்னேற்றுவேன் ” என்று சொல்லும் வடிவேலு வகை அரசியல்வாதிகளுக்கும் ” ஒட்டு போடாதே, ஒட்டு போடாமல் இருந்தால் நீங்கள் நல்லா இருப்பீங்க” என்று நீங்கள் கூறும் வியாக்கியானமும் மக்களை பொறுத்தவரை ஒரே போல தான் இருக்கிறது.

  பூமாதேவி வாயை திறக்க போறா, எல்லாரும் உள்ளே போய் சாக போறீங்க என்று சட்டையை கிழித்து கொண்டு சொல்பவனை பார்ப்பது போல தான் ஒட்டு போடாதே, ஒட்டு போட்டால் எல்லாருக்கும் சங்கு தான் என்று நீங்கள் சொல்வதையும் மக்கள் பார்ப்பார்கள்.

  Ground Reality ஐ தெரிந்து கொள்ளுங்கள். வானத்தில் கோட்டை கட்டுவது அப்புறம். இப்போது மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? மக்களை உங்கள் சேவைகள் மூலம் கவருங்கள், தானாக உங்களுக்கு ஆதரவு பெருகும். அதை விடுத்து அவன் சரியில்லை, இவன் சரியில்லை, ஒட்டு போடாதே என்று நீங்கள் முப்பது வருடங்கள் அல்ல, முன்னூறு வருடங்கள் போராடினாலும் பயன் இருக்காது.

  காரசாரமாக விவாதிக்கையில் என்னுடைய கருத்துக்கள் எல்லை மீறி இருந்தால் மன்னிக்கவும்.
  ஆக்கபூர்வமாக யோசிப்பதற்கு பதில் நீங்கள் எப்போதும் எல்லோரையும் குறை மட்டும் கூரிக்கொண்டிருப்பதால் என்னுடைய ஆதங்கத்தை கொஞ்சம் வேகமாக வெளியிட வேண்டியிருந்தது.

  • கற்றது கையளவு, வெங்கடேசன், யெசா மற்றும் தேர்தல் புறக்கணிப்பு குறித்து கேள்வி எழுப்பும் அனைத்து நண்பர்களுக்கும்,

   முதலில் என் பின்புலம், எனக்கும் மகஇக விற்கும் எந்தவித முன்தொடர்பும் கிடையாது. வினவைப் படித்ததின் மூலமே மகஇக இருப்பதை தெரிந்து கொண்டேன். வினவின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்னரே தேர்தல் பாதை திருடர் பாதை என்ற சிந்தையும் என் மனதில் பொதிந்து கிடந்தது. நான் மிக வயதானவனும் இல்லை. முப்பதைக்கோடா தொடாத இளைஞனே.

   நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நேரடி அனுபவங்களின் ஊடாகவும், ஊடகங்களின் நடத்தையை கண்டும் படித்தும் தான் எனக்கான அரசியல் அறிவு என்பது கிடைக்கிறது. சமுக அறிவும் அப்படியே.

   காமராசர், கக்கன் என்று நேர்மையாளர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டில்தான் தான் இருந்தார்கள் இன்று புளங்காகிதம் அடையும் நாம், ஏன் அவ்வாறு இன்று அரசியல்வாதிகள் உருவாகவில்லை என்று நாம் யோசிக்கிறோமா? ஒரு வரி பதில்தான். அமைப்பு மோசமாக இருப்பதால் தான் மோசமான நபர்கள் வெளிவருகிறார்கள்.

   எது சீரான அமைப்பு என்று தேடும்போது, மகஇகவினர் சீனாவில் அப்படி இருந்தது, ரஷ்யாவில் இப்படி பொங்கி வழிந்தது ஆகவே அது இங்கும் சரிப்படும் என்று கூறினால் ரஷ்யாவிற்கு, சீனாவிற்கு ஓடி விடுங்கள் என்று கூறிவிடுவோம். இங்குள்ள பிரச்சினைகளைத்தான் பேச முடியும், அதுதான் சரியான நடைமுறையும் கூட.

   பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் குறைதான் கூறினார், அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லையா? அவர் பெருமக்கள் இயக்கத்தைத்தான் கட்டி எழுப்பினார். தனி மனிதராக அவர் கட்டிய எழுப்பிய இயக்கம் எத்தனை மனிதர்களை ஈர்த்திருக்கிறது என்பதையும் கவனிக்கவும்.

   சமூகச் சூழல்தான் பெரியார் என்ற மாமேதையை உருவாக்கியது. அவ்வாறாகவே சமூகச் சூழல்தான் மனிதர்களை உருவாக்கும். அப்படிப்பட்ட சமூகச் சூழலை உருவாக்குவதின் முதல் படி இந்த அமைப்பை நிராகரிப்பதே.

   பெரியார் பார்ப்பனிய சடங்குகள் நிறைந்த திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்தார். ஏன்? அந்த அமைப்பு சரியில்லை என்றுதானே? சரியான சமூகத்தாலும், அமைப்பாலும் தான் சரியான மனிதர்களை உருவாக்க முடியும். உலகெங்கும் இருந்து நமக்கு பல்வேறு அனுபவங்களும், உதாரணங்களும் கிடைக்கின்றன.

   ——————
   To put it in different perspective,

   everyone shouts Voting is a democratic right?

   But in reality looting is a democratic right.
   ——————

   ——————

   • விஜயபாஸ்கர் அவர்களே,

    // காமராசர், கக்கன் என்று நேர்மையாளர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டில்தான் தான் இருந்தார்கள…//

    இதே தேர்தல் பாதையில் தானே காமராசரும் காக்கணும் பதவியேற்றார்கள்?
    அதற்கு பின்னர் அத்தகையோரை தேர்ந்தெடுக்காதது வாக்களித்தவர்களின் குற்றமா, இல்லை தேர்தல் முறையின் குற்றமா?

