Wednesday, April 21, 2021
முகப்பு அரசியல் ஊடகம் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

-

5 வயது சிறுமி முதல் 50 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் செய்திகள் நாட்டையே உலுக்குகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்று யோசிக்க வேண்டாமா? இதை தெரிந்துகொள்ள ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த நோட்டீசை படிக்குமாறு அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

செய்தித்தாளில் எங்கோ ஒரு மூலையில் அருவெருப்பாக இருக்கும் ஆபாச செய்திகள் இன்று ’கள்ளக்காதல்’ சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கிசு, கிசுக்கள் – ஆபாசமான படங்கள், விளம்பரங்கள் என்று தினத்தந்தி, தினமலர் வகையறா பத்திரிக்கைகளின் முக்கிய செய்தியாகி விட்டன.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஇது போதாதென்று மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன. “5 ரூபாயிலே டைம்பாஸ் ” என்று கூவி கூவி பள்ளி மாணவர்களையும் சுண்டி இழுத்து சீரழிக்கிறார்கள். ஒரு விபச்சார புரோக்கர் மறைவாக செய்யும் தொழிலை, தங்களுடைய லாபவெறிக்காக ’புனிதக் கடமையைப்போல‘ பகிரங்கமாக செய்து வருகிறார்கள் மானங்கெட்ட பத்திரிக்கை முதலாளிகள்.

டைம் பாஸ்
இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன.

இன்னொரு பக்கம் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சினிமாவில் “இரட்டை அர்த்த வசனங்கள்” என்று அருவெருப்பாக பேசப்பட்ட ஆபாச வசனங்கள் இப்போது நேரடியாக – பச்சையாகவே பேசப்படுகிறது. இன்று வெளிவரும் படங்களில் ஏ படம், யு படம் என்று எந்த வித்தியாசமாவது இருக்கிறதா? இல்லை. அனைத்துமே ஆபாசப் படங்கள்தான். இவற்றைத்தான் ‘இப்போதைய டிரெண்ட், மக்கள் விருப்புகிறார்கள்’ என்ற பெயரில் நம்மீதே பழியைப் போட்டு இந்த கேவலங்களை அனைவரையும் ரசிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார்கள் சினிமா கழிசடைகள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புசாராயத்திற்கு அடிமையானவனைப் போலத்தான் சினிமாவில் வரும் இந்த ஆபாசங்களை பார்த்துப் பார்த்து ரசித்தவர்கள் அதோடு விட்டுவிடுவதில்லை. தங்கள் குடும்பத்திலும், நண்பர்களுடனும் அதையே பேசுகிறார்கள், ஆபாசவெறி தலைக்கேறி பின்னர் அதைப்போலவே வக்கிரமாக நடந்துகொள்கிறார்கள். நாட்டில் பாலியல் வக்கிரங்கள் பெருக இவை எல்லாம் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சினிமா தியேட்டருக்கு போய்தான் கெட்டுவிடுவோம் என்று நினைக்க வேண்டியதில்லை. அனைத்துத் தரப்பினரையும் மலிவாக சீரழிவின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது தொலைக்காட்சி. நல்லது கெட்டது அறியாத பச்சைப் பிள்ளைகளையும், வெவ்வேறு கணவன், மனைவியையும் ஜோடி சேர்த்து ஆடவிட்டு, ஊரே பார்த்து ரசிக்கும் வக்கிரத்தை “ஜோடி நெ.1”, “மானாட மயிலாட” என நிகழ்ச்சிகளாக்கி கொடுப்பதையும், இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற மாணவர்கள், இளைஞர்கள் ’தவம்’ கிடப்பதையும் என்னவென்று சொல்வது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

தொலைக்காட்சிகளில் வரும் எந்த விளம்பரத்தையாவது சகிக்க முடிகிறதா? ஆண்கள் கட்டும் லுங்கி விளம்பரத்திலும் பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்றால் இதைவிட வக்கிரமானது வேறு எதாவது இருக்க முடியுமா? கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக மார்க்கெட்டில் குவிந்திருக்கும் விதமான செல்போன்களும், மெமரிகார்டுகளும் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை பிடித்து இழுக்கின்றன. இதன் விளைவு, செல்போனில் உள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் தான் உலகம் என்று இளம்தலைமுறை மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரழிவுகளில் இருந்து இளம் தலைமுறையை மீட்டெடுப்பது யார்? கடுமையான நடவடிக்கைகள் மூலம் அரசுதான் இதனை செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? மேலிருந்து சீரழிவு கலாச்சாரத்தை மாணவர்கள் – இளைஞர்கள், மக்கள் மீது திட்டமிட்டு திணிப்பதே இந்த அரசுதான். படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்களுக்கு குடித்து சீரழிய கற்றுத்தரும் இந்த அரசிடமே தீர்வை எதிர்பார்ப்பது எப்படி சரியானது?

