privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

-

மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் கொட்டத்தை அடக்கிய தொழிலாளர் வர்க்கம்

துரை மாவட்டம், யானை மலை ஒத்தக்கடை சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் நிறைந்த ஊர். எந்நேரமும் சம்மட்டி ஒலி கேட்டுக் கொண்டே ஒரு துணை நகரம் போலவே இயங்கி கொண்டிருக்கக்கூடிய இடம். ஒத்தக்கடையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியத் தொழிலாக ஊரின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழில். இங்குள்ள பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரமாக உயர்ந்து நிற்கின்றன எவர் சில்வர் பட்டறைகள்.

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர் (படம் : நன்றி தி ஹிந்து)
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-shine-for-workers-of-stainless-steel-utensil-manufacturing-units/article1141581.ece

நாடெங்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிறு தொழில்களும், விவசாயமும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளால் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த‌ எவர்சில்வர் தொழிலின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியிருக்கிறது.

பிளஸ்மா வெல்டிங்கை எதிர்த்து போராட்டம்

இந்நிலையில் தற்போது எவர்சில்வர் தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கும் எமனாக வந்து நிற்பது பிளாஸ்மா வெல்டிங் மிஷின். இந்த மிசின் மூலம் வெல்டர், டிங்கர் இல்லாமல் ஒரு நாளைக்கு 5,000 பீஸ்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். வெறும் 8 அல்லது 10 பிளாஸ்மா வெல்டிங் மிசின் மூலம் ஒத்தக்கடையில் இப்போது உற்பத்தியாகின்ற அளவு பீஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் வெல்டிங் டிங்கர் தொழிலாளர்கள் சுமார் 200-க்கு மேற்பட்டோர் உடனடியாக வேலை இழப்பார்கள். மீதமுள்ள தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள். இது கற்பனையல்ல, ஏற்கனவே “பிளாஸ்மா” வெல்டிங், அனுமதிக்கப்பட்ட மதுரையின் பிறபகுதிகளிலும் மற்றும் காரைக்குடி, கும்பகோணம் திருப்பூரிலும் மற்றும் ஒத்தக்கடையில் வேறு சில பிரிவுகளிலும் வெல்டிங், டிங்கர் தொழிலாளர்கள் வேலையிழந்து தொழிலை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் கும்பகோணம் பகுதி தொழிலாளர்கள் வட்ட பிளாஸ்மா வெல்டிங்கை எதிர்த்து விடாப்பிடியாக போராடி வருகின்றனர்.

வேலையை பறித்து வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் சில உற்பத்தியாளர்கள்

ஆலைகள் முதல் சாலைகள் வரை உணவுப் பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை அனைத்தையையும் படைத்தளிப்பவர்கள் உழைப்பாளி மக்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வறுமையில் தள்ளும் எதையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்ல முடியாது. அநாகரிகம், மூர்க்கம் நிறைந்த கொடும் மனம் படைத்தோரின் செயல் என்றுதான் அதை சொல்ல முடியும். மலம் அள்ளுவது, சாக்கடை வாருவது போன்ற தொழில்களில் நவீனத்தை கொண்டுவர துப்பில்லாத, விருப்பமில்லாத ஆட்சியாளர்கள்தான் இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து விரட்டுகிறார்கள். சிறு தொழில்கள் அழிக்கப்படுகின்றன, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலைத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலையிருந்து விரட்டப்படுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஒத்தக்கடையில் பிளாஸ்மா வெல்டிங்கை கொண்டுவந்து எவர்சில்வர் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டத் துடிக்கிறார்கள் சில உற்பத்தியாளர்கள். அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்து எவர்சில்வர் தொழிலாளர்களின் உழைப்பால் இன்று கோடீஸ்வரராகிவிட்ட, தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு வந்த காதர் பாய் என்பவர் மிகவும் முக்கியமானவர். இவர் தனது மகன் மற்றும் சில எடுபிடிகளின் மூலம் பிளாஸ்மா வெல்டிங் மிசின் கொண்டு வந்து, பல ஆண்டுகள் தன்னிடம் உழைத்த தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தி விட்டார். ஒரு பக்கம் இன்னும் பல கோடிகளை சேர்க்க வேண்டும் என்கின்ற லாப வெறியில் காதர் பாய் எனில் இன்னொரு பக்கம் கேள்விக் குறியாக நிற்கும் பல நூறு தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும்.

காதர் பாய் முகத்தில் கறி

இந்நிலையில் ஒத்தக்கடை எவர்சில்வர் வெல்டர்‍‍, டிங்கர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள், ஒத்தக்கடையில் உறுதியான முடிவோடு பிளாஸ்மா வெல்டிங் மிசினை எதிர்த்து தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அஞ்சி தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்க கூடிய பிளாஸ்மா வெல்டிங்கை ஒத்தக்கடையில் வைக்காமல் அதற்கு அருகில் உள்ள திருமோகூரில் குமார், கண்ணன் ஆகிய நபர்களோடு சேர்ந்து வைக்க முயற்சிக்கின்றனர். ராமு, கணேசன் ஆகியவர்களை துணையாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் எங்களுக்கு பாதுகாப்பாக திருமோகூர் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லி திரிந்து கொண்டு பிளாஸ்மாவை வைத்து உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இந்த அநியாயத்தை எதிர்த்து போராடினால் ஊர்ப்பிரச்சினையை தூண்டிவிட காத்திருந்தார் காதர்பாய். இவரின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்களும் சங்கமும் காதர்பாயின் லாப நோக்கத்தையும் தொழிலாளர்களின் வாழ்நிலையையும், தொழிலாளர் பக்கம் உள்ள நியாயத்தையும் விளக்கி பிரசுரம் தயாரித்து திருமோகூரிலேயே வீடு வீடாக பொதுமக்களிடம் வினியோகித்தனர். திருமோகூர் மக்களும் தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ” நாங்கள் யாரும் காதர் பாயையும் அவருடைய ஆட்களையும் ஆதரிக்க மாட்டோம், நாங்கள் எல்லாரும் உங்களுடைய பக்கம்தான், நீங்கள் தைரியமாக போராட்டத்தை தொடருங்கள்” என்று கூறி காதர்பாய் மற்றும் அவரது அல்லக்கைகளின் மூஞ்சியில் கரியை பூசினார்கள். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் பிளாஸ்மாவை எப்படியும் கொண்டு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

இந்நிலையில் பிளாஸ்மா வெல்டிங் வருவதை கண்டித்து 3‍/7/14 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி வேண்டி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மனு செய்தார்கள் சங்கத் தொழிலாளர்கள். விசயமறிந்த காதர்பாய் உடனே சங்கத்தின் சார்பாக போடப்பட்டிருந்த பிரசுரத்தை எடுத்துகொண்டு வந்து ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை சந்தித்து “சங்கத்தை சேர்ந்தவர்கள் எனது தொழிலுக்கு தடையாக இருப்பதோடு எனது கௌரவத்தை சீர்குலைத்து வருகிறார்கள் அதனால் இந்த ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார். அதோடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துள்ளார். அதற்கு விசுவாசமாய் “நீங்கள் போய் வாருங்கள் நான் கவனித்து கொள்கிறேன்” என நம்பிக்கையூட்டி காதர்பாயை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

2/7/14 அன்று இரவே, “எவர்சில்வர் தொழிலில் பிளாஸ்மா என்கிற வெல்டிங்கை புகுத்தி பல குடும்பங்களை அழிக்கத்துடிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காதர்பாயை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என சங்க சுவரொட்டிகள் பளிச்சிட்டன. சுவரொட்டியை கண்டதும் காதர்பாய் வயிற்றில் புளியும், ஆய்வாளர் கிருஷ்ண்குமாருக்கு காதர்பாயின் பாக்கெட் மீதான விசுவாசமும் சுரந்தது.

3/7/14 அன்று காலை 10 மணி அளவில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காவல் நிலையம் வந்தவுடன் இருப்புகொள்ளாமல் சங்க பொறுப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேச உடனே வருமாறு அழைத்தார். உடனே சங்கத்தின் தலைவர் வீரர் அலி, செயலர் மாரிமுத்து மேலும் சில தொழிலாளர்களும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள்.

ஆய்வாளரை சந்தித்ததும் அவர்களிடம் “பிளாஸ்மா வெல்டிங் என்று கூறிவிட்டு தனிநபரான காதர் பாயை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இது சட்டப்படி தவறு” என்று மிரட்டும் தொனியில் பேசினார். எப்படியாவது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று “என்ன செய்ய போகிறீர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று திரும்ப திரும்பக் கேட்டுள்ளார் ஆய்வாளர்.

அதற்கு “பிளாஸ்மா வெல்டிங் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வாழ்வை அழிக்கிறது, அதைக் கொண்டு வருபவர் காதர்பாய் அதனால்தான் அவரையும் பற்றி பேசி வேண்டியுள்ளது” என்று சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது அல்லது கட்டப் பஞ்சாயத்து செய்து காதர்பாயின் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பது என்ற சீரிய லட்சியத்துடன் தீவிர முயற்சி செய்தார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

தொழிலாளர்களோ ஆய்வாளரின் நோக்கத்தை புரிந்து கொண்டு பணிய மறுத்தார்கள். உடனே ஆத்திரம் தலைக்கேறிய ஆய்வாளர் எழுந்து கிறுக்கனைப்போல் காவல் நிலைய வாயிலில் ஒட்டப்பட்டிருந்த சங்க சுவரொட்டியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து “என்ன தைரியமிருந்தால் பேரு போட்டு ஒட்டுவீங்க, எல்லோரும் உள்ள தான் போகப்போறீங்க. யோவ் ஏட்டு! எல்லோர்ட்டயும் இருக்கிற செல்போனை புடுங்குய்யா” என்று சொல்லிக் கொண்டே தனது நோக்கத்திற்கு சங்க நிர்வாகிகள் மசியாததால் சங்கத்தலைவர் வீரர் அலியை அடிக்க கை ஓங்கியுள்ளார்.