    ஒரு வாகனத்தை நல்ல ஓட்டுனரிடம் ஒப்படைத்தால் வாகனம் சீராக, எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்லும். நீங்கள் வாகனத்தை ஓட்டும் உரிமையை ஒரு குடிகாரனுக்கோ அல்லது ஆத்திரக்காரனுக்கோ அல்லது ஒரு புத்தி பேதலித்தவன்னுக்கோ கொடுத்து அதனால் அந்த வாகனத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சேதம் விளைந்தால் அதற்கு அந்த வாகனம் பொறுப்பா, அல்லது ஓட்டுனர் பொறுப்பா, அல்லது அவர்கள் குடிகாரர், ஆத்திரக்காரர் என்று தெரிந்தும், இதற்கு முன் அவர்கள் வண்டியை ஒட்டி விபத்துகளை உண்டாக்கினர் என்று தெரிந்தும் அவர்களுக்கே ஓட்டும் உரிமையை கொடுத்த அந்த வண்டியின் சொத்தக்காரரின் குற்றமா?

    நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் தேர்தலை குறை கூறி என்ன பயன்?
    வாகனத்தை குறை கூறாதீர்கள், அதை ஓட்டுவதற்கு திறமையான ஒருவரை நீங்கள் நியமியுங்கள். தானாக வண்டி சீராக செல்லும். 🙂

    பெரியார் குறை மட்டும் கூற வில்லை. மாற்றத்தை உருவாக்க மக்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில், வழியில் விளக்கினார். மேதாவித்தனமாக ரசியா, சீனா, புரட்சி, என்று மேலோட்டமாக பேசவில்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் அவரது பேச்சு இருந்தது.
    நானும் தான் வினவில் பல கட்டுரைகளை படித்து வருகிறேன். புரட்சி ஆட்சி அமைப்பை, அதன் வடிவமைப்பை பற்றி தீர்க்கமாக ஒரு கட்டுரை வருவதில்லை. மேலோட்டமாக இருக்கும் கட்சிகளை குறை கூறுவதில் இருக்கும் ஆர்வம், ஆக்கபூர்வமாக புரட்சி ஆட்சியமைப்பின் உட்கட்டமைப்புகளை பற்றி தெளிவாக கூறுவதில்லை.

    புரட்சி அமைப்பில் ஆள்பவர் காமராசர், கக்கன் போல இருந்தால் சரி, அவர்கள் மோடி, ஜெயலலிதா, சு.சாமி இவர்களின் கூட்டணி போல ஒரு கும்பல் ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆவது. ஜனநாயக அமைப்பிலேயே, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் இருக்கையிலேயே இவ்வளவு ஆட்டம் போடுபவர்கள் புரட்சி அமைப்பு என்ற பெயரில் சர்வாதிகாரிகளின் கூடாரமானால் நாடு என்ன ஆகும்.

    • பெரியார் , காமராசர், கக்கன் போன்றோரை இப்போது அடையாளம் காட்டுங்கள்.

     • நாட்டின் நலனுக்காக, நாட்டு மக்களின் மேன்மைக்காக துடிக்கும் ஒவ்வொருவரும் நீங்கள் சொன்ன பெரியார், காமராசர், கக்கன் ஆகலாம். நீங்களும், நானும், நண்பர் ஒட்டுபோடாதேபுரட்சிசெய், இன்னும் வினவில் பதிவிடும் எத்தனையோ உள்ளங்கள் இருக்கின்றனவே.

      பெரியார், காமராசர், கக்கன் போன்றவர்களை மேடையில் தேட வேண்டாம். நம்மில், நம் நண்பர்களிடத்தில் அவர்களின் குணாதிசயங்களோடு எத்தனையோ நல்லுள்ளங்கள் உள்ளன.

    • புரட்சி அமைப்பில் சர்வாதிகாரிகளுகு இடம் இல்லை. ஏனெனில் அதிகாரம் ஒரு சிலர் கைகளில் இருக்காது மாறாக கோடிக்கணக்கான மக்கள் திரளிடம் இருக்கும். மக்கள் தான் அனைத்தையும் தீர்மாணிக்கும் இடத்தில் இருப்பார்கள். அரசு மக்களுக்குத்தான்,ஆட்சி மக்களுக்குத்தான்,கட்சி மக்களுக்குத்தான்,அதிகாரிகள் மக்களுக்குத்தான்,அனைத்தின் மீதான அதிகாரங்களும் மக்களுக்குத்தான். புரட்சி அமைப்பில் அனத்துமே மக்களுக்குத்தான் தான்.

     இவை கனவுமல்ல, வரலாற்றில் இதற்கு முன் நிகழாததும் அல்ல. உண்மைகளை அறிய சோசலிச நாடுகளின் ‘உண்மை’ வரலாறுகளை வாசியுங்கள்.

     • //இவை கனவுமல்ல, வரலாற்றில் இதற்கு முன் நிகழாததும் அல்ல. உண்மைகளை அறிய சோசலிச நாடுகளின் ‘உண்மை’ வரலாறுகளை வாசியுங்கள்.//

      நண்பா, இங்கு தான் எனக்கு குழப்பமாக இருக்கிறது. சோசலிசம் தான் தீர்வு என்றால் ஏன் பல நாடுகளில் சோசலிசம் தோல்வி அடைந்தது? தற்போதைய காலத்தில் உலக நாடுகளில் சோசலிசம் வெற்றி பெற்ற நாடுகள் எவை?
      ஒரு சாமானியனாக கேட்கிறேன். சோஷலிச மாடலுக்கு தற்போதைய காலத்தில் எந்த நாட்டை உதாரணமாக காட்டுகிறீர்கள். மீண்டும் மீண்டும் பழைய ரசியாவை உதாரணம் காட்டுகிறீர்கள். நிகழ்காலத்தில் எந்த நாட்டை உதாரணமாக காட்டுகிறீர்கள். மற்ற நாடுகளை விட சோஷலிச நாடுகளில் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

      ஏன் நம் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் சோஷலிச மாடலை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை?
      ஒட்டு மொத்த மக்களின் ஆதரவு இருந்தால் சோசலிசம் வெற்றி பெற்றிருக்குமே?
      ஏன் தற்காலத்தில் மக்கள் சோசலித்தை புறக்கணிக்கிறார்கள்?

