privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதுணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

-

  •  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் கூலிப் பட்டாளங்கள் போட்ட குத்தாட்டம் !
  • பல்கலைக் கழகம் காதணி விழா அரங்கு போல காட்சியளித்த கேவலம் !
  • கட்டப்பஞ்சாயத்து சாராய ரவுடிகள் கல்வி வள்ளல்களாக மாறுவதும் படித்துப்பட்டம் பெற்றவர்கள் கிரிமினல் கொள்ளையர்களாக மாறுவதும் கல்வி தனியார் மயத்தின் ரசவாத மாற்றங்கள் !
கல்யாணி மதிவாணன்
கல்யாணி மதிவாணன் மறுவருகை

துரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் 2012 ஏப்ரல் 9-ம் தேதி பதவி ஏற்றபோதே “அவர் துணைவேந்தருக்கான தகுதி பெறாதவர். அவருடைய நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மூன்று பேராசிரியர்கள் கோ வாரண்டோ ரிட்மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், “கல்யாணி மதிவாணன் உண்மையை மறைத்து பொய் சொல்லி ஏமாற்றி பதவியைப் பெற்றுள்ளார். அவருடைய நியமனம் செல்லதக்கது அல்ல” என்று 26/6/2014 அன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு 04/07/2014 அன்று 6 வாரம் இடைக்கால தடை “வாங்கினார்”.

ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து பல்கலைக் கழகம் வரை 60 கார்கள் புடைசூழ ஒரு முதலமைச்சரை மிஞ்சும் அளவுக்கு அவருடைய கூலிப் பரிவாரங்களுடன் அவர் அடித்த கொட்டம் உயர் கல்வி வரலாற்றில் சாதித்த அறிஞர்களின் முகத்தில் அப்பிய கரியைப் போன்று வரலாறு படைத்துள்ளது. இது அம்மா அவருக்கு அளித்த அருட்கொடை. கீழ்க்காணும் ஒளிப்பதிவு அதை உங்களுக்கு தெளிவாக உணர்த்தும்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு,
மதுரை.