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

இந்த சீரழிவுகள் எல்லாம் எப்பொழுதிருந்து அதிகரித்து வருகிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக 1991-க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் இந்த மேலைநாட்டு சீரழிவு கலாச்சாரத்தையும் இறக்குமதி செய்துள்ளது. இந்த கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமும், இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதன் விளைவாக பாதிக்கப்பட்டு வாழ்கையை இழந்து வரும் உழைக்கும் மக்கள், அதை எதிர்த்துப் போராடாமல் இருக்கத்தான் திட்டமிட்டு கலாச்சார சீரழிவுகளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஏற்கனவே இச்சமூகத்தில் நிறைந்துள்ள ஆணாதிக்கத்தோடு இந்த தெள்ளவாரி கலாச்சாரமும் சேர்ந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும், சமூக சீரழிவையும் தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கான தீர்வை இந்த சீரழிந்த அரசமைப்புக்குள்ளேயே தேடமுடியாது. பாலியல் வக்கிரங்களை பரப்பிவரும் மறுகாலனியாக்க தெள்ளவாரி கலாச்சாரத்தை துடைத்தெறிய இந்த அரசமைப்புக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடித்தான் தீர்க்க முடியும். அதற்கான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம். அரசியல் எழுச்சிக்கு உருவாக்குவோம். அதற்கான தொடக்கமாக மாணவ – மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே

எமது பு.மா..மு சார்பில் வரும் டிசம்பர், 17 ந்தேதி சென்னையில் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்.

protest-against-vulgarity-poster

இதை ஆதரியுங்கள். இப்போராட்டத்தில் எங்களோடு இணையுங்கள்.

பாலியல் வக்கிரங்களைத் தூண்டும்
ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

டிசம்பர், 17, 2014. சென்னையில்

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

எங்களைத் தொடர்புகொள்ள 9445112675.

துண்டறிக்கை

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை

 1. Mr.வினவு,

  அப்படியே இந்த சினிமாவையும் நிறுத்தச் செய்யுங்கள். ரொம்ப புண்ணியமா போவும்.

  அன்புடன்,
  Suresh

 2. தெள்ளவாரி என்பது ஒரு தெலுங்கு வார்த்தை அதற்கு பொருள்:விடியற்காலம் என்பதாகும். அதை தமிழில் தவறான வசவு சொல்லாக பயன்படுத்தி வருகிறோம் என்பது கவனத்திற்கு.

 3. Stopping movies and books will not solve the problem.
  Human urges will make them find an work around.

  Lets see how other countries tackle the issue.

  1.Sport infrastructure for youth is huge
  2. Basket ball,volley ball,foot ball,badminton grounds everywhere
  3. Music is taught in schools
  4.Skating,Swimming.table tennis,tennis,billiards
  5.Running,Marathon,biking
  6.Libraries with all kind of books

  Youth are kept occupied. Infact all these activities are available to all age group.

  India these are available only to riches.And what is available to average joe
  1.Movies
  2.Movie songs
  3.Movie news
  4.TV soaps
  5.Sports on TV ( no playground)
  6.Liquor shops

  These things have to be changed.

 4. டைம் பாஸ் பத்திரிகை முழுக்க முழுக்க விபச்சார புரோக்கர் பத்திரிகை போன்றுதான் என்பதற்கு இணையத்திலும் இலவசமாக சிலர் தரும் பி டி எஃப் டைம் பாஸ் புத்தகங்களை படித்தால் தெரிகிறது. அதில் சரக்கு என்று ஒரு பகுதி அதில் ஜட்டி பிரா மட்டும் போட்ட வெளிநாட்டு நடிகளின் படங்கள் + செய்திகள். இவன் என்ன சொல்ல வருகிறான்? சினிமா சம்பந்தமான அன்றாட பத்திரிகை செய்திகளே வாந்தி எடுக்கும் விதம் வரும்போது சினிக்கூத்து வண்ணத்திரை இவைகள் ஏன்? முழுக்க முழுக்க ஆபாசப் பத்திரிகைகளை வெகுஜன பத்திரிகை ஸ்டைலில் பொதுமக்களிடம் திணித்து இதெல்லாம் சகஜமப்பா … என பேசவைக்கும் வக்கிரம்தான்.

