Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

-

சின்டெல் எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக 3,000 பேருக்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றது. 4 மாதங்களுக்கு முன் டி.சி.எஸ்.  (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் இதைப் போன்று கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு தொடர்ச்சியான பிரச்சாரம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

சின்டெல் ஆட்குறைப்பு
ஊழியர்களை பலி கொடுக்கும் சின்டெல் நிறுவனம்

டி.சி.எஸ் 25 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோது, வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தந்திருந்தது. விசயம் ஊடகங்களில் வெளியானது.

ஆனால், பு.ஜ.தொ.மு.-வின் தொடர்ச்சியான பிரச்சாரம், ஐ.டி ஊழியர்களிடையே துண்டுப்பிரசுர வினியோகம் போன்றவற்றால் அதிர்ச்சியடைந்துள்ள கார்ப்பரேட்கள் இம்முறை வேலை நீக்கத்தை, வேறு தந்திர வழியில் செய்யத் தொடங்கியுள்ளனர். ஊழியரை மிரட்டி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,  அவர்களது அடையாள அட்டையை (ஐ.டி கார்ட்) பிடுங்கிவிட்டு, 15 நிமிடங்களுக்குள் நிறுவன வளாகத்துக்கு வெளியில் போய் விடும்படி துரத்துவது என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு சின்டெலின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் அறிந்து அதற்கு எதிராக் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது; தொடர்ந்து சின்டெல் நிறுவனத்தின் ‘விலகல் கடித‘ பாணி கட்டாய வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை காஞ்சிபுரம் மாவட்டம் தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் அழைத்துச் சென்று தலையீடு (சமரசத் தீர்வு) கோரி மனு அளிக்கவும் உதவி செய்துள்ளது.

ஐ.டி. துறை ஊழியர்களே!

இனி இதே பாணியில்தான் நம்மைப் பணி நீக்கம் செய்து தனது லாபத்தை உயர்த்தப் போகின்றது கார்ப்பரேட் கும்பல். செய்வது அறியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின் வருந்தாதீர்கள்.. கையெழுத்திட மறுத்து சங்கத்தினைத் தொடர்பு கொண்டு, இணைந்து போராடி, உங்கள் வேலை உரிமையை நிலை நாட்டுங்கள்.

வஞ்சகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் வாக்குமூலத்தை கீழே தருகிறோம்.

***

பிரஷாந்த் ரானடே
பிரஷாந்த் ரானடே – சின்டெல் துணைத்தலைவர்

வரிடமிருந்து அடையாள அட்டையை (ஐ.டி கார்டை) பிடுங்கிக்கொண்டு 15 நிமிடத்திற்குள் அலுவலகத்தை காலிசெய்து வெளியேற உத்தரவிட்டுள்ளது நிர்வாகம். பல ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனத்தால், அவமானப்படுத்தப்பட்டு, வேலையை விட்டு துரத்தப்பட்ட அவர் ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிரான பு.ஜ.தொ.மு-வின் சுவரொட்டியை பார்த்துவிட்டு நம்மை அழைத்தார்.

“என்ன நடந்துச்சிங்க?”

“மூணு வருசம் ஆன்சைட்டில் (அமெரிக்கா) டீம் லீடராக இருந்தேன் பாஸ். இங்கிருந்து போகும் போது ஒரு புரொஜெக்டிற்குனு தான் அனுப்புனாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் வேறு இரண்டு புரொஜெக்டிற்கு டீம் லீடர்கள் வரும் வரை டெம்பொரெரியாக (தற்காலிகமாக) பார்த்துக்கங்கனு சொல்லி கொடுத்தாங்க. அநத புரொஜெட்டிற்கு கடைசி வரை டீம் லீடர் வரவே இல்லை.

குடும்பப் பிரச்சனையால போன வருசம் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர்றது மாதிரி ஆயிருச்சி. எனக்குப் பதிலா அங்க போனவங்க கொஞ்ச நாள்லயே வேற கம்பெனிக்கு மாறிட்டாங்க. என்ன மாதிரி சரியான அடிமை அவங்களுக்கு சிக்கல. கொஞ்ச நாள்ளயே என்னை போகச்சொன்னாங்க. எனக்கு ஃபேமிலி சூழலால போகமுடியல. அப்படியே சொல்லிட்டேன். இது டெலிவரி மானேஜருக்கு பிடிக்கலை.

