privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

-

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 3 : பொதுப்பள்ளிகளும், தாய்மொழி வழிக் கல்வியும்

ரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் தான் நடக்கின்றன. ஒரு சாதாரண தீப்பெட்டி வாங்கினால் கூட அதில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். தீப்பெட்டி இல்லாத வீடு எதாவது இருக்கிறதா? நமது வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகள் முறையாக நடக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதும் நமது கடமை தான். ஆசிரியர்களை போதுமான அளவு நியமிக்காவிடில் அதற்காக போராட வேண்டும். அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நாம்தான் போராடி அதனை வேண்டும்.

பொதுப்பள்ளி
முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர்.

தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். அரசு பள்ளிகளில் நாற்பது சதவீத கல்வி போதனை நேரத்திற்குதான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நாற்பதால் வகுத்து அந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் பிரச்சினை தீராது. அரசு இதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐந்து வகுப்பு வரை இருந்தால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே ஒரு மாணவர் இருக்கும்பட்சத்தில் கூட அதற்கு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டால் எப்படியாவது முயன்று ஆசிரியர்கள் கற்பித்து விடுவார்கள். ஆனால் பாடத்திட்டத்தை இதுதான் என வரையறுத்து கொடுத்து விட்டு ஆசிரியர்களை முறையாக நியமிக்காவிடில் அரசு பள்ளிகள் என்றுமே முன்னேற முடியாது.

ஆசிரியர்கள் நடத்தும் குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைகளை இப்போது பெரிதாக பேசுகிறோம். ஊடகங்களும் இவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளன. எங்கள் காலத்திலும் இப்படியான பாலியல் வன்முறை சம்பவங்களை நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. அப்போது ஆசிரியருக்கு எதிராக பேசினால் அடி கிடைக்கும் என்பதால் யாரும் இதனைப் பேசவில்லை.

முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர். அவர்களிடையேயான தோழமை உணர்வை பொதுப்பள்ளி முறை வளர்த்தது. ஆனால் இப்போது கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு பள்ளி, லட்சாதிபதி பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஒன்றுமில்லாதவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி என சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையே பள்ளித்துறையும் பின்பற்றுவதாக மாறி விட்டது.

தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் போது நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் போயிருந்தேன். அங்கே சாதிவாரியாக பள்ளிகள் பிரிந்து கிடக்கின்றன. பறையர் சாதியினை சேர்ந்தவர் தலைமையாசிரியராக இருக்கும் பள்ளியில் தேவர் சாதி மாணவர் சேர மாட்டார். தேவர் சாதி தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியில் பள்ளர் சாதியினை சேர்ந்த மாணவர் சேர மாட்டார். இருப்பது ஒரே பொதுப்பள்ளியாக, ஊருக்கு ஒரே பள்ளியாக இருக்கும்பட்சத்தில் இதெல்லாம் நடக்குமா? சாதியத்தை ஒழிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் இதனை வளர்க்கத்தான் உதவுகின்றன. தரமான கல்வி, மருத்துவத்தை அரசுதான் மக்களுக்கு தர வேண்டும்.

கல்வியை போலவே மருத்துவத்தையும் தனியாருக்கு திறந்து விட்டவர் எம்.ஜி.ஆர்.தான். அப்பல்லோவுக்கு அனுமதி கொடுத்தவர் அவர்தான். கூடவே அரசு மருத்துவமனை நன்றாக நடக்க விடாமலும் செய்தார். அரசு மருத்துவமனைகள் ஒழுங்காக நடந்தால் அப்பல்லோவுக்கு எப்படி ஆட்கள் வருவார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ 2 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளுக்கு 2000 தனியார் மருத்துவமனைகள் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு விலையில்லா மருத்துவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் எதிர்ப்பவன். இதனை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சையாக தர வேண்டும் என்பவன். சொல்லப் போனால் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களே இந்த நமது அரசு மருத்துவமனையில் உள்ள பேராசிரியர்கள்தான், இவர்களை விடவும் மிகவும் அனுபவம் உடையவர்கள். முன்னர் கவர்னர் முதல் அமைச்சர் வரை எல்லோருமே அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார்கள். நானே அப்படி பல அமைச்சர்களை அரசு மருத்துவமனையில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் அப்பல்லோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் ஏன் ஓடுகிறார்கள்? இது தவறு. அரசின் கொள்கை இது. தனியார்மயம் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக நடக்கிறது. முன்னர் விசா மறுத்த அமெரிக்கா இப்போது ஏன் மோடிக்கு பின்னால் வருகிறது. அவனுக்கு வியாபாரம் நடக்க வேண்டும். அதனால் தான் இப்போது காலைப் பிடிக்கிறான்.

ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம், அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துதான் தருகிறான். ஒரு மொழியை ஓராண்டுக்குள் படித்து விட முடியும். இங்குள்ள துணைத்தூதரகங்களில் அதற்கான பயிற்சியும் தருகிறார்கள்.

அன்னிய மொழி கற்றல்
ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள்.

ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள். அதிலும் தினமும் கூட வகுப்பு கிடையாது. மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட படிப்பு எங்குமே கிடையாது. சிறிதும் பரிச்சயமில்லாத இம்மொழியை ஓராண்டுக்குள் கற்க முடியும்போது, ஏற்கெனவே ஓரளவு நமது சமூகத்தில் நடைமுறையில் உள்ள பரிச்சயமுள்ள ஆங்கிலத்தை டிகிரி வரை பதினைந்து ஆண்டுகள் ஏன் கற்க வேண்டும். இரண்டு கோடை விடுமுறைகளில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் முப்பது நாட்கள் என ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.

ஆங்கிலமே தெரியாத ஆசிரியரை வைத்துக்கொண்டு எப்படி ஆங்கிலம் கற்றுத்தர முடியும். ஆங்கிலத்தில் பேசவே முடியாத ஒரு ஆசிரியரால் எப்படி ஆங்கில வழியில் கற்றுத்தந்து விட முடியும். வெர்டிபிரேட் என்ற வார்த்தையை அவர் வெறும் மனப்பாட கல்வியாகத்தான் சொல்லித்தர முடியும். நம் ஊரில் ஏழு லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இருப்பதால் அல்ல. பொறியியல் அறிவு இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

உயர்கல்வியினை தமிழ்வழியில் கொடுப்பதை கோரும் தீர்மானங்கள் முன்னர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் முதல் முதலாக வைக்கப்படும். இன்றைக்கு ஆரம்ப கல்வியே தாய்மொழியில் இல்லாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்காக நான் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய 161 நாடுகளைப் பார்த்த வரையில் எங்குமே பயிற்றுமொழி வேற்றுமொழியாக ஒரு நாட்டில் கூட இல்லை. கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம் தோன்றி 1300 ஆண்டுகள் மட்டுமேயான ஆங்கில மொழியில் தான் கற்கிறோம். சோவியத் யூனியனில் இருந்த துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் கூட நர்சரி பள்ளி துவங்கி ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றல் நடைபெற்று வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட அவர்கள் தாய்மொழியில்தான் ஆய்வுப்படிப்பு வரை கல்வியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஜப்பானில்தான் இப்போதும் உள்ளனர். ஒருவர் மட்டும்தான் அமெரிக்கா போயுள்ளார். ஜப்பானியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான்.

(தொடரும்)

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

  1. I would request to translate all available Maths/technical/Science/Medical books,terms etc., to Tamil Language. Then you talk about the medium of instruction in tamil.

    I studied in tamil medium only. The problem is lack of teaching about technology/science/maths after high scool.

    Problem is with us not with other languages.

    • I studied in tamil medium only////…..மாமா எதுக்கு ஷுத்தி வளைக்குறேள்?நா கான்வென்ட்லதாண்டா அம்பி படிச்சேன்னு தெளிவா ஷோல்லுங்கோ!

  2. //சோவியத் யூனியனில் இருந்த துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் கூட நர்சரி பள்ளி துவங்கி ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றல் நடைபெற்று வருகிறது.

    நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட அவர்கள் தாய்மொழியில்தான் ஆய்வுப்படிப்பு வரை கல்வியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஜப்பானில்தான் இப்போதும் உள்ளனர். ஒருவர் மட்டும்தான் அமெரிக்கா போயுள்ளார். ஜப்பானியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான்.//

    ரஷ்யாவின்/சப்பானின் பொருளாதார ஜி டி பி மதிப்பும் , தமிழகத்தின் ஜி டி பி மதிப்பும் ஒன்றா ?

    சப்பானிய மொழி தெரிந்தவர் தனது நாட்டுக்குள் எங்கு வேண்டமானாலும் செல்லலாம் , இங்கே இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால் “சுகந்தன்னே ?” என்பார்கள்!

    பணி வாய்ப்பு , எத்தகைய கம்பெனிகள் உள்ளன ,தனியார் கம்பெனிகள் சாதி அடிப்படையில் வேலை கொடுகின்றனவா இல்லை தகுதி அடிப்படையில் என்றெல்லாம் பார்த்தால் தமிழ் வழி கல்வி போதாது .

    தமிழ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் தமிழில் வைக்கலாம்.

    கணிதம் , அறிவியல் போன்றவை ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது.

    //கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம்//

    அதை நாம் மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .

