Sunday, July 5, 2020
முகப்பு செய்தி திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

-

திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் வெல்லட்டும்!

திருப்பெரும்புதூர் வளர்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இன்டெக்ரா ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிட்டெட் ஆலை. 120 தொழிலாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட சூழலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமையை தரமறுத்து தொழிலாளிகளை வேலை வாங்கியது நிர்வாகம். தொழிலாளர் உதவி ஆணையர் முன்பாக தாவா எழுப்பி, பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பிரச்சனை தீர்க்க நிர்வாகம் விரும்பவில்லை.

integra-protest-banner-3

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தொழிலாளர்கள் சட்டபூர்வ உரிமையான 8 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த துவங்கினர் கடந்த 04-03-2015 2-வது பணிமுறையின் போது, 8 மணி நேரம வேலை முடித்து தொழிலாளர் வெளியேறியபோது ஆலை பேருந்துகளை அனுப்பாமல் தொழிலாளர்களை ஆலையினுள்ளே முடக்கியது நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை க் கண்டித்து அன்று இரவு முதல் உள்ளிருப்புப் போராட்டத்தைத் துவங்கினர் தொழிலாளர்கள்.

5-ம் தேதி தொழிலாளர் உதவி ஆணையர் (திருப்பெரும்புதூர்) முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதலில் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கூறிய நிர்வாகம், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மறுத்து தொழிலாளர் உதவி ஆணையம் சமரசம் 1-ன் அறிவுரையை மீறி பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது. பேச்சுவார்த்தையை நிர்வாகம் முறித்துக் கொண்டதால் தொடர்ந்தது உள்ளிருப்புப் போராட்டம்.

admk-chairman-surrounded-by-employees-5நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு கேன்டீன் உணவை மறுத்து, தொழிலாளர்களைப் பட்டினி போட்டு போராட்டத்தை முறியடிக்கத் துடிக்கிறது நிர்வாகம். இரவில் அடையாளம் தெரியாத புதிய நபர்ளை ஆலை உள்ளே அழைத்து வந்து தொழிலாளர்களை மிரட்டியுள்ளது. தக்க முறையில் தொழிலாளர்கள் பதிலளித்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டுளனர்.

06-03-2015 அன்று காலை அ.தி.மு.க சேர்மன் குட்டி என்பவர் வெள்ளை கரை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதமாக காரில் வந்து இறங்கினார்.

admk-chairman-surrounded-by-employees-2“ஏண்டா கம்பெனிய நிறுத்திறீங்க, ஏண்டா ஒவ்வொரு கம்பெனியையும் மூடுறீங்க” என்று தரக்குறைவான வார்த்தைகளால் தொழிலாளிகளைத் திட்டினார்.

“ஏண்ணா, கம்பெனிய மூடிட்டோம், கம்பெனிய மூடிட்டோம்னு சொல்றியே, 8 மணி நேரத்துக்கும் மேல வேலை செய்யச் சொல்றாங்க, பேச்சுவார்த்தைக்கு வரமாட்ராங்க. இதையெல்லாம் கேக்காம எங்கள வந்து கேக்குறியே, உனக்கு நாங்க முக்கியமா, கம்பெனிகாரனுங்க முக்கியமா” எனக் கேள்வியெழுப்பிதும்,

“எனக்கு நீங்கதாண்டா முக்கியம். நான் என்ன சொல்ல வரேன்னா” என்று பேசி மெழுக நினைத்து ஒன்றும் நடக்கவில்லை என்று புரிந்து கொண்டு தன் உண்மை முகத்தை வெளிக்காட்டினார்.

“டேய், நீங்க ஒரு 100 பேர் இருக்குறீங்க. இந்த ஊர்ல ஒரு 1,000 பேர கூட்டி வந்து உங்களை அடிச்சு துரத்தினா என்னடா பண்ணுவீங்க. ஒரு 10 நிமிஷம் இருங்கடா” என்று ஏகத்துக்கும் பேசினார்.

admk-chairman-surrounded-by-employees-3

“4-ம் தேதி நைட்லேர்ந்து இங்கதான் இருக்கோம். 10 நிமிஷம் என்ன? கோரிக்கை வெல்லும் வரை இங்கதான் இருப்போம். வாங்க” என்றனர். தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்துக்கு முன்பாக சேர்மனின் அடாவடியும் ஆவேசமும் ஒருசேர மண்டியிட்டதையடுத்து,

“ஹேய் வண்டிய எட்றா” என்று தன் டிரைவரிடம் வீரத்தைக் காட்டி பின்னிருக்கையில் அமர்ந்து பறந்தார் அண்ணா தி.மு.க சேர்மன் குட்டி.

வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜேசுதாஸ் வந்தார்.

“நாங்கலாம் ஊருக்குள்ள இருக்கோம்ல. எங்ககிட்ட ஒரு வார்த்த சொன்னா நாங்க பேச மாட்டமா? போ, போ, போய் வேலய பாரு, பேசிக்கலாம்” என்றார்.

இன்டெக்ரா தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம்
இன்டெக்ரா தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம்

“கண்டிப்பாக போய் வேலை செய்றோம். வேலை செய்ய மாட்டோம்னு சொல்லலை. ஆனா 8 மணி நேரம்தான் வேலை என்று முதலாளியை எழுதித்தரச் சொன்னால், இப்போதை வேலை செய்யத் தயார்” என்று ஒரே குரலில் தொழிலாளிகள் சொன்னதும்,

“சரி, சரி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்றேன். இதோ வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்” என்று கூறி விட்டு கிளம்பினார்.

கேன்டீனை மூடி பட்டினி போடுவது, ரௌடிகளை, அரசியல்வாதிகளை கொண்டு வந்து மிரட்டுவது, இயந்திரத்தை பெயர்த்துக் கொண்டு போக ஆட்களை கொண்டு வந்து தொடுகாடு என்ற ஊரில் தங்கவைத்துள்ளது என்று நிர்வாகத்தின் மீது புகாரை தொழிற்சாலை ஆய்வாளருக்கும், காவல் ஆய்வாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தோழர் முகுந்தன்
பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி

பு.ஜ.தொ.மு.வின் திருவள்ளூர்/காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலின் பேரில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உறுதியான தொழிலாளர்களின் போராட்டத்துக்கு முன்னால் அரசியல்வாதிகளின் மிரட்டலோ, நிர்வாகத்தினுடைய அடக்குமுறையோ வென்றதாக வரலாறில்லை.

  • இன்டெக்ரா தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
  • புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!

இன்டெக்ரா தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம்தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க