Friday, August 19, 2022
முகப்பு அரசியல் ஊடகம் புதிய தலைமுறை மீது தாக்குதல் : சுரணையூட்டும் புரட்சிகர அமைப்புகள் !

புதிய தலைமுறை மீது தாக்குதல் : சுரணையூட்டும் புரட்சிகர அமைப்புகள் !

-

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிய இந்து மத வெறி பாசிஸ்டுகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்புக்களின் பிரச்சாரம் –ஆர்ப்பாட்டம்!

ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன்
படம் : நன்றி நக்கீரன்

லகப் பெண்கள் நாளையொட்டி, “தாலி பெண்களை பெருமைப்படுத்துகின்றதா ? சிறுமைப்படுத்துகின்றதா?” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விளம்பரப்படுத்தியது. உடனே இந்து’ மனம் புண்பட்டதாகக் கூறி இந்து முன்னணி, பா.ஜ.க கிரிமினல்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினர்.

இந்தக் கட்டம் வரை, “தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பச்சமுத்து உடையாரும் பா.ஜ.க.வும் ஒரே மொள்ளமாறி கூட்டணியில் தானே உள்ளனர். இந்தக் கட்டத்துக்கு மேல் இப்பிரச்சினை போகுமா” என்று பலர் யோசித்துக் கொண்டு இருந்தனர்; புதியதலைமுறை அலுவலகத்துக்கு பெயருக்கு என்று போலீசு பாதுகாப்பு போடப்பட்டது; இந்து முன்னணி, பா.ஜ.க ரவுடிகளைப் பொறுத்த வரை ‘நண்பனாவது வெங்காயமாவது’, மாற்றுக்கருத்து என்று வந்தால் காந்திக்கே கல்லறை கட்டிய பரம்பரை அல்லவா? சும்மா இருப்பார்களா? கலியுகத்தில் கல்கி பகவானாக கிளம்பினார்கள்.

இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்து கொண்டு இருந்த புதிய தலைமுறை செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் தாக்கி கேமராக்களை உடைத்தனர்.

மத்தியில் இருப்பது மோடியின் ஆட்சி, மாநிலத்தில் இருப்பது மாமியின் ஆட்சி, டோட்டல் எல்லாம் இந்துத்துவாவின் கண்ட்ரோல்.

ஜெயம் பாண்டியன்.
“நான்தான் குண்டு வீசினேன்” – இந்துத்துவ பயங்கரவாதி ஜெயம் பாண்டியன்.

இந்நிலையில், மாற்றுக்கருத்து என்றாலே மர்டர் செய்யும் வானரங்கள் அடுத்தபடிக்கு சென்றன. தாலி பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் ஊடகவியலாளரை அந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் வாசலிலேயே அடித்து துவைத்தனர்.

சாலையில் வருவோரையெல்லாம் தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போலீசு, இரவு வேலை முடித்து தாமதமாக வீடு திரும்பும் தொழிலாளர்களை பொய் வழக்கில் கைது செய்யும் போலீசு, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்குவது முதல் கல்லூரிக்குள் சென்று விடுவதுவரை, அவர்களை திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் ‘எவ்வித வன்முறையும் நடக்கக்கூடாது’ என்று கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசு என்ன செய்து கொண்டு இருந்தது?

அத்தொலைக்காட்சிக்கு பாதுகாப்பாக அலுவலகத்தின் வாசலில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது; ஊடகவியலாளர்களை தாக்கிய பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பாதுகாப்பாக உடன் இருந்தது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை இந்து மத வெறியர்கள் கொன்று குவித்த போது என்ன போலீசு செய்ததோ, அதையே இங்கேயும் செய்தது.

இந்துத்துவ பயங்கரவாதிகள்
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தில் குண்டு வீசிய இந்துத்துவ பயங்கரவாதிகள். (படம் : நன்றி தினமணி)

அடுத்த சில நாட்கள் கழித்து டிபன் பாக்ஸில் குண்டு வந்து விழுந்தது புதிய தலைமுறை அலுவலகத்துக்குள். காலை குண்டு வீசுகிறார்கள். மதியம், “நான் தான் குண்டு வீசினேன்” என்று இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பின் தலைவன் ஜெயம் பாண்டியன் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைகின்றான். அங்கேயே திமிராக “இப்போ போட்டது பட்டாசுதான், அடுத்தமுறை வெடிகுண்டே போடுவேன்” பேட்டி கொடுக்கின்றான்.