    // தோன்றி 1300 ஆண்டுகள் மட்டுமேயான ஆங்கில மொழியில் தான்//

    இட விட பழசா சமஸ்கிருதம் இருக்கு , இலத்தீன் இருக்கு அதுல படுச்சா ஓகேவா ?
    ஆங்கிலேயர்கள் உலகம் எல்லாம் ஆண்டு , அனைவரும் புரிந்துகொள்ளும் மொழியாகிவிட்டது . அது கூட அறிவியல் மொழியானது கடந்த இருநூறு வருடங்களுக்குள்தான்.

    பழைய மொழி , புதிய மொழி இதல இலக்கணம் இருக்கு அதுல செய்யுள் இருக்குன்னு சொல்லி தேர்ந்து எடுப்பதல்ல.

    உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்.

    • இராமன்,

      இதே தலைப்பில் நாம் ஏற்கனவே விவாதித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். தாங்கள் வைக்கும் வாதத்தில் பதிவை ஒட்டி சில பார்வைகள்.

      \\உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்.\\

      உலக நடப்பு ஆங்கில மொழி என்கிற பொழுது, அதை வெகு சில நாட்களிலேயே கற்று தேற முடியும். இது இந்தப் பதிவில் விளக்கபட்டிருக்கிறது. ஒரு மொழியாக ஆங்கிலத்தைப் பாவிப்பதில் சிரமங்கள் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் இங்கு நடக்கிற கூத்து ஆங்கிலத்தின் மீதான வியாபாரம்.

      \\சப்பானிய மொழி தெரிந்தவர் தனது நாட்டுக்குள் எங்கு வேண்டமானாலும் செல்லலாம் , இங்கே இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால் “சுகந்தன்னே ?” என்பார்கள்!\\

      அதே இரண்டு மணி நேரம் பயணம் செய்து நீங்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் பதில் கிடைக்குமா? நேர்மையாக பதில் சொல்லுங்கள்.

      தமிழ் நாட்டிலே நடக்கிற சில கூத்துகள்; மெட்ரிகுலேசன் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ரசம் என்பதற்கு பதிலாக பெப்பர் வாட்டர் என்று சொல்லித்தருகிறார்கள். பெப்பர் வாட்டர் என்பது எவ்வளவு நாதரித்தனமாக இருக்கிறது? இதுதவிர தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டிலே நடைபெற்ற பொழுது ரசம் என்ற வடமொழி வார்த்தைக்கு சாறு என்பதை பயன்படுத்த வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். போராட்டம் என்ற அளவிற்கு கூட இல்லாமல் இன்றைக்கும் கிராம மக்கள் சாறு என்ற வார்த்தையை சர்வசாதரணமாக பயன்படுத்துவதை கிராமங்களிலே காணலாம்.

      ஆக பெப்பர் வாட்டர் எனப்து தங்கிலிபீசு வார்த்தையாக இருக்கிறது. கிராம மொழியிலே சொல்வதாக இருந்தால் தப்புலித்தனமான வார்த்தை. இட்லி என்பதற்கு பதிலாக ரைஸ் கேக்! தோசையை தோசா என்கிறார்கள். அதையும் ரைஸ் பைபர் என்றோ ரைஸ் கிளாத் என்றோ சொல்லவேண்டியதுதான்!!

      ஆனால் பெயர் சொற்களை பெயர்சொல்லாகவே பலசமயங்களில் ஆங்கிலம் உள்வாங்கியிருக்கிறது. சான்றாக கட்டுமரம் என்பது ஆங்கிலத்தில் கட்டமரான் என்று பயன்பட்டுவருகிறது. இப்படியிருந்தும் ஆங்கிலத்தின் பேரில் பெப்பர்வாட்டர் போன்ற கூத்துகள் நடைபெற்றால் இது ஆங்கில அறிவா? இல்லை அடிமைத்தனமா? மெட்ரிக் பள்ளிகளின் இலட்சணம் இவ்விதம் தான் பல்லிளிக்கின்றன.

      \\ கணிதம் , அறிவியல் போன்றவை ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது.\\

      முதல் உண்மை, கணிதத்திற்கும் அறிவியலுக்கும் ஆங்கிலம் அடிப்படையில்லை என்று ஏற்கனவே பார்த்தோம். ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர் ஒளியியல் பாடத்தில் தேர்ச்சிபெறுவதற்கு அடிப்படை, அறிவியல் தான் தேவையே தவிர இலக்கண அமைப்போ வார்த்தை பயன்பாடுகளோ அல்ல; ஆங்கில வாசிப்பு இதற்கு போதாது!

      இதுதவிர அறிவியலில் பெரும்பாலான எடுத்துக்காட்டுகள் மேலை நாடுகளை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்படுகின்றன. சான்றாக அலைவுறு இயக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக பெண்டுலம் (தனி ஊசலை) என்பதைச் சொல்கிறார்கள். தாய்மொழிச் சூழலில் தஞ்சாவூர் பொம்மையைச் சுட்டிகாட்டி விளக்கினால் இதே அறிவியல் நம்மவர்களுக்கு சிறப்பாக போய்ச்சேரும். இதைத்தான் தாய்மொழிவழிக்கல்வி என்றும் தாய்மொழியின் வழியாக சிந்திப்பது என்றும் சொல்கிறோம்.

      அப்படியானால் மேம்பட்ட உயர் ஆராய்ச்சிகளை எவ்விதம் கற்பது என்ற கேள்வி எழும் இல்லையா? அதற்கு ஒரு உதாரணம். H1N1 வைரஸ் பாலுட்டிகளிலிருந்து பாலூட்டிகளுக்கு எவ்விதம் பரவுகின்றன என்பதை நெதர்லாந்துவிஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். இதற்கு சற்று பின்பு சீனர்கள் இதே ஆராய்ச்சிக்கு மற்றொரு பங்களிப்பை கினியா பன்றிகளின் மூலமாக நிரூபித்துக்காட்டினர். இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகளுமே சயின்ஸ் சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. சீனர்களால் இது போன்ற ஆராய்ச்சிகள் எவ்விதம் சாத்தியமாயிற்று? இவற்றிற்கெல்லாம் எது அடிப்படை?

      “உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்” என்ற உங்கள் வாதம் அடிபடுகிறது இல்லையா?

      • //இதுதவிர அறிவியலில் பெரும்பாலான எடுத்துக்காட்டுகள் மேலை நாடுகளை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்படுகின்றன. அலைவுறு இயக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக பெண்டுலம் (தனி ஊசலை) என்பதைச் சொல்கிறார்கள். தாய்மொழிச் சூழலில் தஞ்சாவூர் பொம்மையைச் சுட்டிகாட்டி விளக்கினால் இதே அறிவியல் நம்மவர்களுக்கு சிறப்பாக போய்ச்சேரும்//

        வரலாற்றுப்படி முதலில் ஒரு கடிகாரம் வடிவமைக்க, அவர்கள் ஒரு ச்பிரிங்கில் எடையை தொங்கவிட்டு அதை ஒரு கணித சமன்பாட்டில் கொண்டுவந்தார்கள் , பின்னர் அதே சமன்பாட்டை பெண்டுலதிற்கு பொருத்தினார்கள் .

        இப்பொழுது தலையாட்டி பொம்மையை வைத்து உங்கள் கதையை கூறினால் , இந்த வரல்ல்ரும் அழிக்கப்படும். இத தலையாட்டி பொம்மையை வைத்து அவர் யாரூகும் விளக்கம் கூறவும் முடியாது . மிகவும் அபாயகரமான் சிந்தனை

        வேண்டுமானால் இந்த பாடம் நடத்திய பிறகு , செய்முறை பாடத்தில் தலையாட்டி பொம்மையை வைத்து தமிழர் பெருமையை பொங்க வைக்கலாம்.

        //“உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்” என்ற உங்கள் வாதம் அடிபடுகிறது இல்லையா?//

        சீனர்களும் டச்சு காரர்களும் கண்டுபிடிதிருகிரார்கள் . ஆகவே வாதம் அடிபட்டுபோகிறது என்கிறீர்கள் . புரிகிறது . தமிழ்நாட்டில் ஆராய்ச்சி சாலை அமைத்தாலும் முழுக்க முழுக்க தமிழர்களை கொண்டதாக ஒன்று அமைப்பெர்களா ? இல்லை பாபா அணு ஆராய்ச்சி கூடம் மராத்தியில் இருந்தால் பயனளிக்குமா ?பலமொழி கொண்ட நம் நாட்டில் அது சாத்தியமா ?

        புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொள்ளல் ஆகுமா ?

        • இராமன்,

          அறிவியலாக இருந்தாலும் சரி கலை, கலாச்சாரமாக இருந்தாலும் சரி, சர்வதேசிய கண்ணோட்டம் தேவை. அதை மறுத்து குறுகிய இனவாதத்தில் மூழ்குவதல்ல நமது வாதம். ஆனால் உங்களின் பதில் இனவாதம் என்பதற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமே இருக்கிறது. இது செயற்கையாகவும் வறட்டுத்தனமாகவும் உள்ளது.

