Sunday, July 21, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்

அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்

-

மும்பை ஐ.ஐ.டி முதன்மை கட்டிடம்
மும்பை ஐ.ஐ.டி முதன்மை கட்டிடம்

IITs turned out to be strongholds of superstition, conformism, prejudice & apathy; ruthless criticism of all that exists is the bitter pill that cures us.

.ஐ.டி-க்கள் மூடநம்பிக்கை, பழமைவாதம், வெறுப்பு, அலட்சியம் ஆகியவற்றின் மடமாக மாறியிருக்கின்றன. இருப்பவற்றை எல்லாம் கடும் விமர்சனத்துக்குட்படுத்துவதுதான் நம்மை குணப்படுத்த வல்ல கசப்பு மருந்து என்ற முழக்கத்துடன் மும்பை ஐ.ஐ.டி.-யில் அம்பேத்கர் – பெரியார் – பூலே வாசகர் வட்டம்   ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்த கையோடு இந்த மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டியில் தடை செய்யப்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இங்கே குறிப்பிடப்படும் பூலே மராட்டியத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி போராடியவர்.

இறுதியில் இஞ்சி தின்ன ஓநாயாக பா.ஜ.க அரசின் நிலை மாறிவிட்டது. “நம்ம ஆத்துலேயே மோடிஜியை விமரிசனம் பண்றேளா, தொலைச்சுப் புடுவேன் படுவா” என்று சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தார்கள்.

இதை நியாயப்படுத்த நிர்வாக உத்திரவு, ஒழுங்கு, நடைமுறை என்று ஃபிலிம் காட்டினார்கள். பிறகு மோடி அரசுக்கு தொடர்பு கிடையாது என்று டெக்னிக்கலாக பேசிப்பார்த்தார்கள். தமிழக தொலைக்காட்சி விவாதங்களிலோ ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் அம்பேத்கரை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டு பெரியார் மீது வன்மத்தை காட்டினார்கள்.

அதனால் என்ன?

தந்தை பெரியாரின் படங்களும் முழக்கங்களும் தற்போது இந்தியாவெங்கும் கொண்டு போகப்படுகின்றன. யாரய்யா அந்த தாடி வைத்த கிழவன், அவரைப் பாத்து மோடி ஏன் பயப்படுகிறார் என்று வட இந்திய மாணவர்கள் பெரியாரின் கைப்பிடிக்க ஓடிவருகின்றனர். மறுபுறம் அம்பேத்கரை இந்துத்துவத்திற்குள் இழுத்துப் போடும் சதியையையும் அவர்கள் முறியடித்து வருகின்றனர்.

ஆம். இன்று இந்தியாவின் அநேக ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட மாணவர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்த செய்திகளை விரைந்து தர முயல்கிறோம்.  இங்கே மும்பை மாநகரின் ஐ.ஐ.டி வளாகத்தின் அருகில் மாணவர்களின் முழக்கங்கள் போர்க்குணத்துடன் ஒலிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் கையில் ஆட்சி இருக்கலாம். ஊடகங்கள் கட்டுப்படலாம். ஆனால் மக்கள்? இதோ நீங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டியிலேயே பார்ப்பன எதிர்ப்பு குரல் ஒலிக்கத் துவங்கிவிட்டது. சென்னையில் அதாவது தந்தை பெரியாரின் மண்ணான தமிழகத்தில் துவங்கிய நெருப்பு இந்தியாவெங்கும் பரவி வருகிறது.

பார்ப்பனியத்தையும், அதன் பரிவாரங்களையும் வீழ்த்தாமல் இந்த தீ ஓயாது!

IIT_B (2)

IIT_B (3)

mumbai-iit-in-solidarity-with-apsc-10
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
mumbai-iit-in-solidarity-with-apsc-9
மக்களை பிரிப்பது இந்துமதம்தான், அம்பேத்கர் அல்ல!
mumbai-iit-in-solidarity-with-apsc-8
உண்மையிலேயே இந்துமதம்தான் நிஜமான கொடூரங்களின் உறைவிடம். சாதிகள் அழிவதற்கு இம்மதம் இறந்து போக வேண்டும். – பாரதரத்னா அம்பேத்கர்
mumbai-iit-in-solidarity-with-apsc-3
துரதிஷ்டவசமான இந்தியாவில் கருத்துக்கள் சொல்வதே அரிது. சுதந்திரமான கருத்தோ இன்னும் அரிது – பி.ஆர்.அம்பேத்கர் 1940

mumbai-iit-in-solidarity-with-apsc-7  mumbai-iit-in-solidarity-with-apsc-5  mumbai-iit-in-solidarity-with-apsc-2

IIT_B (4)

IIT_B (1)

படங்கள் : அம்பேத்கர்-பெரியார்-பூலே படிப்பு வட்டம், மும்பை ஐ.ஐ.டி

  1. அம்பேத்கார் – பெரியார் சிந்தனை தீப்பொறிகள் ஒருங்கிணைந்து உயர்கல்வி நிலையங்களில் பரவும் போது ஹிந்துத்துவா-பாசிசவாத சக்திகள் என்ன செய்யமுடியும் ? இது போன்ற சிறிய மாணவர் படிப்பு வட்டங்களை தடை செய்ததன் மூலம் ஹிந்துத்துவாவாதிகள் தன் வாலிலெயெ தீயிட்டுகொண்டு உள்ளார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க