Tuesday, May 28, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதுணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

-

 •  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் கூலிப் பட்டாளங்கள் போட்ட குத்தாட்டம் !
 • பல்கலைக் கழகம் காதணி விழா அரங்கு போல காட்சியளித்த கேவலம் !
 • கட்டப்பஞ்சாயத்து சாராய ரவுடிகள் கல்வி வள்ளல்களாக மாறுவதும் படித்துப்பட்டம் பெற்றவர்கள் கிரிமினல் கொள்ளையர்களாக மாறுவதும் கல்வி தனியார் மயத்தின் ரசவாத மாற்றங்கள் !
கல்யாணி மதிவாணன்
கல்யாணி மதிவாணன் மறுவருகை

துரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் 2012 ஏப்ரல் 9-ம் தேதி பதவி ஏற்றபோதே “அவர் துணைவேந்தருக்கான தகுதி பெறாதவர். அவருடைய நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மூன்று பேராசிரியர்கள் கோ வாரண்டோ ரிட்மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், “கல்யாணி மதிவாணன் உண்மையை மறைத்து பொய் சொல்லி ஏமாற்றி பதவியைப் பெற்றுள்ளார். அவருடைய நியமனம் செல்லதக்கது அல்ல” என்று 26/6/2014 அன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு 04/07/2014 அன்று 6 வாரம் இடைக்கால தடை “வாங்கினார்”.

ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து பல்கலைக் கழகம் வரை 60 கார்கள் புடைசூழ ஒரு முதலமைச்சரை மிஞ்சும் அளவுக்கு அவருடைய கூலிப் பரிவாரங்களுடன் அவர் அடித்த கொட்டம் உயர் கல்வி வரலாற்றில் சாதித்த அறிஞர்களின் முகத்தில் அப்பிய கரியைப் போன்று வரலாறு படைத்துள்ளது. இது அம்மா அவருக்கு அளித்த அருட்கொடை. கீழ்க்காணும் ஒளிப்பதிவு அதை உங்களுக்கு தெளிவாக உணர்த்தும்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு,
மதுரை.

 1. ஜெயலலிதா அமைச்சர்களுக்கு போட்டியா சொம்படிக்கிறாங்களே இந்த பல்கலை அடிவருடிகள்……அதுலயும் கேவலம் கல்யாணி சீட்ல உட்கார்ந்ததும் போடுறாங்களே கும்பிடு….ஓபிஎஸை யே மிஞ்சிடாய்ங்க……

 2. “அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான்” என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்கமுடியாது.

 3. “பல்கலைக் கழகம் காதணி விழா அரங்கு போல காட்சியளித்த கேவலம்” காதுகுத்துறப்ப கூட விசிலடிச்சு நான் பார்த்தது இல்லையே . இது அதுக்கும் மேல .என்னத்த சொல்றது ……………….?

 4. எம் கே யுனிவர்சிட்டியா இல்லை அதிமுக கட்சி ஆபீஸா இங்க படிச்சவன் எல்லாம் வேலைக்கு வந்து இன்னா பண்ணுவானுகளோ ஒன்னும் புரியலப்பா……

 5. இங்கே படிச்சா போலி சர்டிபிக்கேட்டுகள் இலவசமா கிடைக்குமோ? மானங்கெட்ட பொளைப்பு!

 6. காமராஜர் பல்கலைக்கழகம் ..பெயரையாவது மாத்தி வச்சிட்டு குத்தாட்டம் போட்டுத் தொலைங்கடா

  காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.

  தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு என்றார்.
  ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா… வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாமென்றார் வைரவன்.
  இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
  முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம் என்றார்

  • ரவி ,
   இச் செய்தி எமக்கு புதிது. திரு காமராசர் அவர்களீன் மக்கள் நேயம் கண்களை குளமாக்குகின்றன. காமராசர் நல திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அவர் அரசு அதிகாரிகள் செய்தது தான் என்று மூர்க்கமாக ,முட்டாள் தனமாக பேசும் முட்டாள் அறிவு ஜீவிகலுக்கு ரேசன் கடைக்கு வழி கூட தெரியாது

 7. எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை ஏன் இழுக்குறீர்கள் என்று வினவு தளத்தின் மீது பொரிந்து தள்ளும் அம்பிகளுக்கு இந்த குத்தாட்ட திருவிழாவில் விடை இருக்கிறது.எல்லோருக்கும் முன்பாக அம்மணியை அய்யர் பூசாரிகள்தான் வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் முதலில் வரவேற்கின்றனர்.மதசார்பற்ற அரசு நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் மத ஆச்சாரங்களை கடைப்பிடிக்கலாமா .இப்படி தூணிலும் துரும்பிலும் பார்ப்பனியம் நீக்கமற நிறைந்திருக்கும்போது அதற்கான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழவே செய்யும்.

  அனைத்து மத மக்களும் கடவுள் மறுப்பாளர்களும் செலுத்தும் வரிப்பணத்தில் ஊதியம் பெறுவோர் அரசு அலுவலகங்களில் பார்ப்பன இந்து மத ஆச்சாரங்களை நடைமுறை படுத்துகிறார்கள்.அவ்வளவு ஏன்,அலுவலக வளாகத்திற்குள் கோவில் கட்டி குடமுழுக்கு கூட நடத்துகிறார்கள்.இதனை கண்டித்தால் எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை ஏன் இழுக்குறீர்கள் என்று கோபப்படுகிறார்கள்.

 8. உலகத் தர வரிசையில் ஏன்நாம் கீழான நிலையில் உள்ளோம் என்பதற்கு காரணம் புரியுது…நான் கல்வியத்தான் சொல்றேன்…வேறெதுவுமில்லை.இத்தனை மு…கள்தானா…?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க