யாதும் – முஸ்லிம் எதிர்ப்பு வரலாற்றுப் புரட்டைத் திரைகிழிக்கும் ஆவணப்படம்
முஸ்லிம் மக்களை ‘அந்நியர்களென்றும், அந்நிய மதத்தைப் பின்பற்றுகின்ற அவர்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது’ என்றும் கடந்த 25 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தி வரும் பொய்ப்பிரச்சாரம் பெரும்பான்மை சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. இந்தப் பொதுக்கருத்தின் துணை இருக்கும் தைரியத்தில் போலீசு முசுலிம் இளைஞர்கள் மீது எண்ணற்ற பொய்வழக்குகளை தடையின்றிப் போடமுடிகிறது.
எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வைத் தொலைத்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 போன்ற நாட்களில் முசுலிம் ஒருவர், ரயிலிலோ பேருந்திலோ அச்சமின்றி பயணம் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்தையும் பொது நீரோட்டத்திலிருந்து அச்சுறுத்தி அகற்றுவதில் பெரிய வெற்றியை இந்துமதவெறியர்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலை உருவாக்கியதில், அவர்களால் திரித்துப் புரட்டப்பட்ட வரலாறுக்கு முக்கிய பங்கு உண்டு.
இதன் எதிர்விளைவாக, கணிசமான முசுலீம் இளைஞர்கள் – உயர் கல்வி கற்றவர்கள் கூட – அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இசுலாமியர்களாகப் பிறந்த யாரும் தமது மதத்தையோ அல்லது மத கடுங்கோட்பாட்டுவாத அமைப்புகளையோ விமரிசிக்கக் கூடாது என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இசுலாமியர்களை மிரட்டுகின்றன. அவர்களை துரோகிகள் என்று தூற்றுகின்றன. இவ்வாறு முசுலிம் அடிப்படைவாதம் பெருகுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகின்றனர். இரு தலைக் கொள்ளி எறும்பாக இசுலாமிய மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில்தான், ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை கோம்பை அன்வர் இயக்கி வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் முஸ்லிமாகிய இயக்குநர், தனது வேர்களையும் அடையாளத்தையும் தேடிப் புறப்படும் பயணத்தில் நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறார். எவ்விதமான கருத்துப் பிரச்சாரமும் இல்லாமல் வரலாற்றுத்தரவுகளையும் சான்றுகளையும் மட்டும் நம் முன்வைக்கிறார் அன்வர். இவற்றின் வழியாகவே உண்மையை வாசகன் உணர்ந்து கொள்ளச் செய்துவிடுகிறார் இயக்குநர். இதுதான் இந்த ஆவணப் படத்தின் மிகப்பெரும் வலிமை.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும், தில்லி சுல்தான்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் (எனவே அந்நியர்கள், துருக்கர்கள், துலுக்கர்கள்) என்று உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கருத்தை இப்படம் கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறது.
பாபர் வருகைக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோவிலின் கல்வெட்டு ‘துருக்கன் அகமது’வைப் பதிந்துள்ளதும், அக்கோவில் கட்டப்படும் முன்பே உறையூரில் (இன்றைய திருச்சியின் ஒரு பகுதி) வாழ்ந்து மறைந்த நத்தர் வலி எனும் இறைநேசரின் தர்ஹாவும், ஆழ்வார் திருநகரியில் காணப்படும் அராபி வணிகர்களின் மரக்கலங்களின் புடைப்பு சிற்பங்களும் ஆர்.எஸ்.எஸ் பரப்பி வரும் திரிக்கப்பட்ட வரலாற்றை மறுத்து, தென் இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாற்றைச் சொல்கின்றன. நறுமணப் பொருட்களின் வழித்தடம் வழியாக அரபு நாடுகளிலிருந்து மலபார், சோழமண்டலக்கரை வழியாக கேரளம், தமிழ்நாட்டிற்கு இஸ்லாம் வந்ததை கண்முன்னே காணக்கிடைக்கும் ஆதாரங்களை எடுத்து வைத்து நிறுவுகிறது ‘யாதும்’.
தமது வழிபாட்டு இடங்களை உருவாக்கிய இஸ்லாமியர்கள் அந்தந்தப் பகுதியில் நிலவிய கட்டடக்கலை வடிவங்களிலேயே மசூதி, தர்ஹாக்களைக் கட்டியுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் அன்வர் நிறுவுகிறார். கேரளத்தில் கொல்லம் ஓடு வேய்ந்த கட்டிடங்களாகவும், தமிழகத்தில் திராவிடபாணிக் கட்டுமானங்களாகவும் காட்சியளிக்கின்றன அன்று கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிகள்.
தர்காக்களில் வழிபட அனைத்து மக்களும் சென்றுவருவதையும், கோவில்கொடை போன்றே சிலம்பம், தவில், நாதஸ்வரத்துடன் தமிழ்நாட்டில் நடத்தப்படும் சந்தனக்கூடு விழாக்களையும் தமிழ் முஸ்லிம்களின் கலாச்சாரமாகப் பதிந்திருக்கிறார் அன்வர்.
தமிழிலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் மறைத்து வந்துள்ள ஒரு பகுதியையும் தொட்டுக் காட்டியுள்ளார் – அது, இஸ்லாமியர்கள் தமிழுக்கு செய்த பணி. ‘ஆயிரம் மசாலா’ எனும் கேள்வி பதில் நூலில் தொடங்கி, கிஸ்ஸா, நாமா, முனாஜாத் போன்ற புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் தமிழுக்கு அறிமுகம் செய்ததையும், தமிழ் இசைக்கு இசுலாமியர்களின் பங்களிப்பையும் கவிஞர் அப்துல் ரகுமானின் பேட்டி வழியாகவும் குமரி அபுபக்கரின் பாடல்கள் வழியாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
இப்படத்தினை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சிரமங்களுக்கிடையே எடுத்துள்ள அன்வர், கத்திமீது நடப்பது போன்ற செயலைச் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எனலாம். நீ தமிழனா, முஸ்லிமா என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு “யாதும்” என்று விடை தந்திருக்கிறார் இயக்குநர். ஒருசார்பாக எதனையும் சொல்லாமல் பார்வையாளர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் வகையில் ”இவையெல்லாம் வரலாற்று ஆதாரங்கள். நீங்களே அவற்றிலிருந்து உணர்ந்து கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்லியுள்ளது இப்படம்.