 5. நாம் இயற்கையில் ஆடை இல்லாதவர்கள். இன்னும் கோடி ஆண்டுகள் ஆனாலும் ஆடை இல்லாமல் தான் பிறப்போம். குளிர் வெயில் போன்ற இயற்கை சக்திகளிலிருந்து காத்துக்கொள்ள குறைந்த பட்ச ஆடை அவசியமானது மற்றும் இயற்கையானது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூட நமது உடை குறைந்த பட்சமாகவே இருந்தது. ஆனால் இன்று நாம் இயற்கையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.
  ஆடையில் போட்டி, வர்ணத்தில் அளவில் வகையில் அலங்காரவேலையில் என்று எவ்வளவோ போட்டி போட்டுக்கொண்டு ஆடைகளில் புதைந்து போய்க்கொண்டிருக்கிறோம். தங்கள் ஜோடிகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதிலும் போட்டி. வீடுகளில் பூட்டி வைக்காத போது ஆடைகளில் பூட்டி வைக்கும் அளவுக்கு அருவருப்பான மாற்றங்கள் வந்துவிட்டன. (பெண்கள் தங்கள் வடிவை முகத்தை கண்களைக்கூட மறைத்துக் கொள்ளவேண்டிய அளவிற்குப் தள்ளப்பட்டுவிட்டார்கள்).
  ஆனாலும் நமது அடிப்படை தேவையான மற்றவர்களை இயற்கையாக பார்ப்பது என்பது நம்மைவிட்டு நம் ஜீன்களை விட்டு மறைந்து விடவில்லை. கோயில் சிலைகள் சுவரோவியங்கள் நமக்கு சிறிது ஆறுதலித்து வந்தன. புகைப்படக்கலையும் அச்சுக்கலையும் வீடியோவும் மெய்நிகர் உலகமான இணையமும் நமக்கு இன்னும் கூடுதலான வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றன.

  • ஒரு பெண் மூலமாக தா்னே நீங்கள் பிற்ந்தீர்கள்? உங்கள் தாயையோ சகோதரியையோ மனைவியையோ மகளையோ அவ்வாறு பிற்ர் பார்க்க அனுமதிப்பீரா?

   • Indian,

    எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் முழு உரிமையும் எனது உறவுகளுக்கு இருக்கிறது. எனது அனுமதி தேவையற்றது.
    நடிகர் நடிகைகளின் உறவுகள் அவர்களின் படங்களை அல்லது நடிப்புக் காட்சியை பார்க்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அந்த உறவுகளின் அனுமதியோடுதான் நடிகர் நடிகைகள் இதைச் செய்கிறார்களா என்பதும் எனக்குத் தெரியாது.
    ஆடைகள் சாத்தியமில்லாத அல்லது குறைந்த பட்ச ஆடை மட்டுமே சாத்தியம் என்ற காலம் வரும் என்றால் நாமெல்லோரும் அப்படித்தான் இருப்போம். அப்படிப்பட்ட மாற்றம் வரும் போது இதற்காக யாரும் பெரிதாக அதிர்ச்சியடைய மாட்டார்கள்.

  • யுனிவர்படி,

   தங்களது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தாங்கள் ஏதோ ஒரு முதலாளித்துவ நாட்டில் இருப்பது போன்ற பிரமையில் இங்கே பேசுகிறீர்கள். ஒருவேளை ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்தும் வர செய்யலாம்.
   ————————

   சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை குறைந்த ஆடையிலும் அதற்க்கு பல நூற்றாண்டுளுக்கு முன்பு ஆடையில்லாமலும் நாம் வாழ்ந்திருந்தாலும் இன்றைய நிலைமை என்பது வேறு.

   நம்பூதிரி பாடுகள் உள்ளிட்ட ஆதிக்க சாதி வர்க்கங்கள் முழுக்க உடையணிந்திருந்த காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உடையனிய மறுக்கப்பட்டனர். அதையும் மீறி உடைகளை அணிபவருக்கு குறிப்பாக பெண்களுக்கு முலைவரி உள்ளிட்ட கேடுகெட்ட வரிகளும் கசையடி போன்ற தண்டனைகளும் அந்த நாகரிக சமூகம் வழங்கியது.

   உடையணிவது மனித சமூகத்தின் ஏனைய மாற்றங்களோடு சேர்ந்து முன்னேறிய வளர்ச்சியாகும். அதை ஏனைய விலங்குகளோடு ஒப்புமைப் படுத்த இயலாது. அதே நேரத்தில் அது போல சமூக வளர்ச்சி இல்லாத அதாவது புராதன பொதுவுடைமை சமூக மக்களும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மட்டுபடுத்தவும் முடியாது. இங்கே பிரச்சினை நாகரிகம் உள்ள மனிதர்கள் விலங்குகளுக்கு உடையணிந்து அழகுப் பார்ப்பதும், சமூகத்தின் சக மனிதர்களுக்கு உடையைத் தடை செய்வதும் ஆகும்.

   அது போல, உடையணிவது நாகரிகம் அதாவது உடலை மறைக்கும் அளவிற்கு உடையணிவது என்பது போய், வெறும் உடலை இரசிப்பதற்காக என்னும் அளவில் தான் இன்றைய சினிமாக்கள் முதல் பத்திரிக்கைகள் வரை காண்பிக்கின்றன.