          தஞ்சாவூர் பொம்மை தமிழ் பெருமை பேசுவதற்காக குறிப்பிடப்படவில்லை. ஒருவருக்கு பழக்கப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து அறிவியலை விளக்குவது என்பது தாய்மொழிவழிக்கல்வியின் தனிச்சிறப்பான அம்சங்களில் ஒன்று. மகாராஷ்ட்ரா ஒடிசா பள்ளி மாணவர்களுக்கு உதாரணங்கள் அவர்கள் சூழலிலிருந்து விளக்குவது மிகுந்த பயனைத்தரும்.
          மற்றபடி, கலிலியோவை, நியுட்டனை, ஐன்ஸ்டீனை அறிமுகப்படுத்துவதில் தாய்மொழிவழிக் கல்வியே மிகுந்த பலனைத் தரும். இதன் பொருள் நாம் ஒரு விசயத்தை எளிமைப்படுத்திக் கற்கிறோம் என்பதல்ல. மாறாக செறிவாக கசடற கற்கிறோம் என்பதுதான்.

          வரலாறு அழிக்கப்படும் என்ற பார்வையை மறுக்கிறேன். சொல்லப்போனால் தற்போதைய மெட்ரிக் தனியார்பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவியல் வரலாற்றை சொல்லித்தருவதில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பதினோறாவது வகுப்பு பாடமே சொல்லித்தரப்படுவதில்லை என்கிற பொழுது நீங்கள் சுட்டிக்காட்டுகிற அறிவியல் வரலாறை யார் போதிக்கிறார்கள் என்று சான்று தரமுடியுமா?

          மேலும் அலைவுறு இயக்கங்களுக்கான கோட்பாடு பெண்டுலமாக இருந்தாலும், பம்பரமாக இருந்தாலும், தஞ்சாவூர் பொம்மையாக இருந்தாலும் ஒன்று தான். சமன்பாடுகளை தருவிக்கிற பொழுது உரிமைப்படிகளை (Degrees of Freedom) அடையாளம் கண்டுகொண்டு, இயக்கச் சமன்பாடு (Equation of Motion) அமைப்பது ஒரே முறை தான். இதிலென்ன அபாயகரமான சிந்தனையை கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

          ஒன்றை மறைத்து ஒன்றை அறிமுகப்படுத்துவது என்பது முதலாளிகள் செய்கிற வேலை. ஒன்றை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்ற சிந்தனைக்கு முதல் வித்தே தாய்மொழிவழிக்கல்விதான். இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?

          \\தமிழ்நாட்டில் ஆராய்ச்சி சாலை அமைத்தாலும் முழுக்க முழுக்க தமிழர்களை கொண்டதாக ஒன்று அமைப்பெர்களா ? இல்லை பாபா அணு ஆராய்ச்சி கூடம் மராத்தியில் இருந்தால் பயனளிக்குமா ?பலமொழி கொண்ட நம் நாட்டில் அது சாத்தியமா ?\\

          இதற்கு பதில் எளிதானவைதான். ஏனெனில் ஆங்கிலம் தாய்மொழிவழிக்கல்வியிலும் ஒரு பாடமாகத்தான் இருக்கப்போகிறது. எனவே தாய்மொழிவழிக்கல்வியால் சிறப்பான பங்களிப்பை தரமுடியும் என்பதே நிதர்சனம். ஆக உங்களின் கேள்விக்கு பதில் பாபா அணு ஆராய்ச்சி கூடத்திலும் தமிழ்நாட்டு ஆராய்ச்சி கூடங்களிலும் உலகின் பிற ஆராய்ச்சி கூடங்களிலும் எல்லா மாநிலத்து மாணவர்களும் தாய்மொழி வழிக்கல்வி பெற்றிருப்பின் சிறப்பான பங்களிப்பை நல்க முடியும். இதுவரை இக்கருத்தை ஏற்றோ மறுத்தோ தாங்கள் எதுவும் கூறவில்லை என்பதை கவனிக்க.

          கொசுறு: தாய்மொழியில் அறிவியல் ஆராய்ச்சியில் சிறக்கும் அளவிற்கு நமக்கு முதலில் மக்கள் நல அரசு தேவை. அப்பொழுதுதான் அறிவியல் மட்டுமல்ல மொழியையும் வளர்த்தெடுக்க முடியும்.

          • //அறிவியலாக இருந்தாலும் சரி கலை, கலாச்சாரமாக இருந்தாலும் சரி, சர்வதேசிய கண்ணோட்டம் தேவை. அதை மறுத்து குறுகிய இனவாதத்தில் மூழ்குவதல்ல நமது வாதம். //

            Appreciate it.

            //மேலும் அலைவுறு இயக்கங்களுக்கான கோட்பாடு பெண்டுலமாக இருந்தாலும், பம்பரமாக இருந்தாலும், தஞ்சாவூர் பொம்மையாக இருந்தாலும் ஒன்று தான். சமன்பாடுகளை தருவிக்கிற பொழுது உரிமைப்படிகளை (Degrees of Freedom) அடையாளம் கண்டுகொண்டு, இயக்கச் சமன்பாடு (Equation of Motion) அமைப்பது ஒரே முறை தான் //

            When I seriously thought about your example,
            One cannot change weight and do experiments
            This toy introduces a friction with floor which may not be negligible.In Pendulum , it is air resistance and ignored in the equation.
            May be I am wrong. I wish science is taught with history and what made human to search for that solution.

            //ஒன்றை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்ற சிந்தனைக்கு முதல் வித்தே தாய்மொழிவழிக்கல்விதான். இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?//

            Agreed. One should be taught in mother tongue till 5th when they try to explore the world. From 6th grade on wards maths and science should move to English.

            நிறை என்றால் என்ன என்பதை தாய்மொழியில் கூட அகராதி வைத்துதான் பார்க்க வேண்டும் .அதனால் பெரிய பலன் இல்லை எனபது என் கருத்து . நிறைக்கும் எடைக்கும் என்ன வித்தியாசம் என்று இணையத்தில் தேடவும் முடியாது.என்னை பொறுத்தவரையில் புழக்கத்தில் இல்லாத நிறை மூலக்கூறு, மின் ஊட்டம், மின் ஓட்டம் எல்லாமே புதிய மொழிதான் . அதை ஆங்கிலத்திலேயே பயின்ருவிடுவது நல்லது

            I think Srinivasan Ramanujam learned maths in English.

  3. இராமன்,

    //இங்கே இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால் “சுகந்தன்னே ?” என்பார்கள்!//
    இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல? இந்தக் கட்டுரை மற்றும் உங்கப் பின்னூட்டம் எந்த வட்டார வழக்குள இருக்கு? தமிழகம் முழுதும் உள்ள மக்கள் தமிழ் வழிக கல்வி முறையில் ஒரே மாதிரியான பாட நூல்களை தான் படிக்கறாங்க. படிக்க ஒன்னும் சிரமபடவில்லையே. நீங் எந்த வட்டார வழக்குள பேசுவீங்கன்னு தெரியாமலே உங்க கருத்த நான் புரிஞ்சிகிட்டேன் :).

    //ரஷ்யாவின்/சப்பானின் பொருளாதார ஜி டி பி மதிப்பும் , தமிழகத்தின் ஜி டி பி மதிப்பும் ஒன்றா ?//
    //உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்//
    இந்த இரண்டு வரிகளில் எது உண்மை. ஜி டி பி மதிப்பினால் தான் அறிவியல் அறிஞர்கள் உருவாகிறார்களா? உலகம் புரிந்து கொள்ளும் பொது மொழியில் கற்பதால் தான் அறிஞர்கள் உருவாகிறார்கள? முன்னது இன்றியமையாதது என்றால், பின்னது உண்மை அல்ல. பின்னது தான் சரியென்றால் முன்னது பொய்யானது.

    அதாவது, அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஜி டி பி மதிப்பு தான் முக்கியம் என்றால், நமது சமூக பொருளாதார அமைப்பில் தான் பிரச்சினை உள்ளது என நீங்கள் ஏற்க வேண்டும். அதை சரி செய்தால் நிலைமை சரியாகிவிடும் என்பதை நீங்கள் ஏற்க வேண்டும்.

    அல்லது தாய்மொழிக் கல்வி தான் பிரச்சினை என்றால், எப்படி ரஷ்ய,ஜப்பான் மற்றும் ஏனைய தாய்மொழியில் கற்கும் நாடுகள் பொருளாதாரத்தில், அறிவியலில் முன்னேறியுள்ளன என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

    //கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம்///
    இது பெருமைக்காக தான் சொல்கிறோம் என்று வைத்து கொள்வோம் எனில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

    //இட விட பழசா சமஸ்கிருதம் இருக்கு , இலத்தீன் இருக்கு அதுல படுச்சா ஓகேவா ?//
    எதை விட பழசா? தமிழை விடவா? ஆங்கிலத்தை விடவா? ஆமாம், இந்த கேள்வியை நீங்க கேட்பது அறிவுபூர்வமாக அல்ல என்று புரிகிறது. தாய்மொழிக் கல்வி தான் அறிவியல்பூர்வமானது என்று தான் கூறுகிறோமே தவிர, ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்பதை யார் தடுத்தது? அப்புறம் இந்த சந்துல உங்க டப்பா சமஸ்கிருதம் வண்டிய ஓட்டப பாக்கறீங்களே!!! யப்பா கண்ணா கட்டுதுப்பா……

    //பழைய மொழி , புதிய மொழி இதல இலக்கணம் இருக்கு அதுல செய்யுள் இருக்குன்னு சொல்லி தேர்ந்து எடுப்பதல்ல///

    தமிழ் மொழிமேல உங்களுக்கு கொலைவெறி இருக்கும் போல? நாங்க என்ன உலகத்துல இருக்குற எல்லா மக்களும் , தமிழ்ல தான் படிக்கணும் என்றா கூப்பாடு போடுறோம்? எங்களுக்கும்,எங்கள் சந்ததிகளுக்கும், எங்கள் மொழிக்கும், எங்கள் இனத்திற்கும் (எந்த குறிப்பிட இனத்திற்கும்) எங்கள் மொழியில் கல்வி கற்பதே, வரலற்று நோக்கில் பார்க்கும் போது சிறப்பானது அது அறிவியலாகட்டும், கணிதமாகட்டும், பொருளாதாரமாகட்டும்.