இப்படத்தில் குறிப்பிடப்படும் இரண்டு விசயங்கள் வரலாற்றை எப்படிப் பார்க்கவேணடும் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகின்றன.
- பதினாறாம் நூற்றாண்டில் வடகேரளத்தின் சாமோரின் மன்னர் ஆண்ட பகுதியை கைப்பற்ற வந்த போர்த்துகீசியர்களை முறியடித்தவர் குஞ்ஞாலி மரைக்காயர் எனும் படைத் தளபதியாவார். அவரின் துணையோடு அந்நியப் படையெடுப்பை முறியடித்த சாமோரின் (சாமுத்ரி) மன்னர், மீனவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை முஸ்லிமாக மாற்றவேண்டும் என்று அரசாணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் என்பதைக் கூறுகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்.
- திருவிளையாடல் புராணத்தில் வரும் பிட்டுக்கு மண்சுமந்த படலத்தை மதுரையில் இருக்கும் புட்டுத்தோப்பு திருவிழாவில் சடங்காக ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் கீழ்த்தளத்தில் திராவிடக் கட்டடக்கலையையும் மேல்தளத்தில் இஸ்லாமிய பாணியையும் (பெர்சியன்) பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாரம்பரிய உரிமையாக தீர்த்தத் தொட்டிக்கு வேலி அடைப்பவர் முகைதீன் பிச்சை எனும் முஸ்லிமாவார்.
ஆவணப்படம் கூறும் குறிப்பிட்டுச் சொல்லிடும் இவ்விரண்டு விசயங்களையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?
சாமுத்ரியின் காலத்தில் இந்து-முஸ்லிம் பகையோ, ஏன் இந்து மதம் எனும் கருத்தோ இன்றுள்ள அர்த்தத்தில் உருவாகிடவில்லை. இந்து என இன்று அறியப்படும் பெரும்பான்மை சமூகம் ஒரே மதமென உருவாகியிருக்கவில்லை. பல்வேறு சாதிகளும், அவைகளின் தனித்தனி வழிபாட்டு முறைகளுமே இருந்தன. சாமுத்ரிக்கும் குஞ்ஞாலி மரைக்காயருக்கும் இருந்த நெருங்கிய உறவு கூட சாமுத்ரிக்கும் மீனவர்களுக்கும் இருந்ததில்லை. மேலும் குடும்பத்தில் ஒருவர் முஸ்லிமாக மாறச்சொல்லி சாமுத்ரி மன்னன் மீனவர்களுக்கு உத்தரவிட்டிருப்பதற்கு காரணம் வலுவான போர்ப்படையை, மரைக்காயரின் தலைமையில் கட்டி, தனது அரசதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்லாமை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே.
இதனை மத நல்லிணக்கம் என்றோ, இந்து மன்னரின் பெருந்தன்மை என்றோ கருதுவது அபத்தம். மீனவர்கள் முஸ்லிமாக மாறுவதால் இந்து மதத்தினரின் எண்ணிக்கை குறைவது பற்றி இன்று இராம. கோபாலன் குமுறுவது போன்ற சிந்தனையே பதினாறாம் நூற்றாண்டில் கிடையாது. இந்தப் பதற்றம், காலனியாட்சியாளர்கள் ஒன்றுபடுத்தப்பட்ட இந்தியாவை உருவாக்கிய பின்னர், இந்து என்று பெயர் சூட்டியதற்குப் பின்னர், இன்னின்னாரெல்லாம் இந்து என்று சட்டரீதியில் வரையறுத்ததற்குப் பின்னர் உருவானது. கஜினியின் சோமநாதபுரப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டவர்களில் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்ததாக ரோமில்லா தபார் குறிப்பிடுவதையும், சிவாஜியின் படையில் முஸ்லிம்கள் இருந்ததையும் இந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.
குஞ்ஞாலி மரைக்காயர் இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று போற்றப்படுபவர். அன்று தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீனவர்களை முஸ்லிமாக மாறச்சொன்ன சாமுத்ரி மன்னன், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கொண்டு, குஞ்ஞாலி மரைக்காயரைக் காட்டிக் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதையும் இங்கே நினைவிற்கொள்ளவேண்டும்.
மதுரை புட்டுத்திருவிழாவில் தீர்த்தத் தொட்டிக்கு வேலி கட்டுபவர் முஸ்லிமாக இருப்பது மக்களிடையே நிலவி வந்த சமூக உறவுக்கான ஒரு சான்று. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கோவில்கள், திருவிழாக்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு சாதிகளுக்கும் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப் பட்டு வட்டார அளவில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சேவை சாதியினரின் பங்களிப்பை உறுதிப்படுத்திட திருவிழாக்களில் அவர்களைக் கவுரவிக்கும் ‘சுதந்திரங்கள்’ ( சுதந்திரம் = தானியமாகவோ, பணமாகவோ அளிக்கப்படும் சிறப்பு ஊதியம்) இருந்தன. கைவினைஞர்களும் இவ்வாறு திருவிழாக்களோடு பிணைக்கப்பட்டிருந்தனர். அச்சாதியினர் மதம் மாறியபோதிலும் அவர்களின் மதமாற்றத்தை, அன்றைய சமூகம் (இந்து மதம் எனும் கருத்துருவாக்கம் உருவாகும் முன்னர் இருந்த சாதிய சமூகம்) பெரிதாக கருதவில்லை. கைவினைஞர்கள் மதம் மாறினாலும் அதே நிலவுடைமைக்கால உறவுகள் நீடித்தன என்பதையே முகைதீன் பிச்சையின் குடும்பம் இன்னமும் புட்டுத்திருவிழாவில் சேவை செய்து கவுரவத்தைப் பெற்றுக் கொள்வது காட்டுகிறது.
