Saturday, October 31, 2020
முகப்பு செய்தி TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?

-

ஐ.டி ஊழியர்களே அணி திரளுங்கள் !

ஐ.டி துறை நண்பர்களே,

டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு அதனை படிப்படியாக நடத்தியும் வருகிறது.  இதைப் படிக்கும் நீங்களோ, உங்கள் நண்பரோ இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; பாதிக்கப்படுபவர் யாராயிருந்தாலும் அவர் நம்முடைய சக ஊழியர். இது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் அபாயம்.

பட்டப்படிப்பின் கடைசி செமஸ்டரிலேயே காலேஜ் கேம்பஸிலிருந்து தூக்கிச் சென்று, 35 வயதுக்குள் நமது இளமையை உறிஞ்சி விட்டு சக்கையாகத் தூக்கி எறிகிறது டி.சி.எஸ். குடும்பமும் குழந்தைகளும் கடன்களும் நம் முன்னால் வரிசை கட்டி நிற்க, திடீரென்று நாம் “திறமையற்றவர்கள்” என்று வெளியே வீசப்படுகிறோம். ஒரு ஃப்ரெஷராக வேலை தேடியபோது நம் மீது இப்படியொரு முத்திரை இல்லை. இது நமது பத்து ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு. குதிரை கீழேயும் தள்ளி குழியும் பறித்ததைப் போல!

டி.சி.எஸ் பிங்க் ஸ்லிப்
காலேஜ் கேம்பசிலிருந்து தூக்கிச் சென்று, 35 வயதுக்குள் நமது இளமையை உறிஞ்சி விட்டு சக்கையாகத் தூக்கி எறிகிறது டி.சி.எஸ்

இந்த பணிநீக்கம் எத்தனை பேரை தற்கொலைக்குத் தள்ளும், எத்தனை பேரை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும், எத்தனை விவாகரத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதெல்லாம் கார்ப்பரேட் தலைமை அறியாததல்ல. இருந்தாலும் ஒவ்வொரு காலாண்டிலும் லாபத்தை அதிகரிப்பது மட்டும்தான் அவர்கள் இலக்கு. நம் உயிரோ, வாழ்க்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

துயரம் என்னவென்றால், இந்த அநீதியான வேலைநீக்கத்தை,  எதிர்க்கவே முடியாத இயற்கைப் பேரழிவு போல எண்ணி நாம் அஞ்சுகிறோம். பலவீனமான ஒரு பெண் கூட தன் மீதான பாலியல் வல்லுறவை எதிர்த்துப் போராடுகிறாள். ஆனால், நம்மில் பலர் பக்கத்து கியூபிக்கிளில் கொலை விழுந்தாலும் தலையைத் திருப்பிப் பார்ப்பதற்குக் கூட அஞ்சுகிறோம்.

ஐ.டி துறை சங்கம்
நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.

என் வேலை, என் வேலை என்று 25,000 பேரும் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தனித்தனியாக முயற்சிக்கும் வரையில் நாம் இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியாது. வேலையையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது.

சென்னையில் நாம் 50,000 பேர். இந்தியாவில் 3 லட்சம் பேர். நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.

சங்கம் வைத்தால் புரொடக்டிவிட்டி பாதிக்கும், எஃபிஷியன்சி குறையும் சங்கம் என்பது ஒழுங்கீனத்தின் இன்னொரு சொல் என்றெல்லாம் நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால் டாடாவின் எல்லா ஆலைகளிலும் தொழிற்சங்கம் இருக்கும்போது நாம் மட்டும் ஏன் அமைக்கக்கூடாது? நம்மை சங்கம் வைக்கக்கூடாது என்று கூறும் இந்த கார்ப்பரேட்டுகள்தான் நாஸ்காம், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசாம் என சங்கங்களாக இணைந்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங், ஐ.டி செக்யூரிட்டி பற்றித் தெரிந்த நாம், இனி யூனியன் நெட்வொர்க்கிங், ஜாப் செக்யூரிட்டி பற்றியும் கற்றுக் கொள்வோம். இதைச் செய்யாததுதான் டாடா நம்மை கருவேப்பிலை போல தூக்கி எறிவதற்கும், கண்ணீருடன் நாம் வெளியேறுவதற்கும் அடிப்படை.

