Friday, April 3, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவசாயிகளை அழிக்க பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டு சதி - கார்ட்டூன்

விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்

-

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

landbill-by-admk-bjp-allianceகுடிநீரையும், இயற்கை வளங்களையும்
குடிமக்களின் உழைப்பையும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
“ஐய்! மடிக் கணிணி கிடைக்கப்போகிறது” என்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்!
நீயாக எதையும் கேட்க முடியாது…

(உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் – தோழர் -துரை. சண்முகம்)

jeya-suppors-land-billபடம் : ஓவியர் முகிலன்

jj-supports-land-billபடம் : ஓவியர் முகிலன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
  ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்!

 2. நிலம் கையகப்படுத்தும் சட்டம்: நிலத்துக்காரன் அனுமதி தேவையில்லை. ”உழுதுண்டு வாழவாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்றான் ஐயன் வள்ளுவன்.

  “பயிரிடுதல் இம்சையான தொழில், கீழான தொழில், சிலர் வேண்டுமானால் பயிரிடுதல் சிறந்ததென்று சொல்லலாம், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூழியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுவதால் பயிர்த் தொழிலை பெரியோர்கள் (பார்ப்னர்கள்தானே அன்றைய பெரியோர்கள்) நிந்திப்பதால் பிராமணர்கள் இத்தொழிலை ஒருபோதும் செய்யக்கூடாது; போஜனத்துக்கு வேறு வழி இல்லை என்றால்தான் பிராமணர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடலாம். அதுவும் அந்நியனைக் கொண்டுதான் செய்ய வேண்டும். நேரடியாக பார்ப்பனர்கள் பயிர்த் தொழிலில் ஈடுபடக்கூடாது” என்றான் மற்றொரு அய்யன். (மனு: 10-83, 84).

  அதனால்தானோ என்னவோ “கண்டதுண்டா! கண்டதுண்டா! ஏர் ஓட்டும் பார்ப்பானைக் கண்டதுண்டா? களை பறிக்கும் பாப்பாத்தியைக் கண்டதுண்டா!” என அன்று பெரியார் தொண்டர்கள் முழங்கினார்களோ! உன் தொழிலையே மதிக்காதவன் உன்னையா மதிக்கப் போறான்!
  http://hooraan.blogspot.com/2015/03/2.html

 3. இன்று ஒரு செய்தி சானலில் யாரோ இருவர் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை போலி பத்திரங்களை செய்து ஆட்டய போட்டு மாட்டி உள்ளனர்.

  ஆனால் கொடுமை என்னவென்றால் இதை இந்த எடுபிடி அரசு செய்யும் போது மட்டும் வளர்ச்சியாம். சட்டபூர்வமாக அதை செய்தால் பிசுனசு இல்லையென்றால் கொள்ளை. டாடா அம்பானிக்கு சட்டபூர்வமாக நிலத்தை பிடுங்கி கொடுத்தால் அது வள்ளர்ச்சி!. சாதாரண ஏழை எளிய மக்கள் ரோட்டோரம் கடை போட்டிருந்தால் அது ஆக்கிரமிப்பு. நல்ல இருக்குங்கடா ஓங்க நாயம்.

  நமக்கு நல்லா கிளியரா தெரியறது என்னவென்றால் அவர்களிடம் போலிசு இருக்கிறது,இராணுவம் இருக்கிறது, கோர்ட்டும் இருக்கிறது அவிங்க ஆய்த் தொடைக்க சட்டங்களும் இருக்கின்றன. சட்டத்த எழுதுறதும் அவந்தேன். அதை வைத்து ஆய்த் தொடைப்பதும் அவந்தேன். ஏதுமறியா அப்பாவி மக்களிடம் வளர்ச்சி என்று பம்மாத்துக் காட்டி ஆட்டய போடுறானுங்க.

  அரசு நிலத்தை ஆட்டய போட்டுட்டான்னு கைது பண்ணிட்டானுக. இவனுக சட்டபூர்வமாகவே மக்களோட நிலத்தை ஆட்டய போடறானுங்க. இவனுகள எந்த போலிசால கைது செய்வது? எந்த சட்டத்தால தண்டனை கொடுப்பது?

  ஆற்று மணல் கொள்ளையை எந்த சட்டத்தின் மூலம் மக்கள் தடுத்தார்கள். தடுத்து கொண்டு இருக்கிறார்கள் அது தான் இதற்க்கு இருக்கும் ஒரே வழி.

  நன்றி.

Comments are closed.