இத்தனை வருசம் நைட் ஷிப்ட் தான் பார்த்தேன். ஆனால், உடம்பு சரியில்லாம ஆகவே, ‘நைட்ஷிப்ட் வேண்டாம் டே ஷிஃட் கொடுங்க’னு கேட்டேன். நைட் ஷிப்ட் கஷ்டம்னு சொல்லிட்டேன். அதையும் அவங்க ஏத்துக்கல. டெலிவரி மானேஜருக்கு என் மேல கடுப்பு வந்திருச்சி. நான் என்ன பாஸ் பண்ண முடியும்.”

“இத்தனை வருசம் நைட்ஷிப்ட் தான் பாத்திருக்கீங்க இப்போ உடம்புக்கு ஒத்துக்கலை எனச் சொன்னா ஏத்துக்க மாட்டாங்களா?”

சின்டெல் ஆட்குறைப்பு
டாடா சன்ஸ் நிர்மல்யா குமாருடன் சின்டெல் தலைவர் பரத் தேசாய் (சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்)

“இதைதான் நானும் கேட்டேன். இதெப் பத்திலாம் அவனுங்க எங்க கவலைப்படுறாங்க. ஆனா என்னோட உடல்நிலையில என்னால சுத்தமா முடியாது. அதனால நைட்ஷிப்ட் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போன மாச கடைசில தான் ரேட்டிங் போட்டாங்க. என் மானேஜர் நல்ல ரேட்டிங்தான் கொடுத்தேன்னு சொல்றார். ஆனா எனக்கு மேல் உள்ளவங்க மாத்திட்டாங்களாம்.

டெலிவரி மானேஜரிடம் பேசினேன். ‘நீங்க பிளெக்சிபிலாக இல்லை. சரியா வேலை செய்யலை’னு சொன்னாரு.

‘எந்த வேலையை நான் சரியா செய்யலை’ னு கேட்டேன். அதுக்கு அவருகிட்ட பதில் இல்லை. கிளையன்ட் அப்பிரிசியேட் (பாராட்டு) பண்ணி இருக்காங்க என்று எடுத்துச் சொல்லியும் அவங்க ஏத்துக்கல.

வருடத்தில் முதல் பாதியில் நடக்கும் “மிட் அப்ரைசலில்” ஏன் எந்த கமெண்டும் சொல்லைனு கேட்டேன். இதுக்கும் அவர்கிட்ட எந்த பதிலும் இல்லை.

டெலிவரி மானேஜர்கிட்ட பதில் கிடைக்காததால் எச்.ஆரிடம் கேட்டேன்.

சின்டெல் ஆட்குறைப்பு
2014-ல் சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்

பாஸ், அந்த எச்.ஆருக்கு நான் யாரு, என்ன பேருனு நான் போகிற வரைக்கும் தெரியாது. ஆனா நான் தகுதியில்லாதவனு அவன் சொல்றான்.

‘கடைசி மூணு அப்ரைசலில் டாப் ரேட்டிங்க் போட்டிருக்கீங்க. திடீர்னு ஒருத்தனோட பெர்பாமன்ஸ் எப்படி டாப் ரேட்டிங்கிலிருந்து பத்தாவது இடத்திற்கு குறையும்’னு கேட்டேன்?

நான் கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்குனது அவருக்கு தெரியவர கொஞ்சம் பின்வாங்கினார். இது குறித்து பரீசீலிப்பதாகவும், லீவ்ல இருக்கும் என் மானேஜர் திரும்புனதும் இது பத்தி பேசுறதாகவும் சொல்லியனுப்பினார்.

போன வாரம் திங்கட்கிழமை எதேச்சையா பார்க்கும் போது தான் தெரிஞ்சது சிஸ்டம்ல என் சூப்பர்வைசர் பெயரும், புரொஜெக்ட்டும் மாறியிருந்தது. நான் பெஞ்சில் இருப்பதாக காட்டியது.

அவசரமாக என் டெலிவரி மானேஜரிடம் கேட்டால்

‘உங்கள போன புதன் கிழமையே ரிலீஸ் பண்ணிட்டோமே’னு கூலா சொல்கிறான்.