உடனே “எதுக்கு சார் அடிக்க வர்றீங்க, நாங்க எங்க தரப்பு நியாயத்தை பேசப்போறோம், நீங்க கேசு போடணும்னா போட்டுகொள்ளுங்கள். நாங்கள் பார்த்துகொள்கிறோம்” என ஆய்வாளரை எதிர்த்துப் பேசியுள்ளார் வீரர் அலி. எதிர்கேள்வியை சகித்துகொள்ள முடியாமல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அருகில் நின்று கொண்டிருந்த சங்க தொழிலாளர்களை மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். ஆய்வாளரின் மூர்க்கத்தனமான இந்த தாக்குதலினால் சங்கத்தை சேர்ந்த படையப்பா செந்தில் என்ற தொழிலாளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆய்வாளரை சங்க‌ தோழர்கள் சந்திக்க போயிருப்பதை அறிந்த சில தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்திருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள் பேசவேண்டும் என அழைத்து சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் அடித்து உதைத்து ரவுடியை போல் ஆய்வாளர் நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட அத்தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் இணைச்செயலாளருமான வாஞ்சிநாதனுக்கு தொலைபேசியில் காவல் நிலையத்தில் நடக்கும் விசயங்களை தெரிவித்துள்ளனர்.

உடனே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் அடாவடித்தனத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் ஆத்திரம் கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.  எனவே, உடனே சங்க தோழர்களை வெளியே விடச்சொல்லியும், இதற்கு காரணமான கிருஷ்ணகுமார் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்துள்ளார்.

கண்காணிப்பாளரிடம் தன் மீது புகார் போனதை அறிந்ததும் பம்ம ஆரம்பித்தார் கிருஷ்ணகுமார். காவலர்களிடம் “யோவ் இவங்களோட செல் போனையெல்லாம் திருப்பிக் கொடுத்துடு” என்று ஆணையிட்டார். தொழிலாளர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சங்க தொழிலாளர்களை பார்த்து ” நீங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டீங்க, கொடுத்திட்டேன், இனியும் ஏதாவது உதவி வேண்டும், அனுமதி வேண்டும் என்றாலும் வாருங்கள், எந்த உதவி என்றாலும் செய்து தருகிறேன்” என நைச்சியமாக பேச ஆரம்பித்துள்ளார்.

சங்க தோழர்களிடம் “உங்க சங்கத்தின் சட்ட ஆலோசகர் யாரு?” எனக் கேட்டுள்ளார் கிருஷ்ணகுமார். தோழர்கள் வாஞ்சிநாதன் என்று சொல்ல, இன்று ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுவதும் வாஞ்சிநாதன் தான் என்பதை கேட்டு அறிந்து கொண்ட கிருஷ்ணகுமார் “வாஞ்சிநாதன் ஒரு கூட்டத்தில் என்னோட‌ சட்டையை கழட்ட வைப்பேன் என்று சொல்கிறார் . அதை கேட்டதும் எவ்வளவு மனது கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்கிறவன், என்னை இப்படி பேசலாமா?” என மாலை மாலையாக கண்ணீர் வடித்து அழுது தொழிலாளர்களிடம் சுய பச்சாதாபம் தேட நாடகம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

விசயம் என்னவெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பு.ஜ.தொ.மு. தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தபோது கூட்டத்தன்று காலையில் தோழர்களிடம் வந்து “யாரைக் கேட்டுகூட்டம் நடத்துகிறீர்கள்” என பவுசாக கேட்டுள்ளார்.

தோழர்களோ, “தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டோம்” என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, “எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவீர்களா, உங்களை எல்லாம சுட்டுவிடுவேன்” என்று திமிர்த்தனத்துடன் பேச, “அனுமதி அளித்தவரிடம் போய் கேளுங்கள்” என்று பதிலளித்துவிட்டார்கள். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில்தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆய்வாளரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், “நாங்க நினைச்சா நீ காக்கி சட்டையே போட முடியாது, சட்டையை கழற்றிவிடுவோம்” என்று இவரை கண்டித்தும் பேசியது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் சங்க நிர்வாகிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

மீண்டும் பிரச்சினைக்கு வருவோம். காவல் நிலையத்திற்கு வெளியே நிற்கின்ற தொழிலாளர்கள் காவல்நிலையத்திற்குள் நடக்கின்ற அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அணிதிரள ஆரம்பித்துள்ளார்கள். சில நிமிடங்களில் 200-க்கும் மேலான தொழிலாளர்கள் திரண்டவுடன் நிலைமையை உணர்ந்துகொண்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஏற்கனவே தன் மீதுகண்காணிப்பாளரிடம் புகார் போய்விட்டது. தான் அடித்ததில் ஒரு தொழிலாளி (படையப்பா செந்தில்) பாதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் புரிந்துகொண்டு சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் வெளியில் செல்லலாம் எனச் சொல்லியுள்ளார். எதுவுமே நடக்காதது போல் பல்லைக் காட்டி இளித்து பேசி அனுப்பி வைத்துள்ளார் கிருஷ்ணகுமார்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த தொழிலாளர்கள், ஆய்வாளரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட படையப்பா செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் இராசாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து பேரணியாக திரண்டுவந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினார். பின்னர் தொழிலாளர்கள் மொத்தமாக சென்று காவல்நலைய கண்காணிப்பாளரை சந்தித்து ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை புகாராக அளித்தார்கள்.

தொழிலாளர்கள் அளித்த புகாரின் விளைவாக ஆய்வாளர் கிருஷ்ண்குமார் ஆயுதபடை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஒத்தக்கடையில் பணிபுரிந்த காலத்தில் எல்லா சமூக நல அமைப்பை சேர்ந்தவர்களையும் தான் சொல்லி கேட்காவிட்டால் காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார். சுருக்கமாக சொன்னால் சினிமா போலீசை போல் நடந்து கொள்வார். அப்படியெல்லாம் கொட்டமடித்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதும் ஒத்தகடையின் சகல பிரிவு மக்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டார்கள்.

கிருஷ்ணகுமாரின் தினவெடுத்த அடாவடித்தனங்களால் வெறுத்து போயிருந்த ஒத்தக்கடை பொதுமக்கள், தொழிலாளர்கள், சமூக நல அமைப்புகள் அனைவரும் வெல்டிங்‍‍‍,டிங்கர் சங்கத்தையும் சங்கத் தொழிலாளர்களையும் பாராட்டினார்கள்.

ஒற்றுமையாய், ஒரு அமைப்பாய் தொடர்ச்சியாக போராடினால் தொழிலாளிவர்க்கம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை சகல தரப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ளது, முத்தாய்ப்பாக படையப்பா செந்திலை தாக்கியதற்காக ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது தனிப்பட்ட வழக்கு நீதிமனற‌த்தில் தொடுக்க இருப்பதை கேள்விப்பட்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார் “வழக்கு எதுவும் போட வேண்டாம். நாம் வெளியே பேசித்தீர்த்துக் கொள்வோம்” என்று ஒத்தக்கடையில் தற்போது பணியில் இருக்கும் துணை ஆய்வாளர் மூலம் சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார்.

தொழிலாளர்களோ முகத்தில் அறையும் வகையில் அதை மறுத்துவிட்டார்கள்.

அதன் பின் 10/7/2014 அன்று காதர்பாயை கண்டித்து தொழிலாளர்களின் நியாயத்தை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களும் மாற்று சங்க நிர்வாகிகளும் பொது மக்களும் திரளாக வந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இது ஒத்தக்கடை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

ஒத்த‌க்கடை வாழ் உழைக்கும் மக்களின் நம்பிக்கையின் ஒலிக்கீற்றாய் புரட்சிகர இயக்கங்களும் அதன் தலைமையில் இயங்கும் சங்கங்களும் விளங்கி வருவதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

தகவல்
மதுரை மாவட்ட எவர்சில்வர் வெல்டர்‍ டிங்கர் தொழிலாளர் சங்கம்

  1. வரவேற்க்க தக்க நடவடிக்கை. இதேபோல் எல்லா மக்களும் இணைந்து போராடினால் புதிய சமூகம் பிறக்கும்

  2. //காதர் பாய் முகத்தில் கறி// கரி
    //மக்களின் நம்பிக்கையின் ஒலிக்கீற்றாய்//ஒளிக்கீற்றாய்
    பிழைகளின்மேல் கவனம் தேவை

  3. இயந்திர மயமாதலால் சிறுதொழில்களில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுவது காலம் காலமாய் நடந்துவரும் ஒன்று. ஆனால் அந்த ஊரிலோ அடுத்த ஊரிலோ தொழிற்சாலை வைக்கமுடியாதென தடுக்கும் போராட்டங்கள் நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை. வேறு ஏதோ ஒரு ஊரில் யாரோ திறக்கும் தொழிற்சாலைகளால் இவர்களது வாழ்வாதாரம் நாளடைவில் பாதிக்கப்படவே செய்யும். மோட்டார் வாகனங்கள் கொண்டுவந்தால் மாட்டுவண்டிக்காரர் எல்லோரும் பாதிக்கப்படுவார்ககளென்று அன்று போராட்டம்நடத்தி வெற்றி கண்டிருந்தால் இன்றும் நீங்களெல்லோரும் மாட்டு வண்டிகளிலேயே பயணப்படுவீர்கள்.

    • மாட்டுவண்டிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்தி வெற்றி பெற்றால் அனைவரும் மாட்டுவண்டியிலேயே பயணிப்பீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே லாஜிக்படி பார்த்தால் இயந்திரமயமாதலின் படி அனைத்துகுடிமக்களுக்கும் தற்பொழுது ஜெட் ஏர்வேஸில் தானே பயணிக்கவேண்டும்? ஆனால் நம்மைப் போன்றவர்கள் இன்னும் அன்னாந்து பார்த்து டாட்டா காண்பித்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

      யார் அழிகிறார்கள்? யார் வளர்கிறார்கள் என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். வளர்ச்சி என்றால் அங்கே அனைவரும் பயன்பெறுகிறார்கள் என்று நம்புவதும், சிறுதொழில் செய்பவர்களை ஆதரித்தால் வளர்ச்சிக்கு எதிரானது என்று வியப்பதும் நேர்மையானதா இனியன்?

