Friday, May 14, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

-

புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) ஆகியவற்றின் மேலாண்மையில் இயங்கும் மத்தியப் பல்கலைக் கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அரசின் எல்லாத் துறைகளும் செயலிழந்து, உச்சகட்டச் சீரழிவை சந்தித்து முடங்கிப்போய் இருப்பதற்கான நிதர்சனமான சாட்சியமாக நிற்கிறது . அங்கு நடைபெற்றுவரும் பல்வேறு சீரழிவுகளும், முறைகேடுகளும், மாணவர் விரோத மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகளும் சந்திசிரித்து ஊடகங்களில் அன்றாடச் செய்தியாகியுள்ளன.

அவற்றை எதிர்த்து நாள்தோறும் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஆசிரியர்களும், ஊழியர்களும் புதுவை நகரிலும், வளாகத்திலும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, தங்களது விடுதிக்குத் தண்ணீர்கூட பல நாட்கள் தரத் துப்பில்லாத நிர்வாகத்தைக் கண்டித்து நள்ளிரவில் காலி பாத்திரங்களுடன் தமது விடுதிகளைவிட்டு வெளியேறி வீதியில் அமர்ந்து போராடியுள்ளனர் மாணவிகள். அப்படி என்னதான் பிரச்சனை இந்தப் பல்கலைக்கழகத்தில்?

பேராசிரியர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்ற “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி.

முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார் “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி. அவர் பிப்ரவரி1, 2013 அன்று பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும், மாணவர் சேர்க்கையும் முடங்கிப்போய், ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் சரிந்துள்ளது. முக்கியக் கோப்புகள் பலவும் ஆண்டுக்கணக்கில் தேங்கிப்போய் பணிகள் எதுவும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோப்புகளின் மீது எந்த முடிவுகளும்  எடுக்கப்படாமல் தனக்கு வேண்டியவர்கள் என்றால் விதிகளுக்குப் புறம்பாக எதுவும் செய்வதும், வேண்டாதவர்கள் என்றால் காலவரையற்றுக் கிடப்பில் போடுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளின் நிர்வாக நடைமுறை.

தன்னைச் சந்திப்பதற்காக முன்அனுமதி பெற்றுவரும் உயர் அலுவலர்கள், துறைத்தலைவர்கள், புல முதன்மையர்கள் (Deans) என்று எல்லோரையும் மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் காக்கவைத்துச் சந்திப்பதே அம்மையாருக்கு வாடிக்கை. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் எந்த அனுமதியோ, அறிவிப்போ, காத்திருப்போ எதுவுமின்றி எப்போது நினைத்தாலும் தன் அறைக்குள் பிரவேசிக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளார், இந்தத் துணைவேந்தர். காத்திருந்து காத்திருந்தே கணிசமான காலத்தை விரையமாக்கி தங்களது கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குமுறுகின்றனர் பேராசிரியர்களும் ஊழியர்களும்.

கடந்த துணைவேந்தர் காலத்தில் தொடங்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஐந்து கட்டிடங்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கும் தருவாயில் வேலைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு, வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னரும்கூட திறக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் இந்தத் துணைவேந்தர். அக்கட்டிடங்கள் புதிய 24 மணிநேர நூலகம், சுற்றுச்சூழல் துறை, தகவல் தொடர்பியல் துறை என பல்வேறு பயன்பாடுகளுக்கு எப்போதோ திறக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, நூலகம் திறக்கப்படாததால் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒழுங்கான இடம் இல்லாமல் உள்ளனர்.

தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.

ஆய்வுசெய்யத்தான் கட்டிடங்கள் இல்லை என்றால், ஆய்வேட்டைச் சமர்ப்பித்த பின்னரோ ஆய்வு மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழல் இன்னும் பயங்கரமானது. ஆய்வேட்டைச் சமர்ப்பித்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர் மாணவர்கள். ஆனால் ஆய்வேடுகள் தேர்வாளர்களுக்கு திருத்துவதற்காக அனுப்பப்படுவதே இல்லை. ஆய்வேட்டை எந்தத் தேர்வாளரிடம் (External Examiners) அனுப்புவது என்று முடிவுசெய்து குறிக்க (Tick பண்ணுவதுதான் வேலை!) வேண்டிய துணைவேந்தரோ இந்தச் சாதாரணப் பணியை முடிப்பதற்கு மாதக் கணக்கில் காலம் தாழ்த்துகிறார். அப்புறம் அவருக்குக் கீழ் உள்ள பணியாளர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆய்வை முடித்து தனது வாழ்வில் செட்டில் ஆவது, பணிவாய்ப்பைத் தேடுவது ஆய்வு மேற்படிப்புக்குச் (Post-Doctorate) செல்வது என்று பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் சமர்ப்பித்த தமது ஆய்வேடு குறித்து ஏதேனும் வேலை நடக்கிறதா என்று தனியாக ஓர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது!

யார் எப்படிப்போனாலும் தனது சுகபோகத்திற்கு எந்தக் குறையும் வைத்துக்கொள்வதில்லை இந்தப் “பேராசிரியர்”. தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.