19-ம் நூற்றாண்டின் தொழிற்சாலைக் கூடங்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்த்து உருத்தெரியாமல் சிதைந்து போன அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாளிகள் தங்களது உரிமைகளை போராடித்தான் பெற்றார்கள். இன்று நாம் அனுபவிக்கும் 8 மணி நேர வேலை நாள், வார விடுமுறை, பி.எஃப் மற்றும் இதர உரிமைகள் எல்லாம் இப்படி போராடிப் பெற்றவைதான்.

மோடி - டி.சி.எஸ்
நம்மை சங்கம் வைக்கக்கூடாது என்று கூறும் இந்த கார்ப்பரேட்டுகள்தான் நாஸ்காம், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசாம் என சங்கங்களாக இணைந்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.

சங்கம் தொடங்கினால் வேலை போய் விடும்; வேறு எங்கும் வேலை கிடைக்காது என்பன போன்ற பூச்சாண்டிகள் புதியவை அல்ல. இப்படிப்பட்ட மிரட்டல்களையெல்லாம் மீறித்தான் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். நிறுவனத்தின் வலிமையை நினைத்து அஞ்சுவதை விட்டொழித்து நம்முடைய வலிமையை பற்றி சிந்திக்க வேண்டும்.

மற்ற துறைகளிலெல்லாம் தொழிலாளிகள் போராடினால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டும் பாதிப்பிருக்கும். ஆனால், நாம் இங்கே அடித்தால் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகம் முழுதும் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கு வலிக்கும்.

நம்மால் அப்படி திருப்பி அடிக்க முடியும் என்று நம்பிக்கை கொள்வது ஒன்றுதான் நம்முடைய உரிமைகளையும் வேலைகளையும் பாதுகாப்பதற்கான முதல்படி. அது சாத்தியம் என்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

இதே சென்னையில் சங்கமே கட்ட முடியாது என்று கூறப்படும் இடங்களில் எல்லாம், ரவுடிக் கூடமான ஜேப்பியார் கல்லூரி தொடங்கி, SEZ வரையிலும் அதை செய்திருக்கிறோம். எந்த உரிமைகளும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட சங்கம் கட்ட முடியும், எதிர்த்து போராட முடியும் என்று காட்டியிருக்கிறோம்.

அது போல ஐ.டி துறை ஊழியர்களையும் இணைத்து சங்கம் கட்டுவதற்கு பு.ஜ.தொ.மு உங்களை அழைக்கிறது. சட்டப்படி இது சாத்தியமா? நடைமுறையில் இதை எப்படி செய்து காட்டுவது?

உங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடைபெற, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் (vinavu.com) இணைந்து நடத்தவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் தேதியும், இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஐ.டி துறை ஊழியர்களுக்கு கைகொடுக்கும் வினவு, புஜதொமுவுக்கு நன்றி.

  ஐ.டி நண்பர்களே!

  ஆன்-சைட் ஆப்பர்சுனிட்டி குறைந்த போது, நமக்கு நேரம் சரியில்லைனு தேத்திக்கிட்டோம்.
  பேருந்து போக்குவரத்து, அலுவலக உணவு, ஜிம் எல்லாத்துக்கும் கூடுதல் பணம் பிடிப்போம் என்ற போது, சரின்னு ஏத்துக் கிட்டோம்.
  பல பேரு பேங்க் எக்சாம், இயற்கை விவசாயம், கன்சல்டண்ட் என்று வேறு ரூட் போடும் போதும் நம்பிக்கையாக இருந்தோம்.

  இப்போ அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கு.

  90-கள்ள ஆரம்பிச்ச ஐடி பூம், ஒய்2கே.ல பிக் அப் ஆகி, டாட் காம் பூம்ல தளைச்சி, அப்புறம் ஜாவா, டாட் நெட்னு அப்கிரேட் ஆகி, கடைசியில பெர்ஃபார்மன்ஸ், ஹார்ட் ஒர்க்னு ஓடிக்கிட்டிருந்திச்சி.

  இப்போ, இதெல்லாமே கானல் நீரா காணாம போறதுதான், அப்படி இல்லாம ஆகறதுக்கு 10 நாள் அவகாசமோ, ஒண்ணிரண்டு மாத கெடுவோதான் கிடைக்கும்னு தெரிய ஆரம்பிச்சிருக்கு.

  சுதாரிச்சிப்போம்.

 2. // நம்மை சங்கம் வைக்கக்கூடாது என்று கூறும் இந்த கார்ப்பரேட்டுகள்தான் நாஸ்காம், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசாம் என சங்கங்களாக இணைந்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறார்கள். //

  சரியான வாதம்.

  • The blog-post has ben well written We fully suport the suggestion.