வரலாற்றுப் போக்கில் மக்களிடையே முகிழ்த்திருக்கும் இத்தகைய இணக்கமான உறவுகள் தொடர்வதைக்கூட இன்றைய இந்து, முஸ்லிம் மதவெறியர்கள் சகித்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்து அல்லது முஸ்லிம் என்ற மத ரீதியான வரையறைக்குள் மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கையின் எல்லா விதமான நடவடிக்கைகளையும் அடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.
திராவிட பாணிக் கட்டிடக் கலையே தமிழ்முஸ்லிம்களின் கட்டிடக்கலையாக இருந்ததை அன்வர் சொல்லும்போது, இக்கட்டிடங்கள் எழும்பிய காலத்தில் வஹாபியிச முல்லாக்களோ, தவ்ஹீத் ஜமா அத் களோ உருவாகியிருக்கவில்லை என்பது நற்பேறு என்றே தோன்றுகிறது. அக்காலத்தில் சீனத்தில் பரவிய இஸ்லாம், சீனக் கட்டிடப் பாணியில் இருந்ததைப் போன்றே இங்கும் இயல்பாக இம்மண்ணின் கலை வடிவத்தையே வரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்று தூய இஸ்லாம் பேசும் வஹாபி அடிப்படை வாதம், இவற்றுக்கு எதிதராக பத்வா பிறப்பிக்க கூடும்.
****
இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம் பரவிய வரலாற்றிலிருந்து சூஃபி ஞானிகளைப் பிரித்துப் பார்க்க முடியாது. சூஃபிகளின் இசைப்பாடல்கள், அவர்களது எளிய வாழ்க்கைமுறை, அவர்களில் பலர் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் சேவைச்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தது போன்ற காரணங்கள் இஸ்லாம் பரவுவதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் – குறிப்பாக பஞ்சாப், சிந்து மாநிலங்களில் – ஏராளமான இஸ்லாமியர்கள் சூஃபி மார்க்கத்தில் பற்றுள்ளவர்களே. இந்த தர்ஹா வழிபாடும், சந்தனக்கூடு போன்ற விழாக்களும் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல அனைத்து மதத்தினரிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் சுற்றுலா செல்லும் மக்கள் சிக்கல் முருகனுக்கு ஒரு கும்பிடு, நாகூர் தர்ஹாவுக்கு ஒரு கும்பிடு, வேளாங்கண்ணிக்கும் ஒரு கும்பிடு என்பதைத்தான் நடைமுறையில் வைத்திருந்தனர். இன்றும் அது தொடரத்தான் செய்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் முதல் ஆஜ்மீர் தர்ஹா வரை இதுதான் நடப்பு.
அதனால்தான் “தர்ஹாக்களுக்கு செல்லாதீர்” என இந்து முன்னணி இந்து மக்களைக் கோருகின்றது. அத்துடன் “மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகளை”, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பார்ப்பன இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்கிறது. “முஸ்லிம் பக்கீரான ஷிர்டி சாய்பாபாவை வழிபடக்கூடாது” என இந்துக்களுக்கு துவாரகா சங்கராச்சாரி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். இதனை சாய்பாபா பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். வாரணாசியிலேயே சங்கராச்சாரியின் உருவப்படங்களை எரித்துள்ளனர்.
இன்னொரு பக்கம், வஹாபிகளும், தவ்ஹீத் ஜமா அத் போன்ற அடிப்படைவாத இயக்கங்களும் “தர்ஹாக்கள் இஸ்லாமல்ல” என்று அவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் கூச்சலிடுகிறார்கள். இடிக்கிறார்கள். இவர்களை இந்து பார்ப்பன கும்பலின் ஜாடிக்கேத்த வஹாபி மூடி என்று சொல்லலாம்.
சூஃபி மார்க்கம், தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு போன்ற “ஹராம்களை” ஒழிக்கத் துடிக்கும் வஹாபியிசம் உலகெங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உறுதி செய்ய வேலை செய்கிறது. இஸ்லாம் பரவிய நாடுகளில் 19-ம் நூற்றாண்டு வரை இந்தத் தூய்மைவாதம் இருந்ததில்லை. சர்வதேசிய ஒற்றை அடையாளமாக இஸ்லாமை உருவாக்கிடும் நோக்கில் செயல்படும் இந்த அடிப்படை வாதமே, ஏகாதிபத்தியம் உருவான 19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில்தான் உருவானது. இன்று இதன் புரவலராக இருப்பது சவுதி அரேபியா.
‘இந்து’ மதம் என்று இன்றைய பொருளில் அழைக்கப்படும் மதமும், இதே காலகட்டத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கிடும் போக்கில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சட்டரீதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதுவே தங்களின் ஆதிக்கத்துக்கு உகந்ததாய் இருப்பதை உணர்ந்த பார்ப்பன, பனியா கும்பல் இந்து-இந்தி-இந்தியா என்பதை உயர்த்திப் பிடிக்கிறது.
தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, சூஃபி மரபு போன்றவை இந்து முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே இயல்பாக நிலவும் நல்லிணக்கத்தைப் பேண உதவி செய்வதாலும், இந்து வேறு, முஸ்லிம்வேறு என்று பிரிப்பதற்கான வாய்ப்பைத் தடுப்பதாலும், இருதரப்பு மதவெறியர்களுமே இதனை எதிர்க்கின்றனர்.