      • முதல் விசயம் சோசலிசம் தோல்வியடையவில்லை, தற்காலிக பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இரண்டாவது, ரசியாவையும் சீனாவையும் தவிர உங்களுக்கு உதாரணமாக காட்ட வேறு எந்த நாடுகளிலும் சோசலிச புரட்சிகள் நடக்கவில்லை. மூன்றாவது உலகில் எங்குமே இன்று சோசலிச நாடுகள் இல்லை. ஆனால் மொத்த உலகமும் சோசலிச சகாப்தத்திற்குள் நுழைவதற்காக அதன் நுழைவுவாயிலில் காத்துக்கொண்டிருக்கின்றன.

       இப்போது ஒவ்வொரு விசயமாக பார்ப்போம்.

       சோசலிச நாடுகள் ஏன் பின்னடைவுக்குள்ளாகி இன்று இல்லாமல் போயின?

       பிறந்த குழந்தை முதலில் தவழ்ந்து பிறகு எழுந்து நடக்கும் அவ்வாறு நடக்க முயற்சிக்கும் போதே அது பீடுநடை போட்டுவிடுவதில்லை.
       மாறாக எடுத்துவைக்கும் முதல் அடியிலேயே தடுமாறி விழும்.
       அந்த குழந்தையால் ஏன் நடக்கமுடியவில்லை, ஏன் தடுமாறி விழுந்தது என்பதை எல்லாம் எதைக்கொண்டு விளக்குவது? உடலியலை அடிப்படையாக கொண்டு தான் அதை விளக்க முடியும். காரணங்களை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டுமானால் அதை ஒரு சில வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது. அதே போன்று தான் சோசலிச நாடுகள் ஏன் பின்னடைவுக்குள்ளாயின என்பதும் அரசியல் சித்தாந்த ரீதியாக பேசி புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம். அதை ஒரு சில வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

       ஏன் நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் மக்கள் சோசலிச மாடலை
       தேர்ந்தெடுக்கவில்லை?

       முதலில், தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது? நீங்களே பார்க்கிறீர்கள். சோசலிச மாடலான புதிய ஜனநாயக சமூக அமைப்பு தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று கூறி தான் புரட்சிகர அமைப்புகள் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றன, ஆனால் ஆளும் வர்க்கம் அதற்கு கூட அனுமதி தரமறுக்கிறது. பல காரணங்களை கூறி பிரச்சாரம் செய்யவிடாமல் தட்டிக்கழிக்கிறது.

       இரண்டாவது, சட்டைகளை தெரிவு செய்துகொள்வதை போல முதலாளித்துவம் சோசலிசம் என்று விரும்பியதை தெரிவு செய்துகொள்ள முடியுமா? முடியும் ஆனால் அதற்கு அடிப்படையில் ஜனநாயகம் இருக்க வேண்டும். நம் நாட்டில் அது இருக்கிறதா?

       ஏன் மக்கள் சோசலிச மாடலை தேர்வு செய்துகொள்ளவில்லை என்று என்னிடம் கேட்ட அதே கேள்வியை கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு வயதான பாட்டியிடம் கேட்டால், வயதான பாட்டி கூட வேண்டாம் அதே ஊரில் உள்ள ஒரு இளம் வயது விவசாயியிடம் கேட்டால் என்ன பதில் வரும்? சோசலிசமா அப்படின்னா என்ன என்று கேட்பார். இப்படி கல்வியறிவும், ஜனநாயகமும் வளர்ந்திராத நாட்டில் மக்கள் விருப்பம் போல ஏன் தேர்வு செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியே தவறானது.

       மூன்றாவது, ஜனநாயகம் வளர்ந்துள்ள நாடுகளிலும் சோசலிசம் தான் தீர்வு என்று பெரும்பாண்மை மக்கள் தெரிவு செய்துவிட்டாலும் முதலாளி வர்க்கம் இன்றுடன் நமது ஆட்சி முடிந்தது என்று பெருந்தன்மையாக ஆட்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு சோசலிசத்திற்கு வழிவிட்டுவிடுமா? அப்படி எங்கேயும் நடக்காது. எனவே முதலில் தெரிவு செய்ய ஜனநாயகம் வேண்டும், தெரிவு செய்தாலும் முதலாளித்துவ வர்க்கம் சுலபமாக மாற விடாது. எனவே தெரிவு செய்வதுடன் சோசலிசத்தை அடைவதற்கான போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் தான் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க முடியும். செலக்ட் பட்டனை அழுத்திவிட்டாலே சோசலிசம் வந்துவிடாது.

       ஏன் தற்காலத்தில் மக்கள் சோசலித்தை புறக்கணிக்கிறார்கள்?

       மக்கள் சோசலிசத்தை விரும்புகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோட்டையிலேயே அது தான் நிலைமை. உலகையே அச்சுறுத்திவரும் நிதிமூலதனக் கொள்ளையர்களின் தெருவான வால் வீதியை இரண்டு ஆண்டுகளாக முற்றுகையிட்டு ‘நாங்கள் 99% என்றும், முதலாளித்துவம் ஒழிக என்றும் முழக்கமிட்ட அமெரிக்க மக்களின் கோரியது சோசலிசத்தை அன்றி எதை?