   ஒருபுறம் பெண்ணை ஒரு சக மனுசியாய் பார்க்க மறுப்பதும், கற்பு,தெய்வம் போன்ற பிற்போக்குத்தனமான கிராமத்துப் சமூக பொருளாதாரம் சார்ந்து விழிப்பதும் மறுபுறம் பெண்ணுடல் என்பது நுகர்விற்க்காக மட்டுமே அதாவது ஒரு பண்டம் மட்டுமே என்பது போன்ற முதலாளித்துவ சீரழிவுகளும் இன்று பெண்ணை அதுவும் 1 வயது பிஞ்சுமுதல் 60 வயது மூதாட்டி வரை வெறும் உடல் சார்ந்த நுகர்வாக மாற்றி உள்ளன. முதலாளித்துவம் பெண்களை வெறும் பண்டமாக மாற்றினாலும் இங்கு உள்ள பார்ப்பனியமயமாக்கப்பட்ட நிலபிரபுத்துவமோ பெண்ணை கடித்துக் குதறி விடுகிறது.ஒரு வாரத்திற்கு முன்பு 4 வயதேயான பச்சிளங் குழந்தயை 4 சங்கராச்சாரிகள்(திட்ட வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை) குதறிக் கொலை செய்து விட்டனர்.

   இந்த நிலையில், ஒருபுறம் பக்தி,கற்பு,பெண்,குடும்ப விளக்கு,தெய்வம் போன்ற பிற்போக்குத்தனங்களை அம்பலமாக்கும் அதே வேளையில் பெண்ணுடலை வெறும் நுகர்வு சார்ந்த பண்டமாக மக்கள் மீதி திணிப்பதையும் நாம் எதிர்க்க வேண்டும். தங்களுடைய பின்னூட்டம் இதையேதும் கிஞ்சித்தும் உரசிப் பார்க்காமல் தான்தோன்றிதனமாக உள்ளதை மீள்பார்வைக்கு உட்படுத்தவும்.

   நன்றி.

   • சிவப்பு அவர்களுக்கு,

    நீங்கள் குறிப்பிடும் ‘நாகரீகம்’ என்பதே நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் வந்து விட்ட நிலைதான்.
    விரிவான பதிலை நாளை எழுதுகிறேன். நன்றி.

    • நண்பர் யுனிவர்படி,

     இயற்கையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்பதை விட இயற்க்கையானப் பொருளாதாரத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது தான் சமூக மாற்றத்திற்க்கான அடிப்படை. ஆடு மாடுகளைப் போல வெறுமனே இயற்கைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்ந்த மனித சமூகம், அதைக் கடந்து இயற்கையைக் கட்டுபடுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய அறிந்து கொண்டது முதல் மனித சமூக வளர்ச்சி தொடங்குகிறது.தாங்கள் கருதும் அந்த சமூக அமைப்பு முறையை நாம் கடந்து வந்து விட்டோம்.

     என்னுடைய ஒரேக் கேள்வி இது தான். ஆபாச சீரழிவுகளை கொட்டும் இது போன்ற பத்திரிக்ககைகளைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? அதை எதிர்க்க வேண்டுமா இல்லை அப்படியே விட்டு விடுவதா? பாலியல் சுதந்திரம் என்பது வேறு கட்டற்ற பாலியல் என்பது வேறு. பாலியல் சுதந்திரம் இல்லாத ஒரு தேசத்தில் கட்டற்ற பாலியலைப் பற்றிப் பேசுதல் என்பது சீர்கேட்டில் தான் முடியும் என்பது எனது துணிபு மற்றும் இன்றைய நிகழ்ச்சிபோக்கும் ஆகும். அதற்க்கு கட்டியம் கூறுவது போல தான் அன்றாட நிகழ்வுகள் நம் நாட்டு பெண்கள் மீது பாய்ந்து குதறுகின்றன.

     நமக்குத் தேவை பாலியல் சுதந்திரம் மட்டுமே மாறாக கட்டற்ற பாலியல் சுதந்திரம் அல்ல. அதற்கே தேவை ஒரு சமூக மாற்றம்.

     நன்றி.

     • நண்பர் சிவப்பு,
      இயற்கையானப் பொருளாதாரத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்று கூறினாலும் பொருள் ஒன்று தான்.

