Saturday, June 10, 2023
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஜிண்டால் - நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?

ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?

-

திருவண்ணாமலையில் கவுத்தி-வேடியப்பன் மலை தகர்த்து, இரும்புத் தாது எடுத்து, தமிழக அரசு உதவியுடன் தமிழக மக்களை மொட்டை போட, துடிக்கிறது ஜிண்டால் குழுமம். அந்த ஜிண்டால் குழுமத்தின் லட்சணம் இன்னொரு ஊழல் வழக்கில் அம்பலமாகியிருக்கிறது.

தாசரி நாராயண ராவ் - நவீன் ஜிண்டால்
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டுக்காக மோசடி செய்த நிலக்கரித் துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் – லஞ்சம் கொடுத்து ஒதுக்கீடு பெற்ற தரகு முதலாளி நவீன் ஜிண்டால்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவ், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தரகு முதலாளியுமான நவீன் ஜிண்டால் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களான ககன் ஸ்பான்ச் அயர்ன், ஜிண்டால் ரியாலிட்டிஸ், ஜிண்டால் ஸ்டீல், புதுதில்லி எக்சிம் பிரைவேட் லிமிடெட், சௌபாக்யா மீடியா லிமிடெட் ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த அமலாக்கத் துறையினர் சுரங்க ஒதுக்கீடு பெறுவதற்காக 2008-ம் ஆண்டு லஞ்சமாக கருப்பு பணம் கைமாறியிருப்பதற்கான ஆதாரங்களை திரட்டியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நவீன் ஜிண்டால் மீதும் தாசரி நாராயண ராவ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 35-வது ஒப்புதல் கமிட்டியின் பெயர் தெரியாத அதிகாரிகளும் இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் நடைமுறைகளை மூடி மறைத்து நடத்திக் கொடுப்பதுதான் அதிகார வர்க்கத்தின் பணி என்பது இன்னொரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது.

இதில் ஹவாலா மோசடி ஏதும் நடைபெற்றுள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே சிபிஐ, சிறுசிறு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக வழக்குகளை ஊற்றி மூடும் வேலையை துவங்கியிருக்கும் நிலையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையையும் நாம் முற்றிலும் நம்ப முடியாது என்றாலும் கார்ப்பரேட் கொள்ளையர்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள இந்த வழக்கு உதவி செய்கிறது.

2004 முதல் 2008 வரை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவ், தான் இணையமைச்சர்தான் என்றும் தனது பதவிக் காலத்தில் ஒரு பகுதியில் சிபு சோரன் காபினட் அமைச்சராகவும், மறு பகுதியில் பிரதமரும் தான் பொறுப்பில் இருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதாவது நடந்த ஊழலுக்கு தன்னை விட நிலக்கரித் திருடன் மன்மோகன்தான் பொறுப்பு என்று புலம்பியிருக்கிறார். அப்படி இல்லை என்றால், தான் தவறு செய்திருந்தால் பிரதமர் தன்னை பதவியில் இருந்து நீக்கியிருக்க முடியுமே என அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். இல்லையென்றால் நீங்கள் பிரதமரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்பதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சஜ்ஜன் ஜிண்டால்
திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலையை குறி வைக்கும் JSW நிறுவனத்தின் சஜ்ஜன் ஜிண்டால்.

ஜார்கண்டு மாநிலம் அமர்கொண்டாவில் அமைந்துள்ள முர்காதாங்கல் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகளைப் பற்றி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதில் நவீன் ஜிண்டால், தாசரி நாராயணராவ் இவர்களிருவருடன் முன்னாள் நிலக்கரிதுறை செயலர் எச்.சி குப்தாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. நிலக்கரி வயல் ஒதுக்கீட்டைப் பெற்ற ஒரு ஆண்டுக்குள், காங்கிரசு எம்.பி நவீன் ஜிண்டால் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தாசரி நாராயண ராவின் சௌபாக்யா மீடியா நிறுவனத்தில் ரூ 2.25 கோடி முதலீடு செய்திருந்தார்.

அமலாக்க துறை விசாரணையில், சந்தை மதிப்பு தலா பங்கு ஒன்றுக்கு ரூ 28 ஆக இருக்கையில் ரூ 100 கொடுத்து ஜிண்டால் அப்பங்குகளை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தங்களது பெயரை வெளியிடக் கூடாது என்பதற்காக ஜீ டிவி மேலாளர்களுடன் நவீன் ஜிண்டால் பேச்சு வார்த்தை நடத்தியது கடந்த அக்டோபர் மாதம் அம்பலமானது.