‘என்கிட்ட ஏன் இன்பார்ம் பண்ணலை. இன்னைக்கு காலைல வரை ஒர்க் பண்ண வெச்சிருக்கீங்க’னு கோபமாக கேட்டதற்கு

‘நாங்க மெயில் சென்ட் பண்ணிட்டோம்.’

‘எனக்கு எதும் வரலையே’

‘மே பி கம்யூனிகேசன் எரரா இருக்கலாம்’ னு திமிராப் பேசுறான்.

என்ன புரொஜெட்லிருந்து ரிலீஸ் பண்ணினதோடு இல்லாம ரெண்டு நாள் வேலை வாங்கியிருக்கானுக. எதேச்சையாத்தான் இத பாத்தேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி எச்.ஆர் வரச் சொல்லி மெயில் போட்டிருந்தாரு.

அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னு சொன்னாரு.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்ரைசலில் ரேட்டிங்கையே நான் ஏத்துக்கல. அந்தப் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. என் மேனேஜர் லீவ் முடிஞ்சி வந்தப்புறம் பேசலாம்னு சொன்னாங்க. இப்போ அதையே காரணமா வெச்சி கிளம்ப சொல்றாங்க.

நான் கையெழுத்துப் போடத் தயார். ஆனா வேலைநீக்கத்திற்கான காரணத்தை ஏற்கமுடியாதுன்னு தோணிச்சு. எச்.ஆரிடம் இதை சொல்லிட்டு கையெழுத்து போட முடியாதுன்னு சொல்லிட்டேன். எச்.ஆர் இதை ஏத்துக்கல.

கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்கியதால் வேண்டுமானால் சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ‘கருணை’ காட்டினார்.

கிடைத்த அவகாசத்தில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி முதல் அனைவருக்கும் எனக்கு நடந்த அநியாயத்தை விளக்கி ஒரு மெயில் அனுப்பினேன். சிறிது நேரத்தில் அதற்கு பதிலும் வந்தது.

‘உங்களது கோரிக்கையை பரிசீலித்தோம். எச்.ஆர்களுடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் உங்கள் குறைகளைக் கூறலாம்’ என்று பஞ்சாயத்திற்கு நாள் குறித்தார்கள்.

அடுத்த தினத்தில் அந்த கட்டபஞ்சாயத்தும் ஆரம்பித்தது. மும்பை , சென்னையிலிருந்து எச்.ஆர்கள் நாலைந்து பேர் தொலைபேசி கான்பரன்சில் இணைந்திருக்க, நேரில் இருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

மீண்டும் பழைய பல்லவியே ஆரம்பித்தது. சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் வேலைநீக்கத்தை நியாயப்படுத்தினார்கள்.

‘ நீங்க சரியா வேலை பார்ப்பதில்லை’

‘இப்படிச் சொன்னா எப்படி. கொடுத்த வேலையில் எதை சரியாக செய்யவில்லை என்று ஆதாரபூர்வமாக சொல்லுங்க, நான் பதிலளிக்கிறேன்.’

‘அந்த டேட்டா கையில் இல்லை. நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை. ஆன்சைட் போக முடியாதுன்னு சொல்லியிருக்கீங்க அதனால் கிளைன்ட் சேட்டிஸ்பேக்ஷன் குறைஞ்சிருக்கு’

‘ஆன்சைட்டிலிருந்து வரும்போதே ஃபேமிலி இஸ்யூனு சொல்லிட்டு தான் வந்தேன். அப்படியிருக்கும்போது எப்படி உடனே போகமுடியும். அதற்கு தகுந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.’

இப்படி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கவும் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்கள்.

‘ நீங்கள் எப்பொழுதும் அவைல்பிளாக இருப்பதில்லை. உங்கள் இருப்பிடத்தில் இருப்பதில்லை.’

‘(மனுசன் ஒண்ணுக்கு போறது ஒரு குத்தமாயா) அப்படியில்லையே. எப்பொழுது நான் அவலைபிளாக இல்லைனு சொல்லுங்க. போன் செய்து அதை எடுக்காமல் இருந்திருக்கிறேனா?’

நான் இப்படி அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்ல சொல்ல அவங்க வேறு எதை எதையோ சொல்ல ஆரம்பிச்சாங்க.

இடையில ரெஸ்ட் ரூமுக்கு போகணும்னு வெளியே வந்தேன்.