இவர்கள் யாருக்கும் ‘யாதும்’ ஆவணப்படம் நிச்சயமாக உவப்பாய் இருக்காது. வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இல்லாமல், இப்படம், பெரும்பான்மை மதத்தினர் மத்தியில் திரிக்கப்பட்ட வரலாறு உருவாக்கியிருக்கும் சித்திரத்தைக் கலைத்துப் போடுவதோடு, முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கனவையும் கலைத்துவிடுகின்றது. அந்தவகையில் இப்படம் ஆக்கப்பூர்வமான பங்கினைச் செய்துள்ளது.
“யாதும்” ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பொய்களில் சிக்குண்டு கிடக்கும் இந்துக்களையும், தவ்ஹீத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு வரும் இசுலாமியர்களையும் தவறான பார்வையிலிருந்து இப்படம் விடுவிக்கும்.
ஒருபுறம் நாட்டை அந்நிய ஏகபோக நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டே, இந்த மண்ணோடு ஒன்றிப்போன முசுலிம் மக்களை அந்நியர்களாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் நடவடிக்கை, எத்தகையதோர் கீழறுப்பு வேலை என்பதை உணர்ந்திட இப்படம் துணைபுரியும்.
_____________________
பின்குறிப்பு:
தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ், இப்படத்தில் மீனவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த நல்லுறவிற்கு சாட்சியமளித்துள்ளார். (அது அவர் மோடி பக்தராக மதம் மாறுவதற்கு முன்னரே எடுக்கப்பட்ட பேட்டி) மஸ்கோத் அல்வா விற்பதற்கு தங்கள் ஊருக்கு வரும் முஸ்லிம் வியாபாரிகளை சாச்சா, சாச்சி என அழைத்துப் பழகியதாக தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஜோ.டி.குருஸ். அதே வாய்தான் இன்று முஸ்லிம்களைக் கொன்றுகுவித்த மோடியை ஆதரித்து மேடையேறிப் பிரச்சாரம் செய்கிறது. இந்த அசம்பாவிதத்துக்கோ அசிங்கத்துக்கோ இயக்குநர் பொறுப்பாக முடியாது.
________________
கோம்பை எஸ். அன்வர் – அறிமுகக் குறிப்பு
“அசைட்” என்று சென்னையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் தனது ஊடகப் பயணத்தை துவக்கியவர் கோம்பை எஸ். அன்வர்.
இன்று “வரலாற்றை” பதிவு செய்வதை தனது முக்கியப் பணியாகக் கருதுகிறார். ஆய்வாளராக தென்னிந்திய முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்யும் அவர், குறிப்பாக பெரிதும் தவறுதலாக எழுதப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட, முஸ்லிம் வரலாற்றில் கவனம் செலுத்துகிறார். கி.பி 1600-ல் இருந்து கி.பி 2000 வரையிலான சென்னை வரலாற்றைத் தொகுத்தளிக்கும் “Madras Gazateer Project”-ல் அவரும் ஒரு பங்களிப்பாளர். அண்மையில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது வருடத்தைக் கொண்டாடும் நோக்கோடு “பெரிய கோவில்” பற்றிய குறும்படங்களை இந்திய தொல்லியல் துறைக்காக எடுத்திருக்கிறார்.
__________________
– செங்கதிர்
__________________
யாதும்..
வேர்களையும் அடையாளத்தையும் தேடி ஒரு தமிழ் முஸ்லீமின் வரலாற்றுப் பயணம்
ஒளிக்குறுந்தகடு, விலை: ரூ 200
யாதும் ஆவணப்படம் குறித்து மேலும் அறிந்திட Yaadhum
ஆவணப்பட முன்னோட்டம்
ஆவணப்படம் கிடைக்கும் முகவரியை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
Contact details:
http://yaadhum.com/contact-us.aspx
நல்ல பதிவு, இந்தக் காணொளியை வாங்குவதற்கு நானும் ஆவலாக உள்ளேன்.
தமது தமிழ் வேர்களை நினைத்துப் பெருமைப்படுவது மட்டுமல்ல, அதற்காக ஆதாரங்களுடன் வாதித்து தமதுரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கும் முஸ்லீம்களும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்ப்பாரம்பரியத்தில் வந்த தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கபட்டு தமது தமிழ் வேர்களை மறந்து, இலங்கையில் முஸ்லீம்கள் எவ்வாறு தமிழர்களிடமிருந்து பிளவு பட்டு நிற்கிறார்களோ அப்படி நடந்து விடக் கூடாதென்ற என்னுடைய ஆதங்கம் தான் சிலவேளைகளில் முஸ்லீம் எதிர்ப்பாக வெளிப்படுகின்றது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. அந்த தவறைத் திருத்திக் கொள்ள நானும் எனது விமர்சனங்களில் அல்லது பதில்களில் முயற்சிப்பதுமில்லை.