       அது தொடர்பாக உங்களுக்காக சில சுட்டிகள்.

       http://wearethe99percent.tumblr.com/

       http://wearethe99percent.us/

       http://wearethe99percent.us/main/page_links_occupy.html

       Occupy Wall Street, two years on: we’re still the 99%
       http://www.theguardian.com/commentisfree/2013/sep/17/occupy-wall-street-99-percent

       http://endofcapitalism.com/

       மைக்கேல் மூரின் முதலாளித்துவம் ஒரு காதல் கதை ஆவணப்படம் பற்றிய அறிமுகம்.
       http://www.theguardian.com/film/movie/131531/capitalism

       • அருமையாக விளக்கி உள்ளீர்கள் இதற்குபிறகும் மேற்காணும் மொண்ணை காரணிகளுடன் எள்ளல் செய்து திரிவோர் இந்த போலி சனநாயக முறையிலிருந்து நேரடி ஆதாயம் அடைபவராக இருக்கவேண்டும். தூங்குவாரை போல் நடிப்பவர்களை எழுப்புவது கொஞ்சம் கடினம்தான்.

     • //புரட்சி அமைப்பில் சர்வாதிகாரிகளுகு இடம் இல்லை. ஏனெனில் அதிகாரம் ஒரு சிலர் கைகளில் இருக்காது மாறாக கோடிக்கணக்கான மக்கள் திரளிடம் இருக்கும். மக்கள் தான் அனைத்தையும் தீர்மாணிக்கும் இடத்தில் இருப்பார்கள். அரசு மக்களுக்குத்தான்,ஆட்சி மக்களுக்குத்தான்,கட்சி மக்களுக்குத்தான்,அதிகாரிகள் மக்களுக்குத்தான்,அனைத்தின் மீதான அதிகாரங்களும் மக்களுக்குத்தான். புரட்சி அமைப்பில் அனத்துமே மக்களுக்குத்தான் தான்.//

      நண்பா, புரட்சி அமைப்பில் பெரிய முடிவாக இருந்தாலும் சிறிய முடிவாக இருந்தாலும் அனைத்திற்கும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றால் நடைமுறையில் அது எப்படி சாத்தியப்படும்? நம் நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு முக்கிய முடிவுக்கும் மக்களிடம் எப்படி கேள்வி கேட்பீர்கள்? தேர்தல் போல நடத்துவீர்களா?
      நான் கேட்கும் கேள்விகள் அறியாமையால் இருக்கலாம். தெளிவு படுத்துங்கள்.

      • கோடிக்கணக்கான மக்களின் தலைவிதியை சில ஆயிரம் அதிகாரிகள் தீர்மானிக்கும் போது நிர்வாகம் செய்ய கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது, அதுவும் தமது சொந்த அரசில் தமது சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது.

       மேலும் இப்பிரச்சினைகள் நடைமுறையில் எப்படி சாத்தியமானது என்பதை சோசலிச நாடுகளின் வரலாறுகளில் படியுங்கள்.

       உதாரணத்திற்கு ஒன்று.
       சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

       விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல்படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ?

       முழுமையாக வாசியுங்கள்.

       பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

       https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

    • சாக்கடைக்குள் எதை தேடக்கூடாதோ அதை தேடினால் கிடைக்காது. கற்றது கையளவே எம்.பி அல்லது பி.எம் ஆனாலும் கூட மக்களுக்கு துளியும் நன்மை செய்ய முடியாது. ஒருவேளை நீங்கள் எதற்கும் வளைந்துகொடுக்காத நேர்மையாளராக இருக்கலாம். அப்படி இருந்தால் நீங்கள் அங்கு நீடிக்க முடியாது என்பது முதல் விசயம். இரண்டாவது அனைவரையும் அப்படி கூற முடியாது, அனைவரும் அத்தகைய வாய்ப்பிற்காக தான் காத்துக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு வளைய முடியாதோ அவ்வளவு வளையத்தயாராக இருக்கின்றனர். கோடிகளில் அடித்தால் தேவை எத்தகைய நேர்மையையும் வீழ்த்தும்.

  • போலிக்கம்யூனிஸ்டுகளை நீங்கள் கம்யூனிஸ்டுகளாக கருதுகிறீர்கள். அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் அது அ.தி.மு.க வின் சிறப்பு கிளையாக இருக்கிறது. இந்திய அளவில் அ.தி.மு.க போன்ற ஒரு ஆண்டைக் கட்சியை தேடி வருகிறது. எனவே மே.வங்கத்தையும், கேரளாவையும் கம்யூனிஸ்ட் ஆட்சி என்று கருதிக்கொண்டு கம்யூனிசத்தை அணுக வேண்டாம்.

   மக்கள் தவறான பாதையில் சென்றால் தடுப்பதும், செல்ல வேண்டிய சரியான பாதைக்கு வழிகாட்டுவதும் தான் கம்யூனிஸ்டுகளின் வேலை. அதை புரட்சிகர அமைப்புகள் சரியாக செய்து வருகின்றன. ஓட்டுப்போடுவதன் மூலம் மக்கள் மட்டும் ஏமாறப்போவதில்லை, மொத்த நாடே விற்கப்படும். இந்த தேர்தலே ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை கூறுகட்டி விற்பதற்கான சடங்கு தான். நாட்டை விற்பதற்கு தான் இந்த தேர்தலே நடக்கிறது என்கிற போது அதை தடுக்காமலிருந்தால் அதற்கு என்ன பெயர்?