    //உலக நடப்பிற்கு தேவையானதை உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் படிக்க வேண்டும்//

    சரி ஒரு பேச்சுக்கு, புதுசா ஒரு நோய்க்கு மருந்து கண்டுபுடிச்சு இருக்காங்கன்னு வச்சுக்குவோம். இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது ஜப்பானில் என்று வைத்து கொள்வோம். அதே மருந்து ரஷ்யாவிலும்,சீனாவிலும்,தமிழகத்திலும் உற்பத்தி செய்ய, ஆங்கிலம் வேண்டுமா? அல்லது ஜாப்பனீஸ் தெரிந்து இருக்க வேண்டுமா?

    நன்றி.

    • //அல்லது தாய்மொழிக் கல்வி தான் பிரச்சினை என்றால், எப்படி ரஷ்ய,ஜப்பான் மற்றும் ஏனைய தாய்மொழியில் கற்கும் நாடுகள் பொருளாதாரத்தில், அறிவியலில் முன்னேறியுள்ளன என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்//

      அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்றுவிட்டதால் மட்டும் முன்நீரிவிடவில்லை . அப்படி பார்த்தால் எண்பதுகளில் எம் ஜி ஆர் கல்வியை தனியார்மயமாக்கும் முன் வரையில் தமிழில் தான் படித்தார்கள் . அப்படி என்றால் தமிழகம் முன்னேறி இருந்து இருக்கவேண்டுமே ?

      அதற்கு சமூக பண்பாட்டு காரணிகள் உண்டு .

      தமிழில் அறிவியல் கணித நூல்கள் மொழி பெயர்க்கப்படவில்லை . மேற்கொண்டு அறிவை தேட போதுமான விளக்க நூல்கள் இல்லை .இன்றைய கணினி காலத்தில் போதுமான youtube வீடியோக்கள் இல்லை .

      வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, விளக்க நூல்கல் மற்றும் நாடு முழுமைக்கும் ஆன தகவல் தொடர்பு என போதுமான கட்டமைப்பு தமிழில் இல்லை .

      வரலாறு கூட தமிழில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை . இரண்டாயிரம் வருட இந்திய வரலாறு கோர்வையாக படிக்க வேண்டும் என்றால் கூட தமிழில் புத்தகம் இல்லை .

      உங்களுடைய மொழி பெருமைக்காக மாணவர்களை வாதிக்கலாமா ?

      //தமிழகத்திலும் உற்பத்தி செய்ய, ஆங்கிலம் வேண்டுமா? அல்லது ஜாப்பனீஸ் தெரிந்து இருக்க வேண்டுமா?//
      வீடு கட்டுபவர் பொறியாளராக இருத்தல் அவசியம் இல்லை . வடிவமைப்பவர் பொறியியல் படித்தால் போதும் .

  4. இராமன்,

    நீங்கள் ஏன் மழுப்பலான பதிலை சொல்றீங்க?

    கேள்வி எண் 1:

    ஒரு நாட்டின் அறிவியல், மருத்துவம் மற்று இதர தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதன் பொருளாதாரத்தில்(ஜி டி பி மதிப்பு) தான் உள்ளதா?

    என்னுடைய பதில் :

    இது சரியெனில், மொழி ஒரு பிரச்சினை இல்லை.
    மொழிபெயர்ப்பு,கணினியாக்கம்,வேலை வாய்ப்பு பயிற்சி போன்ற சமூக பண்பாட்டுப் பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்கும் மொழிக்கும் என்ன தொடர்பு? மொழி நம்முடைய பயன்பாட்டிற்கு தானே? நமது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அதை வளர்த்தெடுத்து செல்ல வேண்டுமேயொழிய, உங்களைப் போல ஏதுமில்லையே என்று பல்லவி பாடிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? உங்களை போன்ற அறிவுசீவிகளுக்கு இது அழகா? நீங்கள் முடிந்தால் எதாவது நல்ல நூலை மொழிபெயர்ப்பு செய்யலாம் அல்லவா?

    கேள்வி எண் 2:

    ஒரு நாட்டின் அறிவியல், மருத்துவம் மற்று இதர தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதன் மொழியின் தரத்தில் தான் உள்ளதா?

    என்னுடைய பதில்: சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் தாய் மொழியில் பயின்று தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன.

    தாய்மொழி வழிக் கல்வி என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அறிவியல் பூர்வமான நிலைப்பாடு. அது தமிழுக்கும் பொருந்தும் கன்னடத்திற்கும் பொருந்தும் ஆங்கிலத்திற்கும் பொருந்தும்.ஆனால் அதை செயல்படுத்த முடியா வண்ணம் உள்ள இந்த அரசியல் சமூக பொருளாதார சூழல் தான் பிரச்சினையோ ஒழிய சும்மா இது அறிவியல் மொழி இல்லை , அறிவியல் நூற்கள் இல்லை என்று கூப்பாடு போட்டு ஒன்னும் ஆகப போறது இல்லை.

    ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்தியாக்கப்பட்டப் பின்னரே நடக்கும். இல்லை அங்க பாரு அமெரிக்கா இருக்கு, இங்க பாரு சீனா இருக்குன்னு கத கட்டிட்டு இருக்குறதுல என்ன பயன். அமெரிக்கா, சீனா போன்ற ஏகாதிபத்தியங்கள் எப்படி மற்ற நாட்டு மக்களை சுரண்டுகிறார்கள் என்று பார்த்த பிறகும் இப்படி சொன்ன நாங்க ஒன்னும் பண்ண முடியாது.

    வேணும்னா அவங்கள இப்படி சொல்லலாம், எங்கப்பன் ரொம்ப நல்லவன், நான் எது கேட்டாலும் வாங்கி தரான் ஆனா அது யாருகிட்ட இருந்து அடிச்சு புடிங்கிட்டு வாரான்னு தெரியாது.:)

    நன்றி.

  5. ராமன் ஆங்கில வழி கல்வியே சிறந்தது என்ற முன்முடிவை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே விதண்டாவாதம் செய்கிறார்.தாய்மொழி வழி கல்விக்கு ஆதரவாக சிறப்பாக வாதங்களை எடுத்து வைக்கும் தோழர்கள் தென்றலுக்கும் சிவப்புக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    விதண்டாவாதம் எண்.1

    இந்தியாவில் இரண்டு மணி நேரம் பயணம் செய்தால் ”சுகந்தன்னே” என்று வேறு மொழி பேசும் பகுதி வந்துரும்கிறார்.இதற்கும் கல்வி பயிற்று மொழிக்கும் என்ன தொடர்பு இருக்கு.தாய் மொழி மட்டுமே போதும் என்று கட்டுரை சொல்லியிருந்தால் இந்த வாதத்துல ஓரளவுக்கு பொருள் இருக்கும்.

    \\ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம், அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துதான் தருகிறான்.//

    என்றுதானே அய்யா ராஜகோபாலன் சொல்றார்.அதுனால ராமன் கவலையே படவேண்டாம்.இரண்டு மணி நேரம் பயணம் செய்து how r u .how do u do என இங்கிலிபீசுல பொளந்து கட்டலாம்.எங்கேயும் பயணம் போகாம இருக்குற இடத்துலேயே ஆங்கில சொற்களை கலந்து கட்டி ”தங்கிலிபீசு ” பேசும் தாய் மொழி கொலையாளிகள் செய்யும் கொடுமை இருக்கே அது கொடுமையிலும் கொடுமை.

    விதண்டாவாதம் எண்.2

    \\ரஷ்யாவின்/சப்பானின் பொருளாதார ஜி டி பி மதிப்பும் , தமிழகத்தின் ஜி டி பி மதிப்பும் ஒன்றா?//

    இதென்னய்யா செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்ங்கிர கணக்கா இருக்கு. உற்பத்தி பெருகினால் மட்டும்தான் தமிழ்ல படிக்க வுடுவாராமா ராமன்.

    தாய்மொழி வழி கல்வி நடைமுறையில் இருக்கும் அந்த நாடுகள் ராமன் வியந்தோதும் ஜி டி பி யை எட்டி இருக்கின்றனவே.நேர்மையாக அவர் அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.ஆங்கிலத்தில் கற்காததால் அவர்களின் தொழிற்துறை முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படவில்லை.ஆகவே இந்த ஜி டி பி எடுத்துக்காட்டு .தாய்மொழி வழி கல்விக்கு ஆதரவாகத்தான் உள்ளது.தன் அணி மீதே கோல் போட்டு விட்டு எதிரணி மீது போட்டிருப்பதாக கற்பனையில் மிதக்குறார் ராமன்.

