privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஎபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

-

6000-க்கும் மேற்பட்ட மக்களை இதுவரையிலும் பலிவாங்கியிருக்கிறது எபோலா காய்ச்சல். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் இந்த கொள்ளை நோயை எப்படி கையாளுகின்றன; என்ன வகையான மருத்துவ உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்றன போன்ற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழுகின்றன.

கியூப மருத்துவர்கள்
சியரா லியோனுக்கு வந்து இறங்கும் கியூப மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும். (படம் : நன்றி theguardian.com)

சர்வதேச நாடுகள் உதவி செய்கின்றன என்பது பொதுவான உண்மை என்றாலும் கியூபா அதில் முதன்மை பங்கு வகிக்கிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபா தனது நாட்டின் மருத்துவர்கள் 456 பேரை எபோலா பாதித்த நாடுகளின் மக்களிடம் பணியாற்ற அனுப்பி உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் பெயரளவுக்கு மட்டுமே சில உதவிகளை செய்கின்றன. பிரிட்டன் 30 மருத்துவர்களை மட்டும் அனுப்பி உள்ளது. அமெரிக்க மருத்துவர்கள் 10 பேருக்கும் குறைவாக விருப்பம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்று கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம்.

மாறாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏதோ கலகம் ஏற்பட்டிருப்பதை போன்ற பாவனையில் பெருமளவுக்கு ராணுவத்தை அனுப்பி வைத்திருக்கின்றன அமெரிக்காவும், பிரிட்டனும்.

கியூபா மருத்துவர்கள் சிலருக்கு எபோலா தொற்றி பாதித்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து களத்தில் மக்களிடையே பணியாற்றி வருகிறார்கள். ஆனால், உலகின் பேரபாயமாக எபோலா எடுக்கவிருந்த அவதாரத்துக்கான சாத்தியங்கள் குறைந்து இருப்பதை அடுத்து மேற்கு ஊடகங்கள் இந்த பிரச்சினையில் கொண்டிருந்த ஈடுபாடு வற்றி உள்ளது.

கியூபாவின் மருத்துவக்குழு சியரா லியோன் வந்த போது அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரொமா நேரில் சென்று வரவேற்றார். இக்கட்டான நேரத்தில் தமது மக்களை காப்பாற்ற வந்த கியூபாவின் மருத்துவர்களை அவர் பாராட்டினார்.

கியூபா மருத்துவர்களின் மெச்சத்தகுந்த பணியை அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் பாராட்டியுள்ளது. கியூபாவின் மக்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய முப்பது வருடங்களாக முயன்று வரும், தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு சேவை செய்து வரும் அமெரிக்கா தேசங்கடந்த பொதுநலத் தொண்டில் கியூபாவின் முழங்கால் அளவுக்கு கூட வளரவில்லை என்பது தான் உண்மை.

மேற்கத்திய நாடுகளில் எபோலா பற்றிய அறிதல் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு அமெரிக்க மதப் பிரச்சாரகர்களுக்கு எபோலா காய்ச்சல் பாதித்த பிறகுதான் ஏற்பட்டதாக கூறுகிறார், ஊடகவியலாளர் ஆன்ட்ரி கெரிலொ. ஒரு பக்கம் எண்ணற்ற கருப்பின ஆப்பிரிக்கர்கள் தங்கள் படுக்கைகளில் வேதனையால் நெளிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரண்டு வெள்ளை அமெரிக்கர்களின் துயரை மிகுதியாக செய்தியாக்குவதன் நிர்ப்பந்தம் தன்னை மிகவும் வருத்தியதாக குறிப்பிடுகிறார், ஆன்ட்ரி.

மேற்கத்தியர்கள் பாதிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஒரு சோதனை மருந்து கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கியூப மருத்துவர்கள்
ஹவானாவில் கியூப மருத்துவர்கள் (படம் : நன்றி theguardian.com)

“எபோலாவால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் எண்ணிக்கைகளாக சுருங்கி விட ஓரிரு மேற்கத்தியர்களின் பாதிப்பு மட்டும் விலாவரியான முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்த உணர்வு நமக்கு இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஆன்ட்ரி. மேற்கத்திய நாடுகளின் கவனம் முழுக்க தமது எல்லைகளை இந்த வைரஸ் தொற்று தொட்டு விடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.