      ஒருவேளை சில்வர்பட்டறையிலே நீங்கள் பாலிஸ் போடுபவராக இருந்தால் அப்பொழுது போராடுவீர்களா இல்லை வளர்ச்சி என்று கோசம் போடுவீர்களா? இங்கு பிரச்சனை இயந்திரமயமாக்கல் அல்ல. காதர்பாய் கையிலே பிளாஸ்மாதொழில் நுட்பத்திற்கு தேவையான பணம் மட்டுமே இருக்கிறது. ஆனால் தொழிலாளிகளிடத்தில் தங்களின் உழைப்பு சக்தி, கூட்டு உழைப்பு, தொழில் நேர்த்தி, இவையெல்லாம் ஒருங்கே இருக்கின்றன. இத்துணை இருந்தும் இங்கே உழைப்பாளிகள் அழிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இந்த சமூகம் மற்றும் உங்களின் சிந்தனை உட்பட தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டுவதற்காக படைக்கப்பட்டது என்ற தைரியத்தில் இயங்குகிறது.

      மாறாக, தொழிலாளிகள் படைக்கிற உலகத்தில் தொழிற்சாலைகள் தொழிலாளிகளின் தலைமையிலே இயங்குகிற பொழுது இயந்திரமயமாக்கல் இதைவிட இன்னும் துரிதமாக்கப்படும். அங்கு சுரண்டல் இருக்காது. லாப வெறி இருக்காது. உற்பத்தி சக்திகளை ஒருங்கே குவித்து, உற்பத்தியைப் பெருக்குவதில் உழைப்பாளிகளே முதன்மையாக இருப்பார்கள் என்கிற பொழுது பிளாஸ்மா பட்டறை போன்ற தொழிலகங்கள் ஒருவருக்கு மட்டுமே தனியுடமையாக இருக்காது. அங்குதான் பழையன கழிந்து புதியன படைக்கப்படுகின்றன. அங்குதான் வளர்ச்சியை கண்டு கொள்கிறோம்.

      தொழிலாளர்கள் இதுபோன்ற போராட்டங்களில் அமைப்பாக அணிதிரள்கிறார்கள். வளர்ச்சியையும் வீக்கத்தையும் கண்டுகொள்கிறார்கள். 200, 300 குடும்பங்களை அழிக்கிற ஒருதனி நபரின் கீழ் இயங்குகிற பிளாஸ்மா பட்டறை வளர்ச்சி அல்ல; வீக்கம். நாம் செய்யவேண்டியது இதை பருண்மையாக மாநில அளவில் இந்திய அளவில், உலக அளவில் புரிந்துகொள்வது. அதற்கு துணையாக ஒருகாலத்தில் தொழில் நகரமாக இருந்த டெட்ராய்ட் நகரம் இன்றைக்கு ஏன் வெறிச்சோடி கிடக்கிறது என்று பரிசிலீயுங்கள். ஒத்தக்கடையின் போராட்டம் புரியும்.

      • நீங்கள் அடிப்படை விடையங்கள் பலவற்றைத் தவறவிட்டு மேம்போக்கான விதண்டாவாதத்தில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். ஆழ ஆராயாமல் எதனையும் எதிர்ப்பது சுலபம்.

        //மாட்டுவண்டிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்தி வெற்றி பெற்றால் அனைவரும் மாட்டுவண்டியிலேயே பயணிப்பீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே லாஜிக்படி பார்த்தால் இயந்திரமயமாதலின் படி அனைத்துகுடிமக்களுக்கும் தற்பொழுது ஜெட் ஏர்வேஸில் தானே பயணிக்கவேண்டும்? ஆனால் நம்மைப் போன்றவர்கள் இன்னும் அன்னாந்து பார்த்து டாட்டா காண்பித்துகொண்டுதானே இருக்கிறார்கள்?//

        மாட்டுவண்டிக் காலத்தில் வண்டிக்கு வசதியற்றுக் கால்நடையாகச் சென்றவர் பலர் இருந்தனர் என்பதை மறந்து அல்லது மறைத்துவிட்டே உங்கள் வாதத்தை முன்வைக்கிறீர்கள்.

        //யார் அழிகிறார்கள்? யார் வளர்கிறார்கள் என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். வளர்ச்சி என்றால் அங்கே அனைவரும் பயன்பெறுகிறார்கள் என்று நம்புவதும், சிறுதொழில் செய்பவர்களை ஆதரித்தால் வளர்ச்சிக்கு எதிரானது என்று வியப்பதும் நேர்மையானதா இனியன்?//

        உற்று நோக்கினால் எந்தவொரு வளர்ச்சியிலும் பாதிக்கப்படுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அதற்காக இயந்திர மயமாதலோ தொழினுட்ப வளர்ச்சியோ தடைப்பட்டுவிடப் போவதில்லை.

        சிறுதொழில் செய்வோர் இங்கு பாதிக்கப்படுவதை இல்லையென்று நான் கூறவில்லை. அதேநேரம், ஓர் ஊரில் ஒரு தொழிற்சாலையைத் திறக்கவிடாது செய்வதன்மூலம் உங்களால் அத்தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்கமுடியாது என்பதே எனது முன்னைய பின்னூட்டத்தின் சாரம். இன்று இல்லாவிட்டால் நாளை, இங்கு இல்லாவிட்டால் இன்னோர் ஊரில், தொழிற்சாலை திறக்கப்படும். அப்போது இந்தத் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படாதா? அல்லது எங்குமே இப்படியொரு தொழிற்சாலை இனிமேல் திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?

        // ஏனெனில் இந்த சமூகம் மற்றும் உங்களின் சிந்தனை உட்பட தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டுவதற்காக படைக்கப்பட்டது என்ற தைரியத்தில் இயங்குகிறது. //

        ஐயா, உங்களைத் தவிர மற்றைய எல்லோருடைய சிந்தனைகளும் சுரண்டல் சிந்தனைகளே. நீங்கள் உலகின் மிகச்சிறந்த முற்போக்குச் சிந்தனையாளன், போராளி, … உங்களை நீங்களும் மெச்சிக் கொள்ளுங்கள்.

        // மாறாக, தொழிலாளிகள் படைக்கிற உலகத்தில் தொழிற்சாலைகள் தொழிலாளிகளின் தலைமையிலே இயங்குகிற பொழுது இயந்திரமயமாக்கல் இதைவிட இன்னும் துரிதமாக்கப்படும். அங்கு சுரண்டல் இருக்காது. லாப வெறி இருக்காது. உற்பத்தி சக்திகளை ஒருங்கே குவித்து, உற்பத்தியைப் பெருக்குவதில் உழைப்பாளிகளே முதன்மையாக இருப்பார்கள் என்கிற பொழுது பிளாஸ்மா பட்டறை போன்ற தொழிலகங்கள் ஒருவருக்கு மட்டுமே தனியுடமையாக இருக்காது. அங்குதான் பழையன கழிந்து புதியன படைக்கப்படுகின்றன. அங்குதான் வளர்ச்சியை கண்டு கொள்கிறோம். //

        தெளிவாய்க் குழப்புவது என்பது இதுதான். இயந்திரமயமாக்கலில் ஒரு தொழிற்சாலை நூறு பேரின் வேலையச் செய்யுமென்றால், உங்கள் “தொழிலாளிகள் படைக்கிற உலகத்தில்” அந்த நூறு தொழிலாளிகளும் அந்தத் தொழிற்சாலைக்கு தலைமை வகித்துக்கொண்டு இருப்பார்களா?

        அதைவிட இயந்திரமயமாக்கல் இதைவிட இன்னும் துரிதமாக்கப்படும் என்றுவேறு சொல்கிறீர்கள், அப்போ உங்கள் வினைத்திறன் கூடிய தொழிற்சாலையில் ஆயிரம்பேர் தலைமை வகித்துக்கொண்டு இருப்பார்களா?

        • மாட்டுவண்டிக்காலத்தில் வண்டிக்கு வசதியற்று கால்நடையாக பல பேர் சென்றார்கள் என்பது மறைப்பிற்குரிய விசயமல்ல. சொல்லப்போனால் நிலவுடமை சமூகத்தில் பண்ணையடிமைகள் நடப்பதற்கே அனுமதிக்கபடவில்லை என்பதுதான் இங்கு அப்பட்டமான மறைத்தல். ஏன் அவர்கள் நகர்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

          தாங்கள் உற்றுநோக்கினால் உழைப்பவன்தான் மாட்டுவண்டி, இயந்திரங்கள், தொழிற்சாலைகள், ஜெட்ஏர்வேஸ் என்று இவ்வுலகத்தையே படைத்தவனாக இருக்கிறான். இது இப்படி இருக்க, ஒரு நிலப்பிரபுவிற்கு அந்தக் காலத்தில் சொத்து எப்படி வந்தது? சுரண்டலின் மூலம் தான் வந்தது. இது சரி எனில் இதுவரை கண்ட தொழில் வளர்ச்சியில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டே வருகின்றனர்; இது இயல்பானது என்று சொல்வது எப்படி சரியாகும்? சுரண்டலை இலாபவெறியை கண்டுகொள்ள முடியாமல் தொழில்வளர்ச்சியால் தான் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது மோசடியான வாதம் இல்லையா? இப்படிச் சொன்னால் உடனே; “ஆமாம் நான் மோசடியாளர் தான்;” என்பது பாணியிலான வாதத்தையே வைக்கிறீர்கள்.

          ——————-

          மேலும் நீங்கள் வெறுமனே தொழிற்சாலை அமைவது தடுக்கப்படுகிறது என்று சொல்கிறீர்கள். இது அனைத்துவிதமான கொடூரங்களையும் திட்டமிட்டு மறைப்பதற்கே உதவிபுரிகின்றன; அவையாவன.