    விதண்டாவாதம் எண்.3

    \\தமிழ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் தமிழில் வைக்கலாம்.
    கணிதம் , அறிவியல் போன்றவை ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது.//
    ரொம்ப நன்றிங்க.தமிழை தமிழ் வழியாக சொல்லிக் குடுக்கலாம்னு பெரிய மனசு பண்ணி அனுமதி குடுத்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றிங்க.

    கணிதம் , அறிவியல் போன்றவற்றை ஆங்கிலத்தில் கற்பிக்க சொல்லும் அறிவாளிகள் சற்றே எண்ணிப்பார்க்கட்டும்.ஒரே ஒரு எளிய கேள்வி.உங்கள் மூளை ஆங்கிலத்தில் சிந்திக்கிறதா தாய் மொழியில் சிந்திக்கிறதா.நிச்சயம் அது தாய் மொழியாகத்தான் இருக்கும்.ஆங்கிலம் அறிந்த ஒரு தமிழ் மாணவனுக்கு ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பாடத்தை அவனது மூளை தமிழில் மொழி பெயர்த்துத்தான் புரிந்து கொள்கிறது.அதாவது முதல்ல கொக்கு தலையில வெண்ணையை வச்சுட்டு ஓடியாந்துர்றீங்க.வெண்ணை உருகி கொக்கு கண்களை மறைத்த பின் அது பறக்க முடியாம அப்படியே உக்காந்துரும்.அப்ப ஓடிப்போய் லபக்குன்னு கொக்கை புடிச்சுர்றீங்க.

    இது இடர்பாடுகள் நிறைந்த அறிவுக்கு ஒவ்வாத முறை.முதலில் அந்த மாணவன் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த ஊடகத்தின் மூலமாக கணிதத்தையும் அறிவியலையும் புரிந்து கொள்ள வேண்டும்.இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவதற்கு நேரடியாக அந்த மாணவன் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பாடங்களை கற்பிக்கலாமே. இதுவல்லவோ அறிவுபூர்வமான கல்வி கற்பிக்கும் முறை.

    விதண்டாவாதம் எண்.4

    \\தமிழில் அறிவியல் கணித நூல்கள் மொழி பெயர்க்கப்படவில்லை . மேற்கொண்டு அறிவை தேட போதுமான விளக்க நூல்கள் இல்லை………………….வரலாறு கூட தமிழில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை . இரண்டாயிரம் வருட இந்திய வரலாறு கோர்வையாக படிக்க வேண்டும் என்றால் கூட தமிழில் புத்தகம் இல்லை//

    ஆங்கிலத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலா பதிப்பகம் நடத்துவோர் ஆங்கிலத்தில் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.ஆதாயம் அய்யா ஆதாயம்.சந்தை வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.தமிழ் பயிற்று மொழி ஆகி விட்டால் தமிழுக்கும் சந்தை வாய்ப்பு கூடுதலாகும்.அப்போது தெரியும் எவ்வளவு புத்தகங்கள் தமிழில் வெளி வருகின்றன என்று.ஆங்கிலத்தில் இருக்கும் நூல்களை தமிழில் மொழி பெயர்க்கவும் புதிய நூல்களை தமிழில் படைக்கவும் நம்மிடையே அறிஞர்களுக்கும் பஞ்சமில்லை.புத்தகங்கள் இல்லை என்பதெல்லாம் நொண்டி சாக்கு.

    • Ans.1
      —–
      //இந்தியாவில் இரண்டு மணி நேரம் பயணம் செய்தால்//

      It is to prove the point, we live in connected world and moved out of agrarian society.You have to find a job anywhere. Let me know if you work in India.(dont need your exact location In/out should be good enough)

      Learning to speak English is different and having physics geology vocabulary is different.
      If you build all your knowledge in your mother tongue, you will have to build your vocabulary again by reading. When you learned you had time, in todays iphone world there is no time to play catch up

      Ans 2
      ——
      \\ரஷ்யாவின்/சப்பானின் பொருளாதார ஜி டி பி மதிப்பும் , தமிழகத்தின் ஜி டி பி மதிப்பும் ஒன்றா?//

      High GDP means high availability of job/research infrastructure.
      So if one reads in mother tongue, he can get a job of his choice in his own place and can settle down

      Let me know if any of you have kids and studying in Tamil medium.One sends to school having job prospects in mind not for invention and that is the reality.

      Ans 3
      ——-

      //தாய்மொழி வழி கல்வி நடைமுறையில் இருக்கும் அந்த நாடுகள் ராமன் வியந்தோதும் ஜி டி பி யை எட்டி இருக்கின்றனவே//

      Yes. They did grow before the world was connected by internet/airplane. Today’s world is different.

      //உங்கள் மூளை ஆங்கிலத்தில் சிந்திக்கிறதா தாய் மொழியில் சிந்திக்கிறதா.நிச்சயம் அது தாய் மொழியாகத்தான் இருக்கும்//

      Looks like you dont speak any other language. Thought has no language. I speak three languages. When I speak tamil, I dont think in my mother tongue and then translate. It is spontaneous

      நிறை என்றால் என்ன என்பதை தாய்மொழியில் கூட அகராதி வைத்துதான் பார்க்க வேண்டும் .அதனால் பெரிய பலன் இல்லை எனபது என் கருத்து . நிறைக்கும் எடைக்கும் என்ன வித்தியாசம் என்று இணையத்தில் தேடவும் முடியாது.என்னை பொறுத்தவரையில் புழக்கத்தில் இல்லாத நிறை மூலக்கூறு, மின் ஊட்டம், மின் ஓட்டம் எல்லாமே புதிய மொழிதான் . அதை ஆங்கிலத்திலேயே பயின்ருவிடுவது நல்லது

      Ans 4.
      ——
      //சந்தை வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்//

      That is GDP

      //.ஆங்கிலத்தில் இருக்கும் நூல்களை தமிழில் மொழி பெயர்க்கவும் புதிய நூல்களை தமிழில் படைக்கவும் நம்மிடையே அறிஞர்களுக்கும் பஞ்சமில்லை//

      Translation may not hold quality. For example “கணிதத்தின் கதை” ignored the major history of sinA cosA. Good luck with that.

      How will you translate youtube videos?

      • \\Learning to speak English is different and having physics geology vocabulary is different.//

        இருக்கட்டுமே,ஆங்கிலத்தை பேச கற்றுக்கொண்டது போல இயற்பியலிலும் மண்ணியலிலும் வல்லமை பெற்ற அந்த வல்லுநரால் அந்த ஓட்டபுலரியை மன்னிக்கணும் ஒக்காபுலரியை கற்றுக்கொள்ள முடியாதா என்ன.

        \\ When you learned you had time, in todays iphone world there is no time to play catch up //

        இதெல்லாம் ஒரு வாதமா.மீண்டும் ஆண்டுக்கணக்கில் படிக்க வேண்டுமா என்ன.எடுத்துக்காட்டுக்காக தமிழில் கற்ற ஆங்கிலம் அறிந்த ஒரு அறிவியலாளர் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் ஆங்கிலத்தில் உரையாற்ற செல்கிறார் என வைத்துக்கொள்வோம்.அந்த உரையை அணியப்படுத்தும்போதே அதற்கான ஆங்கில ஓட்டபுலரியை [கலை சொற்களை] சற்றே முயற்சி எடுத்தால் அறிந்து கொள்ளலாமே.அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்லவே.இந்த இடத்தில் இன்னொரு சுவையான தகவல்.

        சார்பியல் கொள்கையை உலகுக்கு தந்த ராபர்ட் ஐன்சுடீன் ஆங்கிலத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட அரங்குகளில் கூட ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே தனது தாய்மொழியான செருமானிய மொழிக்கு மாறி உரையை தொடர்ந்திருக்கிறார்.தனக்கு ஆர்வம் உள்ள பொருட்களை, கோட்பாடுகளை பற்றி ஆங்கிலத்தில் விவாதிக்கும்போதே செருமனுக்கு மாறுவது அவரது இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது.ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது கூட ஐன்சுடீனின் மூளையில் எண்ணவோட்டம் செருமானிய மொழியில்தான் இருந்திருக்கிறது.அதனால்தான் ஆங்கிலத்தில் இருந்து செருமானிய மொழிக்கு மாறி இருக்கிறார்.இதுதான் மனித இயல்பு.ராமன்களோ மனித மூளையின் எண்ணவோட்டத்திற்கு மொழி கிடையாது என மட்டையடியாக வாதிடுகிறார்கள்.

        \\High GDP means high availability of job/research infrastructure.//

        1947 லில் இருந்து இன்று வரைக்கும் இந்தியாவில் உயர்கல்வி ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படுகிறது. GDP உயராமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என சொல்லலாமா.ஆங்கிலத்தில் படித்து விட்டார்கள் என்பதற்காக அத்தனை பேருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா என்ன.GDP அளவுக்கு காரணங்கள் சமூக பொருளாதார தளங்களில் உள்ளன.குறைந்த GDP யை காட்டி தாய்மொழி கல்வியை மறுக்க முடியாது.