வளர்ந்த நாடுகள் துரிதகதியில்  செயல்பட்டிருந்தால் மேற்கு ஆப்பிரிகாவின் கினி நாட்டில் ஆரம்ப நிலையிலே எபோலாவை கட்டுப்படுத்தியிருக்க முடியும். லைபீரியாவுக்கும், சியரா லியோனுக்கும் அது பரவிடாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று எபோலா நோய் தொற்று கடுமையாக பரவியிருக்கும் நிலையில் சியரா லியோனுக்கு மட்டுமே 10,000 மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கியூபாவின் உலக மக்கள் நலன் சார்ந்த பணி எபோலா நோய் ஏற்படுத்தியிருக்கும் இப்போதைய நெருக்கடியில் மட்டும் வெளிப்படவில்லை. 2010-ம் வருடம் லத்தீன் அமெரிக்காவின் ஹைத்தியில் புயல் வீசி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் கியூபா மருத்துவர்கள் பிரதிபலன் பாராத மருத்துவ உதவிகளை செய்தார்கள். 40%  மக்களை தமது மருத்துவத்தால் ஆற்றுப்படுத்தினர். ஹைத்தியில் ஒரு நீடித்த அரசு சுகாதார அமைப்பு ஏற்படவும் துணை நின்றார்கள்.

1960-ம் ஆண்டில் சே குவேரா ‘ஒவ்வொரு மருத்துவரும் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் மக்களுக்கும், புரட்சிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று வழிகாட்டிய நெறியை பின்பற்றி ஒழுகுகிறார்கள் கியூபா மருத்துவர்கள்.

1960-களில் காங்கோ மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களின் விடுதலைக்கு துணை நின்றார் சே குவேரா. அதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களின் நேசத்துக்கு உரியவரானார், சே. 1970-களில் கியூபாவுக்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பட்டது. அங்கு இடதுசாரி  குடியரசுகள் ஏற்பட்டன.

லைபீரியாவுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு கியூப மருத்துவர்கள், மேற்கு ஆப்பிரிக்க பணிக்கு போவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறினர். “என்னுடைய சக மருத்துவர்கள் போகும் போது நான் ஏன் போகக் கூடாது” என்று சிலர் கேட்கின்றனர் என்கிறார் மருத்துவர் அட்ரியன் பெனிடஸ்.

அவருடன் இருந்த மருத்துவர் லியனார்டோ ஃபெர்னாண்டஸ் உதவி செய்தே தீர வேண்டும் என்று தன்னார்வலர்கள் உணர்வதாக கூறினார். “நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்று தெரிகிறது. என்ன நடக்கலாம் என்று தெரிகிறது (இறந்தும் போகலாம்). ஆனால், இது எங்கள் கடமை. இப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்” என்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய மருத்துவர்களின் மருத்துவப்பணியை நேரடியாக கண்ணுறும் மக்கள் ‘புரட்சி வாழ்க’ என்று முழக்கங்களுடனான சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். அமெரிக்காவின் செவிகளில் இந்த முழக்கம் எட்டாமல் இல்லை. 40 கோடி டாலர் உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்துள்ளது. ஜப்பான் 4 கோடி டாலரை அளிக்கிறது. எனினும் மக்கள் உண்மையான ஆபத்துதவிகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள் அல்லர்.

2005-ம் வருடம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா 2,400 மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. காயமடைந்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். கியூபாவின் சர்வதேசிய மருத்துவம் (Cuban Medical Internationalism) என்ற நூலின் ஆசிரியர் ஜான் கெர்க் என்பவர் கியூபா மருத்துவர்களால் உலகில் லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 33 நாடுகளில் 30 லட்சம் மக்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்துள்ளார்கள் கியூபா மருத்துவர்கள்.