பல மாதங்களுக்கு முன்பு இந்து பத்திரிகையில்” Journey to trace Tamil Muslim roots “என்ற செய்தியில் இருந்த தமிழ் அல்லது திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட பள்ளிவாசலின் படத்தைப் பார்த்ததுமே இப்படி இருந்த தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள், அரேபிய கட்டிடக் கலையை தமதாக நினைத்துக் கொண்டு, தமது ஊர்களில் எல்லாம் அரேபிய பாணியில் பள்ளிவாசல்களைக் கட்டுமளவுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி தான் எழுந்தது.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/journey-to-trace-tamil-muslim-roots/article5330637.ece
இலங்கையில் கூட முஸ்லீம்கள் முன்பெல்லாம் தமிழர்களாக தமிழ்க்கலாச்சாரத்தையும் பேணிக் கொண்டு தமது மார்க்கத்துக்கும் உண்மையாக, நம்பிக்கையுள்ள முஸ்லீம்களாகத் தானிருந்தார்களாம். உதாரணமாக, 1970 களின் இறுதிகாலத்தில் கூட மன்னாரிலுள்ள முஸ்லீம் கிராமங்களில் எல்லாம் ஊருக்கு நடுவில் பந்தல் போட்டு பொங்கலிட்டு, விடியும் வரை சீறாப்புராணத்தைப் புலவர்கள் பாடி அதற்கு விளக்கவுரை கூறுவார்களாம். ஆண்களும், ஒரு திரையின் பின்னால் பெண்களும் இருந்து விடியும் வரை சீறாப்புராணத்தைக் கேட்டு இரசிப்பார்களாம். எப்பொழுது தமிழ் முஸ்லீம்கள் பிழைப்புத் தேடி சவூதி அரேபியாவில் காலடி வைத்தார்களோ அன்றைக்குத் தொடங்கியது தான் தமிழ் –முஸ்லீம் பிரச்சனையும், தமிழைப் பேசிக் கொண்டே தமிழையும், தமிழர்களின் உறவை முஸ்லீம்கள் வெறுப்பதும், தம்மை அரபுக்கள் என்று வரலாற்றைத் திரிக்கத் தொடங்கியதும். சவூதி அரேபியாவின் எண்ணெய் என்ற சாத்தான் தமிழர்களையும் தமிழ்முஸ்லீம்களையும் பிரித்து தீவிரவாத இஸ்லாத்தை தமிழ் முஸ்லீம்களிடையே விதைத்து விட்டது. விரைவாக வளர்ந்து வரும் அந்த மரம், தமிழ்நாட்டு முஸ்லீம்களையும் அரபுமயமாக்கி, தம்மை இன்று தமிழர்களாக நினைக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களை அரைவேக்காட்டு அரபுக்களாக்கி (இலங்கையில் போல்) விடுமோ என்பது தான் எனது கவலையெல்லாம்.
வியாசன் மிக்க நன்றி.உங்கள் தவறுகளை சுட்டுவதிலும், நேர் வழியை மெச்சுவதிலும் இந்த சரவணன் தான் முதலில் நிற்பான் என்பதயை மிக்க அன்புடன் உங்கள் ஈழம் கடந்த தாயகத்தில் ,தமிழ் நாட்டில் வாழும் உங்கள் சகோதரன் என்ற முறையில் கூறிகொளகின்றேன்.
வியாசன், ஈழத்தில் தமிழர்கள் மதத்தால் பிரிக்கப்ட்டு உள்ளார்கள் என்ற உங்கள் மன வலியை எம்மால் உணர்ந்து கொள்ள முடீகீன்றது. “மீண்டு எழும் ஈழத்துக்கான போர்” பூர்விக தமிழர்களையும் , பூர்விக இஸ்லாமிய தமிழர்களையும் ஒருங்கினைக்கும் என்ற முழு நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு. மிக்க நன்றி வியாசன்.
//இந்தக் ‘காணொளியை’ வாங்குவதற்கு நானும் ஆவலாக உள்ளேன்.//
திருத்தம்: ஆவணப்படம்
தம்பி வியாசன்,
குறிப்பு:
ஈழத்து தமிழர்களையும் , ஈழத்து இஸ்லாமிய தமிழர்களையும் தமிழ் இனம் என்ற கருத்தாக்கத்தில் இணைக்க நாம் என்ன செய்யலாம் வியாசன் ? அவர்கள் எந்த அளவுக்கு முரண்பட்டு நிற்கின்றனர்.? சக மனிதர் என்ற அளவிலாவது அவர்களுக்குள் பேச்சு வார்த்தை உள்ளதா ? சமுக நீகழ்வுகளில் அவர்கள் ஒருவரை மற்றவர் விருந்தினராக பரஸ்பரம்[mutually] அழைக்கின்றார்களா ?
பின் இணைப்பு:
[0]சாதீய வக்கிரம், கர்ப்பிணி பெண்ணென்றும் பாராமல் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதால் ஒரு ஊரே சேர்ந்து கொளுத்துவதான பதற்றத்தோடு நிறைவடைகிறது பெருமாள் முருகனின் பூக்குழி நாவல். என்பதுகளின் துவக்கத்தில் நடைபெறுகிற கதையாக இருப்பினும் தற்கால சூழலுக்குள் சாதி எப்படி நவீனப் பட்டிருக்கிறது என்பதை பொருத்திப்பார்க்க முடிகிறது. மனித மனங்களில் ஒளிந்து கிடக்கும் சாதிய வன்மத்தை தோலுரித்துக்காட்டும் தனதிந்த படைப்பை “—-ராமதாசும் காடுவெட்டி குருவும் சாதி வெறி பிடித்து திரிகிற—” இன்றைய சூழலில் சாதி வெறிக்கு பலியான தருமபுரி இளவரசனுக்கு காணிக்கையாக்கி இருப்பது படைப்பாளனின் கர்வத்தை காட்டுகிறது. [Thanks to Madusudan Rajkamal]
படித்திர்கலா வியாசன் ?
[1]கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்புக்கான விருது (2013) தமிழ் பேராசிரியர்திரு பெருமாள் முருகன் எழுதீய ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான “ONE PART WOMAN’ நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்: அனிருத்தன் வாசுதேவன்.
படித்திர்கலா வியாசன் ?