        //தாய்மொழி வழி கல்வி நடைமுறையில் இருக்கும் அந்த நாடுகள் ராமன் வியந்தோதும் ஜி டி பி யை எட்டி இருக்கின்றனவே

        Yes. They did grow before the world was connected by internet/airplane. Today’s world is different.//

        அய்யா அறிவாளியே வானூர்திகள் வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாகி விட்டது.இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கால கட்டத்தில்தான் தாய்மொழியில் கற்கும் சப்பான் மாபெரும் பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளது.இணையம் வந்து விட்ட பின்னரான கடந்த மூன்று பத்தாண்டுகளில்தான் தாய்மொழியில் கற்கும் சீனா அபார வளர்ச்சியை சாதித்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை எட்டியுள்ளது.வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் எதையாவது பேசுவது சரியா.
        \\Looks like you dont speak any other language. //

        உனக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாது.அதுனாலதா இப்படி பேசுற என்று எகத்தாளம் பண்றாராம்.இதுக்கு பழைய பின்னூட்டம் ஒன்றை விடையாக தருகிறேன்.
        https://www.vinavu.com/2010/07/23/vijayan/#comment-26900

        \\Thought has no language//

        இதற்குத்தான் மேலே ஐன்சுடீன் எடுத்துக்காட்டு சொல்லியிருக்கிறேன்.கூடுதல் விவரங்களுக்கு பார்க்க.

        http://www.lingholic.com/thinking-in-a-foreign-language-how-to-do-it-and-why/

        \\சந்தை வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்

        That is GDP //

        என்ன பேசுறோம்னு விளங்கித்தான் பேசுறீங்களா.அய்யா ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால் அதற்கு விற்பனை வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.அதனால் நிறைய நூல்கள் ஆங்கிலத்தில் பதிப்பிக்கிறார்கள்.தமிழ் பயிற்று மொழியானால் விற்பனை வாய்ப்பு கூடுதலாகி தமிழிலும் நிறைய நூல்கள் வரும் என்கிறேன்.தமிழில் போதுமான புத்தகங்கள் இல்லை என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு விடை அது.நீங்களோ மொட்டையாக அதுதான் GDP என்கிறீர்கள்.
        \\Translation may not hold quality. //

        அப்புறம் எப்படிங்க ஆங்கிலேயர்கள் அல்லாத பிற மொழி அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் இங்கிலிபிசுக்கு கொண்டு போனீங்க.ஆங்கில அடிமை மனோபாவம் இது.விட்டோழியுங்கள்.
        \\How will you translate youtube videos?//

        சீன மொழியில் youtube க்கு இணையாக youku இருப்பது தெரியாதா உங்களுக்கு.

        • ஐன்சுடீன் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது மற்றும் ஆங்கில விவாதத்தின் கடினமான தருணங்களில் தாய்மொழி செர்மனுக்கு மாறுவது வழக்கம் என்பதற்கான ஆதாரம்.

          http://www.iucaa.ernet.in:8080/jspui/bitstream/11007/1822/1/87E%20Mother%20tongue%20as%20machine%20of%20instruction%20for%20science.pdf

          • @திப்பு

            புதிய மொழி கற்கும் போது வொகாபுலரி (ஓட்டபுலரியை ?!! ) டெவலப் ஆகும் வரை அந்த தடுமாற்றம் இருக்கும் . மூளை தெரிந்த மொழியின் வார்த்தைகளை உடனே தேடி கொடுத்துவிடும். அதை கொண்டு உடனே மூளை தாய் மொழியில் தான் சிந்திக்கும் எனபது தவறு . வேறு மொழி பேசி அறியாத உங்களுக்கு புரியும்படி கூறினால் “மேசை” என்று சிந்தித்த பின்னர் “டேபிள்” என்று யாரும் கூறுவது இல்லை.

  6. //ஒரு நாட்டின் அறிவியல், மருத்துவம் மற்று இதர தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதன் பொருளாதாரத்தில்(ஜி டி பி மதிப்பு) தான் உள்ளதா?//

    Yes. Lets say Baduga language people want everything in their language, it will not happen. They cannot get the books and infrastructure.

    //ஒரு நாட்டின் அறிவியல், மருத்துவம் மற்று இதர தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதன் மொழியின் தரத்தில் தான் உள்ளதா?//

    It is tricky question. Answer is yes and no. When science grows, new words have to be added to the language. Tamil is not fast enough to absorb the science vocabulary.

    //ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்தியாக்கப்பட்டப் பின்னரே நடக்கும்//

    It is chicken and egg problem. A technology growth will help people get job .
    But if you are adamant that you will invent something only after everybody gets their basic needs, then you will stay in dark forever.

    //வேணும்னா அவங்கள இப்படி சொல்லலாம், எங்கப்பன் ரொம்ப நல்லவன், நான் எது கேட்டாலும் வாங்கி தரான் ஆனா அது யாருகிட்ட இருந்து அடிச்சு புடிங்கிட்டு வாரான்னு தெரியாது.:)//

    நம்மள எப்படி சொல்லலாம் . பழம் பெருமை பேசி திரியும் சோம்பேறி கூட்டம் என்றா

    //என்னுடைய பதில்: சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் தாய் மொழியில் பயின்று தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன.//

    China was innovative for thousands of years. Compass,paper etc

    Now before British/Mogul invasion, when you had all Tamil , what was the state of science and innovation?

    When Chinese were building ships with iron nails, we were building it by tying with robes.

    And you cannot compare support infrastructure of China/Japan with Tamil Nadu

  7. \\ One should be taught in mother tongue till 5th when they try to explore the world. From 6th grade on wards maths and science should move to English.//

    அதாவது ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வச்சு நாசமா போங்கன்றார் ராமன்.

    பயிற்று மொழியாக உகந்தது அவரவர் தாய்மொழியா அந்நிய [ஆங்கில] மொழியா என்பதை இந்த கட்டுரையை படித்து விட்டு சொல்லலாம்.

    http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24051-2013-06-04-06-59-10

    • @திப்பு

      The tamil world they envision does not exist in reality. We have already moved million miles in opposite direction from the destination they wanted to take you.

      Other cultures started translating science books to their language 1000 years before. You are staring from zero.

      You can take my advice (Free of charge ) and act smart or fall prey to propaganda.

      They will advice you to enroll your kids in tamil medium while sending their kids to CBSE.

  8. ஆங்கிலம்தான் அறிவியல் மொழி என்பது உண்மையா

    இல்லை.அது அப்பட்டமான பொய்.உலகின் பெரும்பான்மையான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பிற மொழி அறிஞர்கள் கண்டுபிடித்தவைதாம். அவர்களில் பெரும்பாலோர்க்கு ஆங்கிலமே தெரியாது. அவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள்தான்.இந்த சுட்டியை பார்த்தால் உண்மை விளங்கும்.

    http://en.wikipedia.org/wiki/Category:Inventions_by_country

    • ஆங்கிலம் உலக நாடுகள் அனைத்திலும் (atleast developed and fast developing nations) பேசப்படுகிற ஒரு மொழி. நீங்கள் அங்கீகரித்தாலும் இல்லையென்றாலும் உலக மக்களை இணைக்கின்ற ஒரு மொழி. அவ்வாறு அது வளர்வதற்கு முக்கியமான ஒரு காரணமுண்டு. உலக மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லையென்றால் அதனை ஆங்கிலத்தில் translate செய்யாமல் (almost) அப்படியே சேர்த்து கொள்வது.
      http://en.wikipedia.org/wiki/Lists_of_English_words_by_country_or_language_of_origin

      Japanஐயும் Chinaவையும் உதாரணம் காட்டும் புலிகள் எத்தனை பேருக்கு இந்நாடுகளில் ஆங்கிலத்தின் அருமை உணர்ந்து ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்துள்ளன என்று தெரியும்? இன்று உலகமே ஒரு கிராமம். ஆங்கிலம் இல்லையேல் முன்னேற முடியாது.

      வேண்டும்போது ஆங்கில வார்த்தைகளை படித்து கொள்ளலாம் என்பது சுத்த மடத்தனம். தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் கல்லூரியில் என்ன பாடுபடுகிறார்கள் என்று கேளுங்கள் பிறகு புரியும். இத சொன்னா அப்ப கல்லூரியையும் தமிழ் வழியா மாத்தினா சோலி முடிஞ்சுதுன்னு சொல்றீய. கல்லூரி முடிச்சிட்டு இந்த கேடுகெட்ட உலகத்தில வேலை பாக்க வரும்போது இப்போ பேசற ஒருத்தன் கூட அவன சீந்த மாட்டீய. அவனக்கு வேலை கிடைக்கறதே கஷ்டம். தமிழ்நாட்டை தவிர மத்த இடத்த நினைச்சு பாக்க கூட முடியாது. தமிழ்நாட்டுலயும் அவனுக்கு வேலை கிடைக்காது.