2005-ம் வருடம் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியை (Latin American Medical School) நிறுவிய கியூபா ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இது வரையிலும் 23,000 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே சென்று உலகின் ஏழை மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.

அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. 1960-களில் அமெரிக்க தொழில் நிறுவனங்களை கியூபாவில் தேசிய உடைமையாக்கி, இன்றுவரை அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்காத ஆத்திரத்தில் அமெரிக்கா இருக்கிறது. வெளியே மனித உரிமை மீறல் என்று பொய்யுரைக்கிறது. அமெரிக்க அணி நாடுகளைத் தவிர்த்து பல்வேறு நாடுகள் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க  ஐ.நா.வில் வாக்களித்தாலும் எந்தப் பயனுமில்லை. ஐ.நா என்பது அமெரிக்கவிற்கான உலக தூதராக இருக்கும் வரை கியூபாவின் நிலைமை சிக்கலாகத்தானிருக்கும்.

பொருளாதாரத் தடையை விலக்கினால் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு கியூபாவால் உதவி செய்ய முடியும்.

நமது ஊரில் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க விழையும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க இருப்பதாக கூறுவதை ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செயல்படுகிறவர்களை நாம் பார்த்ததில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்க்ரெட் சான், உலகில் ஏழை மக்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்திருக்கும் ஒரே நாடு கியூபா என்று புகழ்கிறார். கியூபாவின் ஐம்பதாயிரம் மருத்துவர்கள் உலகம் முழுவதிலும் 60 ஏழை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நாட்டில் மழை ஏன் பொழிகிறது என்றால் ”இங்கு நல்லவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பதால் தான்” என்று சிலர் சொல்வது நமது காதில் அடிக்கடி விழுகிறது. இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான் என்று கூறுவது மிகையாகுமா?

– சம்புகன்.

மேலும் படிக்க

  1. Let them send thousand people , end of the day they dont have medicine.
    How many doesnt matter? What is the help matters.
    America and Canada have the medicine. And Cuba doesnt have it.

    • கட்டுரை தலைப்பை மட்டும் பார்த்து பின்னுட்டம் எழுதியுள்ள இராமன் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கு என்ன பதில் கூற போகின்றார் ?

      [1]உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்க்ரெட் சான், உலகில் ஏழை மக்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்திருக்கும் ஒரே நாடு கியூபா என்று புகழ்கிறார். கியூபாவின் ஐம்பதாயிரம் மருத்துவர்கள் உலகம் முழுவதிலும் 60 ஏழை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

      [2]2005-ம் வருடம் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியை (Latin American Medical School) நிறுவிய கியூபா ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இது வரையிலும் 23,000 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே சென்று உலகின் ஏழை மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.

      [3]2005-ம் வருடம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா 2,400 மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. காயமடைந்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அவர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

      [4]1.1 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபா தனது நாட்டின் மருத்துவர்கள் 456 பேரை எபோலா பாதித்த நாடுகளின் மக்களிடம் பணியாற்ற அனுப்பி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் பெயரளவுக்கு மட்டுமே சில உதவிகளை செய்கின்றன. பிரிட்டன் 30 மருத்துவர்களை மட்டும் அனுப்பி உள்ளது. அமெரிக்க மருத்துவர்கள் 10 பேருக்கும் குறைவாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

      • If you were a doctor, Will you go to Eboloa zone knowing that you may die ?
        Other societies allow their doctors to make the choice, In Cuba, Govt will make the decision for you.

        Free education is not free, it has a cost.
        You repay it as with your time, working as a doctor.

        • \\If you were a doctor, Will you go to Eboloa zone knowing that you may die ?//

          ஆயுத மோதல்களில் கொல்லப்படலாம் என்பதை அறிந்தே பல நாடுகளில் தேசிய இன விடுதலை போராளிகளும் பொதுவுடமை புரட்சியாளர்களும் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள்.
          மக்களை நேசிக்கும் மருத்துவர்கள் கொள்ளை நோய் பரவும் இடங்களுக்கு போக தயங்குவதில்லை.