  • ///

   பெரியாரின் இந்து மத எதிர்ப்பு பிரசாரம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதற்கு ஏதாவது புள்ளி விவர கணக்குகள் கிடைக்கின்றனவா? உதாரணமாக, இந்து என தன்னை கூறிக்கொள்வோர் 1950 இல் தமிழக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம்? தற்போது எவ்வளவு? 1950 இல் தமிழகத்தில் எத்தனை பிள்ளையார் கோவில்கள் இருந்தன? இப்போது எவ்வளவு? உதாரணத்துக்கு தான் இந்த கேள்விகள் கேட்டேன். இது மாதிரியான மற்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலும் பரவாயில்லை. பொதுவான பதிலாக இல்லாமல் புள்ளிவிவரமாய் சொன்னால் நலம். நன்றி.

   ///

   அன்பு நண்பர் வெங்கடேசன்,

   உங்களின் இந்தக் கேள்வியை நடமாடும் பல இணைய தளங்களின் பல இழைகளில் காணமுடிகிறது. ஒருவரும் பதிலளிக்க முயன்றதில்லை எனவே நான் முயலுகிறேன்.

   நீங்கள் கேட்பது போல் ஒரு புள்ளிவிவரம் இல்லை என்பதே உண்மை, ஆனால் பிள்ளையார் கோவில் மட்டுமல்ல அனைத்துக் கோவில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கின்றன என்பதே உண்மை. உதாரணத்திற்கு என் கிராமத்தில் காளி அம்மனுக்கு ஒரு கூரைக் கோவில், பிள்ளையாருக்கு ஒரு கற்கோவில், பெருமாளுக்கு ஒரு கற்கோவில், கருப்பனுக்கு ஒரு மண் பூடம் (சிலை கூட கிடையாது) என்று இருந்தது, இவை அனைத்தும் இன்று நவீனமயமாக்கப்பட்டு விட்டது, கருப்பனுக்கு கோவில் கட்டப்பட்டு, சிலையும் வைக்கப்பட்டுவிட்டது. அதுதவிர புதுக் கோவில் ஒன்றும் முளைத்து விட்டது. என் கிராமத்தைச் சுற்றிய பல கிராமங்களின் நிலையும் இதுதான். நகரங்களின் நிலையும் இதுவே.

   அதுமட்டுமில்லாது சாதிய சங்கங்கள் ஜோதிட நிலையங்கள் போன்றவையும் அதிகரித்துள்ளன.

   இவையெல்லாம் பெரியாரின் தோல்வியை குறிப்பிடுகின்றனவா எனக் கேட்டால் இல்லை என்பதே பெரும்பாலானோர் பதில்.

   சாதியை பற்றி, கடவுளைப் பற்றி, மூட நம்பிக்கையைப் பற்றி, மதவாதத்தைப் பற்றி வட நாட்டினரிடமும், தமிழரிடமும் பேசிப் பார்த்தே இதற்கு முடிவுக்கு வந்துவிட முடியும் எனத் நினைக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருக்கிறீர்கள், பேசிப்பாருங்கள்.

   மேலும் உதாரணமாக, இந்து என தன்னை கூறிக்கொள்வோர் 1950 இல் தமிழக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம்? எனக் கேட்டு இருந்தீர்கள்,
   இந்து என்றால் என்ன என்று தெரியாத மக்களும் இருக்கிறார்கள். என் தாயார் என் ஊரில் இருக்கும் கடவுளை கும்பிடுபவர். அவர் தன்னைத் இந்து என்று நினைப்பது கூட இல்லை. ஏனெனில் இந்து என்பதற்கு ஒரு வரையறையே இல்லை.

   நானும் பெரியார் வாசனை இல்லாமல் வளர்ந்தவன் தான். ஆனால் இன்று பெரியார் காட்டிய வழியில் வாழ்கிறேன். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் பெரியார் என் வாழ்வில் நுழைந்துவிட்டார். அதை போன்று நான் சந்திக்கும் அனேகரிடம் பெரியாரின் கருத்துக்களைப் பற்றி விவாதிப்பதுண்டு. பெரியாரைப் பற்றி முழுமையாக அறிந்திராவிட்டாலும், பெரியாரை யாரும் நிரக்கரிக்கவில்லை, தீவிர மத நம்பிக்கை இருக்கிற பார்ப்பன நண்பர்கள் உட்பட (பார்ப்பன மற்றும் மற்ற மதவாதிகளைத் தவிர).

   ஆக பெரியாரை புள்ளிவிவரங்களால் எடை போட முயலும் ஆராய்ச்சி முறையே தவறு என்பது என் கருத்து.

   As a whole, Periyar has to be validated by qualitative research methodology. quantitative research methodology cannot be applied to any social scientists or social reform movements.

 4. இந்திய மாட்டில் பாலை ஒட்ட ஒட்ட கறந்து….
  அய்யகோ!
  “இந்திய” மாடு இனிமேல் அடிமாடாக….

 5. அன்புள்ள விஜயபாஸ்கர்,
  உங்கள் பதிலுக்கு நன்றி. பல விஷயங்களை தொட்டுள்ளீர்கள். தொடர்ச்சியான விவாதங்கள் செய்ய தற்சமயம் எனக்கு வசதி இல்லை. சில கருத்துகளை சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். வினவில் நீண்ட பத்திகள் எழுதி நாளாகி விட்டது. அந்த அல்ப ஆசையையும் தீர்த்துக்கொள்கிறேன்.

  இந்து மதத்தை வரையறுக்க முடியாதென்பது உண்மைதான். ஆனால், இந்த பெரிய சந்தைக்கடையில் எப்போது, எதன் மீது ஈர்ப்பு வருகிறதோ அப்போது அதை எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த காய்கறி பிடிக்கிறதோ, அதை மட்டும் எடுத்தொக்கொள்ளலாம். அதிலும், அழுகல்களை நீக்கிவிட்டு, நல்லது என எது மனதக்கு தோன்றுகிறதோ, அதை மட்டும் வைத்துக்கொள்ளலாம். அடுத்தவனுக்கு தொல்லை தராதவரை சரி. இது என்னளவில் வசதியானதாக உள்ளது.