      இல்ல தெரியாம கேக்கேன். Coffee என்ற சொல்லை தமிழகத்து கடைக்கோடி கிராமம் வரை காபின்னு அழகா உபயோகபடுத்தறாவ. அதுக்கு குழம்பின்னு ஒரு வார்த்தைய வெச்சு நடைமுறைக்கு வராம ஒரு குறுகிய வட்டதில நாங்கெல்லாம் உண்மையான தமிழ் பேசறோம்னு அறிவுஜீவியா காமிச்சிகிட்டு. இதெல்லாம் ஒரு பொழப்பு. அவன் வீட்ல கூட அந்த வார்த்தைய பேசறதில்ல. இதுக்கு நடுவில இன்னொரு group coffeeக்கு சரியான மொழிபெயர்ப்பு குழம்பி கிடையாது கொட்டை வடிநீர் தான் சரி ன்னு கெளம்பும். புது அறிவு ஜீவி குரூப் ஏற்கனவே சொன்னத ஏத்துக்க முடியாதில்லா – அப்பறம் இவன் எப்படி அறிவுஜீவியாவான்?

      உங்க அறிவ சொரிய ஏன் மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடரீய?

      • தமிழின உரிமை .தாய்மொழியாம் தமிழ் மொழி வழி கல்வி உரிமை என்று பேசினாலே இனப்பகைவர்களுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது. அதனால்தான் திருவாளர் காப்பி தமிழுக்கு ஆதரவாக பேசுவோரை அவன்,இவன் என்று ஒருமையில் இழிவாக குறிப்பிடுவதுடன் மடத்தனமாக பேசுவதாகவும் ஏசுகிறார்.

        \\ஆங்கிலம் உலக நாடுகள் அனைத்திலும் (atleast developed and fast developing nations) பேசப்படுகிற ஒரு மொழி. நீங்கள் அங்கீகரித்தாலும் இல்லையென்றாலும் உலக மக்களை இணைக்கின்ற ஒரு மொழி//

        ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு.அவனுக்காவது ஆத்திரம் வரும்போதுதான் மூளை வேலை செய்யாது.ஆங்கில அடிமைகளுக்கோ எப்போதுமே வேலை செய்யாது போலும்.

        அய்யா அறிவாளியே,ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருப்பதால்தான் கட்டுரையின் தலைப்பே ஆங்கிலம் வேண்டும் என்று ஆரம்பிக்கிறது.இதைத்தான் விவாதத்திலும் சொல்லி வருகிறோம்.

        \\அவ்வாறு அது வளர்வதற்கு முக்கியமான ஒரு காரணமுண்டு. உலக மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லையென்றால் அதனை ஆங்கிலத்தில் translate செய்யாமல் (almost) அப்படியே சேர்த்து கொள்வது.//

        இருக்கட்டுமே,அதற்காக அது எமக்கு தாய்மொழி ஆகிவிடாது.தேவைப்படுவோர் கற்றுக்கொள்ளட்டும் ,அதன் வழியாக படிக்க சொல்வது அறிவுடைமை ஆகாது என்பதுதானே எங்கள் வாதம்.

        \\Japanஐயும் Chinaவையும் உதாரணம் காட்டும் புலிகள் எத்தனை பேருக்கு இந்நாடுகளில் ஆங்கிலத்தின் அருமை உணர்ந்து ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்துள்ளன என்று தெரியும்? இன்று உலகமே ஒரு கிராமம். ஆங்கிலம் இல்லையேல் முன்னேற முடியாது.//

        அவை ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்துள்ளன உண்மை.ஆனால் அது ”ஆங்கிலத்தின் அருமை உணர்ந்து” அல்ல. காசுக்காக ஆரம்பித்துள்ளன என்பதும் உண்மை.

        இன்றைய ஏகாதிபத்திய உலகில் அத்தனையுமே வணிக பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன.கல்வியும் அப்படி கடைச்சரக்காக ஆகி விட்டது.கல்வி கற்பிக்கும் பணி நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைகழகங்கள் கூட இன்று பெரும் வணிக நிறுவனங்கள் போலவே செயல்படுகின்றன.அந்த வகையில் சப்பானிய கல்வி வியாபாரிகள் பெரும் தொகையை கட்டணமாக செலுத்தக்கூடிய மூன்று மில்லியன் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்து ஆங்கில வழி கல்வியை துவக்கியிருக்கிறார்கள்.இதில் பகுதியளவு சப்பானிய மாணவர்களும் படிக்கிறார்கள்.ஒரு வெளிநாட்டு மாணவன் கல்விக்கட்டணம்,,நூல்கள்,தங்கும் விடுதி, உணவு,பொழுதுபோக்கு, போக்குவரத்து என குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய்களை செலவிடுகிறான் என வைத்துக்கொண்டால் எவ்வளவு பெரிய தொகையை பன்னாட்டு மாணவர்களிடமிருந்து கறக்கவிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் ஆங்கிலத்தின் ”அருமையை” அவர்கள் எப்படி காசாக்குகிறார்கள் என புரிந்து கொள்ளலாம்.இந்த திட்டத்திற்கு Global 30 என்று பெயர் சூட்டி 13 பல்கலை கழகங்களில் ஆங்கில வழி கல்வியை துவக்கியிருக்கிறார்கள்.அந்த 13 பல்கலை கழகங்களிலும் கூட ஆங்கில வழி கல்வி ஒரு பிரிவுதான்.அங்கும் பிற பிரிவுகளில் சப்பானிய மொழியே பயிற்று மொழி .மற்றபடி சப்பானின் பிற பல்கலைகழகங்கள் அத்தனையிலும் சப்பானிய மொழியே பயிற்று மொழி.இதுதான் சீன நிலைமையும் கூட.

        இதற்கும் அந்த நாடுகளில் வலுத்த எதிர்ப்பு உள்ளது.இது ஆங்கில வழியில் பயின்றோர்,தாய்மொழியில் பயின்றோர் என மாணவர்களிடையே வேறுபாடுகளையும் காலப்போக்கில் கற்பனையான ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதுதான் உண்மை நிலை.இனப்பகைவர்களோ உலகமே ஆங்கிலம் நோக்கி ஓடிவருவதாக கதைகட்டுகிறார்கள்.

        \\வேண்டும்போது ஆங்கில வார்த்தைகளை படித்து கொள்ளலாம் என்பது சுத்த மடத்தனம். தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் கல்லூரியில் என்ன பாடுபடுகிறார்கள் என்று கேளுங்கள் பிறகு புரியும். //

        எது மடத்தனம்.மூன்று நான்கு மாதங்களில் கற்றுக்கொள்ளக்கொடிய ஒரு மொழியை பத்துப்பதினைந்து ஆண்டுகள் கற்றுக்கொள்ளச் சொல்லும் மூடர்கள் எங்களை பார்த்து மடத்தனம் என்று ஏசுகிறார்கள்.குயிலைப்பார்த்து பழித்ததாம் கோட்டான்.

        \\இத சொன்னா அப்ப கல்லூரியையும் தமிழ் வழியா மாத்தினா சோலி முடிஞ்சுதுன்னு சொல்றீய. //

        ஆம் அதுதான் அறிவுக்கு உகந்தது என்கிறோம்.

        \\கல்லூரி முடிச்சிட்டு இந்த கேடுகெட்ட உலகத்தில வேலை பாக்க வரும்போது இப்போ பேசற ஒருத்தன் கூட அவன சீந்த மாட்டீய. //

        இப்ப ஆங்கிலத்துல படிச்சுட்டு வர்றதுனால கல்லூரி வாசல்லையே காப்பி காத்து கெடந்து அவர்களை கூட்டீட்டு போய் வேலை வாங்கி குடுக்குராராமா.

      • கப்பி,

        உலக மக்களை இணைக்கிற ஒரு மொழி என்பது ஒரு தவறான வாதம். வேண்டுமென்றால் குறிப்பிட்ட பிரிவு மக்களை ( எ.கா : மென்பொருள் வல்லுனர்கள், இங்கிருந்து அங்கில மொழி பேசும் நாடுகளுக்கு வேலைக்கு,படிப்புக்காக செல்லலும் மக்கள்) இணைக்கிற மொழி என்று நாம் சொல்லலாம்.

        எடுத்துக்கட்டாக, உலகில் பெரும்பான்மையான் மக்கள் இரு பெரும் பிரிவுக்குள் அடங்கி விடுவர். ஒன்று விவசாயிகள் மற்றது தொழிலாளிகள். இவர்கள் இருவரும் தான் நேரடி உற்பத்தியில் ஈடுபடுபவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை. தாய் மொழியையே பேசுகிறார்கள்.

        ஆங்கிலம் பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதன் பின்னணி, அமெரிக்க,பிரிட்டன் உள்ளிட்ட ஆங்கிலம் பேசுகிற நாடுகளின் அரசியல்,இராணுவம் மற்றும் பொருளாதார் ரீதிலான பிற நாடுகளின் மீதான ஆதிக்கம் அவ்வளவே.

        கட்டுரைத் தெளிவாக ஆங்கிலம் இன்றைய நிலையில் ஒரு தொடர்பு மொழியாக கண்டிப்பாக தேவை என்பதை சொல்கிறது. ஆனால் பயிற்று மொழியாக தாய் மொழியின் தேவைஎன்பது இன்றியமையாதது மற்றும் அறிவியல்பூர்வமானது.

        அதுமட்டுமல்லாமல், இன்றைய சமூக சூழலில், ஆங்கிலம் என்பது ஒரு பொருளாதயத்திற்காக என்று சுருங்கி விட்டது மற்றும் அந்த மொழி உருவாக்கும் வேலை வாய்ப்புகள் என்பது வெகுவாய்க் குறைந்து விட்டது. உற்பத்தி ஏதுமில்லாமல் வெறும் தரகு சேவைத் துறையை மட்டும் வளர்பதர்க்கே இன்றைய ஆங்கில கல்விமுறை இங்கே பயன்படுகிறது.