என் பின்னாடியே ஒரு எச்.ஆர் வந்தான்.

பிரெண்டு போன் பண்ணான். எடுத்து பேசிட்டு இருந்தேன்.

‘ரெஸ்ட் ரூமுக்கு போகனும்னு சொல்லிட்டு போன் பேசிட்டு இருக்கீங்க’னு கேக்குறான். நான் டாப் மேனேஜ்மென்ட்டுக்கு மெயில் பண்ணி பிரச்சனை பண்ணதால இப்ப நான் எதையும் செஞ்சிற கூடாதுனு குறியா இருந்தாங்க.

எனக்கும் அவங்களிடம் வேலை பார்க்க பிடிக்கவில்லை. ஆனா எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் என்னை ஏன் வேலை நீக்கம் செய்கிறாங்கங்குறதுக்கு நியாயமான காரணம். கடைசி வரை நான் அதைத்தான் கேட்டேன். ஆனால் யாரும் அதுக்கு பதில் சொல்லல.

ஒரு எச்.ஆர் மட்டும் எனக்கு ஆதரவா பேசினார். என்னை தனியா கூட்டிட்டுபோய், ‘இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க பண்ணது தப்புனு ஒத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்கு பிரச்சனை. அதானால ஏத்துக்கமாட்டாங்க. பேசாம நீங்க ரிசைன் பண்ணிருங்க. வேற ஜாப்க்கு நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றே’ன்னு சொன்னாரு.

எனக்கு வேற எதுவும் தோணவில்லை. ஒத்துக்கிட்டேன். உடனே ஐ.டி கார்டை வாங்கிட்டாங்க. என் மெயில், அக்ஸஸ் எல்லாத்தையும் முடக்குறதுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தாங்க.

அவ்ளோதான். எவ்ளோ நாள் நைட் ஸ்டே பண்ணி ஒர்க் பண்ணிருப்பேன். ஆனா ஐ.டி கார்டை உடனே பிடுங்கி வெளியே அனுப்பிட்டானுக. மனுசத் தன்மைன்னு ஒண்ணு இவனுகளுக்கு கிடையாது பாஸ்.”

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு

 1. அனுபவிக்கும் வரை அனுபவித்துவிட்டு இப்பொழுது பிரச்னை என்ட்ரதும் இப்படி கூப்பாடு போடுவது அழகில்லை இதை விட குரைவான சம்பலம் மிகுதியான வேலை பலு வுல்ல வலைகுடாநாடுகல் சிஙகப்புர் மலசியா வில் தொழிலாலர்கல் 1 லட்ஷன் மேல் கட்டி சென்ட்ரு 2 அல்லது 3 வருடஙகலில் வெரும் கையொடு வருகிரார்கல், இவர்கல் இப்படி புலம்புவதில்லை, இதே பொல இவர்கலும் இவர்கல் ஆதிக்கத்தில் மட்ரவரிடம் இப்படி செய்திருக்கலாம் அல்லவா?

  • Aha!I was searching for you.You are telling the real state of affairs at Singapore.Some days back,there was vigorous arguments in Vinavu about the treatment meted out to migrant labourers in Singapore.But some Vinavu readers denied the bad treatment at Singapore and hailed it as Boologa Sorgam.

 2. மனம் எதையும் முடிவு செய்வது இல்லை , பணம் தான் முடிவு செய்கிறது

  வாழ்நாள் முழுவதும் உழைத்த மாட்டை கசாப்புகடைகாரனுக்கு விற்கிறார் விவசாயி . அவர் நல்லவரா கெட்டவரா ?

  இரவு பகல் பாராது வேலை செய்தேன் என்கிறார் ஆனால் கம்பெனி பார்வையில், அதற்கான ஊதியம் தரப்பட்டு விட்டது.

  இரவு நேரத்தில் வேலை செய்ய முடியாது என்று நினைத்த இவர் , பகல் நேர வேலை கொண்ட வேறு ப்ராஜக்டுக்கு அல்லது கம்பெனிக்கு மாறி இருக்க வேண்டுமே தவிர , ஏற்கனவே உள்ள பிராஜக்டை தனது இஷ்டப்படி வளைக்க நினைப்பது நடக்காது.