  ஒரு குழந்தைத்தனமான உதாரணம். அருகில் உள்ள முருகர் கோவிலில் உள்ள சிறிய இடும்பன் சந்நிதியை இதுநாள் வரை நான் பெரிதாக கண்டுகொண்டதில்லை. இப்போது தீடீரென ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு நீண்ட நேரம் அமர்ந்து அமைதி காணும் வழக்கம் ஏற்பட்டுள்ளது! எனது ‘இந்துநிலை’ யானது (‘இந்துத்வம்’ என சொன்னால் தவறாக போய்விடும்!) காலே அரைக்கால் சதவீதம் கூடிவிட்டதா என தெரியவில்லை. By the way, எல்லா சாமிக்கும் அர்ச்சனை செய்கிறார்களே, இவருக்கு செய்வார்களா என ஒரு ஆர்வத்தில் விசாரித்தால், செய்கிறார்கள்! “சஹனா வவது” என ஏதாவது பொது மந்திரம் சொல்லி குத்து மதிப்பாக ஒப்பேற்றுவார்கள் என எதிபார்த்தேன்! ஆச்சரியமாக “ஓம் இடும்பாசுராய நமஹ” என தொடங்கி அவருக்கென்று 108 வரி சுலோகம் வைத்திருக்கிறார்கள்!

  இந்து மதத்தை வரையறுக்க முடியாதே தவிர, அந்த கூடாரத்தில் இருக்கும் தனி மதங்களை வரையறுக்க முடியும். உதாரணமாக, தமிழகத்தில் நிலவும் வைணவத்தை (“ஸ்ரீவைஷ்ணவம்’) கிருத்தவ, இஸ்லாம் மதங்களுக்கு இணையான தெளிவுடன் வரையறுக்க முடியும். ஆனால், அப்படி செய்வதிலும் பிரச்சனை இருக்கும். “நீ வைணவனா?” எனக் கேட்டால், நான் “ஆமாம்” என பதில் சொல்வேன். எனினும், “சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கும்” வைகுந்தம் என்ற ஒன்று எங்கோ இருப்பதாக நான் நம்பவில்லை. மறுபுறம், “பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளியூடும் வயல் சூழ்ந்த நறையூர்” தலத்தின் மீது மிகுந்த ஈர்ப்புண்டு. எனவே, மேலே சொன்ன கேள்விக்கு “ஆமாம்” என பதில் அளிப்பவன் எல்லாம் வைணவன் எனச் சொல்லி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். எங்கே, நெத்தியக் காட்டு, நாமம் இருக்கான்னு பாக்கறேன்னு ஆராய்ச்சி எல்லாம் செய்யப்படாது!

  சரி. ‘வரையறை’ பற்றி பேசுவதானால் சில விதண்டாவாதங்கள் செய்யலாம். சும்மா டைம் பாஸ். ‘கிறிஸ்தவன்’ என்பதற்கு என்ன வரையறை? அன்பே சிவம் என்ற கொள்கையை வரித்தால் போதுமா? அல்லது இயேசு தேவ குமாரன் என்பதை ஏற்கவேண்டுமா? அல்லது பழைய ஏற்பாட்டில் உள்ள லேவியர் ஆகமம் (Leviticus) சொல்லும் ஆசார அனுஷ்டானங்களையும் கடை பிடிக்க வேண்டுமா? மதங்களை விட்டு விடுவோம். பரிபூரண கூர்மையோடு கூடிய வரையறை என்பது கணிதத்துக்கு வெளியே சாத்தியம் தானா? இயற்பியலில் ‘நிறை’ (mass) என்று சொல்கிறார்களே. அப்படின்னா என்ன? ‘கணினி’ என்றால் என்ன? எனது பிசாத்து ஆயிரம் ரூபாய் பெறுமான செல்போனில் கால்குலேட்டர் வசதி உள்ளது. எனில், அதுவும் கணினி தானா?

  சரி. நம்ம மேட்டருக்கு வருவோம். பெரியாரின் தாக்கம் என்ன கேள்விக்கு விடை காண முயலுங்காலே, “தமிழகத்தில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை” எத்தனை என்ற கேள்வியும், “இந்து என்றால் என்ன” என்ற கேள்வியும் பிறந்த்தது. “நீ இந்துவா?” எனக் கேட்டால், “ஆம்”, “இல்லை”, “அப்படின்னா என்ன” என மூன்று பதில்கள் வரக்கூடும். எனினும், பெரியாரின் முழுத்தாக்கத்துக்கு உள்ளானவர், “ஆம்” என பதில் சொல்ல மாட்டார் அல்லவா? எனவே, வசதிக்காக “ஆம்” என பதில் சொல்வோர் எல்லாம் இந்து எனக் கொள்ள முடியும். உங்கள் அம்மா “இல்லை” என்று கூறுவாரானால், அவரை கணக்கில் எடுக்க வேண்டாம்! வேறொரு வரையறையையும் சொல்ல முடியும். “இந்து சமய அறநிலைய நிர்வாகத்தில் உள்ள ஏதாவது கோவிலில் சாமி கும்பிட உனக்கு ஈர்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு “ஆம்” என பதில் சொல்பவரை “இந்து” என வரையறுக்கலாம். (அப்பாடா! தீவிர வைணவரான என் தாத்தா, சமயபுரம் செல்லும் பக்கத்து வீட்டுக்காரர் என சகலரையும் பிடிச்சு போட்டாச்சு! எனினும் “கோவிலாவதேதடா, குளங்களாவது ஏதடா” என உள்ளுக்குள் நாதனை தேடுவோர் மிஸ் ஆயிடுவாங்க. பரவாயில்லை.) பெரியாரின் தாக்கத்துக்கு உள்ளானவர் “இல்லை” என்றுதான் பதில் சொல்வார்கள் என்ற வகையில், மேலே சொன்ன வரையறை நியாயமானதாக எனக்குக் படுகிறது. இப்போது சொல்லுங்கள். 1914 இல் தமிழகத்தில் இந்துக்கள் எத்தனை சதவீதம்? தற்போது எத்தனை?

