Saturday, March 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி

தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி

-

னியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்கவும், தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டணங்களை முறைப்படுத்தவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போது அந்தக்குழுவின் தலைவராக நீதிபதி சிங்காரவேலன் இருந்து வருகிறார். நீதிபதி சிங்காரவேலன் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கேள்விக்கிடமின்றி சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதுதான் தமது கடமை என்று செயல்பட்டு வருகின்றார். பல பள்ளிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமது ‘கல்விக் கட்டணத்தை’ 100 % உயர்த்தியுள்ளதை இன்முகத்துடன் அங்கீகரித்திருப்பதே அவர் விசுவாசம் யாரிடம் என்பது விளங்கும். இதோடு நில்லாமல் இவ்வாறு உயர்த்தப்படும் கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகளை பொதுமக்களுக்கு பத்திரிக்கைகளிலோ அல்லது இணையத்திலோ வெளிப்படையாக அறிவிக்காமல் கமுக்கமாக வைத்திருப்பதே இந்த ’மாண்புமிகு நீதிபதி’ தனியார் பள்ளிகளுடன் கொண்டுள்ள கள்ள உறவுக்கு சாட்சியம். இத்தகைய ’மாண்புமிகு நீதிபதி’ சிங்காரவேலனின் யோக்கியதையை திரைகிழிக்கும் விதமாக மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சார்பாக

hrpc-poster-1

  • தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை சட்டபூர்வமாக்கும் சதியே சிங்காரவேலன் கமிட்டி
  • தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாக 100 சதவீதம் கட்டண உயர்வை ரகசியமாக உயர்த்த உத்தரவிட்ட நீதிபதி சிங்காரவேலன் மீது சி.பி.ஐ விசாரணை நடத்து.
  • கல்விக்கட்டண நிர்ணயக் கமிட்டியில் பெற்றோர்களின் கருத்தைக்கேள்
  • கல்விக் கட்டணக்கொள்ளைக்கு அடிப்படையாக உள்ள கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்போம். பெற்றோர் சங்கமாய் அணிதிரள்வோம்.
  • அனைவருக்கும் தரமான, கட்டாய, இலவச கல்வியை தாய்மொழியில் அரசு வழங்க போராடுவோம்.

– என்ற முழக்கங்களை முன் வைத்து 28.08.14 அன்று அரசுக் கல்வி இயக்குனரகம் முன்பாக மாலை 3.30 மணியளவில் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளைச்செயலர் தோழர் மில்ட்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்பின்  தோழர்களும், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் பள்ளியின் கட்டணக்கொள்ளையை
அங்கீகரித்து பாதுகாக்கும்
நீதிபதி சிங்காரவேலன்
கமிட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கட்டண உயர்வை ரகசியமாக்கி
தனியார் பள்ளி முதலைகளோடு

கள்ள-உறவு வைத்துள்ள

நீதிபதி சிங்காரவேலன்மீது
சி.பி.ஐ. விசாரணை நடத்து

பிள்ளைகளின் படிப்பிற்காக
கந்து வட்டிக்கு கடன் வாங்கி
கட்டணம் செலுத்தும் பெற்றோர்களே!
தனியார் பள்ளி கட்டண கொள்ளையை
சிங்காரவேலன் கமிட்டி ஒழிக்கும்
என்று நினைத்து ஏமாறாதீர்கள்!
தனியார் பள்ளி கொள்ளையர்களின்
கட்டண உயர்வு பகற்கொள்ளைக்கு
காவலிருக்கும் சிங்காரவேலனை
அம்பலப்படுத்தி போராடுங்கள்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்தமிழக அரசே! தமிழக அரசே!!
அநீதியான கட்டண உயர்வை
அங்கீகரிக்கும் சிங்காரவேலனை
பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடு.

தனியார் பள்ளி தரமென்று
நம்பி ஏமாறும் பெற்றொர்களே!
மனிதக்கறி விற்பனை செய்யும்
கசாப்பு கடைதான் தனியார் பள்ளிகள்
தமிழகமெங்கும் மாண்டுபோன
மாணவர் பிணங்கள் இதன் ரத்த சாட்சியங்கள்!

கட்டணக் கொள்ளை பெயராலே
மனிதக்கறி கேட்கின்ற
தனியார் பள்ளி முதலைகளின்
கசாப்பு கடையின் பலியாடுகள்
அப்பாவி பெற்றொர்கள்
பங்கு போட்டு கொடுப்பதுதான்
சிங்காரவேலன் செய்யும் வேலை.

சாராயம் விற்கும் அரசுக்கு
கல்வி வழங்க துப்பில்லையா?
சாரயம் விற்ற ரவுடிகள் இன்று
கல்வித்தந்தை வள்ளல்களா?

கோழிப்பண்ணையில் ஊசிபோட்டு
கொழுக்க வைக்கும் வளர்ச்சிதான்
தனியார் பள்ளிகள் வழங்கும் கல்வி,
மதிப்பெண் எடுக்கும் மந்தைகளாக
உருவாக்கும் கல்வி முறையை
ஒழித்துக்கட்ட போராடுவோம்.

கட்டாய இலவசக்கல்வியை
தாய்மொழியுடன் தரமாக
வழங்குவது அரசின் கடமை,
மாணவர்களின் கல்விக்காக
போராடுவது நமது உரிமை.

தனியார் பள்ளி கொள்ளையைத் தடுக்க
கமிட்டியை மாற்றி பயனில்லை,
தனியார் மயத்தை ஒழிப்பதுதான்
கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு
ஒரே வழி! ஒரே வழி!!

கல்வியில் தனியார் மயத்தை
ஒழித்திடுவோம்! ஒழித்திடுவோம்!!
மாணவர்களின் கல்வி உரிமையை
போராடி வென்றெடுப்போம்.

போன்ற ஆர்ப்பட்ட முழக்கங்களை கவனித்து மக்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பாதுகாப்பு வந்திருந்த காவலர்கள் கூட இப்போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்து தமது ஆதரவினை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தகவல்

மனித உரிமைப்பாதுகாப்பு மையம்
சென்னைக்கிளை
தொடர்புக்கு :
வழக்கறிஞர் மில்ட்டன்
9842812062

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க