  இவரை தூக்கிய விசயத்தில் கூட கொஞ்சம் லாஜிக் இருக்கிறது . நிறைய பணி நீக்கங்களுக்கு பணம் மட்டும் தான் லாஜிக் . திறமையான வேலை பிலக்ஷிபிலிட்டி என எல்லாம் இருந்தாலும் ஆள் குறைக்க வேண்டுமே என்று குறைப்பார்கள்.

 3. IT துறையில் வேலை வாய்ப்பிற்கு உறுதி உலகில் எங்கேயும் கிடையாது, ஆதலால் புலம்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது, நிலையான வேலை வேண்டும் என்றால் அரசாங்கம் மற்றும் ராணுவ வேலைக்குத்தான் செல்ல வேண்டும்,

 4. @Raman,If one employee asks for change in project,will it be given by the management?How do you give that suggestion?Agriculturists cannot maintain even productive animals.How they will maintain unproductive animals.Again,your sadist mentality bursts out by your comparison of the retrenched employee with unproductive animals.

  • //,If one employee asks for change in project,will it be given by the management?/

   Yes. most of the companies do have this policy.If one have completed 1+ years in one project then can ask for change. I have done this.

   Unproductive animal/human/car doesnt matter, If economically not possible to sustain and support.

   Lets say you are building a house, one labor works really hard for 3 months and then due to some family situation he wants to work half day for next 3 months.

   How will you respond? Choose one answer.

   1. He is very talented and hard working so will accommodate his request.
   2. Will cut his salary because he works only half day.
   3. Since you have to finish the construction in 2 months you will let him go and hire a different labor

   • In your company you were lucky enough to have the project changed.According to reports,many companies DO NOT change it at the request of the employees.
    In this case,the victim,due to family reasons could not go for foreign assignment again.He was all along doing night duty.He wanted day duty.Does day duty means half a day work in your dictionary?
    In this modern age,this company could not find an alternative employee for the foreign assignment means that the entire administration and so called” Human Resources Experts” are good for nothing.The victim is sent out not for lack of productivity but for not “obeying” whimsical orders.
    Recently,I met a bright young boy who serviced my computer.He was working for an IT company.He told me about the atrocities of the HR officers on many batches of employees as a routine.He left the job and started his self employed venture and is doing well.
    Why not these IT companies follow labour laws?Why the Govts are showing lenience in that matter?

 5. This company is run by NRIs.If the company run by NRIs are treating their employees this bad,what would be the position of employees who will be recruited by foreign companies?Read an article in Nakkeeran dated 16-19,May,2015,under the title,”THAMIZHAGATHAI VANJIKKUM THANIYAAR MIN NILAYAM”.

 6. கடந்த 20 வருடஙளுக்கு மேலாக கார்பரேட்டுக்களின் கைப்பாவையாக நம்முடைய அரசமைப்பு மாறிவிட்டிருக்கிறது. அதற்க்கு காரணம், 1991-ல்-நிதி மந்திரியாக இருந்த மாண்புமிகு மண்மோகன் சிங்கின் ‘ஞானோதயத்தால்’ உதித்தது தான் தனியார்மயம், தாராளமயம், மற்றும் உலகமயம். இதை மையமாக வைத்து அமெரிக்க தனியார் பெருநிறுவனஙள் இந்தியாவை நோக்கி(தொறந்த வீட்டுக்குள்ள நாயி நொழ்ஞச மாதிரி)வருகை தர ஆரம்பித்தன. ‘அவுட்சொர்சிங்’-அதாவது இந்தியாவில் உள்ள மக்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு, இந்தியாவிலயே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் தருவது.நிற்க.

  இந்த காலகட்டத்தில்தான், அமெரிக்க பெரு நிறுவனஙகள், தம் நிறுவனங்களை கணிணிமயமாக்கி கொண்டிருந்தன. இதனால் மென்பொருள் வல்லுணர்களின் ‘சேவை’ அந்நிறுவனஙளுக்கு தேவை அதிகமாயின. ஆரம்பத்தில் உள்நாட்டு பிரஜைகளை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள், இங்கே இந்தியா தனது கதவுளை திறந்து வைத்து இருந்த படியால் நாலு காலு பாய்ச்சலில் ஓடி வர ஆரம்பித்தார்கள்.