      நான் கருதும் அந்த சமூக அமைப்பு முறை என்பது விலங்குகளைப் போன்ற முற்றிலும் நிர்வாணமானதல்ல, குறைந்த பட்ச ஆடைத்தேவையுடையது, அதை நாம் கடந்து வந்து விட்டது மட்டுமல்ல வெகு தூரம் சென்று இலக்கில்லாத பாதையில் வெறிபிடித்து ஒடிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் அந்த பழைய அமைப்புமுறைக்கு நாம் போக வேண்டிய நிலை வராது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. திரும்பப் போவது தான் முழுமையான தீர்வு. இந்த மாற்றத்தை படிப்படியாக ஏற்படுத்துவதன் மூலம் நமக்கிருக்கும் மனத்தடையை வெல்லலாம். நாமாக திரும்பாவிட்டாலும் இயற்கையே நம்மை திருப்பி அனுப்பலாம்.

      இன்றைய பத்திரிக்கைகளின் மற்றும் ஊடகங்களின் பெரும்பகுதி தேவையற்ற வீணான அரட்டைச் சீரழிவு தான். (அவற்றை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது பணத்தை அவற்றிற்காக செலவளிப்பதில்லை.) இதுதான் பிரச்சனை. இதைத்தான் நாம் எதிர்க்க வேண்டும். அதேசமயம், கூடுதலான ஆடையில்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகளின் படங்களை ஆபாசம் என்று ஒதுக்கத்தேவையில்லை. அவற்றிற்கென்று ஒரு தேவை இருக்கிறது என்பது தான் எனது ஆரம்ப பின்னூட்டம் சொல்வது. எல்லா பாலினத்தாருக்கும் இது பொருந்தும். வசதிபடைத்த நாடுகளைப்போல தெளிவாக இதைச் செய்ய முடியாததால் டைம் பாஸ் போன்ற பதிப்புக்கள் வருகின்றன. இதை எதிர்த்துப் போராட்டம் செய்வதால் தற்காலிகமாக சில மாற்றங்கள் வருவது உறுதி. ஆனால் பெரிதாக பலனொன்றுமில்லை.

      குறைந்த பட்சத்திற்குக் கூடுதலான ஆடை ஆண்டைகளையும் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் வேறுபடுத்திக் காண்பதற்குப் பயன்பட்டிருக்கிறது என்று காண்கிறோம். இன்றும் இது வர்க்க வேறுபாட்டை நிலை நிறுத்த உதவுகிறது. ஆகையால் சமத்துவத்தை மற்றும் பொதுஉடமையை வேண்டுவோர் குறைந்த பட்ச ஆடைக்கு திரும்புவதைப் பற்றிய செயல்திட்டத்தையும் தங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொண்டு செயல்படவேண்டும்.

      ஆடைகளின் பெருக்கத்தினால், அதன் அளவின், வகைகளின், வண்ணங்களின் பெருக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடு அளவிட முடியாதவை. பருத்தி செம்மறி ஆடுகள் போன்றவைகள் அதிக அளவில் சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. வேதிய சாயங்கள் ஆறுகளையும் நிலத்தடிநீரையும் நிலங்களையும் பாழாக்குகின்றன. உழைக்கும் வர்க்கம் தேவையில்லாமல் உழைத்து உழைத்து நம்உலகை நம் பொதுஉடமையைப் பாழாக்கிக்கொள்வது கொடிதினும் கொடிது. இந்த விசச்சுழற்சியிலிருந்து உழைக்கும் வர்க்கம் விடுபடவேண்டும்.

      பாலியல் சுதந்திரம், கட்டற்ற பாலியல் என்பவற்றை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் என தெரியவில்லை.

      • நண்பர் யுனிவர்படி,

       //திரும்பப் போவது தான் முழுமையான தீர்வு//

       தாங்கள் இதை புராதன பொதுவுடைமை சமூகத்திற்கு திரும்ப போவது தான் தீர்வு என்று தானே சொல்கிறீர்கள். ஆனால் ஒரு வட்டம் போல திரும்ப அதே உற்பத்தி,அதே கலாசாரம் என்று போவதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் பொதுவுடைமை தான் தீர்வு என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த புராதன என்ற இணைப்பு சொல்லிற்கு பின்னால் ஏகப்பட்ட சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாம் முன்னோக்கி தான் செல்ல முடியுமே தவிர பின்னோக்கி அல்ல. அது தேவையும் இல்லாதது.

       அரைகுறை ஆடையுடன் இருக்கும் நடிகை படங்கள் எதை முன்னிருத்துகின்றன. //ஆனாலும் நமது அடிப்படை தேவையான மற்றவர்களை இயற்கையாக பார்ப்பது என்பது நம்மைவிட்டு நம் ஜீன்களை விட்டு மறைந்து விடவில்லை//
       உண்மை தான் , ஆனால் உண்மையில் இன்றைய நிலையில் ஒருப் பெண் அப்படி இருந்தால் என்ன நடக்கும் இந்த நாட்டில். இப்படி இயற்கையாய் பார்ப்பது என்பது இன்னும் விலங்கினத்தில் இருக்கிறதே. அங்கு காம இச்சை வெறும் மறு உற்பத்தி என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. அது அவைகளின் உற்பத்தி முறையை முன்னிறுத்துகிறது. இயற்கையான உற்பத்தி முறைக்கும் இன்றைய உற்பத்தி முறைக்கும் இடைவெளி கற்பனை செய்ய முடியாதது. இனி யார் நினைத்தாலும் மீண்டும் அங்கு செல்ல முடியாது.