  பெரியாரின் தாக்கத்தை நிராகரிப்பதல்ல என் நோக்கம். இந்தக் கேள்வியை அறிவியல் பூர்வமாக அணுகுவது மட்டுமே. மேலும், கோவிலுக்கு சென்று மொட்டை போடுவோர் மீது பெரியாரின் தாக்கம் இல்லை எனக் கூறிவிட முடியாது. அவர்களில் “அனைத்து ஜாதி அர்ச்சகர்” என்பதை ஏற்போரிடத்து பெரியார் தலை காட்டுவார்! மேலும், இது போன்ற அறிவியல் பூர்வ ஆய்வு பெரியார் பற்றி மட்டும் பேசப்பட வேண்டும் என்பதல்ல. காந்தியின் தாக்கம் என்ன? விவேகானந்தரின் தாக்கம் என்ன? என்றும் பேச முடியும்.

  // ஆக பெரியாரை புள்ளிவிவரங்களால் எடை போட முயலும் ஆராய்ச்சி முறையே தவறு என்பது என் கருத்து. As a whole, Periyar has to be validated by qualitative research methodology. quantitative research methodology cannot be applied to any social scientists or social reform movements. //

  ஒரு அறிவியல் மாணவன் என்ற வகையில் இதை என்னால் ஏற்கமுடியவில்லை. வெறுமனே qualitative முறைப்படி அனுமானங்கள், கணிப்புகள் என்று பேசிக்கொண்டிருந்தால் வானத்தில் வடை சுட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். Social sciences துறையில் quantitative method ரொம்ப முக்கியம். உதாரணமாக, திராவிட இயக்கத் தாக்கம் பற்றி பேசும்போது கூறப்படும் ஒரு பிரபல புள்ளிவிவரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1964 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த பார்பனரல்லாத நீதிபதிகளின் எண்ணிக்கை நான்கு, இப்போது நாற்பது (சரியான எண்ணிக்கைகள் நினைவில் இல்லை). இது ஒரு தெளிவு தருகிறது அல்லவா? நீங்கள் குறிப்பிட்ட quantitative, qualitative இரண்டு வித முறைகளும் தேவைதான். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்.

  • பெரியாரின் கொள்கைகள் எந்தளவுக்கு வெற்றிபெற்றுள்ளது என்பதற்கு அளவுகோல் இன்றுள்ள புள்ளிவிபரங்கள் அல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த புள்ளிவிபரங்களே தேவை. இன்று பல சூத்திர,பஞ்சம சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை பார்ப்பனர்களைப் போல அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வந்திண்ட்ருக்கேன், போய்ண்ட்ருக்கேன் என்று பேசுகின்றனர். இவர்கள் கருப்பு பார்ப்பனர்களாக மாறியுள்ளனர்.

   எனவே நண்பர் வெங்கடேசன் கூறுவதைப் போல 1914 இல் இருந்ததை விட இன்று தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து தான் இருக்கிறது. ஆனால் அந்த உண்மை பெரியார் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கம் என்கிற உண்மையை மறுத்துவிட முடியாது.எனவே பெரியார் கொள்கைகளின் வெற்றியை தற்போதைய புதிய புள்ளிவிபரங்களிலிருந்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் இது புதிய நிலைமை கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட புதிய நிலைமை. அதற்கு முன்புவரை இங்கு என்ன நிலைமை இருந்தது? அப்போது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூடத்தான் இங்கு வளர முடியவில்லை. இன்று வளர்ந்திருக்கிறதே. அன்று ஏன் வளரமுடியவில்லை, இன்று ஏன் வளர்ந்திருக்கிறது?

   காரணம் பெரியார். தமிழகத்தில் மதவெறிக் கட்சிகளும், அமைப்புகளும் வேர் விடமுடியாததற்கு பெரியார் தான் காரணமாக இருந்தார். எனவே தான் ஆர்.எஸ்.எஸ் இங்கு தமிழ் அடையாளத்துடன் துவங்கப்பட்டது.
   ஆரம்பத்தில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஓட்டுக்கட்சிகளே தயங்கியதும், காஷ்மீரைப் போல தமிழகமும் இந்து தேசியத்துடன் ஐக்கியப்படாத தனி மாநிலமாக இருப்பதும், பார்ப்பன எதிர்ப்பை தீவிரமாக முன்னெடுப்பதும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதும்,நாத்திகத்தை தனி மக்கள் திரள் இயக்கமாக முன்னெடுத்ததும், ராமனை செருப்பால் அடித்து இழுத்துச்சென்றதும், பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொள்வதை இழிவாக கருதியதும்,பார்ப்பன சாதியில் பிறந்த பலரே சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு முற்போக்கு கொள்கைகளை பேசுவதும், வடமாநிலங்களைப் போல ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பலும், சாதிவெறி கப் பஞ்சாயத்துகளும் வளர முடியாமல் இருப்பதும், ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடி வாங்கிக்கொண்டு ஓடுவதும், ஓட்டுப்பொறுக்குவதற்கு தான் என்றாலும் ஓட்டுக்கட்சிகள் மதவெறியையும், மோடியையும் எதிர்ப்பதும் தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம். அதற்கு காரணம் பெரியாரின் கொள்கைகளும், புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களும் தான். மேற்சொன்ன நடாவடிக்கைகளை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