          \\Other societies allow their doctors to make the choice, In Cuba, Govt will make the decision for you.//

          கட்டுரையை நன்கு படிக்கவும்.

          ”லைபீரியாவுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு கியூப மருத்துவர்கள், மேற்கு ஆப்பிரிக்க பணிக்கு போவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறினர். “என்னுடைய சக மருத்துவர்கள் போகும் போது நான் ஏன் போகக் கூடாது” என்று சிலர் கேட்கின்றனர் என்கிறார் மருத்துவர் அட்ரியன் பெனிடஸ்.
          அவருடன் இருந்த மருத்துவர் லியனார்டோ ஃபெர்னாண்டஸ் உதவி செய்தே தீர வேண்டும் என்று தன்னார்வலர்கள் உணர்வதாக கூறினார். “நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்று தெரிகிறது. என்ன நடக்கலாம் என்று தெரிகிறது (இறந்தும் போகலாம்). ஆனால், இது எங்கள் கடமை. இப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்” என்கிறார்.”

          \\Free education is not free, it has a cost.

          You repay it as with your time, working as a doctor.//

          வெறுமனே மருத்துவராக பணியாற்றுவது மட்டுமே போதாது.படிக்க வைத்த மக்களுக்கு துரோகம் செய்து மேல்நாட்டுக்கு ஓடிப்போய் காசு பணமே வாழ்க்கை என மனிதப்பதராக ஏகாதிபத்திய அடிமை ஊழியனாக வாழ்வதும்,உள்நாட்டில் இருந்தாலும் தலைவலி காய்ச்சல் என வருபவனுக்கு தேவையே இல்லாமல் CT Scan, MRI Scan எடுக்கச்சொல்லி ஊர் தாலி அறுப்பதும் திருப்பி செலுத்துவது ஆகாது.நியாயமான ஊதியம் பெற்றுக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் நலனுக்காக பணியாற்றுவதே திருப்பி செலுத்துவது ஆகும்.

          • Would those doctors survive, if they had spoken their mind ?
            There are atheist in Saudi Arabia,If they speak their mind to media , they will be killed.
            Only a proper system provides right environment,Dont take propaganda message seriously.

            Even if they wanted to help, what help those communist cult brings?
            But capitalism has medicine, only they can help.

    • மருந்து இருந்தும் உதவாம இருக்குறதுக்கு, அடிப்படை சிகிச்சை கொடுக்குறது எவ்லவோ மேல். இதுதான் முதலாளித்துவத்தின் “மனிதநேய” மிக்க செயல்.
      கம்யூனிச “சர்வாதிகாரத்தில்” அடிப்படை மருத்துவ வசதியாவது இதுபோன்ற கொடிய நோய் பாதித்தவர்களுக்கு அளிக்கபடும்.
      ஆனால் முதலாளித்துவ ‘சொற்கத்தில்’ காசு இருப்பவனுக்கே மருந்து வழங்கப்படும் மேலும் இதில் இனவெறி, நிறவெறியெல்லாம் கடைபிடக்கபடும்.
      மருந்து கண்டுபிடிசசா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கணும், இல்லைனா அத கண்டுபிடிச்சி என்ன பயன்?

      • One society should have invented medicine and have produced enough supplies and keep it ready.
        Another society will do nothing , but have the right for everything free.

        Keep dreaming!

    • We also need doctors to render the medicines. But western countries does it with corporate interest. To me science that too medical can’t be patented and it must be available to all.