          1. ஒத்தக்கடையில் வாழ்கிற எந்த சில்வர் பட்டறை தொழிலாளியிடமும் சொத்து கிடையாது. அவர்களில் இருந்து யாரும் முதலாளியாகிவிடவில்லை. ஐந்திற்கும் பத்திற்குமே அல்லாடுகிற பொழுது காதர்பாய் போன்றவர்கள் மிகப்பெரிய மூலதனத்துடன் தொழிற்சாலை தொடங்குகிறார் என்றால் அது அவர் இதுவரை சில்வர்பட்டறைத் தொழிலில் சேர்த்துவைத்த பணத்தால் அல்ல. அப்படி ஒரு நிலை இருந்தால் அனைத்து தொழிலாளிகளுமே அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக்கப்பட்டிருக்கிறது. அம்பானி காசை மட்டும் வைத்துக்கொண்டு திண்டுக்கல்லில் ரிலையன்ஸ் பிரஸ் ஆரம்பித்ததைப் போன்றது இது. விவாசயிகள் அழிந்த கதைதான் இங்கும் நேரும்.

          2. காதர்பாய்க்கு “பிளாஸ்மா தொழில் நுட்பம் சார்ந்த பட்டறை” என்பது அறிவியல் வளர்ச்சியோ பல்வேறு தொழிலாளிகளுக்கு வாழ்வளிப்பதோ அல்ல. வெறும் இலாபவெறி மட்டுமே.

          3. இதே தொழிற்சாலைள் மறுகாலனியாதிக்கத்தால் சிதைக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் தாங்கள் தொழில் வளர்ச்சி என்று ஜால்சாப்பு சொல்வீர்களா? சான்றாக கோகோ கோலாவும் பெப்சியும் கோலோச்சி காளிமார்க் பவண்டோவை தூக்கி எறிந்தன. நீங்கள் சொல்கிற தொழிற்சாலை வளர்ச்சியால் கோகோ கோலாவும் பெப்சியும் எத்துணை பேருக்கு வேலை கொடுத்தன? வாழ்விழந்தவர்கள் தான் கோடிக்கணக்கான பேர். முதலாளித்துவம் யாருக்கு வாழ்வளித்தது என்று சொல்ல முடியுமா? கண்முன்னே செத்துவிழுந்தவர்களின் பிணங்களை உங்கள் வாதத்தால் மறைக்க இயலுமா?

          4. உள்ளூர் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதும், மறுகாலனியாதிக்க தரகு முதலாளிகளுக்கு எதிராக தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இங்கு ஒரே சித்தாந்தம் தான். அது தொழிலாளர்களின் தலமையிலான சமூகமாற்றம். ஆக உங்களது கேள்விக்கு பதில் இங்குமட்டுமல்ல தொழிலாளர்களுக்கு எதிராக தொடங்கப்படுகிற எந்தவொரு மூலதனக்குவிவையும் எதிர்க்கவே செய்வார்கள். தொழிற்சாலையை தடுக்கிறார்கள் என்று மொட்டையாக புரிந்துகொள்ள வேண்டாம். இதே தொழிற்சாலை வேறு எங்கு ஆரம்பிக்க பட்டாலும் அது தொழிலாளர்களுக்குத் தான் சொந்தம். ஆக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையை நிறுத்துவதைவிட தொழிலாளர்களே அதை ஏற்று நடத்துவார்கள் என்பதுதான் போராட்டத்தின் மீதி பகுதி. அம்பானி, அதானியின் முதலாளித்துவக்கொள்ளை இவ்விதம் தான் முறியடிக்கப்பட இருக்கிறது.

          —-

          \\இயந்திரமயமாக்கலில் ஒரு தொழிற்சாலை நூறு பேரின் வேலையச் செய்யுமென்றால், உங்கள் “தொழிலாளிகள் படைக்கிற உலகத்தில்” அந்த நூறு தொழிலாளிகளும் அந்தத் தொழிற்சாலைக்கு தலைமை வகித்துக்கொண்டு இருப்பார்களா?\\

          ஆம்.

          \\அதைவிட இயந்திரமயமாக்கல் இதைவிட இன்னும் துரிதமாக்கப்படும் என்றுவேறு சொல்கிறீர்கள், அப்போ உங்கள் வினைத்திறன் கூடிய தொழிற்சாலையில் ஆயிரம்பேர் தலைமை வகித்துக்கொண்டு இருப்பார்களா?\\

          கண்டிப்பாக. தலைமை என்றால் கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு கோப்புகளில் கையெழுத்திடுவது என்று நினைக்கிறீர்களா? தொழிலாளிகளுக்கு அப்படியொரு தலைமை தேவையில்லை.

          கம்யுனிசத்தின் நோக்கம் தேவைக்கேற்ற உற்பத்தி. ஆக இச்சமூகத்தில் தொழிலாளிகள் தொழிற்சாலைகளுக்கு மட்டும் தலைமைவகிக்கவில்லை. சமூகத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியல் விழுமியங்களுக்கும் தலைமையேற்கிறார்கள். உழைக்கிற ஒவ்வொருவரும்!

          —-

          • நீங்கள் எனது அடிப்படைக் கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லவேயில்லை.

            இந்தப் போராட்டம் அத்தொழிலாளிகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்குமா? இனிமேல் எங்குமே இப்படியொரு தொழிற்சாலை திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?

            • இந்தப் போராட்டம் நிரந்தர தீர்வைக் கொடுக்குமா? என்று கேள்விக்கு முதலில் நாம் ஒரு தரப்பின் பக்கம் நின்றாக வேண்டும். இந்தப் போராட்டத்தில் இரு தரப்புகள் உள்ளன.

              1. முதல் தரப்பான சில்வர் பட்டறைத் தொழிலாளிகளுக்கு இது உடனடிப் பிரச்சனை.
              2. இரண்டாவது தரப்பான காதர்பாய்க்கு இலாபம் சம்பந்தப்பட்ட பிரச்சனை.

              இதில் நாம் ஐடியாவை அள்ளித் தெளிக்க முடியாது. நீங்களோ நானோ சில்வர்பட்டறைக் குடும்பத்தில் பிறந்திருந்தால் காதர்பாயை வழிக்குக் கொண்டுவருவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டோம். ஏனெனில் நாளைய சோற்றுக்கு ஈயம் பற்றவைத்தால் தான் பிழைப்பு என்கிற பொழுது நமது வர்க்கச்சார்பு முதலாளிகளுக்கு அறிவுறுத்துவதாக இருக்காது. அப்படியானால் தாங்கள் இதுவரை செய்தது என்ன?

              உடனடிப் பிரச்சனைக்கு காதர்பாயின் தொழிற்சாலையை நிறுத்துவது அறிவுப் பூர்வமானது அல்ல என்று தாங்கள் நினைக்கக் கூடும். ஆனால் நடைமுறை அதுவல்ல. ஒரு உதாரணத்தை பரிசிலீப்போம். தனியார்மய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக திருப்பூரில் சாயமேற்றுதல் தொழிலை பலகுடும்பங்கள் செய்துவந்தன. தாங்கள் சொல்கிற தொழில் வளர்ச்சியால் சாயமேற்றுதலுக்கு மிசின்கள் வந்தன. இதனால் பலபேர் வேலை இழந்தார்கள். ஆனால் தற்போதைய நிலை என்ன? பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் சுருட்டி முடித்தபின் இடத்தை காலி செய்துகொண்டு ஓடிவிட்டன. இன்றைக்கு மிசின்களில் வேலை செய்பவருக்கும் வேலை கிடையாது! இதற்கு என்ன பதில் உங்களால் தரமுடியும்? தொழில் வளர்ச்சியால் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்கிற தாங்கள், இனிமேலும் சுருட்ட முடியாது என்று நினைக்கிற மிசின் முதலாளிகள் மிசின் தொழில் நுட்பத்தையும் விட்டு விட்டு ஓடினார்களே! இது அறிவியல் வளர்ச்சியின் கீழா வருகிறது! எங்கிருந்து யாருக்காக குரல் எழுப்புவீர்கள்!

              அன்றைய கால கட்டத்திலே போராடுவதற்கு என்று ஒரு அமைப்பு இல்லை. ஆனால் இன்றைக்கு நமக்கு அது இருக்கிறது. கட்டிங், நிட்டிங் தொழிலில் காணாமல் போன தொழிலாளிவர்க்கம் மீட்டெடுக்க முடியாமல் போன நிலைமை சில்வர்பட்டறை தொழிலாளிகளுக்கு கிடையாது. பீடி சுற்றுகிற தொழிலாளிவர்க்கம், ஈச்சர் லாரி தொழிலாளிகள், ஆட்டோ ஒட்டுனர்கள், அப்பளம் தட்டுகிற தொழிலாளிகளும் இன்றைக்கு இருக்கிறார்கள். இவர்களின் போராட்ட வடிவங்கள் நீங்கள் நினைப்பதைபோல ஒன்றாக இருப்பதில்லை.

              சான்றாக அப்பளம் தட்டுகிற தொழிலாளிகள் வைக்கிற கோரிக்கை என்ன? எங்களை தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் கொண்டு வரவேண்டும். ஈஎஸ்ஐயில் சிகிச்சை (உளுந்துமாவினால் சுவாச நோய்களுக்கு ஆளாகின்றனர்), பணிப்படிகள் (மழைக்காலங்களில் அப்பளம் தட்ட முடியாது) மற்றும் ஓய்வூதிய சலுகைகள், பணியிடத்தில் கழிப்பறைகள் வேண்டும் என்பது. ஆனால் அரசு இவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்கவில்லை. வீடுகளில் அப்பளம் தட்டுவதால் இது தொழிற்சாலையின் கீழ் வராது என்று ஒரு விளக்கம்! ஆனால் பல அப்பளக் கம்பெனிகள் இவர்களிடம் வேலை வாங்கி வருடாந்திரம் மட்டும் 100க்கு கோடிக்கு மேல் அப்பளம் வர்த்தகம் செய்கின்றன. ஆனால் குறைந்தபட்ச தொழிலாளி என்ற நிலை கூட இங்கு இல்லை. இங்கெல்லாம் போராட்ட வடிவம் என்னவாக இருக்கும்?