இன் நாவல் பற்றீய சிறு ஆய்வு :
http://vansunsen.blogspot.in/2014/02/mathorupakan-perumalmurugan-complete.html
Note:
ஈழத்து தமிழர்களையும் , ஈழத்து இஸ்லாமிய தமிழர்களையும் தமிழ் இனம் என்ற கருத்தாக்கத்தில் இணைக்க நாம் என்ன செய்யலாம் வியாசன் ? அவர்கள் எந்த அளவுக்கு முரண்பட்டு நிற்கின்றனர். சக மனிதர் என்ற அளவிலாவது அவர்களுக்குள் பேச்சு வார்த்தை உள்ளதா ? சமுக நீகழ்வுகளில் அவர்கள் ஒருவரை மற்றவர் விருந்தினராக பரஸ்பரம்[mutually] அழைக்கின்றார்களா ?
உங்களின் அன்பான கருத்துக்களுக்கெல்லாம் நன்றி அண்ணா. நான் இன்னும் மாதொருபாகன் நாவலைப் படிக்கவில்லை. உங்களின் வலைப்பதிவில் இணைப்பு ஒன்றையும் காணவில்லை. எனக்கு தமிழ் நாவல்கள் வாசிக்கும் வாய்ப்போ அல்லது நேரமோ குறைவு. புத்தகங்கள் பலவற்றை வாங்க எனக்கு விருப்பம் தான். ஆனால் இணையத்தில், இந்தியாவில் Credit Card ஐக் கொடுத்து வாங்க எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. முதல் அனுபவத்திலேயே Credit Card ஐக் Cancel பண்ண வேண்டியேற்பட்டது. நான் தமிழ்நாட்டுக்குப் போகும் போது நூல்களை வாங்கும் வழக்கம் உண்டு. அவற்றில் பலவற்றையே படிக்க எனக்கு நேரமில்லை. நீங்கள் கூறுவதால் ‘ONE PART WOMAN’ (இங்கு வாங்க முடிந்தால்) நிச்சயமாக வாங்கிப் படித்துப் பார்க்கிறேன். நன்றி.
தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ், இப்படத்தில் மீனவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த நல்லுறவிற்கு சாட்சியமளித்துள்ளார்-Is he tamil writer,anyone writes in tamil called tamil writer.Did you read his novel’KORKAI’ full of vulgar,no continuity.Nobody knows what is his intention in this novel.No civilised,genleman or lady can go through his novel.Which group supported or he purchased for getting SAHIDYA ACADEMY AWARD for this book.
இந்த ஆவணப்படத்தை ஆர்.எஸ்.எஸ் விரும்பாது என சொல்வது உங்கள் சித்தாந்த கண்மூடித்தனத்தை காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி பிரார்த்தனையிலேயே இரு முஸ்லீம் மகான்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. இன்னும் சொன்னால் இந்த ஆவணப்படம் குறித்த கட்டுரைக்கு நன்றி. இந்த ஆவணப்படத்தை கட்டாயமாக ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் காட்டுவதற்கும் ஏற்பாடு செய்யலாம். 🙂
ஜி கன்யாகுமரியில இப்தார் விருந்து வைக்கப் போறதா கேள்விப்பட்டேன், மெய்யாலுமா? அதுல மோகன் பவத்துஜி கலந்து கிறதுக்காக கருப்பு குல்லாய மாத்தி பாய் குல்லாய போட ஆர்டர் கொடுத்தாருன்னும், உங்க மண்டை சைஸ் பெரிசுங்கிறதால ஹாங்காங் கிங் கேப் கம்பெனிக்கு மெயில் அனுப்பி ஆர்டர் கொடுத்தீங்கன்னும் சொன்னாங்க, கலக்குங்கஜி
அரவிந்தன் நீலகண்டன்,
முந்தைய கட்டுரையீல் ஓடியது போல , இந்த வினவு பின்னுட்டத்திலும் உங்கள் கருத்துக்களை அள்ளி தெளித்துவிட்டு ஓடிவிட்டால் மட்டும் போதாது. எதீர் கருத்துகளையும் எதிர் கொள்ளும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். முற்போக்கு வினவு கருத்தியல் தளத்தில் விவாதிக்காத வாசகர்களுடன் விவாதீக்க இயலாத உங்கள் மன நிலை ஒரு எழுத்தாளனுக்கு எவ் வகையில் சிறப்பு உள்ளதாக இருக்க முடியும் ?
Note:இம் முறையும் உங்களுக்கு பதிலாக பதில் பேச திரு காவ்யா அவர்களை அனுப்ப மாட்டிர்கள் என நம்புகின்றேன்.
அரவிந்தன் நீலகண்டன்://இந்த ஆவணப்படத்தை ஆர்.எஸ்.எஸ் விரும்பாது என சொல்வது உங்கள் சித்தாந்த கண்மூடித்தனத்தை காட்டுகிறது. //
மேல் உள்ள உங்கள் கருத்தை ஆர்.எஸ்.எஸ் வரலாற்றின் அடிப்படையில் நிருபணம் செய்யுங்கள் பார்க்கலாம் !
நல்லா போட்டு காட்டுங்க. அப்படியாவது திருந்தட்டும். சும்மா எப்ப பாரு பாகிஸ்தானுக்கு ஓடிப்போ, இது இந்து நாடுனு சொல்லிட்டு திருயுறானுக.
நாளையிலேருந்து அநீ ஜி முஸ்லீம் பக்கீருங்கதான் நம்மாளுங்க, துவாரகா சங்கர்சோரி துரோகிகங்கன்னு புக் எழுத பிளான் பண்ணிருக்காறாம், அதுக்கு ஆர்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏற்பாடு பண்ணி பாரதம் பூரா புக்க விக்க போதாம். பட்டைய கிளப்பறேள் ஜி
//“முஸ்லிம் பக்கீரான ஷிர்டி சாய்பாபாவை வழிபடக்கூடாது” என இந்துக்களுக்கு துவாரகா சங்கராச்சாரி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.//
இன்னையிலேருந்து அநீ ஜி குஞ்ஞாலி மரைக்காயர்ன்ற பாயை தலைவரா கும்பிடுவார். சாமுத்ரிங்கிற இந்து ராஷ்டர கிங்கை துரோகின்னு கட்டம் கட்டுவாரு. ஆர்.எஸ்.எஸ் ஷாகாவுலயும் முசுலீம் மரைக்காயருங்கதான் தேசபக்தர்கள, இந்து மன்னர்கள்தான் துரோகிகங்கன்னு சிலபஸ் மாத்துவாய்ங்களாம். வாழ்த்துக்கள் ஜி!