  2. வியாசன், கியூபாவின் மக்கள் டியுபில் காற்றை முக்கி முக்கி அடைத்து கொண்டு நாடுவிட்டு முதாளித்துவ அமெரிக்கவிற்கு ஓடுவதை பார்திர்கள் அல்லவா ? அதே கியூபாவின் மக்கள் தான் உலகம் முழுவதும் மருத்துவ சேவைக்காக ஓடிக்கொண்டே இருகின்றனர் என்பதையும் நீர் இக்கட்டுரையின் மூலம் அவதனிக்க வேன்டும் ! பிடரல் காஸ்ட்ரோவிற்கு சுருட்டில் விசம் வைக்கும் அமெரிக்க தடியன்களுக்கு பின்னிசை பாடும் வியாசன் ,பிடரல் காஸ்ட்ரோவின் குதத்துக்கு மூல நோயை கூட உமது முதாளித்துவ சீழ் வடியும் அமெரிக்கா உண்டாக்க இயலாததை நீர் உணரவேண்டும் ! சென்சோற்று கடனை கழிக்க நீர் அமெரிக்கவிற்கு ஆதரவாக கியூபாவிற்கு எதிராக எதைவேண்டுமானாலும் நீர் கருத்து என்ற பெயரில் கழியலாம் ! அவற்றை கியுபாவின் உலகாலாவிய மருத்துவ சேவை துடைத்து எறியும்

    • //அவற்றை கியுபாவின் உலகாலாவிய மருத்துவ சேவை துடைத்து எறியும்///

      கியூபா திறமையான டாக்டர்களை குறைந்த செலவில் அதிகளவில் உருவாக்குகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது தனிமனித சுதந்திரத்துக்கும், பேச்சுச் சுதந்திரத்துக்கும் ஈடாகாது. இனப்பிரச்சனை தொடங்க முன்னர், அதாவது இன அடிப்படையிலான தரப்படுத்தல் (இட ஒதுக்கீடு) அறிமுகப்படுத்த முன்னர், இலங்கை கூடத் தான் பல உலகப் புகழ்பெற்ற டாக்டர்களையும், வல்லுனர்களையும் உருவாக்கியது, அதனால் இலங்கையில் எல்லா மக்களும் வசதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று வாதட முடியாதோ, அது போன்றே கியூபா நூற்றுக்கணக்கான மருத்துவர்களை ஆபிரிக்காவுக்கு அனுப்புகிறது என்ற காரணத்தைக் காட்டி, அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று வாதாட முடியாது.

      வறிய நாடாகிய நாடுகளில் கியூபாவின் கம்யூனிச இமேஜை தூக்கி நிறுத்துவதற்காகவும், தமது மக்களை ஆபத்தான இடங்களுக்கும் அனுப்புவதற்கு கியூபா போன்ற கம்யூனிச அரசுகள் தயங்குவதில்லை. அதே வேளையில் அமெரிக்காவிலோ அல்லது ஏனைய மேலை நாடுகளிலோ, தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப் படுவதால், எபோலா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு, உரிய பாதுகாப்பின்றி தம்மை அனுப்புவது, அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட தமது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் மக்களுக்கு உரிமையுண்டு. ஆனால் கியூபன் டாக்டர்களுக்கு அந்த உரிமையி கிடையாது. கம்யூனிசத் கட்சியின் பொலிற்பீரோ சொன்னால் போக வேண்டியது தான். .

      அதை விட, எபோலா பரவியுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் கியூபன் டாக்டர்கள், எபோலா வைரசால் தாக்கப்பட்டதும், அவர்களைக் குணப்படுத்த்த மீண்டும் கியூபாவுக்கு அழைக்கப்படுவதில்லை, மாறாக முதலாளித்துவ நாடுகளாகிய சுவிற்சர்லாந்து, அமெரிக்க போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தான் அவர்கள் குணப்படுத்தப் படுகிறார்கள்.

      • “அமெரிக்காவிலோ அல்லது ஏனைய மேலை நாடுகளிலோ, தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப் படுவதால், எபோலா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு, உரிய பாதுகாப்பின்றி தம்மை அனுப்புவது, அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட தமது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் மக்களுக்கு உரிமையுண்டு”.நல்லது வியாசன் அவர்களே.அதே அமெரிக்க ராணுவ சிப்பாய்கள் உலகாதிபத்திய நோக்கத்திற்காக ஆப்கானுக்கும் ஈராக்குக்கும் அனுப்பப்படும் போதும் இதே உரிமை கிடைக்குமா?

