செய்தி (தினத்தந்தி) : செருப்பை சுமக்க வைத்த குற்றவாளிக்கு ஓராண்டு ஜெயில்
“மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.”
படம் : ஓவியர் முகிலன்
மிகச் சரியான கருத்து.
இம்மாதிரிக் குற்றங்களுக்கு, கொலைக்கு என்ன தண்டனை கொடுக்க முடியுமோ, அதற்கு ஈடான தண்டனை கொடுக்க வேண்டும்; அதை உடனே கொடுக்க வேண்டும்.
தீர்ப்புகள்தான் விளங்க வைக்கிறதே அரசு யார் பக்கம் என்று.
பள்ளிப் புத்தகங்களில் முதல் பக்கத்தில்,
தீண்டாமை ஒரு மனித்தன்மையற்ற செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
இது யாரை ஏமாற்ற?
செருப்பை சுமக்க வைத்து அந்த சிறுவனின் வாழ்நாள் முழுவதும் வேதனையை சுமக்க வைத்த நிலமாலைக்கு ஒரு வருட சிறை தண்டனை போதாது. நிலமாலை கட்டிப் போடவேண்டும்.