  அதற்கான காரணம், அமெரிக்க பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் கால் பங்கு ஊதியம் இந்திய ஊழியர்களுக்கு கொடுத்தாலே அது இந்தியர்களுக்கு அதிக சம்பளமாக தெரிந்தது.
  உதாரணத்திற்கு: அமெரிகாவில் ஒரு ஊழியருக்கான குறைந்தப்பட்ச சம்பளம் $5000(இந்திய ரூபாயின் மதிப்பிற்கு கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டி இருந்தது, அதே இந்திய ஊழியர்களுக்கு $500(இந்திய ரூபாயின் மதிப்பிற்கு 30 ஆயிரம்) கொடுத்தாலே போதுமானதாக இருந்தது.
  இதுதான் முதலாளித்துவத்தின் முக்கிய அம்சம், அதாவது தமது லாபத்தை எப்படி உச்சப்பச்சமாக பெருக்குவது. தனது நாட்டின் ஊழியர்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு லாபம்தான் முக்கியமும், மூச்சுக்காற்றும் என்று சொன்னது.
  அமெரிக்க நிறுவனங்களை பொறுத்தவரை இந்திய ஊழியர்களுக்கான் ஊதியம் என்பது சொற்ப காசு, ஆனால் நம் இந்திய மக்களுக்கு மற்ற துறைகளை விட இங்குதான் அதிக சம்பளம் கொடுக்குமிடமாக இருந்தது. பொறியியல் மற்றும் கணிணி முதுநிலை பட்டதாரிகள் இந்நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் மற்றும் இந்த துறையில் வேலை பெறுவதற்க்காக பொறியியல் படிப்புக்கான ஆர்வம் நம்மக்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது(இதனால் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகம் அங்கங்கே முளைத்து, அக்கல்லூரிகள் கொள்ளை அடித்துக்கொண்டிருப்பது வேறு கதை).
  (மற்ற துறைகளை விட இத்துறையில்) அதிக சம்பளம் பெறக்கூடியர்வளான இவர்களின் ‘ஆட்டமும்’, இவர்களினால் சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகைகள் கன்னா பின்னாவென்று எகிற ஆரம்பித்தது. இது எளிய மக்களை பாதித்தது மட்டுமில்லாமல், வர்க்க ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியது.

  இது போன்ற விடயங்கள்தான் Raj pu மற்றும் Nithya Kalyani போன்றவர்கள், மற்றும் இவர்களை போன்றோர் இந்த துறையில் உள்ளவர்களின் மீதான கோபத்திற்கு காரணம்.
  இப்படியாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், பின்புலத்தில் அவர்களின் பாக்கெட்டுகளை காலி பன்னும் விதமாக தனியார் மயத்தின் ‘தத்துப்பிள்ளையான’ தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அட்டை(க்ரெடிட் கார்டு), தனி நபர் கடன், வாகன கடன், மற்றும் வீட்டுக்கடன் வாரி வாரி வழங்கியது. இந்த துறையில் பணி நிரந்தரமில்லை என்றாலும், எதோ ஒரு அதீத நம்பிக்கையில் தான் வாங்கும் சம்பளத்தை நம்பி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடன் வாங்குகிறார்கள், பிறகு அதனை மாதா மாதம் தவணையாக திருப்பிக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

  இவர்களின் வாழ்க்கை கடன் வாங்கியிருந்தாலும் ஆடம்பரமாகவே செல்கிறது. இந்த சமயத்தில், தனது நிறுவனத்தில் ஆட் குறைப்பு என்ற ஒரு சம்பவம் நடக்கிறது (ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தினால் தன் நிறுவனத்திற்கு லாபம் குறைகிறது என்ற காரணத்தினால், இந்த ஆட் குறைப்பு வைபவத்தை நடத்துகிறார்கள்).
  முக்கியமாக யார் யாரெல்லாம் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களைதான் முதலில் குறிவைத்து ‘தூக்குவார்கள்’. விளைவு பல பேர் வேறு நிறுவனத்தில் வெலை சேருகிறார்கள், சில பேர் (வங்கிக்கடன், குடும்பத்தின் எதிர்காலம்)மன உளைச்சல் காரணமாக தற்கொலை என்ற மோசமான முடிவுக்கு செல்கிறார்கள்.
  முந்தைய காலங்களில், ஆசிரியர்கள் தம் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினால் மற்ற துறையினரும் இதற்கு ஆதரவளிப்பார்கள், கலந்து கொள்வார்கள். ஆனால் முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளான் இந்த ஆளும் வர்க்கமும் நம் மக்களை துறை ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பிரித்து, எந்தவொரு மக்கள் நல பிரச்சினைகளுக்காகவும் ஒன்று கூடி போராட விடாமல் செய்து வைத்திருக்கிறது.