நவீன் ஜிண்டால் என்ற இந்த உத்தமரின் குடும்பத்திற்கு சொந்தமான ஜிண்டால் குழுமத்துடன்தான் அடுத்தடுத்த தமிழக அரசுகள் கூடிக் குலாவி திருவண்ணாமலை வேடியப்பன் மலையை சஜ்ஜன் ஜிண்டால் என்ற அவரது சகோதரரின் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு தாரை வார்க்க உதவி வருகின்றன.

நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். எனவே ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.  ஆகவே திருவண்ணாமலையில் ஜிண்டாலுக்கு ஆதரவாக களமிறங்கும் அரசு, போலீசு, கலெக்டர், என் ஜி வோக்களை போராடி துரத்துவதை தமிழக மக்கள் இன்னும் வீச்சாக செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

  1. ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை

  2. வினவு,

    “தரகு முதலாளி”[Brokerage owner] என்ற பதத்தை வினவு எளிமையாக விளக்கினால் கற்றது கையளவு போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு/அறிவாளிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

    [1]தரகு முதலாளி வரையரை என்ன ?

    [2] தரகு முதலாளியீன் இயல்புகள் யாவை ?

    [3]தரகு முதலாளித்துவத்தாள் இந்திய பொருளாதாரத்துக்கு/உழைக்கும் வர்கத்துக்கு ஏற்படும் கெடுத்தல்கள் யாவை ?

    வினவு பின்னூட்டத்தில் விளக்குமா ?

    //”காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தரகு முதலாளியுமான நவீன் ஜிண்டால்”//

    • நண்பர் சரவணன் அவர்களே,

      அரசியல்வாதிகள் தரகு வேலை பார்ப்பதற்கு நான் ஆதரிப்பதாக பொய்யாக புனைய வேண்டாம்.
      என்னுடைய அனைத்து பதிவுகளையும் தீர ஆராய்ந்து படித்தீர்களென்றால் என் மனதில் இருக்கும் சந்தேகத்தின் காரணம் உங்களுக்கு விளங்கும்.

      மீண்டும் மீண்டும் என்னை சொல்ல வைக்கிறீர்கள். நான் முதலாளித்துவ ஆதரவாளன் இல்லை. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு சாதாரண மனிதன். தங்களை போல அறிவாளி இல்லை நான். அது சரி, நான் ஏதாவது கேள்வியை கேட்டால் நீங்கள் பதிலளிப்பதை விட்டு, வினவின் பின்னால் ஏன் ஒளிகிறீர்கள்? இதற்கு முன்பு கூட இது போல தான் நான் கேட்ட கேள்விக்கு வினவின் நீங்கள் பதிலளிக்காமல் வினவும் வினவின் தோழர்கள் அனைவரும் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று துணைக்கு அழைத்தீர்கள். ஏன், உங்கள் விவாதத்தின் மேல் உங்களுக்கே நம்பிக்கை போய் விட்டதா?
      🙂

      • Warm Welcome to KK!

        This cat has just come out! That is great!
        Speak about this Brokerage owner jindal now !
        Will you accept the content of this essay ?
        pls analysis this essay!

      • கற்றது கையளவு,

        [1]எம் கருத்துகளும் வினவு தளத்தின் கருத்துகளும் ஒருங்கினையும் போது வினவு உடன் நான் விவாதங்களில் கூட்டணி வைப்பது என்ன தவறு ?
        //இதற்கு முன்பு கூட இது போல தான் நான் கேட்ட கேள்விக்கு வினவின் நீங்கள் பதிலளிக்காமல் வினவும் வினவின் தோழர்கள் அனைவரும் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று துணைக்கு அழைத்தீர்கள். ஏன், உங்கள் விவாதத்தின் மேல் உங்களுக்கே நம்பிக்கை போய் விட்டதா?//