              ஆக முதலில் உடனடிப் பிரச்சனை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்வும் கிடைக்கும். அவை எப்பொழுதும் நமது வர்க்கச்சார்பை ஒட்டியே தான் இருக்கின்றன. சில்வர்பட்டறைத்தொழிலில் இதுதான் தீர்வு. பஞ்சாலை என்று வந்தால் தொழிற்சங்கத்தை கட்டி அமைப்பாவது. நோக்கியா என்றால் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவதில் ஆரம்பித்து ஹந்தாலாவைப் போன்று கல்லெறிவதுவரை நடத்தலாம். முருகப்பா குழுமமா! பிடி மைக்கை! மைக் என்றாலே அலறுவான் முதலாளி!

              இவையெல்லாம் போராட்ட வடிவங்கள்! நிரந்தரத் தீர்வு என்பதற்கான முதல் அடி. தொழிலாளி தனது உழைப்பு விற்பதற்கானதல்ல என்பதை பருண்மையாக நடைமுறை யதார்த்தத்தில் உணர்கிறார். சுரண்டலுக்கு எதிராக திரள்கிறார். வேலைக்கேற்ற ஊதியத்தை பெறுவதில் முனைப்புடன் போராடுகிறார். வேலையே போகிறது என்கிற பொழுது இது போன்ற போராட்டங்களில் அமைப்பாகிறார். நிரந்தரத் தீர்வு என்பதற்கு இதுதான் பதில். போராட்டங்களில் அமைப்பாவது என்பதைத் தவிர வேறுவழி கிடையாது.

              ——————————————————————————

              இரண்டாவது கேள்வி: இனிமேல் எங்குமே இப்படியொரு தொழிற்சாலை திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?

              பதில்: இனிமேல் எங்குமே இப்படியொரு தொழிற்சாலை திறந்துவிடாதபடி “நம்மால்” செய்துவிட முடியுமா?

              நாம் என்பதுதான் பதில்.

              அதாவது இனியன் போன்றவர்கள் போராட வாருங்கள். இதையும் தாண்டி தொழிற்சாலை அமையத்தான் செய்யும். ஆனால் அப்படி அமைகிற பொழுது வருத்தப்பட தேவையில்லை. காதர்பாய்க்கு எதிரான போராட்டத்தில் போஸ்டர் ஒட்ட அரைகிலோ பசை காய்ச்சவேண்டியிருக்கிற பொழுது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கு உரியதாக மாற்றுகிற போராட்டத்தில் இரண்டு கிலோ பசை காய்ச்ச வேண்டியிருக்கும். அங்கேயும் போராட்டம் தான் இருக்கும். நீங்கள் சொல்வதைப் போன்று வாய்கொள்ள முடியாதளவு சீர்திருத்தங்கள் இருக்காது.

              “தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொடு,
              மாற்று தொழில் ஏற்பாடு செய்,
              காதர்பாயை வழிக்குக்கொண்டுவா,
              அறிவியல் என்றால் அப்படித்தான்”

              என்பது போன்ற ஜாலங்கள் அங்கே மருந்துக்கும் இடமில்லை. இதை தொழிலாளிகள் புரிந்துவைத்திருப்பதால் தான் போராட்டங்களைக் கைகொள்கிறார்கள். ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சலாக இருக்கிற பொழுது இதை நீங்கள் சித்தாந்த அறிவுரை என்று ஒதுக்கி தள்ளுகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

              • நீங்கள் கூறிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.

                // திருப்பூரில் சாயமேற்றுதலுக்கு மிசின்கள் வந்தன. இதனால் பலபேர் வேலை இழந்தார்கள். //

                இதனை உங்கள் முறைப்படி கையாண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? திருப்பூருக்குப் பதிலாக இன்னுமோர் ஊரில் மிசின்களை நிறுவியிருப்பார்கள். அப்போது திருப்பூரில் யாரும் வேலை இழந்திருக்க மாட்டார்களா?

                // ஆனால் தற்போதைய நிலை என்ன? பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் சுருட்டி முடித்தபின் இடத்தை காலி செய்துகொண்டு ஓடிவிட்டன. இன்றைக்கு மிசின்களில் வேலை செய்பவருக்கும் வேலை கிடையாது! இதற்கு என்ன பதில் உங்களால் தரமுடியும்? //

                சரி, உங்கள் எதிரிகளான மிசின்கள் வைத்திருந்த பன்னாட்டு நிறுவனங்கள் தான் போய்விட்டனவே, அப்போ பழைய முறைப்படி சிறுதொழில் மூலம் மீண்டும் சாயப் பட்டறை வைக்க முன்வருவீர்களா? வைத்தால் பிழைப்பு நடத்த முடியாது என்பது புரிகிறது அல்லவா? எதனால் அந்த அந்நிறுவனங்கள் போயின? உலகில் சாயம்போட்ட உடைகளுக்கான தேவை இல்லாது போய்விட்டதா?

                உங்கள் கேள்விக்கான பதில், இங்கே இயந்திரமயமாதலோ சிறுகைத்தொழிலோ என்பதல்ல அடிப்படைப் பிரச்சனை. மாற்றங்களை எதிர்வுகூறவும் மாற்றங்களை எதிர்கொள்ள தயார்படுத்தவும் தவறுவதே. ஒரு போராட்டத்தின் தலைமைத்துவம் பிரச்சனைகளுக்குக் தற்காலிகத் தீர்வு காண்பதில் மட்டும் குறியாய் இருத்தல் பிரச்சனைகளை தற்காலிகமாகத் தள்ளிப்போட மட்டுமே உதவும்.

                நீங்கள் என்னென்னவோ கூறினாலும் இன்னுமொரு ஊரில் இப்படியான ஒரு தொழிற்சாலை தொடங்குவதால் இத்தொழிலாளர்களுக்கு ஏற்படவிருக்கும் வேலையிழப்பை எப்படித் தீர்ப்பீர்கள் என்பதை மட்டும் கூறவில்லை, அல்லது இன்னும் சிலகாலத்தில் அவர்கள் வேலையிழந்து உங்களுடன் முழுநேர போராட்டக்காரர்கள் ஆகவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.

                // காதர்பாய்க்கு எதிரான போராட்டத்தில் போஸ்டர் ஒட்ட அரைகிலோ பசை காய்ச்சவேண்டியிருக்கிற பொழுது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கு உரியதாக மாற்றுகிற போராட்டத்தில் இரண்டு கிலோ பசை காய்ச்ச வேண்டியிருக்கும். //

                இரண்டு கிலோ பசை காய்ச்சுவதன் மூலம் ஒரு தொழிற்சாலையை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் உங்கள் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

                இந்தச் செய்தியின்படி 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாளியாக இருந்த காதர்பாய் இப்படியெல்லாம் பசைகாய்ச்சுவதன் மூலம் இன்று ஒரு தொழிற்சாலையை நிறுவக்கூடிய வகையில் தன்னை வளர்த்துக்கொண்டிருக்க மாட்டார் என இன்னமும் நினைக்கிறேன்.

                • உங்களுக்கு வாதத்தை பரிசீலிக்க விருப்பமில்லை போல் இருக்கிறது. பல விசயங்கள் அவதூறுகளாக இருக்கின்றன. உங்கள் வாதத்தைத் தொகுத்து கீழ் கண்ட மறுமொழிகளை வைத்திருக்கிறேன். பதில் சொல்லுங்கள்.

                  1. திருப்பூருக்கு பதில் வேறு இடங்களில் மிசின்களை நிறுவியிருப்பார்கள். அதனால் திருப்பூர் மக்கள் வேலை இழக்க மாட்டார்களா என்று கேட்கீறிர்கள். ஆம். இந்தியாவெங்கும் அதுதான் நிலைமை. திருப்பூரிலேயே மிசின் வேலை பார்த்தவர்கள் இன்றைக்கு கொத்தனராகவும் சித்தாளாகவும் வேலைபார்க்கின்றனர். இதற்கு என்ன பதில்? நகர்மயமாதல் என்றால் என்ன? உள்நாட்டு அகதிகள் என்ற பதத்திற்கு என்ன பொருள்? சாயப்பட்டறை வைத்து சொந்த தொழில் பார்த்த தொழிலாளர்கள் இன்றைக்கு கொத்தடிமைகளாக இருக்கிறார்களே? இவர்களுக்கு என்ன பதில் அல்லது தீர்வு சொல்ல போகிறீர்கள்? சாயப் பட்டறை முன்வைக்க வருவீர்களா என்ற கேள்வியின் சாயம் இவ்விதம் தான் வெளுக்கிறது. சொந்த தொழிலுக்கும் கீழாக மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு என்ன தீர்வு?

                  2. தொழிற்மயமாதல் என்ற நிகழ்வில் தங்கள் சொந்த நிலங்களை விட்டும் சொந்த வீடுகளை விட்டும் அடித்து துரத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்றால் எது அவர்களை விவசாயித்திலிருந்து தூக்கி எறிந்தது?

                  3. காசு இருக்கிற காதர்பாய் பிளாஸ்மா தொழில் ஆரம்பிப்பார். காசு இல்லாத சில்வர்பட்டறை தொழிலாளிகள் இன்றோ நாளையோ கொத்தடிமைகளாக சென்னை மெட்ரோவில் வேலை பார்ப்பார்கள். இதுதான் நிதர்சனம். நீங்கள் நினைப்பதுபோல தொழில் நுட்பம் கற்று அரசு உதவி என்ற எந்த மயிரும் கிடைக்கப் போவதில்லை. ஆக உங்களது வாதம் வறட்டுவாதமாக இருந்தால் பிரச்சனையில்லை. பல்வேறு நிதர்சனங்களை மறைத்துவிட்டு கொடூரமாக சிந்திக்கீறிர்கள்.