       //ஆகையால் சமத்துவத்தை மற்றும் பொதுஉடமையை வேண்டுவோர் குறைந்த பட்ச ஆடைக்கு திரும்புவதைப் பற்றிய செயல்திட்டத்தையும் தங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொண்டு செயல்படவேண்டும்.//
       இது தங்களது தவறான பார்வை. உண்மையில் உடலுக்குத் தேவையான உடைகள் அணிவதால் வரும் சுற்றுசூழல் சீர்கேடு திட்டமிட்ட சமூக உற்பத்தியில் இருக்காது. உழைக்கும் வர்க்கம் உருவாக்கும் உடைகளை அவர்களே அணியும் சூழல் வரும் பொது அவர்களது உழைப்பு வீணாகாது.

       பாலியல் சுதந்திரம் பற்றிய எனது புரிதலை நாளை வைக்கிறேன்.

       நன்றி.

       • நண்பர் சிவப்பு,

        // முன்னோக்கி தான் செல்ல முடியுமே தவிர பின்னோக்கி அல்ல//

        ஆடையை அணிவது முன்னோக்கி செல்வது என்றும் அதைக் கழட்டுவது பின்னோக்கி செல்வது என்றும் சொல்வதில் ஒரு பொருளுமில்லை. இது பரிமாணம். முன்னோக்கியே எவ்வளவு தூரம் போவீர்கள். எங்கும் நிற்காமல் முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கப்போகிறோமா. வாய்ப்பேயில்லை.

        // இது தங்களது தவறான பார்வை//

        பாதுகாப்பான பக்கத்தில் இருப்பதற்காக செய்யும் தவறு சரியே. சுற்றுசூழல் சீர்கேடு திட்டமிட்ட சமூக உற்பத்தியில் இருக்காது என்கிறீர்கள். ஒரளவுக்கு உன்மைதான். ஆனாலும் நமது இன்றைய அளவிலான ஆடைத் தேவைகளே அதிகம் தான். (மற்றவைகள் கூடத்தான்) உங்கள் மொழியில் நாம் குறிப்பிட்ட அளவு பின்னோக்கிப் போகாமல் நமக்கு எதிர்காலமே இல்லை. இன்று அளவுக்கு மீறி மணல் கொள்ளை நடப்பதை நண்பர்கள் எதிர்த்து போராடுகிறார்கள். அளவுக்கு மீறிய கட்டடங்கள் கட்டப்படுவதால் தானே இது நடக்கிறது. அதை நிறுத்தாமல் மணல் இழப்பை எப்படி தடுக்கமுடியும். பொதுவுடமை சமூதாயத்தில் கூட பொதுவுடமைதானே என்று எல்லோருக்கும் மாளிகைகள் கட்டிக்கொள்ள முடியுமா. அல்லது முதலில் எல்லாருக்கும் 1BHK பிறகு 2BHK, பிறகு 3BHK, பிறகு 4BHK என்று போக முடியுமா.

        • நண்பர் யுனிவர்படி,

         பாலியல் சுதந்திரம் பற்றி,

         இந்தியாப் போன்ற நாடுகளில் பாலியல் கல்வி என்றுக் கூறினாலே ஏதோ நாம் தகாதது கூறியது போல நடுங்குகிறார்கள். சிறிய வயதில் இருந்து நீ அவன்கிட்ட பேசாத, நீ அவகிட்ட பேசாத என்று கடிவாளம் போட்டு உணர்சிகளை அடக்குமாறு வளர்க்கப்படும் குழந்தைகள், பின்னர் , முதலாளித்துவ சூழலில் வளர தென்படும்போது அல்லது முதலாளித்துவ உற்பத்தியை நுகரும் பொது , குறிப்பாக பெண்களைப் பண்டமாகத் தான் பார்கிறார்கள்.ஒரு புறம் பாலியல் சுதந்திரமின்மை மறுபுறம் பாலியலே ஒரு பண்டமாய். இரண்டும் சேர்ந்து என்ன செய்யும்? 1 முதல் 6௦ வயது வரை உள்ள அத்துணைப் பெண்களையும் குதறவே செய்யும்.