தமது தொழிலுக்கு அவமானம், கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவேன் என்று உதார் கூட விடவில்லை பச்சமுத்து. தமது ஊழியர்களை தாக்கியவர்கள் பற்றி வாயே திறக்காமல் இருந்தார்.

பார்ப்பன கொடுங்கோன்மைக்கு எதிராக சித்தர்கள் வாழ்ந்த மண்ணில், பார்ப்பனியத்தை வேரறுக்கக் கற்றுத் தந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில் இந்த பார்ப்பன இந்துமதவெறி நச்சுப்பாம்புகளை அனுமதிக்க முடியுமா? இந்து மதவெறி சக்திகளை வீதியில் ஓட விட்டு அடிக்க வேண்டாமா?

ஊடகவியலாளர்கள்
ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக பரபரப்பாக செய்தி கொண்டு வா என்று ஊடகவியலாளர்களின் உழைப்பை சுரண்டும் ஊடக முதலாளிகள் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. (படம் : நன்றி தி இந்து)

“பெரியாரின் வாரிசுகள் நாங்கள்”, “அம்பேத்கரின் வாரிசுகள் நாங்கள்” என்று வாய் கிழிய பேசும் யாரும் களத்திற்கு வரவில்லை. பதவி சுகத்துக்காக இந்த பார்ப்பனக் கூட்டத்தை தமிழகத்தில் நுழையவிட்ட கட்சிகள் எல்லாம் வெட்கமே இல்லாமல் அறிக்கைக்கு மேல் எதையும் விடவில்லை.

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை ஒரு பிரச்சினையாகக் கூட மற்றப் பத்திரிக்கைகள் / ஊடகங்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

தங்களின் ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரபப்பாக செய்தி கொண்டு வா என்று அவர்களின் உழைப்பை சுரண்டும் ஊடக முதலாளிகள், இப்போது தங்கள் மூலதனத்தை காக்க வேண்டும் என்பதில் எப்போதும் போல அமைதியாக இருந்தார்கள்.

ஊடகத்துறை ஊழியர்கள் தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு சங்கமாக அணிதிரள வேண்டும்” என்பதை வலியுறுத்தி சென்னை முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர்களுக்கு எப்போதும் போலீசு பாதுகாப்பு தரமுடியாது. உழைக்கும் மக்களே அவர்களை காப்பவர்கள். எனவே உழைக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள், பேருந்துகள், ரயில்கள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்று இந்த பார்ப்பன இந்து மத வெறி நச்சுப் பாம்புகளை அடித்து விரட்ட வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினோம். அனைத்து ஊடக நிறுவனங்களிலும் பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

புதிய தலைமுறை தொலைக்காட்சி வாசலில் நின்று பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த போது, பிரசுரங்களை வாங்கிய ஊழியர்கள் படித்து விட்டு அலுவலத்திற்குள்ளும் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்திலேயே “இங்கே கொடுக்காதீர்கள், அங்கே போங்கள்” என்று செக்யூரிட்டிகள் சொல்ல ஆரம்பித்தனர்.

“என்ன பிரச்சினைன்னு தெரியாம அங்க போ, இங்க போன்னு ஏன் சொல்லறீங்க ” என்றோம்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, மேல இருந்து ஆர்டர் வருது, ப்ளீஸ் இங்க நிக்காதீங்க” என்றார்கள்.

அதற்குள் பிரசுரங்களை கொடுத்து முடித்திருந்தோம். கிளம்பும் போது போலீசு வந்தது.

“ஏப்பா, இங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் பிரச்சினையாச்சு, நீங்க ஏன் பிரச்சினை பண்ணறீங்க” என்றார் ஒரு எஸ்.ஐ.

“நாங்க எங்க சார் பிரச்சினை செய்யறோம்? அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் செய்யறோம் , நோட்டீசு கொடுக்குறோம். அன்னைக்கு போலீசு பாதுகாப்போட வந்து இந்து முன்னணி காரனுங்க அடிச்சுட்டுப் போறான், பாவம் உங்களால என்ன செய்ய முடிஞ்சது?”