//குஞ்ஞாலி மரைக்காயர் இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று போற்றப்படுபவர். அன்று தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீனவர்களை முஸ்லிமாக மாறச்சொன்ன சாமுத்ரி மன்னன், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கொண்டு, குஞ்ஞாலி மரைக்காயரைக் காட்டிக் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதையும் இங்கே நினைவிற்கொள்ளவேண்டும்.//
சங் கும்பலின் இரட்டை வேடத்துக்கு அரவிந்தன் மிக சிறந்த எடுத்துக்காட்டு.ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி பிரார்த்தனையிலேயே இரு முஸ்லீம் மகான்களின் பெயர்கள் சொல்லப்படுவதாக மாய்மாலம் செய்கிறார் ,அவரிடம் ஒரு கேள்வி.
அய்யா யோக்கியரே உங்களின் தலைவர் கோல்வால்கர் முசுலிம்கள் தங்கள் மதத்தை கைவிடாதவரை இந்த நாட்டின் குடிமக்களாக ஆக முடியாது அவர்கள் அந்நியர்களே என Our nationhood defined நூலில் நஞ்சு கக்குகிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்கள்.
[[தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, சூஃபி மரபு போன்றவை இந்து முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே இயல்பாக நிலவும் நல்லிணக்கத்தைப் பேண உதவி செய்வதாலும், இந்து வேறு, முஸ்லிம்வேறு என்று பிரிப்பதற்கான வாய்ப்பைத் தடுப்பதாலும், இருதரப்பு மதவெறியர்களுமே இதனை எதிர்க்கின்றனர்]]
can you differentiate and explain with example, about who are those “உழைக்கும் மக்கள” category? 🙂
can you tell how “இருதரப்பு மதவெறியர்களுமே” are eating without in those “உழைக்கும் மக்கள” category? :-))
this term is too much confusing to understand it. :-)))
//“மீண்டு எழும் ஈழத்துக்கான போர்” பூர்விக தமிழர்களையும் , பூர்விக இஸ்லாமிய தமிழர்களையும் ஒருங்கினைக்கும் என்ற முழு நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு.//
என்ன கொடுமை சரவணா! பழனி ஆண்டவா! நீ பழனியில் பாதுகாப்பாக இருப்பதினால் இன்னொரு நாட்டில் போர் வேண்டுமா!
RAJAH,
தன் சொந்த முதுகையே காப்பாத்தீக்க வக்கு எல்லா பழனி முருகனிடமே உங்க கோரிக்கையை வைப்பது நியாயமா ராஜா ? 🙂 என்னிடம் கேள்வி கேளுங்கள் விடை தருகின்றேன்.
///கஜினியின் சோமநாதபுரப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டவர்களில் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்ததாக ரோமில்லா தபார் குறிப்பிடுவதையும், சிவாஜியின் படையில் முஸ்லிம்கள் இருந்ததையும் இந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும்///
If so, then many gujarat muslims support modi, shanavas khan, Sikander Bakht, Mukhtar Abbas Naqvi, are in BJP, so after 10 years can we say like “people used to spread false propaganda on modi as he is against muslims, but the truth is shanavas khan is a main man in BJP and lot other muslims.. ……..
இதில் ஆச்சரியப்படுவற்கோ பெருமை படுவற்க்கோ ஒன்றும் இல்லை 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இசுலாமிய மத நூலான குரானோ முகமதின் போதனைகளோ வெகு ஜன மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை அட எந்த மதத்தோட புனித புத்தகங்களும் அதன் வழிபாட்டு நெறி முறைஅக்ளும் போதனைகளும் வெகு ஜன மக்களுக்கு கிடைத்து இருக்க வாய்ப்பு இல்லாதபோது அவுக அவுக இஸ்டத்துக்குதான் வழி பாடு செய்து இருப்பரகள் அவுக அவுக இஸ்டத்துக்குதான் கோவில்களை கட்டி இருப்பார்கள் இது எல்லா மதத்துக்கும் பொருந்தும் எனென்றால் அச்சிடும் வசதியோ பேப்பரோ இல்லை அந்த காலத்தில் இப்பதான் கோம்பை அன்வருக்கு குரானும் முகமதின் போதனைகளும் புத்தக வடிவில் கிடைத்து விட்டதே அப்ப என்ன செய்யனும் முன்னோர்கள் செய்த தமிழ் இசுலாமிய முறை தவறுனு ஒப்புக்கனும் இல்ல பாஸிஸ் குரான ஒதுக்கி வைக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் இசுலாம் வரலாறு அது இதுனு இசுலாமியர்களை இசுலாமிலே தக்க வைத்து கொள்ள இது போன்று படம் எடுத்தால் தவ்கீது வாதிகள் குரானை தூக்கிகொண்டு வரத்தானே செய்வாரகள் எல்லா பள்ளி வாசல்களிலும் தவில் நாதசுரம் இசைக்கும் போராட்டத்தை வினவு கோம்பை அன்வர் தலைமையில் நடத்துமா…
மிக சிறந்த முயற்சி.இருபுறமும் மத அடிப்படைவாதிகள் நூற்றாண்டு நூற்றாண்டாக இணக்கமாக வாழந்த தமிழ் மண்ணில் மக்கள்ளின் மனதை விஷ ஆக்கும் சூழலில் சூல்இதை போன்ற முயற்சிகள் காலத்தின் கட்டாயம். வினவிடம் நாம் எதிர்பார்பதும் இதைத்தான்.