                  4. திருப்பூர் தொழிலாளிக்கு குறைந்தது 6000 சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் வங்காளதேச தொழிலாளிக்கு 3000கொடுத்தாலே உழைப்பை விற்க ஆள் இருக்கிறார்கள். ஆக ஏன் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் ஜாகையைத் திருப்புகின்றன? எதனால் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவை விட வங்காளதேசத்தை தேர்ந்தெடுக்கின்றன? ஒரு வேளை வங்காள தேச தொழிலாளிகள் எல்லாம் உங்கள் பார்வையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று எழுதுவீர்களோ? இங்கு இருப்பவர்கள் கொடி, போராட்டம் என்று திரிகிற பொழுது அவனைப் பார்த்து மூச்சுவிடாமல் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு பிழைத்துக்கொள் என்று சொல்வீர்களோ?

                  5. “உலகில் சாயம்போட்ட உடைகளுக்கான தேவை இல்லாது போய்விட்டதா?” என்று கேட்கிறீர்கள். டெட்ராய்ட் நகரமே இன்றைக்கு அழிந்த நிலையில் இருக்கிறது. ஆக நீங்கள் வினா எழுப்புவதைபோல இன்றைக்கு வாகனங்களுக்கான தேவையே இல்லாது போய்விட்டதோ என்று சொல்லமுடியுமா? ஏன் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுரண்டலின் தாயகமாக மேற்கு நாடுகளால் பாவிக்கப்படுகின்றன? இன்றைக்கு தொழில்கள் மட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான இன்சூரன்ஸ் கம்பெனி கூட இந்தியாவில் இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கின்றன. இதெல்லாம் தொழில் வாய்ப்புகளா? இதுபோன்ற மாற்றங்களை தங்கள் பாணியில் எப்படி எதிர்கொள்வது?

                  \\இங்கே இயந்திரமயமாதலோ சிறுகைத்தொழிலோ என்பதல்ல அடிப்படைப் பிரச்சனை. மாற்றங்களை எதிர்வுகூறவும் மாற்றங்களை எதிர்கொள்ள தயார்படுத்தவும் தவறுவதே.\\

                  இதுபோன்ற வாதத்தால் திட்டமிட்டு பலவிசயங்களை மறைக்கிறீர்கள். கண்மூடித்தனமான இலாப வெறியால் மக்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள் என்ற வாதத்தை இதுவரை தவிர்த்தே வந்திருக்கீறிர்கள். அதைவிட்டுவிட்டு மாற்றங்களை எதிர்கொள்ள தயார்படுத்துவது என்று கதை விடுகிறீர்கள். ரிலையன்ஸ் பிரஸ் –விவசாயிகள் வாழ்விழந்தது என்ற ஒரு எடுத்துக்காட்டையும் முந்தைய பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தாங்கள் நிரந்தர தீர்வு என்று சொல்வதற்கு முன்பாகவே இங்கு பல இலட்சம் மக்கள் நடுத்தெருவிற்கு வந்தாயிற்று. அதற்கு இன்னும் பதிலே இல்லை. இது இப்படியிருக்க போராடுபவர்களை பார்த்து தற்காலிகத் தீர்வு என்று பிலாக்கணம் வைக்கிறீர்கள்.

                • \\நீங்கள் என்னென்னவோ கூறினாலும் இன்னுமொரு ஊரில் இப்படியான ஒரு தொழிற்சாலை தொடங்குவதால் இத்தொழிலாளர்களுக்கு ஏற்படவிருக்கும் வேலையிழப்பை எப்படித் தீர்ப்பீர்கள் என்பதை மட்டும் கூறவில்லை, அல்லது இன்னும் சிலகாலத்தில் அவர்கள் வேலையிழந்து உங்களுடன் முழுநேர போராட்டக்காரர்கள் ஆகவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.\\

                  வேலை இழப்பை எப்படித் தீர்ப்பது என்பது இந்த ஒரு போராட்டத்தோடு முடிந்துவிடப்போவதில்லை. சென்ற பின்னூட்டத்திலேயே பல்வேறு தொழிலாளர்களின் போராட்ட வடிவங்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். முருகப்பா குழுமங்களிலும் கோவை பஞ்சாலை யூனியனிலும் தொழிற்சங்கங்களைக் கட்டுவதன் மூலமாக தொழிலாளார்களுக்கு எதிரான கொடூமைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. ஈச்சர் லாரி தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்கள் உதிரிப் பாட்டாளிகள். இவர்கள் அமைப்பாக திரள்வது தீர்விற்கு முன் நிபந்தனை.

                  மூன்றாவதாக சில்வர்பட்டறைத் தொழிலாளிகளுக்கு இது உடனடிப் பிரச்சனை. இந்த மாதம் தொழிற்சாலை தொடங்கினால் அடுத்தமாதம் நடுத்தெரு என்பதை புரிந்துகொள்வதற்கு ஒருவர் கம்யுனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனித மாண்பு இருந்தாலே போதுமானது. இவர்களின் தொழிற்பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வு என்பது அமைப்பாகி போராடுவது என்பது தான். அப்படியான போராட்டங்கள் இந்தப் புளுத்துப்போன பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்ட வடிவங்களையும் கூட முடிந்தளவு பயன்படுத்துகிறது. எட்டு மணி நேர வேலை என்பதையே இன்னும் உறுதிப்படுத்தாத சமூகத்தில் தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கீறிர்கள். அதற்காக கிஞ்சித்தும் வருத்தமோ வெட்கமோ தாங்கள் பட்டதாக தெரியவில்லை. மாறாக மாற்றங்களை உள்வாங்குவது மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்துவது என்று வியக்கிறீர்கள்.

                  இது ஒருபுறமிருக்க தாங்கள் நினைப்பது போல தொழிற் வளர்ச்சி, அறிவியல் பயன்பாடு என்ற வாதமே இங்கு நிற்கவில்லை. ஏனெனில் இதற்கெல்லாம் கம்யுனிஸ்டுகள் எதிரானவர்கள் அல்லர். அப்பட்டமான சுரண்டலும் இலாப வெறியும் இங்கு அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன. இதுதான் பிரதானம். உங்களால் இது குறித்து ஏன் பரிசிலீக்க கூட இயலவில்லை?

                  மேலும் ஒரு சான்று தருகிறேன். நோக்கியா 14ஆயிரம் கோடி வரிபாக்கி கட்டாமல் வாரிசுருட்டிக்கொண்டு ஓடிவிட்டது. வெறும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இங்குள்ள தொழிலாளிகளுக்கு என்ன தீர்வு? பல ஒப்பந்த தொழிலாளிகள் ஒரே நாளில் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் போராடுகிற பொழுது என்னமாதிரியான கோரிக்கைகளை வைக்கிறார்கள் என்று சிந்தித்தது உண்டா? அது சில்வர் பட்டறை தொழிலாளிகளின் போராட்ட வடிவங்களிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என்று பார்த்திருக்கீறிர்களா?

                  ஒரு வேளை நோக்கியா இத்துணை வருடங்களில் பசைகாய்ச்சாமல் இருந்தது தான் அவனது வெற்றிக்கும் வெறிக்கும் காரணம் என்று சான்றிதழ் கொடுப்பீர்களோ?
                  மறுகாலனியாதிக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உங்களைப்போன்றவர்கள் சுரண்டலை எதிராக மக்கள் மன்றத்தில் போஸ்டர், பிரச்சாரம் என்று அம்பலப்படுத்தியிருந்தால் இன்றைக்கு இவ்வளவு பேர் வாழ்விழந்திருப்பார்களா? நம்முடைய பிழைப்புவாதம் இதில் இருக்கிறதா இல்லையா?

                • \\அவர்கள் வேலையிழந்து உங்களுடன் முழுநேர போராட்டக்காரர்கள் ஆகவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.\\

                  இந்தக் கருத்து கொச்சையானது. வேலைக்காவும் வேலைக்கேற்ற ஊதியத்திற்காகவும் மக்கள் இங்கே ஒருங்கே இணைந்து போராடுகிறார்கள். இது பொழுது போக்கு அல்ல. இதுதவிர, உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை தன் விழுமியமாக ஏற்றுக்கொண்ட பல தோழர்கள் தங்கள் அரசாங்க வேலையையே விட்டுவிட்டு புரட்சிகர இயக்கங்களையே தங்கள் மூச்சாக கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் எது வேலை என்று தெரிந்திரிக்கிறது. நடுத்தரவர்க்கம் முன்வைக்கிற சொகுசான வாழ்க்கை தான் அருவெறுக்கத்தக்கது மட்டுமல்ல; இழிவானதும் கூட. அத்தகையதொரு இழிவிற்கு உங்களது கருத்துக்கள் கட்டியம் கூறுகின்றன ஏன் சொல்லக்கூடாது?

                  \\இரண்டு கிலோ பசை காய்ச்சுவதன் மூலம் ஒரு தொழிற்சாலையை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் உங்கள் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\\

                  எதிர்கருத்து என்று வைத்துக்கொண்டாலும் கூட நீங்கள் பசைகாய்ச்சித்தான் ஆக வேண்டும். வெறும் வாழ்த்துசொல்லி நகர்வது ஏதோ இதை கீழான வேலையாக பார்க்கிறீர்கள் போல் தோன்றுகிறது. பசையுள்ள பார்ட்டிகள் பசையை விரும்புவதில்லை என்ற வாதம் புறநிலை யதார்த்தமாக மாறிவிட வாய்ப்புண்டு இனியன். அதையும் தாண்டி தாங்கள் ஒரு வேளை பரம ஏழையாக இருப்பினும் பெருந்தன்மையுடன் வாழ்த்து சொல்கிற பொழுது நீர் கசிகின்றன! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

                  \\இந்தச் செய்தியின்படி 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாளியாக இருந்த காதர்பாய் இப்படியெல்லாம் பசைகாய்ச்சுவதன் மூலம் இன்று ஒரு தொழிற்சாலையை நிறுவக்கூடிய வகையில் தன்னை வளர்த்துக்கொண்டிருக்க மாட்டார் என இன்னமும் நினைக்கிறேன்.\\

                  நினைத்தீர்களா? நனைந்தீர்களா? கொஞ்சம் மெயிண்டெய்ன் பண்ணுங்க. தீடிரென்று வேசத்தை கலைத்தால் இதுவரை தாங்கள் வைத்த நிரந்தரத்தீர்வு மற்றும் மாறுதலுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்துவது போன்ற பலமுகமூடிகள் கிழியாதா?