        இந்த நாட்டில் மக்கள் பணத்தில் டாக்டராகி விட்டாலும் எந்த பொறுப்புமின்றி எங்கே அதிக டாலர் கிடைக்கிறதோ அங்கு போய் தனது தனி மனித சம்பாதிக்கும் உரிமையை நிலைநாட்டலாம்.வரி கொடுத்த மக்கள் வாழும் கிராமத்திற்கு போய் வேலை பார் என்றால் அடக்குமுறை, தனிமனித உரிமைக்கு ஆபத்து என்கிற கூச்சல்.ஆனால் ஒரு மருத்துவரை சமூக பொறுப்போடு உருவாக்கும் போது அவர் தம் நாட்டு ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி உலக மனித சமூகத்திற்கே தன்முனைப்பாக சேவை செய்யும் ஆற்றல் பெறுவார் என்பதை உங்களால் நம்ப இயலாதது தான்.
        “வறிய நாடாகிய நாடுகளில் கியூபாவின் கம்யூனிச இமேஜை தூக்கி நிறுத்துவதற்காகவும், தமது மக்களை ஆபத்தான இடங்களுக்கும் அனுப்புவதற்கு கியூபா போன்ற கம்யூனிச அரசுகள் தயங்குவதில்லை” சரிதான் வறிய நாடு இப்படி இமேஜ் பில்டப் செய்யும் போது பணக்கார அமெரிக்க வல்லரசு ஏன் அதனோடு அதே இமேஜ் பில்டப் காரணமாகவேனும் போட்டி போடுவதில்லை? உங்கள் மண்டையெல்லாம் ஒரு ஆசிட் வாஷ் பண்ணினால் தான் தேறும்.

    • தமிழ்-தாகம்,

      எபோலா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவர்களையும், தாதிகளையும் ஏனைய ஊழியர்களையும் அனுப்புவதால் ஆண்டுக்கு எட்டு பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறது கம்யூனிச நாடாகிய கியூபா. கியூபா ஏதோ உலகுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் இலவசமாக தன்னுடைய செலவில் மருத்துவர்களை எபோலா பரவிய நாடுகளுக்கும் அனுப்புவதாக சிலர் நம்புவதில் உண்மையில்லை. _______

  3. காசா பணமா வியாசன் ? இலவசம் தானே ? வினவு உங்களுக்கு இலவசமாக கம்யுனிச எதிர்ப்பு அவதுறு பிரச்சாரம் செய்ய இடம் அளிக்கும் போது சும்மா வெளுத்து வாங்குங்கள் வியாசன் ? முதலில் mao பனி கவிதை மீதான அவதுறு பிரசாரம் ,அதில் உங்கள் சாயம் வெளுத்பின் இப்போது கியூபா மீது அவ்தூரு பிரச்சாரம். அடைக்கலம் கொடுத்த முதலாளித்துவ நாட்டுக்கு சென்சோற்று கடன் கழிப்பது என்றால் சும்மாவா ? ஜமாயுங்கள் வியாசன் ! உலகாளவிய ஏழை நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்யும் கியூபா என்ன ?!பெத்த தாய் மீது கூடஅவதுறு செய்யலாம் இவரை போன்றவர்கள் தன் சுயநலம் காரணமாக !

  4. //தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப் படுவதால், எபோலா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு, உரிய பாதுகாப்பின்றி தம்மை அனுப்புவது, அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட தமது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் மக்களுக்கு உரிமையுண்டு.//

    தம்பி ரொம்ப தடுமாறூறரு. எபோலா ஓகெ. அமெரிக்காவுல புயல் தாக்குனதுக்கே அவனால ஒழுங்கா நிவாரணம் கொடுக்க முடியலையே. உலகம் முழுசும் ராணுவத்த அனுப்புற தனிமனித சிகாமணீகள் ஆபத்துன்னு வந்தா மட்டும் ஓடிப் போவதேன்

  5. Viyasan’s Defamation : கம்யூனிசத் கட்சியின் பொலிற்பீரோ சொன்னால் போக வேண்டியது தான். .

    Cuban Doctor’s Response in the guardian to Viyasan:

    Speaking before they flew to Liberia, two Cuban doctors told Reuters that competition to join the west African mission – which attracted 15,000 volunteers – had been fierce. “There have been fights breaking out, heated arguments, with some doctors asking, ‘How come my colleague gets to go and I can’t?’,” said Dr Adrian Benítez.