இவற்றையெல்லாம் வைத்து இவர் ஒரு மினி ஜெயா என்று நீங்கள் நம்பத் தயாரில்லையா? பல்கலைக்கழகத்தின் முக்கிய உயர் பொறுப்புகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை நிரந்தரமாக முறைப்படி தேர்வுசெய்து பணியிலமர்த்தாமல், தனது கைக்கூலிகள், நிர்வாக அறிவோ அடிப்படை அருகதையோ அற்ற தனது அடிவருடிகளை அப்பொறுப்புகளில் தற்காலிக (In Charge) நிலையிலேயே ஓராண்டிற்கும் மேலாக வைத்துள்ளார், இந்தத் துணைவேந்தர். பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.

இந்த முறைகேடுகளோடு, இத்தகைய துணைவேந்தரின் நிர்வாகத்தில் மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. சென்ற ஆண்டு ஏப்ரல் 6-7-ம் தேதிகளில் ஹரிஹரன் என்ற பார்ப்பனப் பேராசிரியரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் என்ற தமிழ்த்துறை மாணவனை செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடைத்து வைத்துத் துன்புறுத்தினர். பின்னர் நடைபெற்ற மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்துபோன நிர்வாகம் பெயரளவில் ஒரு விசாரணை நடத்தியது. ஆனால், இதுவரை அந்த விசாரணை அறிக்கையை வெளியிடவும் இல்லை, யார்மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஹரிஹரனை மொத்தம் 28 பல்கலைக்கழகப் பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்க்கிறார் துணைவேந்தர்! பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களைக் கண்டறியத் துப்பில்லாமல் ஒரு அப்பாவி ஏழை மாணவனை அடித்துத் துன்புறுத்திய ஹரிஹரன் கும்பலையோ அதற்குத் துணைபோன இந்தத் துனைவேந்தரையோ இந்த அரசமைப்பும், நீதிப் பரிபாலனமும் எதுவும் செய்யவில்லை, மாறாக அவர்களின் பதவிகளைப் பாதுகாக்கின்றன.

பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.

ஈவ்-டீசிங் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு எதிராக நின்று, உடற்க்கல்வித்துறை பேராசிரியர் பிரவீன் என்ற தனது அடிவருடிக்கு ஆதரவாக ஈவ்-டீசிங் புகார் கொடுத்த மாணவிகளை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியது நிர்வாகம். இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்தைப் பெற்று 20,000 ரூபாய் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நட்டஈடு வழங்கி அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள பணிக்கப்பட்டது நிர்வாகம். மேலும் மாணவிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலை உருவாக்கி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்களையும் பாதுகாத்து வருகிறார் இந்தத் துணைவேந்தர்.

இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி பல பொய்யான தகவல்களைக் கொடுத்தே இப்பதவிக்கு வந்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று இந்த அரசின் விதிகள் கூறுகின்றன. ஆனால், பேராசிரியர் நிலையில் (Professor) பணியாற்றாத ஒருவர் இங்கு எல்லாச் சட்டங்களையும் மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் நடப்பது ஜனநாயக அரசா மனுநீதி அரசா? மொத்தம் 10 ஆய்வு மாணவர்களை உருவாக்கியிருப்பதாகப் புளுகியிருக்கிறார் இந்தத் துணைவேந்தர். ஆனால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான PUTA தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவல்களின்படி ஒரு ஆய்வு மாணவர் மட்டுமே இவரது மேற்பார்வையில் ஆய்வு முடித்துள்ளார். மேலும் சி.பி.ஐ விசாரணையை எதிர்நோக்கியுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட எல்லாக் குற்றக்கும்பல்களுக்கும் பாதுகாப்பு அரணாய் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் துணைவேந்தர்.

இவரது நியமனத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மனிதவள அமைச்சகத்திற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியவண்ணம் உள்ளனர். மேலும் ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மூன்று முறை பேரணிகளும் மற்றும் முற்றுகையும், இரண்டு முறை உண்ணாவிரதங்களும் நடத்தியுள்ளன.

இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் டெல்லியில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்துகிறார். பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது தனது பதவி பறிபோய்விடுமோ என்று கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லைதான்! அதுமட்டுமின்றி, தானே எங்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் காசுகொடுத்து பட்டம் வாங்கியுள்ள மனிதவள அமைச்சரா இந்தத் துணைவேந்தரின் முறைகேடுகளைத் தடுக்கப் போகிறார்?

நீதிமன்றங்கள் தற்காலிகத் தீர்வுகளைத் தந்தாலும் தானே ஊழல்மயப்பட்டு அழுகி நாறும் இந்த அரசமைப்பு இப்பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகளைச் சரிசெய்யும் என்று இனியும் நம்ப காரணங்கள் எதுவும் இல்லை. நேர்மையும் உறுதியும் கொண்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மக்கள் என அனைவரும் இனைந்து போராடுவது மட்டுமே மக்களின் பொதுச்சொத்தான புதுவை பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க ஒரேவழி. ஏனென்றால், இந்தப் பல்கலைக்கழகத்தின் சீர்கேடானது அதன் வளாகத்தோடு முடிந்துவிடும் பிரச்சனையல்ல, உண்மையில் தோற்றுப் போய் நிற்கும் மொத்த அரசமைப்பின் வகைமாதிரியே இந்தப் பல்கலைக்கழகம்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.),
புதுச்சேரி அமைப்புக்குழு.

மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com

இது தொடர்பான செய்திகள்

  1. QUOTE:
    முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார் “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி.
    UNQUOTE:
    Mr. S.M. Krishna is a Gowda (Vokkaliga). Please amend.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க