                  சென்ற பின்னூட்டத்திலேயே 300குடும்பங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு காதர்பாய்க்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று கேட்டிருந்தேன். அனைவரும் சில்வர்பட்டறை மூலம்தான் குடும்பம் ஓட்டுகிற பொழுது காதர்பாயால் மட்டும் எப்படி இவ்வளவு மூலதனம் போட முடிகிறது? என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

                  உங்கள் வாதப்படியே வந்தாலும் 1:300 என்பதாக சமூக வளர்ச்சி இருக்கிறது. பலபேரை அழித்து ஒரே ஒருவர் வாழ்வதையே வெற்றியாக, இயற்கையாக, இயல்பாக கொண்டாடுகிறவன் என்ன வகையான மனிதன்?

        • இனியன்,

          //இயந்திர மயமாதலோ தொழினுட்ப வளர்ச்சியோ தடைப்பட்டுவிடப் போவதில்லை. //

          பல தொழில்நுட்பங்கள் நமக்கு நன்மை பயக்கக்கூடியதாகத் தெரிந்தாலும் உற்று நோக்கினால் அது அப்படியில்லை என்றே அறியலாம். எ.கா. கிணறு கைப்பம்பு மட்டும் இருந்த போது நமது தெருக்கள் சாக்கடைகளாக இல்லை. கிரைண்டர் மிக்சி வாசிங் மெசின் வந்தவுடன் உடல் உழைப்புக் குறைவினால் நமக்கு பல கோளாறுகள் தோன்றியது தான் மிச்சம். இந்த நுட்பங்கள் நம்மை தேவைக்கு மீறிய பயன்பாட்டுக்கு இட்டுச் சென்று பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இன்று நமது நீர்நிலைகள் நிலத்தடிநீர்வளங்கள் சாக்கடைகளாகி வருகின்றன. நமது உடல்கள் ஆரோக்கியமற்றதாகிவிட்டன.

          //இப்படியொரு தொழிற்சாலை இனிமேல் திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா? //

          நடந்தது ஒரு சிறிய வெற்றி. ஒரு சிறிய ஆறுதல் என்று கூட சொல்லலாம். பொதுநலவர்க்கம் எவ்வளவு விரைவில் ஒன்று படுகிறதோ அவ்வளவு விரைவில் மாற்றங்கள் வரும்.

          //தெளிவாய்க் குழப்புவது//

          உங்களுக்கு தென்றல் அவர்கள் கொடுத்த அருமையான பதில் புரியவில்லை. அது மிகவும் சுருக்கமாக இருந்ததாலும் புரியாமலிருக்கலாம். அது புரிந்து கொள்வது சிறிது கடினமும் கூட.நான் இன்னும் விளக்கமாக அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன். பரிசீலியுங்கள்.

          • தொழில்நுட்ப வளர்ச்சி, இயந்திரமயமாதல் நன்மையா தீமையா என்பதல்ல எனது வாதம். நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. சித்தாங்கள், போராட்டங்கள் மட்டும் பாதிக்கப்படுபவர்களுக்குத் தீர்வை வழங்கிவிடுவதில்லை. சிலவேளைகளில் போலியான நம்பிக்கைகளை மனதில் விதைக்கின்றன.

            ‘தென்றல்’ அவரது “அருமையான பதிலில்” எனது அடிப்படைக் கேள்விக்கு இன்னமும் பதிலை உள்ளடக்கவேயில்லை.

            இந்தப் போராட்டம் அத்தொழிலாளிகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்குமா? இனிமேல் எங்குமே இப்படியொரு தொழிற்சாலை திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?

            இங்கே போராட்டத்தினால் ஒரு தொழிற்சாலையினைத் தடுத்தாலும் அது இன்னோர் இடத்தில் ஆரம்பிக்கப்படலாம். அப்போதும் இதே தொழிலாளர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதே எனது கருத்து.

            • இனியன்,

              உங்களுக்கு உறுதியளித்த பின்னூட்டத்திற்கு முன்னரேயே ஒரு பின்னூட்டம். அதாவது எனது பதிலுக்கு நீங்கள் கொடுத்த பதிலுக்கான மறுவினை.

              //‘தென்றல்’ அவரது “அருமையான பதிலில்” எனது அடிப்படைக் கேள்விக்கு இன்னமும் பதிலை உள்ளடக்கவேயில்லை. //

              தென்றல் தான் உங்களின் அந்த கேள்விக்கு பதில் கூற வேண்டுமா. நான் கூட //நடந்தது ஒரு சிறிய வெற்றி. ஒரு சிறிய ஆறுதல் என்று கூட சொல்லலாம். பொதுநலவர்க்கம் எவ்வளவு விரைவில் ஒன்று படுகிறதோ அவ்வளவு விரைவில் மாற்றங்கள் வரும்.// என்று மேலே கூறியிருக்கிறேனே. அது போதாதா.

              //அது இன்னோர் இடத்தில் ஆரம்பிக்கப்படலாம். அப்போதும் இதே தொழிலாளர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்//

              அது அடுத்த கட்டம். அப்போது பேசிக் கொள்ளலாம்.

              //இயந்திரமயமாதல் நன்மையா தீமையா என்பதல்ல எனது வாதம். //

              ஒன்று நன்மையா தீமையா என்பதையும் ஆராயாதவரை வாதம் நிறைவு பெறாது.

              //விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. //

              பொதுநல வர்க்கம் ஒன்றுபடும் போது நமக்கு அனைவருக்கும் நன்மையான மாற்றங்களே சாத்தியமாகும்.

              • // நடந்தது ஒரு சிறிய வெற்றி. ஒரு சிறிய ஆறுதல் என்று கூட சொல்லலாம். //

                இது உங்களை நீங்களேயும், உங்களை நம்பிப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் ஒரு நீர்க்குமிழி போன்றதொரு தற்காலிகத் தீர்வைக் காட்டி ஏமாற்றும் செயல். இது நிரந்தரத் தீர்வல்ல. நீங்கள் பசப்பும் வார்த்தை ஜாலங்களை முன்வைக்கிறீர்களேயன்றி இந்தப்போராட்டம் நிரந்தரத் தீர்வல்ல என்ற எனது மூலப் பின்னூட்டத்தை இன்னமும் மறுதலிக்கவில்லை.

                // //அது இன்னோர் இடத்தில் ஆரம்பிக்கப்படலாம். அப்போதும் இதே தொழிலாளர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்//
                அது அடுத்த கட்டம். அப்போது பேசிக் கொள்ளலாம். //

                மீண்டும் மீண்டும் பசப்புகிறீர்களேயன்றி நிரந்தரத்தீர்வு காணமுடியவில்லை என்பதனை உங்கள் வாதங்களே தெளிவாகக் காட்டுகின்றன.

                நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று இன்னும் எத்தனை தடவை சாதிக்கப் போகிறீர்கள்?

    • தென்றல்,
      மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். எனது புரிதலை பின்னிணைப்பாக சேர்த்து விடுகிறேன்.

      மணிக்கணக்கில் மனிதர்கள் செய்வதை, பிளாஸ்மா இயந்திரம் செய்யும் என்றால், நல்லது. வரவேற்கப்படவேண்டிய விஷயம். இயந்திரம் வந்த பின்னும், மனிதர்கள்தான் செய்ய வேண்டும் என்பது உழைப்பு வீணாக்கல். முட்டாள்தனம். வேலை மெனக்கெட்டு பூனை மயிரை சரைக்க என்னைப் போன்ற ‘படித்த’ மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். நிஜமாகவே உழைக்கும் மக்களையும் வீண்வேலை செய்ய வைத்தால் எல்லாரும் ஆல மரத்தடியில் ஆண்டியாய் அமர வேண்டி வரும்.

      ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், இயந்திரம் வந்த பின்பு மனிதர்கள் நடுதெருவுக்கு வருவது. இயந்திரம் வரும் முன்பு சமூகத்துக்கு பாத்திரம் தந்தவர்கள் இவர்கள். இயந்திரம் வந்த பின் இவர்களை தூக்கி எறிவது கொடூரம். நன்றிகெட்ட தனம். இவர்கள் வாழ்வுக்கு வழி செய்த பின் இயந்திரம் கொண்டுவருவது தான் முறை. கட்டுரை கூறும் முதலாளி இதில் அக்கறை கொள்ள மாட்டார். அரசு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் அரசு வர வேண்டும்.

      • Venkatesan,

        //பூனை மயிரை சரைக்க என்னைப் போன்ற ‘படித்த’ மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். நிஜமாகவே உழைக்கும் மக்களையும் வீண்வேலை செய்ய வைத்தால் எல்லாரும் ஆல மரத்தடியில் ஆண்டியாய் அமர வேண்டி வரும்.//

        உங்கள் மேற்கண்ட பதில் மிகவும் விகாரமானது. அது உங்களுக்கு தோன்றவில்லை என்பது தான் பிரச்சனையே.

        நிஜமாகவே உழைக்கும் மக்கள் கொஞ்சம் பூனை மயிர் சரைக்கட்டுமே. எல்லோரும் ஆல மரத்தடியில் ஆண்டியாய் அமர வேண்டி வரக்கூடாதென்று உங்களைப் போன்ற ‘படித்த’ மனிதர்கள் நிஜமாகவே உழைக்க முன்வரட்டுமே.

        • அது நிஜ உழைப்பின் மீதான மரியாதையில் சொல்லப்பட்ட வார்த்தை.