    His colleague Leonardo Fernández said the volunteers had felt compelled to help. “We know that we are fighting against something that we don’t totally understand. We know what can happen. We know we’re going to a hostile environment,” he said. “But it is our duty. That’s how we’ve been educated.”

    http://www.theguardian.com/global-development/2014/oct/22/cuban-doctors-west-africa-fight-ebola

    குறிப்பு : உலகத்தில் உள்ள எல்லாருமே வியாசனை போன்று தன் தாய்நாட்டை, விடுதலை போரை விட்டுவிட்டு சுயநலத்துடன் ஒடி ஒளிவார்கள் என்று கூற முடியாது. எபோலா வைரஸ் என்ன ?வியாசன் பெயரில் கருத்தியல் தளத்தில் வைரஸ் பரவினாலும் அதையும் வெற்றிகொள்ள கம்யுனிஸ்டுகள் தயாராக தான் இருகின்றனர் .

  6. Viyasan’s Defamation ://எபோலா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவர்களையும், தாதிகளையும் ஏனைய ஊழியர்களையும் அனுப்புவதால் ஆண்டுக்கு எட்டு பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறது கம்யூனிச நாடாகிய கியூபா. கியூபா ஏதோ உலகுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் இலவசமாக தன்னுடைய செலவில் மருத்துவர்களை எபோலா பரவிய நாடுகளுக்கும் அனுப்புவதாக சிலர் நம்புவதில் உண்மையில்லை.//

    Fidel Castro Response :
    Additional evidence of a thawing of the cold war enmity came last weekend when an article by Fidel Castro appeared in state media announcing that Cuba would “gladly cooperate with American personnel” on Ebola.

    குறிப்பு :

    அமெரிக்காவுடனான வர்க்க பேதங்களை எல்லாம் கடந்து ” Ebola வைரஸ் விடயத்தில் அதனை அழிக்க அமெரிக்காவுடன் கைகோர்பதில் மகிழ்சியடைகின்றோம் “என்று கூறும் Fidel Castroவின் வாக்கு மூலம் எதனை காட்டுகின்றது ? பணம் சம்பாரிப்பது தான் கியூபாவின் குறி என்றால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அவர்கள் அனுப்பும் மருத்துவ குழுவை வெனிசுலாவிற்கு அனுப்பி அவர்கள் வெனிசுலாவுடன் செய்து உள்ள oil for Health ஒப்பந்தத்தை வலிமைப்படுத்தி அதிக கச்சா எண்ணையை பெறமுடியுமே வியாசன் ? அதனை செய்யாமல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ebola வைரஸ்ஐ அழிக்க/கட்டுபடுத்த அவர்கள் அனுப்பும் மருத்துவ குழுவுக்கும் அதனால் கியூபாவிற்கும் என்ன ஆதாயம் [monitory benefit ] என்று வியாசன் கம்யுனிச எதிர்ப்பு வைரஸ் தான் பதில் அளிக்க வேண்டும் !

  7. Viyasan’s Defamation ://வறிய நாடாகிய நாடுகளில் கியூபாவின் கம்யூனிச இமேஜை தூக்கி நிறுத்துவதற்காகவும், தமது மக்களை ஆபத்தான இடங்களுக்கும் அனுப்புவதற்கு கியூபா போன்ற கம்யூனிச அரசுகள் தயங்குவதில்லை//

    Che Guevara Response:

    1960-ம் ஆண்டில் சே குவேரா ‘ஒவ்வொரு மருத்துவரும் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் மக்களுக்கும், புரட்சிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று வழிகாட்டிய நெறியை பின்பற்றி ஒழுகுகிறார்கள் கியூபா மருத்துவர்கள்.