“தம்பி , நான் தான் அன்னைக்கு அடிச்ச 6 பேரையும் அரெஸ்ட் செய்தேன். கமிஷ்னர்கிட்ட ரிவார்ட் வாங்குனேன். அந்த ஜெயம் பாண்டியன் மேல ஏற்கனவே ரெண்டு கேசு இருக்கு, அதுல ஒண்ணு கொலை முயற்சி வழக்கு. அந்த ஜெயம் பாண்டியன் ரெண்டு வால்வோ பஸ் வச்சிருக்கான், ரெண்டு பொண்டாட்டி. ஒன்னு கோயம்புத்துர்ல இருக்கு. இன்னொன்னு அய்யங்காரு, புருசன் செத்துட்டான், ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டான், பப்ளிசிட்டிக்காக பண்ணி மாட்டிகிட்டான்”

“சார், ரெண்டாவது சம்சாரத்துக்கு தாலி கட்டிட்டானா ?”

“அதெல்லாம் தாலி கட்டிட்டான். எனக்கு எல்லாமே தெரியும்” என்றார் இன்னொரு போலீசு.

கிரிமினலைப் பற்றி போலீசுக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தப் பிரச்சார இயக்கத்தின் இறுதியாக 19-03.2015 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாலையின் புறங்களில் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, 11 மணிக்கு முழக்கங்கள் முழங்கப்பட்டன.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாதென்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஊழியர்கள் மீது பார்ப்பன பயங்கரவாதிகள் குண்டு வீசி கொலை வெறியாட்டம் ! – கண்டன ஆர்ப்பாட்டம்

தாலிபற்றிய நிகழ்ச்சியை
ஒளிபரப்பக்கூடாதென்று
புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
ஊழியர்கள் மீது
இந்து முன்னணி – பிஜேபி
காலிகள் தாக்குதல்
இந்து இளைஞர் சேனா என்ற
பார்ப்பன பயங்கரவாதிகள்
குண்டு வீசி கொலை வெறியாட்டம் !

பார்ப்பன பாசிச அமைப்புகளை துடைத்தெறிவோம்
பார்ப்பன பாசிச அமைப்புக்களை தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம் !

விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !
கருத்து சுதந்திரத்தின் எதிரிகள்
ஜனநாயகத்தின் விரோதிகள்
பாசிச இட்லரின் வாரிசுகளான
இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்
வி.எச்.பி – பிஜேபி
பார்ப்பன பயங்கரவாதக் கூட்டத்தை
தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்போம்!

பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளுக்கு
சவால் விட்டு எழுந்து நிற்கும்
தமிழகத்தின் பகுத்தறிவை
சுயமரியாதை தமிழுணர்வை
ஒழித்துக்கட்ட துடித்து வரும்
பார்ப்பன பாசிச அமைப்புக்களை
தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம் !

இது பெரியார் பிறந்த மண்ணடா!
பார்ப்பன எதிர்ப்பு கோட்டையடா!
பார்ப்பன ஜெயா ஆட்சியில்
தமிழகத்தை குஜராத்தாக்கி
கொலைவெறியாட்டம் போட நினைக்கும்
பார்ப்பன மத வெறியர்களை
இந்த சட்டம் போலீசு தண்டிக்காது
இந்த அரசமைப்பு முறைக்குள்
தீர்வு தேட முடியாது

உழைக்கும் மக்களே ! ஜனநாய சக்திகளே !
மாணவர்களே ! தொழிலாளர்களே
ஓரணியில் திரண்டு நிற்போம் !
அதிகாரத்தைக் கையில் எடுப்போம் !
முள்ளை முள்ளால் எடுப்பது போல
பார்ப்பன பாசிஸ்டுகளை
தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டுவோம் !

ஊடகத்துறை ஊழியர்களே
உயிரையும் தன்மானத்தையும்
கருத்துரிமையையும் பாதுகாக்க
புரட்சிகர சங்கமாக அணி திரள வாருங்கள்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற பு.மா.இ.மு.வின் சென்னை மாநகர இணைச் செயலர் தோழர் மருது “புதிய தலைமுறையின் மீதான தாக்குதல் கருத்துரிமையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகள் ஜனநாயகத்திற்கே விரோதமானவர்கள்அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறினார்.

கண்டன உரையாற்றிய ம.க.இ.கவின் மாநிலப் பொருளாளர் தோழர். வெங்கடேசன், “புதிய தலைமுறையின் மீது தாக்குதல் நடத்திய ஜெயம் பாண்டியன் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளின் நுனி தான், அவர்களின் அடியோ பரவிக்கிடக்கின்றது. இன்று மோடியின் ஆட்சியில் தமிழகத்தையும் குஜராத்தாக்க முயன்று வருகின்றார்கள்.

இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும் பெருமாள் முருகன் தாக்கப்பட்டதும் புதிய தலைமுறை அலுவலகம் தாக்கப்பட்டதும் ஏதோ தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இந்து மதவெறி சக்திகள் மீண்டும் தலைத்தூக்க எத்தனிக்கின்றன. அவற்றை ஒழிக்காமல் தீர்வு இல்லை” என்பதைப் பதிவு செய்தார்.

அடுத்ததாகப் பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட இணைச் செயலர் தோழர் முகிலன் “இந்த இந்து மதவெறி சக்திகள்தான் தனியார்மயத்திற்காக இந்த நாட்டையே கூறு போடுகின்றன. நாடு முழுவதும் சாதி மதக்கலவரங்களை திட்டமிட்டு ஏற்படுத்தி உழைக்கும் மக்களை கொன்று குவிக்கின்றன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தான் தங்களின் சுய நலனுக்காக இவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்கள். திராவிடக் கட்சிகளால் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்க முடியாது. யாராலும் வெல்லமுடியாத நபர் என்று சொல்லப்பட்ட ஆரிய இனவெறியன் பாசிச இட்லரை வேரறுத்தது தோழர் ஸ்டாலினின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகர அமைப்புக்களின் கீழே உழைக்கும் மக்கள் அனைவரும் அணிதிரள்வதன் மூலமாகத்தான் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு சாவு மணி அடிக்கவும் முடியும்.” என்று உரையாற்றினார்.

பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

கடும் வெயிலில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடி தமிழகத்திலிருந்தே துடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதாக இருந்தது.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675

 1. “பார்ப்பன பாசிச அமைப்புக்களை தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம் !” என்ற லேபிளில் உள்ள படத்தில் உள்ள குழந்தைகள் அவ்வளவு அழகு ,அறிவு . அவிங்க அம்மா ,அப்பா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க. ஊர் கண்ணு பட போவுது. நேத்து அவிங்க குழந்தைகள் பள்ளிக்கு லீவா ?

 2. //பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு …..தலைவன் ஜெயம் பாண்டியன் //

  இவர் அய்யரா அய்யங்காரா கேட்டு சொல்லுங்க சார்//

 3. சும்மா ஊருக்குள்ள சரக்கடிச்சுட்டு சுத்திகிட்டு இருந்தவன் எல்லாம் பயங்கரவாதியா??? வினவுவின் அறிவு கெட்டதனம் வழக்கம் போல மிக அற்புதமாக உள்ளது… டிப்பன் பாக்ஸ் உள்ளே வெச்சு “பயங்கரமான வெடிகுண்டு” வீசுனாங்களாமாம், அதனால இவனுங்க _________ போராட்டம் செய்யராங்களாம்…. (அந்த டிப்பன் பாக்ஸே முழூசா நசுங்கல, அப்படிபட்ட “குண்டு” அது!!!) ___________________________________________.

  • இந்தியனுக்கு பின்புறம் ,ரொம்ப நெருக்கமா , அதிக அனுக்கமா ,ஆய் போகும் இடத்தில் அந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து இருந்தா அப்ப தெரிந்து இருக்கும் இந்தியனுக்கு அது வெத்து குண்டா அல்லது ஹிந்து பயங்கரவாதிகள் வைத்த வெவரமான குண்டா என்று .

 4. ஊடகத்துறை ஊழியர்கள் தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு சங்கமாக அணிதிரள வேண்டும்”

 5. SRM Group is very decent in Tamilnadu. Everyone knows in TN. Please support guys. Vinavu becomes Mad now. Don’t support simply to SRM Group media. Any poor people can study in SRM ?

 6. இந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்றுநன்றாகத் தெரிந்து இருந்தும் அன்றைய தினம் புதியதலைமுறை செய்தியில் “மத பழமைவாதிகள்” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னார்கள் அவர்களுக்கு தங்களின் ஊழியர்கள் மீது அக்கரை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 7. வினவு, பின்னுட்ட பெட்டி “டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்” கட்டுரையில் மூடப்பட்டு உள்ளது.

  • மறுமொழிப் பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க