செய்தி : கோக் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் நர்மதா ஆற்று நீர்
போராடும் மக்களுக்கு பரிசு போலீஸ் குண்டாந்தடி
பூமிப் பந்தையே விழுங்கிச் செரிக்கும் அமெரிக்க கோக்
கடைசிச் சொட்டு நீரையும் உறிஞ்சி குடிக்க நீளும் கொலைக்கரங்கள்
உலகையே கொத்திக் குதறும் அமெரிக்க ஏகாதிபத்திய மூளை
நமது நீரை உறிஞ்சி காய்க்கும் கோக், பெப்சி, கின்லே, அக்வாஃபினா
அமெரிக்க கோக்கே வெளியேறு
படங்கள் : ஓவியர் முகிலன்
கோக் குடிக்கக் கூடாது. பல காரணங்கள் சாதாரண தொழில் நுட்பம். கோக் தம் ப்ராண்டிக்கிற்காக மிக அதிகம் விலை வசூலிக்கிறார்கள். போன்ற பானம் குடிக்க வேண்டும் என்றால் காளிமார்க் குடிப்போம். போல் என்று இருந்த மாப்பிள்ளை விநாயகர், வின்சென்ட் என்று பானங்கள் விற்கட்டும். அமெரிகாக்காரனுக்கு அனாவசிய ப்ரீமியம் கொடுக்கக் கூடாது. இதை ஒரு சுதேசி இயக்கம் என்றோ ஏதோ ஒரு பெயரில் சொல்லி பரப்ப வேண்டும்; சாமானியக் குடிமகனுக்கு இது உரைக்க வேண்டும். அரசு நர்மாதா நீரை தாரை வாரக்கா விட்டாலும் எங்கோ பணம் அழுத்தியோ தில்லு முல்லு செய்து நீரை எடுத்து கோக் தயார் செய்து கொண்டே இருப்பர்; நம் நாட்டைக் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்பர். ஒரு முறை சுனிதா நாராயண் என்ற அம்மணி கோக், பெப்சி, முதலிய பானங்களில் பூச்சி கொல்லிகள் அதிகம் இருப்பதால் குடிப்போருக்கு சுகாதாரக் கேடு என்று பல கட்டுரைகள் எழுதினர்; கூட்டங்களில் பேசினார்; குடிப்பது கொஞ்சம் குறைந்தது. ஆனால் அந்த வெறுப்பு/எண்ணம்/பயம் தொடரவில்லை. மது விலக்கு காலங்களில் கள்ளச் சாராயச் சாவுகள் நிகழும்; அந்த சாராயம் விற்பனை குறையும்; மீண்டும் கொஞ்ச நாள் கழித்து கள்ளச் சாராயம் அதே விற்பனையை எட்டும். இது சுழற்சி அனுபவம். கோக்கும் அப்படியே. ஆனால் சாதாரணக் குடிமகன் இனிமேல் கோக் குடிக்கக் கூடாது; உள்ளூர் பானம் குடிக்கலாம் என்று முடிவு எடுத்தால் அது தொடர வாய்ப்பு இருக்கிறது.
இல்லுமினாட்டி கும்பல் உலகம் முழுவதும் கோக்கை பரப்புவதில் என்ன தடை வந்தாலும் அரசியல் வாதிகளுக்கு கவனிக்க வேண்டிதை கொடுத்து அதை முறியடிப்பதில் வெற்றி கண்டு அனைத்து உள்ளூர் பிராண்டுகளையும் தடை செய்து விட்டார்கள்.
அமெரிக்க கோக்கையும் “அமெரிக்கா
ஏகாதிபத்தியநாயையும்”
அடித்து விரட்டுவோம்….
அத்தோடு சமூகவிரோத RSS BJP…
கழிவுகளையும் துடைத்தெறிவோம்…