மின்கட்டண உயர்வு தொடர்பாக அக்டோபர் 29-ம் தேதி திருநெல்வேலியில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நாகர்கோவில் மாவட்டத் தலைவர் பூபதி, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மின்வாரியத்தில் எந்த ஆண்டு வரை லாபம் ஏற்பட்டது, எந்த ஆண்டு வரை நஷ்டம் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்ப்பபட்டது. இதற்கு பதில் அளித்த நிதித்துறை இயக்குனர் புள்ளிவிபரங்களை தவறாக கூறினார். பதிலை கேட்டுச் சொல்வதாகக் கூறினார். பதில் தெரியாமல் ஏன் கூட்டத்திற்கு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு 2001-ம் ஆண்டு முதல் மின்துறை ஒவ்வொரு ஆண்டிலும் சந்தித்த லாப, நஷ்ட விபரங்களை தெரிவித்தார். அதன்படி 2001-02ம் ஆண்டில் ரூ 183 கோடி லாபம் சம்பாதித்ததாகவும், அடுத்த ஆண்டில் ரூ 4,851 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரே ஆண்டில் லாபம் நஷ்டமாக மாறியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
தூத்துக்குடி அனல்மின்நிலையம் தொடர்பான புகார் கேள்விக்கு மின்வாரிய செயலாளர் தற்சமயம் பதில் இல்லை என்றதால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரினர்.
மாலை 5 மணிக்கு கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. கேட்ட பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காத நிலையில் கூட்டத்தை முடித்ததை கண்டித்து மைடையின் முன் முழக்கம் போடப்பட்டது. ஆணைய தலைவரும் உறுப்பினர்களும் வெளியில் வந்த போது அவர்களிடம் பேட்டி எடுக்க முற்பட்ட செய்தியாளர்களை ஒரு நபர் தள்ளி விட்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் – புகைப்படங்கள்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி
கருத்து கேட்பு கூட்டமா? …இதுவெல்லாம்நடக்குதா?…