privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு - அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு

ஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு – அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு

-

ஐ.டி ஊழியர்களின் பணி பாதுகாப்புக்கான பு.ஜ.தொ.மு.-வின் போராட்டம் தொடர்கிறது.

ஐ.டி ஊழியர் சங்கம்
கோப்புப் படம்

.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கின்றனர். வீடு போய் வரும் நேரத்தையும் சேர்த்தால் தூங்கும் நேரத்தையும் தியாகம் செய்து நிறுவனத்துக்காக உழைக்கின்றனர். இதனால், மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பிரச்சனைகளையும், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சனைகளையும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாததால் சமூக பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்படி உழைத்தாலும், அவர்களுக்கு பணியிடத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வோ, உரிய மரியாதையோ கிடைப்பதில்லை. மேலாளர் மற்றும், மனிதவளத்துறை அலுவலர்களின் விருப்பத்தின் பேரிலும், அலுவலக அரசியல் அடிப்படையிலும் அவர்களது பணி வாழ்க்கை பந்தாடப்படுகிறது. அவர்கள் நினைத்தால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கி எறியப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 30 வயதிலேயே வேலை இழந்து, ‘ஓய்வு பெற்று’ கிராமத்திற்கு போகும் திட்டங்களை வகுக்க வேண்டியிருக்கிறது.

ஐ.டி ஊழியர் சங்கம்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் கூட்டத்தில் கூடியிருக்கும் ஊழியர்கள் (கோப்புப் படம்)

இவ்வூழியர்களின் உழைப்பால் மேற்கத்திய நிறுவனங்களுக்கு சேவை வழங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் இந்நிறுவனங்கள், இந்தியாவில் ஊழியர்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உள்ள எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவை தமக்கு செல்லுபடியாகாது என்று தாமே அறிவித்துக் கொண்டு, உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிற்சங்கம் மூலமான கூட்டு பேரம் பேசும் உரிமையையும், ஊழியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பையும் மறுத்து வருகின்றன.

இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டி.சி.எஸ். நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 25 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து பல ஊழியர்களுக்கு பணி நீக்க உத்தரவை அனுப்பத் தொடங்கியது. கொத்துக்கொத்தாக வீதிக்கு எறியப்பட்ட இந்த ஊழியர்களுக்கு ஆதரவாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களமிறங்கி பிரச்சாரம் செய்ததோடு, இந்தியாவிலேயே முதன்முறையாக ஐ.டி. துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கமான “பு.ஜ.தொ.மு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” எனும் சங்கத்தை உருவாக்கியது. நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் சங்கத்தில் தம்மை இணைத்து வருகின்றனர்.

ஐ.டி துறை ஊழியர்கள்
உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிற்சங்கம் மூலமான கூட்டு பேரம் பேசும் உரிமையையும், ஊழியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பையும் ஐ.டி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
  • டி.சி.எஸ். ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும்,
  • டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும்,
  • 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947″ அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும்,
  • ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும்

“புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐ.டி ஊழியர் தொழிற்சங்கம்
“ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” (கோப்புப் படம்)

தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசுக்கு கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை கோரி சங்கத்தின் சார்பில் பொது நலவழக்கைத் தொடுத்திருந்தோம். இவ்வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் பிப்ரவரி 23-ம் நாளன்று, “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் வளாகத்துக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 1.4 கி.மீ மட்டும்தான் என்றாலும் மாதம் ஒன்று கடந்த பின்னரும் நீதிமன்றத் தீர்ப்பு அரசு நிர்வாகத்தை சென்றடைந்து அதை அசைத்து விடவில்லை. “தீர்ப்பை அமல்படுத்துக” என்று நாம்தான் நேரில் போய் அதிகார வர்க்கத்தை கோர வேண்டும் என்ற நிலையில்தான் மக்களின் முதல்வர் ஆசிபெற்ற அரசு இயங்குகிறது.

கடந்த 23-03-2015 அன்று பு.ஜ.தொ.மு பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசுவும், பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகமும் நீதிமன்ற உத்தரவின் நகலோடு நமது கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் மனுவாக எழுதிச் சென்று தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை செயலாளரிடம் முறையிட்டனர்.

தோழர் கற்பக விநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம்.

கோரிக்கைகள்:

(i) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிப்பயன்கள் / பணிநிலைமைகள் அனைத்தும் தொழிலாளர் நலச்சட்டங்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

(ii) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை random முறையில் தேர்வு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளினால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(iii) TCS நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்களை random முறையில் தேர்வு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளினால் அவர்களின் பணிப்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(iv) தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் எமது தொழிற்சங்க பிரநிதிகள் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவே மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

(v) கடந்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக Public Hearing நடத்தப்பட வேண்டும்.

(vi) மேற்படி எமது சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக எங்களது தொழிற்சங்க பிரநிதிகளை நேரில் அழைத்து பேச வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், இருபது நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஐ.டி ஊழியர் பிரிவு
நமது கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசுத் துறைகள் தமது பணியை செய்யும்படி உறுதி செய்ய, நாம் அமைப்பு ரீதியாக வலுவாக வேண்டும். (கோப்புப் படம்)

ஐ.டி.துறை ஊழியர்களே!