        [2]தாங்கள் முதலாளித்துவ ஆதரவாளர் என்பது ” தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?” என்ற கட்டுரையீன் உங்கள் பின்னுட்டங்கள் தான் கூறுகின்றன ! உங்கள் பின்னூட்டங்களை நான் இங்கு மறுபதிவு செய்வதை விட மீண்டும் ஒருமுறை நீங்கள் அவற்றை படித்து பார்க்கலாமே !
        // நான் முதலாளித்துவ ஆதரவாளன் இல்லை. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு சாதாரண மனிதன். தங்களை போல அறிவாளி இல்லை நான்//

        [3]sampleக்கு உங்களின் சில பின்னுட்டங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

        கற்றது கையளவு அவர்களீன் பொன்மொழிகள் :
        —————————————————-

        //தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் ஆதரவானவன் இல்லை, இல்லை, இல்லை. அதே சமயம் தொழிலாளிகளை சுரண்டாத நிறுவனங்கள் இல்லவே இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், தகுந்த பாதுகாப்பு வசதிகள், நல்ல வேலை சூழல் அமைத்து தரக்கூடிய முதலாளிகள் ஒருவர் கூட இல்லையா? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மேற்கூறிய தொழிலாளர் நல வசதிகள் ஏற்பட என்ன வழி என்று யோசிக்கலாமே?//

        //பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவுக்கு வரலாமா – ஆம், வரலாம்.
        அவர்கள் தொழிலில் லாபம் ஈட்ட முயலலாமா – ஆம், லாபம் ஈட்டலாம், தவறில்லை.
        லாபம் என்ற பெயரில் தொழிலாளர்களை சுரண்டலாமா – இல்லை, கூடாது.
        இந்திய மக்கள் நிலத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அரசு கொடுக்கலாமா – கொடுக்கலாம், ஆனால் தகுந்த இழப்பீடு, அந்த நிலத்தினால் மக்களுக்கு முக்கிய வருவாய் (விவசாயம் போன்ற வருவாய்) கிடைத்ததென்றால் அந்த மக்களுக்கு உரிய மாற்று வருவாய் அமைத்து கொடுப்பது அரசின் கடமை.//

    • More over….

      [4]தரகு/தேசிய முதலாளிகளுக்கு இடையே என்ன வேறுபாடு ?

      [5]தேசிய முதலாளிகள் என்று இந்தியாவில் யாரேனும் உள்ளனரா ?

      [6]தரகு/தேசிய முதலாளிகளுக்கு உதாரணம் யார் யார் ?

      [7]தேசிய முதலாளிகளுக்கு,தேசிய இனங்களுக்கும் இடையே என்ன பிரிக்க முடியாத உறவு ?

      [8]Tata Group/reliance இன்று பன்னாட்டு நிறுவனமா ? இல்லை தரகு முதலாளித்துவ நிறுவனமா ?

      வினவு வாத்தியார் பின்னூட்டத்தில் விளக்குவாரா ?

  3. 2ஜி ஊழல் மன்மோகனுக்கு தெரியாமல் நடந்தது என்று பம்மாத்து பேசுபவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ?

  4. மன்மோகனுக்கு மட்டுமல்ல, அதி முக்கிய இந்துத்வா முதலாளிகள் பங்கு பெற்றுள்ளதால் 2ஜி வெறும் ஊழல் மட்டுமல்ல, பெரிய அரசியல் சதி என்பதே உண்மை! வி எச் என் எல்-அய் விழுங்கிய டாடா. பொதுத்துறை நிறுவனங்களை பகுதி பகுதியாக விழுங்கும் மகானுபாவர்கள், கரைக்கப்பால் ஓ என் ஜி சிக்கு சொந்தமான எண்ணை வயல்களை அடிமாட்டு விலைக்கு தனதாக்கிகொண்டவர்கள், ஆந்திர கர்னாடக கனிம வளங்களை கொள்ளையிடும் ரெட்டி சகோதரர்களுக்கு சாமரம் வீசும் தேசியங்கள், மதுரை கிரானைட் மன்னனை பற்றி வாய்திறக்காத அம்மா, கடற்கரை கனிம மண் கொள்ளையனும் அம்மா டீ வீ உரிமயாளனுமான வைகுந்த ராஜன் மீது மேல்னடவடிக்கையின்மை, முக்கியமாக நீதித்துறைக்கே சவால் விடும் வாய்தா ராணி வழக்கு இவையெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடக்குமா? பார்பன ஊடகஙகளும், பல தொப்பிக்காரர்களும் இவற்றை கண்டுகொள்வதில்லை! ஏனோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க