   பெரியார் கொள்கைகளின் விளைவு தான் திராவிட இயக்கங்கள்.
   அரசியலில் காங்கிரசை விரட்டியடித்து திராவிடக்கட்சிகள் ஆட்சியை பிடித்தன. கலை இலக்கியத்தில் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
   சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு கொள்கைகளை பேசும் பல படங்கள் வெளியானது. பல நடிகர்கள் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர். சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு கவிதைகள், சிறுகதைகள்,நாவல்கள் வெளியானது. என்ன சாதி என்று கேட்பதையே மக்கள் இழிவாக கருதினர். பெரியாரின் முற்போக்கு கொள்கைகள் இல்லை என்றால் தமிழகமும் குஜராத் போன்ற ஒரு பிற்போக்கு மாநிலமாக மாற்றப்பட்டிருக்கும். பெரியாரின் கொள்கைகளில் பல பிரச்சினைகள் உண்டு என்பதுடன் அதில் முழு தீர்வும் இல்லை என்பது உண்மை தான். ஆனால் சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு என்கிற வகையில் அது ஒரு முற்போக்கான ஜனநாயகப்பூர்வமான கருத்தியல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

   அது தற்காலிகமாக பின்னடைவுக்குள்ளாகியிருக்கலாம் அதனாலேயே அதை தவறு என்று கூற முடியுமா என்பது தான் கேள்வி. அது பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் தான் எச்.ராஜா என்கிற பொறுக்கி பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று துணிச்சலுடன் பேசுகிறான்.
   அந்த பேச்சை கேட்ட பிறகும் வைகோ என்கிற இழிபிறவி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இவையனைத்தும் பெரியாரின் கொள்கைகள் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதை மெய்ப்பிக்கிறதே அன்றி அதை தவறு என்று மெய்ப்பிக்கவில்லை. எனவே பெரியாரின் கொள்கைகளை இவ்வாறு தான் பரிசீலிக்க வேண்டும் மதிப்பிட வேண்டும். இவ்வாறு மதிப்பிடப்படும் போது அவரின் கொள்கைகள் முன்னிலும் அதிகமாக தேவைப்படுகிறது. அவை வெற்றிபெறவும் வேண்டும் என்கிர முடிவுக்கு நாம் வருவோம். ஆனால் அந்த கொள்கைகளை தி.க மடங்களால் முன்னெடுக்க முடியாது. அவற்றை புரட்சிகர அமைப்புகள் மட்டுமே செய்ய முடியும்.

 6. // சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம்

  இதை வாசிக்க விரும்புகிறேன். தற்போது கிடைக்கிறதா?

  • இணையத்தில் ஆங்கிலத்தில் இருக்கலாம் தமிழில் இல்லை, ஆங்கில பிரதியை பிறகு தேடித்தருகிறேன். தமிழ் பிரதி என்னிடம் ஒன்று இருக்கிறது நீங்கள் சென்னை வரும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிற சோவியத் நூல்களை கீழ் உள்ள சுட்டிகளில் பெறலாம்.

   http://sovietbooks.wordpress.com/

   http://mirtitles.org/

   http://sovietbooks.in/

  • நன்றி.

   1918 ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம் ஒரு பகுதி கிடைக்கிறது. மேலும் தேடினால் முழுதும் கிடைக்கும் என எண்ணுகிறேன். இது சில தடவைகள் திருத்தப்பட்டது. ஸ்டாலின் பதவி ஏற்றபின் அவர் தலைமையிலான ஒரு குழு குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்து 1936 ஆண்டு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது. இது முழுதும் கிடைக்கிறது.

   http://www.departments.bucknell.edu/russian/const/1936toc.html

   பொறுமையாக முழுதும் படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு முன் ஒரு ஆர்வத்தில் அங்குமிங்கு புரட்டியதில் கண்ணில் பட்ட சில சூப்பர் வரிகள்:

   ARTICLE 118. Citizens of the U.S.S.R. have the right to work, that is, are guaranteed the right to employment and payment for their work in accordance With its quantity and quality. The right to work is ensured by the socialist organization of the national economy, the steady growth of the productive forces of Soviet society, the elimination of the possibility of economic crises, and the abolition of unemployment.

   ARTICLE 120. Citizens of the U.S.S.R. have the right to maintenance in old age and also in case of sickness or loss of capacity to work. This right is ensured by the extensive development of social insurance of workers and employees at state expense, free medical service for the working people and the provision of a wide network of health resorts for the use of the working people.

   ARTICLE 121. Citizens of the U.S.S.R. have the right to education. This right is ensured by universal, compulsory elementary education; by education, including higher education, being free of charge; by the system of state stipends for the overwhelming majority of students in the universities and colleges; by instruction in schools being conducted in the native Ianguage, and by the organization in the factories, state farms, machine and tractor stations and collective farms of free vocational, technical and agronomic training for the working people.

   ARTICLE 124. In order to ensure to citizens freedom of conscience, the church in the U.S.S.R. is separated from the state, and the school from the church. Freedom of religious worship and freedom of antireligious propaganda is recognized for all citizens.

   • 1936 ஆண்டே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரத்தை தனது குடிமக்களுக்கு வழக்கியுள்ளது சோவியத் யூனியன்.
    ARTICLE 142. It is the duty of every deputy to report to his electors on his work and on the work of the Soviet of Working People’s Deputies, and he is liable to be recalled at any time in the manner established by law upon decision of a majority of the electors.

 7. புரட்சி வருமா அதாவது புதிய ஜனநாயகப் புரட்சி வருமா என்று பலர் எள்ளலாகக் கேட்கின்றனர். இன்று இருக்கும் முதலாளித்துவமும் நிலபிரபுத்துவ அமைப்பை எதிர்த்து பல புரட்சிகள் செய்த பிறகே த்ன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க