  • நமது கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசுத் துறைகள் தமது பணியை செய்யும்படி உறுதி செய்ய, நாம் அமைப்பு ரீதியாக வலுவாக வேண்டும்; கூட்டாக நமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.
  • ஐ.டி ஊழியர்கள் அனைவரும் தொழிற் சங்கத்தில் இணைந்து தமது சட்ட ரீதியான அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சு. கற்பகவிநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/NDLFITEmployeesWing

NDLF fights on for IT employees’ job security

IT employees are required to work for more than 12 hours daily. After adding time spent in commute to work, they work for their companies, sacrificing even their sleep and rest. Due to this, their body and mind face stress leading to health problems like diabetes, blood pressure, mental stress, etc. With not sufficient time to spend with family, they face family and social problems too.

ndlf-it-wing-poster-en
(File Image)

Even after all these toil and sacrifices, they don’t get due recognition or pay hike. They are totally at the mercy of managers, HR personnel and office politics. They live in constant fear of getting fired any time and having to be prepared for ‘retirement’ at ripe young age of 30s itself.

It is with employees hard work that these IT companies earn billions. But they don’t respect laws of the land protecting safety and well-being of their employees. They declare themselves to be exempt from these laws and deny the universally recognized rights of employees to form union and conduct collective bargaining.

Balan Haridas
Leading labour lawyer Balan Haridas addressing gathering of IT employees (File photo)

Under these circumstance, last December TCS announced that it would lay-off 25,000 employees. It started informing thousands of employees that they would be retrenched soon, and started issuing retrenchment letters to some of them. New Democratic Labour Front (NDLF) intervened in support of these voiceless IT employees facing mass-scale lay-offs and campaigned for the need to form an IT union. NDLF formed the first IT sector union in India. Thus the NDLF IT employees’ Wing came into being. Hundreds of IT employees have already made themselves a part of the union.

On behalf of NDLF-IT Employees Wing, a petition was submitted to the Govt of Tamilnadu on 21st January 2015, requesting intervention in the lay-off of 25 thousand employees. We requested the government to stop this illegal practice, ensure that employees of TCS get all the rights under labour welfare laws, declare the layoff of 25 thousand employees as unfair labour practice according to the ‘Industrial Disputes act 1947’ schedule V, ban NASSCOM black-list used for blackmailing IT employees and to provide interim relief to the employees laid-off by TCS. Goverment has not taken any action on that petition.

ndlf-it-wing-meeting-03
Poster at NDLF – IT Employees Wing meeting venue (File Photo)

We have labour laws enacted to safeguard the interests of the workers and labour department is supposed to enforce these laws. But we are in a sorry state of needing to go to courts even to make this department do its duty.

NDLF-IT Employees Wing filed a Public Interest Litigation in Madras High Court to order the government to take action on the petition. On 23rd February, Madras High Court passed an order that “competent authorities have to decide whether the IT industry would be covered under the Industrial Disputes (ID) Act or not. If the authority concludes that the industry employees do not come under the Act, the question whether they require to be covered under the legislation should be decided only by the government”

Though only 1.5 km separates Madras High Court and Secretariat of the TN Govt and even after more than a month since the court’s order, the Government has not taken any action. The Governmet under the control of ‘Peoples’ CM’ acts in such a way that we had to go in person and remind the authorities about the order.

Madras High Court order
“competent authorities have to decide whether the IT industry would be covered under the Industrial Disputes (ID) Act or not. If the authority concludes that the industry employees do not come under the Act, the question whether they require to be covered under the legislation should be decided only by the government” – Madras High court

On 23rd March 2015, Mr. Suba Thangarasu, the General Secretary of NDLF and Mr. Karpaga Vinayagam, the organizer of the NDLF IT Employees Wing met the secretary of Labour and Employment department, handed over a copy of the court’s order along with a list of the following demands.

  1. Benefits of service/working conditions of all employees working in IT companies must be brought under the governance of Labour Welfare legislations. Hence, we request the State Government to issue suitable G.O to enable to bring IT industry under Industrial Disputes Act,1947.

  2. IT companies should be randomly inspected by Labour Welfare officers to analyse working conditions of IT employees.

  3. Inspection should be carried out among employees of TCS on a random basis, regarding status of their job security.

  4. A panel consisting of legal experts, labour welfare department officials and representatives from our Union should be constituted for carrying-out the above inspections and further course of actions.

  5. A public hearing should be arranged to address the grievances of all IT employees retrenched during the past 5 years.

  6. Representatives our Union should be consulted in person regarding the demands mentioned above

Indian IT industry
Indian IT industry

The Goverment Secretary has promised us action in 20 days.

Let’s us remind ourselves once again.

  • In order to realize our demands, to make the authorities do their duties, we need to be strengthen the union  and act collectively.
  • We call upon all IT Employees to join the Union.

S.Karpagavinayagam,
Organizer,
New Democratic Labour Front – IT Employees Wing

Mobile : 90031 98576
email : combatlayoff@gmail.com
FB : https://www.facebook.com/NDLFITEmployeesWing