Saturday, December 4, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் போக்குவரத்து மசோதா அபாயம் - தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

போக்குவரத்து மசோதா அபாயம் – தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

-

நாட்டின் பொதுப் போக்குவரத்து முழுவதையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசின் சாலை பாதுகாப்பு சட்ட மசோதா 2015.

வாகன ஓட்டுனர்கள் மற்றும் மெக்கானிக், டிங்கர், பெயிண்டிங், டிரைவிங் பள்ளி, ஸ்பேர் பாட்ஸ் கடை ஆகிய சிறு குறு தொழில்கள் அதில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கப் போகும் இந்தச் சட்டத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் சென்னை முழுவதும் பரவலாக பேருந்து ஓட்டுனர்கள், மெக்கானிக், ஆட்டோ ஓட்டுனர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வளர்ச்சி என்ற பெயரில் நாட்டையே பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் கூறுபோட்டு விற்று வருகின்றது, பார்ப்பன பாசிச மோடி அரசு. இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறி என்கின்ற அகோர பசி தீர்ந்தபாடில்லை, அதைத் தீர்க்கவும் முடியாது. இந்நிலையில் சாலைப் போக்குவரத்து சட்ட மசோதா 2015-யை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் போகிறது, மோடி அரசு. பொதுப் போக்குவரத்து முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அதை கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

அனைத்து வாகன ஓட்டுனர்களையும் ஒழித்துக் கட்டும் சட்டம் !

சாலைப் போக்குவரத்து சட்ட மசோதா
பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறி என்கின்ற அகோர பசி தீர்ந்தபாடில்லை, அதைத் தீர்க்கவும் முடியாது.

 • புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இனி 9 மாதம் பய்றிசியளிக்கப்பட்டு 3 மாதம் சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகே உரிமம் வழங்கப்படும். தற்போது பயிற்சி பெற ஆகும் செலவைவிட இதற்கு பலமடங்கு அதிகம் செலவாகும்.
 • ஒருமுறை சாலை விதியை மீறினால், மீறியவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித் தாளில் புகைப்படத்துடன் “நான் தவறு செய்தவன்” என்று தன்னை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும்.
 • சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுனர் 50,000 அபராதம் கட்டிவிட்டு, ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.
 • தற்போது இருக்கும் டிரைவிங் ஸ்கூல் ஒழிக்கப்படும் !
 • புதிய சட்டத்தின்படி டிரைவிங் ஸ்கூல் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்க வேண்டும். மருத்துவ சோதனைக்கூடம், பணிமனை (ஒர்க்சாப்) போன்றவை இங்கு இருக்க வேண்டும். இதற்கு மூலதனம் அதிகம் தேவைப்படும். எனவே, வாகனம் தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இதை நடத்த முடியும். தற்போது இருக்கும் பயிற்சி பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். இதன்மூலம் நாடு முழுவதும் இதை சார்ந்து பிழைத்து வந்தவர்களின் வாழ்க்கை அழியும்.

RTO அலுவலகத்திற்கு மூடுவிழா !

இதுவரை RTO அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமம், தகுதி சான்று, பர்மிட் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல் போன்ற அனைத்து வகையான பணிகளும் இனிமேல் ஸ்டேட் சேப்ட்டி அத்தாரிட்டி, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி என்ற பல பெயர்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கான அனைத்து கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும். இதில் அரசு தலையிட முடியாது.

சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாவாகன உதிரி பாகம் விற்பனை, வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் போன்ற சிறு, குறு மற்றும் சுய தொழில்கள் அழியும்!

எந்த ஒரு வாகனத்திற்கும் உதிரிபாகங்கள் வாங்க வேண்டும் என்றால், அந்த வாகனம் எந்த கம்பெனியின் வாகனமோ அதே கம்பெனியின் உதிரி பாகங்களைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டம் சொல்கிறது.

இதன் விளைவாக அனைத்து வாகனங்களின் உதிரி பாகங்களை மட்டுமே தயாரிப்பதற்கென்றே உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளும் அழியும்.

சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாவாகனம் பழுது நீக்கம் (சர்வீஸ் ஒர்க்) என்பது பல தனித்தனி சிறு, குறு தொழில்களை உள்ளடக்கியதாகும். பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் என சுயமாக தொழில் செய்து இதன் மூலம் பிழைத்து வருபவர் பல லட்சம் பேர்.