  4. இனியன்,

    தொழில் புரட்சி, தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்துமே இந்த பரந்துபட்ட மக்களுக்கு பயன்பட வேண்டுமே ஒழிய வெறும் லாபத்துக்காக அல்ல. அறிவு வளர்ச்சி மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதோடு , அவர்களது வேலை நேரத்தையும் குறைக்க வேண்டும். மாறாக இங்கு நடப்பது என்ன ? அறிவு வளர்ச்சி தொழில்நுட்பத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது ஆனால் அதே நேரத்தில், ஏராளமான மக்களை தெருவில் தள்ளியிருக்கிறது.

    அந்த மக்களுக்கு அந்த தொழிநுட்பம் தெரியாது என்ற ஒரே காரணுத்துக்காக, அவர்கள் தெருவில் தள்ளப்படுவது சரியா? அதற்காக அவர்கள் போராடுவது தவறா? ஒரு தொழில்நுட்பம் வரும்போது, அதன் மூலம் யார் யாருக்கெகெல்லம் வேலை வாய்ப்பு வரும் , யாருக்கெல்லாம் வேலை பரி போகும் என்பதைகே கூட தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யாமல், தாங்கள் மொட்டையாக இதை நாங்கள் எதிர்பதாக ஏன் கதைக்கிறீர்கள்?.

    நன்றி.

    • // அந்த மக்களுக்கு அந்த தொழிநுட்பம் தெரியாது என்ற ஒரே காரணுத்துக்காக, அவர்கள் தெருவில் தள்ளப்படுவது சரியா? அதற்காக அவர்கள் போராடுவது தவறா? //

      தொழிநுட்பம் தெரியாததுதான் பிரச்சனையென்றால் அதனை அத்தொழிலாளர்கள் கற்பதற்கு என்ன வழியென்று ஆராயலாமே?

      // ஒரு தொழில்நுட்பம் வரும்போது, அதன் மூலம் யார் யாருக்கெகெல்லம் வேலை வாய்ப்பு வரும் , யாருக்கெல்லாம் வேலை பரி போகும் என்பதைகே கூட தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யாமல், தாங்கள் மொட்டையாக இதை நாங்கள் எதிர்பதாக ஏன் கதைக்கிறீர்கள்?. //

      யாருக்கெல்லாம் வேலை பறிபோகும் என்பதைப் புரிந்துகொள்ளாதவன் நான் என்று எதனை வைத்துச் சொல்கிறீர்கள்? இங்கே ஒரு தொழிற்சாலையை மட்டும் முடக்குவதால் உங்களால் நிரந்தரத் தீர்வு காணமுடியாது என்று மட்டுமே சொல்கிறேன். இன்று இல்லாவிட்டால் நாளை, இங்கு இல்லாவிட்டால் இன்னோர் ஊரில், தொழிற்சாலை திறக்கப்படும். அப்போது இந்தத் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படாதா? அல்லது எங்குமே இப்படியொரு தொழிற்சாலை இனிமேல் திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?

      நன்றி.

  5. இதனை தனிப்பட்ட ஒரு தொழிலின் பிரச்சினையாகப் பார்ப்பதே தவறு.

    1. விஞ்ஞான முன்னேற்றம் தவிர்க்கமுடியாதது. இன்றைய சமூக அமைப்பில் எது லாபம் தருகிறதோ அதுவே கூடிய கவனம் பெறும். இதனைத் தடுப்பது முட்டாள்தனம்.
    2. சமூகத்திற்கு வேண்டிய மனிதன் செய்யத்தகாத (உதாரணமாக மற்றவர்களின் மலம் அள்ளுவது) போன்றவற்றிற்கு இயந்திர மயமாக்கல் வேண்டும். அதனைத்தான் நாம் மக்கள் சக்தியாக வலியுறுத்த வேண்டும். தவிர மற்றைய துறைகளில் இயந்திர மயமாக்கலிற்கு எதிராக அல்ல.
    3. ஒரு தொழிலில் மாற்றம் வரும் போது அதற்கேற்ற மாறாதவர்களும் இந்த மாற்றத்தின் மூலம் தேவையற்றவர்களானவர்களும் வேலை இழப்பர். அவர்களிற்கான மாற்று வழிகளை நாம் தேட வேண்டும்.அத்துடன் இயந்திரங்களால் தற்போது முடியாமலுள்ள கைவினை நுணுக்கங்கள் மூலமும் வேலைகளைத் தேட வேண்டும். (உதாரணம் முன்னைய நகை உற்பத்தித் தொழிலாளர்கள் சிலர் நகை வடிவமைப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள்.)
    4. சமவுடமை அரசு அமைப்பிலும் தொழிலாளர்கள் இயந்திர மயமாக்கல் மூலம் வேலை இழப்பார்கள். ஆனால் அவர்களின் மாற்றுவழிகளை மக்கள் நலன் சார்ந்த அரசு யோசிக்கும். அவ்வாறான ஒரு அரசு இல்லாத போது அழுத்தங்கள் மட்டுமே அரசை அந்நிலையை நோக்கித் தள்ளும்.

  6. இனியன்,

    தென்றல் சொல்லும் விளக்கத்தை புரிஞ்சிக்க முயற்சி செய்ங்க. உங்களுக்கு வெளிப்படையானதா தோணும் ஒரு உண்மைக்கு மாறா தென்றல் போன்றவங்க ஏன் வாதிடுறாங்கன்னாவது யோசிங்க.

    //தொழிநுட்பம் தெரியாததுதான் பிரச்சனையென்றால் அதனை அத்தொழிலாளர்கள் கற்பதற்கு என்ன வழியென்று ஆராயலாமே?//

    ஒரு வழி, பிளாஸ்மா மெசின் கொண்டு வரப் போகும் காதர் பாய், அதனால பாதிக்கப்பட போகிற எல்லா தொழிலாளர்களுக்கும் புதிய தொழில்நுட்பம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செஞ்சு, அதுக்கான செலவையும் ஏத்துக்கணும் என்பது. இப்படி ஒரு சட்டம் ஏன் போடக் கூடாது? ஏன் இதுவரை போடப்படலை?

    //யாருக்கெல்லாம் வேலை பறிபோகும் என்பதைப் புரிந்துகொள்ளாதவன் நான் என்று எதனை வைத்துச் சொல்கிறீர்கள்? இங்கே ஒரு தொழிற்சாலையை மட்டும் முடக்குவதால் உங்களால் நிரந்தரத் தீர்வு காணமுடியாது என்று மட்டுமே சொல்கிறேன். இன்று இல்லாவிட்டால் நாளை, இங்கு இல்லாவிட்டால் இன்னோர் ஊரில், தொழிற்சாலை திறக்கப்படும். அப்போது இந்தத் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படாதா? அல்லது எங்குமே இப்படியொரு தொழிற்சாலை இனிமேல் திறந்துவிடாதபடி உங்களால் செய்துவிட முடியுமா?//

    உண்மைதான். தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனையை இதை விட எளிமையா சொல்லி விட முடியாதுதான். ஒரு தொழிற்சாலையில், ஒரு பகுதியில் தொழிலாளர் (வர்க்கம்) அவங்களோட உரிமைக்காக போராடி ஜெயிச்சா, முதலாளி (வர்க்கம்) இன்னொரு தொழிற்சாலை ஆரம்பிச்சி அல்லது இன்னொரு பகுதிக்கு போய் அவங்க நினைச்சதை செய்றது தொடரும்.

    இதை தடுக்க என்ன வழி? முதலாளிங்க இப்படி தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு அடுத்தடுத்த இடத்துக்கு நகர்வதை சட்டப்படி தடுப்பது ஒரு வழி. அந்த மாதிரி சட்டத்தை எப்படி கொண்டு வருவதுன்னு வழி சொல்லுங்க. இதுவரை ஏன் அப்படிப்பட்ட சட்டம் இல்லைன்னு சொல்லுங்க.

    • “தென்றல்” கூறுவதில் தவறல்ல, முற்றிலும் நியாயமே என்று நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எனது அடிப்படைக் கேள்வியைத் தவிர்த்து ஏதோ மற்றையவர்களுக்கு எதுவுமே தெரியாதது போலவும் அவர் கூறித்தான் மற்றையவர்கள் அறியவேண்டும் என அறிவுரை கூற முயற்சிப்பது தேவையற்றது.

      நான் கூற வந்தது, இவர்களின் போராட்டம் ஒரு நிரந்தரத்தீர்வைத் தரப்போவதில்லை என்பது மட்டுமே. அதனை இவர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. அதைவிடுத்து அறிவுரைகளையும் சித்தாந்தங்களையும் அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்.

      // ஒரு வழி, பிளாஸ்மா மெசின் கொண்டு வரப் போகும் காதர் பாய், அதனால பாதிக்கப்பட போகிற எல்லா தொழிலாளர்களுக்கும் புதிய தொழில்நுட்பம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செஞ்சு, அதுக்கான செலவையும் ஏத்துக்கணும் என்பது. இப்படி ஒரு சட்டம் ஏன் போடக் கூடாது? ஏன் இதுவரை போடப்படலை? //

      இதுவேதான் எனது கருத்தும். ஏன் போராட்டம் இப்படியொரு யாதார்த்தமான கோரிக்கையுடன் நடத்தப்படக்கூடாது? சட்டம் இல்லாவிடினும், ஒன்றுபட்டுக் கோரிக்கை வைப்பதன் மூலம் காதர் பாய் போன்றவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாதா?

      தொழிற்சாலையென்று வரும்போது முன்னைய எண்ணிக்கையில் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்காதுபோகும். அப்போது தொழிலற்றுப்போபவர்களுக்கு மாற்றுவழிகள் என்னவென்று ஆராய வேண்டாமா? சில நாடுகளில் கையினால் செய்த பொருட்களுக்கென்று தனிமதிப்புக் கொடுத்து அதிக விலையில் விற்பனை செய்வார்கள். அப்படியான வாய்ப்புக்கள் இவர்களுக்குக் கிட்டும்படி செய்யமுடியுமா?

      எதிர்ப்புப் போராட்டங்கள் மட்டுமே நிரந்தரத் தீர்வல்ல என்பது எனது கருத்து.

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க