        எடுத்துக்காட்டாக, இந்தியக் கல்வி முறையில் பயின்ற பெரும்பாலான மாணவர்களால் பணத் தேவைக்காக, தொடர்பு ரீதியிலான சொல்லாடல்களை மட்டுமே ஓரளவிற்கு புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் அந்த மொழியின் இலக்கியத்தைப் புரிந்துக் கொள்ள முடியாது.

        பொருளுற்பத்தி இல்லாமல் எந்த மொழியும் வேலை வாய்ப்பை தர முடியாது என்பதற்கு நமது இன்றைய ஆங்கில கல்வி முறை மிக சிறந்த எடுத்துக்காட்டாகும். பொருளுற்பத்தி செய்வதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ இருந்தால் அதை மொழிபெயர்த்து, இங்கு உற்பத்தியில் ஈடுபடுகிறவர்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.

        இன்றைய சமூக சூழலில், ஒரு மொழியானது, தப்பிப் பிழைப்பது என்பது அதன் பொருளாதாரத்தோடு பின்னியுள்ளது. தாய் மொழி வெறும் பேச்சு மொழியாக மட்டும் இருந்தால், அது கண்டிப்பாக அழிந்து விடும். மொழி அழிந்தால் பிறகு இனம் என்ற வரையறையும் மாற்ற வேண்டி வரும்.

        மொழி என்பதை வெறும் பொருளாதாரத் தேவை என்று சுருக்கி பார்க்காமல், நமது ஆளுமையை வளர்த்தெடுக்கும் கல்வி முறைக்கு மாற வேண்டும். அதுக் கண்டிப்பாக இந்த சமூக அமைப்பில் நடக்காது.அது ஏன் என்ற கேள்விக்கு பதிலாக வினாவில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

        நன்றி.

        • //எடுத்துக்காட்டாக, இந்தியக் கல்வி முறையில் பயின்ற பெரும்பாலான மாணவர்களால் பணத் தேவைக்காக, தொடர்பு ரீதியிலான சொல்லாடல்களை மட்டுமே ஓரளவிற்கு புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் அந்த மொழியின் இலக்கியத்தைப் புரிந்துக் கொள்ள முடியாது.//

          இதற்க்கு எனக்குத் தெரிந்த எடுத்துக்காட்டு, ஆங்கில வழிக் கல்வி பயின்று வரும் பெரும்பாலான மாணவர்கள் கணினியில் பயன்படும் நிரல் ஏற்பு மொழியை (நன்றி விக்கி : programming language ) புரிந்துக் கொள்ள மட்டும் அளவில் தான் ஆங்கில அறிவைப் பெற்றுள்ளனர் சிலரைத் தவிர. அதைத் தாண்டி ஒரு ஆங்கிலப் புதினத்தையோ , வரலாற்றையோ , இலக்கியத்தையோ, கவிதையோ புரிந்துக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் மொழியாளுமை இருக்காது என்பது எனது புரிதல். (இதற்க்கு நானே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு :)).

          நன்றி.

  9. இலங்கையில் முதலில் ஆங்கிலத்தில் கல்வி கற்றார்கள். எனினும் தாய்மொழிக்கல்வி என்று பல அறிஞர்கள் கூறி 1950 களிலேயே தாய்மொழிக்கல்வி வந்துவிட்டது. கடைசியில் இதன் மூலம் நாம் உலகத்திலிருந்து அந்நியப்பட்டுவிட்டோம் என்று அவர்களே கூப்பாடு போடத்தொடங்கிவிட்டார்கள்.
    இப்போது அங்கே ஆங்கில வழிக்கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மீளவும் வருகிறது.
    இதன்பொருள் தாய்மொழிக்கல்வி தவறு என்பதல்ல. அதுமட்டுமே போதும் என்பது தான் தவறு.
    தாய்மொழியில் பாடசாலைக் கல்வி கட்டாயப்படுத்தப்படலாம்.
    சில விஞ்ஞான கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்ப்பதைவிடுத்து ஒலிபெயர்ப்பு செய்வது நல்லது. உதாரணமாக கம்யூட்டர் கல்குலேட்டர் என்பவற்றை கணினி கணணி என்று மொழிபெயர்ப்பது சரியல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு.
    கல்லூரி மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களிற்கு ஆங்கிலம் தேவை. அதன்பொருள் ஆங்கில மொழி மூலம் கல்வி அவசியம் என்பதல்ல. தமது ஆராய்ச்சிகளிற்கு பயன்படுத்தத் தக்க அளவிற்கும் ஏனைய மொழிபேசுவோர் நடுவே உரையாட உரைநிகழ்த்த வேண்டிய அளவிற்கும் ஆங்கில அறிவு அவசியம்.
    கல்வி என்பது சிந்திக்கத் தூண்ட வேண்டும். பாடசாலைகளில் தமிழில் படிப்பித்துவிட்டு மேலதிகமாகப

  10. இலங்கையில் முதலில் ஆங்கிலத்தில் கல்வி கற்றார்கள். எனினும் தாய்மொழிக்கல்வி என்று பல அறிஞர்கள் கூறி 1950 களிலேயே தாய்மொழிக்கல்வி வந்துவிட்டது. தாய்மொழி மூலம் அங்கு பல்கலைக் கழகக் கல்விகூட வந்தது. பெருமளவானோர் உயர்கல்வி பெற்றார்கள். கடைசியில் இதன் மூலம் நாம் உலகத்திலிருந்து அந்நியப்பட்டுவிட்டோம் என்று அவர்களே கூப்பாடு போடத்தொடங்கிவிட்டார்கள். இப்போது அங்கே ஆங்கில வழிக்கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மீளவும் வருகிறது.
    இதன்பொருள் தாய்மொழிக்கல்வி தவறு என்பதல்ல. அதுமட்டுமே போதும் என்பது தான் தவறு.

    கல்வி என்பது சிந்திக்கத் தூண்ட வேண்டும். பாடசாலைகளில் தமிழில் படிப்பித்துவிட்டு மேலதிகமாகப் படிக்க தமிழ் நூல்கள் இல்லாவிட்டால் மாணவர்கள் சிந்திக்க முடியாது பாடசாலைகளில் படித்ததை அப்படியே மனப்பாடம் செய்து பரீட்சையில் ஒப்புவிக்க முயற்சிப்பார்கள். எனவே தாய்மொழிக்கல்வியுடன் பலமொழி நூல்களை மொழிபெயர்ப்பதும் இணைக்கப்படவேண்டும்.
    சில விஞ்ஞான கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்ப்பதைவிடுத்து ஒலிபெயர்ப்பு செய்வது நல்லது. உதாரணமாக கம்யூட்டர் கல்குலேட்டர் என்பவற்றை கணினி கணணி என்று மொழிபெயர்ப்பது சரியல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு. நான் முழுவதும் தமிழில் 12 வருடங்கள் வரை கல்வி கற்றேன். பின்பு வேறு மொழி மாணவர்களிற்கு விளக்கம் தரும் சூழலில் பல விஞ்ஞான கலைச்சொற்களிற்கு சரியான மொழிபெயர்ப்பு இல்லாமல் தடுமாறி இருக்கிறேன்.

    தாய்மொழியில் பாடசாலைக் கல்வி நடாத்தப்படலாம். கல்லூரி மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களிற்கு ஆங்கிலம் தேவை. அதன்பொருள் ஆங்கில மொழி மூலம் கல்வி அவசியம் என்பதல்ல. தமது ஆராய்ச்சிகளிற்கு பயன்படுத்தத் தக்க அளவிற்கும் ஏனைய மொழிபேசுவோர் நடுவே உரையாட உரைநிகழ்த்த வேண்டிய அளவிற்கும் ஆங்கில அறிவு அவசியம்.

    சிந்தனை மொழி தாய்மொழி என்பது தவறு. சிந்தனைக்கு மொழி இல்லை. மாறாக அதிகம் தாய்மொழியில் உரையாடுவதால் அந்த மொழிச்சொற்கள் நினைவில் அதிகம் இருக்கும். சிந்தனையின் போது மூளை விரைவில் அச்சொற்களை இணைத்து வாக்கியம் அமைக்கும். இதனையே சிலர் தாய்மொழியில் சிந்திப்பது என்கிறார்கள். தமிழே இல்லாத வேறு மொழிச் சூழலில் வாழ்ந்து அந்த மொழியைப் படித்து வாருங்கள். கொஞ்சக்காலம் போனதும் அந்த மொழியிலேயே சிந்திப்பது போல உணர்வீர்கள். ஐரோப்பாவிற்குச் சென்ற இலங்கைத் தமிழர்களிற்கும் இதுதான் நடந்துள்ளது.

    எமக்கிருக்கும் பிரச்சினை வேறு: ஆங்கில மொழி மூலம் கல்விகற்க போதிய ஆசிரியர்கள் இல்லை. தாய்மொழிக் கல்விக்கு போதிய நூல்கள் இல்லை. எப்படிப் பார்த்தாலும் இரண்டுங் கெட்டான் நிலை.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க