எண்பதுகளின் தொடக்கத்தில் என்னுடய மூன்று வயதில் இஸ்லாமியா பகுதியில் வீடு வாங்கி குடி சென்றோம் அதனால் எனது நட்பு ,வாழ்கை முறை எல்லாமமே அதன் தாக்கம் இயற்கையாக இருந்தது .10 முஸ்லிம் பசங்க 6 ஹிந்து பசங்க என்றே வளர்தோம் .எங்களுடய சண்டைகளில் ஒரு தடவையாவது மதம் என்ற யோசித்து பார்கிறேன் ,ஒரு சம்பவத்தை கூட நினைவு கொள்ள முடியவில்லை .காக்க தோப்பு கந்துதுரி , சந்தனகூடு பூரியான் பத்தியா,மீராப்பள்ளி மீன் குளம் ,பள்ளிவாச கடை ,நோன்பு கஞ்சி ,27எலாம் கிழமை என்றேபள்ளிவாசளையும் ,தர்காவையும் சுற்றியே சிறுபிராயம் சென்றது ,எனது தாயார் கிஸ்தவ பள்ளியில் வேலை செய்ததால் தீபாவளிக்கு பலகாரம் 30 முஸ்லிம் வீடு ,20 கிஸ்தவ, ரம்ஜாங்கும் ,க்றிஸ்மஸ் எங்கள் வீட்டில் பத்திரங்கள் வளியும் .மதம் வழிபாடு சம்பந்த பற்ற ஒன்றாக ,சமூக வெளியில் அதன் பங்கு மிகவும் மிக மிக சிறியதாக இருந்தது இப்போதும் இருக்கிறது .
வேலைக்காக சென்னை மேன்சன்ல் இருந்த போது இஸ்தரி போடும் முஸ்லிம் பையன் உருது பேசிya போது ,தமிழ்நாட்டில் தமிழ் பேசாத முஸ்லிம் கூட இருக்கிறார்கள்
என்ற செய்தியை ,முஸ்லிமை தனித்து ஒரு பிரிவாக நினைக்கும் எண்ணத்தை ஜீரணிக்க சிறிது நேரம் எடுத்து கொண்டது .
இப்போதும் பெங்களூர் எந்த இடத்தையும் விட சிவாஜி நக சுற்றி வரும் போது நகரை மனத்திற்கு இதம்தருகிறது .
சமிப காலம்வரை யாராவது முஸ்லிமை பொதுமை படுத்தி பேசினால் ,அவர்களோடு வாதம் ,ஏன் சண்டை வரை சென்ற நான் ,தற்போது எதும் பேசுவதில்லை.உணர்வோடு கலந்து இருந்த தொப்பியும் தாடியும் ,சற்று மிரட்சி ஊட்டுவாதக,சற்று அன்னிய படுத்துவதாக மாற்றியதுஎது ? வினவு சொல்வது காவி கும்பலா ? சத்தியமாக இல்லை ,பெரியாரும் ,நாம் ஆயிரம் குறைசொல்லும் திரவிட அரசியலும் இந்த மண்ணில் மத நல்லிகணத்தை விதைத்து உள்ளனர் ,அதனால் தலையல தண்ணி குடிச்சாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வெறுப்பு அரசியலை எந்த காலத்திலும் அமைக்க முடியாது .
பிரச்சனையாக நான் பார்ப்பது சமிப காலமாக பரவிவரும் தமிழ் இஸ்லாமியர் இடையே பரவி வரும் மத தீவரதன்மை ,சமூக வலை தளங்களில் நான் பார்க்கும் முக்கால்வாசி
நண்பர்களின் ,குறிப்பாக 40 குறைவானவர்கள் சித்தாந்தாங்கள் கவலை அளிக்கின்றன.மத பிற்போக்குதனங்களில் முழுமையாக ஆதரிக்கின்றனர்.மதமே சர்வரோக நிவாரணி என்று கண்மூடிதனமாக நம்புகின்றனர்.வாஹாபீசம் மற்றுமே ஒற்றை வழி என்று மூர்கதனமாக கூவுகின்றனர் . சிறப்புமிக்க பலகூருகள் நிறைந்த எந்த தமிழ் இஸ்லாமியா மரபுகளில் வளர்க்கபட்டார்களோ அவற்றை எல்லாம் புறம் தள்ளி வெறுக்கிறார்கள், துவேஷம் செய்கிறார்கள்.
தமிழின் ஒரு உட்பிரிவு என்பதில் இருந்து பிடுங்கி ,இஸ்லாமியன் என்ற ஒற்றை இலக்கை அடைய முற்படுகின்றனர்.
மதத்தை தன்னோடு 24 மணி நேரம் சுமந்து திரியாத,பற்று இருந்தாலும் உன் வழி எனக்கு என் வழி எனக்கு என்று, எல்லாம் கடவுள் தான் என்று எளிய தத்துவத்தை கொண்டு மார்க்க கடமைகளை சத்தம் இல்லாமல் செய்து , கட்சி பிடிப்பால் மட்டுமே கருணாநிதி அல்லது எம்.ஜி .யார் படத்தை தன் கடையில் வைத்து மண்ணோடு கலந்து ,ஒரு அடியை எடுத்து வைபதற்கும் மத நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்காத ,மனசாட்சிபடி வாழும் 50 கடந்த அந்த தமிழ் இஸ்லாமிய தலைமுறை தான் நம் நாட்டுக்கு தேவை.
இதில் காட்டப்பட்டுள்ள பொட்டல்புதூர் தரகா என்பது பொட்டல்புதூர் தரகா இல்லை..இது கடையநல்லூர் தர்கா