பழுதடைந்த பொருட்களை புதுப்பித்தும் பழுது நீக்கியும் பயன்படுத்துதல் என்பது பெரிய அளவில் நடக்கின்றது. புதிய சட்டத்தின்படி வாகனங்களை இனி இங்கு சர்வீஸ் செய்ய முடியாது. மாறாக அந்தந்த வாகன தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் ஒர்க் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைதர வக்கற்ற அரசு சுயமாக தொழில் செய்து பிழைத்துவரும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடப்போகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம் ?

சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாஆணையங்களின் வழியாக கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் !

தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்படி பர்மிட் பறிக்கப்பட்ட வாகனங்களை இரும்பு எடைக்குதான் போட வேண்டும். இனி பர்மிட் வழங்கும் அதிகாரம் அரசிற்கு கிடையாது. நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority) என்ற பெயரில் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஏலத்தில் விடும். இதில், பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கும் உள்ளூர் முதலாளிகள் போட்டி போட்டு பன்னாட்டு கம்பெனிகளை ஏலத்தில் வெற்றி கொள்ள முடியாது. ஏலம் எடுக்கும் கம்பெனிகள் பேருந்து கட்டணத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும். இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கிராமங்களுக்கான போக்குவரத்து ஒழிக்கப்படும்.

சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாபோலி ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டமாக்கும் மோடி !

போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் நாடு முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னலை கொண்டது. அரசுக்கு பல ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்டித் தருவதாகும். இதை கார்ப்பரேட் கம்பெனிகள் கைபற்றி கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் இதை சார்ந்து பிழைத்து வரும் சிறு, குறு முதலாளிகள் மற்றும் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது. எனவே இரண்டு பக்கமும் மாபெரும் அழிவை உருவாக்கப் போகிறது மோடியின் சாலை பாதுகாப்பு சட்ட மசோதா 2015.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படப் போகிறது. பொதுத் துறை வங்கி, இன்சூரன்ஸ் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதன் மூலம் மக்களின் பணம் சூறையாடப்படப் போகிறது. உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தெருவோர சிற்றுண்டிக் கடைகள், சிறிய உணவு விடுதிகள் ஒழிக்கப்படப் போகிறது. நிலப்பறிப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளப் போகிறது மோடியின் அரசு.

மொத்த நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், சிறு, குறு தொழில்கள், தொழிலாளர் உரிமைகள், பொதுச் சொத்துக்கள் என அனைத்தையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க சட்டப்படியே வழிவகுத்து கொடுத்து, பாருங்கள் இதுதான் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்று கொக்கரிக்கிறது மோடி அரசு.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், வறுமை, வேலையின்மை, வேலை பறிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகார முறைகேடுகள் என மொத்த சமுதாயமும் மக்கள் வாழத் தகுதியற்றதாய் மாறிப் போய் நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இதில் எதையும் தடுப்பதற்கு வக்கற்று போய் நிற்கிறது அரசு. பெயரளவிலான ஜனநாயத்தை ஒழித்துகட்டி பாசிசத்தை சட்டபூர்வமாக்கி வருகிறது, மோடி அரசு.

ஆளத் தகுதியற்றதாய் மாறிப்போன அரசுக்கட்டமைப்பு !

அரசு, தான் உருவாக்கிய சட்டத்தின்படியே ஆட்சி செய்வதற்கு தகுதியற்றதாய் மாறிப்போய் விட்டது. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் இனி நம்மை பாதுகாக்காது என உணர்ந்து கொண்ட மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக என பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் சந்தித்து மோதி வருகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளையும், அதிகாரிகளையும், நீதிமன்றங்களையும் அவர்கள் நம்பவில்லை. இப்படி களத்தில் நின்று போராடுகின்ற மக்களின் திசைவழியில் அனைவரும் போராட வேண்டும். ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்திவிட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும் !

 [நோட்டீசைப் பெரிதாகப் படிக்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்,
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

 1. Neenga solratha patha intha sattathala nallathu than athikama theriyuthu.

  Ithulayum arasiyal seiyanuma.

  Road accident kuraiyum.
  Rto office LA kudakra lancham kuraiyum..
  Etc.

  Neengala bjp Ku free ya vilambaram panna theenga

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க