  இதிலிருந்து தெரிவது என்னவென்றால், முதலாளித்துவம் நினைத்தால் ஒருவனை தூக்கி கோபுரத்தின் மேல் வைக்கவும் செய்யும், தேவைப்பட்டால் அவனை/அவளை அக்கோபுரத்திலிருந்து உதைத்து கீழே தள்ளவும் செய்யும்.

  இதை முறியடிக்க ஒரே வழி மார்க்சிய-லெனினிய வழியான மக்கள் எழுச்சி மட்டுமே.

  • //இதை முறியடிக்க ஒரே வழி மார்க்சிய-லெனினிய வழியான மக்கள் எழுச்சி மட்டுமே.//

   கோபுர உச்சிக்கும் போக மாடீர்கள் கீழேயும் விழமாடீர்கள், என்றென்றைக்கும் அரசாங்கத்திடம் கையேந்திகளாக வாழ வேண்டியது தான்

   • Mr Rajadurai,you have done a wonderful analysis.Do not take Mr Raman seriously.He is a Dooms Day Professor who wants every one to be a bonded labourer at the mercy of tyrant capitalists.He will even say that is your fate and only way for your Moksham also.

 7. கடந்த 20 வருடஙளுக்கு மேலாக கார்பரேட்டுக்களின் கைப்பாவையாக நம்முடைய அரசமைப்பு மாறிவிட்டிருக்கிறது. அதற்க்கு காரணம், 1991-ல்-நிதி மந்திரியாக இருந்த மாண்புமிகு மண்மோகன் சிங்கின் ‘ஞானோதயத்தால்’ உதித்தது தான் தனியார்மயம், தாராளமயம், மற்றும் உலகமயம். இதை மையமாக வைத்து அமெரிக்க தனியார் பெருநிறுவனஙள் இந்தியாவை நோக்கி(தொறந்த வீட்டுக்குள்ள நாயி நொழ்ஞச மாதிரி)வருகை தர ஆரம்பித்தன. ‘அவுட்சொர்சிங்’-அதாவது இந்தியாவில் உள்ள மக்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு, இந்தியாவிலயே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் தருவது.நிற்க.

  இந்த காலகட்டத்தில்தான், அமெரிக்க பெரு நிறுவனஙகள், தம் நிறுவனங்களை கணிணிமயமாக்கி கொண்டிருந்தன. இதனால் மென்பொருள் வல்லுணர்களின் ‘சேவை’ அந்நிறுவனஙளுக்கு தேவை அதிகமாயின. ஆரம்பத்தில் உள்நாட்டு பிரஜைகளை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள், இங்கே இந்தியா தனது கதவுளை திறந்து வைத்து இருந்த படியால் நாலு காலு பாய்ச்சலில் ஓடி வர ஆரம்பித்தார்கள்.

  அதற்கான காரணம், அமெரிக்க பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் கால் பங்கு ஊதியம் இந்திய ஊழியர்களுக்கு கொடுத்தாலே அது இந்தியர்களுக்கு அதிக சம்பளமாக தெரிந்தது.

  உதாரணத்திற்கு: அமெரிகாவில் ஒரு ஊழியருக்கான குறைந்தப்பட்ச சம்பளம் $5000(இந்திய ரூபாயின் மதிப்பிற்கு கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டி இருந்தது, அதே இந்திய ஊழியர்களுக்கு $500(இந்திய ரூபாயின் மதிப்பிற்கு 30 ஆயிரம்) கொடுத்தாலே போதுமானதாக இருந்தது.

  இதுதான் முதலாளித்துவத்தின் முக்கிய அம்சம், அதாவது தமது லாபத்தை எப்படி உச்சப்பச்சமாக பெருக்குவது. தனது நாட்டின் ஊழியர்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு லாபம்தான் முக்கியமும், மூச்சுக்காற்றும் என்று சொன்னது.