    குறிப்பு :
    ஆம் வியாசன் .., மானுடம் வெல்ல தன் உயிரையும் கொடுக்க தயங்குவது இல்லை கம்யுனிஸ்டுகள். போவது தன் உயிர் என்றாலும் வெல்வது மானுடம் என்னும் போது அதற்கான தியாகி என்ற பட்டம் கூட கம்யுனிஸ்டுக்ளுக்கு கிடப்பதில் உமக்கு என்ன வலி வியாசன் ? தாய்நாட்டை விட்டு அதன் விடுதலை போரை விட்டு ஓடிபோன வியாசனுக்கு எல்லாம் உலகையே தன் நாடாயை கருதி நாடுநாடாக சென்று தன் உயிரை சிறிதும் மதிக்காது வர்க்க புரட்சி விதையை துவிய எம் தோழன் சே குவேரா பற்றி அவன் வாழ்வு ,மரணம் என்ன தெரிந்து இருக்கும் ?

  8. அண்ணன் சரவணன்/செந்தில்குமரன்/தமிழ்-தாகம்,

    உங்களுக்கு நான் இங்கு விபரமாக பதிலளித்தால் வினவு நிர்வாகிகள் மட்டுறுத்தல் என்ற பெயரில் அப்படியே வெட்டியெறிந்து விடுவார்கள். அதனால் எனது வலைப்பதிவில் பதிலை எதிர்பார்க்கவும். நன்றி.. 🙂

  9. வியாசனுக்கு ,

    Ebola வைரஸ்சை அழிக்கும் விடயத்தில் முதலாளி அமெரிக்காவும் ,தொழிலாளி கியூபாவுடன் கைகோர்க்க தயாராக தான் உள்ளதை the guardian செய்திகள் கூறுகின்றன. நீர் எழுதப்போகும் கட்டுரையில் Ebola வைரஸ்சை அழிக்க ,மானுடம் வெல்வதற்கு அமெரிக்காவும் , கியூபாவுடன் ஒன்றினையும் நிகழ்வில் விவரங்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். இல்லை என்றால் உமது பாஸ் அமெரிக்கவிற்கு கோபம் வந்துவிடபோகின்றது வியாசன் ! மேலும் உமது கம்யுனிஸ்ட் எதிர்ப்பு கருத்துகள் ஓவர் டோஸ் ஆகி உன் தலை அமெரிக்கவே உமக்கு ஆப்பு அடித்து விடபோகின்றது வியாசன் ! பார்த்து பவிசா எழுதுங்க வியாசன் !

    • What knowledge those Cubans bring to the table to fight Ebola with America? Dettol to clean fluids and paracetamol to reduce fever?

      America wants to safeguard its country, for that they have to stop Ebola at its source ie Africa.
      What better place provides cheap doctors then Cuba?

  10. உடன்பிறப்பே,
    சியரா லியோன், காங்கோ,லிபீரியா,நைஜீரியா போன்ற நாடுகளில் சில முதலாளித்துவ பயங்கரவாத சகோதரர்கள் பேராசை கொண்டு காடுகள் அழிப்பு,சுரங்கம் வெட்டுதல் பொன்ற அழிவு வேலைகளைச் செய்து வருகின்றனர். அதனால் அக்காடுகளில் குகைகளில் வாழும் பழம் தின்னி வவ்வால்கள் வெளியில் வர ஆரம்பித்தனராம். அந்த ஜீவன் களை (அந்த மண்ணின் மைந்தர்களாகிய) மலைவாழ் மக்களாகிய சகோதரர்கள் கொன்று தின்றார்களாம். எனவே வவ்வால் உடலிலிருந்த நமது எபோலா வைரஸ் உலகிற்கு அறிமுகமாகிறதாம். இதனால் நம் எல்லோருக்கும் சங்கு ரெடியாம்.

    with luv,
    Suresh

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க