         //எங்கும் நிற்காமல் முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கப்போகிறோமா. வாய்ப்பேயில்லை//
         உண்மையில் தங்களது கருத்து ஏற்புடையதே. அதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் அது இன்றைய நிலைமைக்கு பொருந்துமா என்பது தான் கேள்வி.
         நான் சொல்ல வந்தது, ஒரு பொது உடைமை சமூகம் அமையும் வரை வர்க்கங்கள் இருக்கும் வரை முரண்பாடுகள் இருக்கும் வரை , வேறு வழியில்லை முன்னேறி செல்ல தான் வேண்டும். நான் இன்றைய நிலைமையை பற்றி தான் பேசிக் கொண்டு உள்ளேன். இன்று குறைந்த உடைஎன்பது ஆபாசமாக தான் பார்க்கபடுகிறது. அது மட்டுமல்லாமல் குறைந்த உடையணிந்த பெண்கள் எளிதில் காம வசப்படுவார்கள் என்ற முட்டாள்தனமான பிற்போக்கான கண்ணோட்டம் உள்ள நாட்டில், பாலியல் சசுதந்திரத்தில் உலகிலேயே மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ள நாட்டில், இது போன்ற பத்திரிகைகள் எதற்காக இது போன்ற படங்களை முன் அட்டையில் போடுகின்றன. ஆணாதிக்க வெறியின் உச்சக்கட்ட நாடுகளில் ஒன்றான இங்கே இது போன்ற ஆபாச சீரழிவுகள் பெண்களை குதறுவதற்கே உதவும். அது மட்டுமல்லாமல் ஆண் மகனிடம் பேசக் கூடாது, பாலியல் துன்புறுத்தல் செய்யும் பொது கூட எதிர்க்காமல் , அண்ணா என்று கைக் கூப்பித் தொழ வேண்டும் என்பது போன்ற பிற்போக்கு சமாச்சாரங்கள் உள்ள நாட்டில் நமது முழக்கம் இது போன்ற ஆபாச சீரழிவிற்கு எதிராக இருந்து தான் தீர வேண்டும். தாங்கள் சொல்வது போல, இது பெரிய புரட்சிகரமான நடவடிக்கை அல்ல என்றாலும் இன்றையக் கட்டத்தில் தேவையான ஒரு சீர்திருத்தமே.

         உண்மையில் நாம் அனைவரும் உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஊதாரித் தனமாக செலவு செய்கிறோம் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் அல்ல.ஒரு சோசலிச சமூகத்தில் மக்களுக்குத் தேவையான அளவிற்கு தான் அனைத்தும் உற்பத்தி செய்யப்படும் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. தோழர் லெனின் கூறியதாக எங்கோ படித்த வரி, “அனைவருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை ஒருவருக்கும் கேக் கிடையாது.” இங்கே பெரும்பான்மையான அடித்தட்டு மக்களுக்கு உடுத்த நல்ல உடையில்லை. ஆனால், நான் சம்பாரித்து என்று கூறி 2௦, 3௦ உடைகளை வாங்கி அடுக்கி வைக்கின்றனர்.அவர்களுக்குத் தங்க வீடில்லை. இங்கே கட்டிடங்கள் கட்டி விற்பனை ஆகாமல் ரியல் எஸ்டேட் டல்லாக உள்ளது என்று கூப்பாடு போடுகிறார்கள்.

         தாங்கள் கூறியது அத்துனையும் சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது என்று நினைக்கிறன்.அதற்க்கு முதலில் இந்த உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையையொழிக்க வேண்டும்.அதை ஒழிக்காமல் நாம் நினைப்பது நடக்க சாத்தியம் இல்லை.

         நன்றி.