  அமெரிக்க நிறுவனங்களை பொறுத்தவரை இந்திய ஊழியர்களுக்கான் ஊதியம் என்பது சொற்ப காசு, ஆனால் நம் இந்திய மக்களுக்கு மற்ற துறைகளை விட இங்குதான் அதிக சம்பளம் கொடுக்குமிடமாக இருந்தது. பொறியியல் மற்றும் கணிணி முதுநிலை பட்டதாரிகள் இந்நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் மற்றும் இந்த துறையில் வேலை பெறுவதற்க்காக பொறியியல் படிப்புக்கான ஆர்வம் நம்மக்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது(இதனால் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகம் அங்கங்கே முளைத்து, அக்கல்லூரிகள் கொள்ளை அடித்துக்கொண்டிருப்பது வேறு கதை).

  (மற்ற துறைகளை விட இத்துறையில்) அதிக சம்பளம் பெறக்கூடியர்வளான இவர்களின் ‘ஆட்டமும்’, இவர்களினால் சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகைகள் கன்னா பின்னாவென்று எகிற ஆரம்பித்தது. இது எளிய மக்களை பாதித்தது மட்டுமில்லாமல், வர்க்க ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியது.

  இது போன்ற விடயங்கள்தான் Raj pu மற்றும் Nithya Kalyani போன்றவர்கள், மற்றும் இவர்களை போன்றோர் இந்த துறையில் உள்ளவர்களின் மீதான கோபத்திற்கு காரணம்.

  இப்படியாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், பின்புலத்தில் அவர்களின் பாக்கெட்டுகளை காலி பன்னும் விதமாக தனியார் மயத்தின் ‘தத்துப்பிள்ளையான’ தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அட்டை(க்ரெடிட் கார்டு), தனி நபர் கடன், வாகன கடன், மற்றும் வீட்டுக்கடன் வாரி வாரி வழங்கியது. இந்த துறையில் பணி நிரந்தரமில்லை என்றாலும், எதோ ஒரு அதீத நம்பிக்கையில் தான் வாங்கும் சம்பளத்தை நம்பி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடன் வாங்குகிறார்கள், பிறகு அதனை மாதா மாதம் தவணையாக திருப்பிக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

  இவர்களின் வாழ்க்கை கடன் வாங்கியிருந்தாலும் ஆடம்பரமாகவே செல்கிறது. இந்த சமயத்தில், தனது நிறுவனத்தில் ஆட் குறைப்பு என்ற ஒரு சம்பவம் நடக்கிறது (ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தினால் தன் நிறுவனத்திற்கு லாபம் குறைகிறது என்ற காரணத்தினால், இந்த ஆட் குறைப்பு வைபவத்தை நடத்துகிறார்கள்).

  முக்கியமாக யார் யாரெல்லாம் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களைதான் முதலில் குறிவைத்து ‘தூக்குவார்கள்’. விளைவு பல பேர் வேறு நிறுவனத்தில் வெலை சேருகிறார்கள், சில பேர் (வங்கிக்கடன், குடும்பத்தின் எதிர்காலம்)மன உளைச்சல் காரணமாக தற்கொலை என்ற மோசமான முடிவுக்கு செல்கிறார்கள்.

  முந்தைய காலங்களில், ஆசிரியர்கள் தம் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினால் மற்ற துறையினரும் இதற்கு ஆதரவளிப்பார்கள், கலந்து கொள்வார்கள். ஆனால் முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளான் இந்த ஆளும் வர்க்கமும் நம் மக்களை துறை ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பிரித்து, எந்தவொரு மக்கள் நல பிரச்சினைகளுக்காகவும் ஒன்று கூடி போராட விடாமல் செய்து வைத்திருக்கிறது.

  இதிலிருந்து தெரிவது என்னவென்றால், முதலாளித்துவம் நினைத்தால் ஒருவனை தூக்கி கோபுரத்தின் மேல் வைக்கவும் செய்யும், தேவைப்பட்டால் அவனை/அவளை அக்கோபுரத்திலிருந்து உதைத்து கீழே தள்ளவும் செய்யும்.

  இதை முறியடிக்க ஒரே வழி மார்க்சிய-லெனினிய வழியான மக்கள் எழுச்சி மட்டுமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க