   Mr.Ganesh: This is not the place for discussing employment iopportunities for unemployed IT grads and students. Supply far exceeding the demand is the basic cause: lakhs have chosen CSE and IT when only thousands have scope.

 3. On Day 1 Most of the IT companies force employees to sign declaration stating that they wont join or form union . This can be used as a threatening tool to dismiss them if they show interest in Unions . I am not sure whether this declaration is legally allowed under labor rules

  • Kailash,

   Vinavu has already written about this question in its facebook page ( https://www.facebook.com/VinavuCombatsLayoff ).

   Can company take any action if employee joins Union ?
   ———————————————————————-
   Question received in E-mail and our answer

   Hi,
   I have read your article on Unions in IT Companies . Many IT Companies while joining gets a signed declaration from employee stating he wont join any union or create any union. Is this agreement legal ? Can company take any action if employee joins Union ?
   Regards,
   xxxxxx

   Dear xxxxxx,
   That is illegal and unconstitutional. It is like getting someone to sign on bond paper stating that he/she is a bonded labour. The person (here, the IT employee) who signed is not at fault,the person (here IT company) who made him/her sign will face legal action In industrial sector also employers get such documents signed by
   workers to frighten them. But, such agreements can not be produced in any court and are legally not valid. IT companies also resort to similar tactics which is only an empty threat.
   Forming an union is a fundamental right guaranteed by Indian constitution (article 19 c) which can not be taken away by any individual or company. It can be only restricted, “in the interests of the sovereignty and integrity of India or public order or morality” by the government by making a law ( http://indiankanoon.org/doc/1218090/ ) TCS or any IT company is not government The agreement they get from employees is not a law And employment in a IT company does not involve sovereignty and integrity of India or public order or morality Hence, you can rest assured that employees’ right to form unions is intact, irrespective of what the IT companies made them sign.

 4. அடிமைத்தனம் எங்கிருந்தாலும் ஒழிக்கப்படவேண்டும்.அதுவும் கிட்டத்தட்ட கொத்தடிமைத்தனம் தான் IT தோழர்களின் நிலை எனும்போது நிச்சயம் அவர்கள் அணிதிரள வேண்டும்.தம்மை ஒரு தொழிலாளி எனும் சுய அடையாளம் கண்டு கொள்வதே அவர்களிடம் இன்னும் இருக்கிற உளவியல் சிக்கல்.சாலையில் நின்று போராடுபவர்களை ஒரு கீழான பார்வையில் பார்த்து பழக்கப்படுத்தபட்டதனால் அது அவர்களுக்கு சிரமமாக தோன்றலாம். அழுக்கான ஆலையில் யுனிபார்ம் சட்டை போட்டு பணிபுரிகிறவரும்,அசத்தலான உள் அலங்காரத்தோடு நிலவும் அலுவலக சூழலில் வேலை பார்க்கும் IT பணியாளர்களும் முதலாளிகள் மொழியில் மட்டுமல்ல சாராம்சத்தில் தொழிலாளர்களே என்பதை உணர வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

 5. நண்பர்களே!

  TCS வேறு மாதிரி இருக்கும் போல! பொதுவாக டாட்டா கம்பெனிகள் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் மனதில் சில சொட்டு ஈரம் உள்ளவர்கள் ( குறிப்பாக ஜே. ஆர். டி டாட்டா உயிருடன் இருந்த வரை!)!

  1980 இல் சென்னையில் இயந்திரவியல் முடித்து விட்டு ஜம்ஷெட்பூரில் உள்ள ஒரு டாட்டா நிறுவனத்தில் அருமையான உத்தியோகத்தை, மூன்று வருடம் கழித்து விட்டு விட்டு மேல் படிப்பு கல்கத்தாவில் படித்த பின் பரிதாபாதில் உள்ள ஒரு டிராக்டர் கம்பெனியில் கேம்பஸ் தேர்வு மூலம் உள்ளே போனால் அப்படி ஒரு கொத்தடிமை வாழ்க்கை! இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம் ! எந்தப் பொதுவுடமை இயக்கமாவது இந்தச் சண்டாளர்களிடம் இருந்து நம்மைக் காக்காதா என்று தினமும் ஏங்கிக் கடைசியில் இரண்டு ஆண்டு கழித்து ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் வந்து சேர்ந்தேன்!
  மிகவும் வரவேற்க வேண்டிய முயற்சி!

  வாழ்த்துக்கள் வினவு!

  நன்றி!

  சினிமா விரும்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க