         • நண்பர் சிவப்பு,

          1.//பாலியல் சுதந்திரம்//

          இதைப் பற்றி உங்கள் பதில் தெளிவாக இல்லை. பரவாயில்லை. பாலியல் கல்வி இல்லாதது மற்றும் ஆண் பெண் பழுகிக்கொள்ள வாய்ப்புக்கள் குறைவாக இருப்பது ஆகியவையை பாலியல் சுதந்திரமின்மையாக நீங்கள் சொல்ல வருவதாக தெரிகிறது.
          பாலியல் கல்வி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய குறை ஒன்றுமில்லை. ஏனென்றால் இது நம்மில் இயற்கையாக இருக்கும் உள்ளுணர்வுதான். ஆனால் ஆண் பெண் பழுகிக்கொள்ள வாய்ப்புக்கள் குறைவாக இருப்பது ஒரு பிரச்சனைதான். சாதிப் வர்க்கப் பிரிவினையை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் இது அமலில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமில்லை. இந்த பிரச்சனையையும் நாம் எதிர்கொள்ளவேண்டும்.
          ஆண்களோ பெண்களோ பண்டம் என்ற வார்த்தையே சரியானதில்லை. இதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த உடை என்பது ஆபாசமாக பார்க்கப் படுவதும் தவறே. இந்த விதத்தில் தான் இந்த முயற்சியை தவறு என்கிறேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒரு நாளும் வினவின் பதிவுகளுக்கு ‘Indian’ நல்லவிதத்தில் பின்னூட்டமிட்டதில்லை. ஆனால் இதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார் என்றால் நமது இந்த முயற்சி தவறானது என்று விளங்கிக்கொள்ளலாம். ஆணாதிக்க வெறி போன்ற பிரச்சனைகளை பெண்கள் தங்களை மேலும் விடுதலைப்படுத்திக் கொள்வதன் மூலம் தான் எதிர் கொள்ளமுடியும். முடங்கிக்கொள்வதில் இல்லை. இதைப் புரிந்து கொள்வது சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் ஆண்களின் வழியிலேயே எதிர்கொண்டு இதை சாதிப்பதே சிறந்த வழி. இப்படித்தான் மேற்குலகில் பெண்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்தார்கள். அங்கே ஆண் பெண் படங்களைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த நிலை எப்படி வந்தது. கண்டிப்பாக இது போன்ற போராட்டங்களினால் அல்ல. பெண்கள் தங்கள் உரிமையை முழுமையாக நிலை நாட்ட ஆண்களைப் போலவே ஆடைகளே இல்லாமல் நடிக்கவும் படமெடுக்கவும் முன் வந்ததால்தான். இதை பெண்கள் ஆண்களின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு பலியாகிவிட்டதாக வாதாடலாம். அது தவறு. ஆண் பெண் இருவரும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு பலியாகியிருக்கிறார்கள் என்ற வகையில் இதில் சிறிது உன்மையிருக்கிறதே ஒழிய இதில் பெண்கள் பலியாவதென்று ஒன்றும் இல்லை. ஆண்களை ஈர்ப்பதென்பது பெண்களின் இயற்கை. சாதிப் வர்க்கப் பிரிவினையை பாதுகாத்துக் கொள்வதற்காக போடப்பட்ட செயற்கையான தடைகளால் தான் பெண்கள் இழுத்துமூடிக்கொள்ள தங்களை மறைத்துக்கொள்ள கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஆபாசம் என்று கற்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனத்தடையை முதலில் பொதுநல வர்க்கமாகிய நாம் எதிர்கொள்ளாவிட்டால் பெண்களின் பாடு கடினமே. அவர்கள் தனித்துவிடப்பட்டு வெறித்தனங்கள் தொடரத்தான் செய்யும்.
          தேவைக்கேற்ப மேலும் பகிர்ந்து கொள்வோம்.

          2.
          நான் கூறியது அத்துனையும் சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது தான் நான் சொல்லவருவது. இதில் உங்களுக்கு எதற்கு சந்தேகம். உற்பத்தி சாதனங்களின் மற்றும் இயற்கை வளங்களின் தனியுடைமையையொழித்தால் மட்டுமே மனித இனத்திற்கு எதிர்காலம் இருக்கிறது. எனவே இதைப்பற்றி சுயநல தனியுடைமைவாதிகளுக்கு புரிதலை உண்டாக்க வேண்டும். தேவைப்படும் அளவிற்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் படவேண்டும். இந்த சவாலை ஏற்று நடத்துவதற்கு நாம் நம்மை மேலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வீண் வேலைகளில் நமது ஆற்றலை விரயமாக்கிக் கொள்ளக்கூடாது.

 6. […] இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில், வரும் 17-ம்தேதி நடத்த உள்ளதாக அறிவித்த…. தவிர்க்க முடியாத காரணத்தால் […]

 7. அமெரிக்காவில் ஆபாசம் உற்பத்தி செய்யவும், விநியோகம் செய்யவும் தனியாக இண்டஸ்ட்ரி வைத்துள்ளார்கள். வெகுஜன பத்திரிகைகள், சினிமா, தொலைகாட்சி போன்றவை இதில் ஈடுபடுவது இல்லை. இந்திய சூழலில் உள்ள பிரச்சனை வெகுஜன சினிமா ஆபாசம் உற்பத்தி செய்கிறது. அதை வெகுஜன பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணைய தளங்கள் ஆகியவவை விநியோகம் செய்கின்றன. இதனால் மறைந்து, ஒளிந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. இதல்லாம் சாதாரணமப்பா என்ற எண்ணம் உருவாகி விடுகிறது.

  • ஹா! இந்த மறுமொழியை மீண்டும் படித்தால், இந்தியாவில் தனியாக ஆபாச இண்டஸ்ட்ரி உருவாக்க வேண்டும் என்ற பொருள் வருகிறது! நான் அப்படி சொல்ல வரவில்லை. இரண்டு சூழலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட விரும்பினேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க